Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 13, 2023

யாராவது இருக்கீங்களா ?


ஜாதி மத பேதம் என்பது காலங்காலமாக நடைமுறையில் இருந்து வருகிற ஒன்று. இதை ஒழிப்பதற்கு  அப்படி ஒன்றும்  எந்த "பகீரத பிரயத்தன முயற்சிகள்" எதுவும் தேவை இல்லை. சட்டம் போட்டு எத்தனையோ விஷயங்களை மாற்றுகிறோம். இதை மாற்றுவது ஒரு பெரிய விஷயமே இல்லை.

நான் பள்ளியில் படித்த நாட்களில், எந்த ஊரிலாவது நடந்த ஜாதிக்கலவரம்  பற்றிய செய்திவரும்போது, எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவர், "ஒரு குழந்தை பிறந்த உடனேயோ , அல்லது இறந்த உடனோ அது பற்றிய விவரத்தை பிறப்பு இறப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது, என்ன ஜாதி, என்ன மதம் என்று குறிப்பிடவேண்டும் என்ற ஒன்றை நடைமுறையில் வைத்துக்கொண்டு, "ஜாதிக்கலவரம்", அது இது என்று இவர்கள் செய்யும் வேலைகள் எல்லாமே ரொம்ப காமெடியாக இருக்குது. இதை யாரும் ஒழிக்க முன்வரமாட்டார்கள். ஜாதி பேரை சொல்லி பதவிக்கு கூட்டம் சேர்க்கும் இவர்கள் அதை வளர விடுவார்களே தவிர ஒழிக்க மாட்டார்கள்  " என்பார்.

உண்மைதான்.

ஒரு குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போதே, அது என்ன ஜாதி, மதம் என்றுதானே பதிவு செய்யப்பட்டு முத்திரை குத்தப்படுகிறது. எங்காவது இன்டெர்வியூ, வேலைக்குப்போனால் ஜாதி சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்பது கட்டாய நடைமுறை. (அதை வாங்க ஆயிரம், ரெண்டாயிரம் என்று மொய் எழுதவேண்டும் என்பது தனிக்கதை)

நாங்கள் படித்துமுடித்தபின் எங்களுக்குக் கொடுக்கப்படும் TC ல் 1.NATION,  2 RELIGION, 3 CASTE என்ற  மூன்றுமே இருந்தது. இப்போதும் நடைமுறையில் உள்ளது. முதலாவது உள்ள ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற இரண்டையும் அரசாங்கம் நீக்கிவிட்டால், அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் என்னவென்றே தெரியாது.

அவனவன் வளர்ச்சி பெற இவைதான் அஸ்திவாரமாக இருக்கும்போது இதை ஒழிப்பது என்பது மேடைப்பேச்சுதானே தவிர, வேறொன்றும் அல்ல.

அப்படி யாராவது துணிந்து செய்ய முன்வந்தால், அவர்கள் கோவிலில் வைத்து வழிபட வேண்டியவர்கள். 

யாராவது இருக்கீங்களா ?

No comments:

Post a Comment