Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, October 25, 2013

Scanning of inner - heart (Scan Report Number - 091 )

                                       இப்படியும் சில அசடுகள் !
" என்னங்க, காலையில் எழும்பும்போதே தலை சுத்துதுன்னு சொன்னீங்க. இப்போ இவ்வளவு தடபுடலா எங்கே கிளம்பறீங்க ?"
"நேத்து பத்மநாபன் பேத்தி வந்து சொல்லிட்டுப் போன விஷயமா அவனைப் பார்த்து பேசிட்டு வரத்தான் " என்று பதில் சொன்னார் சங்கரன்.
"அதை போனிலேயே பேசலாமே "
"இல்லேம்மா. நேரில் போய் பேசினால்தான் ஒரு எபக்ட் இருக்கும். பத்துவை மைலாப்பூர் குளம் பக்கத்தில் வெயிட் பண்ண சொல்லி யிருக்கிறேன். பேசிட்டு சாமி தரிசனம் முடிச்சுட்டு நான் வந்து சேர நாழியாகும். எனக்காக காத்திருக்காமே சாப்பிடு. மறக்காமே மாத்திரை போட்டுக்கோ. மரகதம், நீ மாத்திரை போட்டுக்கறதுக்கு முன்னாடி மறக்காமே கதவை தாள் போட்டுக்கோ " என்ற சங்கரன் அங்கிருந்து நகர்ந்தார்.
சங்கரன் போய் சேருவதற்கு முன்பாகவே அங்கு காத்திருந்தார் பத்மநாபன்.
"என்னப்பா, என் பேத்தி விஷயமா பேசத்தானே வர சொன்னே ? " என்று கேட்டார் பத்மநாபன், சங்கரனைப் பார்த்ததுமே.
"அது எப்படி உனக்குத் தெரியும் ? " 
"நேத்து வந்து உன்னைப் பார்த்த விஷயத்தை மீனா என்கிட்டே சொன்னா. அவசியம் என்னைப் பார்த்துப் பேசியே ஆகணும்னு நீ எனக்குப் போன் பண்ணினே. எங்க வீட்டில் ஓடிட்டு இருக்கிற பிரச்சினையும் எனக்குத் தெரியும். எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்து கேள்வி கேட்டேன்.  என்ன நான் கேட்ட கேள்வி சரிதானே ? "
"இப்போ நானே ஒரு குழப்பத்தில் இருக்கிறேன் "
"என்ன ? "
"பெண்ணியம், பெண் கல்வி, பெண் உரிமை பத்திப் பேசற பத்மநாபன் எங்கே போனார் தெரியலியேன்னு "
"அப்புறம் ? "
"பெண் குழந்தைகளுக்கு படிப்பு ஒன்றுதான் மிகப் பெரிய சொத்துன்னு மேடை போட்டுப் பேசற நீ, உன்னோட பேத்தி விஷயத்தில் ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறே ? ' படிப்பும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நீ கல்யாணம் பண்ணிட்டுப் போ'ன்னு சொன்னியாமே. ஏன் ? "
"சங்கரா, நான் அவளைப் படிக்க வேண்டாம்னு சொல்லலே. டீச்சர் ட்ரைனிங்  படிக்கப் போறேன்னு சொன்னா. அதைத்தான் வேண்டாம்னு சொன்னேன். அதைத் தவிர டாக்டர், எஞ்சினீயர், லாயர் இப்படி எது வேணும்னாலும் படிக்க வைக்க நான் ரெடி "
"ஏன், உன்னோட பிள்ளை லாயர். வீட்டுக்கு வந்த   மாட்டுப் பொண்ணு டாக்டர். அதனாலேயா  ? டீச்சர் தொழிலும் நல்ல தொழில்தானே. அந்த ஜாப்க்கு நாட்டில் எவ்வளவு மரியாதை இருக்கு "
"இப்போ சொன்னே பாரு, டீச்சர்  ஜாப்க்கு நாட்டில் எவ்வளவு மரியாதை இருக்குன்னு. அந்த தொழிலுக்கான மரியாதை இவளாலே கெட்டுடக் கூடாதுன்னு தான் நான் அவளைத் தடுக்கிறேன் "
"என்ன சொல்றே ?"
"தகுதி இருக்கு , கோட்டாவில் எனக்கு இந்த கோர்ஸ்ஸில் ஈசியா இடம் கிடைச்சிடும்னு கிடைக்கிற ஒன்றை எல்லாரும் கெட்டியா பிடிச்சுக்க ஆசைப் படறதில் தப்பே இல்லைதான் . தகுதி திறமை இருந்தால் எந்த வேலையையும் செய்திடலாம். ஆனா டாக்டர்  டீச்சர் வேலைக்கு வர்றவங்களுக்கு சேவை மனப்பான்மை கண்டிப்பா அவசியம். அதுவும் டீச்சர் வேலைக்கு வருகிறவங்க மற்றவங்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமா வழிகாட்டியா இருக்கணும் . டீச்சிங் என்கிறது ஒரு புனிதமான லைன். அந்தத் தொழிலை செய்கிறவங்க எல்லாரும் அதற்குத் தகுந்த மாதிரி நடந்துக்கிறாங்களா என்பதைப் பற்றி பேச நான் தயாரா இல்லை. ஆனா, மீனாவால் நல்லவொரு டீச்சரா ஷைன்  பண்ணவே முடியாது " 
"புரியும்படி சொல்லு "
"குடம் பாலை உறைய செய்ய துளி மோர் போதும்.நான்கு மணி நேரத்தில் பாலை தயிராக்கிடும். பெண் குழந்தையை கட்டுப்பாடா வளர்க்கணும்னு நானும் என் மனைவியும்  ரொம்ப உஷாரா இருந்தோம். கிட்டத் தட்ட ஒரு பதினேழு வருஷம் நல்லாத்தான் இருந்தா. ஒரே ஒரு வருஷம் மும்பை க்கு  போய் நாங்க என்  பொண்ணு வீட்டில் இருந்திட்டு வந்தோம். இந்த ஒரு வருஷத்தில் அவளோட பழக்கவழக்கம் எல்லாம் இங்கே  தலைகீழா மாறியிருக்கு. 'வேலை வேலை'ன்னு மகனும் மருமகளும் வீட்டுக் கவனமே இல்லாமே இருந்திருக்கிறாங்க. இவ எது செய்தாலும் கேட்க ஆள் இல்லைங்கிற மிதப்பில் ரொம்ப  சோம்பேறியா மாறிட்டா. அதை விட மோசம்  அவ ஒரு சுயநலப் பிசாசா இருக்கிறதும் எதற்கும் எடுத்தெ றிந்து பேசறதும்தான்  "
"அவ படிக்க வேண்டாம்னு நீ சொல்றதுக்கு இது ஒரு காரணமா ? "
"அவளைப் படிக்க வேண்டாம்னு சொல்லலே . டீச்சர் ட்ரைனிங் தான் வேண்டாம்னு சொன்னேன் "
"அதுதான் ஏன் ? "
"டீச்சரா இருக்கிறவங்க குழந்தைகளுக்கு நல்லதொரு ரோல் மாடலா இருக்கணும். எங்க அம்மா ஒரு டீச்சரா இருந்தவங்க தான். பேச்சு செயல் மற்ற நடவடிக்கைகளில்  குழந்தைங்க முன்னாடி ரொம்ப கேர் புல்லா இருப்பாங்களாம். தினமும் மதிய வேளை சாப்பாட்டுக்கு உட்காருவதற்கு முன்னாலே தன்னோட வகுப்பிலுள்ள எல்லாக் குழந்தைகளும் சாப்பிட்டாங்களானு கவனிப்பாங்களாம்.   ஏதாவது ஒரு குழந்தை சாப்பிட லைன்னு தெரிஞ்சா உடனே தன்னோட சாப்பாடை ஷேர் பண்ணி சாப்பிடுவாங்களாம். இதெல்லாம் மற்ற டீச்சர்ஸ் சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் . ஆனா, மீனா கிட்டே இந்த மாதிரி எந்தவொரு நல்ல பழக்கமும் இல்லே. நாலு பேர் சேர்ந்து இருக்கிற ஒரு இடத்திலே ஒரு மரியாதைக்காகவாவது மற்றவர்களை சாப்பிடக் கூப்பிடணும்ங்கிற சின்ன விஷயம் கூட அவளுக்குத் தெரியலே . அந்த மாதிரியான சின்ன சின்ன நாகரிகம் கூட இவளிடத்தில்  இல்லே. ஆணவம் எடுத்தெறிந்து பேசறது  எல்லாம் அவளுக்கு சர்வ சாதாரணமா போச்சு "
" என்ன பத்து நீ, இதெல்லாம் சின்ன விஷயம் " என்றார் சங்கரன் 
"நான் ஒன்று சொல்கிறேன் கேளு. அந்தக் காலத்தில் அரச குடும்பத்துக்கு தனி மருத்துவர் சமையல்காரர்  குதிரைப் பாகன் தேரோட்டி எல்லாரும் அந்த அரண்மனையில் இருப்பாங்க. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து சேவகம் செய்வாங்க. ஆனா படிப்பு விஷயத்தில் மட்டும் குரு இருக்கிற இடத்தைத் தேடி ராஜகுமாரன் போவான் படிப்பதற்காக. ராஜா நினைச்சா அந்த குருவை தன்னோட  அரண்மனைக்கு வந்து பாடம் நடத்துன்னு சொல்லி யிருக்கலாம். அவ்வளவு பவர் இருந்தும் குரு இருக்கிற இடம் தேடி குழந்தைகளை  அனுப்ப என்ன காரணம்னா, குருமார்கள் துறவு நிலையில் இருப்பவங்க . விருப்பு வெறுப்பு இல்லாதவங்க. எளிய வாழ்க்கை வாழ்கிறவங்க. அந்த மாதிரி சூழ்நிலையில் கல்வி கற்றால்தான் பிற் காலத்தில் ராஜகுமாரன்  நல்லதொரு அரசனாக வருவான் என்கிற காரணத்துக்காகத்தான். நம்ம வீட்டில் கற்றுக் கொள் வதை விட ஸ்கூலில்தானே    நல்ல விஷயங்களைக் கத்துக்கிறாங்க. இதே மீனா குழந்தையா இருக்கிறப்போ, சாப்பிடும் முன்னாலே கை கழுவிட்டுத்தான் சாப்பிடணும்னு  நான் பலமுறை சொல்லியிருக்கி றேன். கையில் அடித்திருக்கிறேன். அவ அதை கேர் பண்ணினதே இல்லை. ஆனா திடீர்னு யாரும் சொல்லாமலே கைகால் அலம்பிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தா. எங்களுக்கு ரொம்பவும் ஆச்சரியம். அவளே சொன்ன செய்தி, சாப்பிடும் முன்னாலே   கை கழுவணும்னு  எங்க டீச்சர் சொல்லியிருக்கிறாங்க என்பதுதான். இவ்வளவு ஏன், டீவீயில் ஒரு விளம்பரம் வரும்,  படை சொறி மருந்துக்கான விளம்பரம். குழந்தை களுக்கு  உடற்பயிற்சி சொல்லிக் குடுக்கிற டீச்சர் தன் உடம்பில் அரிப்பை சொரிய குழந்தைகளும் அதே மாதிரி சொரிவார்கள். ஏனென்றால் டீச்சர் பண்ணுகிற ஒவ்வொரு விஷயமும் அவர்கள் மனதில் ஆழமா பதிஞ்சிடுது. சாதாரண பழக்க வழக்கத்தில் கூட மற்றவங்க பார்த்து விமரிசனம் பண்ணுகிற அளவுக்கு மோசமாக  நடந்துக்கிற இவ,  டீச்சர் ப்ரொபசனுக்குப்  போனா அந்த தொழிலுக்கு உள்ள மரியாதையே போயிடும். வருங்காலத் தலைமுறையில் ஒரு பகுதி ஆடுமாடு மாதிரிதான் இருக்கும். அப்படியொரு பாவத்தை நாம தேடி வைக்க வேண்டாம்னுதான் அவளை வேறு ஏதாவது படிக்க சொல்கிறோம். செய்கிற எல்லா தொழிலும் புனிதமானதுதான்.  ஒரு டாக்டர் தப்பு பண்ணினா ஒரு தனிப்பட்ட மனிதன் பாதிக்கப் படுவான்  ஒரு லாயர் தப்பு பண்ணினா யாரோ ஒரு சிலருக்குதான் நஷ்டம் . ஆனா ஒரு டீச்சர் தப்பு பண்ணினா அது ஒரு சமுதாயத்தையே பாழ் பண்ற மாதிரி. சங்கரா, நீ இன்னொரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும். அவ டீச்சர் வேலைக்கு படிக்கப் போறேன்னு சொல்றது அந்தத் தொழில் மேலே உள்ள ஆர்வத்தாலே இல்லை. பிளஸ் டூ படிச்ச பிறகு மேற்கொண்டு ஏதாவது படிச்சு வேலைக்குப் போகணும்னு நாங்க சொன்னோம்.டாகடர் இஞ்சினியர் லாயர்ன்னா  நாலஞ்சு வருஷம் படிக்கணும்.ஆனா  டீச்சர் வேலைக்கு அப்படி இல்லைங்கிறதை கணக்குப் பண்ணித்தான்  அந்தப் படிப்பை படிக்கிறேன்னு சொல்றா. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந் தே  நாட்டுக்காக உழைத்த குடும்பம் எங்க குடும்பம்னு ஒரு பேர் ஒரு மரியாதை இருக்கு. இது அவளாலே கெட்டுப் போக  வேண்டாம்னு நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு சங்கரன் முகத்தைப் பார்த்தார் பத்மநாபன்.
எந்தவொரு உணர்ச்சியும் இல்லாது மழைக்குப் பிறகு வெளிறிக் கிடக்கும் வானம் போல வெளுத்திருந்தது சங்கரனின் முகம்.

Sunday, October 13, 2013

டியர் வியூயர்ஸ்,

உங்கள் அனைவருக்கும் கலைமகள் தின நல்வாழ்த்துக்கள் !

இன்றைக்கு உங்களோடு பேச நிறையவே விஷயமிருக்கிறது. அதனால் உங்கள் வேலையை எல்லாம் முடித்து விட்டு உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இதைப் பொறுமையாகப் படியுங்கள்.
என்னுடைய சக ஊழியர் ஒருவர் அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் : " அருணா, உலகிலேயே அபார சக்தி கொண்டது மனித மூளைதான். இறப்பை தடுத்து நிறுத்த அவனால் முடியவில்லை. ஆனால் எந்த சூழலையும் ஹான்டில் பண்ணுகிற அளவுக்கு ஒரு மகா சக்தி ஒவ் வொரு மனித உடலிலும் ஒளிந்து கிடக்கிறது. ஆனால் அதை அவன் நல்ல வழியில் பயன்படுத்த மாட்டேன் என்கிறான். அதை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது " என்பார்.

ஒரு சிலர் எந்த அளவுக்கு கிரிமினலாக யோசிக்கிறார்கள் என்பதை நான் யோசித்துப் பார்த்ததின் விளைவே இந்த கட்டுரை.

என்னுடைய சுபாவம் என்ன என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் ஏதாவது ஒரு கஷ்டத்தை அனுபவித்திருந்து, அதே சூழ்நிலையில் யாராவது ஒருவர் இருப்பதை அறிந்தால், நான் துடித்துப் போய்விடுவேன். என்னால் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்பேன். அது முடியாத போது, அவர்கள் கஷ்டம் நீங்குவதற்கு  அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன்.

கோவில்களுக்குப் போகும் போது, கோவில் வாசலில்   சர்வ சாதாரண மாக காதில் விழும் வார்த்தை, " ரெண்டு நாளாக பட்டினி. ஏதாவது போடும்மா ". இந்த வார்த்தையைக் கேட்டு, உள்ளம் ரத்தக் கண்ணீர் வடிக்கும். பசி எவ்வளவு கொடுமையான விஷயம் என்பது எனக்குத் தெரியும். பசியை அளவு கோலாகக் கொண்டு பட்டினியின் பயங்கரத்தை என்னால் உணர முடியும்.

ஏதாவது வேலையாக எங்காவது போகும்போது, இத்தனை மணிக்குள் வீட்டுக்கு வந்து விடலாம்  என்ற கணக்குப் போட்டு கிளம்பிப் போயிருப் பேன். எதிர்பாராத விதமாக வீடு திரும்ப லேட்டாகி விடும். வேலையை முடித்துவிட்டு  பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும் போது பசி வயிற்றைக் கிள்ளும். கையில் பணமிருந்தாலும் தனியாக ஹோட்டலில் போய்ச் சாப்பிடப் பிடிக்காது.தெருவோரக் கடைகளில் வாங்கி சாப்பிட பிடிக்காது. பசியோடு பஸ் ஏறி வீட்டுக்கு வருவேன். பஸ் ஸ்டாப்புக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரம் ஒரு கிலோ மீட்டர்.ஆட்டோக்காரன் அநியாயத்துக்கு 25 ரூபாய் கேட்பான். கொடுக்க மனம் வராது. நடந்தே வந்து, ரெண்டு மாடி ஏறி  நான் வீட்டுக்குள் வந்து சாப்பிடுவதற்கு முன்பு யாராவது சாதாரணமாக  பேசினால் கூட நாய் மாதிரி எரிந்து விழுவேன். ( வெளியே போயிட்டு வர்றீங்களா ? இன்னிக்கு லீவா ? வண்டியை எடுத்துட்டுப் போகலியா  ? - இந்த மாதிரியான கேள்விகளுக்குக் கூட வெறுப்பாக பதில் சொல்வேன் ).  நான் வீட்டுக்குள் நுழையும் வேகத்தை வைத்தே என்னுடைய நிலையைப் புரிந்து கொள்ளும் அம்மா, என்னிடம் நேராக சொல்லாமல் ( ஏதாவது பேசினால் நாய் மாதிரி மேலே விழுந்து பிடுங்குவேன் என்பது அம்மாவுக்கு நன்றாக தெரியும் )  அதே சமயம் என்னுடைய காதில் விழும்படி  " இந்த மாதிரி முட்டாள் ஜென்மத்தை எங்கேயும் பார்க்க முடியாது. வெளியில் ஏதாவது சாப்பிட்டுட்டு வரணும்.  இல்லாட்டா ஆட்டோவிலாவது சீக்கிரம் வந்து சேரனும் " என்று சொல்வாள். பசியில் வேகவேகமாக நாலு வாய் அள்ளிப் போடும் போது  அந்த உணவு தேவாமிர்தமாக இருக்கும். நாலு வாய் உணவு வயிற்றுக்குள் போனதும் தான்  " குழம்பில் புளி கொஞ்சம்  ஜாஸ்தியா யிட்டு போலிருக்கு. அவியலில் காரம் இன்னும் கொஞ்சம் போட்டிருக்க லாம்  " என்பது போன்ற சுவை சார்ந்த உணர்வுகள் நினைவுக்கு வரும்.  

சாப்பிட்டு முடிந்து ரிலாக்ஸ்டா ஈசி சேரில் சாயும்போது " கையில் பணம் இருக்கு. வீட்டில் சாப்பாடு இருக்கு. இருந்தாலும் பசி நேரத்தில் சாப்பாடு கிடைக்காட்டா இப்படி பசியில் துடித்துப் போகிறோமே. வீட்டில் சாப்பாடு இல்லாமல் கையில் காசும் இல்லாமல் இருப்பவர்கள் என்ன மாதிரியான மன நிலையில் இருப்பார்கள் "  என்ற கேள்வியை எனக்குள்ளே கேட்டுக் கொள்வேன். இந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் எனது நினைவுக்கு வரும் ஒரு வாசகம் - " துணிச்சலும் தைரியமும் இருந்தால் உங்களால் பனிமலையில் தூங்க முடியும். எரிமலையின் முகட்டில் ஏறி நடக்க முடியும். கையில் பணமில்லாத நிலையில் உங்கள் வீட்டிலேயே கூட உங்களால் நிம்மதியாகத் தூங்க முடியாது. உலகிலேயே   வசிப்பதற்கு அபாயமான இடம் வருவாய்க்கு அப்பாற்ப்பட்ட இடம்தான் "

இந்த இடத்தில் இன்னொன்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு மிகவும் பிடித்த பாடம் தமிழ், ஆங்கிலம் சரித்திரம்.இதிலே கொஞ்சமும்   பிடிக்காத  ஒரு விஷயம் என்னவென்றால்  முதலிரண்டு பாடங்களிலும் கிராமரும் அடுத்ததில் பூகோளமும் வருவதுதான். எனக்குப் பிடிக்காது என்பதால்  அதைப் படிக்க நான் முயற்சி செய்ததே கிடையாது. நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்  போது  நடந்த ஒரு சம்பவம். ஹிஸ்டிரி டீச்சர், பூகோளப் பாடம் நடத்திக் கொண்டிருக்க நான் பாடத்தைக் கவனிக்காமல் பக்கத்திலுள்ள தோழியுடன் பேசிக் கொண்டி ருக்கிறேன் . அதைக் கவனித்த டீச்சர்  " எங்கே நீ சொல், பூமி எந்த அட்ச்சின் மீது சுழன்று கொண்டு இருக்கிறது  ? " என்று கேட்க, நான் கொஞ்சும் தயங்காமல் " வயிறு   என்ற   அட்ச்சின் மீது சுழன்று  கொண்டு இருக்கிறது " என்றேன். ஒட்டு மொத்த வகுப்பும் விழுந்து விழுந்து சிரிக்கிறது.  " உட்கார் புள்ளே " என்ற டீச்சர்,   அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார் ( எங்கள் எல்லோருக் கும் அந்த டீச்சரை ரொம்பவும் பிடிக்கும். கிளாஸ் ரூமில் அவங்க ஒரு டீச்சராக நடந்து கொண்டதே கிடையாது. ரொம்பவும் பிரென்ட்லியாக மூவ் பண்ணுவாங்க. நாம ஏதாவது ஒரு தப்பான விடையை சொன்னால் கூட , அது தப்பு என்று குத்திக் காட்டவோ திட்டவோ மாட்டாங்க. " நீ இப்படி சொன்னே. இதை யே இந்த மாதிரி சொன்னால் எப்படி வரும்னு யோசிச்சு பாரு " என்று சொல்லி சரியான விடையை நம் வாயாலேயே சொல்ல வைப்பார்கள்  ). அன்றைக்கு நான் சொன்னதைக் கேட்டு எல்லாரும் சிரிக்க, அந்த நேரம் எதுவும் பேசாத டீச்சர் என்னைத் தனியாகக் கூப்பிட்டு  " எதற்க்காக அப்படியொரு பதில் சொன்னே  ? " என்று கேட்டார்கள். அவர்களிடம் " வீட்டில், நான் என்னோட கசின்ஸ் எல்லோரும் எதையாவது பத்தி அடிக்கடி பேசி கொண்டிருப்போம். அந்த மாதிரி சமயத்தில் எங்காவது நடக்கும் திருட்டு கொள்ளை பற்றி பேச்சு வந்தால் என்னுடைய கசின் " எல்லாவற்றுக்கும் காரணம் பசி. அதுக்குக் காரணம் வயிறு. கடவுள் வயிறு என்ற ஒன்றை மட்டும் படைக்காட்டா   உலகத்தில் எந்த தப்பும் நடக்காது. திருடன் பிடிபட்டால் அவனுக்கு வயிறு நிறைய சோறு போட்டு ஏதாவது வேலை வாங்கணும்"னு சொல்வார். " வசதியாவன் கூட என்னென்ன ப்ராட் வேலை எல்லாம் பண்றான்"னு நாங்க கேட்கும்போது ' அவன் கையைக்காலை ஒடிச்சு அவனை இருந்த இடத்தை விட்டு நகராதபடி பண்ணனும்  . ஆனால் தினமும் வயிறு நிறைய ஒரு வேளை உணவை மட்டும்  கொடுக்கணும் " என்று சொல்வார். அவரிடம் நாங்க  "வயிறு இல்லாவிட்டால் உலகத்தில் எந்த இயக்கமும் கிடையாதுன்னா, இனிமே நாம,  உலகம் வயிறு என்கிற அட்ச்சின் மீது தான் சுத்துதுன்னு சொல்லிக்கலாமா ? " என்று கேட்பேன். இன்றைக்கு நீங்க அதே கேள்வியைக் கேட்டதும், நான் உளறிட்டேன் " என்றேன்.
" இல்லே நீ சரியாகத்தான் சொல்லி இருக்கிறே. நீ போ " என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

என்னுடைய சிறு வயதிலிருந்தே " பசி உணவு வயிறு "    இந்த மூன்றையும் பற்றிய எண்ணங்கள், உணர்வுகள் என்னுள் வளர்ந்து வந்திருக்கிறது. பட்டினி என்பது எவ்வளவு பயங்கரமான  விஷயமோ அதே போல  இளமையில் வறுமை என்பதும் கொடூரமான ஒன்றுதான். "எங்களுடைய சிறு வயதில் நாங்க கஷ்டப் பட்டோம்"னு என்னுடைய நட்பு வட்டத்திடம் நான் சொல்லும் சந்தர்ப்பத்தில் எல்லாம்  " உங்க அப்பா கவர்மெண்ட் ஜாப்பில் இருந்திருக்கிறார். உங்க அம்மா வசதியான வீட்டிலிருந்து வந்தவங்கனு சொல்றே. பிறகு ஏன் கஷ்டப் பட்டீங்க ? " என்று கேட்பார்கள்.அவர்களிடம் "எங்க அப்பாவுக்கு மூன்று வருடத்துக் கொரு முறை ட்ரான்ஸ்பர்  ஆகும். அந்த சமயங்களில் நாங்க ஸ்கூலில் படிச்சுட்டு இருப்போம். நடுவில் படிப்புக்காக ஸ்கூலை மாற்ற முடியாது. புது இடத்தில் வேலையில் சேர்ந்தாலும் அப்பாவுக்கு  சம்பள பில் பாஸ் ஆக குறைந்தது மூணு மாசமாவது ஆகும். அப்பா ஒரு இடம். நாங்க ஒரு இடம்  என்று ரெட்டை செலவு. பணம் கையில் இல்லாமல் ரெட்டை செலவு என்றால்  கஷ்டம் தானே. ஆனால் நாங்கள் எந்த சூழ்நிலை யிலும் பட்டினி கிடந்ததில்லை. அப்பாவுக்கு சம்பளம் வர லேட் ஆனால் அம்மாவின் நகையோ அல்லது வீட்டிலுள்ள பாத்திரமோ விற்பனைக்குப் போகும். அவ்வளவுதான் " என்பேன். எங்கள் அப்பாவுக்கு நாங்க ஐந்து பெண் குழந்தைகள். ஒரே வீட்டில் ஐந்தும் பெண்ணாப் போச்சேன்னு ஊரும்  உறவும் கவலைப்படும். ஆனால் எங்க அப்பா கவலைப் பட்டதே கிடையாது. வறுமையிலும் எங்களை ராஜகுமாரிகள் மாதிரிதான் வளர்த்தார்.அதற்காக எங்கள்  உறவுகளின் வெறுப்பை சுமந்திருக்கிறார். நடந்தால் குழந்தைகளுக்கு கால் வலிக்கும் என்று பள்ளிக்கு அருகில் தான் வீடு பார்ப்பார். ஒருநாள் அலுவலக நேரத்தில் திடீரென்று பெர்மிசன் கேட்டு விட்டு வீட்டுக்கு கிளம்பி இருக்கிறார். ஏனென்று மற்றவர்கள் கேட்க  "கிளம்பி வர்றச்சே வாசலில் ஒரு குண்டூசி கிடக்கி தைப் பார்த்தேன். பார்த்ததும் தூக்கி எரிஞ்சிருக்கணும். எதோ நினைவில் வந்துட்டேன். பிள்ளைங்க ஓடிவந்து காலில் குத்திக்கக் கூடாது" என்று சொல்லி இருக்கிறார். நேரம் கெட்ட நேரத்தில் அப்பாவை  சற்றும் எதிர் பார்க்காத அம்மா, என்ன எது என்று விசாரிக்க ஆபிசில் சொன்ன அதே பதிலை அப்பா சொல்ல, " பொம்பளைப் பிள்ளைகளை  இப்படி பொத்திப்பொத்தி வளர்க்கிறீங்க. அதுக எங்கெங் கு  போய்  எவன் வீட்டில் சீரழியப் போகுதுகளோ தெரியலை  " என்று சொல்லியிருக்கிறாள். இந்த விஷயம் வேறொரு சூழ்நிலையில் வேறொரு கால கட்டத்தில்  அப்பாவின் நண்பர்களும் அம்மாவும் சொல் லித்தான்  எங்களுக்குத் தெரியும். அப்பா எங்களுக்கு வேண்டியதை செய்யும் போதெல்லாம் " பொம்பளைப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் வேண்டாம். போகிற இடங்களிலும் இதை எதிர்பார்க்கும். கிடைக்காட்டா வருத்தப்படும் " என்பாள் அம்மா. " நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோச மாக இருக்கட்டுமே என்பார் அப்பா.
சிறு வயதில், சைக்கிள் ஓட்ட   கற்றுக் கொள்ள எனக்கு ஆசை. "கூடவே கூடாது. கீழே விழுந்து கையைக் காலை உடைச்சுக்குவே " என்பார் அப்பா. அதையும் மீறி கற்றுக் கொண்டேன் அப்பாவுக்குத் தெரியாமலே. அப்பா இறந்த பின்பு ஆபீசுக்கு சைக்கிளில் போக ஆரம்பித்தேன். டூ வீலர் ஓட்ட ஆரம்பித்த போது " இப்போ மட்டும் அப்பா உயிரோடு இருந்தால் எப்படி  பயந்து போவார்" என்பதைக் கற்பனை செய்து பார்த்தேன். என்னுடைய சக ஊழியர்கள் " அருணா, டூ வீலரில் இந்த அளவு  வேகம் வேண்டாம். ஜென்ட்ஸ், நாங்க போகத் தயங்கிற இடத்தில் கூட ரொம்ப அசால்டா அவ்வளவு வேகமா போறீங்க" என்பார்கள்.இன்னொரு  நண்பர் " உங்களுக்குப் பின்னாலே வந்த நான்  சிக்னல்க்காக நிற்கிறேன். நீங்க போகிற ஸ்பீடைப் பார்த்து கான்சர் இன்ஸ்டிடுட் முன்னாலே நிற்கிற போலீஸ்காரன் அசந்து போய் நிற்கிறான். நான் கூட நினைச்சேன் அவன்கிட்டே உங்க அட்ரசைக் குடுக்கலாமான்னு. ஏதாவது ஒண்ணுன் னா  என்ன செய்வீங்க  " என்று சீரியசாகக்  கேட்டார்  . "ஏதாவது ஒன்னு ஆனா, நல்லவேளை, இதை எல்லாம் பார்க்காமே நம்ம அப்பா முதலி லேயே போயிட்டார்ன்னு  நான் நினைச்சுக்குவேன் " என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். ஒட்டு மொத்த ஆபீசும் எனக்கு அடிக்கடி சொல்லும் அட்வைஸ் " இவ்வளவு வேகம் வேண்டாம் " என்பதுதான் . இதிலும் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இன்றைக்கும் நான்  டூ வீலரில்  யாருடனாவது போகும்போது ( அவங்க ஓட்டுவாங்க. நான் பின்னால்  உட்கார்ந்திருப்பேன்) உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் போவேன். பின்னால் உட்கார்ந்து போக அப்படியொரு பயம் . ஆனாலும் போவேன் .    

சினிமா பார்க்கும்போது டீவீ  சீரியல் பார்க்கும்போது சிலர் அழுவதை நான் பார்த்திருக்கிறேன். ( உங்களில் யாருக்காவது அந்த அனுபவம் உண்டா ? ) அதை வெளிப்படையாகக் கிண்டலும் பண்ணுவேன். ஆனால் சன் டீவீயில் இப்போது வரும்  தெய்வ மகள்  சீரியல் பார்க்கும்போது  நான் அழுதிருக்கிறேன். அந்தக்  கதையில் சத்யாவின் அப்பாவாக வரும் கேரக்டர் அப்படியே  எங்கள் அப்பாவை நினைவு படுத்துவதால். சில சமயங்களில் அதில் வரும் வசனம் கூட எங்கள் சிறுவயதை நினைவு படுத்தியதால். "இந்த சீரியலுக்கு  கதை  எழுதுகிறவன் ஒருவேளை ஏதாவது ஒரு காலகட்டத்தில் நம்ம வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்திருப்பானோ. நம்ம வீட்டுக் கதை, நம்ம அப்பா மாதிரி கதை போகிறதே" என்று இன்று வரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன் .   கதையில் வரும் கேரக்டர் மூன்று பெண்களைத்தான் வளர்த்தார். எங்கள் அப்பா ஐந்து பெண்களை வளர்த்தார். இந்த அனுபவத்துக்குப் பிறகு நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை : சினிமா பார்க்கும் போது டீவீ  சீரியல் பார்க்கும்போது சிலர் அழுகிறார்கள் என்றால் அது பார்க்கிற காட்சியை நினைத்து அல்ல . அந்த காட்சியை தங்கள் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால்தான் என்பதை. பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதே தவறு என்ற எண்ணம் கொண்ட உறவுகள்  ஊரினர் இருந்த காலத்தில் எங்களை  படிக்க வைத்தார். வேலைக்கு அனுப்பினார். இன்று, எங்கள் வீட்டுக் குழந்தைகள் சில சமயம் அவர்கள் படிக்கிற, தெரிந்து கொண்டி ருக்கிற விஷயங்களைப் பற்றி பெருமையாகப் பேசி  எங்களை மட்டம் தட்டுவார்கள்  ( விளையாட்டாகத்தான் ). அவர்களிடம் " நீங்க படிக்கிறது பெரிய விஷயமே இல்லை. நீங்க எது படிக்கணும்னு சொல்றீங்களோ அதைப் படிக்க வைக்க, பணம் கட்ட நாங்க தயாரா இருக்கிறோம். எல்லா எதிர்ப்பையும் மீறி, வசதியில்லாத சூழ்நிலையிலும்   உங்க தாத்தா   எங்களைப் படிக்க வச்சார். நாங்க படிச்சு முடிச்சோம். அதுதான் பெரிய விஷயம் " என்போம்.   

இப்போதெல்லாம் லாட்டரி, வின்னர், கோடிக்கணக்கில் பரிசுப் பணம் போன்ற செய்திகள் எல்லோருக்கும் மெயிலில் வந்தபடி இருக்கின்றன. ஒரு சமயம் எனக்கும் இதுபோன்று  நிறைய மெயில் வந்தது. முதலில் கண்டு கொள்ளாமல் இருந்த நான், பிறகு பதில் அனுப்ப ஆரம்பித்தேன். எனக்குப் பணம் கொடுக்கப் போவதாக கலர் கலர் ரீலாக விடுவார்கள். நானும் அதை நம்புவது போல பதில் அனுப்புவேன். கொரியர் சார்ஜ், அது இதுன்னு கணக்குப்போட்டு, அந்த பணத்தை நான் தர வேண்டும் என்று ஒரு மெயில் வரும். அது வந்ததும்  " நீ மற்றவர்களை  ஏமாற்றி  பணம் சம்பாதிக்க  மெயில் அனுப்பினே. டைம் பாஸ்  பண்ண நான் பதில் அனு ப்பினேன். அவ்வளவுதான் " என்று பதில் அனுப்புவேன். அத்தோடு அந்த டீலிங் நின்று விடும்.

ஒரு நாள் எங்கள் வீட்டுப் பையனிடம், மெயில் பற்றிய முழு விவரமும் சொல்லாமல்,  பொதுவாகக் கேட்பதுபோல்  " எதனால் இப்படி மெயில் அனுப்பி ஏமாற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்கு அப்படி  என்ன லாபம் ? " என்று கேட்டேன். " பைசா செலவில்லாமல் இருந்த இடத்தில் இருந்த படியே  ஒரு மெயிலை வச்சே ஆயிரம் ஆயிரமா சம்பதிக்கிறார்களே, அது லாபந்தானே " என்றான்.
"இந்த அளவுக்கு கம்ப்யூடர் நாலெட்ஜ் இருந்தால் கண்டிப்பா படிச்ச வங்களா இருப்பாங்க. பிறகு ஏன் ஏமாற்றுகிறார்கள் ? " என்று கேட்டேன்.
" படிச்சிருப்பாங்க. ஆனால் வேலை கிடைச்சிருக்காது. அல்லது வெளி நாட்டில் இருந்து இங்கே படிக்க வந்திருக்கலாம். செலவை சமாளிக்க இந்த மாதிரி செய்யலாம்  "  என்றான்.
"இப்படி ஏமாத்திப் பிழைக்கிற  இவனுக  எல்லாம் பள்ளிக்கூடம் போய்   படிச்சிருக்கவே வேண்டாம்  " என்றேன் .
" நீ வேலையில் இருக்கிறே. ஒண்ணாந் தேதியானா உனக்கு சம்பளம் வந்துடும். இப்போ உனக்கு வேலை இல்லை. கையில் கால் காசு கூட இல்லை என்று நீ கற்பனை பண்ணிக்கோ. அடுத்த வேளை உனக்கு சாப்பாடுவேணும்.அதை எப்படி சமாளிக்கிறதுன்னு கொஞ்சம் நினைச்சுப் பாரு. அப்பத்தான் உன் மூளை என்னென்ன மாதிரி எல்லாம்  கிரிமினலா யோசிக்கும்னு உனக்குத் தெரியும் " என்றான்.
அவன் சொன்னபடியே செய்து பார்த்தேன். அப்போதுதான் இந்த மாதிரி விஷயங்களில் படிப்பு, தர்மநியாம் ஜெயிக்காது.வயிறுதான் ஜெயிக்கும். அதற்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த கான்வர்சேசன்  நடக்கும்போது ஏற்கனவே  ஒரு பார்ட்டி என்னோடு டீலிங்கில் இருக்கிறான். அவனோட பேரை வச்சு அவன் நைஜீரியா அல்லது ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்தவன் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் பலசரக்கு சாமான் கட்டி வந்த பேப்பரில் நைஜீரியா நாட்டில் சில இடங்களில் உள்ள வறுமை பற்றி, மக்களின் எலும்புக் கூடான  நிலை பற்றி செய்தியும் படமும் இருந்தது. இது என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. உடனே அவன் கேட்ட 19,500 ரூபாயை அவன் சொன்ன அக்கௌன்ட் நம்பரில்  கட்ட நான்  தயாராக இருப்பதை சொல்லி விட்டு,  அவன் சொன்னபடி பணத்தைக் கட்டி விட்டேன்.   நான் பணம் கொடுத்தேன். அதை வாங்கி விட்டு அவன் ஓடிவிட்டான் என்றால் அதனால் எனக்கு எந்தவிதமான  வருத்தமும் வந்திருக்காது. அது ஏமாற்று வேலை என்பது தெரிந்துதானே நான் பணம் கொடுக்கிறேன். ஆனால் அவன் அதோடு நிற்கவில்லை. அன்று இரவு எனக்கு போன் பண்ணி,  லண்டனிலிருந்து செக்கை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருவதாக சொன்னான் . சரி என்றேன். மறுநாள் காலை  5 மணிக்கே என்னோட  செல் அலறியது. இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது என்று நினைத்தபடி போனை  எடுத்தேன். செக்கை எடுத்துக் கொண்டு இந்தியா வந்துட்டேன்.கஸ்டம்சில் என்னை வெளியே விட மாட்டேன் என்கிறார்கள். மேற்கொண்டு 98,000 ரூபாயை அதே அக்கௌன்ட் நம்பரில் உடனே போடு என்றான் .( இதிலே ஒரு வேடிக்கை என்னவென்றால், இவன் முதல் நாள் இரவு  10 மணிக்கு லண்டனில் ப்லைட் ஏறி, மறுநாள் அதிகாலையில் 5 மணிக்கு முன்பாக இந்தியா வந்து விட்டான். எனக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை). காலை 5 மணியிலிருந்து மாலை 3 மணிவரை  எங்களுக்குள் பேச்சு வார்த்தை நடந்து கொண்டே இருக்கிறது. அதையெல்லாம் இப்போது  எழுத ஆரம்பித்தால் இந்த கட்டுரை இன்னும்  நாலு பக்கத்துக்குப் போகும்.  இவன் எவ்வளவு தூரம்தான் போவான் பார்க்கலாம் என்ற நினைப்பில் நான் அவனை நம்புவது போலவே பேசிக் கொண்டிருக்கிறேன். பேச்சு வார்த்தையின் போது  " என்ன பொம்பளை நீ ? " என்றொரு வார்த்தையை விட்டு விட்டான். உடனே நான் " நீ ஒரு பிராட் என்பது எனக்குத் தெரியும். தெரிந்தே பணம் கொடுத்தேன். உன்னோட மெயிலை  செக் பண்ணு " என்றேன். அதில் நான் அவனுக்கு என்ன காரணத்துக்காக பணம் கொடுத்தேன் என்பதை ( அவன் நைஜீரியாவில் இருந்து படிப்பு அல்லது வேலைக்காக  வந்திருக்கலாம் என்பதையும், தேவைகளை சமாளிக்க ஏமாற்று வழியில் நாடகம் ஆடுவது தெரியும் என்பதையும் குறிப்பிட்டு, பிழைப்புக்காக எங்க நாட்டுக்கு வந்தவன் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காக பணம் கொடுத்தேன் என்பதையும்   சொல்லி யிருந்தேன். அன்றைய தினமே " சாரி " என்று சொல்லி எனக்கு மெயில் வந்தது. நீ கேட்டவுடன்  உனக்கு நான் கொடுத்த 19500 ரூபாயை மனதில் வைத்துக் கொண்டு நான் வசதியான நிலையில் இருப்பதாக நினைத்து நீ என்னை ஏமாற்ற முயற்சி பண்ணியிருக்கலாம். " அவள் விகடன் " என்ற பத்திரிக்கைக்கு கோலம் செலெக்ட் செய்யும் வேலையை நான்  சில வருடங்கள் செய்தேன். அதற்காக அவர்கள் கொடுத்த பணம் சிறுக சிறுக சேர்ந்து இன்று 20,000 வரை வந்திருந்தது. அதைதான் நான் உனக்குக் கொடுத்தேன். நான் ஒரு மிடில் கிளாஸ். அதுவும் லோயர் மிடில் கிளாஸ். எனக்கும்   தேவைகள் இருக்கு. அதற்காக நான் மற்றவங்களை ஏமாற்ற முயற்சி பண்ணலே. என்னுடைய தேவைகளை ஆசைகளை கண்ட்ரோல் பண்ணிக் கொள்வேன்.  உன்னை என் சகோதரனாக நினைத்து உனக்கு  உதவி செய்ய நினைக்கிறேன். நீ  சரி என்று சொன்னால் உன் அக்கௌண்டில்  மாதம் 1000 ரூபாய் தர நான் ரெடி. ஆனால் அந்த 1000 ரூபாயை மேனேஜ் பண்ண நான் என்னுடைய அத்யாவசிய செலவுகளைக் கட்டுப் படுத்த வேண்டும். இருந்தாலும் தர நான் ரெடி என்று அந்த மெயிலில் சொல்லியிருந்தேன் . ஆனால் அந்த ஆயிரம் ரூபாயை வாங்க  அவன் மறுத்து விட்டான். (அவனோட பெயர் குலாபக் டார்ஜான் )

மேலே உள்ள அத்தனை விஷயமும் நிறைய பேருக்கு தேவை இல்லாத ஒன்று  / அல்லது யாருக்குமே தேவையில்லாத ஒன்று. இருந்தும் ஏன் இதனை சொல்கிறேனென்றால்  " நாட்டிலுள்ள எல்லாத் தப்புகளுக்கும் வறுமைதான் தாயகம். அது யாருக்கும் வரக் கூடாது " என்பதில் நான் மிகவும்  நம்பிக்கை கொண்டிருப்பதால்தான். அடிக்கடி நான் சொல்லும் வார்த்தை :: " எந்த ஒரு நிறுவனமும் தப்பு செய்யும் ஒரு ஊழியனுக்கு வேலை இழப்பு என்ற தண்டனையை  மட்டும் தரக் கூடாது. தன்னுடைய தேவைக்காகத்தானே அவன்  ஒரு தப்புப் பண்ணியிருக்கிறான். அதற்கு தண்டனை வேலை இழப்பு என்றால், அது அவனை மேலும் மேலும் குற்றம் செய்ய சொல்லும் "

அமெரிக்க அரசியல் விவகாரம், அரசு  ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுமுறை பற்றி செய்தி வெளியான  அன்று, அந்த முடிவானது  அந்த நாட்டு அரசியலுக்கு  கொஞ்சமும் சம்பந்தமில்லாத மற்ற நாட்டு சாதாரண மக்களை கூட  எப்படி எல்லாம் பாதிக்கும் என்பதை நினைத்து பயப்பட்டேன். அதன் விளைவே சில நாட்களுக்கு முன்பு வெளியான " ( பொது ) நலம் ; ( சுய ) நலமறிய ஆவல் ! "  
இந்தக் கதை வெளியான ஒரு வாரம் கழித்து, எனக்கு டொனேசன் கொடுக்க விரும்புவதாக ஒரு மெயில் வந்தது . எதற்க்காக  டொனேசன் என்று கேட்டு மெயில் அனுப்பினேன். அதற்க்கான பதில் கீழே உள்ளது.
Congratulation your email id was randomly selected by Me and my Wife Adrian and Gillian Bayford is Donating One Million Great British Pounds from their willing from Euro Million to You send below details for claims.

Name:
Address:
Mobile:
Age:
Country:
kindly View Link for more Information. www.bbc.co.uk/news/uk-england-19254228.
இதற்கும் பதில் அனுப்பினேன். அதற்க்கான பதில் கீழே உள்ளது 

kindly View Link for more Information. www.bbc.co.uk/news/uk-england-19254228.

Dear: Beneficiary,

This is a life time opportunity and 100% legitimate. My Wife and I have decided to make sure this is put on the internet for the world to see. You see after taken care of the needs of our immediate family members and friends, we decided to donate £ 1.000,000.00 pounds sterling each to other unknown 5 individuals around the world in need, the local fire department, the Red Cross, and some other organizations in Asia, Europe and Africa.because we are on vacation in India ,  I am happy to inform you that we have forwarded your details over to the management of the Elite Courier Service in India.

I am also pleased to inform you that we have issued out a cheque in your name through our attorney, has now been deposited with Elite Courier Service in India the Accredited courier company to deliver your bank draft to you in your country. Please remember that the objective of this donation to you is to make a notable change in the standard of living of the less privileged people all around your region before the end of the year 2013.

Recently,i discovered a huge number of double claims due to beneficiary's informing close friends relatives, attorneys and third parties about their donations. As a result, these close friends, relatives, attorneys and third parties tried to claim the donation sum on behalf of the real recipients thereby causing problems for the courier to deliver the draft.

 Please be informed that any double claim discovered in the disbursement process, will certainly result to the cancellation of that particular donation, making a loss for both the double claimer and the real beneficiary, as it is taken that the real recipient was the informer to the double claimer about the donation. So you are hereby advised to keep your information strictly confidential until your claim has been fully recovered.

You are required to make contact with the delivery company as soon as possible, and discuss with them how your cheque would be delivered to your home address in your country and you will be informed about the cost of delivery by the courier company in charge of your certified cheque.

You will need to contact 
Elite Courier Service Ltd which is our accredited delivery company.You are to reach them with the information below.

NOTE: You do not have much time to get this done. I advise you to act fast and get in touch with Mr Michael Anderson of Elite Courier Service Ltd .His contact information is stated below:


CONTACT INFORMATION:
ELITE COURIER SERVICES
Mr. Michael Anderson (Dispatch Officer)
No. 365 Erekere Puram Layout,
Bannerghatta Road India Pin - 560013.
PHONE NUMBER: +91 9987392861
CONTACT COURIER E-MAIL: elitedeliverycourier247service@live.com

You are to contact them with the following information within the next 24 hours;
Note This Form Must be filled

1. Full name:
2. Address where you would want the parcel delivered to:
3. Telephone Number/Fax Number.
4.Country:
5.Occupation

Please note that upon your contact with Mr. Michael Anderson you are to provide him with your Donation Code Number [Bayford/148/2013/BTB] so that he can verify your identity with the details we sent over to their office earlier on today. Please endeavor to keep us fully informed on all developments with the courier company so that i can also monitor the delivery process through a feedback from you.

We look forward to your prompt response, should you have any questions, do not hesitate to contact me as soon as you possibly can.

Your follow up and full cooperation is highly anticipated.

We Wish you Good-luck as you receive your benefit

Regards
Adrian and Gillian Bay-ford

அவர்கள் சொன்னபடி கொரியர் சர்வீஸ் க்கு பதில் அனுப்பினேன் . அவர்கள் பதில் :

Elite Courier  Service Limited 24 Hours Service.

Address: No. 365 Erekere  Puram Lay Out, 

Bannerghatta Road India Pin -560013.

Telephone: +91 9987392861

DATE: 13/10/2013

                                                 Dear: KUMARI S. ARUNACHALAM

 

 

You are Welcome to Elite Courier Limited here in India premier express logistics provider. We are proud to maintain the fastest growing courier fleet in the country allowing us to service our expanding range of clients including leading financial institutions, blue chip companies, public sector organisations, political parties, and personal users. 

 

Your parcel with containing your bonded cheque, original copies of your certificate and security documents have been picked up from Mr & Mrs Gillian & Adrian Bay-ford office and is ready for dispatch.

 

You can now begin the final step of the claims process, which is the transferring of your cash prize to you via a certified Cheque to the tune of the amount donated to you. With regards to this, there are three options open to you, you are required to select the more convenient of the three and immediately get back to us for adequate instruction

 

The options, together with their associated conditions are presented below:

 

 Express Delivery (24 hours):

Courier Charges------------------200. 00$

 

Administrative Charge------------90.00$

 

Insurance Cover Fee--------------410.00$

 

Value Added Tax------------------100. 00$

_____________________________ 

 

Total 850.00 Dollars

_____________________________ 

 

 

Courier Regular (3-4 Days):

Courier Charges------------------101. 00$

 

Administrative Charge------------40.00$

 

Insurance Cover Fee--------------310.00$

 

Value Added Tax------------------50. 00$

______________________________ 

 

Total 501.00 Dollars

______________________________ 

  

Courier Economy (4-5 Days):

Courier Charges------------------89.00$

 

Administrative Charge------------40.00$

 

Insurance Cover Fee--------------210.00$

 

Value Added Tax------------------50. 00$

_____________________________

 

Total 389.00 Dollars

_____________________________

 

Note: In order to proceed further with the shipment of your parcel, we want you to choose from the three options, and get back to us with the option you have chosen. The cost of delivery fees for any option you choose must be paid to this office before we can render any service to our customers abroad. Be rest assured that you will have access to your package in the speculated time of maximum delivery hour which ranges from 48 to 96 hours once you meet up with our payment requirements, then we shall post your package with your choice of delivery option and immediately send the tracking number to you, for your verification and then track your parcel.

 

The charges are a little high because of the insurance cover we have undertaken in case of loss,damage or theft of your highly sensitive consignment content. We assume all responsibilities in case of any eventualities. International Elite Courier Limited do not allow Cash on delivery(C.O.D) payment must be made to this office before shipment can commence. Respond to this mail by making a selection from the three options above in receipt of your mail you will be directed on how the payment should be sent to us.

 

We sincerely hope the above information is helpful to you and would like to thank you for giving us this opportunity to serve your needs. Should you have any further queries, feel free to write to us. Till we hear from you again, take care!

Congratulations once again and have a nice day.

 

Regards,

Pastor Michael Anderson (Dispatch Officer)

PHONE NUMBER: +91 9987392861

இந்த  மெயில்க்கு நான் அனுப்பின பதில் : கோடிக்கணக்கில் ஒருவருக்குப் பணம் கொடுக்க விரும்புகிற ஒரு மனிதர், கொரியர் சர்வீஸ்க்கு  பணம் தர மறுப்பாரா ? அதை அவரே கொடுக்கட்டும் என்று சொல்லியது அல்லாமல் நன்கு டோஸ் விட்டிருந்தேன்.

இன்று காலையில் ஒரு போன் கால். அமெரிக்கா அரசியல் பற்றி கதை எழுதி இருந்ததைப் பாராட்டி  அமெரிக்காவில் உள்ள அத்தனை பெரும் சேர்ந்து  உனக்கு பத்து கோடி இந்தியன் ரூபாயை தரப் போகிறார்கள் . இன்கம் டாக்ஸ் கூட நீ கட்ட வேண்டாமாம். அதை அவர்களே கட்டி விடுவார்களாம் என்று.  இதை நம்பும் அளவுக்கு நான் என்ன முட்டாளா ? இருந்தாலும்  " சரஸ்வதி பூஜை அன்று காலையில் நல்ல விஷயம் சொல்கிறாய் . உன் வாக்கு பலிக்கட்டும் " என்றதும் போன்  கட் ஆகிவிட்டது. " என்னப்பா என்னோட அக்கௌன்ட் நம்பர் என்னனு தெரிஞ்சுக்காமே விட்டுட்டியே " என்று சொல்லி அவனைக் கலாய்க்கலாம்  என்று நினைத்து அந்த நம்பரைக் கூப்பிட்டால்  " சாரிங்க . இது பி சி ஒ என்று பதில் வந்தது 

எனக்கென்ன சந்தேகம் என்றால் , எனக்கு வந்த மெயில்க்கும் போனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்பதுதான் 

ஒரு இடத்திலுள்ள ஒரு பிரச்சினையை அதனால் ஏற்படும் பின் விளைவுகளை வைத்து  ஒரு கதை எழுதினால் அதை வைத்து  ஒரு சிலர் என்னமாக விளையாடுகிறார்கள்  என்று நினைத்து ஆச்சரியப் பட்டேன் . அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் .

அமெரிக்க அரசியல் , இங்கிலாந்து நாட்டுப் பணம் , அது ஒரு இந்தியப் பெண்ணுக்கு ! அடா அடா அடா .. உலக ஒற்றுமை எப்படி ஐக்கியம் ஆகிறது.
ஒரு ஏமாற்று வேலைக்காக இத்தனை நாடுகளை இணைக்கிற மனித மூளை  உலகம் ஒன்று பட உருப்படியாக ஏதாவது செய்யலாமே .

நன்றி .. விடை பெறுகிறேன் .



Friday, October 11, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 90 )

               பழகும் விதத்தில் பழகி பார்த்தால் .... ?
" இந்திரா, வாசலில் மாடிப் படிக்கட்டுப் பக்கத்தில் தண்ணீர் சிந்தி இருக்கு. ஒரு துணியைப் போட்டு துடைத்து ஈரத்தை சுத்தம் பண்ணிடு " என்றான் ராஜேந்திரன் அவசரமான குரலில்.
" நீங்க இன்னும் போகலியா ? கார் வந்துச்சு. அப்பா ஏறிப் போயிட்டார்னு வாசு சொன்னானே. வரவர அவனுக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சு. காலைலேயே கிளம்பிப் போகணும். சீக்கிரம் போகணும்னு என்னைப் போட்டு அந்தப் பாடு படுத்துனீங்க. இப்போ இங்கே நின்னுட்டு இருக்கிறீங்க ? " என்று பாத் ரூமுக்குள் இருந்தபடியே குரல் கொடுத்தாள் இந்திரா 
"நேரம் ஆயிட்டுதான். ஒரு ரெபரென்ஸ் புக். அது  தேவைப் படாதுன்னு நினைச்சு எடுத்து வச்சுக்கலே. எதற்கும் இருக்கட்டும். எடுத்து வச்சுக்கலாம்னு ஆடிட்டர் சொன்னார். அதான் எடுக்க வந்தேன். நல்ல வேளை , நீ கதவை லாக் பண்ணாமே குளிக்கப் போனே. இல்லாட்டா நீ வரும்வரை நான் வெயிட் பண்ண வேண்டியதிருக்கும். ஆமா .. வாசு எங்கே ? "
" உங்க தலை அங்கே திரும்பினா போதும். இவன் உடனே விளையாடக் கிளம்பிடுவான். ஸ்கூல் போகணும்கிற எண்ணமெல்லாம் துளிக்கூடக் கிடையாது. வரட்டும் அவன். வீடு திறந்திருக்கு என்கிற நினைப்பு கூட இல்லாமே வீட்டைத்  திறந்து போட்டுட்டு வெளியில் போயிருக்கிறான் வர வர துளிக் கூட பயமில்லாமே போச்சு "
" சரி விடு. ஸ்கூல் போற டைம்மில் அவனை டென்சன் பண்ணாதே. நீ குளிச்சு முடிச்சுட்டு வர்ற வரை நான் வெயிட் பண்றேன் "
இதற்குள் வாசலில், மேல் போர்சன் பரந்தாமனின் குரல் கேட்டு வெளியில் வந்தான் ராஜேந்திரன். இவன் தலையை கண்டதுமே " ஏன் சார், உங்களுக்கு முன்னே பின்னே அபார்ட்மெண்டில் குடியிருந்து பழக்கம் கிடையாதா ? மாடிப் படிக்கட்டு, வாசல், விரான்டா எல்லாமே காமன் ஏரியா. என்னவோ இந்த பிளாட் உங்க ஒருத்தருக்குத்தான் சொந்தங்கிற மாதிரி வாசல் பூரா தண்ணீரைக் கொட்டி வச்சிருக்கீங்க. குழந்தைங்க இருக்காங்க. பெரியவங்க வயசான இருக்காங்க. கீழே விழுந்து வச்சா யார் சார் பார்க்கிறது ? தெருவிலே கூவி விக்கிறவங்க யாரையும்  போர்சனுக்குள் விடக்கூடாதுங்கிற  ரூல் உங்களுக்குத் தெரி யும் தானே ? அன்னிக்குப் பார்த்தால் பழம் விக்கிவனை மாடிக்குக் கூப்பிடறீங்க. உங்க மனசில் என்னதான் நினச்சிட்டு இருக்கீங்க. சின்ன சின்ன விசயத்தில்  கூட டிசிப்ளின் இல்லாத நீங்களெல்லாம் எப்படித் தான் ஒரு நிர்வாகத்தில் குப்பை கொட்டறீங்களோ  தெரியலை " என்று இரைந்தார்.
" என்னங்க ? " என்று கேட்டபடி அரைகுறையாக புடவையை சுற்றியபடி வெளியில் வந்த இந்திராவை,அமைதியாக இருக்கும்படி பார்வையாலே எச்சரித்தான் ராஜேந்திரன்.
பிறகு பரந்தாமன் பக்கம் திரும்பி " சாரி சார். இனிமே இப்படி நடக்காமே பார்த்துக்கிறேன் " என்றான் 
"நடந்தால் நான் சும்மா விட மாட்டேன். அதுவும் உங்க  நினைவில் இருக்கட்டும் " என்று சொல்லிவிட்டு பரந்தாமன் மாடிப்படி ஏற, வீடு துடைக்கும் மாப்பை   எடுத்து வந்து வாசலை சுத்தம் செய்ய ஆரம்பி த்தான் ராஜேந்திரன் 
அதுவரை அங்கு நடந்ததை படிக்கட்டில் நின்று  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வாசு " அப்பா. நீங்க இப்படியொரு பயந்தாங்கொள்ளியாக இருப்பீங்கன்னு நான் கொஞ்சமும்  நினைக்கலே. கத்திட்டுப் போனாரே அந்த அங்கிள், அவங்க வீட்டு அக்கா குடம் எடுத்துப் போகச்சே கால் தடுக்கி விழப் பார்த்தாங்க. நீங்கதான் ஓடிப்போய் அவங்க கீழே விழாமே  பிடிச்சீங்க. அவங்க வீட்டுக் குடத்திலிருந்த தண்ணீர்தான் வாசல் முழுக்க சிந்திக் கிடக்குது. பார்த்து வர்துக்கு என்னன்னு   கேட்டு நாம சண்டை பிடிச்சிருக்கனும். அவங்க மேலே தப்பை வச்சுகிட்டு நம்ம கிட்டே அந்த அங்கிள் கத்திட்டுப் போறார். இவர் வீட்டுக்கு கெஸ்டா வந்த வயசான மாமி பழ வண்டிக் கானை மேலே கூப்பிட்டாங்க, அவங்களுக்குக் கீழே வர முடியாதுன்னு சொல்லி. பழத்தை எடுத்துட்டு வந்த பழக்காரனை, மேலே போக விடாமே நிறுத்தி அவன்ட்ட யிருந்து  பழத்தை வாங்கி நீங்க  மேலே கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்தீங்க. அந்த மாமி பழ வண்டிக்கானைக் கூப்பிட்டதையும்  இவர் பார்க்கலே. வாங்கின பழத்தை   நீங்க மேலே கொண்டு போய்க் கொடுத்துட்டு வந்ததையும் இவர் பார்க்கலே. ஆனா அந்த மாமி கொடுத்த பணத்தை வண்டிக்காரனிடம்  நீங்க கொடுத்ததை  மட்டும் பார்த்துட்டு, இப்போ உங்க கூட சண்டை போடறார். அவருக்கு லெப்ட் அண்ட் ரைட் கொடுக்காமே ஏன் நீங்க பயந்து போய்  நிற்கணும் ? குண்டா உயரமா இருக்கிறாரேன்னு நினைச்சு அவரோட சண்டை போட பயப்படறீங்களா?உங்களுக்குப் பயமா இருந்தா சொல்லுங்க. நான் லெப்ட்  அண்ட் ரைட் வாங்கறேன் " என்று இரைந்தான்  வாசு 
" பயமெல்லாம் ஒன்னும் கிடையாதுடா "
" அப்படின்னா போங்க. போய்ச் சண்டை போடுங்க "
" இதோ பார் வாசு, நீ குழந்தை. சில விஷயங்கள் உனக்குப் புரியாது. படிக்கிற இந்த வயசில்  லெப்ட் அண்ட் ரைட்ங்கிற ரவுடித்தனமெல்லாம் உனக்கு வேண்டாம். நீ ஸ்கூல்க்குக் கிளம்பற வழியைப் பாரு " என்று சொன்ன ராஜேந்திரன் "நான் வர்றேன் " என்று கண்களாலேயே இந்திரா விடம் ஜாடை காட்டி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.  
அலுவலக வேலையாக காஞ்சிபுரம் சென்ற ராஜேந்திரன், வீடு திரும்பும் போது இரவு 10.30 ஆகியிருந்தது. மெயின் கேட்டில்  ராஜேந்திரன் தலை தெரிந்ததுமே, கீழே வேகமாக வந்த பரந்தாமன் " சார் ஒரு நிமிஷம் " என்று சொல்ல  " அடடா, காலையில் ஆரம்பித்த பிரச்சினை இன்னும் முடிந்த பாடில்லையா  " என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாலும் கூட, " சொல்லுங்க சார். ஏதாவது பிரச்சினையா ? " என்றான்.
"ஆமாம் "
" சொல்றதைக் கேட்டு நீங்க டென்சன் ஆகக் கூடாது "
" ஆக மாட்டேன் "
" இன்னிக்குக் காலையில் உங்க வொய்ப் வேலைக்குப் போறப்போ ஒரு ஆக்சிடேன்ட் "
" என்ன ? " என்று பதறிப் போனான் ராஜேந்திரன் 
"  நீங்க டென்சன் ஆகக் கூடாதுன்னு நான் சொன்னேனே. நொவ் ஷி இஸ் ஆல் ரைட். ஒரு கால்டாக்சிகாரன் வந்து மோதிட்டு நிற்க்காமே ஓடிப் போயிட்டான். உங்க மனைவி மயக்கமாயிட்டங்க. அவங்க கிட்டே யிருந்த  ஐ.டி கார்ட் அட்ரசை  வச்சு இங்கே வந்து தகவல் சொன்னாங்க. நான் உடனேயே ஆஸ்பிடலில் அட்மிட் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். முதலுதவி கொடுத்ததுமே அவங்க நார்மல் ஆயிட்டாங்க. நீங்க எதோ முக்கியமான வேலையா வெளியூர் போனதாகவும் உங்களுக்கு இப்போ தகவல்  சொல்ல வேண்டாம்னு எனக்கு அவங்க சொன்னதாலே, என்னாலே அதை மீ  முடியலே. அதனாலே தப்பா நினைக்காதீங்க. என் பையனை வண்டியை எடுக்க சொல்றேன். அவன் உங்களை ஆஸ்பிட லுக்கு அழைச்சிட்டுப் போவான். போகும் போது  இந்த பிளாஸ்க்கில் உள்ள பாலை அவங்க கிட்டே கொடுத்துங்க " என்றார் பரந்தாமன் 
"அப்படின்னா வாசு ? "
" அவன் ஸ்கூல் விட்டு வந்ததும் பக்குவமா விவரத்தை சொல்லி காபி டிபன்  சாப்பிட வைத்து விட்டுதான் ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தேன் அவனுக்கும் உங்களுக்கும் நைட் மீல்ஸ் இந்த பாக்ஸில் இருக்கு. அவன் இங்கே வர்றேன்னு சொன்னா என் பையனோட அனுப்பி வைங்க. அவனை எங்க வீட்டில் படுக்க வச்சுக்கறேன். மாட்டேன்னு சொன்னால் நீங்க கம்ப்பல் பண்ண வேண்டாம். சின்னக் குழந்தை.  எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இரவெல்லாம் தூக்கமில்லாமே தவிப்பான். உங்களுக்கு எது சரின்னு தோனறதோ அதை செய்யுங்க. ஆனா அவன் எங்க வீட்டில் தங்கதில் எங்களுக்கு எந்த   அப்ஜெக்சனும் கிடையாது. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அங்கே இருந்தால் போதுமாம். நாளைக்கு அனுப்பிடுவாங்க. இதில் ஆயிரம் ரூபா இருக்கு.ஏதாவது அவசர செலவு க்குக்  கையில் இருக்கட்டும் "
" ஐயோ சார் பணமெல்லாம் வேண்டாம் "
"சார் இதை நான் உங்களுக்கு இனாமாக எதையும்  தரலே. எதுக்கும் கையில் வச்சுக்கோங்கன்னு  தான் சொல்றேன் "
ராஜேந்திரனைஆஸ்பிடலில் கொண்டு போய்ச் சேர்த்த சுரேஷின் இரண்டு கைகளையும்  பிடித்துக் கொண்டு குரல் நடுங்க  நன்றி சொன்னான் ராஜேந்திரன். வாசுவிடம் எதோ பேசி சிரித்துக் கொண்டிருந் த  இந்திராவைப் பார்த்த பின்புதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் ராஜேந்திரன். அம்மாவுடன் இருக்கப் போவதாக சொன்ன வாசுவை வற்புறுத்தாமல் அங்கிருந்து விடை பெற்றான் சுரேஷ்.  
சுரேஷ் அங்கிருந்து போனதும் " அப்பா, அந்த பைட்டர் அங்கிள் நமக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணியிருக்கிறார்  " என்றான் வாசு 
அமைதியாக சிரித்தான் ராஜேந்திரன் 
" ஏன் சிரிக்கிறீங்க ? "
" நீ காலையில் சொன்னியே, லெப்ட் அண்ட் ரைட் வாங்கபோறேன்னு. அதை நினைச்சு சிரிச்சேன். ஒரு விஷயத்தைப் பத்தி சரியாக புரிஞ்சுக்காமே ஒருத்தர் சண்டை போடும்போது  எதிர்த்து சண்டை போடறது பெரியதொரு  விசயமே இல்லை. வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசிடலாம். அதற்க்கு ஒரு நொடிப்பொழுது போதும். அப்படிப் பேசுவதால் அவங்களுக்கு வரும்  வலி நமக்கு தெரியவே தெரியாது. ஆனால் நமக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது அவங்க வலிய வந்து உதவி பண்ணினால் அது ஏற்படுத்தும் வலியை மனச்சாட்சி உள்ளவங்களாலே தாங்க முடியாது. அவர் பேசும் போதெ ல் லாம் நான் மௌனமாக இருந்ததாலே, அவர் செய்த உதவியை நான் சந்தோசமாகப் பார்க்கிறேன். இன்றைக்கு காலையில்    அவருக்கு சரி சமமாக நான் சண்டை போட்டிருந்தால், இந்த நேரம் நான் கூனிக் குறுகி நின்னுட்டு இருப்பேன். என்னதான் வசதியான வாழ்க்கை இருந்தாலும் அடுத்த மனிதனின் உதவி கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும். அதை மனசில் நினைச்சுகிட்டு மத்தவங்க செய்றதை  'சரிசரி'ன்னு சொல்லி பொறுத்துகிட்டே போக பழக்கிகனும்"
" நீங்க சொல்றது சரி. இவ்வளவு உதவி செய்கிற அந்த அங்கிள் ஏன் எதையும் யோசிக்காமே பேசறார் ? "
" உலகத்தில் முழுக்க முழுக்க நல்லவனும்   கிடையாது. கெட்டவனும் கிடையாது. ஒவ்வொருவர் வளர்ந்த சூழ்நிலை ஒவ்வொரு மாதிரி. அவங்க எல்லாரையும் மாற்ற நம்மால் முடியாது. ஆனால் எல்லாரையும் அட்ஜஸ்ட்  பண்ணிப் போக நம்மாலே முடியுமே " என்று ராஜேந்திரன் சொல்ல வாசு யோசிக்க ஆரம்பித்தான்.  

Friday, October 04, 2013

Scanning of inner - heart ( Scan Report Number - 89 )

               ( பொது  ) நலம் ; ( சுய ) நலமறிய ஆவல் !     
  
" ஏண்டா நான் காபி வச்சுட்டுப் போய் எவ்வளவு நேரமாச்சு. குடிக்காமே அங்கே அலமாரியில் எதை குடைஞ்சுகிட்டு இருக்கிறே ? "
" இருக்கட்டும்மா . கொஞ்ச நேரம் டிஸ்டர்ப் பண்ணாமே இரேன் "
"சரிடா. அலமாரியைக் குடைஞ்சு முடிச்சதும் ஆறின காபியை வச்சுட்டுப் போயிட்டேன்னு சொல்லி என்னை நீ டிஸ்டர்ப் பண்ணுவியே "
" ஐயோ  அதெல்லாம்  மாட்டேன். கொஞ்ச நேரம் அனர்த்தாமே இரேன் "
" சரிடாப்பா "
" அம்மா வாசலில் யாரோ கூப்பிடற மாதிரி இருக்கு. யாருன்னு பாரேன் "
வாசல் கதவை திறந்த பத்மா, வாசலில் நின்ற மேல் போர்சன் மரகதம் மாமியைப் பார்த்ததும் அதிசயித்துப் போனாள். "  அடடா இன்றைக்கு மழை கொட்டத்தான் போறது. கூப்பிட்டாக் கூட வராத மாமி இன்றைக்கு வீடு தேடி வந்திருக்கீங்க. வாங்க, உள்ளே வாங்க " என்று வாய் நிறைய வரவேற்றாள் பத்மா 
" பரவாயில்லே மாமீ. உங்காத்துலே நியூஸ் பேப்பர் வாங்கறேளா ? "
"இல்லையே. நிறுத்திட்டோம்.இப்பல்லாம்  பசங்க ஆன் லைன் மேகசின் படிக்கிறதாலே இப்போ பேப்பர் வாங்கதில்லே. ஏன் மாமி, என்ன விஷயம் ? "
"பரவாயில்லே, அப்போ நான் வர்றேன் மாமீ." என்று சொல்லி விடை பெற்றாள்  மரகதம்.
கதவைத் தாழிட்டு விட்டு வந்த பத்மாவிடம் " அம்மா, நீ யாரோட பேசிட்டு இருந்தே ? " என்று கேட்டான் சுந்தர்.
" ரெண்டு மாசம் முன்னாடி மேல் போர்சனுக்குக் குடி வந்திருக்கிற மாமி வந்து நியூஸ் பேப்பர் இருக்கிறதான்னு கேட்டுட்டுப் போறா "
" எதுக்கு ? மாவு சலிக்கவா ? "
"அதெல்லாம் நான் கேட்டுக்கலே. அந்த மாமி வெளியே வர்றதோ யாரோடாவது பேசறதோ ரொம்பவும்  அபூர்வம். நானே அந்த மாமி குரலை  இன்னிக்குதான் கேட்கிறேன். ஒருவேளை நீ சொல்ற மாதிரி மாவு சலிக்கத்தான் அவங்க நியூஸ் பேப்பர் கேட்டுருப்பாங்களோ நாந்தான் படிக்கிறதுக்குக் கேட்கிறாங்கனு தப்பாப் புரிஞ்சுகிட்டு  பேப்பர் வாங்கதில்லேன்னு சொல்லிட்டேனா ? அடடா நம்ம வீட்டில்தான் பழைய பேப்பர் நிறையவே இருக்கே "
" ஏனம்மா. ஒருத்தங்க வந்து ஏதாவது கேட்டால் என்ன எதுக்குன்னு விசாரிக்கக் கூட மாட்டியா  ? "
" எனக்குத் தோணலே. மாமி கீழே இறங்கிப் போனா. படி ஏறி வர்ச்சே நானே அவங்களைக்   கூப்பிட்டுக் கொடுத்திடறேன். போதுமா ?  " என்ற பத்மா வாசலிலேயே  காத்திருந்தாள். மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த மரகதத்தைக் கண்டதும் " வாங்கோ மாமி. பேப்பர் தர்றேன்" என்று சொல்ல, ஆவலுடன் வீட்டுக்குள் வந்தாள் மரகதம். கை நிறைய பழைய பேப்பர் கட்டுடன் வந்த பத்மா  "இந்தாங்கோ  எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கோங்க " என்றாள். இதைப் பார்த்ததும், தன்னையும் அறியாமல் வாய் விட்டு சிரித்தாள்  மரகதம்.
"என்னாச்சு மாமி ? "
"நான் கேட்டது இன்னிக்குப் பேப்பர் "
"சாரி மாமி, நீங்க மாவு சலிக்கத்தான்  பேப்பர் கேட்கிறதா நான் தப்பா நினைச்சு ட்டேன்  "
" பரவாயில்லே. காலையிலிருந்து கரெண்ட் வேறே இல்லையா. நியூஸ் எதுவும் தெரியலே. அதான் பேப்பர் பார்க்கலாம்னு.. அமெரிக்கா விஷயம் என்னனு தெரியலே " என்று கவலையுடன் சொன்னாள்  மரகதம் 
இந்த உரையாடலைக் கேட்டு அதிர்ந்து போனான் சுந்தர் " என்னடா இது ! அமெரிக்க அரசியல் விவகாரம் பற்றி இங்குள்ள  ஒரு மாமி கவலைப் படுகிறாளே " என்று நினைத்து. அது பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனைத் தொற்றிக் கொள்ள, " நம்ம நாட்டில் ஏகப் பட்ட பிரச்சினை. தினம் ஒரு குண்டு வெடிப்பு,  கொள்ளை, சாலை மறியல், அது இதுன்னு. நம்மளை பத்தி கவலைப்படவே நமக்கு நேரமில்லே. நீங்க அந்நிய நாட்டைப் பத்திக் கவலைபடறீங்க. நீங்க ரொம்பவும் வித்தியாசமான மாமிதான் " என்று சிரித்துக் கொண்டே சொன்னான், தேடுவதை நிறுத்தி விட்டு அறையை விட்டு வெளியில் வந்த சுந்தர்.
" வேறே எந்த நாட்டில் சண்டை நடந்தாலும், மத்தியஸ்தம் பண்ண இவா ஓடுவா. இப்போ அவாளே அடிச்சுண்டா ஊர் உலகம் சிரிக்காதா? அட. ஊர் உலகம் சிரிக்கிறதை விட்டுத் தள்ளு. வெளிப்படையா மத்தவா ஒத்துண்டாலும் சரி. மறுத்தாலும் சரி. அமெரிக்காக்காரன்னு சொன்னா. அவன் மேலே ஒரு சிலருக்கு மரியாதையும் ஒரு சிலருக்குப் பயமும் இருக்கிறதை  யாராச்சும் மறுக்க முடியுமா? ஒரு சில அக்கிரமத்தை அடக்க துணிஞ்சு  துப்பாக்கியை தூக்குறாதானே ? ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம்னு சொல்லுவா. இதனாலே ஒரு சிலருக்கு குளிர் விட்டுப் போயிடும்தானே  ? "
" மாமி, நீங்க தேவையில்லாமல் கவலைப் படறீங்க. அது அவங்க உள்நாட்டுப் பிரச்சினை. அதை அவங்க பார்த்துப்பாங்க" என்றான் சுந்தர். 
" அது எப்படிடா கவலைப் படாமே இருக்க முடியும் ? அவா நாட்டுக் காராளுக்கே வேலை இல்லேங்கிறப்போ, அவா குடுக்கிற வேலையை இங்கிருந்து செஞ்சு குடுக்கிற நம்ம நாட்டுக்காராளுக்கும் வேலை யில்லாமே போயிடுமே "
" ஏற்கனவே நிறைய பேர், "நம்ம  நாடு அமெரிக்காவுக்கு அடிமையாகி வருகிறது, அடிபணிகிறது"ன்னு   மீட்டிங் போட்டுப் பேசறா. அமெரிக்கா பத்தி மாமி  வொரி பண்ணினா, அது இன்னிக்கு ஹெட் லைன் நியூஸ் ஆயிடும்  " என்றான் சுந்தர் 
" ஆமாண்டாப்பா. நாலு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடுகிற அளவுக்கு நம்ம வீட்டிலும் செல்வம் கொட்டிக் கிடந்தா  ஊரிலுள்ள தர்ம நியாயம் பத்தியும், நம்ம தேவைக்காக அடுத்தவன் கையை எதிர் பார்க்கிறது தப்புன்னும்  நாம தர்க்கம் பண்ணிண்டு இருக்கலாம். இந்த மாசம் சம்பளம் வந்தாதான் நம் வீட்டில் அடுப்பு எரியும் என்கிற நிலையில் இருக்கிற நாம  எதைப் பத்தியும் பேச முடியாதே. நாட்டில் ஒரு சிலர் புளிச்ச ஏப்பம் விடுறவங்க.  ஒரு சிலர் பசியில் ஏங்கி போய் நிற்கிவங்க . ஒரு சிலர் டைஜெச்டுக்கு மருத்துவம் பண்ணிண்டு இருக்கிறா. ஒரு சிலர் உணவைத் தேடி ஓடிண்டு இருக்கிறா. நாம ரெண்டாவது ரகம். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்க முடியுமா?  எங்காவது ஒரு இடத்தில் நெருப்பு பத்திண்டா அக்கம் பக்கத்துக்காரா தண்ணி வாளியைத் தூக்கிண்டு ஓடி வர்றது எதுக்காக ? அந்த நெருப்பு நம்ம ஆத்தையும் துவம்சம் பண்ணிடக் கூடாதேங்கிற பயத்தினால் தான்.எங்காத்துக்காரர் கவர்மெண்ட் ஆபீசில் முப்பது வருஷம் குப்பை கொட்டினார். ரிடைர் ஆகிறவரை முழுசா முப்பதாயிரம் ரூபாயை நாங்க எங்க  கண்ணால் கூட பார்த்தது கிடையாது. இப்போ  என்னோட பிள்ளை வேலையில்  சேரும்போதே நாற்பதுக்கு மேலே கையில் வாங்கினான். அதை நம்பித்தான் வீட்டுக்கு லோன் வாங்கினோம். பெண்ணுக்கு வரன் பார்க்கிறோம். இப்போ அதுக்கு எந்த பங்கமும் வந்துடக் கூடாதேன்னு தான்  கவலைப் படறேன்" என்று மாமி கவலையுடன் சொல்ல , " மாமி, உங்க பிள்ளை ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறாரா ? " என்று கேட்டான் சுந்தர் 
" ஆமாம், இப்போ பெங்களூரில் இருக்கிறான் "
" அப்படின்னா உங்க கவலையில் ஒரு அர்த்தமும் இருக்கு. நியாமும் இருக்கு. அங்கே நிலைமை சரியாகனும்னு இங்கே நாம பிரார்த்தனை பண்ணுவோம் "
"நம்ம வீட்டு பஞ்சம் தீரனும்னா, அவா பிரச்சினை நல்லபடியா தீரனும் " என்ற மரகதம் அங்கிருந்து விடை பெற்றாள்.
மாமி அங்கிருந்து போனதும், வாசல் கதவை தாளிட்டு விட்டு வந்த பத்மா  " என்னடா இது, நாட்டிலே இப்படியெல்லாம் கூட பைத்தியக்கார ஜனங்க இருப்பாங்களா ? " என்று வியந்து போய்க் கேட்டாள்  பத்மா.
"இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை! இதயமற்ற மனிதரு க்கோ இதுவெல்லாம் வாடிக்கை  !! " என்று பாடிய சுந்தர், " அம்மா. மும்பையில் குண்டு வெடிப்புன்னு நியூஸ் பார்த்ததுமே " ஐயோ, சுந்தர் உங்க அப்பா அங்கே இருக்காரே. எப்படி இருக்கிறாரோ தெரியலை யே"ன்னு நீ பதறி துடிச்சது உனக்கு நினைவிருக்கோ இல்லையோ, ஆனா இன்னைக்கும் அந்த சீன் என்னோட கண் முன்னாலே ஓடிட்டு இருக்கு.அமெரிக்காவில் குடியுரிமை  உள்ளவங்களுக்கே வேலை போகிற நிலைமைன்னா, அந்த நாட்டு வேலையை, வேறேவேறே நாட்டில் இருந்தே செய்து கொடுக்கிறவங்க கதி என்ன ஆகுமோன்னு நினைச்சு மாமி  கவலைப்படறாங்க. அமெரிக்க  நாட்டுக்காரன் அளவுக்கு அதிகமாகவே  படியளக்கிறான். இவங்க வீட்டு அடுப்பு எரியுது. அது அணைஞ்சுடக் கூடாதுன்னு இவங்க படும் கவலை நியாயம்தானே ? " என்றான் 
"எதுக்கெடுத்தாலும் நக்கல், கேலி பேசற நீயாடா இப்படி பேசறே ? "
"அம்மா, மாமியோட பிரச்சினையாலே என்னோட பிரச்சினை சால்வ் ஆயிடுச்சு "
" என்னடா சொல்றே ? "
" எங்க காலேஜில் ஒரு காம்பெடிசன். அதில் "பொதுநலம். சுயநலம் " இந்த ரெண்டு டாபிக்கில், ஏதாவது ஒன்று பத்தி  யார் வேண்டுமானாலும் பேசலாம்னு சொல்லி இருந்தாங்க. பொது நலம் பத்தி பேசினா கை தட்டல் கிடைக்கும்னு நிறைய பேர்  அந்த டாப்பிக் செலக்ட் பண்ணி இருந்தாங்க. நான் சுயநலம் பத்தி பேசறதா சொல்லிட்டேனே தவிர, அதற்க்கான பாய்ண்ட்ஸ் தேடித்தான் இவ்வளவு நேரமா  புத்தக அலமாரியை  குடைஞ்சு கிட்டு இருந்தேன். மாமி பேசறப்போ ஒரு அழகான உதாரணம் சொன்னாங்க கவனிச்சியா," அடுத்த வீடு தீப்பிடிக்கும் போது அதை ஓடிப்போய் அணைக்கிறதே, அந்த நெருப்பு நம்ம வீட்டை பதம் பார்த்துவிடப் போகிறதே என்ற பயத்தினால்தான்னு. அந்த ஒரு உதாரணம் போதும். சுயநலத்தில் இருந்து தான்  பொதுநலம் பிக்கிதுன்னு சொல்லி நான் பாயிண்ட்சை அள்ளி விடறதுக்கு. உலகம் என்பது ஒன்றுக்குள் ஒன்றாக உருவானது. ஒன்றை ஒன்று பகைத்தால்  உயர்வேது என்று கேட்டு என் பக்கமிருக்கிற  நியாயத்தை கூட்டத்தின் முன் எடுத்து வைப்பேனே " என்றான் சுந்தர்.
" ஐயோ, என் சுயநலக் கொழுந்தே. அடுத்த வீடு தீப்பிடிக்கும்போது அந்த வெளிச்சத்தில் நான் போக வேண்டிய வழியைத் தேடிக் கண்டு பிடிச்சிடுவேன்னு சொல்றியே, உன்னைப் போல வீட்டுக்கு ஒரு பிள்ளை இருந்தால் இந்த உலகம் உருப்பட்டாப் போலத்தான்  " என்று சொல்லி அவன் கன்னத்தை வழித்து வாரி முத்தமிட்டாள்  பத்மா.