Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, December 25, 2016

DEAR VIEWERS,

கீழே பதிவு செய்யப்பட்ட கதை என் சகோதரியின் பேத்தி (பெயர் லாவண்யா, 8 வயது,மூன்றாம் வகுப்பு படிக்கிறாள் )எழுதியது. " ஆச்சி நான் ஒரு கதை எழுதி இருக்கிறேன். நானே யோசிச்சு எழுதினேன்  இதை நெட்டில் போடு !" என்றாள் .
கதையின் தலைப்பு பார்த்ததும் அசந்து விட்டேன். ஏனென்றால் சேனல்களில் வரும் பேய்க்கதைகளை யார் பக்கத்திலாவது உட்கார்ந்து கொண்டு விரல்களால் முகத்தை மூடிக்கொண்டு விரல் இடுக்கு வழியாக சீரியலைப் பார்ப்பாள். "இப்படி பயந்துகிட்டே பார்க்காட்டா என்ன ! வேறு ஏதாவது பாரு " என்று சொன்னால் கேட்க மாட்டாள்.
குழந்தை ஏதோ ஒரு ஆசையில் கதை என்ற ஒன்றை எழுதி இருப்பதாக நம்புகிறாள் . உங்களின் எண்ணங்களை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள். குழந்தையை எங்கரேஜ் பண்ணுவதற்காக என்றில்லாமல் உங்களின் உண்மையான எண்ணத்தை மட்டும் பதிவு செய்யுங்கள். அது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். இதில் இலக்கணப் பிழைகள் இருக்கும். இருந்தாலும் குழந்தை எழுதியை அப்படியே பதிவு செய்கிறேன்.

                                                                   THE GHOST STORY
                                                                  THE GHOST AND RIA
     Once upon a time there was a house in U.K. In that house Ria
and  her family was there.  But they don't like the house.
     Then they go to a new house.   Near the house there was another house. One day Ria and her friends were playing near the another house.  The current went and Suddenly the street lights were Off.
     Ria and her friends  started searching the way to their house.
     Then they heard a voice " ha...haa...haa..".
     The voice was coming from the house which one was near Ria's house.
     Ria's friends started shouting.
     But Ria asked "who are you? where are you? and why you are laughing like this?
    Are you frightening us ?".
    "No.. I am not frightening you. You are only frightening yourself. I am not a ghost. I am a Prince.
    A bad witch had changed me as a ghost. I am very sad. Because all are afraid of me".
    Ria said " Don't worry. I ask my mother to relieve you from this ghost appearance"
    Ria  told her mum what she heard in the nearest house and asked "Mum. who is that witch?".
    Ria's mum told that the witch is living in the Safaria Hill. She has a magical rose. If one put the  
    juice  of the rose in affected prince's eye he could come back as prince.
    That night Ria went to Safaria Hill. when the witch was sleeping, Ria took the rose came back to
    her house. Next morning she went to ghost's house and put the rose's juice in ghost's eye.
    The ghost became as Prince. Now Ria and the Prince are best friends. Ria got the name "BRAVE
    GIRL"
    But the witch is now searching for the rose with a big voice "where is my rose?"
    If she not get the rose, she cannot do any evil things. She must live as a ordinary woman.
   

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 15)

புதிர் எண் 14 ன் விடை  : 60 வது நிமிடத்தையும் , 60 வது நொடியையும் கடிகாரம் காட்டாது 

புதிர் எண்-15


"சேகர் நீ கேட்டபடி ஸ்நாக்ஸ் பாக்கெட் வாங்கி வந்திருக்கிறேன். மொத்தம் 10 இருக்கு. உனக்குத் தேவையானதை எடுத்து வச்சுக்கோ. எத்தனை பேர் போறீங்கன்னு  நேற்று கேட்டதுக்கு இன்னும் முடிவாக லேன்னு சொன்னே. இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணுமே .  எத்தனை பேர் போறீங்க ? எங்கே எப்படிப் போகப்  போறீங்க ? " என்று அப்பா கேட்டதும் " இப்போ எத்தனை பேர்னு கன்பார்ம் ஆயிடுச்சு. பக்கத்து ஊர் மாஞ் சோலைக்கு சைக்கிளில் போறோம். எங்களில் சிலரிடம் சைக்கிள் இருக்குது . ஒரு சைக்கிளில் 2 பேர் உட்கார்ந்து போனால்  2  சைக்கிள் தேவையே இருக்காது . ஒரு சைக்கிளில் ஒருத்தர் என்று போனால் 2 பேருக்கு சைக்கிள் இருக்காது . அப்பா நாங்க கிளம்பறோம். உங்களுக்கும் அம்மாவுக்கும் ஸ்நாக்ஸ் வச்சுட்டு மீதியை எங்களுக்காக எடுத்துட்டுப் போறோம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான். இப்போது கேள்வி என்னவென்றால் இருந்த சைக்கிள் எத்தனை ? பயணம் செய்தவர்கள்

Thursday, December 22, 2016

பாரதப் பிரதமரே, பரம தயாளரே,

Image result for image of smiling modi

உங்கள் முன்பாக எனது பணிவான வேண்டுகோள்.
நவ / நவீன இந்தியாவை உருவாக்க எல்லாரும் CARD SYSTEM-க்கு மாற சொன்னீங்க. சிறிய அளவிலான பலசரக்குக் கடைகளில் கூட மெஷின் வந்து விட்டது. 327 ரூபாய்க்குப் பொருள் வாங்கினால் 377 ரூபாய் டெபிட் பண்றாங்க.
தவறை கண்டு பிடிச்சு கேட்டதும் 50 ரூபாயை திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என்பது வேறு விஷயம்.. 
"ரயில் வே" என்பது நாட்டின் முதுகெலும்பு. இங்கே கார்ட் சிஸ்டம் இல்லை என்கிறார்கள். ஐயா, 5 ரூபாய் 10 ரூபாய் டிக்கெட் என்றால் பரவாயில்லை, கேஷ் கொடுத்திடலாம். 2000 ரூபாய் கொடுத்து சீஸன் டிக்கெட் எடுக்கும் இடத்தில் இந்த வசதி இல்லை என்கிறார்கள். தாம்பரம் ஸ்டேஷனில்மட்டும் இந்த வசதி  இல்லையா அல்லது எங்குமே இல்லையா ?
ஒரு சிலர் வீடுகளுக்கு கோடிக்கணக்கிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் சென்று சேர்ந்து விடுகிறது. மணிக்கணக்கில் க்யூ வரிசையில் நின்று ஒரே ஒரு இரண்டாயிரம் நோட்டைக் கையில் வாங்கி, அதை பையில் போடாமல் ரயில் வே யில் கொடுத்துவிட்டு அன்றாடம் செலவுக்கு நாங்கள் எங்கே போய் யாரைக் கேட்க முடியும்.
உங்கள் கவனத்தை ரயில் வே பக்கம் திருப்பினால், இன்னொரு 2000 ரூபாய்க்காக நாங்கள்  க்யூ வரிசையில் பேங்க் முன்னால் நிற்கும் நேரம் எங்களுக்கு மிச்சமாகுமே !
கருணை காட்டுங்கள் ! காந்தியின் சிரிப்பைக் காண நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம்.

Wednesday, December 21, 2016

Dear viewers,

                                                            இது எப்படி இருக்கு ?
இன்று தற்செயலாக, ஒரு சேனலின் விளம்பர இடைவேளையில் வேறொரு சேனலுக்கு நான் தாவியபோது அந்த சேனலில் வெளியான செய்தியில் என் காதில் விழுந்து என்னை யோசிக்க வைத்த விஷயம் - "பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும்". முகநூலில் ஒரு கயவனின் நட்புக்குப் பலியான பெண்ணைப் பற்றிய செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
ஆண் குழந்தைகளை மட்டுமல்ல; வீட்டிலுள்ள வயதான ஆண்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய நிலைக்குப் பிள்ளைகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதை சொல்வதன் பின்னணியை உங்களுக்கு விளக்குகிறேன். சில நாட்கள் முன்பு என் காதில் விழுந்த விஷயம் என்றாலும் இதை இப்போது பதிவு செய்வதன் காரணம் நேற்றைய  சேனல் செய்திதான்.
ஒருவாரம் முன்பாக என் காதில் விழுந்த விஷயம் (கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நான் சென்ற போது) - "கோடம்பாக்கம் இன்னொரு நுங்கம்பாக்கம் ஆகப்போகுது. ஆயா உனக்கே இவ்வளவு இருக்கும்போது அவருக்கு எவ்வளவு இருக்கும்? கூப்பிட்டா வர மாட்டியா? உன் பிள்ளை என்ன ஆகிறான் பாரு ".
(இந்தமாதிரி டயலாக்கை நிறையபேர் பேசிக் கேட்டிருக்கிறேன். பிள்ளைகள்தான் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறார்களே. ஒரு வீட்டிலுள்ள பிள்ளைகளை கூலிப்படையை வச்சு தாக்கியது  இன்னார் என்று தெரியும்போது, பாதிக்கப்பட்டவர்கள், இந்த செயலை செய்தவன் வீட்டுக்குள் நேராக புகுந்து  அடித்து நொறுக்கப் போகிறார்கள் .. அவ்வளவு தானே ?)
சரி .. நாம மெயின் பிக்ஸருக்கு வருவோம்.
நான் கேட்ட உரையாடல் என்னை சிந்திக்க வைத்தது. எந்த வகையில் கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ஆகுமென்று துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன். (அது சரிதான் என்பதை கதையின் முடிவில் நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.)
என் எண்ணங்களை கதை வடிவில் கொண்டு வந்தால் என்ன என்ற யோசனை பிறந்தது. கதை ஆரம்பித்துவிட்டது. இந்தக்கதைக்கு நான் உரிமை கொண்டாட மாட்டேன். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னோட கதையில் கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ஆகிவிட்டது. அதன்பின் விசாரணை தொடர்கிறது என்ற பீடிகையுடன் ஆரம்பமாகிறது. ஆனால் முடிவை  சொல்ல வேண்டியது நீங்கள். சிறந்த முடிவுக்கு கண்டிப்பாக பரிசு உண்டு.
"ஆயா" என்று குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு கதாநாயகி 60 வயதுக்கு மேற்பட்டவள் என்று வைத்துக் கொள்வோம். 60 வயது ஆயாவை 20 வயது இளைஞன் சுற்ற நியாயம் இல்லை. அதனால் கதாநாயகன் 70 வயதுக்கு மேற்பட்டவன் என்று வைத்துக்கொள்வோம்.(இதை எழுதும்போது   குலதெய்வம் சீரியலில் வருகிற  மலர் என்ற பெண்ணுக்குக் குறி வைக்கும் காவல்துறை அதிகாரி நினைவு வந்தது. அதனால் கதையின் கதாநாயகனுக்கு நாம் அதே போஸ்டைக் கொடுக்கலாம்).
வீட்டுப்பிரச்சினையால் ஆயாவை வீட்டினர் மிரட்டுவதாக இருந்தால் கூலியாள் தேவை இல்லை. வீட்டிலேயே மிரட்டலாம்.
"ஆயா, உனக்கே இவ்வளவு இருக்கும்போது அவருக்கு எவ்வளவு இருக்கும்? கூப்பிட்டா வரமாட்டியா" என்று அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அந்த குரூப்  ரொம்ப காலமாக அவங்களை பின் தொடர்கிற ஆட்களாக இருக்கவேண்டும். யாராவது கூப்பிட்டால் கிளம்பி போய்விடுவது, ஆயாவை வா என்று அழைக்கும் கேடுகெட்டவனின் குடும்பத்துப் பெண்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதில் நாம் தலையிட வேண்டாம். வீட்டுப்பகை என்றால் வெளியில் வைத்து மிரட்டவேண்டிய அவசியமில்லை. பேரக்குழந்தைகளை பார்த்து கொள்ள அழைத்தார்கள் என்றே நாம்  வைத்துக் கொண்டோமானாலும் அதற்காக மிரட்டல் தேவையில்லை. குழந்தைகளை பார்த்துக் கொள்ள எவ்வளவோ பாதுகாப்பு நிலையங்கள் உள்ளன. அதனால் அவள் போகும் வழியில் யார் யார் ரெகுலராக இருப்பார்கள். யாரை விசாரிக்கலாம் என்ற நிலையில் கதை தொடர்கிறது.  
ஒரு தெரு என்று இருந்தால் அங்கு கண்டிப்பாக ஒரு இஸ்திரி போடுறவன் இருப்பான். காவல்காரர்கள் இருப்பார்கள். அவர்களை விசாரிக்கிறோம். (காவல்காரர்களை வைத்திருக்கும் வீட்டினர் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். எவனோ ஒருவன் வீசுகிற எலும்புத்துண்டுக்கு வேலை பார்க்கும் இவர்கள், எவனாவது ஒரு திருடன் ஆட்டுக்கறியை வீசினால், வீட்டினரைக் கொலை பண்ணவும் தயங்க மாட்டார்கள்) . அடுத்தாற்போல் அவள் போகும் பாதையில் உள்ள எல்லா ஆட்டோ ஸ்டாண்டிலும் விசாரிக்கிறோம். (அங்குதானே இந்த உரையாடல் காதில் விழுந்தது). இங்கு கிடைக்கும் விவரங்களும் உரையாடல்களும் துப்பறிகிறவர்கள் வேலையை சுலபமாக்குகிறது.)
அடுத்து அவள் வேலை பார்க்கும் இடத்தில் விசாரிக்கிறோம். இங்குதான் மேட்டரே இருக்குது. நிறைய விஷயம் கிடைக்கிறது. அந்த அளவுக்கு "விசாரணை" நடக்கிறது.
சரி. கதாநாயகனுக்கு வேண்டாதவர்கள் அவன் பேரை சொல்லி இவளை மிரட்டுவதாக வைத்துக்கொண்டாலும் லாஜிக் சரியாக வரவில்லை. அவனோட வீட்டு ஆட்களை விட்டுட்டு சம்பந்தமில்லாத யாரோ ஒருவரை ஏன் மிரட்டணும் என்ற கேள்வி வரும். அதனால் கதாநாயகன் "தொழில்" செய்த இடத்தில் விசாரணை நடக்கிறது. இங்கு போதும் போதும் என்கிற அளவுக்கு விவரம் கிடைக்கிறது.
கதாநாயகி வீட்டுக்குப்போய் அவளுக்கு எதிராக இருந்தவர்கள் பற்றி விசாரித்தால், பகைமை பாராட்டும் அளவு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அவர்கள் ஒரே ஒரு சம்பவத்தை, ஒரு குடும்பத்தைப் பற்றி சொல்கிறார்கள். அங்கு போய் அஸ்திவாரத்தைத் தோண்டி எடுத்து தகவல் சேர்க்கிறார்கள். 
இந்த இடத்தில் கதையை நான் நிறுத்துகிறேன்.
இதற்கு மேலே கதையைத் தொடர்ந்து, முடிவை சொல்ல வேண்டியது நீங்கள். ஒவ்வொரு வரியையும்  கவனமாக படியுங்கள். பரிசு உண்டு.
கோடம்பாக்கம் எப்போது  நுங்கம்பாக்கம் ஆகிறதென்று பார்க்கலாம். அப்படி ஆகும்போது இந்த கதையை ஆதாரமாக வைத்து துப்பறிவோம்.
இதை நான் ஏன் சொல்கிறேனென்றால் என்னுடைய பிரெண்ட், "உங்கள் பிளாக்கில் நீங்கள் எழுதுவதெல்லாம் நடக்கிறது" என்று சொன்னாள்.
(சம்பவம்-1. பணத்தை வாங்கிட்டு பிணத்தை கையில் கொடுத்து அனுப்பிடுவாங்க.
சம்பவம் - 2 - ஓங்கி ஒரு அடி அடிச்சிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன் - வருணன் சூரியன் சம்பாஷணையாக நான் எழுதிய வரி இது)
அதனால் எதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்ப்போம். இதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்ப்போம்.



Sunday, December 11, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 14)

புதிர் எண் 13 ன் விடை - முதலில் அம்மாவும் அந்த சிறுவனும் போனார்கள். மறுகரையில் அம்மா இறங்கியதும், சிறுவனோடு திரும்பிவந்த பரிசல் ராகவனையும் நாயையும் ஏற்றி சென்றது. நாய்க்கு வைத்தியம் பார்த்துவிட்டு அதே பரிசலில் திரும்பிவிட்டார் ராகவன்  குறைந்த செலவில், மிகக் குறைந்த நேரத்தில் ! இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள். 

புதிர் எண்-14
 Image result for image of wall clock
கால அளவீடு எல்லோருக்கும் தெரிந்த ஒன்று ( 24 மணி நேரம் என்பது  1 நாள், 60 நிமிடம் என்பது 1 மணி, 60 நொடி என்பது 1 நிமிடம் ). எல்லாக் கடிகாரமும் ஒரு நாளின் 12 மணி வரையிலான நேரத்தை மட்டுமே காட்டும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
மணி / நிமிடம் / நொடிகள் காட்டும் எந்தவொரு கடிகாரமும், எந்தவொரு குறிப்பிட்ட நேரத்தைக் காட்டாது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் ? 


Wednesday, December 07, 2016

Dear Viewers,

Image result for image of sad person
உலகில் இரண்டு விதமான மனிதர்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்று தன்னைசுற்றி தனக்குத்தானே ஒரு வட்டம் போட்டுக்கொண்டு வாழ்பவர் சிலர்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம். மொத்தத்தில் வாழ்ந்தாக வேண்டும் என்ற நினைப்பில் பலர்.
ஒருசில விஷயங்களில் அந்த முதலாவது குரூப்பில்தான்  இன்றும்  நான் இருக்கிறேன். இப்படித்தான் என்று ஏதாவது ஒன்றை முடிவு செய்து விட்டால் அதை விட்டு மாற மாட்டேன். அது சாதகமா பாதகமா என்பது பற்றி கவலைப்பட மாட்டேன். நாம்தான் இப்படியா இல்லே நம்மளப் போலவும் சிலர் இருப்பாங்களா என்று அடிக்கடி யோசிப்பேன்.
என்னுடைய பழக்கங்களில் ஒன்று : நான் மிகவும் நேசிக்கும் யாராவது இறந்து விட்டால், அந்த வீட்டிற்குப் போவதை மிகவும் தவிர்ப்பேன். (பொதுவாக யாராவது இறந்து போன நியூஸ் வந்தால் அவங்களை, அவங்க முகத்தைப் பார்த்தே ஆகணும்னு ஓடுபவர்கள் பலர். நானோ, சாவு  சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்குப் போகக் கிளம்பினால் கூட, " கடவுளே ..நான் போவதற்குள் "பாடி" அங்கிருந்து போய்  இருக்க வேண்டும் " என்று வேண்டிக் கொள்வேன்.
எனது சித்தி சித்தப்பா, செல்வம் அண்ணா, தம்பி நடராஜ், எனது அலுவலக தோழி  மீது  எனக்குள்ள பாசம் என் வீட்டினருக்குத் தெரியும். ஆனால் இவர்கள் இறப்புக்கு நான் போகவில்லை.
காரணம் - அவர்களை நினைக்கும்போது அவர்களோடு பேசிப் பழகிய நாட்கள்தான் எனக்கு நினைவுக்கு வரவேண்டுமே தவிர  "பிணக்கோலம்" நினைவுக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படி எனக்கு ஒரு எண்ணம் உண்டு என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது. இறப்புக்குக் கூட போகாதது பற்றி கெட்ட பெயர் வாங்கி இருக்கிறேன்.
ஒருவர் இறந்து பல மாதம் ஆகி இருக்கும். ஏதாவது வேலையாக அந்த குடும்பம் இருக்கும் ஊருக்கு செல்லும் சிலர், துக்கம் விசாரிப்பதை ஒரு வேலையாக செய்வார்கள். (கிட்டத்தட்ட அந்த குடும்பம் அதை மறந்து மீண்டு வந்திருப்பார்கள். இவர்கள் போய் அதை நினைவு படுத்துவார்கள்). இப்படியொரு வேலையை நான் எந்த சூழ்நிலையிலும் செய்ய மாட்டேன். 
இது சரியா பைத்தியக்காரத்தனமா நம்மளப்போல வேறு யாரவது இதே போல பீலிங்கில் இருப்பார்களா என்று அடிக்கடி யோசிப்பேன்.
நேற்று ஒரு சேனலில் திரைப்பட நடிகர் S.V.சேகர் நம் அம்மாவின் மறைவு குறித்தும்   அங்கு போகாதது பற்றிய அவர் சூழ்நிலை பற்றி பேசும்போது, " எங்க வீட்டிலேயும் நெருங்கிய உறவினர் இறந்து விட்டார். இன்னொரு காரணம் இறந்துபோனவர்களை பார்க்க நான் விரும்புவதில்லை. அவங்க நினைப்பு வரும்போது இந்த இறப்பு எனக்கு நினைவுக்கு வரக்கூடாது என்பதால் தவிர்ப்பேன் என்றார்.
அவர் பேசினதை நான் முழுமையாகக் கேட்கவில்லை. தற்செயலாக சேனல் திருப்பும் போது  இதைக் கவனித்தேன்.
ஆஹா....நம்மளப் போலவே யோசிக்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஒரு சந்தோசம் (அல்ப சந்தோசம்). நீங்களெல்லாம் எந்த ரகம் ?

Sunday, December 04, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 13)

புதிர் எண் 12 ன் விடை - கண்டம். இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள். 

புதிர் எண் 13


காலில் காயம் பட்ட நாய்க்குட்டியைத் தூக்கிக் கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடிவந்த ராகவன், பரிசல் ஓட்டும் பையனிடம் " தம்பி, அந்தக் கரையிலுள்ள மருத்துவரிடம் என் நாய்க்கு மருத்துவம் பார்க்கணும். வாப்பா " என்று சொல்ல  
ஏற்கனவே ஒரு சிறுவனை கையில் பிடித்துக் கொண்டு அங்கு நின்று கொண்டிருந்த பெண்ணொருத்தி " ஐயா, என் வீடு அந்தக் கரையில்தான் இருக்கு. கொண்டு போய் விடு  என்று சொன்னால், அதற்க்கு இவன் நிறைய கண்டிஷன்   போடுறான். என்னை அங்கு கொண்டுபோய் சேர்த்த பின் இங்கு அவன் திரும்பி வரும்போது யாராவது சவாரியோடுதான் வருவானாம். போனதும் இவனுக்கு ஆள் கிடைச்சா ஆச்சு. கிடைக்காட்டா ஒருத்தருக்கு ஆகிற சவாரிக் காசையும் ரெண்டு மடங்கு சேர்த்து நாமதான் தரணுமாம். யாராவது ஒரு குழந்தை ஏறினாக்கூட போதுமாம் .  இப்போ நாம குடுக்கிறதில் நாலில் ஒரு பங்கு கொடுத்தால் போதுமாம். ஒரே சமயத்தில் ரெண்டு பேருக்கு மேலே ஏற்ற மாட்டானாம். இங்கே இவனை விட்டால் பரிசலோட்ட வேறு யாரும் கிடையாது. நாம் போகிறதுக்கு காசு கொடுக்கலாம். இவன் திரும்பிப் போக நாம காசு குடுக்கணும்னு இவன் சொல்றது எந்த விதத்தில் நியாயம்?" என்று ராகவனிடம்  தனது வருத்தத்தை சொன்னாள். சிறிது நேரம் யோசனை செய்த ராகவன், தனது திட்டத்தை அந்தப் பெண்ணிடம் சொல்ல, அவள் சம்மதித்தாள். ராகவன் யோசனைப்படி அவர்கள் கரையைக் கடந்தார்கள், அதிகப்படியாக நாலில் ஒரு பங்கு பணத்தை மட்டும் கொடுத்து. அது எப்படி என்று சொல்ல முடியுமா ? புதிரில் clue அதிகமாகவே இருக்கிறது.  


Saturday, December 03, 2016

ஹலோ பிரெண்ட்ஸ்

Image result for image of gold
கல்யாணமான பெண்கள் 500 கிராம் கல்யாணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கம் வைத்திருக்கவேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்த 
அளவை பத்திரமாக வைத்திருக்க நான் ரெடி. அரசாங்கம் அறிவித்துள்ள அந்த அளவுகோலைவிட மிக குறைந்த அளவு தங்கமே என்னிடம் இருக்கிறது. Shortage தங்கத்தை யாரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விவரம் அறிந்த வர்கள்   சொல்லுங்களேன். 

ஹாய் பிரெண்ட்ஸ்,

Image result for image of criminals
இந்தப்பதிவை உங்கள் எல்லோருக்கும் சொல்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். தங்களுக்குத் தெரிந்த சில சமூக விரோதிகளை அவர் களின் வக்ர புத்தியை எனது பார்வைக்கு கொண்டு வந்து அதை பதிவு பண்ணுங்கள் என்று என்னிடம் இரண்டு பேர் சொன்னார்கள். கேடுகெட்ட வக்ரபுத்தி மனிதர்களைப் பற்றி தொடர்ந்து ஏன் பேசவேண்டும். பேசக்கூட தகுதியில்லாதவர்கள் லிஸ்டில் அவர்களை நாம் சேர்த்து விடலாம். அதனால் உங்களுக்குத் தெரிந்த மிருகங்களைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியில் உங்கள் நேரத்தையும் எனது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்பது எனது கருத்து.
இதற்கு முன்பாக சில விஷயங்களை நான் பதிவு செய்யக் காரணம் - அனுபவமில்லாத சின்னஞ் சிறுசுகள் சிலரது வலையில் விழுந்து ஏமாந்து விடுகிறார்கள். அவர்களை எச்சரிக்கவே அந்தப் பதிவு. ஆண்பெண் பழக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. 
ஒரு ஆணிடம் ஒரு பெண்ணை ஏன் ஒப்படைக்கிறார்கள் ? எல்லா சூழ்நிலை யிலும் அந்தப் பெண்ணுக்கு அவன் காவலாக இருக்க வேண்டும் என்பதற்காக த்தான். மெரிட்டி இல்லாத பெண்கள் ஒரு சிலர் வலையில் வெகு சுலபமாக விழுந்து விடுகிறார்கள். ஒரு பெண்ணின் நட்பைப் பெற கூலிக்கார நாய்களை அனுப்பி வம்பு செய்ய வைத்துவிட்டு உதவிக்கு ஓடுவது போல நாடகமாடும் மனிதர்களிடம் வெகு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை பதிவு செய்தேன். 
இந்த மாதிரி ஆண்கள் ஒரு பெண்ணை தங்கள் தேவைக்காக விலை பேச மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஒரு பெண்ணுக்கு ஒரு அவமானம் என்றால் அதற்காக உயிரைக் கொடுக்கிறவன் உண்மையான ஆண்மகன். கூலிவேலை செய்து கவுரவமாக பிழைக்கிறவர்களின் தொழிலையே  மாற்றுபவன் என்ன மாதிரியான ஆண்மகன்? தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத சில ஈனப்பிறவிகள் எங்கும் உண்டு.
தாங்கள் செய்கிற அயோக்கியத்தனத்துக்குக் கூட அடுத்தவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க நினைக்கும் கேவலமான மனிதர்கள் எங்கும் இருக்கி றார்கள். ஒரு நல்லதாய்க்கு மகனாகப் பிறந்தவனுக்கு இந்த மாதிரி செய்கைகள் கனவில் கூட வராது. 
ஒரு பேடிக்கு தோழியாக இருப்பதைவிட ஒரு நல்ல ஆண்மகனுக்கு விதவை யாக இருப்பது கவுரவமான செயல் என்பார்கள்.
குறுக்குவழியில் லாபம் தேடுகிற, மாட்டிக்கொள்ளும்போது அடுத்தவன் தலையில் பழி போடுகிற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ள ஒரு எச்சரிக்கை மணியாக சில பதிவுகள் வெளியாகின.
எனக்குத் தெரிந்த டிடெக்ட்டிவ் ஒருவர் கேடுகெட்ட மனிதர்களைப் பற்றி கதைகதையாக சொல்வார். 
நல்லகுடும்பத்துப் பெண்கள் இதுபோல மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்கான பதிவே தவிர, தொடர்ந்து சில சாக்கடைகளைப் பற்றி பேசி இந்தப்பகுதியை தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறேன்.
மீடியாக்கள் நிறைய விஷயங்களை படம் பிடித்து காட்டுகிறதே. அதைவிட பெரிதாக எதையும் நான் சொல்லிவிட முடியாது. கொள்ளையனோடு கூட்டு சேரும் போலீஸ்காரன் இருக்கிறவரை இந்த மாதிரி  கிரிமினல் வேலைகள் நடக்கத்தான் செய்யும். நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும். 
வேறொரு டாப்பிக்கோடு பிறகு சந்திப்போம்.. சிந்திப்போம்.

Friday, December 02, 2016

ஹா ஹாஹ் ஹா ! ஐயோ .. ஐயோ !!

Image result for image of crack
பிரெண்ட்ஸ்,
இன்னிக்கு ஒரு கதை. அதை சொல்றச்சயே எனக்கு சிரிப்பாணியா இருக்குது. நடந்த கதை .. நடக்கும் கதை..
ஆங்கிலத்தில் ஒரு கதை உண்டு. ஒரு ராணி.. தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தபோது  அவள் கண்ணில் ஒரு பூ தென்பட்டது. அதோட அழகு அவளுக்குப் பிடிச்சிருந்தது. ரொம்பக் குட்டியூண்டு பூ. அது மத்தவங்க கால் பட்டு அழிஞ்சிடக் கூடாதுனு நினைச்சு ஒரு ஆளை அந்த இடத்தில் காவலுக்கு நிற்க வச்சா. இப்படியே ரெண்டு மூணு தலைமுறையா அங்கே காவல் நடந்தது. ராணியும் போய்ச் சேர்ந்தாச்சு..  பூவும் போன இடம் தெரியாது. ஆனால் காவலுக்கு மட்டும் ஜவான்கள் நின்றார்கள், எதுக்கு நிற்கிறோம் என்பதுகூட தெரியாமல். இது ஒரு கதை.
ஒரு சினிமாவில் வந்த காட்சி. படத்தின் பேர் ஞாபகம் இல்லே. ஒரு பெண்ணிடம் வில்லன் வம்பு பண்ணுவான். அந்தப் பெண் அவனை அடித்து விரட்டுவாள். அதை சிவாஜி பார்த்துடுவார். ஆனால் வில்லனோ அந்தப் பெண்ணிடம் அடிவாங்கின கதையை வெளியில் சொல்ல மாட்டார்.  "அவ நம்மாளு " என்று கதை சொல்லிக் கொண்டு திரிவார். (சில சீன்ஸ் எனக்கு மறந்து போச்சு ). வில்லன் அடி வாங்கினதை ஒரு சைகை மூலம் சிவாஜி எல்லாருக்கும் சொல்லிடுவார். யாரிடமாவது அவன் வாலாட்டும்போது சிவாஜி சொல்லிக் கொடுத்தபடியே எல்லாரும் சைகை காட்டுவார்கள். அவமானப்பட்ட வில்லன் அங்கிருந்து ஓடுவார். 
அது மாதிரியே ஒரு உண்மை சம்பவம்.
எங்க ஊர்ப்பக்கம் ஒரு கதை சொல்லுவாங்க. ஒரு  வீட்டுக்கு வரும் ஒருவரை அவர் சகவாசம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் . " என்ன இன்னுமா கிளம்பலே?" என்று அடித்து விரட்டாத குறையாக விரட்டினாலும், அவன் வெளியில் போய், "என் கையைப் புடிச்சுகிட்டு போகவே கூடாதுனு தடுத்தாங்க. எனக்கு வேறே வேலை இருக்குனு சொல்லி அங்கிருந்து ஓடியாந்தேன் " என்று சொல்லிக் கொள்வானாம்.
ஒரு மனுஷனுக்கு முக்கியமா தெரிஞ்சிருக்க வேண்டிய ஒரு விஷயம் நம்மள பத்தி மத்தவங்க என்ன நினைக்கிறாங்க என்பது. 
தனக்கு தானே ஓவரா கற்பனை பண்ணிகிட்டு  திரிந்தால் பைத்தியக்காரப் பட்டம்தான் கிடைக்கும். ஒரு சிலருக்கு நாம் மரியாதை கொடுப்போம் - அதுக்குத் தகுதியான நபர் அவர் இல்லையென்றாலுங்கூட. அது, மத்தவங்களை மதிச்சு நடக்கிறது  நம்ம குடும்ப பழக்கமாக   வழிவழியாக வந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் சில ஜென்மங்களுக்கு மரியாதை க்கும் நேசத்துக்கும் வித்தியாசம் தெரியாது.  
நல்லா கவனிக்கணும் .. இது உண்மை சம்பவம்.. எனது தோழி சொன்ன விஷயம்.. ஒரு பொண்ணு மேலே ஒருத்தனுக்கு ஆசை வந்துச்சு. அதை சேரி, பட்டிதொட்டியெல்லாம் சொல்லிப் புலம்பினான் (அங்கெல்லாம் அவனது உறவினர்கள் இருக்கலாம். அவர்களிடம் புலம்புவதை தப்பு என்று சொல்ல முடியாது). அந்தப் பெண்ணைக் கவர் பண்ண தனக்குத் தெரிஞ்ச வித்தை எல்லாம் காட்டிப் பார்த்தான். ரொம்ப புத்திசாலித்தனமா செய்றதா நினைச்சுகிட்டு அவன் பண்ற கோமாளித்தனத்தையெல்லாம் அந்தப்பெண் ஒரு சிறு சைகை மூலம் விமரிசிப்பாள். (எதனை தரம் தோற்றாலும் அதை தோல்வினு ஒத்துக்க மறுப்பவர்களைப் பார்த்து , "பரவாயில்லை. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலே. மீசை இல்லாத முகத்தில் மண் ஒட்டவே ஒட்டாது " என்று சொல்வது உலக வழக்கம்தானே) அந்தப்பெண் இவன் ஒவ்வொரு நாளும் புதுப்புது வித்தையா காட்டும்போது "மீசையில் மண் ஒட்டலே.. ஒட்டாது " என்ற ரீதியில் விமரிசிப்பாள். இதைவிடவா வேறு அவமானம் வேண்டும். அதுகூட புரியாத அந்த பைத்தியம் அவ செய்றதை அவகிட்டயே அவ   முன்னாலேயே  செய்யும், அது என்னவோ "கோடு வேர்ட்" என்று கற்பனை செய்து கொண்டு. எப்பவுமே பைத்தியக்காரனை சுத்தி பத்து பேர் உண்டு தானே. அதுகளும் மூக்குக்கு மேலே விரலால் தடவி எங்களுக்கு எதுவும் இல்லைனு ஒத்துகொள்ளுதுங்க. 
நாட்டில் என்னென்ன சாதனையை செய்யலாம்னு கிழவர்கள்கூட இளம் வயசுப் பிள்ளைங்களா கற்பனை பண்ணிக்கிட்டு துள்ளிக் குதிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு பதினெட்டு வயசு வாலிப பிஞ்சு இப்படி பைத்தியமா அலையறதை நினைச்சு சிரிப்புதான் வருது.  
இதையெல்லாம் விட தமாஷ் "என் மேலே  உனக்கு காதல்னு ஊருக் கெல்லாம் கதை சொல்றியே. உன்வீட்டு பிள்ளைகுட்டிங்க, மீடியா பீப்பிள் எல்லாரையும் கூட்டிட்டு போலீஸ் கமிஷனர் ஆபீஸுக்கு  வா. அங்கே வந்து உன் புலம்பலை சொல்லு !" என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள் அந்தப் பெண்.
அப்படி மட்டும் வந்துவிட்டால் மீடியாவுக்கு நிறைய நியூஸ் கிடைக்கும். அந்த நாளை எதிர்பார்ப்போம்.


Thursday, December 01, 2016

Dear viewers,

Image result for images of auto rickshaw on platformImage result for images of auto rickshaw on platform

நேற்று ரயில்வே ஸ்டேஷனில், படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது எனக்கு முன்பாகி ஏறிக்கொண்டிருந்த இருவர் பேசிக் கொண்டது :
"நீ பேசாமே இரு மச்சி. ஆட்டோ ஸ்டாண்ட் இப்போ ஹை கோர்ட். பிளாட்பார்ம் சுப்ரீம் கோர்ட். ஏதாவது பிரச்சினைனு வந்தால் ரெண்டு கோர்ட்டையும் விசாரிச்சாலே போதும் "
(வெளியில் வந்து பஸ் பிடிக்கும் அவசரத்தில் அவர்களைக் கடந்து வேகமாக வெளியில் வந்து விட்டேன்.)
இப்படி ஏதாவது காதில் விழும்போது சிரிப்பு வரும். அல்லது சிந்திக்க வைக்கும். அவர்கள் பேச்சின் தலையும் தெரியாது. வாழும் தெரியாது. ஆனால் அந்த காமெடியை ரசித்தேன். நிஜமா இப்படி நடந்தா எப்படி இருக்கும் ?  ஆனால் லாஜிக் சரியாக இல்லையே என்று யோசிக்கிறேன்.
இனி தொடர்ந்து கேட்டதும் ரசித்தும் இந்தப் பகுதியில் வெளியாகும். அதற்கு முன்னாலே உங்கள் கருத்தை சொல்லுங்கள்.