Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, July 31, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 06 )

சென்ற வார புதிர் எண் - 05க்கான விடை :  வந்திருந்தது வரதனின் அம்மா. கருணாநிதி என்ற பெயரைக் கேட்டு வந்திருப்பது வரதனின் அப்பா என்று கிளாஸ் மிஸ் தப்பாக நினைத்துக் கொண்டார். இனி இந்த வாரப் புதிருக்கு விடை கண்டு பிடியுங்கள்.  
Image result for pictures of village scenery

புதிர் எண் - 06
"தாத்தாகரெண்ட் போயிடுச்சுராத்திரியிலே விளையாடபோகமுடியாது. இன்னிக்கு புரட்டாசிமாச முதல் சனிக்கிழமைனு  அம்மா, அக்கா,  பாட்டி, எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டாங்க. ரொம்ப போரடிக்குது. ஏதாவது புதிர் சொல்லுங்க தாத்தாஎன்று குழந்தைகள் கேட்கவும் தாத்தா ரொம்பவும் குஷியானார் .
"சரிஇருட்டுக்குள் எங்கேயும் போக வேண்டாம்நாம இருக்கிற இடத்தில்இருந்தபடி வார்த்தை விளையாட்டு விளையாடலாம் " என்றார் தாத்தா.
குழந்தைகள் ஆர்வமாக தாத்தாவின் முகத்தைப் பார்த்தார்கள்.  
"பிள்ளைங்களா இப்போ காக்காமாமா,  தாத்தாபாபாபாப்பா, மே மாத மாமேமா பலா லாபமாதேரு வருதே, குடகுதத்தை   தைத்த,  கருதித் திருக ,  குலவி விலகுஇந்த வார்த்தை எல்லாமே நீங்கள் சொல்லி பார்க்கிறப்ப இடமிருந்து வலமாகவலமிருந்து இடமாகஒரேமாதிரியான எழுத்துக்களும் உச்சரிப்பும்தான் வரும்னு உங்களுக்குத் தெரியும்தானே. இதேபோல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வார்த்தை சொல்லிக்கிட்டே வரணும். யார்அதிகப்படியான வார்த்தைகளை கண்டுபிடிக்கிறாங்களோ அவர்களுக்கு அஞ்சுரூபா பரிசு" என்றார் தாத்தா. யோசித்து யோசித்து ஒவ்வொரு வார்த்தைகளாக ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தனர். குழந்தைகள் கண்டுபிடித்த வார்த்தைகள் வா சிவா, தாராதா, தா கீதா, மோரு  போருமோ மேயுமே, தேயுதே
"சரிதத்தை தைத்தகருதித் திருக, குலவி விலகு   இதையெல்லாம் வாக்கியமாக சொன்னால் இன்னொரு அஞ்சு ரூபா பரிசுஎன்றார் தாத்தா.
உடனே, "இது தத்தை தைத்த சட்டை", "தண்ணீர்க் குழாய்   என்று கருதித் திருக காற்றுதான்வந்தது,தண்ணீர் வரவில்லை"என்று சொல்லி பரிசை வாங்கிக் கொண்டான் ரங்கன்.
"காரியம் ஆகணும்னா குழஞ்சி பேசி, குலவிவிலகுறது அவனுக்குக் கைவந்த கலை " என்று கோவாலு சொல்ல, "சபாஷ் !" என்றார் தாத்தா. 
மாடு மேயுமே",  " நிலா தேயுதே " என்று வேலு சொன்னான். 
(குழந்தைகளே இதே போல வார்த்தைகளைக்    கண்டுபிடிக்க நீங்களும் முயற்சி பண்ணனும்). குழந்தைகள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,  "என்னடா உங்க அப்பனைக் கண்ணாலேயே பார்க்க முடியலேஊரிலே  இருக்கிறாரா வெளியூர் எங்காவது போயிட்டாரா? இல்லே உடம்புக்கு முடியாமே வீட்டில் இருக்கிறாரா? என்கிட்டே வாங்கின நூறு ரூபாயை ரெண்டு வாரத்தில் கொண்டாந்து தர்றதா சொல்லிட்டுப் போனார். ஆளும் வரலே பணமும் வரலே" என்று வேலனைப் பார்த்துக் கேட்டார் தாத்தா. "இந்த வருஷம் ஆடிமாசத்திலே நெல் விதைச்சாங்கதானேவிளைஞ்சத  அறுத்து எடுத்துகிட்டு சந்தையிலே வித்துட்டு அப்படியே எனக்கு தீபாவளிக்கு துணி எடுத்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனாங்கஅடுத்த மாசம்தீபாவளியாச்சே"  என்று வேலன் சொன்னான்.  
"படவா ராஸ்கல், இவ்வளவு  நாளும் புதிர் போட்டுப் பேசுனீங்க.  இப்போ  பொய்சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா? " என்று கோபப்பட்டார் தாத்தா
இப்போ கேள்வி என்னவென்றால் எதைக் கண்டு அவன் சொன்னது பொய் என்று சொல்கிறார் தாத்தா ?

Sunday, July 24, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 05 )

புதிர் எண் - 04 ன் விடை 
அரிசி விலை = பதினஞ்சு ஆட்டுக்கால்      =  15 ஆடு x 4 கால் = 60
உளுந்து விலை = இருபது மாட்டுக்கொம்பு   =20 மாடு  x 2 கொம்பு = 40
கல்கண்டு விலை  = குதிரைக் கொம்பு = குதிரைக்கு கொம்பு இல்லை
கடை திறப்பு நாள் என்பதால் கல்கண்டு ப்ரீ யாகக் கிடைத்தது.
இனி அடுத்த புதிருக்குப் போகலாமா ?










புதிர் எண் - 05 
ஏழாம் வகுப்புக்குள் வேகமாக வந்த வாசல் காவலாளி "மேடம் உங்கள் வகுப்பில் படிக்கும் வரதனின் தாத்தா உடல்நிலை மோசமாக இருப்பதால் கருணாநிதிங்கிறவங்க அவங்க  பைனை  வெளியூர் போக அழைத்துச்சிட்டுபோகவந்திருக்காங்க"என்றுசொல்லிவிட்டுப் போனார். 
கிளாஸ் மிஸ், "வரதன்உங்க அப்பா வந்திருக்காங்க. நீ இப்போ வீட்டுக்குப்  போகலாம் " என்றார்
"எங்க அப்பா இப்போ வெளிநாட்டில் இருக்கிறார்அவர் பேர் கனகராஜ். அவர் இப்போ இந்தியா வர சான்ஸே இல்லை " என்றான் 
காவலாளியை இன்டர்காமில் அழைத்த மிஸ் " வரதனுக்கு கருணாநிதி
என் உறவுமுறைனு கேட்டு சொல்லுங்க என்றார்.
"அவங்க மகன்னு சொல்றாங்க " என்று பதில் வந்தது.
கருணாநிதிவரதனை தனது மகன் என்று சொன்னதும் உண்மைதான் ; 
வரதன்கருணாநிதி தனது அப்பா இல்லை ன்று சொல்வதும் உண்மை தான்இந்தப் புதிரை விடுவிக்க உங்களால் முடியுமா ? 

(விடை தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருக்கவும்.

Sunday, July 17, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் ( 04 )

ஹாய் குட்டீஸ்,
சென்ற வார புதிரின்  (புதிர் எண் - 03  ) விடை -   நலம்.நலம் அறிய ஆவல். 
                                                           இன்று மாலைமாலை ஒன்று வாங்கி வா.
                                  அவன் வரும் பொழுது , பொழுது நன்கு புலர்ந்திருந்தது. 

இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் :



புதிர் எண் - 04. 
தெருவில் விளையாடிக் கொண்டிருந்த வேலனை அழைத்து அவனிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து, "ஓடிப் போய் இரண்டு கிலோ அரிசியும் அரை கிலோ உளுந்தும் வாங்கிட்டு வா, அவசரம் " என்று ராமு தாத்தா சொல்ல, "பக்கத்து டவுனில் இன்னிக்குப் புதுக்கடை திறக்கிறாங்க. அங்குபோய் வாங்கிட்டு வரேன்"என்று சொல்லி ஓடிய வேளாண் அடுத்த அரைமணி நேரத்தில் வாங்கி வந்த பொருளை தாத்தாவிடம் கொடுத்து விட்டு ஓடத் தயாரானான்.
நில்லுப்பாஎது எது என்ன விலைன்னு சொல்லிட்டுப் போ " என்ற  தாத்தாவிடம் , அரிசியைக் காட்டி ' இது  பதினஞ்சு ஆட்டுக்கால்பருப்பு இருபது மாட்டுக் கொம்புகடை புதுசா திறக்கிறதாலே கல்கண்டு விலை தான்  குதிரைக் கொம்பு  " என்ற பதில் வந்தது வேலனிடமிருந்து.
"எல்லாருமே புதிரிலே பேச ஆரம்பிச்சிட்டீங்களாநல்லதுதான் . இந்தா இந்த குதிரைக் கொம்பை நீயே வச்சுக்கோ " என்று கல்கண்டு பாக்கெட்டை வேலனிடம் கொடுத்தார்  தாத்தா.
இப்போ கேள்வி என்னவென்றால்பொருட்களின் விலையாக வேலன் சொன்னது என்ன ? 

Tuesday, July 12, 2016

ஒரு சம்பவம் ! எத்தனை விமரிசனம் !!

நடு ரோட்டில் ஒரு குடும்பத்தினர் மூன்று காவலர்களால் தாக்கப் பட்டதை மீடியாக்கள் ஒளி பரப்பிக் கொண்டிருக்க, அதே டாபிக் இன்று காலை எலெக்ட்ரிக் ட்ரைன் உள்ளேயும் ஓடிக் கொண்டிருந்தது.
"மனுஷங்களா அவனுக? காட்டு மிராண்டிக... காட்டுப் பன்னிக்குப் பிறந்தவனுக!"
"இல்லாதவன் மேலே வைக்கிற கையை எவனாவது பணக்காரன் மேலே வச்சுக் காட்டட்டுமே "
"அவனுக மூணே மூணு பேர். பப்ளிக் எத்தனை பேர் நின்னாங்க. அத்தனை பேரும் சேர்ந்து இவனுகளை அடிச்சு நொறுக்கி இருக்கணும் "
"இவனுகளை  இடம் மாத்தம் பண்ணினா தீந்துச்சா ? வேலையை விட்டே எடுக்கணும் "
- இப்படியாக பேச்சு ஓடிக் கொண்டிருக்க, அங்கே நின்றிருந்த ஒரு பெண் (பார்க்க ரொம்பவும் அப்பாவியாக, படிப்பறிவில்லாதவள் மாதிரி தோன்றிய ஒரு  பெண் ) சொன்ன செய்தி : "இந்த மாதிரி சூரப்புலிகளை அரசாங்கம் பாராட்டணும். காட்டுக்குள்ளே அங்கங்கே தீவிரவாதி பதுங்கி இருக்கிறதா சொல்றாங்களே. அவங்களை பிடிக்க இந்த மூணு பேரையும் அனுப்பணும். காட்டுக்குள்ளே இருந்து இங்கே வர்ற யானைகளை விரட்ட இந்த மூணு பேரையும் அனுப்பணும் . இத்தனை நாளைக்குள்ளே இத்தனை மணிக்குள்ளே அதை செஞ்சு முட்டிக்காட்டா உனக்கு சம்பளம் கிடையாதுன்னு சொல்லணும் " என்றாள்.
கொஞ்ச நேரம் அங்கே அமைதி நிலவியது. வேறொரு பெண், "நீங்க சொல்றது மாதிரி செஞ்சா அது இன்னும் டேஞ்சர் .அங்கே போய் (காட்டுக்குள்ளே )   அவங்க கூட்டணி வச்சிட்டா அது எல்லாருக்கும் ஆபத்தா முடிஞ்சிடுமே  " என்றார்.
அப்பப்பா .... ஜனங்க என்னமா யோசிக்கிறாங்க !!!!!!!!!!!!!!!!!!!!!11  

Sunday, July 10, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் (03)

புதிர் எண் - 03 

"தாத்தா நீங்க எதுவரை படிச்சிருக்கீங்க ? " என்று ஒரு குறும்புக்கார  சிறுவன் கேட்டதும்நான் மழைக்கு ஒதுங்கக் கூட ஸ்கூல் பக்கம் போய் நின்னது கிடையாது " என்று ராமு தாத்தா சொல்ல " அப்படின்னா ஷேம் ஷேம் " என்றார்கள் எல்லா சிறுவர்களும் சேர்ந்து.
படவா ராஸ்கல்கிண்டலா பண்றீங்கஎனக்கு அனுபவப் படிப்பு அதிகம் கண்ணுகளாஇப்போ நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்என்று தாத்தா சொல்ல, " நாங்க ரெடி " என்றார்கள் சிறுவர்கள்.
"பள்ளிக்கூடப் படிப்பு படிக்காத என்னோட கேள்விக்குபடிச்சிட்டு இருக்கிற நீங்க பதில் சொல்லுங்க பார்க்கலாம்தமிழில்,  அடுக்குத்  தொடர், இரட்டைக் கிளவி பற்றி உங்களுக்குத் தெரியும்தானே ?  
கூட்டம் கூட்டமாக  - இது அடுக்குத் தொடர்
வளவள     - இது இரட்டைக் கிளவி 
இப்போ புதிர் என்னவென்றால் : இதே போல் ஒரே ஒரு வார்த்தை அடுத்தடுத்து  இரண்டு முறை  வரும்படி கொடுத்தால்அதாவது 
நலம் நலம்மாலை மாலைபொழுது பொழுது என்பதை அர்த்தமுள்ள  வாக்கியமாக அமைத்துக் காட்ட உங்களால் முடியுமா  ? " என்று தூய  தமிழில்  கேட்டார்  தாத்தா.


சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்உங்களுக்குத் தெரிந்தால் உடனே சொல்லலாமே.

Sunday, July 03, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் (02)

புதிர் எண் - 01க்கான விடை : 
என்ன எல்லாரும் சரியான விடையைக் கண்டு  பிடிக்க மூளையைக் 
கசக்கிப் பிழிந்து கொண்டு இருக்கிறீர்களா ? தாத்தா போட்டது ஒரு
கடிக்கணக்குசொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது
எல்லோருக்கும் தெரியும்தாய்க்கிளி சொன்னதையே சொல்லின 
கிளிக்குஞ்சுகள் .

இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்: 

புதிர் எண் -02 


தெருவாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ராமு தாத்தா தன்னுடைய பேரனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்அந்த வழியாக வந்த அவரது பால்ய நண்பர் பெருமாளைப் பார்த்ததும் " என்னப்பா பெருமாள்கையும் பையுமா போறேபையில் என்ன வச்சிருக்கிறே? "  என்று கேட்டார்
 " பையிலா ? அது என்னிடம் இருக்குஉன்னிடம் இல்லை .வீட்டில் இல்லைவீட்டினுள் கடைசியாக இருக்குஎன்றார் பெருமாள் தாத்தா.
நீ என்னோட பால்ய நண்பனாச்சேஎதிர் புதிர் போடாமே இருப்பியாசரி பையில் இருக்கிறதில் எனக்கு இனிப்பு உருண்டை பிடிச்சு எடுத்துட்டு வா " என்று ராமு தாத்தா சொல்ல, " இது உருண்டை பிடிக்க இல்லேஇட்லி மிளகாய்ப் பொடிக்கு " என்றார் பெருமாள் தாத்தா.
அப்படின்னா , அதிலே கொஞ்சம் கொண்டு வா " என்று ராமு தாத்தா சொல்ல சரி என்று தலையாட்டிவிட்டு நகர்ந்தார் பெருமாள் தாத்தா.
இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ரங்கனுக்கு எதுவுமே புரியவில்லை. " தாத்தா நீங்க என்ன கேட்டீங்கஅவர் எதைத் தரேன்னு சொல்லிட்டு போகிறார்?" என்று கேட்டான்அதற்கு  " இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் பார் " என்றார் தாத்தா.
இப்போ கேள்வி என்னவென்றால்பெருமாள் தாத்தா கையிலிருந்த பொருளின் பெயர் என்ன ? "
நண்பர்களின் பேச்சிலேயே ஏராளமான க்ளு இருக்கிறது.

(விடை கண்டு பிடிக்க முடியாதவர்கள் அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்)