Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, October 03, 2022

DEAR VIEWERS,


அனைவருக்கும் அன்பின் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.

"நாளைக்குத்தானே பூஜை !" அதற்குள் அவசரப்பட்டு முந்தைய தினமே வாழ்த்து சொல்கிறேனே என்று குழம்பாதீர்கள்.

கலைமகளின் புகழ்பாடும்  இந்த நவராத்திரி நாட்களில் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு குழப்பம். ஒருவேளை நான்தான் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறேனோ என்ற குழப்பமும்கூட.

கடந்த சிலநாட்களாகவே OC (ஓசி) என்ற சொல் குறித்த சர்ச்சை  மீடியாக்களில் அடிபடுகிறது.

அதில்தான் குழப்பம் எனக்கு. 

தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அனைவர் நாவிலும் ஆங்கிலம் வெகு இயல்பாக நடனமாடுகிறது. ஆங்கில வார்த்தை கலவாத தமிழ் சொற்களை மட்டும் தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் பேசவேண்டும் என்று ஒரு போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது  புரியும் அது எவ்வளவு கடினமான செயல் என்பது.  (அடிப்படை ஆங்கில எழுத்து தெரியாதவர்களின் பேச்சினுடே எத்தனை ஆங்கில வார்த்தைகள் வருகின்றன என்பதை கவனித்துப் பாருங்கள்.)

"ஓசி" என்பதும் "இலவசமாக" என்பதும் ஒரே பொருளுடைய சொல்தானே ? அதை தமிழில் சொன்னால் பெருமையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்னால் அவமதிப்பது போல் இருக்கிறது என்று ஏன் கவலைப்படுகிறார்கள்.

கவலையை விடுங்கள். OC (ஓசி) என்பது ON COMPLEMENTARY என்பதன் சுருக்கம்தானே. அப்படியிருக்க    அது ஏதோ கெட்ட வார்த்தை என்பது போல நினைத்து வருத்தம் கொள்கிறீர்கள்.

என்னுடைய இந்த விளக்கம் தப்பு என்று யாராவது நினைத்தால் அது எந்த வகையில் தப்பு என்பதை எனக்குப் புரிய வையுங்களேன்!

ப்ளீஸ் !