Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, February 23, 2013

DEAR VIEWERS

கம்ப்யூட்டர் ரிப்பேர் காரணமாக எதையும் பிரசுரிக்க இயலவில்லை. மார்ச் முதல் தேதியிலிருந்து பழையபடி தொடரும் என்று நம்புகிறேன்.


Saturday, February 09, 2013

தெரியுமா உங்களுக்கு ? ( Puzzle Number - 26 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
  
 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

               
   01 
  

   

    

  
 
   

   

 
    
  

   

  
 
  
    02        

 

  

   
  
   
   05
     
  
 
     07  
  08
  

  
   
   
   
  
   03
 
 
   04
  
 
 
   06
 

 
  
 

  

 

 
  





 
 

 
  
  

  

     
    
   
     11
 

  

 


  
  
  

   
   
    10
 
 
   
     15
   

 

 

  
  
  

   
     
    16
   
   
 

   

 

   
   

    19 
  

      

   

 

  

 
   
   

   


   20
 
    12
 
    13
    
   14
    
   09

  
    21 

    17
    

 

   

  
 
  
  
   

    18
  
 


   


   
 
   



  
 
  

மேலிருந்து கீழ் 

  1 இரு குரங்கின் கை என்று சொல்லப்படும் மூலிகை                   ( 6 )  
  2 துறவைவிட இல்லறமே நல்லறம் என்று போதிக்கும் மதம்  ( 7 )  
  3 நேபாளத்தின் புனித நதி                                                                            ( 4 )  
  4 இந்தியாவிலுள்ள மிகப் பெரிய சிறைச்சாலை                              ( 3 ) 
  5 தமிழக அரசின் சின்னம்                                                                            ( 4 ) 
  6  அதிக மழைப் பொலிவுள்ள மாநிலம்                                                 ( 4 )  
  7  எழுதப் படிக்கத் தெரியாத முகலாய மன்னர்                                 ( 4 )  
  8  பகலில் பார்க்கும் சக்தி இல்லாத பறவை                                       ( 3 )

கீழிருந்து மேல் 

  3 புத்த மதக் கொள்கைகள் அமைந்த மொழி                                   ( 2 )  
  8 நவக் கிரகங்களில் அங்காரகனின் வாகனம்                              ( 2 )  
  9 கூடு கட்டத் தெரியாத பறவை                                                         ( 3 ) 
10 அஸ்ஸாமின் பண்டைக் காலப் பெயர்                                         ( 5 )  
11  
12  தமிழில் அதிகப் பாடல் எழுதிய பெண் புலவர்                          ( 2 )  
13   குறிஞ்சிப் பூவின் நிறம்                                                                        ( 3 ) 
14 இந்திக்கு அடுத்து இந்தியாவில் அதிக அளவில் பேசப்படும் மொழி   ( 4 )  

இடமிருந்து வலம் 
  1 ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்    ( 10 )  
15  பூஜ்யம் என்ற எண்ணை உலகிற்கு வழங்கியது    ( 4 )  
16 யானை கட்டி போரடிக்கும் இடத்தினை இப்படி சொல்வதுண்டு    ( 5 )  
17 வெகு வேகமாக நடக்கும் / ஓடும் சக்தியுள்ள பறவை                        ( 7 )  
18  இந்திய ஜோன் ஆப் ஆர்க்                                                                              ( 10 )  

வலமிருந்து இடம்  

  6  பாம்பினத்தில் மிக பெரியது                                                 ( 5 ) 
19 தங்கம் தவிர காரட் என்ற அலகால் அளக்கப்படும் உலோகம்  ( 3 )  
20 கரையான் அறிக்கை முடியாத மரம்                                ( 3 ) 
21 உலகில் பெரும்பாலான மக்களால் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் 
     நறுமணப் பொருள்                                                                         ( 3 )

 
                                                                                               




  

திரைக் கவிஞர்கள் பார்வையில் " மனம் "

மனம் ஒரு குரங்கு - மனித
மனம் ஒரு குரங்கு = அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்
நம்மை பாவத்தில் ஏற்றி விடும் - அது
பாசத்தில் தள்ளி விடும்

இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று ; மறந்து வாழ ஒன்று !


மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா 

வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு 
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு  
முல்லைக் கொடியே முத்துச்சரமே  
கண்மூடி தூங்கம்மா 

ஆடாத மனமும் உண்டோ ; 
கலை அலங்காரமும் 
அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ 


ஓ  மனமே கலங்காதே வீணாக மயங்காதே 
பாரங்கள் எல்லாமே படைத்தவன் எவனோ அவனே சுமப்பான் 


நீலத்திரை கடல் ஓடி வருவதில் நெஞ்சைப் பறிகொடுத்தேன் - இன்று 
கோடி அலைகள் என்  நெஞ்சில் எழுவதை யாரிடம் போயுரைப்பேன் 


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
 உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது 
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்  

இதயம் என்பது ஒரு வீடு - அது 
இன்றும் அன்றும் அவள் வீடு -அது 
மாளிகையானதும் அவளாலே - பின் 
மண் மேடானதும் அவளாலே 

பொருள் கொண்ட பேர்கள் மனம் கொண்டதில்லை 
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை  
மனம் என்ற கோவில் திறக்கின்ற நேரம் 
அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்   


Scanning of inner-heart ( Scan Report No.61 )

                                                                   நிதர்சனம் ? !

" என்ன ஸார். உங்களுக்குள்ளேயே சிரிச்சுக்கிறீங்க. என்னென்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேனே " என்று கேட்டான் தூயமணி.
" அப்பா, நீ ரோட்டைப் பார்த்து வண்டி ஒட்டுப்பா "
" பார்த்துதான் சார் ஓட்டறேன், எதை நினைச்சு சிரிச்சீங்க ? "
" அதோ பாரு, அந்த மரத்திலே " இந்தியா ஒளிர்கிறது ! " என்று ஒரு விளம்பரப் பலகை வச்சிருக்கு. அந்த மரத்தடியிலே ரெண்டு பேர் படுத்துத் தூங்குறாங்க பாரு " என்றான் கணேஷ்.
" அதிலே சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு ? "
" விடிஞ்சு எவ்வளவு நேரமாச்சு . மணி பதினொன்றாகப் போகிறது. எதைப் பற்றியும் கவலைப் படாமல், விடிஞ்ச பிறகும் தூங்குகிற சோம்பேறிகள் இருக்கிறவரை இந்தியா எப்போ ஒளிரும்? எப்படி ஒளிரும் ? "
"தூங்கும்போது மட்டுமாவது, அடுத்தவனைக் கெடுக்கணும்கிற   நினைப்பு  ஏதும்  இல்லாமே,   மனுஷன் மனுஷனா இருக்கிறானே , அதை நினைச்சு சந்தோசப் படுங்க சார் " என்று தூயமணி சொல்லும்போதே " கிரீச் " என்ற அலறலுடன் லாரி  நின்று விட்டது.
" என்னப்பா ? "
" ட்ராபிக் ஜாம் ஸார் "
" ச்சே " என்று அலுத்துக் கொண்டான் கணேஷ் 
" மக்கள் தொகை பெருகிப் போச்சு . அதுக்கு ஈக்வலா வண்டிகளும் பெருகிப் போச்சு. ஆனால் பாதைகள் அப்படியேதானே இருக்கு. ஒரு ரோட்டில் நாலு வண்டி போகும்னு தெரிஞ்சா போதும் உடனே ரோட்டோரம் பத்து பேர் கடை போட்டுடறாங்க, இளநீ, டீக்கடை அது இதுன்னு." என்று சொல்லிக் கொண்டே தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு ஹார்ன் கொடுத்தான் தூயமணி 
" யப்பா, உன்கிட்டே இருக்கிற ஹார்ன்  எல்லா வண்டியிலும் இருக்கு. போக வழிதான் இல்லே " என்று எரிந்து விழுந்தான் ஒரு டூ வீலெர் 
" காத்து நுழைய இடமில்லாத இடத்தில் கூட டூ வீலரும் ஆட்டோவும்  நுளைஞ்சிடுவானுக. அவனுகளே மூடிகிட்டு நிக்கும்போது உனக்கென்ன அவசரம் " என்று கிண்டலாக கேட்டான் அருகில்  நின்று கொண்டிருந்த மற்றொரு லாரி டிரைவர்.
" ஒருத்தனை ஒன்னு கேட்டுட்டா போதும், அத்தனை பேரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்திடுவானுக. சண்டாளனுக. சண்டை போடுற விசயத்தில் மட்டுமாவது ஒத்துமையா இருக்கிறானுகளே " என்று கணேஷின் காதருகில் கிசுகிசுத்த தூயமணி, லாரிக்காரனை சமாதானம் செய்யும் தொனியில் " சார், என்ன பிரச்சினை ? " என்றான் 
" என்ன , வழக்கம்போல சாலை மறியலா இருக்கும் " என்று அலுத்துக் கொண்டான் அவன்  
" என்ன, சாலை மறியலா ? எதுக்காம் ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டான் தூயமணி  
" ஏம்ப்பா, நீ இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன்தானே. வானத்திலிருந்து திடீர்னு குதிச்சிடலையே, பொழுது விடிஞ்சு பொழுது போனா சாலை மறியல் எந்த இடத்திலும் நடக்கலேன்னு கேள்விப் பட்டாதான் அது அதிசயம்.எது எதுக்கு தான் மறியல் போராட்டம் என்கிற விவஸ்தையே இல்லாமல் போயிட்டுது. புறம்போக்கு நிலத்திலே, கவர்மெண்டோட எந்தவொரு அப்ரூவலும் இல்லாமே  வீட்டைக் கட்டி குடிவந்திட்டு , சாக்கடைத் தண்ணி  போகலேன்னு  சாலை மறியல் பண்ணினா அந்தக் கொடுமையை எங்கே போய்  சொல்றது " என்று பதில் வந்தது 
அதன் பிறகு எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டான் தூயமணி. மூன்று மணி நேரம் கழித்து பாதை சரியாகி வண்டி ஓட ஆரம்பித்தது 
" என்னப்பா, மணி இப்போதே ரெண்டரையை தாண்டிவிட்டது. நாம் எப்போ கன்னியாகுமரி போய் எப்போ ரிடர்ன் ஆறது ? பெரிசு வாட்டி எடுத்துடுமே " என்று கவலையுடன் சொன்னான் 
" கவலைப் படாதீங்க சார், நீங்க வேலைக்குப் புதுசு . இந்த ரூட்டுக்கும் புதுசு . அதான் ஒர்ரி பண்ணிகிறீங்க. இந்நேரம் எல்லா சானலும் இந்த மறியல் பத்தி நியூஸ் போட்டுகிட்டே இருப்பாங்க. அதைப் பார்த்தே நாம வழியில் மாட்டிகிட்டு நிற்கிறதை பெரிசு தெரிஞ்சுக்கும் "
திருச்சியை தாண்டி லாரி ஓடிக் கொண்டிருந்தது. " சார், காபி சாப்பிடலாமா ?" என்று கேட்டான் தூயமணி 
" எனக்கு எதுவும் வேண்டாம்ப்பா. நாம சொன்ன டைம்க்கு போனாலே போதும்"  என்று சொல்லிவிட்டு கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தான் 
சடன் பிரேக் போட்டு வண்டி நின்றதை உணர்ந்த கணேஷ் தூக்கம் கலைந்து "என்னப்பா இங்கேயும் சாலை மறியலா? " என்றான் எரிச்சலுடன்
 " இதோ பார்க்கிறேன் சார் " என்று சொல்லி லாரியை விட்டு கீழே இறங்கிய தூயமணி, வண்டி நின்று போனதற்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தான்
" என்னப்பா ? ஆச்சா ? " என்று கேட்டு நிலை கொள்ளாமல் தவித்த கணேஷ், லாரியை விட்டு தானும் இறங்கி வந்து  "இன்னிக்கு நாம கன்னியாகுமரியில் லோட் இறக்கிட்டு இன்னிக்கு இரவே திரும்பியாகணும்  தெரியும்தானே ? "
என்று கேட்டான் .
" எனக்குத் தெரியும் சார். இந்த வண்டிக்குத் தெரியலையே. இஞ்சின் பால்ட். நாம  எதுவும் செய்ய முடியாது. மெக்கானிக் வரணும். அதுக்கு நான் ஏதாவது வண்டியைப் பிடிச்சு டவுனுக்குப் போயாகணும். நீங்க இங்கேயே இருந்து  சரக்கைப் பார்த்துக்கோங்க . நான் போயிட்டு வந்துடறேன். நல்ல வேளை, வண்டி ரோட்டோரம் நின்னு போச்சு . நடு ரோட்டில் நின்றிருந்தால் போகிற வருகிறவனெல்லாம் வசை பாடிட்டுப் போயிருப்பாணுக  " என்று சொல்லி விட்டு கணேஷின் பதிலுக்கு காத்திராமல், வழியில் போகிற வண்டிகளிடம் விரல்களால் சிக்னல் கொடுத்து லிப்ட் கேட்டுக் கொண்டிருந்தான்.வழியில் போகிற டூ வீலரை நிறுத்தி அவன் பின்னால் தொற்றிக் கொண்ட தூயமணி  மெக்கானிக் ஒருவரை அழைத்துக் கொண்டு வரும்போது இரவு மணி  ஒன்பது..
" சார் வண்டியிலிருந்து லோடை இறக்கணும் " என்றான் மெக்கானிக் 
" என்னப்பா விளையாடுறியா ? வண்டிக்குள் இருப்பது நூறு மூட்டை அரிசி. இறக்கி ஏத்தறது சாதாரண விஷயம் இல்லே" என்று சொன்ன கணேஷ் " ஏம்ப்பா  தூயா, வண்டியை எடுக்கும்போதே செக் பண்ணி எடுக்க மாட்டியா ? " என்று கேட்டு எரிந்து விழுந்தான்.
" மழை எப்போ வரும், குழந்தை எப்போ பிறக்கும்கிறது எப்படி உறுதி இல்லாத விசயமோ அதே மாதிரி வண்டி எப்போ நிக்கும் , எங்கே நிக்கும்னு யாராலும் சொல்ல முடியாது சார் "
" பேச்சில் மட்டும் குறைச்சல் இல்லே. எது சொன்னாலும் வள வளன்னு பதில் சொல்ல மட்டுமாவது தெரியுதே " என்றான் கோபத்துடன் 
அவனது செய்கை தூயமணிக்கு எரிச்சலைத் தரவில்லை. அவனுடைய பதட்டம் புரிந்ததால் பேசாமலிருந்தான் 
" சரிப்பா, மூட்டையை இறக்க ஆட்கள் கிடைப்பாங்களா ?"
" கஷ்டம்தான் சார், நீங்க கொஞ்சம் நகர்ந்து நில்லுங்க. நானும் இவரும் சேர்ந்து இறக்கிடறோம் . அதுக்கு தனியா பணம் கொடுத்திடுங்க " என்றான் மெக்கானிக்
விலகி நின்று வேடிக்கை பார்த்த கணேஷ், அவர்கள் கஷ்டத்தை உணர்ந்து கொண்டு  தானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு லோடை இறக்க ஆரம்பித்தான். எல்லா லோடும் இறங்கியபிறகு மணியைப் பார்த்தான் கணேஷ் . மணி அதிகாலை 3.30. அவனை மூட்டைகளுக்கு காவல் வைத்துவிட்டு மெக்கானிக்குடன் சேர்ந்து  வழியில் வந்த லாரியின் உதவியுடன், நின்று போன வண்டியை " டோ " பண்ணி எடுத்து சென்றான் தூயமணி.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. யாரோ தன்னை தட்டி எழுப்புவது தெரிந்து கண் திறந்து பார்த்தான்  கணேஷ்.
" நல்லா இருக்கு சார், நீங்க காவல் காக்கிற லட்சணம் . ஒரு பத்து மூட்டையை யாராவது நகர்த்திக் கிட்டு போயிருந்தா கூட உங்களுக்கு தெரியாது போலிருக்கு " என்று சிரித்துக் கொண்டே கேட்டவன், " இந்தாங்க சார் பாட்டிலில் தண்ணி இருக்கு முகம் கழுவிக்கோங்க . இந்தாங்க டீ சூடா இருக்கு குடிங்க " என்றான் 
" இப்போ மணி என்னப்பா ? " என்று கேட்டபடி கைக்கடிகாரத்தைப் பார்த்த கணேஷ் " பத்து மணியா ? அவ்வளவு நேரமா நான் தூங்கி இருக்கிறேன்? நீ எப்போ வந்தே ? " என்றான் பதட்டத்துடன்.
" சார் நான் போயிட்டு ரெண்டு மணி நேரத்திலே வந்துட்டேன். இங்கே வந்து பார்த்த நீங்க நல்லா அசந்து தூங்குறீங்க "
" நான் அப்படி தூங்கிற ஆள் இல்லையே " என்று இடை மறித்து சொன்னான் கணேஷ்  
" நீங்களா தூங்கலே. வண்டிக்குள் இருந்து நீங்க இறக்கி வைத்த லோட் உங்களை தூங்க வச்சிடுச்சு " என்று சொல்லி சிரித்தான் தூயமணி 
" விளையாட உனக்கு நேரம் காலமே கிடையாதே "
" அட விளையாடலே சார் . ராத்திரி முழுக்க மூட்டை இறக்கி வச்சீங்க. அந்த களைப்பில் தூங்கினீங்க. அதான் நிஜம். நேற்றிலிருந்து நீங்க எதுவும் சாப்பிடலே, டென்சன் வேறே . அதான் உங்களை காலையிலே  எழுப்பலே. சூடா  இருக்கு டீ. குடிங்க, கிளம்பலாம் "
" பெரிசு கத்துமே, சரியான டைம்க்கு லோட் போகலேன்னு "
" கத்தும்தானே ? தலையை வாங்கிடாதே. அட, சூடு ஆறுமுன்னே டீயை குடிங்க. ஆளை வச்சு நான் திரும்பவும் லோடை வண்டிக்கு மாத்திட்டேன், வாங்க கிளம்பலாம் " என்றான் 
வண்டி தன் பயணத்தைத் தொடர்ந்தது. போகிற வழியில் ஒரு மரத்தடியில் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த கணேஷ்  " இந்த மரத்தில் ' இந்தியா ஒளிரும் ' என்கிற விளம்பரப் பலகை இல்லையே " என்றான் 
" என்ன சார் கிண்டலா "
" இல்லேப்பா, விடிந்தபிறகும் தூங்குகிற எல்லாருமே சோம்பேறிகள் இல்லே. மற்றவங்களுக்காக அவர்கள் இரவு முழுக்க , மற்றவர்கள் தூங்கும்போது, இவர்கள் விழித்திருந்து வேலை பார்த்தவர்களாக இருக்கலாம். இந்த மாதிரி உழைப்பாளிகள் இருக்கும்போது இந்தியா ஒளிரும் என்பதில் சந்தேகமே இல்லை" என்றான் 
" ஒரே ஒரு ராத்திரி .. அது உங்களுக்கு ஒரு பெரிய உண்மையைப் புரிய வைத்து உங்களிடம் ஒரு மாற்றத்தை கொண்டு வந்திருக்கு " என்று சொல்லி சிரித்தான் தூயமணி  

Saturday, February 02, 2013

தத்துவமா நான் சொல்லுவதெல்லாம் சத்தியம் !

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான். கறுப்பு மனிதனுக்கும் ரத்தம் சிவப்புதான். வண்ணங்களில் இல்லை வாழ்க்கை ; மனதின் எண்ணங்களில் உள்ளது .

மனந்திறந்து பேசுங்கள் ; மனதில் பட்டதையெல்லாம் பேசாதீர்கள்! சிலர் 
புரிந்து கொள்வார்கள். பலர் பிரிந்து செல்வார்கள் 

தன்னம்பிக்கை இருக்கிறவரை, தோல்விகள் தளர்ச்சியைத் தருவதில்லை !

காயப் படுத்த பலர் இருந்தாலும், மருந்தாக சிலர் இருப்பதால்தான் நமது வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே; தோல்வியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது .

தோல்வியின் அடையாளம் தயக்கம் ; வெற்றியின் அடையாளம் துணிச்சல் .

விலகி நிற்பவர்கள் வெல்லுவதில்லை ; வெல்ல நினைப்பவர்கள் விலகுவதில்லை!

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம் : பலமுறை தோற்றவன் ஒரு முறை ஜெயித்தால் அது சரித்திரம் !

பிரிவும் கோபமும் ஒருவரை மறப்பதற்கல்ல ; அவர்களைப்பற்றி அதிகமாக நினைப்பதற்கே!

ரோஜா செடியில் முள் இருக்கிறதே என்று நினைத்தால் வருத்தம் வரும் :
ஆஹா, முள் செடியிலும் ரோஜா மலர்கிறதே  என்று நினைப்பு மனதுக்கு  மகிழ்வைத் தரும் .

( மேலே உள்ள தத்துவமெல்லாம் FACE BOOK  நண்பர்கள் அனுப்பியவை ) 

Friday, February 01, 2013

Scanning of inner-heart ( scan Report No.60 )

          பெத்த மனசு, அது பித்தத்திலும் பித்தமடா !

" வத்ஸலாம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க ? அது தெரியாமே ஒவ்வொரு இடமா சுத்திட்டு வரேன் " என்ற குரல் கேட்டு, நாற்காலியில் உட்கார்ந்தபடியே மேஜை மீது கண்மூடி சாய்ந்திருந்த வத்ஸலா நிமிர்ந்து பார்த்தாள்.
கை நிறைய திருமணப் பத்திரிக்கைகளுடன் பியூன் ஜெயபால் நின்று கொண்டிருந்தான்
" என்னப்பா ? என்ன விஷயம் ? என்ன விஷேசம் ? " என்றாள் வத்ஸலா
" ரெஸ்ட் ரூம் டேபிளில் தலையை சாய்த்து படுத்திருக்கீங்களே, உடம்புக்கு முடியலியா ? "
" கொஞ்சம் டயர்டா இருந்துச்சு. வேறே ஒண்ணுமில்லே. நீ வந்த விஷயத்தை சொல்லு "
" பொண்ணுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன். கண்டிப்பா வரணும். கண்டிப்பா  உங்க பொண்ணையும் கூட்டிட்டு வரணும். உங்களுக்கெல்லாம் வசதியா இருக்கணும்னுதான் ஞாயிற்றுக் கிழமையிலே  கல்யாணத்தை வச்சிருக்கேன்.காலையில் முகூர்த்தத்துக்கு வந்துடணும். ராத்திரி ரிசெப்சன் முடிஞ்சுதான் போகணும் .  ஆமா .. இப்பவே சொல்லிட்டேன். முகூர்த்தத்துக்கு தலையைக் காட்டிட்டு, காலில் வெந்நீரைக் கொட்டிகிட்ட மாதிரி விழுந்தடிச்சு ஓடற வேலையெல்லாம் கூடாது " என்று கண்டிப்பான குரலில் உரிமையோடு சொல்லியபடி அவள் கைகளில் கல்யாணப் பத்திரிக்கையைக் கொடுத்தான் ஜெயபால்.
" உன் பொண்ணு இப்பத்தானே பிளஸ் டூ முடிச்சிருக்கா .. அதுக்குள்ளே கல்யாணமா ? " என்று வியந்து போய்க் கேட்டாள் வத்ஸலா
" ஆமாம்மா . எனக்குத் தோதா ஒரு நல்ல இடம் வந்துச்சு. பிடிச்சுப் போட்டுட்டேன் " என்றான் குரலில் பெருமை பொங்க
" உன் பொண்ணுக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகியிருக்காதே. பதினெட்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வைக்கிறது சட்டப்படி தப்பு . அது தெரியுமா ?" என்று  கேட்டாள் சிரித்துக்கொண்டே.
" பதினெட்டு வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணி வச்சா போலீஸ் வந்து பிடிச்சிட்டுப் போயிடும்தானே ? வத்ஸலாம்மா, நான் ஒண்ணு கேட்கிறேன், பதினெட்டு வயசுக்கு முன்னாடி பண்ணி வச்சா சட்டம் தண்டிக்கும் . ஆனா இருபத்தெட்டு முப்பத்தெட்டு வயசாகியும் கல்யாணத்துக்கு வழியில்லாமே  எத்தனையோ பொண்ணுங்க நிக்குதே, அதுங்களை எல்லாம்  எந்த சட்டம் வந்து கரை ஏத்தும் ? "
" அப்பா .. உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியாது .ஆளை விடு .எப்பவுமே பெண் குழந்தைகளை  படிக்க வைக்கணும் . கொறஞ்சது, மாசத்துக்கு ஒரு ஆயிரம் ரூபாயாவது  நிரந்தர வருமானம் வரும்படியான வேலையைத் தேடிக் குடுக்கணும். அதுக்குப் பிறகுதான் கல்யாணப் பேச்சை எடுக்கணும். அதுதான்  பெண்குழந்தைகளுக்கு சேப்டி "
" ஏம்மா அப்படி சொல்றீங்க ? "
" இந்தக் காலத்திலே யாருடைய வாழ்க்கைக்கும் ஒரு உறுதியும் இல்லே, உத்திரவாதமும் இல்லே. ஒரு காலத்திலே " அரைக் காசு உத்தியோக மானாலும்  அரசாங்க உத்யோகம்"னு கவர்ன்மெண்ட் வேலையில் இருக்கிறவங்களுக்கு பொண்ணு குடுத்தாங்க, எந்த அளவுக்கு வேணுமானாலும் சீர் செனத்தி குடுத்து.  கவர்ன்மெண்ட் ஆபீசில் வேலை பார்க்கிற பெண்ணா தேடித் பிடிச்சாங்க எந்த சீர் செனத்தியையும் எதிர் பார்க்காமே . காரணம், ஆள் இருந்தாலும் போனாலும் வருமானம் மட்டும் நிரந்தரம்னு கணக்குப் போட்டு.இப்போ, வேலையில் இருக்கிற வரை தான்  சம்பளம். ரிடயர் ஆனபிறகு பென்சன் எதுவும் கிடையாதுன்னு கவர்ன்மெண்ட் சட்டம் கொண்டு வந்துட்டுது. அதனால் வருமானம் நிரந்தரம் இல்லேங்கிற நிலைமை வந்துட்டுது. பிரைவேட் கம்பெனியில் முதலாளிக்கு ஏதாவது ஒரு 
வகையில் நஷ்டம்னா உடனே ஏதோ ஒரு அமௌண்ட் குடுத்து தொழிலாளிகளுக்கு வேலையில்லேன்னு சொல்லிடறாங்க. கம்பெனியை  இழுத்து மூடிடறாங்க. அடுத்தாப்லே ஒரு வேலையைத் தேடி உட்காரும்வரை  அந்த வீட்டிலுள்ள ஒரு பெண் ஏதோ ஒரு வேலை பார்க்கிறவளா இருந்தா அந்த குடும்பம் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கும். இன்னொன்னும் சொல்றேன் . நெருப்புன்னு சொன்னா வாய் வெந்திடாது. உனக்கு சொல்றேன்னு நினைக்காதே . பொதுவா சொல்றேன். இன்னைக்கு இருக்கிற விலைவாசியில், வருகிற வருமானத்தில் கொஞ்சம்கூட சேமிக்க முடியறதில்லே . கடன் வாங்காமெ காலத்தை ஓட்டினா அதுவே பெரிய விஷயங்கிற  அளவுக்கு நிலைமை வந்திட்டுது. இப்போ ஒரு குடும்பத்திலே சம்பாதிக்கிற ஆம்பிளை செத்துட்டான் , இல்லாட்டி வேறே ஒரு பொண்ணுகூட சகவாசம் வச்சுகிட்டு கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு ஒட்டிட்டானு  வச்சுக்கோ, அந்த வீட்டுப் பொண்ணு கையில் ஒரு நிரந்தரமான  வருமானத்துக்கு வழியிருந்தா, உறவுகள் மத்தியில் உதாசீனப் படாமே சொந்தக் காலில் நின்னு கௌரவமா பொழைச்சுக்குவா. அப்படியில்லேங்கிற நிலைமையிலே அந்த குடும்பத்தோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு. உலகத்திலே நாலு பேர் வாயில் விழுந்து எழுந்திருக்காமே கௌரவமா வாழ ஒரு நிரந்தர வருமானம் வேணும்  " என்று வத்ஸலா சொல்லும்போதே. நமட்டு சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் ஜெயபால் 
" ஏம்ப்பா சிரிக்கிறே ? "
" அட நீங்க ஒண்ணு, வேலை பார்த்து வயித்தை கழுவுறவங்களை எல்லோரையுமேவா கவுரவமாப் பார்க்கிறாங்க? நீங்க தினமும் பத்திரிக்கை படிக்கிறீங்க. சினிமா டிவி பார்க்கிறீங்க, அதிலெல்லாம் நகைச்சுவைங்கிற பெயரில் எந்த அளவுக்கு பொம்பளைங்களை கேவலப் படுத்துறாங்கனு தெரியாதா உங்களுக்கு? ஆபீசில் வேலை பார்க்கிற பொண்ணா இருந்தா அவ ஆபீசர் கூட சேர்ந்து கூத்தடிக்கிறாப்லே ஜோக் எழுதுறாங்க. நாலு வீடுகளில் வேலை பார்த்து கௌரவமா பொழைக்கிற பொம்பளைங்க எத்தனை பேர் இருக்கிறாங்க. வீட்டு வேலை பார்க்கிற பொம்பளை அந்த வீட்டு முதலாளி கூட கூத்தடிக்கிறாப்லே  கதை எழுதறாங்க. இதையெல்லாம் விடுங்க. இப்போ ஆஸ்பத்திரியை எடுத்துக்கோங்க. நம்ம வீட்டில் உள்ள ஒருத்தரையோ அல்லது நமக்கு வேண்டிய யாரோ ஒருத்தரையோ ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்து அவங்களை நாம பார்க்கப் போயிட்டு வந்தா, கொறஞ்சது ஒரு நாலு நாளைக்கு நமக்கு சோறு தண்ணி இறங்க மாட்டேங்குது . வாய்கிட்டே எதைக் கொண்டு போனாலும் ஆஸ்பத்திரி நாத்தம்தான் அடிக்கிறாப்லே இருக்கு. ரத்தம், நோயாளி , முக்கல் முனகல் மருந்து நெடி இதுதான் ஞாபகத்துக்கு வருது. நம்ம உடம்பு, நம்ம துணிமணி நாறுகிறமாதிரி ஒரு பீலிங் நமக்கு வருது. அத்தனைக்கும் மத்தியில்தானே டாக்டர்ஸ் நர்ஸ் மத்த எல்லோரும் வேலை பார்க்கிறாங்க தினமும். ஆனா டாக்டர்ஸ் நர்ஸ்கூட  கூத்தடிக்கிறாப்லே ஜோக்ஸ் வரத்தானே செய்யுது. வேலைக்கு போகிற எல்லோருமா கெட்டுப்  போறாங்க. அந்த ஜோக்ஸ் படிக்கிறவங்க எதோ ஒரு சூழ்நிலையில் அவங்க வீட்டுப் பொம்பளைங்களை அந்த இடத்தில் வைத்துக் கற்பனை செய்து பார்த்தால் அவங்க மனசு என்ன பாடுபடும் ? சிலசமயம் சந்தேகத்தால் குடும்பமே சிதறிப் போயிடுமே. அம்மா, இந்த உலகம் இருக்கே இது உருப்படியா யாரையும் வாழவிடாது . அதான் அந்தக் காலத்திலேயே ஒருத்தர்  " வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் "ன்னு  இந்த உலகத்தைப் பத்தி  சரியாப் புரிஞ்சுகிட்டு பாட்டெழுதிட்டுப்  போயிட்டாரு . உலகத்தைப் பத்தியோ அது தரப் போற கௌரவத்தைப் பத்தியோ கவலையே படாதேம்மா. தர்ம நியாயத்துக்கு கட்டுப் பட்டு உன் மனசுக்கு எது சரின்னு தோணுதோ  உனக்கு எது சரிப் பட்டு வருமோ அதை செஞ்சிட்டு போய்க்கிட்டே இரும்மா. சரிம்மா நான் கிளம்பறேன் " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் ஜெயபால்.
அவன் போன பிறகு, மழை பெய்து ஓய்ந்தது போன்ற அமைதி அங்கு நிலவியது. நினைவுகள் பின்னோக்கி ஓடியது. நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில்  " தலைச்சனாக " தலையெடுத்து  வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில் போராடிய போராட்ட காலங்கள் இன்னும் அவளுக்குள் பசுமையாக இருந்தது. ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக் கனவுகளில் மிதந்து கொண்டிருந்தவளை கல்யாண வலையில் கொண்டு போய்  தள்ளினார் அப்பா. வத்ஸலாவின் கண்ணீர், போராட்டம் எதுவும் அப்பாவின் மனத்தைக் கரைக்கவில்லை, " மூத்த பொண்ணா லட்சணமா  நான் சொல்றதைப் புரிஞ்சுக்கோம்மா. உங்கள் எல்லாரையும் சீர்செனத்தியோட கல்யாணம் செய்ஞ்சு அனுப்பற அளவுக்கு நான் ஒன்றும் லட்சாதிபதி இல்லே. முடிஞ்ச அளவுக்கு ஒவ்வொருத்தரையும் வீட்டை விட்டு அனுப்பணும், ஒரு நயாபைசா கூட எதிர் பார்க்காமே ஒரு வரன் வருது. இதைவிட்டா அடுத்த சான்ஸ் வருமா என்பது தெரியாது.கையில் ஒரு கிளை வந்து மாட்டும்போது  கப்னு பிடிச்சுகிட்டு சட்டென்னு முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம் என்று புத்திமதி சொன்ன அப்பாவிடம் "அப்பா. எனக்கு கல்யாணம் முக்கியமே இல்லை. முதலில் ஒரு வேலை தேடிக்கிறேன். உங்க பாரத்தை நானும் பகிர்ந்துக்கிறேன். தம்பி தங்கைகளை நல்ல நிலைக்கு கொண்டு வருகிறேன்" என்று சொன்னபோது, " கேட்க நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு சரிப்பட்டு வருமான்னு தெரியலே. நீ எனக்கு யோசனை சொல்றதை நிறுத்திட்டு நான் சொல்றதைக் கேளு" என்றார்  கல்யாணம் முடிந்து புகுந்த வீடு போன பின்புதான் தெரிந்தது, புருஷன் ஒரு  ஸ்திரீ லோலன் என்பதும் . கால்கட்டு போட்டால் திருந்திவிடுவான் என்ற நினைப்பில் அவனுக்கு வீட்டில் பெண் தேட அவன் யோக்கியதை தெரிந்து யாருமே பெண் தர தயாராக இல்லாத சூழ்நிலையில்தான்,கல்யாணம் வலையில் இவள் வந்து விழுந்த விஷயமும் இது பற்றி அப்பாவிடம் சொன்னபோது " பெரிய இடத்துப் பிள்ளை. அப்படி இப்படித்தான் இருப்பான் . இதையெல்லாம் பெரிசு பண்ணாமே புத்திசாலித் தனமா பிழைக்கப் பாரு " என்றார். வீட்டிலிருந்த மாமனார் மாமியாரோ " இதோ பாரும்மா அவனுக்கு ஒரு பொண்ணைக் கொண்டு வந்து சேர்த்ததோட எங்க கடமை முடிஞ்சுது. இனி " உன்பாடு அவன் பாடு ". நாங்கள் எதிலும் தலையிட மாட்டோம் என்றார்கள்
நாளாக நாளாக அவன் ரகளை அதிகரித்ததே தவிர, திருந்துவான் என்ற நம்பிக்கை போய்விட்டது. குடித்துவிட்டு வந்து அடித்தது, சிகரெட் நெருப்பால் சுட்டது, யாராவது ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இவர்கள் பெட்ரூமில் அவர்களோடு சேர்ந்து கூத்தடித்தது எல்லாவற்றையுமே மறந்து மன்னித்துவிட வத்ஸலா தயாராகத்தான் இருந்தாள். ஆனால். குளித்துவிட்டு ஈரப் புடவையுடன் வெளியில் வரும்போது  மொஸைக் தரையில் கால் வழுக்கி கீழே  விழ இருந்தவளை அங்கு தரை துடைத்துக் கொண்டிருந்த வேலைக்கார தாத்தா, ஓடி வந்து தாங்கிப் பிடிக்க, அந்த நேரம் அங்கு வந்த சங்கர் " ஏண்டி, வீட்டுக்குள் உனக்கொரு கிழட்டுப் புருஷன் தேவையா இருக்குதா ? நீ எனக்குப் புத்தி சொல்றே ? " என்று இரைந்தபோது, அதைக் கேட்டு இருவருமே நொறுங்கிப் போனார்கள்.
" தம்பி. தப்பா பேசாதீங்க . அது என் பேத்தி மாதிரி. கீழே விழப் போச்சு ..." என்று சொன்ன வேலையாளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்ட சங்கர், "ஓஹோ , வேலிக்கு ஒணான்  சாட்சியா ? " என்று கேட்டு இருவரையுமே கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினான். தெருவே கூடி நின்று வேடிக்கை பார்த்தது. மாமனார் மாமியார் வழக்கம்போல மௌன விரதம் இருந்தார்கள்.
பிறந்த வீட்டில் அப்பா நடையேற்ற மாட்டார். உதவியென்று ஓடிவந்து செய்ய எந்த நட்பு வட்டமும் கிடையாது. எந்தத் திசையில் போவது என்று தெரியாமல் பிரமித்து  நிற்கும்போது, யாருமே எதிர்பாராத வகையில் வத்சலாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " வாம்மா, வீட்டுக்குள் இருந்துகொண்டு அசிங்கப் பட்டு வாழ்வதைவிட வெளியில் கௌரவமாகப் பிழைக்கலாம். எனக்குத் தெரிந்த ஒரு அநாதை விடுதி இருக்கு. நான் சொன்னா அங்குள்ள அம்மா  மறுக்க மாட்டங்க. இங்கே செய்ற வேலையை அங்கே செய்துகிட்டு நல்லபடியா இரு" என்று அழைத்து சென்று விடுதியில் சேர்த்து விட்டார். விடுதியில் வந்து சேர்ந்த தினத்தில்தான் தெரிந்தது அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம். இனி எனக்கென்று எந்த  கணிப்பும் கிடையாது. விதி என்னை எங்கெங்கு அழைத்து செல்கிறதோ அங்கெல்லாம் செல்ல நான் தயார் என்ற நிலைக்கு தன்னைத் தயார் செய்து கொண்டாள்  வத்சலா.
விடுதியில் வேலை செய்து கொண்டே பகுதி நேரப் படிப்பை முடித்து, ஒரு நல்ல வேலை தேடிக் கொண்டு தனி வீடு பார்த்து வெளியேறியது, உதவிக்கு ஒரு ஆயாவை வைத்துக் கொண்டு குழந்தை கமலியை கல்லூரிப் படிப்பு வரை கொண்டு வந்து  சேர்த்திருப்பது , இதை எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால் ஏதோ சினிமாக் கதை போலத்தான் இருந்தது . இது அத்தனையும் தனது வாழ்க்கையில் நடந்திருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வேதனை ஆச்சரியம் அத்தனையும் சேர்ந்தே வந்தது. இத்தனைப் போராட்டங்களுக்கு நடுவிலும் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்கிறதென்றால் அதற்க்கு ஓரே ஒரு காரணம் அவள் பெண் கமலிதான்.
" மே ஐ கம் இன் " என்ற கேள்வியுடன் கதவு தட்டப் படுவது கேட்டு பழைய நினைவலைகளில் இருந்து வெளியேறி, " உள்ளே வா. இது என்ன பார்மாலிட்டி புதுசா ? " என்றாள், வருவது அவளுடைய தோழி மெலிதா தான் என்பதை அறிந்தவளாக.
" நீ வந்திருப்பது ஜெயபால் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நீ லீவ் அப்ளை பண்ணியிருந்தேதானே. இரு ரெண்டு காபிக்கு ஆர்டர் பண்ணிடறேன் " என்று சொல்லி இண்டர்காம் எடுத்து  காண்டீன் ஐயரைக் கூப்பிட்டு " ரெண்டு காபி சூடா வேண்டும். வேறு ஏதாவது சூடா இருந்தாலும் எடுத்திட்டு வாங்க. அதுக்காக ஸ்டவ்வை தூக்கிட்டு வந்துடாதீங்க, இதுதான் சூடா இருக்குன்னு " என்று மூச்சு விடாமல் பேசியவள் ஒரு சேரை இழுத்துப் போட்டு வத்சலா அருகில் வந்து அமர்ந்தாள்
" சொல்லு , லீவை கான்சல் பண்ணிட்டியா ? "
" லீவில்தான் இருக்கிறேன். மனசு சரியில்லே "
" அட அது என்னிக்குதான் சரியா இருந்தது ? யாருக்கு இருந்தது ? டாக்டரைப் பார்க்கப் போறதா சொன்னே. போனியா ? என்ன சொன்னார் ? "
" போனேன். அவர் நெக்ஸ்ட் வீக் பாரீன் போறாராம். திரும்பி வர ஆறுமாதம் ஆகுமாம். அதனால் இந்த வாரத்தில் எப்போ வேணும்னாலும் வந்து அட்மிட் ஆகலாம்னு சொன்னார் . அட்மிட் ஆன மறுநாள் ஆபரேஷன் வச்சுக்கலாம்னு சொன்னார். ஆபரேஷனை தள்ளிப் போட்டா, பின்னாடி அது வேறே மாதிரி பிரச்சனைகளில் கொண்டுபோய் விடும்னு சொல்றார். வீட்டுக்குப் போய் யோசனை பண்ணி சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு ஆறு மாசம் கழிச்சு வச்சுக்கலாமான்னு யோசிக்கிறேன் ."
" இதுலே யோசிக்க என்ன இருக்கு ? பணத்தை ஏன் வீண் செலவு பண்ணனும்னு வீட்டுக்குப்போய் கணக்குப் போட்டுப் பார்த்தியா ? "
" வீட்டில் எனக்கும் கமலிக்கும் ரெண்டு நாளா ஒரு சின்ன பிரச்சினை. அது இன்னிக்குக் காலைலேயும்  கண்டினியு ஆச்சு. அதான் வீட்டில் இருக்கப் பிடிக்கலே. கிளம்பி ஆபீஸ் வந்துட்டேன் "
" என்னனு விவரமா சொல்லித் தொலையேன்டி "
" காலேஜில் அவ குரூப் ஸ்டுடென்ட்ஸ் எல்லாரும் டூர் போறாங்களாம். இவளும்  போகணும்னு அடம் பிடிக்கிறா "
" அனுப்பிடறதுதானே ? "
" இவ கொஞ்சம் " துறுதுறு  " டைப். எந்த ஒரு விஷயத்திலும் அதன் சீரியஸ்னஸ் தெரியாது. அவ போகப்  போறேன்னு சொல்றது மகாபலிபுரம். இவளுக்குத் தண்ணீரைக் கண்டால் அப்படி ஒரு குஷி கிளம்பிடும். மெரினாவில் என் கண் முன்னில் கடலில் இறங்கினாலே லேசில் வெளியில் வராமல் ஆட்டம் போடுவாள் . அங்கு ரோந்து வரும் போலீஸ் காரர்களிடம் சொல்லி அவளை மிரட்டி வெளியில் கொண்டு வர சொல்வேன். அப்படியிருக்கு காலேஜ் பசங்க சேர்ந்து போறபோது கும்மாளம் கொண்டாட்டத்துக்கு அளவே இருக்காது. அதுவும் மகாபலிபுரம் பீச், நம்ம மெரினா மாதிரி கிடையாது . ஆழம் அதிகம். இவளுக்கு பதினெட்டு வயசில் ஒரு கண்டம் இருக்குனு ஒரு ஜோசியர் சொல்லி இருக்கிறார் . அடிக்கடி பேப்பரில் படிக்கிறோமே , அந்தக் கடலில் மூழ்கி அத்தனை மாணவர் சாவு , இந்தக் கடலில் மூழ்கி இத்தனை மாணவர் சாவுன்னு. அது நினைவுக்கு வந்து என்னை மெண்டல் டார்ச்சுர் பண்ணுது அதான் வேண்டாம்னு சொல்றேன். அடம் பிடிக்கிறா."
" உன் பயத்தை எடுத்து சொல்றதுதானே ? "
" சொன்னால் கேட்பான்னு நினைக்கிறியா ? என்னை , என் பயத்தைக் கிண்டல் பண்ணுவா  "
இண்டர்காம் ஒலிக்கும் சத்தம் கேட்டு  ஓடி சென்று ரெசீவரைக் கையில் எடுத்த மெலிதா, கவலை தோய்ந்த முகத்துடன் பேசிவிட்டு. வத்சலா அருகில் வந்து " வா, ஆஸ்பிடல் வரை போய் வரலாம் " என்றாள்
" இப்ப எதுக்குடி ? " என்றாள்
" கேள்வி கேட்காமே என்னோட வா " என்ற மெலிதா, வத்சலாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை வெளியே அழைத்து வந்து, ஆட்டோ ஒன்றை நிறுத்தி வலுக் கட்டாயமாக ஏற்றினாள்
ஜீ.ஹெச் வாசலில் ஆட்டோ நின்றது .கீழே இறங்கியவுடன் ஒரு மர நிழலுக்கு வத்சலாவை அழைத்து சென்ற மெலிதா, " வத்சூ, டென்சன் ஆகாதே . உன் பொண்ணு பாய்சன் சாப்பிட்டு சூஸைட் பண்ண முயற்சி பண்ணி இருக்கிறா. காலேஜில் உள்ளவங்க அவளை இங்கே அட்மிட் பண்ணி இருக்கிறாங்க. போன் பண்ணினது அவளோட ப்ரின்சி. விஷயம் தெரிஞ்சு போலீஸ்காரங்க வந்து தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம், காதல் தோல்வியா, 'அதுவா. இதுவா'ன்னு  கேட்டு குடையறாங்கலாம். டூர் போக வீட்டில் அனுமதிக்கலேன்னு அவ கைப் பட லெட்டெர் எழுதி வச்சிருக்காளாம். அதை நம்ப மறுக்கிறாங்களாம் " என்று சொன்னாள்
அதைக் கேட்டு ஒரு விரக்தி சிரிப்பொன்றை உதிர்த்த வத்ஸலா, வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
" இதோ பாரு வீட்டில் நடந்ததை போலீஸ் நம்பும்படி நீதான் பக்குவமா எடுத்து சொல்லணும். ஏதாவது இட்டுக் கட்டி எழுதி, பேப்பரில் நியூஸ் வந்துவிட்டால் அவளோட  பியுசர் பாழாயிடும். அதுமட்டுமில்லே, அந்த ப்ரின்சி மேடம் போன் பண்ணும்போதே  "இப்படி ஒரு பொண்ணு எங்க காலேஜுக்கு வேண்டவே  வேண்டாம்"னு கத்தினாங்க. அவங்களையும் கன்வின்ஸ் பண்ணணும். அவங்க பேசறதை வச்சுப் பார்த்தா உயிருக்கு ஆபத்து இருக்காதுன்னு தோணுது. நீ மனசை திடப் படுத்திகோ. நாம  உள்ளே போகலாம் " என்றாள் மெலிதா எந்த அசைவுமின்றி நின்று கொண்டிருந்தாள் வத்சலா.
" அடியே ஏதாவது பேசு .. இல்லே அழவாவது செய். நீ மௌனமா இருக்கிறதைப் பார்த்தா  எனக்குப் பயமாயிருக்கு, உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு "
" இல்லே எனக்கு எதுவும் ஆகாது. இனி ஆகிறதுக்கு எதுவுமே இல்லை. இப்படி ஒரு பைத்தியத்தை பெத்து வளர்த்திருக்கிறேனேனு எனக்கு என் மேலேயே கோபம் வருது. வாழ்க்கையில் எத்தனைப் போராட்டங்களை சந்திச்சு. என்னென்ன அவமானமெல்லாம் பட்டு, வாழ்க்கையையே இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையோடு   தைரியமாப் போராடி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். பிறந்த வீடு, புகுந்த வீடு மனுஷங்க துணையில்லாத நிலையிலும் என்னோட சொந்தக் காலில் நின்று போராடி இருக்கிறேனென்றால் அது இவளுக்காகத் தானே? ஒரு சின்ன விஷயத்தில் ஏமாற்றத்தைத் தாங்கமுடியாத இவ, நாளைக்கு  பொய்யும் சூதும் ஏமாற்றமும் மிகுந்த இந்த உலகத்தில் எப்படி வாழப் போறா?  பிறந்ததிலிருந்து இதுவரை எது கேட்டாலும் வாங்கித் தந்த நம்ம அம்மா இன்றைக்கு இந்த டூர் வேண்டாம்னு சொன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும். இது ஒண்ணும் கம்பல்சரி டூர் இல்லையே ஆப்சனல்தானே என்று நினைக்கும் அளவுக்குக் கூட பக்குவம் இல்லாத ஒரு பொண்ணு இந்த உலகத்தில் எதை சாதிக்கப் போறா?  ஒரு சின்ன ஏமாற்றத்தைத் தாங்க முடியாத இவளுக்கு, மனித உருவில் நம்மை விழுங்க வரும் மிருகங்களை எதிர்த்துப் போராடும் தைரியம் எங்கிருந்து வரும் ? தூங்குகிற தெய்வம் துரத்துகிற மிருகங்களுக்கு நடுவில்தானே நாம வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இப்படி ஒரு பக்குவம் இல்லாத பொண்ணு வாழ்வதைவிட போய்ச்சேருவதே மேல். இதோ பார் மெலிதா, நான் உள்ளே வரவோ அவளைப் பார்க்கவோ விரும்பலே. அவ உயிரோடு இருந்தா அவளை ஏதாவது ஒரு ஆஸ்டலில் சேர்க்க ஏற்பாடு பண்ணு. அவ சம்பாதிக்க ஆரம்பிக்கும்வரை அவளுக்கு செலவழிக்க நான் தயாரா இருக்கிறேன் . செத்துப் போயிட்டான்னா இங்கிருந்தே அவளை பியுனரெலுக்கு  எடுத்துட்டுப் போக ஏற்பாடு பண்ணு  " என்று சொல்லிவிட்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாள் வத்ஸலா