Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 13, 2023

யாராவது இருக்கீங்களா ?


ஜாதி மத பேதம் என்பது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. இதை ஒழிப்பதற்கு  அப்படி ஒன்றும்  எந்த "பகீரத பிரயத்தன முயற்சிகள்" எதுவும் தேவை இல்லை. சட்டம் போட்டு எத்தனையோ விஷயங்களை மாற்றுகிறோம். இதை மாற்றுவது ஒரு பெரிய விஷயமே இல்லை.

நான் பள்ளியில் படித்த நாட்களில், எந்த ஊரிலாவது நடந்த ஜாதிக்கலவரம்  பற்றிய செய்திவரும்போது, எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவர், "ஒரு குழந்தை பிறந்த உடனேயோ , அல்லது இறந்த உடனோ அது பற்றிய விவரத்தை பிறப்பு இறப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, என்ன ஜாதி, என்ன மதம் என்று குறிப்பிடவேண்டும் என்ற ஒன்றை நடைமுறையில் வைத்துக்கொண்டு, "ஜாதிக்கலவரம்", அது இது என்று இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாமே ரொம்ப காமெடியாக இருக்குது. இதை யாரும் ஒழிக்க முன்வரமாட்டார்கள். ஜாதி பேரை சொல்லி பதவிக்கு கூட்டம் சேர்க்கும் இவர்கள் அதை வளர விடுவார்களே தவிர ஒழிக்க மாட்டார்கள்  " என்பார்.

உண்மைதான்.

ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போதே, அது என்ன ஜாதி, மதம் என்றுதானே பதிவு செய்யப்பட்டு முத்திரை குத்தப்படுகிறது. எங்காவது இன்டெர்வியூ, வேலைக்குப்போனால் ஜாதி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்பது கட்டாய நடைமுறை. (அதை வாங்க ஆயிரம், ரெண்டாயிரம் என்று மொய் எழுதவேண்டும் என்பது தனிக்கதை)

நாங்கள் படித்துமுடித்தபின் எங்களுக்குக் கொடுக்கப்படும் TC ல் 1.NATION,  2 RELIGION, 3 CASTE என்ற  மூன்றுமே இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது. முதலாவது உள்ள ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற இரண்டையும் அரசாங்கம் நீக்கிவிட்டால், அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது.

அவனவன் வளர்ச்சி பெற இவைதான் அஸ்திவாரமாக இருக்கும்போது இதை ஒழிப்பது என்பது மேடைப்பேச்சுதானே தவிர, வேறொன்றும் அல்ல.

அப்படி யாராவது துணிந்து செய்ய முன்வந்தால், அவர்கள் கோவிலில் வைத்து வழிபட வேண்டியவர்கள். 

யாராவது இருக்கீங்களா ?

Tuesday, September 12, 2023

 


ஹாய் பிரெண்ட்ஸ்,

ரொம்ப நாளைக்குப்பிறகு சந்திக்கிறோம். எனக்குள் இருக்கும் சந்தேகம் ஒன்றை இங்கு பதிவு செய்கிறேன். உங்கள் கருத்தை சொல்லுங்கள். சரி என்று பட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். No argument.

"குலத்தொழில்" பற்றிய சர்ச்சை சமீபகாலமாக மீடியாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

என்னுடைய கருத்து என்னவென்றால்,  ஒரு ஜாதியை சேர்ந்தவன் இந்த தொழிலை மட்டுமே செய்யவேண்டும். வேறு தொழிலில் தலையிடக்கூடாது என்று யாராவது சொன்னால் அது தண்டிக்கப்படவேண்டிய செயல்.

தனி மனிதன் அவனாக விரும்பி எனக்கு இந்த தொழிலில்தான் ஆர்வம் என்று சொல்லி அவனது பாட்டன் தாத்தன் தொழிலை செய்தால் அதை மற்றவர்கள் ஏன் தடுக்க வேண்டும். இதை நான் சொல்வதற்கான அனுபவ ரீதியான மூன்று காரணங்கள்.

1.என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டில் மரத்தினால் ஆன வீட்டு உபயோகப் பொருட்கள் உண்டு.தயிர் மத்து, கீரை மத்து, மரவை ... இப்படி பல பொருட்கள் உண்டு. இதில் மரவை என்பது பேசின் போன்ற அமைப்புடைய ஒன்று. அதில் கீரையைக் கடைவார்கள். ஊறுகாயை அதில் போட்டு வைத்தால், சீக்கிரத்தில் கெட்டுப்போகாது என்று அதில் போட்டு வைப்பார்கள்.

சிறு வயதில் வீட்டில் இருந்த பொருட்கள், சில வருடங்களுக்குப் பிறகு கிடைக்காத ஒரு பொருளாகவே மாறிவிட்டது.

மரத்தினால் ஆன பொருட்களுக்கு ஃ பேமஸ் ஆன இடம் அம்பாசமுத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஊருக்குப் போயிருந்தபோது "மரவை" பற்றி விசாரித்தேன். ஒரு சிலருக்கு அது என்னவென்றே தெரியவில்லை. ஒரு கடைக்காரர் மட்டும், "அதெல்லாம் செய்ய இப்போ யாருக்கும் தெரியாது. தொழில் தெரிந்தவர்கள் எல்லோரும் போய்ச்சேர்ந்து விட்டார்கள். இப்போ அதை செய்கிறவர்கள் யாரும் கிடையாது " என்றார் 

கண்ணைக்கவரும், வர்ணம் பூசிய அழகழகான பொருட்கள் அந்த ஊரில் இருந்தது. நான் தேடிய ஒன்று கிடைக்கவில்லை. 

2. சிறுவயது முதலே (இப்படி சொல்வதன் காரணம், "இன்றுவரை" என்று அர்த்தம்.) எனக்கு பொம்மைகள் மீது ஆர்வம் அதிகம். அதுவும் ஒரு குறிப்பிட்ட பொம்மை மீது அப்படியொரு வெறி உண்டு.(நெட், YOU TUBE ல் (1) குவா குவா பாப்பா இவை குளிக்க காசு கேட்பா (2) வாயார முத்தம் தந்து வண்ணப்பிள்ளை கொஞ்சுது (3) முத்தான முத்தல்லவோ  - இந்த பாடல்களை கிளிக் செய்து அந்த பொம்மையை பார்க்கமுடியும். ஒரு காலத்தில் வீதிக்கு வீதி மலிந்து கிடந்த அந்த பொம்மை, இன்று தேடினாலும் கிடைப்பதில்லை. நானும் வெளியூர் கோவில்களுக்கு செல்லும்போது, கோவில் வாசலில் உள்ள கடைகளில் அதை இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை. கிடைக்கும் ஒரு பதில் _ "அந்த வேலை செஞ்சவங்க இப்போ யாரு இருக்கிறா சொல்லுங்க" என்பதுதான்.

3 வீடு கட்டும்போது வீட்டில் டைல்ஸ் வேண்டாம். மொஸைக் போடுங்கள் என்றேன்.அதற்கு பில்டர் "நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க. மொஸைக் போடற ஆளுங்க இப்போ யார் இருக்காங்க? தேடிக் கண்டுபிடிப்பது கஷ்டம். இப்போ எல்லா   இடத்திலும் டைல்ஸ்தான்" என்றார்.

ஆக, இந்த தலைமுறையில் நான் பார்த்த விஷயங்களே, காணக்கிடைக்காத ஒன்றாகிவிட்டது. (இவை எல்லாமே அல்ப விஷயங்கள்தான்). இதே போல எத்தனையோ மதிப்பான விஷயங்கள் இருந்து அது நடைமுறை வாழ்க்கையில் மறைந்து போயிருக்கலாம்.   

இப்போ ரோபோக்களின் செயல்பாடு அதிகமாகிவிட்டது. இன்னும் கொஞ்சநாட்களில் அவை சிலை வடிக்கக்கூட ஆரம்பித்து விடும். அப்படியொன்று மட்டும் நடந்துவிட்டால், "சிற்பியா ? யார் அவங்க ?' என்று வரப்போகும் தலைமுறை கேட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

அதனால் பழமையை விரும்பி ஏற்றுக்கொண்டு அதை செய்பவர்களை ஆதரிக்கக் கற்றுக்கொள்வோம்.

Sunday, September 10, 2023

மீடியாக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.



என்னுடைய இந்த வேண்டுகோள் நல்ல எண்ணத்தோடு பதிவு செய்யப்பட்ட ஒன்று. இதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த இரண்டு நாட்களாக தொலைக்காட்சிகளில் அடிக்கடி காணப்படும் செய்தி, "ஜீ 20 மாநாட்டிற்காக" குடிசைப்பகுதிகளை மறைத்து வைத்தது பற்றித்தான்.
இதில் அப்படி என்ன குற்றம் இருக்கிறது என்பது புரியவில்லை.

ஒரு நடுத்தர குடும்பத்திற்கு, அவர்களை பற்றி நன்கு தெரிந்த ஒருவரோ பலரோ அந்த குடும்பத்தை ஏதோ ஒரு காரணத்துக்காக சந்திக்க வருவதாக இருந்தால், வீட்டினர் செய்யும் முதல் வேலை, அன்றாடம் வீடு முழுக்க பரந்து கிடக்கும் குப்பை, அழுக்கான சமாசாரங்களை ஒரு அறையில் போட்டு அடைத்து வைப்பது தான்.

ஒரு பள்ளிக்கு யாராவது ஒரு VIP  வருவதாக இருந்தால் பளிச்சென்று உடை அணிந்து வந்திருக்கும் மாணவ மாணவியரைத்தான் முதல் வரிசைகளில் நிற்க வைப்பார்கள். இது நான் பள்ளி மாணவியாக இருந்தபோது எங்கள் பள்ளியில் அடிக்கடி நடக்கும் சாதாரண விஷயம்.

வாரக்கணக்கில் தெருவில் பரந்து கிடக்கும் குப்பைகளை, திடீரென்று சிலர் வந்து சுத்தம் செய்து ரோட்டின் இருபுறமும் ஒரு வெள்ளைப்பவுடரை தூவி  விட்டுப்போகிறார்கள் என்றால், அந்த தெரு வழியாக யாரோ ஒரு அரசியல் பிரமுகர் பயணம் செல்லப்போகிறார் என்பதை யாரும் சொல்லாமலே அடிமுட்டாள் கூட புரிந்து கொள்ளலாம். (உங்கள் ஏழ்மை நிலையை மாற்றி உங்களை எல்லாம் மேல்மாடத்திற்கு கொண்டுபோய் சேர்க்கிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்த நபர் வந்தால் கூட அங்கிருக்கும் தரித்திர நிலையை அவர் வந்து போகும் வரை மறைத்து வைப்பது இன்று வரை நடக்கும் விஷயம்தான்.)

அப்படி இருக்க உலகத்தலைவர்கள் பலர் ஒன்று கூடும் இடத்தை அவர்கள் முகம் கோணாதபடி பளிச்சென்று வைப்பதில் எந்த தப்பும் இல்லையே. அவர்கள் முன்பு நம் நாட்டு கவுரவத்தை காப்பாற்றிக்கொள்ள செய்யும் ஒரு சாதாரண செயல்தான் அது.

எத்தனை ஆயிரம் ஆனாலும் ஏழ்மையை வாயால் மட்டுமே ஒழிக்க முடியும். ஏதோ ஒரு வகையில் ஏதாவது ஒரு இடம் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
கொரோனா என்று ஒரு நோய் வரும். அது உலகத்தையே புரட்டிப்போடும். பலரின் வேலை போகும். சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலை வருமென்று யாராவது கற்பனை செய்தாவது பார்த்ததுண்டா?  இன்றோ உலகின் பல பகுதிகளில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம்.

எந்த நிமிடம் எது நடக்கும் என்று தெரியாத நிலையிலும் மற்றவர்கள் முன்பு நமது நாட்டின்  சுயகெளரவத்தை விட்டுக் கொடுக்காமல் வந்தவர்களை நல்லபடியாக கவனித்து அனுப்புவதில் கவனம் செலுத்தினால், அதை பாராட்ட வேண்டாம். குறை சொல்வதை தவிர்க்கலாமே.

எந்த ஒரு நபரின் மீதும் அடுக்கப்படும் அற்பத்தனமான குற்றச்சாட்டுகள் அவர் மீது கோபம் ஏற்படுத்துவதற்குப்பதில் அவர்கள்மீது ஒரு நல்ல மதிப்பை  ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Friday, September 08, 2023

கட்டங்களுக்குள் வார்த்தைகளை பொருத்துபுதிருக்கான விடை ( 01 - 40)

 40 -  கனவுகளின் ஊர்வலம் 

க   
கூ ன ல் 
நி னை வு க ள் 
க ற் க க ச ட ற 
சி று ப ள் ளி க் கூ ட ம் 
க ன வு க ளி ன் ஊ ர் வ ல ம் 
உ ங் க ள் ஊ ரா ரு க் கு 
ந ண் ப ர் க ளி ன் 
பா லை  வ ன ம் 
பா ல ம் 
ம் 

39 - விடியும் வரை விழித்திரு.

வி   
கு டி ல் 
பே ரா யு த ம் 
ஊ ட் ட ம் த ரு ம் 
தி ன மு ம் வ ரு ப வ ன் 
வி டி யு ம் வ ரை வி  ழி  த்  தி ரு 
மி க மி க வி  ரை வா க வே
க ண் வி ழி  த் தி ரை 
அ ழு த்  த ம் 
அ தி தி 
ரு 

38 - பூசைக்கு உகந்த மலர் 

  பூ 
இ   சை  வு 
மா ணா க் க ர் 
ஊ ரு க் கு ச் செ ல் 
மா யா ஜா ல உ ல க மா ம் 
பூ சை க் கு உ க ந் த ம ல ர் 
பெ ரி ய ம  ந் தி ர வா  தி  
த னி த் த னி யா க 
ம று ம ண ம் 
இ ல வு 
ர் 

 37 - குடை வெயிலுக்குகந்தது 

கு   
கொ டை  யா   
ம     ண்    வெ  ட்     டி     
வெ   ண்  ம  யி   ல் க   ள் 
க   ல்   உ   ர   லு   க்   கு  ள்    ளே 
கு   டை வெ  யி   லு   க்   கு   க    ந்  த து  
அ  வ  னா லே  கு  மு  டி  யு  ம்  
அ    ர   ச    க   ட்     ட     ளை 
வ    ரு    ந்   தா   தே   
உ  த   டு   
து   

36 -  வெயிலில் வெளியே செல்லாதே 

வெ  
கு  யி ல்  
கு  ழ  லி  னி  து  
ப  ணி த  ல்  ந  ன்  று  
மி  க  தூ  ய  வெ  ள்  ளை நி   ற  
வெ  யி  லி  ல்  வெ  ளி  யே  செ  ல் லாதே 
அ  வ  னா லே  யே மு  டி  யு  ம்  
ஓ  டி  ச்  செ ன்    ற    ன  
க   ட   ல்  அ  லை  
அ லா  தி  
தே  

 35 - ஆசை இல்லா மனம் உண்டோ 

 ஆ  
அ  சை வு  
நா ளை இ ர வு 
மூ ன் றி ல் ஒ ன் று 
மி கு ந் த லா ப மா கு ம் 
ஆ சை இ ல் லா ம ன ம் உ ண் டோ
ந ல் அ ன் ன மி ட் ட கை
வ ரு ட ம் தோ று ம் 
க ல் உ ப் பு 
ஆ ண் டு 
டோ 


34 - உலகம் நமது கைகளிலே 

உ   
ம ல  ர்  
ச க் க  ர ம் 
அ  வ   னு   ம்  நா  னு  ம்   
ம ழை யி ல்  ந  னை  ந்  தே ன்  
உ ல  க  ம் ந  ம து  கை  க  ளி லே 
பா  ர்  த் த து  போ  தா  தா  ம் 
மு  ழ  ங் கை க ளா ல்  
எ ங் க ளி ன் 
எ ளி  து  
லே 

33 - போடாதே தப்பு கணக்கு 


போ  
வா டா து 
ச ந் தே க ம் 
வி ழி  த்  த த னா  ல்  
பா ர் க் க ப் பா ர் க் க 
போடா தே த ப் பு க் க ண க் கு 
தி ரு வி ழா க் கூ ட் ட ம் 
வி டா க் க ண் ட ன் 
அ ண் ண னி ன் 
வா க் கு 
கு 

 32 - தொடும் தூரத்தில் வானம்

 தொ
வா டு ம் 
நீ ரா ம் ப ல் 
ப  க  ல்  தூ க்  க ம் 
மி க வு ம் ர க சி ய ம் 
தொ டு ம் தூ ர த் தி ல் வா ன ம் 
கோவி லி ல் தி ரு ம ண ம் 
சா ம் ப ல் நி ற ம் 
நீ ல வா ன ம் 
இ   ன ம் 
ம் 

 31 - பல துளி பெரு வெள்ளமாம்.

 ப  
ஆ ல ம் 
நீ ந் து கி ற 
த த் த ளி க் கி ற 
ந ன் மையே பெ று  வா  யா  க  
ப ல து ளி பெ ரு வெ ள் ள மாம் 
கா ய் க றி வெ ந் த து ம் 
ம க் க ள் கு ர ல் 
உ ள் ள வ ரை 
ஆ மா ம் 
ம் 

 30 - எண்ணித் துணிக கருமம் 

 29 - புயலுக்குப்பின் அமைதி.

பு   
வ ய ல் 
ம ல் லு க் கு 
வீ ட் டு க் கு வீ டு 
கோ வி லு க் கு செ ல் வோ ம் 
பு ய லு க் கு ப் பி ன் அ மை  தி 
ந ல்  ல ன் பி னா ல் தா ன் 
அ ண்  ண ன் த ம் பி 
தூ ய அ ன் பு 
சு மை யே 
தி 

28 - தவளை தன் வாயால் கெடும் 

 த 
சு வ ர் 
வெ ள் ளைநி ற 
த டு த் த து யா ர் 
ப கை  வ  னி  ன் ப ண் பா டு 
த வ ளை த ன் வா யா ல் கெ டு ம் 
யா ரு க்  கு யா ர் உ ற வு 
அ  ண் ண ல் கா ந் தி 
க ண் கெ ட் ட 
ஆ டு ம் 
ம் 

27 - ஆபத்துக்கு பாவமில்லை.    

 ஆ  
லா ப ம் 
ம தி  த் த ல் 
தூ ர த் து உ ற வு 
ஒ ரு வ ரு க் கொ ரு வ ர் 
ஆ ப த் து க் கு பா வ மி ல் லை
அ தி வே க பா ய் ச் ச ல் 
ப ஞ் ச வ ர் ண ம் 
கு ம் மி ய டி 
அ ல் லி 
லை 

 26 - நல்ல மாட்டுக்கொரு சூடு  

ந     
ப ல்   லி 
ப ல் ல  வ ர் 
மு த ல் மா   ண வ ன் 
வ ட் ட வ ட்   ட பா த் தி 
ந ல் ல மா ட் டு  க் கொ ரு சூ டு 
எ ச் ச ரி  க்   கை கொ ள் க 
மூ டி க் கொ ண் ட து 
இ ட ரு  ற் ற 
வ  சூ ல் 
டு 
25  - மாரடித்த கூலி மடியிலே.

மா   
தே ர டி 
பா ட் டி வீ டு 
ச த் த த் தி னா ல் 
ப  ழ  க  த் த கா த வ ன் 
மா ர டி த் த கூ லி ம டி யி லே 
ப ட் டி ய லி ல்  உ ள் ள 
ப ட் டி ம ன் ற ம் 
க ட் டி ள ம் 
ம யி  ல் 
லே 
த   
த  னி மை 
ப லா ம ர ம் 
ம ந் தி ர ஜா ல ம் 
வ ந் த து ம் போ ன து ம் 
த னி ம ர ம் தோப் பு ஆ கா து 
ந ன் றா க ப் பே சு வா ன் 
க ந் த பு ரா ண ம் 
பொன் ஆ ர ம் 
ம கா ன் 
து 

23 - கீர்த்தியால் பசி தீருமா  

கீ    
பா  ர்  வை  
வ    ரு த்  த  ம்  
ப ரு  த்  தி  க்   கா   டு   
யா  ரு  க்  கு  யா  ர்   உ  ற  வு  
கீ ர்  த்  தி  யா  ல்  ப  சி  தீ  ரு  மா 
அ  ழ   கா  ன ப  ட்   ட   ண   ம்  
அ  றி  யா  சி று  வ  ன்  
ப சி  தீ  ரா  து  
க ரு  மி  
மா  
 22 - தெய்வம் நின்று கொல்லும்.

தெ   
வா ய் மை 
ப ரு வ ம ழை 
எ ன் று ம் போ கா து 
வி ரி ந் து நி ற்  கா ம ல் 
தெ ய் வ ம் நி ன் று கொ ல் லு ம் 
இ ர வெ ன் று ம் பா ரா து 
மி க க் கொஞ் ச ம் 
ப க ல் வே ளை 
கா லு ம் 
ம் 

 21 -மாடம்  இடிந்தால் கூடம் 

மா  
பா ட ம் 
கா த ம்  ப ரி 
ஆ வ ல் இ  ல் லா த 
ப ற ந் தோ டி  வ ந் தா ன் 
மா  ட ம்  இ  டி  ந்  தா  ல்   கூ ட ம் 
த ண் ணீ ர் தா  ரு ங் க ள் 
நீ ச் ச ல்  கு ள ம் 
வெ கு கூ  ர் மை 
இ ட ம் 
ம் 

20 -  நீரின்றி அமையாது உலகு 

நீ     
ப     ரி      வு       
க     ட      ன்     கொ   டு      
எ   ன்    கு   றி     க்        கோள்     
அ   னு     ப    வ       அ   றி     வி     னா  ல்   
நீ     ரி     ன்     றி    அ     மையா      து     உ     ல  கு   
ஊ   ர    றி    ய    யா  ரு     மி      ல்    லை
வெ  ல்   வ   து    உ       ண்    மை
பொது    உ     ட       மை   
க      ல    ம்      
கு    

19 - விதிவழியே மதி செல்லும்.

வி    
ப     தி     ல்      
க     ள்     வ     ரா       ல்      
எ   ன்    தோ  ழி     க்        கு     ம்     
பா  ஞ்     சா   லி      யே  யா    னா   லு   ம்   
வி    தி    வ      ழி    யே    ம    தி       செ    ல்      லு  ம்  
ஊ   ர    றி    ய    தி     ரு     ம     ண   ம்   
செ ல்   வ   செ   ரு      க்    கு     
சா   ர   ல்     ம      ழை  
ஆ     லு     ம்      
ம்   

  18 - உள்ளங்கை நெல்லிக்கனி 

உ     
ப     ள்     ளி     
வ     ள்     ள     லா      ர்      
எ   ங்     கெ    ங்    கி       லு     ம்     
இ  ர    ண்  டு     கை க   ளா   லு   ம்   
உ     ள்    ள     ங்    கை   நெ   ல்      லி     க்     க   னி 
உ    ங்   க   ளா   ல்     மு    டி    யு    மா  
சொல்   வ   லி    மை     மி   கு     
வ    ட  க்    கி     ல்    
ப     க     டு     
னி  

 17 - ஆடிப்பட்டம் தேடி விதை

ஆ    
வா    டி     ய    
கி    ட    ப்    பி      ல்     
ந  ன்    கு     ப     ழு      த்    த    
வ   ட்   ட   வ    ட்    ட  பா   த்   தி   
ஆ    டி    ப்     ப     ட்     ட    ம்     தே    டி    வி  தை
ப   ட்  ட  ண    ம்     போ   க   லா   மா  
சொல்   வ   தே   வே    த  ம்    
க   ட்   டி    ள    ம்   
க    வி    தை    
தை 

16 - தனக்கு மிஞ்சியே தானம்.  

த     
வா    ன    ம்   
வ    ட    க்   கி     ல்     
போ ரு    க்    கு    ப்     பி   ன்   
க  ட  லி  ல்   மி   த க்  கு  ம்  
த    ன    க்    கு    மி    ஞ்   சி    யே   தா   ன  ம்   
சி  ன் ன ஞ்   சி    று  பி  ள்  ளை 
க ற்  றா  யே  யா   னா ல்   
செ  ந்  தா   ம   ரை  
கா    ன   ம்   
ம்  

15 - மரமில்லாது மழையில்லை 

ம    
த  ர   ம்   
இ   ரு   மி  னா   ன்   
நூ  ற்   றி   ல்   ஒ    ன்   று  
தா ய் இ ல்   லா  த பி ள் ளை 
ம   ர   மி   ல்   லா   து   ம   ழை  யி   ல்   லை  
ம ன் னா தி  ம   ன் ன னா க  
க ற்  றா  ழை யி  னா ல்   
ஓ  ரா யி   ர   ம் 
அ   ல்  லி  
லை 

14 - தன் கையே தனக்கு உதவி 

த   
ப ன்  றி  
ப  ல  கை யி  ல்  
கு தி  ரை  யே  ற்   ற  ம் 
மா  பெ  ரு  ம்  த  வ த்  தோ ர்  
த  ன்  கை  யே  த  ன  க்  கு  உ  த  வி  
உ ங் க ளு  க்  கு  ள்   ளே  யே 
கு  ண்  டு  கு  ண்  டா  க  
க  ல்  உ  ப்  பு  
ர  த ம் 
வி  

13 - உள்ளங்கையில் உலகம் 

 உ 
ப ள் ளி 
வ ள் ள லா க 
எ ங் கெ ங் கி லு ம் 
பெ ரு ம் ப கை வ ர் க ள் 
உ ள் ள ங் கை யி ல் உ ல க ம் 
உ ங் க ளி ல் ஒ ரு வ ன் 
ந ல் ல உ ள் ள ம் 
ச க ல மு ம் 
அ கம் 
ம் 

12 - ஏழை சொல் அம்பலமேறாது 

ஏ  
ம  ழை யா  
 பொ ய் சொ ல்  லி  
 அ  ல்  ல  ல் ப  டா  தே 
சொல் லா து  அ  க   ன்  றா  ன் 
ஏ  ழை  சொல் அ  ம்  ப  ல  மே  றா து 
அ  ய்  ய  கோ  ப  ரி  தா   ப  ம் 
ப   ரி   மே   ல  ழ  க  ர்  
ம  ண்  மே  டா  க  
ஆ  றா  ம்  
து  


 11 - ஊர் கூடி  தேர்  இழுத்தது  

ஊ    
நே     ர்     மை     
தெ  ரு     கூ    த்     து    
 மீ    ன்    பி     டி      த்    த    ல்     
த   ங்    க    த்   தே    ர்    ப  வ   னி   
ஊ   ர்    கூ    டி    தே      ர்       இ   ழு  த்    த    து  
ப  ங் க   ம்   இ     ல்    லா   த    து  
மி   க   வ  ழு  க்   கு   ம்   
த  னி   த்   தி    ரு      
 ப     த     ம்    
து     

 10 - குரங்கின் கையில் பூமாலை 

கு    
ம      ர     ம்       
கா   க    ங்    க     ள்    
  த  ங்     கு     கி     ற      வ      ன்    
அ  ண்   ண    னி   ன்     ம    க்  க   ள்   
கு   ர    ங்    கி    ன்      கை   யி   ல்  பூ    மா  லை  
வ  ண்  ண   ம   யி     லா    டு    கி    ற    
பூ   ம்   ப  ல்   லா    க்   கு   
க  ற்   பூ   ர    ம்      
 ஆ    மா   ம்    
லை  

 9 - காப்பு சொல்லும் கை மெலிவை 

கா 
த ப் பு 
 மா ண் பு மி கு 
 நீ யா க சொல் லா தே 
சொல் லா ம ல் செ  ன்  றா  ன் 
கா ப் பு சொல் லு ம் கை மெ லி வை
வ ந் த து ம் போ ன து ம் 
வ ழ  க் கை வி வ ரி 
கா ல் மெ ட் டி 
பொ லி வு 
வை 

 8 - செய் அல்லது செத்து மடி 


செ  
கொ ய்  யா  
 அ க அ  ழ கு 
ச மைய ல் சா மா ன் 
ல ட் சோப ல ட் ச மா க 
செ  ய்  அ  ல்  ல  து  செ  த்  து  ம  டி  
வி ரை வா க செ  ன் று வி டு 
ப க் க த்  து வீ டு 
நீ ந் து  த ல் 
 ந ம  து  
டி  

  7- இஞ்சி லாபம் மஞ்சளில் 

இ 
ப ஞ் சு 
ப ச் சி ள ம் 
சு ற் று லா த ள ம் 
வி ண் ண ப் ப ப டி வ ம் 
இ ஞ்  சி  லா  ப  ம் ம  ஞ்  ச  ளி  ல்  
க ண்  ணா டி  ம ண் ட ப ம் 
சி ன் ன ஞ் சி று சு 
ப ஞ் ச வ டி 
க ளி று 
ல் 

 6 - எலி அழுதால் பூனை விடுமா  

எ    
ஒ     லி    யே      
மி    க    அ   ன்    பு   
 மி   ன்    ன    ழு     த்    த    ம்     
அ  ன்   பா   ன  தா    ய்   த ந்  தை  
எ  லி   அ   ழு   தா     ல்      பூ  னை வி   டு    மா 
எ ங் கு  ம்   பூ      க்   கி   ன்   ற    
க  ற்  ப  னை க்   க  தை  
த  லை  வி  யி   ன்     
 ஆ    டு    ம்    
மா   

5 - கெடுவான்  கேடு நினைப்பான் 

கெ   
க    டு     கு     
க   ன   வா  க   வே  
 பா  ட்   ட   ன்    சொ   த்    து    
அ ன்  னைக்   கே   சொ  ந்த ம்   
கெ டு  வா  ன்  கே    டு     நி  னை ப்  பா   ன்  
எ ங் கு  ம்   நி     ற்  கா  ம  ல்   
க  ற்  ப  னை க்   க  தை  
து டை ப் ப ம்    
 த   பா   ல்   
ன்    

4 - கெட்டும் பட்டணம்  சேர்  

கெ   
வ   ட்    டி    
 ஆ  ட்    டு   கி    ற    
 ப  ட்   ட   ம்   பெ  ற்   ற   
ப ப் பா   ளி  ப     ழ த் தி ல்  
கெ ட் டு ம் ப   ட்    ட ண ம் சே  ர்   
பெ ற்  ற க   ட    னு க் கா க  
க ட் ட ண   மி ன் றி  
த   ட ம்   மா றி   
 ப  சே   ல்   
ர்   

 3 - புத்திமான் பலவானாவான்

பு  
க  த்  தி  
மி கு  தி  யா  க  
 கே ட்   க  மா ட் டா  ன்  
அ 
ண் 
ணா 
வி  ன்   அ றி வு ரை 
பு   த்   தி   மா  ன்   ப  ல    வா   னா  வா ன்   
த ரி சு நி  ல  த் தி னி ல் 
ம  யி ல் வா  க ன  ம் 
எ   ன்  னா  லு  ம்  
நா  வா  ல்  
ன்  

 2 - நாவு அசைய நாடு அசையும்.

நா 
ப வு ன் 
மி க அ ரு கே 
அ கி ம் சை வ ழி யே 
க டு ம் பு ய ல் வீ சு ம் 
நா வு அ சை ய நா டு அ சை யு ம் 
அ டு த் த டு த் த தா க 
ம யி ல் அ க வு ம் 
ப ச் சை யா க 
பா யு ம் 
ம் 

 1 - தாயின் மணிக்கொடி பாரீர் 

தா
வாயில்
அகன்றன
மாமன்மக்கள்
ராணுவஅணிவகுப்பு
தாயின்மணிக்கொடிபாரீர்
நிறையவேகொடுங்கள்
பாராட்டிப்பேசு
சம்பாநெல்
வாரீர்
ர்