Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, July 15, 2020

ON-LINE PUZZLE NUMBER - 01

DEAR CHILDREN, KINDLY VIEW AND SOLVE THE PUZZLE  DESIGNED BELOW SPECIALLY FOR YOU. 
THERE ARE TWO BOXES.  BOX "A" CONTAINING WORDS. FIND ANOTHER WORD AND FILL IN BOX "B" BY USING THE SAME LETTERS IN BOX A
                 A                                 B











Monday, July 06, 2020

எல்லாம் வல்ல இறைவா நன்றி ..!

Dear  viewers ,

எதற்கு இந்த நன்றி.. கொரோனா போய்விட்டதா என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டாம்.  ப்ளீஸ் ..
எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் என்னுடைய இந்த தளம் (பிளாக்) 2011ல் தொடங்கப்பட்டது. 
இதுவரை எனது தளத்தில் கண் பதித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து இருபத்தெட்டாயிரம் பேர். எந்தெந்த நாட்டில் உள்ளவர்கள் இன்றைக்கு / நேற்று எத்தனை பேர் பார்வையிட்டார்கள் என்ற விவரம் எனக்கு உடனுக்குடன் தெரிந்துவிடும்.
கடந்த சில மாதங்களாக UNKNOWN REGION ல் இருந்து பார்வை பதித்தவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் எனக்கு வர ஆரம்பித்தது. ஒரு சிலர் தாங்கள் யார் என்பது தெரிய வேண்டாம் என்பதற்காக, அவர்கள் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பதற்காக UNKNOWN REGION போர்வைக்குள் தங்களை மறைத்துக் கொள்வார்கள். (அது அவங்க விருப்பம். அதைப்பற்றியெல்லாம் நான் பேசவே போவதில்லை)
அப்படி பார்த்தவர்கள் எண்ணிக்கை 4000 தாண்டிவிட்டது. (அதை கண்டிப்பாக யாராவது ஒருவர் மட்டுமே பார்த்திருக்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை. அது யார் ? எந்த நாட்டை சேர்ந்தவர் என்பது எனக்கு தெரியாது ).
ஆனால் இந்த கொரோனா, தன்னுடைய ஆதிக்கத்தில் இந்த உலகத்தை கொண்டு வர ஆரம்பித்ததில் இருந்தே அந்த viewer எண்ணிக்கை வரவே இல்லை. தினமும் எனது தளத்தில்,  கால் பதித்த ஒருவர், மாதக்கணக்கில் எட்டியே பார்க்கவில்லை.கடந்த இரண்டு மாதமாக என்னுடைய பெரிய கவலையே அதுதான். ஒருவேளை கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்பாரோ என்கிற கவலை என்னை அரித்துக் கொண்டே இருந்தது. கடவுளிடம் தினமும் வேண்டிக்கொண்டே இருந்தேன். அது, யாராக இருந்தாலும், நல்லபடியாக இருக்க வேண்டும் என்கிற தியானம்தான் தினமும். 
சற்றுமுன் எனது தளத்தின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்வையிட்டபோது UNKNOWN REGION - 1 என்பதைப் பார்த்ததும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.
(பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்பது தெரியும். கொரோனாவை விட்டுத் தள்ளுங்கள்.. மற்ற நாட்களிலும் எத்தனையோ பேர் மறைந்து போகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நாம் பெரிதாக நினைப்பதே இல்லை. ஆனால் நமக்குத் தெரிந்த, அதிகம் பரிச்சயம் இல்லாத ஒருவரின் மறைவு பற்றிய செய்தி நம் காதுக்கு வந்தாலே அந்த செய்தி நம்மை சில நொடிகளாவது நடுங்க வைக்கும் அல்லவா.. 
அதைவிட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? நம்மையும் மதித்து நமது கருத்துகளையும் ஒருவர் பார்வை இடுகிறாரே. சில நாட்களாக காணவில்லையே..  என்ன நிலைமையில் இருக்கிறார் என்பது தெரியவில்லையே என்கிற தவிப்புதான்.
அவர் ஆணா பெண்ணா.. எந்த நாடு .. என்ன ஸ்டேட்டஸ் என்பதெல்லாம் தெரியாது. but, அவர் safe ஆக இருக்கிறார். அது போதும். 
ஓ .. நன்றி இறைவா.. கோடானுகோடி நன்றி 
(இந்த செய்தியை படித்ததும் எனது நட்பு வட்டங்களே கூட அந்த UNKNOWN REGION ல் இருந்தது நான்தான் என்று கலாய்ப்பார்கள். மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பதையே பொழுது போக்காக வைத்திருக்கும் ஒரு சிலர், அந்த UNKNOWN REGION நானேதான் என்று எனக்கு மெயில் அனுப்பினால்கூட நான் நம்ப மாட்டேன்.
இவ்வளவு ஏன் ? அந்த பர்ட்டிகுலர் UNKNOWN REGION நபரே என் எதிரில் வந்து நின்று சத்தியம் பண்ணினால் கூட நான் நம்ப மாட்டேன். 
எங்கோ நல்லபடியாக இருக்கிறார்.. அது போதும்.
நன்றி இறைவா...