Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, September 26, 2020

வார்த்தை வளம் (வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் என்கிற புதிருக்கான விடை )

 புதிர்  - 001  வாழ்த்துக்கள் 

விடை

வா வாழ் வாழ்த்து வாழ்க வாத்து வாது  துகள் கள் வாள் 

புதிர்  - 002  அறிவாளி

விடை   

வா,  அறி,  அவா (அவா என்றால் ஆசை என்று பொருள் ), அளி, வாளி 

புதிர்  - 003  ஆலயதரிசனம்,

விடை  

ஆ (பசு), ஆம், ஆரி (அருமை), தரி, ஆலம் (அம்புக்கூடு ), லயம், ஆதரி, தனம்,  சனம் , ஆலயம், ஆசனம் ,  தரிசனம்   

புதிர்  - 004 மேதாவிலாசம், 

விடை   

மே, தா, தாவி, தாம், மேவி. விலா  மேதாவி, விலாசம் 

புதிர்  - 005  கண்ணில் 

விடை 

கண், கணி, கண்ணி, கல்  

புதிர்  - 006   சரிவிகிதம்  - 

விடை

சரி, சகி, சதம், விதம், சகிதம், விகிதம், ரிதம் 

புதிர்  - 007   பல்லாண்டு வாழ்க 

விடை

வா. பல், பலா, பண். படு, வாழ், பண்டு , வாழ்க, பல்லாண்டு, லாடு  

புதிர்  - 008   வசந்தகாலம் 

விடை

கா, சகா, தகா, வசம், வதம், வலம், வந்த, சதம், தலம், காலம் , சந்தம், வசந்தம்

புதிர்  - 009 தீவிரவாதம்

விடை

தீ  வா தீரம் ரதம் வாதம்  விரதம் விவாதம்    ரவா

 
புதிர் - 010 பஞ்சதந்திரம் 

விடை

பதி சதி  பந்தி சந்தி தந்தி பதம் பரம் சரம் சதம் தரம் திரம் பஞ்சம் தந்திரம்

வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் (005 - 010)

 அன்புக் குழந்தைகளே, பெரியவர்களே 

வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் என்ற புதிரும் அதற்கான விடையும் ஒரே பகுதியில் வேண்டாம் என்று நட்பு வட்டம் கோரிக்கை வைத்தது.


சில நாட்கள் கழித்து புதிரைப் பார்ப்பவர்கள் கண்ணில், விடையும் சேர்ந்தே தென்படும் என்பதால், புதிரைப் பற்றி யோசிக்கும் ஆர்வம் குறைந்து விடும் என்றார்கள். அவர்கள் சொல்வது சரி என்று பட்டதால், வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் புதிருக்கான விடைகள் தனியாக பதிவு செய்யப்படும்.

வார்த்தை வளம் என்கிற தலைப்பின் கீழ் விடைகள் வெளியாகும்.

இனி கீழே உள்ள புதிருக்கு விடை தேடுங்கள். (ஆனால் புதிர்களின் வரிசை மேலிருந்து கீழாக உள்ளது.  புதிதாக பதிவு செய்யப்படும் புதிரை நீங்கள் சுலபமாக கண்டுபிடிப்பதற்காக.)  

புதிர் - 010

தீவிரவாதம்   - இந்த சொல்லில் உள்ள ஏழு சொல்லில் சாப்பிடும் பொருள் ஒன்றும் உள்ளது.  

புதிர் - 009

பஞ்சதந்திரம் -  இந்த 8  எழுத்து சொல்லில் 13 சொற்களை கண்டு பிடியுங்கள்

புதிர் - 008

வசந்தகாலம் - இந்த 7 எழுத்து சொல்லில் 12 சொற்களை கண்டுபிடியுங்கள் 

புதிர் - 007

பல்லாண்டு வாழ்க  -  8 எழுத்துக்கள் கொண்ட இந்த சொல்லில்  (ஒரு இனிப்பு பண்டத்தின் பெயர் உட்பட)  10 சொற்கள் உள்ளன.

புதிர் - 006

சரிவிகிதம்  - இந்த ஆறெழுத்து வார்த்தையில் ஆறு   தமிழ் சொற்கள் உள்ளன. சங்கீதத்துடன் தொடர்புடைய ஒரு ஆங்கில வார்த்தையும் உள்ளது. அவற்றை கண்டுபிடியுங்கள்.

புதிர் - 005

கண்ணில்  - இந்த நான்கெழுத்து வார்த்தையில் நான்கு தமிழ் சொற்கள் உள்ளன 


முந்தைய புதிர்களுக்கான விடையும் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால்  புதிர்கள் 007 லிருந்து 025 வரை இதே போஸ்ட்டில் பதிவு செய்யப்படும். 


Wednesday, September 23, 2020

Saturday, September 19, 2020 வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் (003 - 004)

சென்ற வாரம் வெளியான புதிர் "வாழ்த்துக்கள்"  "அறிவாளி" என்ற வார்த்தையில் உள்ள வார்த்தைகளை கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  

அதற்கான விடை கீழே உள்ளது. உங்கள் விடையுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.

விடை - 001

வா வாழ் வாழ்த்து வாழ்க வாத்து வாது  துகள் கள் வாள் 

விடை - 002

வா,  அறி,  அவா (அவா என்றால் ஆசை என்று பொருள் ), அளி, வாளி 

இனி 

புதிர் -3 ஆலயதரிசனம், 

புதிர் -4 மேதாவிலாசம்,  என்ற இரண்டு   வார்த்தைகளுக்குள் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று கண்டு பிடியுங்கள்.

குறிப்பு : இனி வருகின்ற நாட்களில் இதே பகுதியில் கேள்வியும் பதிலும் தொடர்ந்து வெளியாகும் என்பதை பதிவு செய்கிறேன்.

Saturday, September 19, 2020

வார்த்தையில் இருக்கும் வார்த்தைகள் (002)



குழந்தைகளே,

 ஒரு தமிழ் வார்த்தையில் ஒளிந்திருக்கும் பல வார்த்தைகளை விளையாட்டாக கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. இதோ அடுத்த புதிர்.

அறிவாளி என்கிற நான்கு எழுத்து வார்த்தைக்குள் 5 வார்த்தைகள் ஒளிந்துள்ளன 

கண்டுபிடியுங்கள்.