Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, November 30, 2016

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation
இன்று (சற்றுமுன்) எனது பிளாக்கில் வெளியான பதிவைப் படித்த நெருங்கிய தோழி என்னை தொடர்புகொண்டு "கோபமா எழுதி இருக்கீ ங்க. உங்களோட சுபாவத்துக்கு, கோபம் கொஞ்சம்கூட பொருந்தாத ஒன்று. உங்களோட இயல்பில் இருந்து மாறாதீர்கள் " என்றாள் .
தோழி சொல்வது உண்மைதான். சண்டையில் சிலர் தேவையில்லாத வார்த்தைகளை உபயோகிக்கும்போது, "நமக்குன்னு குடும்ப பாரம்பரியம் ஒன்று இருக்குது. அதை விட்டு விட்டு, இதுங்க லெவலுக்கு இறங்கி வந்து ஏன் பேசறே? நாய் கடிச்சா மருந்து போடணும். கடிக்கிறது துரத்துவது நாயோடு கூடப்பிறந்த குணம். அதுக்காக நாம நாயைத்  திருப்பிக் கடிப்போமா? அஞ்சாம் வகுப்பிலேயே படிச்சிருக்கோமே, கீழ் மக்கள் கீழான வார்த்தைகளை பேசினாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல மாட்டார்கள். ஒழுக்கம் நல்ல பழக்க வழக்கம் அவங்கவங்க பிறந்த குடும்பத்திலிருந்து வருகிற ஒன்று. அது நம்மிடம் இருக்குது. தெரு நாய்களிடம் அதை ஏன் இழக்க வேண்டும் ?" என்று அடிக்கடி சொல்வேன். 
"ஆனால் உலகம் இப்போ எங்கே போகிறதுனே தெரியலை. ஒரு சிலர் செய்கிற செயலைப் பார்த்தால், அவனுக வயசுக்கும் படித்த படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்குது. மொத்தத்தில் சொல்லப் போனால் கேடு கெட்டத்தனமாக சில்லரைத்தனமாக இருக்குது. நம்மை சுற்றி நடக்கிற விஷயங்களைக் கேள்விப்படும்போது, பார்க்கும் போது, நெட்டில் பார்க்கும்போது கோபம் எல்லை மீறுகிறது. ரௌத்திரம் பழகுனு பாரதியே சொல்லி இருக்கிறார்" என்றேன்.
அதைக் கேட்ட தோழி "நீங்க சொல்றதையே திருப்பி சொல்றேன். கீழ் மக்கள் கீழாய சொல்லினும் அதை நீங்க மறந்தும் சொல்லாதீங்க. உயிரே போனாலும்  நம்ம குடும்ப பாரம்பரியத்தை விட்டு இறங்கக் கூடாது. கோபுரத்துக்கு மேலே பறந்தாலும் கழுகோட பார்வை குப்பைத் தொட்டி யில்தான் இருக்கும். கவுரவம் என்கிறது அவங்கவங்க இருக்கிற ஸ்டேட்டசை வச்சு இல்லே. ஒருத்தரோட நடத்தை சம்பந்தப்பட்ட விஷயம் . உங்க பிளாக்கில் கேடு கெட்ட மனிதர்களை பற்றி எழுதி உங்கள் பிளாக்கின் தூய்மைதனை கெடுக்காதீங்க  " என்றாள்.
இப்போ எனக்கு என்ன குழப்பம்னா தோழி சொல்வதைக் கேட்பதா பாரதி சொல்வதைக் கேட்பதா ? 
அதே சமயம் கேடுகெட்ட மனித குணங்களைப் பற்றி பேசுவதுகூட கவுரவக் குறைச்சல் என்று எண்ணும் தோழி எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் மை டியர் பிரெண்ட் ! 

Dear Viewers


முகநூலில் கண்ட வாசகம் 
வழி கிடைப்பதின் காரணத்தை நாய்கள்  புரிந்து கொள்ளாததால்தான் இறைவனை நொந்து கொள்ள வேண்டி இருக்கிறது. 

உலக மகா கிரிமினல்கள் திருடர்களை நையாண்டி செய்கின்றனர். காலத்தின் கோலம் இது. 

Monday, November 28, 2016

சிரிக்காதீங்க ! சிந்தியுங்க !!

Image result for image of rain
சூரியன் : என்ன வருண பகவானே ! என்ன ஒரு ஆழ்ந்த சிந்தனை ! நான்  
                   தெரிஞ்சுக்கலாமா ?
வருணன் (மழை ) : போன நவம்பரில் இந்த ஜனங்க என்னைக் கரிச்சுக்
                                       கொட்டினாங்க. இப்போ "வா.. வா"னு கூப்பிடறாங்க.
                                       கண்டுக்காமே இருக்கலாமா ? போய் ஓங்கி ஒரு அடி
                                       அடிச்சிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன். 


Sunday, November 27, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 12)

புதிர்எண்-11 ன் விடை-  விதைநெல் 

ராமன் கையிலிருந்ததன் முதல் எழுத்து  - வி (ல் )
அனுமன் கையிலிருந்த ஒன்றின் கடைசி எழுத்து - தை (கதை )
அரிசிக்கு ஆதாரமான பொருள் - நெல் 
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள்.

Image result for images of children in class room

புதிர் எண்  - 12  
 " அடுத்த வாரம் தேர்வுகள் ஆரம்பிக்கப் போகுது. நீ எப்படி பீல் பண்றே ? " என்று ஷங்கர் கேட்க " செம ஜாலி. தேர்வு முடிஞ்சா லீவாச்சே" என்ற ரவி " ஆமாம் நீ எப்படி பீல் பண்றே ? " என்று கேட்டான். அதை வாயால் சொல்லக் கூட எனக்குப் பயமாயிருக்குது. நான் சொல்றதை வச்சு நீயே கண்டு பிடி " என்ற ஷங்கர், " முதல் இரண்டு எழுத்து பார்வையைக் குறிக்கும்.  1,3 மற்றும் 4ஆம் எழுத்து சேர்ந்தால் ஒரு இசைக் கருவியின் பெயர் வரும். இனிமே நீயே கண்டுபிடி " என்று சொல்ல, சிறிது நேரம் யோசித்த ரவி  " ஓஹோ ,, ஆசியா , ஐரோப்பா, அண்டார்டிக்கா .. ரகமா  ? " என்று கிண்டலாகக் கேட்டு சிரித்தான். ரவி கண்டு பிடித்த பதிலை நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

Friday, November 25, 2016

பெண்களே உஷார் !!



நேற்று மாலையில் என் காதில் விழுந்த சம்பவம் இதை உடனடியாக பதிவு செய்ய வைத்தது. எழுத்து நாகரிகம் என்ற ஒன்று இருந்தாலும் கூட ஒரு சிலரின் வக்கிரபுத்தி எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரியவைக்க சில மரபுகளையும் மீறி பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
என் அருகில் இருந்த ஒரு பெண் 'உலகம் எங்கே போகுதுன்னே தெரியலை. குழந்தைங்க, குமரிங்க, கிழவிங்க - இவங்க யாரையுமே விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்குது !" என்றார்.
"என்ன விஷயம் ?" என்றேன்.
"ட்ரைனுக்காக வெயிட் பண்றப்போ என் பக்கத்தில் நின்னுட்டு இருந்த ஒரு பொம்பள போலீஸ் யாரிட்டயோ போனில் பேசறா - 'எவனாவது பொண்டாட்டி வேணும்னு உன்கிட்டே வந்து அழுதால், உன் பொண்டாட்டி யை அனுப்பி ஆறுதல்படுத்து. கூடவே உன் அம்மாவையும் பெண்ணையும் அனுப்பு " என்று. அவ யாரோ எவளோ அவகிட்டே போய் அவ பிரச்சினை என்னனு கேட்கவா முடியும். நானே ஓரளவு கெஸ் பண்ணினேன். ஒரு பொம்பள போலீஸ்கிட்டே அவ டிப்பார்ட்மெண்ட் ஆளுங்கதான் வந்து தைரியமா வாலாட்ட முடியும். போலீஸ் வேலை பார்க்கிறவளுக்கே இந்த கதின்னா மத்ததை என்ன சொல்ல ?" என்றார் 
'இந்தமாதிரி டார்ச்சர்ன்னா தற்கொலைதான் பண்ணிக்கும். அப்படி   ஒரு முடிவை அவங்க  எடுத்துட்டா சம்பந்தபட்ட ஆளை முதலில் அனுப்பிட்டு பின்னாடியே இவங்க போகணும் !" என்றேன்.
"உதவி செய்றேன்னு யாராச்சும் வந்தா நம்பக்கூடாதுங்க . சினிமாவிலே வர்ற மாதிரி இவனுகளே காலிப்பசங்களை அனுப்பி வம்பு பண்ண வச்சுட்டு, பின்னாடியே இவனுக போய் ஹெல்ப் பண்ற மாதிரி அந்த பெண்களை வளைச்சு போட வேண்டியது. அவன் உதவியை நிஜம்னு நம்பி அவனோட சாதாரணமா பேசறதை வச்சு, அவர்களுக்குள் relationship இருக்கிறதா ஒரு ஸீன் கிரியேட் பண்ண வேண்டியது. அவங்களை மிரட்டி இவனுக காரியத்தை சாதிக்க வேண்டியது. இப்படி நிறைய பேர் கிளம்பி இருக்காங்க. வயசான லேடீஸ் கூட இவங்க வலையில் விழுந்துடுறாங்க " என்றார். 
"கண்ட தெருநாயோட மிரட்டலுக்கு ஏன் பயப்படணும் ?" என்று கேட்டேன்.
"இல்லே . நெட்டில் படம் போட்டுடுவாங்க " என்றார் 
அவர் சொல்வதைப் புரிந்து கொண்ட நான், "போடட்டுமே. படத்தில் இருக்கும் முகம் என்னுடையது.  மற்ற பகுதி இந்த படத்தை பதிவு செய்த பைத்தியக்காரனின் அம்மா இல்லாட்டா அக்கா தங்கை அதுவும் இல்லாட்டா அவன் வொய்ப் இல்லே பொண்ணோடதா  இருக்கும். அது யார் என்பதை அந்தபைத்தியக்காரனிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளவும்   என்று அந்தப்படத்தின் கீழ் ஒரு கமெண்ட் பதிவு பண்ண வேண்டும்." என்றேன்.
எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்... முப்பது வருடத்துக்கும் முற்பட்டது. ஒரு பெண்ணிடம் ஒரு சிலர் வாலாட்டினார்கள். ஒருவர் உதவுவதுபோல் வந்தார். அந்த நன்றி உணர்ச்சியில் அந்தப் பெண் அவரிடம் சகஜமாக பேச இவரோ அந்தப்பெண் தனக்கு ரொம்ப "வேண்டியவர்" என்று ஊருக்கெல் லாம் கதை சொல்ல ஆரம்பித்தார். இவரையே யாரோ வம்புக்கு இழுப்பது போல கதை சொன்னார். அந்த பெரிய மனுஷன் பேச்சை நம்பி காவல் துறை தனது உழைப்பை இவருக்காக செலவிட்டது. ஒருநாள் அந்தப் பெண்ணுக்கு உண்மை தெரிந்து விட்டது (காவல் துறையின் மூலமாகவே . ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட் கொடுக்க சொல்லி சிலர் சொல்ல அந்தப் பெண்ணோ , "நாம் தோற்றால் கூட சரியான ஆண்மகனிடம் தோற்க வேண்டும். கூலிக்காரர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு வீராப்பு பேசும் ஒரு பேடியை ஜெயித்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதோ என்னாலே அவங்களுக்குப் பணம் கிடைக்குதுதானே . யாரோ சிலர் பிழைப்புக்கு நான் வழி செஞ்சதா இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள் ). இவரோட இரட்டை வேடம் புரிந்து விட்டது. அவர் மேலே கோபப்படலே. கம்பளைண்ட் பண்ணலே. இது இவருக்கு ஒருவிதமான மனநோய் என்று நினைத்து ஒதுக்கி விட்டாள். தன்னோட ரெட்டை வேஷம் வெளுத்தது தெரியாமல் அந்த மனநோயாளி மீண்டும் நடிப்பைத் தொடரும் போதெல்லாம் அவ care பண்ணலே. உண்மை வெளுத்துப் போன விஷயம் தெரியாத அந்த நபர் பிளாட்பார்மில் கூருகட்டி வைத்துக் கூவிவிற்கும் பெண்கள்   பின்னால் ஒளிந்து கொண்டு வீரகீதம் பாடினார். அது எடுபடாதபோது சோக கீதம் பாடினார். நல்லவனையே நாலுதரம் உரசிப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் உலகம் இது. அப்படி இருக்க ஒரு கயவனை யாராவது திரும்பிப் பார்ப்பார்களா?  அது தெரியாமல் தனது நடிப்பை தானே ரசித்துக்கொண்டு காலந்தள்ளுகிறார் அந்த மனநோயாளி .
பெண்களே எங்கேயும் எப்போதும் உஷாராக இருங்கள் ! இரட்டைவேட மனிதர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருங்கள்.   

Tuesday, November 22, 2016

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க ! (joke 01)

images of loser க்கான பட முடிவு
மனோதத்துவ டாக்டர் : என்ன நடந்ததுன்னு நீங்க மறைக்காமே சொன்னா தான் இவரோட பிரச்சினை என்னனு என்னாலே கண்டு பிடிக்க முடியும். டீவி நியூஸ் பார்க்கிறதாலே யாராவது மனநிலை சரியில்லாமே ஆயிடுவாங்களா ?
பெண் : நியூஸில் 2022ல் எல்லாருக்கும் சொந்த வீடு கிடைக்கும்னு சொன்னாங்க. 
டாக்டர் : சரி 
பெண் : எல்லார் அக்கவுண்டிலும்  பதினஞ்சு லட்சம் போடறதா சொன்னவங்க நம்ம காசைப் பிடுங்கி டெபாசிட் பண்ண வச்சிட்டு இப்போ அஞ்சுக்கும் பத்துக்கும் அலைய வைக்கிறாங்க. இப்போ வீடு தர்றேன்னு சொல்றாங்க. நம்மள எங்கே கொண்டுபோய் நிறுத்துவங்களோ தெரியலையேன்னு அப்போ புலம்ப ஆரம்பிச்சவர்தான். இன்னும் நிறுத்தலே டாக்டர்.
டாக்டர் : இது கொஞ்சம் கஷ்டமான கேஸு. நீங்க கடவுளை நம்பறதுதான் பெட்டர் 

Saturday, November 19, 2016

நான் சிரிச்சேன். நீங்க எப்படி ?


Image result for image of old lady
என்னய்யா நடக்குது இங்கே?
1. எல்லா இடத்திலும் எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கோம்னு அதிகார பவரில் ஒரு சிலர் அறிக்கை இட, அந்த அறிக்கைக்கும் நாட்டு நிலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை.
நாங்க பாடுபட்டு சம்பாதிச்ச பணத்தை நாங்க எங்க தேவைக்கு செலவழிக்க பகீரத பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்குது.
பான் கார்டு காட்டியபின் பணம் எடுக்கலாம் என்கிறார்கள். அரை மணி நேரம் வரிசையில் நின்று  பேங்க் கவுன்டர் முன்னால் கார்டை நீட்டினால் இது போதாது ஆதார் கார்டு வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். (இந்தியன்வங்கியில்). இன்றும் போய் வரிசையில் நிற்க வேண்டுமே என்று சலித்துக் கொள்கிறார் எங்கள் குடும்ப அங்கத்தினர். அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறவர்களுக்கே இந்த நிலைமை! அரசாங்கம் கொடுத்த பான் கார்டு எதற்கு ? (அடுத்த கமெண்ட் பதிவு பண்ண வேண்டாம் என்று நினைக்கிறேன்.)  I want to know the value of Pan Card. பணப் பட்டுவாடா செய்கிற வங்கியிலேயே அதற்கு மதிப்பில்லை என்றால் அந்த கார்டு எதற்கு ?
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வாழ நினைக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் இன்னமும் இருக்கிறோம். தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு எங்களைக் கொண்டு வந்து விடாதீர்கள். 

2. இந்த கோபத்தை மறக்க வைக்கும் அளவு ஒரு நிகழ்ச்சி. ட்ரைனில் எனது அருகில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்ட ஒரு விஷயம் : அவர்களுக்கு வேண்டிய ஒருவருக்கு நெஞ்சு வலி என்று ஒரு பெண் சொல்ல, இன்னொரு பெண் சொன்ன பதில் : " சிரமத்தைப் பார்க்கலாமே கெவருமென்ட் ஆஸ்பத்திரிக்குப் போ. பெரிய ஆஸ்பத்திரி பக்கம் போயிடாதே. அம்மா எவ்வளவு பெரிய ஆளு . எவ்வளவு பவர் இருக்கு. அவங்களுக்கு நெஞ்சு சளி .. மூச்சு விட முடியலைன்னு சொல்லிட்டு மாச கணக்கா வைத்தியம் பார்க்கானுக. இன்னும் குணமாக்கலே. அவங்களுக்கே அப்படின்னா நாம எந்த மூலை?
வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்லி நம்ம கைக்காசை, பணத்தைப் பிடுங்கிட்டு பிணத்தை கைலே குடுத்து அனுப்பிடுவாங்க. அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பெரிய ஆஸ்பத்திரி பக்கமே போயிடாதே".  
இதைக் கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன். அவர்கள் என்னை முறைக்கவும், இறங்க ரெடி ஆவது போல் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்து விட்டேன்.



Thursday, November 17, 2016

ஹாய் பிரெண்ட்ஸ்

Image result for image of mamta banerjee
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஸ்கார் (வேறு ஏதாவது பாக்கி இருக்கானு யோசிக்கிறேன். இவ்வளவு ஐஸும் எதுக்குன்னு நினைக்கிறீங்க. உங்களாலே எனக்கொரு காரியம் ஆகணும் )
இந்த பிளாக் விசிட்டர்ஸ் எல்லோருக்கும் தமிழ் தெரியும். உங்களில் யாருக்காவது வங்காள மொழி தெரியுமா ? தெரிஞ்சவங்க நான் சொல்ற செய்தியை நம்ம மம்தா பானர்ஜி மேடம் கிட்டே சொல்லணும். அவங்க மேலே நான் ரொம்ப கோபமா இருக்கிறேன். இதை அவங்ககிட்டே சொல்லணும். அவங்க பாட்டுக்கு துக்ளக் தர்பார்னு அடிச்சு விட்டுட்டார். இதை ... இதை ... இதே ஸ்டேட்மென்ட்டை என் பிளாக்கில் பதிவு பண்ணனும்னு நான் ஒரு வாரமா அசை போட்டுட்டு இருக்கிறேன். வர்ற சன் டே அதை பதிவு பண்ணலாம்னு இருந்தேன். அதற்குள்ளே மேடம் முந்தி கிட்டாங்க. 
விவரமா சொல்றேன்.
ரூபாய் மாற்ற அறிவிப்பு, அதைத் தொடர்ந்து மக்களின் அவஸ்தையை சேனல்ஸ் படம் பிடித்துக் காட்டும் போதெல்லாம் எனக்கு முகமது பின் துக்ளக் நினைவு வந்தது. (கோவில்களில் சூரசம்காரம்  திருக் கல்யாணம் செய்யப்படுவதெல்லாம், அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மக்களுக்கு விளக்கத்தான் என்று ஆன்மீக பேச்சாளர் ஒருவர் சொன்னார். அதே மாதிரி துக்ளக் பற்றி நாம் பாடத்தில்தானே படித்திருக்கிறோம். அவர் இப்படித் தான் இருந்தார் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்களா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.)
உண்மையில் அவர் ஒரு நல்ல ராஜா. அவர் யோசித்தவை எல்லாமே நல்லவிஷயங்கள்தான்.அதை நடைமுறைப்படுத்தும்போதுதான் குழப்பம் வந்தது. டில்லி ஒரு மூலை. கன்னியாகுமரி ஒரு மூலை. டில்லியிலிருந்து தெற்கை பரிபாலனம் செய்வது கஷ்டம். அதனால் சென்டர் ப்ளெசுக்கு தலை நகரை மாற்ற நினைத்தார். மாற்றினார். சரிப்பட்டு வரலை என்று படித்த ஞாபகம் . மக்கள்கிட்டே இருந்த காசுகளை வாங்கி விட்டு வேறு காசுகளை மாற்றிக் கொடுக்க நினைத்தார். நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் வந்தது. 
டிவி நியூஸ் பார்க்கும் போதெல்லாம் இந்த சரித்திர சான்றுதான் எனக்கு நினைவில் வந்தது. இதை பதிவு பண்ண நினைத்தேன். என்னை முந்திக்  கொண்டு பானர்ஜி மேடம் ஸ்டேட்மென்ட் விட்டுட்டாங்க.
அதிலே உனக்கு என்ன பிரச்சினைனு கேக்குறீங்களா ? இதை நான் பதிவு செய்தால் அந்த அம்மா சொன்னதை காப்பி அடிச்சு இவங்க பிளாக்கில் பதிவு செய்றாங்களே என்பார்கள்.
நெட்டில் சிலர் சொல்வது ரொம்ப அறிவுஜீவித்தனமாக தெரியும். உண்மையில் அது யாரோ ஒருவரின் கற்பனையில் எங்கோ ஒரு மூலையில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கும். அதுக்கு ஒரு சிலர் கலர் பூசி இவங்க  சொந்த சரக்கு மாதிரி விற்பனை செஞ்சிடறாங்க. இதுதான் உலகம் முழுக்க இப்போது  நடந்து கொண்டிருக்கிறது.
பக்குவப்பட்ட கலைஞர்கள் திருடுகிறார்கள். பக்குவப்படாத கலைஞர்கள் காப்பி அடிக்கிறார்கள். இந்த ரெண்டையும் நான் செய்ய மாட்டேன். 
ஒரு சில விஷயங்களை நான் வருடக்கணக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு தொடர்கதைகளுக்கான கரு, வசனம், காட்சி அமைப்பு எல்லாமே பல வருடங்களாக கைவசம் உள்ளது. கம்போஸ் பண்ண சோம்பேறிதனம்.
உங்களில் பலர் ரமணா சினிமா பார்த்திருக்கலாம். அதே கதையை பல வருடங்களாக அசைபோட்டுக் கொண்டிருந்தேன். எழுதத்  தோணலே . ஒருநாள் வீட்டில் போரடிக்கிறது என்று சொல்லவும், எனது அக்கா பையன் ரமணா சீடி இருக்குது. போட்டுப்பாரு. படம் நல்லா இருக்கும் என்றான். எனக்கு படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கிடையாது. இருந்தாலும் பொழுதைப் போக்க படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப ஆச்சரியம். நான் யோசித்து வைத்த மாதிரியே கதை, காட்சி அமைப்பு. ஆச்சரியப்பட்டேன்.
நல்லவேளை. நாம நினைச்ச கதையை எழுதி அனுப்பாமே இருந்தோம். அனுப்பி இருந்தா ரமணா கதையை நான் காப்பி அடிச்சதா எல்லாரும் சொல்வாங்களே. இந்தப் பையன் நம்மள வற்புறுத்தி படம் பார்க்க வச்சது நல்லதா போச்சு என்று நினைத்துக் கொண்டேன்.
இன்னொரு சம்பவம். ஒரு சிறுகதைக்கான கரு. பல வருடங்களாக நினைவில் இருந்தது. அதே கதையை ஒருவர் எழுத, அது  விகடனில் பரிசுக் கதையாக வெளியாகி இருந்தது. இனிமே அதை நான் எழுதினால், நான் காப்பி அடித்ததாக சொல்வார்கள். அதனால் அதை அப்போதைக்கு மறந்து விட்டேன். 
ரமணா, இந்த சிறுகதை மூலம் நான் தெரிந்து கொண்ட விஷயம் என்ன வென்றால் ஒரே மாதிரியான விஷயங்கள் ஒரு சிலருக்கு தோன்றும் என்பதுதான்.  இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் ஒரு கதைக்கு "இந்த தலைப்பு, இந்த கதாபாத்திரத்துக்கு இந்த பேர்"னு நான் முடிவு பண்ணி இருந்தேனோ, அதே கதை , அதே பெயரில் அந்த நினைப்பு வந்த மறுவாரமே குமுதத்தில் வெளியாகி இருந்தது. இதை என்னவென்று சொல்வது.
நிறையவிஷயங்கள் காப்பிஅடிக்கப்படுவது அப்பட்டமாகதெரிந்தாலும் அதை  காப்பி என்று சொல்லாமல் இருவருக்கும் ஒரே மாதிரி கற்பனை தோன்றி இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொள்வேன்..  
இந்த மூன்று சம்பவத்திலும் சம்பந்தப்பட்டவர்களை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது. அப்படி இருக்க ஒரே மாதிரியான சிந்தனை எப்படி உருவானது.
விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
சரி. மம்தா ஜீயை பார்த்தால் என் வருத்தத்தை மறக்காமே சொல்லுங்க. 

Tuesday, November 15, 2016

Hello,

ஹாய் பிரெண்ட்ஸ் ... வியூயர்ஸ் 
நீங்க எல்லாருமே எதோ ஒரு காரணத்தால் டென்ஷன் ஆக இருக்கீங்க. காரணம் ஊரறிஞ்ச ரகசியம். அதை ஊதி உடைக்கணுமா என்ன !
போன நவம்பரில் எல்லாரும் சாப்பாட்டுக்கும் தண்ணிக்கும் ரொம்பவும் கஷ்டப் பட்டோம். நாம் இப்போ உயிரோடு இருக்கிறதே மறுபிறவி எடுத்த மாதிரிதான்.
இந்த நவம்பரிலும் நமக்கு ஒரு சில தட்டுப்பாடு... ஒரு பெரிய கட்டுப்பாட்டால்.
போன நவம்பரில் நமக்கு எல்லாம் இருந்தும் ஒருவேளை சோத்துக்கு அலை பாய்ஞ்சோம் (இன்னிக்கு நாங்க உயிரோடு இருப்பதில் பெரும் பங்கு முஸ்லீம் சகோதரர்களுக்கு உண்டு.
இங்கே ஒரு பிளாஷ் பேக் .. போன வாரம் என்னுடன் பயணித்த ஒரு முஸ்லீம் லேடி கையில் மூன்று கனத்த பொருட்களை வைத்திருந்தார். தனி ஆளாக அதை கையில் தூங்குவதில் சிரமப்பட்டார். "குடுங்க ... இப்போ என்ட்ரன்ஸில்  வைக்கிறேன். தாம்பரம் ஸ்டேஷன் வந்ததும் நான் இறக்கி தருகிறேன் " என்றேன். சரி என்று அவர் சொன்னாலும் அவர் கவனம் என் மீதே இருந்தது. சொன்னபடியே இறக்கி வைத்தேன். "உங்களால் ஸ்டெப்ஸ் ஏற முடியுமா ? நான் வேணும்னா உங்ககூட வரவா ? நீங்க எங்கே போகணும் ?" என்று கேட்டேன். 
"நீங்க எங்கே போகணும் ?" என்று கேட்டார்.
"பாரதி நகர் போகணும். ஆட்டோ பிடிக்க அந்த சைட் போவேன் " என்றேன்.
"நான் அதுக்கும் அப்புறம் போகணும் ?" என்றார் 
"அப்படின்னா வாங்க .. உங்களை ஆட்டோலே ஏத்தி அனுப்பறேன் " என்றேன். அப்போதும் அவருக்கு என் மேலே எதோ ஒரு அவநம்பிக்கை. 
"நாங்க இன்னிக்கு உயிரோடு இருக்கிறோம்னா அது போன நவம்பரில் உங்க ஆளுங்க செஞ்ச உதவியால்தான். வீடு தேடி வந்து நீங்க உதவி செஞ்சீங்க. அதான் இன்னிக்கு நானே வலிய வந்து உங்க பொருளை தூக்குறேன் " என்று அவருக்குப் புரிய வைத்தேன். 
அதன்பின் அவர் என்னோடு சகஜமாக பேசினார். அவரை பஸ் ஏற்றி அனுப்பி விட்டே  நான் மார்க்கெட் நோக்கி நடந்தேன். சென்ற வருட நவம்பர் மறக்க முடியாத ஒன்று. )
இந்த நவம்பரை பத்தி நான் சொல்ல வேண்டியதே இல்லை.
அடுத்த நவம்பர் எந்தவிதத்தில் பரபரப்பை உண்டாக்கும்னு சொல்லுங்க . எனக்கு மெயில் அனுப்புங்க. அதை அடுத்த நவம்பர் வரை பத்திரமா வச்சிருப்பேன். யார் கணித்த சம்பவத்தோடு அடுத்த நவம்பர் ஒத்துப் போகிறதோ அவங்களுக்கு அடுத்த டிசம்பரில் நான் பத்தாயிரம் ரூபாய் பரிசாகத் தருவேன்- ஒரு வெகுமானமாக - சரியாக சொன்னவர்களை கவுரவிக்கும் விதமாக. 10க்கும் மேற்பட்ட செய்திகள் ஒத்துப் போனால் பரிசை பத்து பேருக்கும் பகிர்ந்து கொடுப்பேன். இங்கே பரிசு ஒரு தூசுதான். உங்களோட கணிப்பு இங்கே தலை வணங்கப்படும். 
arunasshanmugam@gmail.com

Sunday, November 13, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 11)

புதிர்எண்-10 ன் விடை - ஸ்டார்ஸ் மட்டுமே மின்னும். 
இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள்.


புதிர் எண்  - 11  
Image result for image of small boy in running cycle
சாக்கு மூட்டையுடன்  சைக்கிளில் வேகமாகப் பறந்து கொண்டிருந்த வேலனை தடுத்து நிறுத்திய அவனது நண்பன்  " ஏன் இத்தனை வேகம் ? எங்கே போகிறாய் ? "  என்று கேட்க, " முக்கியமான ஒன்றை எடுக்காமல், வண்டி கட்டிக்கொண்டு எங்க அப்பா வயற்காட்டுக்கு போயிட்டார். அதைக் கொடுக்கப் போகிறேன் " என்ற வேலனிடம் " என்ன அந்த முக்கியமான ஒன்று ? " என்று நண்பன் கேட்க, " ராமன் கையிலிருந்ததன் முதல் எழுத்தோடு, அனுமன் கையிலிருந்த ஒன்றின் கடைசி எழுத்தை சேர்த்து, அரிசிக்கு ஆதாரமான பொருளை சேர்த்தால் அப்பா மறந்தது என்னவென்பது தெரியும் . அதைக் கண்டுபிடிச்சு வை. திரும்பி வரும் போது உன் அறிவை டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறேன் " என்று புதிரில் பதில் சொன்ன வேலன் அங்கிருந்து பறந்தான். கேள்வி என்னவென்றால் அப்பா மறந்தது என்ன ? 

விடை கண்டு பிடிக்க முடியாதவர்கள் ஒரு வாரம் காத்திருக்கவும் பதிலைத் தெரிந்து கொள்ள !

Saturday, November 12, 2016

நானொரு முட்டாளுங்க !

Image result for images of water pot
ரெண்டு நாளா ஒரே சிந்தனைதான்.இன்னிக்குப் பொழுதை ஓட்டியாச்சு. நாளைக்கு செலவுக்குப் பணம் வேணுமே. நடக்கக்கூட  முடியாமே கால்வலி பாடாய் படுத்துது. இதில் பேங்க் க்யூ விலே எப்படி நிக்க முடியும் ? பணம் வேணுமே என்று யோசிக்கும்போது எனக்குள் ஒரு மணியோசை.. 
அந்த ஓசை சொன்ன செய்தி : நீயொரு குறைகுடங்கிறது சரியாதான் இருக்குது. கையிலே ஒண்ணு ரெண்டு 500 ரூபாய் தாளை வச்சுகிட்டு இந்த அலட்டு அலட்டறே . மூட்டை மூட்டையா வச்சிருக்கிற எவனாவது இதைப் பத்தி வாயைத் திறக்கிறானா ? அவங்க நிறைகுடம். சத்தம் இல்லாமே இருப்பாங்க .நீ காலிப் பானை. அதான் ஓயாமே பினாத்திக்கிட்டே இருக்கிறே!
இதுக்கு மேலேயும் நான் 500 பத்தி  வாயைத் திறப்பேனா என்ன ? 

Friday, November 11, 2016

பாரதப் பிரதமரே, பரம தயாளரே

images of modi க்கான பட முடிவு
உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்.
சேனல்களில் வெளியான ஒளிபரப்பு செய்திகளை நம்பி எங்கள் வசமுள்ள 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற நாய் படாத படுகிறோம். எங்களுக்கென்று வங்கிக் கணக்கு இருக்கிறது. நாங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். நீண்ட வரிசையில் நிற்கும் சக்தி எங்களுக்குக் கிடையாது. அதனால் இன்னும் பத்து பதினைந்து நாள் கழித்துப் போகலாம் என்ற முடிவில் இருந்தோம்.
ஒரு அவசரத் தேவைக்கு பணம் வேண்டுமே என்று உங்கள் அறிவிப்பை நம்பி  அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு  போய்க் கேட்டால் எங்கள் முகத்தைப் பார்த்து பதில் சொல்லக் கூட முடியாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களை குற்றம் சொல்லவில்லை. அவர்கள் வேலைப் பளு அப்படி. "சரிம்மா.. எங்களுக்குத் தேவையான இன்பர்மேசனை யாரிடம் கேட்கலாம்" என்று   கேட்டேன். "அதற்கெல்லாம் தனி கவுன்டர் கிடையாது" என்ற அறிவிப்பு அலட்சியமாக வந்தது.
"ஒரு வாரத்துக்குப் பிறகு வாங்க" என்றார்கள்.
ஒரு வாரம் அல்ல ஒரு மாதம் கூட காத்திருக்க நாங்க ரெடி. ஆனால் எங்களது உடல்நிலை சூழ்நிலை காத்திருக்காதே.
ஐயா நாங்கள் பிச்சை கேட்கவில்லை. மாற்று ஏற்பாடு கேட்கிறோம். அதை சொல்ல செய்ய சம்பந்தப்பட்ட நபர்கள் தயாராக இல்லையே.
அதனால் தாமரையின் மலர் பாதம் பணிந்து இந்த வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.
உங்களது கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலகங்களுக்கு மிகச்சரியான விவரங்களை சரியானபடி நீங்கள் தெரிவித்தால் அதை அவர்கள் எங்களுக்கு சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
  

Thursday, November 10, 2016

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation
நம்ம மோடிஜீக்கு நன்றி. என்னோட மிகப் பெரிய கவலை ஒன்றை தீர்த்து வச்சதுக்காக. 
இப்படி மொட்டையா சொன்னா எல்லாருக்கும் புரியாதுதானே. அதனாலே விலாவாரியா பேசலாம்.
உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச கதை ஒண்ணு உண்டு. அதைக் கேட்காமே  தமிழ் நாட்டிலுள்ள எந்தவொரு ஜீவனுமே பிறந்து வளர்ந்திருக்க முடியாது.
யாருக்காது மறந்து போயிருந்தா அதை இப்ப ஞாபகப் படுத்திக்கோங்க. ஒரு குரங்கு வாலில் முள்ளு குத்திடும். அதை எடுக்கச் சொல்லி குரங்கு ஒருத்தன் கிட்டே கேட்கும். அவன் குரங்கோட வாலை அறுத்திடுவான். கோபப்பட்ட குரங்கு அறுந்து போன என் வாலை ஒட்ட வை. இல்லாட்டா கத்தியைக் குடுன்னு  கேட்கும். அவன் கத்தியைக் குடுத்திடுவான். இப்படியே அந்த கதை நீண்டு கிட்டே போகும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை இழக்கும் குரங்கு அதற்குப் பதிலா எதாவது ஒண்ணை வாங்கிக்கிடும். கடைசியில்  "வாலு போச்சு கத்தி வந்தது டும்டும்டும் 
கத்தி போச்சு மாம்பழம் வந்தது  டும்டும்டும் " என்ற ரீதியில் பெரிய பாட்டு ஒண்ணை பாடி முடிக்கும்.
இதை ஏன் இங்கே சொல்றேன்னா, நடந்து முடிந்த எலெக்சனுக்கு முன்னாடி எந்த சேனலை திருப்பினாலும் நம் கண்ணில்பட்ட காட்சி மது விலக்கு போராட்டக் காட்சிகள்தான். மின்கம்பி மேலே ஏறி நின்னு ஆர்ப்பாட்டம் பண்ணினவங்க பலபேர். அவங்களை கீழே இறக்க காவல்துறைபடாத பாடுபடும். 
(இந்தமாதிரி சீன்ஸ் வரும்போது எங்க அம்மா அடிக்கிற கமெண்ட் ஒன்று உண்டு.அது: பிரயாணம் போறோம்னு கிளம்பிப்போய் அங்கங்கே ஜனங்க சாகுதுங்க. எவனோ வைக்கிற குண்டுலே சம்பந்தமில்லாத எவனெவனோ செத்துப் போறான். அதுக்காக வருத்தப்பட்டா அதில் ஒரு அர்த்தம் இருக்குது. அவனா "போறேன்"னு  சொன்னா, மத்தவங்களுக்கு தொந்தரவில்லாதபடி போயிட்டு வா"னு சொல்றதை விட்டுட்டு அவங்கூட இவனுக ஏன் மல்லுக்கு நிக்கிறாங்க ?".
எலெக்சன் ரிசல்ட் வந்ததும் மதுவிலக்கு சீன்ஸ் மறைஞ்சி போயிட்டுது. அப்புறம் கொஞ்ச நாள் சுவாதி மேட்டர் தூள் கிளப்புச்சு. ராம்குமார் சீனுக்கு வந்ததும் சுவாதிக்கு டாட்டா. அம்மா ஆஸ்பத்திரிக்குப் போனதும் ராம்குமார் போன இடம் தெரியலே. (இடையில் ட்ரைன் கொள்ளை சீன்ஸ் வேறே).
நம்ம அம்மா பத்தி ரூமர் கிளம்பும் போதெல்லாம், "வேற்று கிரகத்தில் நடக்கிற விஷயங்களையே ரொம்ப ஈஸியா படம் பிடிச்சு காட்டிடறாங்க. இவங்களை ஒரு நாளைக்கு ஒரே ஒருமுறை ஒரு ரெண்டே ரெண்டு நிமிஷம் லைவ் ஆக காட்டிட்டா தேவையில்லாத ரூமர் வராதே. என்ன நடக்கிறதுனு தெரியாமே தானே ஜனங்க அவங்கவங்க கற்பனையில் எதையாவது சொல்றாங்க. இதுதான் நடக்குதுனு எடுத்துக் காட்டிட்டா ரூமர்ங்கிற பேச்சுக்கே வேலை இருக்காதே   என்று நினைப்பேன். அந்த நினைப்பு வரும்போதெல்லாம் அடுத்து என்ன பிரச்சினை வந்தா இந்த சீன் இடம் மாறும் என்று ரொம்பவும் யோசிப்பேன். வீட்டில் என்ன இருக்கு இல்லை என்கிற கவலையைவிட அடுத்தாப்லே வரப்போற நியூஸ் என்னவா இருக்கும் என்பதுதான் என்னோட மிகப் பெரிய ஆர்வமா இருந்துது. ரூபாய் நோட்டு விவகாரம் வந்ததும், "அப்பாடா ... சேனல்ஸ்க்கு ஒரு டாபிக் கிடைச்சிட்டுது" என்ற நிம்மதி பெருமூச்சு வர்ற அதே சமயத்தில் அடுத்தது என்ன என்கிற ஆர்வம் இருக்குது.
எல்லா போஸ்ட் ஆபீஸிலும் பேங்கிலும் இன்றிலிருந்து ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம்னு அறிவிப்பு வந்துச்சு. அதை நம்பிப் போன எங்க வீட்டு ஜீவன் ஒண்ணு  போஸ்ட் ஆபீஸ் வரை போயிட்டு ரொம்ப சோகமா திரும்பி வந்து கையிலிருந்த ஐநூறு ரூபாய் தாளை ஆட்டிக் கொண்டே சொன்ன ஒரு சேதி: "அவங்களுக்கே இன்னும் பணம் வந்து சேரலையாம். ரெண்டு மணிக்குள் வரும்னு எதிர் பார்க்கிறாங்களாம். அப்புறமா வாங்கனு சொல்லிட்டாங்க. எந்த பேங்கில் வேணும்னாலும் மாத்திக்கலாம்னு சொன்னதாலே நம்ம வீட்டுப் பக்கத்தில் இருக்கிற பேங்க் க்யூவில் நின்னேன். அந்த பேங்கில் அக்கவுண்ட் இருந்தா மட்டுந்தான் தருவேன்னு சொல்லிட்டாங்க"
ஆட்டிக் காட்டிய ரூபாய் நோட்டில் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். துன்பம் வரும் வேளையிலே சிரிங்கனு சொல்லுவாங்க. எங்களைப் பார்த்து நல்லாத்தான் சிரிக்கிறே தாத்தா  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த திட்டத்தை  அநேகமாக எல்லாருமே வரவேற்கிறார்கள். எனக்குள்ள வருத்தம் என்னன்னா "நாட்டின் மிகப் பெரிய கூட்டம் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக அங்கே இங்கேனு ஓடிட்டு இருக்குது. ஒரு சில சிறு வட்டங்கள் ஊரைக் கொள்ளை அடிச்சு உலையில் போட்டுட்டு ஆர்ப்பாட்டம் காட்டிட்டு இருக்குது. அந்த சின்ன வட்டத்தை என்னாலே ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாரையும் ஓங்கி ஒரு அடி அடிச்சா, அந்த அடி அந்த சின்ன வட்டத்து மேலேயம் கண்டிப்பா விழும்னு சொல்றது எந்த ஊர் நியாயம்?!!!!!!!!!!!!!!". 
ஒரு பழமொழி சொல்வாங்க. " நீ ஓலைப் பாயில் ஒளிஞ்சா, நான் தரைக்குள் புகுந்து ஒளிஞ்சுக்குவேன். நீ கோலத்துக்குள் ஒளிஞ்சுகிட்டா, நான் மண்ணு க்குள் மறைஞ்சுக்குவேன் " என்று!
கிரிமினல் வேலை பண்றவங்களுக்கு எப்பவுமே மைன்ட் ரொம்ப ஷார்ப் ஆக இருக்கும். அவங்க இப்ப என்ன யோசிப்பாங்கனு நான் யோசிச்சிட்டு இருக்கிறேன். வீட்டிலே ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்குது. எங்காவது ஒரு ரூம் கிடைக்குமா சொல்லுங்க. யோசிக்க நிறையவே விஷயம் இருக்குது.      

Sunday, November 06, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 10)

புதிர்எண்-9ன்விடைபெரியவரின் பிறந்த தினம்  பெப்ரவரி 29. அது நான்கு  ஆண்டுகளுக்கு    ஒரு முறைதான் வரும்அப்படிக் கணக்கிடும்போது  அவரது  60 வது வயதில் அவர் கொண்டாடும் 15 வது பிறந்த தினம்.


புதிர் எண் - 10 
இரவு நேர சாப்பாடு முடிந்தபின் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு வாக்கிங் சென்று கொண்டிருந்த சேது , வானத்தை சுட்டிக்காட்டி " அப்பா , அதோ பாருங்க அந்த ஸ்டார் எவ்வளவு பெரிசா பிரகாசமா இருக்கு " என்றான். 
வானத்தை அண்ணாந்து பார்த்த அப்பா, " அது ஸ்டார் இல்லே . அது ஒரு கிரகம் , பிளானெட் " என்றார். "எதை வைத்து அப்படி சொல்றீங்க ? " என்று கேட்ட சேதுவிற்கு, அப்பா விளக்கம் சொன்னார்.
அப்பா சொன்னது இருக்கட்டும். கீழே நின்று கொண்டு  வானத்திலுள்ள ஸ்டார், மற்றும் ப்ளாநெட்டை அடையாளம் கண்டுகொள்ள உங்களால் முடியுமா ? எந்த வகையில் ?