Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, July 28, 2012

நாடு போற்றும் நல்லோர் பெயர்களை கண்டுபிடியுங்கள் ( Puzzle No.6 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
                                 
         நாடு போற்றும் நல்லோர்  பெயர்கள் புதிரில் ஒளிந்திருக்கின்றன


 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10  x  10  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

இது கொஞ்சம் கஷ்டமான புதிர்தான். நீங்க புகுந்து விளையாடுவீங்கனு தெரியும். இருந்தாலும் க்ளு தாராளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது

    (இந்த புதிர் 06  .03 .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )
                     
   14
 
     15

    16
     01






    17
 





   
    

 
    02
  

   

   

     
 
 
  18 
  
  
  
 

 
 
  
    03
 
 
 

  
 
 
    10 

 
   
 

  

    

 
  




11
 
  

 

  
..

    04
 


   

 
    05
  

 


  

  
    06
 



 

   

   

 

 

  

  

   
  
 

    

 
    07
   

 

   



  

      

   

 

  

 
    08

   



 

 

    

    

    19
  
     20


    

 
    12
   
    21
  
   22 
 
  


    09
  
 


   


   
  
   


  
  13
  

இடமிருந்து வலம்

1  தேசப் பிதா                                                                                                 ( 7 )
2  பிரம்மஞான சபை அறிமுகம் செய்த ' அன்னி '                         ( 4 )
3   சுபாஷ் சந்திர போசின்  மறுபெயர்                                                 ( 3 )
4   சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர்               ( 4 )
5  தேசிய கீதம் இயற்றியவர் பெயர் சுருக்கம்                                ( 3 )
6  பாஞ்சாலங் குறிச்சியை ஆண்ட வீர பாண்டியன்                    ( 7 )
7  ' தில்லையாடி' யை சேர்ந்த பெண் வீராங்கனை                      ( 3 )
8  தூக்கில் இடப்பட்ட பஞ்சாப் 'சிங்' கம்                                            ( 3 )
9  இவர் பிறந்த தினம் குழந்தைகள் தினம்                                       ( 2 )


வலமிருந்து இடம்  

10  கவர்னர் ஜெனரல் பதவி வகுத்த தமிழ் மூதறிஞர்.
       குழந்தைகளுக்காக ராமாயா ணத்தை  சக்கரவர்த்தி
       திருமகன்      என்ற பெயரில் தந்தவர்                                         ( 3 )
11   ' வந்தே மாதரம் ' பாடிய 'பக்கிம் சந்திர .....?"                             ( 5 )
12   மராட்டிய வீரன்                                                                                   ( 5 )
13   கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்                      ( 8 )

 
மேலிருந்து கீழ் 

14  'சதி' என்ற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை தடுத்த
      "  இந்தியாவின் விடிவெள்ளி "                                                        ( 9 )
15  இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தூண்களில் ஒருவர்
      "........ அலி ஆசாத் "                                                                                ( 4 )
16 பூமிதான இயக்கத்தை ஏற்படுத்தியவர்                                       ( 4 )
17 கர்மவீரர் என்று அழைக்கப்பட்ட படிக்காத மேதை                ( 5 )
18  அஞ்சா நெஞ்சம் கொண்ட பஞ்சாப் சிங்கம்                              ( 8 )

கீழிருந்து மேல் 

 13 "  இரும்பு மனிதர் "  என்று அழைக்கப்பட்டார்                          ( 9 )
 19  முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும் என்பதில்
       உறுதியாக இருந்த  " முகமது அலி ....                                        ( 3 )
 20  ஆங்கிலேய துரையை புகைவண்டியில் சுட்டு கொன்ற
       " . . . நாதன் "                                                                                            ( 3 )
21   ஊரின் பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்ட கொடி
         காத்த ..... ?                                                                                             ( 4 )
22  பாடல்கள் மூலம் விடுதலை வேட்கையை தூண்டிய
       எட்டயபுரத்து  "வரகவி"                                                                    ( 5 )

விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம் !

.




நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.






ஒவ்வொரு மனிதனும் விதைக்கிறான்.  ஒருவன் வாய்ச்சொற்களால் விதைக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.



எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த விதைகளுக்கு ஏற்ப அதை பயிராகவோ களையாகவோ திரும்பப் பெறுகிறார்கள். விதை விதைத்தவன் பயிரை அடைகிறான்.




எதைப் பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு ,எந்த செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.



செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு, அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே " வெற்றி " என்னும் நற்பயிரைப் பெறுகிறான்.


பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர். (பாழ் நிலத்தில் பயிரை எதிர்பார்க்க முடியுமா ?




நீங்கள் பல / சில ஆண்டுகளுக்கு முன்பு என்ன விதைத்தீர்களோ அதைத்தான் இன்று அறுவடை செய்கிறீர்கள்.




நல்லவற்றை எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் , உங்களுக்கு " வெற்றி " என்னும் அறுவடை மிக சிறப்பாக இருக்கும்.




விளைநிலம் ஆரோக்கியமின்றி இருந்தால் வளரும் பயிர் பூஞ்சையாகத் தான் இருக்கும். 



அறுவடையில் காட்டுகின்ற ஆர்வத்தை விதை விதைப்பதிலும் நீர் பாய்ச்சி பாடுபடுவதிலும் காட்ட வேண்டும்.

.

Friday, July 27, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 34

( நான் எழுதிய இச்சிறுகதை ஆனந்த விகடன் 08.12.2002 இதழில் வெளியாகி   
 யுள்ளது )

                                                               அம்மா வரப் போறா !

" பத்மா, இன்னிக்கு அண்ணா போன் பண்ணினார் " என்றான் சுகுமார் , அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதுமே 

" என்னவாம் ? "

" அண்ணிக்கும் அம்மாக்கும் சரிப்பட்டு வரலையாம். நேத்து நடந்த 
சண்டையை  ஊரே கூடி நின்னு வேடிக்கை பார்க்கும்படி ஆயிடுச்சாம் .."

" என்னிக்குத்தான் அம்மாக்கும் மத்தவங்களுக்கும் சரிப்பட்டு வந்திருக்கு ?
வயசாக ஆக பக்குவம் வரணும் . ஆனா , அம்மாக்கு அகம்பாவம்தான் 
அதிகமாகிப் போச்சு.. வயசாச்சா.. வெந்ததைத் தின்னோமா, ஒரு மூலையில் 
விழுந்து கிடந்தோமானு இருக்கணும் . அதை விட்டுட்டு எல்லா விசயத்திலும் ' நான், நான்'ன்னு முந்திகிட்டு நாட்டாமை பண்ணப் போனா
தகராறு  வரத்தான் செய்யும்.  அண்ணா வேறே என்ன  சொன்னார் ? "

" இன்னிக்கு ராத்திரி பஸ்சில் அம்மாவை ஏத்தி அனுப்பறாராம் .நான் 
நாளைக் காலையில் பஸ் ஸ்டாண்ட் போய் அம்மாவை  அழைச்சிட்டு
வரணும். "

" உடனே கோயில் மாடு மாதிரி 'சரி. சரி'ன்னு தலையை ஆட்டிட்டிங்களா? "

" பிறகு என்ன செய்யணும்கிறே  ? ஒரு மாசத்துக்குதான் . அங்கே 
நிலவரம் சரியானதும் திரும்பவும் அழைச்சிட்டுப் போயிடுவார் ! "

" அது என்ன கலவர பூமியா ... நிலவரம் சரியானதும்  திரும்பிப் போக ? 
இதோ பாருங்க ... நானும் வேலைக்குப் போறேன். வீட்டுலே  ஒன்னும்
சும்மா உட்கார்ந்திருக்கலே ..வர்றவங்க போறவங்களுக்கெல்லாம்  வடிச்சுக் 
கொட்டி உபசாரம்  பண்ணிட்டு இருக்க என்னாலே முடியாது.
அம்மாவை அனுப்ப வேண்டாம்னு உடனே போன் பண்ணிச் சொல்லிடுங்க.."

" பாவம்டி .. வயசானவங்க ..."

" ஏன் சொல்ல மாட்டீங்க ? என்னைத் தவிர , ஊர் உலகத்தில் இருக்கிற 
அத்தனை   பேரும் உங்க கண்ணுக்குப் பாவமாத்தான்  தெரிவாங்க.."

" அதுக்கில்லேடி  ... ஒரே ஒரு ஆள் வந்து தங்கறதாலே , அவங்களுக்குப் 
பசிக்கு ஒரு வேளை  சாப்பாடு போடறதாலே, நாம எதுலே கொறஞ்சிடப் 
போறோம் ? அவங்களுக்குன்னு தனியா  ஏதாவது செய்யப் போறோமா ? 
நாம சாப்பிடற சாப்பாட்டில் அவங்களுக்கும் ஒரு வாய் ! அவ்வளவுதானே ? நாமளும் மாட்டோம்னு சொல்லிட்டா, பாவம் .. வயசானவங்க .. எங்கே 
போவாங்க? இதோ பாருடி .. நம்மைப் பெத்தவங்களை நாம எப்படிப் 
பார்த்துக்கிறோமோ, நடத்தறோமோ ,அதே மாதிரிதான் நம்ம குழந்தைங்க 
நம்மை நடத்தும். அதை நினைவில் வச்சுக்கோ .."

" இதோ பாருங்க, உங்க சமாதானம்  எதுவும் எனக்குத் தேவையில்லை. 
இப்பவே அண்ணாக்கு போன் பண்ணி அம்மாவை அனுப்ப வேண்டாம்னு 
சொல்றீங்களா..  இல்லே நான் கிளம்பி எங்க அம்மா வீட்டுக்குப்
போகட்டுமா ?" 

" அம்மா வீட்டுக்குப் போகப் போறீயா ? "

" ஆமாம் ! ஏன் ..போகக் கூடாதா ? "

" அதுக்கில்லே .. நாளைக்கு அவங்களே  இங்கே வரப் போறாங்களே ! "

" என்னது ? "

" ஆமாம்...  அம்மாவை அனுப்பி வைக்கிறதா போன் பண்ணினது உங்க 
அண்ணன்தான் ! " என்றான் சுகுமார் நிதானமாக 

" எங்க அண்ணனா போன் பண்ணினார் ? சரியான கழிசடை ! பொண்டாட்டியை அடக்கி வைக்கத் துப்பில்லாமே , அம்மாவை பஸ்
ஏத்தி அனுப்பறானாமா ? சரி .. சரி.. உங்க வேலையை எல்லாம் சீக்கிரம் 
முடிச்சிட்டு, நேரத்தோட படுத்துத் தூங்குங்க .. அப்பத்தான் நாளைக்குக் 
காலையில் எழுந்திரிச்சு ,  சீக்கிரம் பஸ் ஸ்டாண்ட் போக வசதியா இருக்கும் ! "
என்றாள் பத்மா.

Saturday, July 21, 2012

" அடடே " உதவியாளர்கள் !


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். மனைவி மட்டுமல்ல ; நல்ல குழந்தைகள், நல்ல குடும்பம், நல்ல வேலை  எல்லாமே இறைவன் கொடுக்கிற வரம்தான். இந்த வரிசையில் சிலர் இறைவனால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகவும், பலர் சபிக்கப் பட்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள் . இப்போது இதுவல்ல பிரச்சினை. இந்த வரிசையில் நல்ல உதவியாளர்கள் ( வேலையாட்கள் ) கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம் தான்  என்பதில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வேலைக்காரனை வைத்துக் கொண்டு அவனை வேலையை விட்டு விலக்கவும் வழி இல்லாமல், வைத்து வேலை வாங்கவும் வழி இல்லாமல் எத்தனை பேர் தவிக்கிறார்கள் என்று அனுபவப் பட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

ஒரு சில முதலாளிகள் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் " நாம் இந்த ப்ராஜெக்டை தொடங்குவது  ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் வேலை செய்ய 
சரியான  நபர்கள் கிடைப்பதுதான் கடினம். இப்போது என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் , வேலைக்காரன்  என்ற பெயரில் ஒரு மடையனை வேலைக்கு வைத்துக் கொண்டிருக்கிறேன். வேலையை விட்டு அனுப்பி விடலாம் என்று நினைத்தால் அவன் குடும்பம்தான் என் கண் முன்னே வந்து நிற்கிறது. இப்போ 
பாருங்க வேடிக்கையை .." என்று சொல்லிவிட்டு, தனது வேலைக்காரனை பெயர் சொல்லி அழைத்தார். அடுத்த கணமே ஓடி வந்து பணிவாக நின்றான் அவன். அவனிடம் " நீ எங்க வீட்டுக்குப் போய் நான் இருக்கிறேனா என்று பார்த்துவிட்டு வா " என்றார்,
" சரி " என்று தலையாட்டி விட்டு வேகமாக வெளியில் ஓடி போனான்  அவன்.
" பார்த்தீர்களா ? " என்று நண்பர்களிடம் கேட்டார் முதலாளி.
வெளியில் ஓடி வந்த வேலையாள், அவனுடன் அமர்ந்திருந்த மற்ற வேலையாட்களிடம்  " எங்க முதலாளியைப் போல ஒரு மடையனை எங்குமே பார்க்க முடியாது. அவர் வீட்டுக்குப் போய், அவர் இருக்கிறாரா என்று நான் பார்த்து விட்டு வரணுமாம். ஏன், இவர் கையில்தான் " செல் போன் " இருக்குதே. வீட்டுக்குப் போன்  போட்டு கேட்பதுதானே ! " என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்கு  விரைந்தான் அவன். 

ஒரு அலுவலகம். அதிகாரி தன்னைப் பார்க்க வந்திருந்த நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தற்செயலாக அவரது உதவியாளர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவரை நண்பருக்கு அறிமுகப் படுத்திய அதிகாரி, " இந்த அலுவலகத்தில் உள்ள அத்தனை பேரும்  ஏதாவது ஒரு பிரச்சினையை எடுத்துக் கொண்டு வந்து  என் நேரத்தைப் பாழடித்து விட்டுப் போவார்கள். நான் இங்கு வந்து இத்தனை வருடத்தில் இவர் ஒருவர் மட்டும்தான் இதுவரை எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துக் கொண்டு இங்கு வரவில்லை. " என்று பெருமையாக அறிமுகப் படுத்தினார். நண்பருக்கு மிகவும் ஆச்சரியம். அதிகாரியிடம் விடைபெற்று வெளியில் வந்த அவர் , அதிகாரி அறிமுகப் படுத்திய உதவியாளரை தேடிக் கண்டு பிடித்து  " பிரச்சினை இல்லாமல் உங்களால் மட்டும் எப்படி இருக்க முடிகிறது. அந்த ரகசியத்தை எனக்கு சொல்லுங்களேன்  " என்றார். " ஸார் , அலையில்லாத கடல் உண்டா ? பிரச்சினை இல்லாத மனுஷன் என்று எவராவது உண்டா ?. இந்த ஆபீசின் மிகப் பெரிய பிரச்சினையே இந்த அதிகாரிதான். யாராவது போய், பிரச்சினை கிட்டேயே பிரச்சினைக்கு தீர்வு கேட்பார்களா ? எல்லாம் எங்கள் தலை விதி !" என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டார். சந்தேகம் கேட்ட நபர் அசந்து போனார்.

ஒரு நாட்டின் அதிபர், ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரை உடனடியாக தொடர்பு கொள்ள நினைத்து அவரே நேரடியாக  நிறுவனத்துக்கு போன்  செய்தார். போனை எடுத்த பெண்ணிடம் " போனை உடனே தலைவருக்கு  கொடு " என்று கட்டளையிட்டார் . அந்தப் பெண் " மன்னிக்கவும். இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு  மிகப் பெரிய பிரச்சினை. அது விஷயமாக தொடர்ந்து மீட்டிங்கில் இருந்த அவர் இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சென்றார். ஒரு மணி நேரத்திற்கு தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதனால் உங்கள் அழைப்பை அவருக்குக் கொடுக்க முடியாது  "  என்றாள் .
"பேசுவது யாரென்று தெரியாமல் நீ பேசிக் கொண்டிருக்கிறாய். நான் இந்த நாட்டின் அதிபர் பேசுகிறேன் " என்று இரைந்தார் அதிபர்.
" வணக்கம் ஸார். நீங்கள் இந்நாட்டு அதிபர் என்ற வகையில் உங்களிடம் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு . ஆனால் என்னை வேலைக்கு அமர்த்தி சம்பளமும் கொடுப்பது இந்த நிறுவனம், இந்த நிறுவனத்தின் தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு கீழ்ப் படிய வேண்டியது  என்னுடைய கடமை. அதே சமயம் உங்கள் கட்டளைக்கு பணிய வேண்டிய பொறுப்பும் எனக்கு உண்டு. எங்கள் பாஸ் எழுந்ததும் உடனடியாக நீங்கள் அழைத்த விஷயத்தை சொல்கிறேன் " என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள். பாஸ் ஓய்விலிருந்து திரும்பியதும் அதிபர் அழைத்த  விசயத்தை அவருக்கு தெரிவித்தாள் .
அவளை மிகவும் கடிந்து கொண்ட அவர், உடனடியாக அதிபருக்கு போன் செய்து நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு   " அந்தப் பெண்ணை இப்போதே வேலையிலிருந்து விலக்கி விடுகிறேன் " என்றார்.
" அதை உடனடியாக செய்யுங்கள். வேலையை விட்டு விலக்கிய கையோடு அவளை எனது மாளிகைக்கு வேலைக்கு அனுப்புங்கள். இங்கு நிறைய உதவியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்பிக்கை, விசுவாசமுள்ள வேலையாட்களுக்கு  இங்கு ரொம்பவும் பஞ்சம். அதனால் உடனே அந்தப் பெண்ணை அனுப்புங்கள்  " என்றார் அதிபர்.

பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனக்கு தெரிந்த  ஒருவர் SOUTHERN RAILWAY ல் மிகப் பெரிய தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஒருமுறை  அவர் வெளியூர் போய் விட்டு சென்னை திரும்பும் போது 
மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் " ஸார், டிக்கெட் " என்று கேட்க , இவர் தனது அடையாள கார்டை எடுத்துக் காட்டி இருக்கிறார் . கார்டைப் பார்த்ததுமே அசந்து போன அவர் " சாரி ஸார் . நீங்க யாரென்பது தெரியாமல் கேட்டு விட்டேன் " என்று சொல்ல, அவர் தோளில் தட்டிக் கொடுத்து " இப்படித்தான் இருக்கணும். உனக்கு கொடுக்கப் பட்ட வேலையை நீ சரிவர செய்யணும். இதில் தயவு தாட்சண்யம் , முக்கியஸ்தன் சாமான்யன் என்ற பாகுபாட்டிற்கு இடமே இல்லை. இதே கடமை உணர்ச்சி உனக்கு கடைசி வரை இருக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு வந்தார்.

ஒரு ஊழியன் தனது கடமையில், கண்டிப்பானவனாக இருந்தால், அவனைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் மனப்பக்குவம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது ?

சொல்வதெல்லாம் உண்மை !

.


சிறிய துன்பங்கள் பேசுகின்றன, பெரிய துன்பங்கள் மௌனமாய் இருக்கின்றன.


மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூட கண்டுபிடித்து விடுகிறான்.


நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களால்தான் வாழ்க்கையின் மதிப்பையும் உணர முடியும்.


நண்பர்களைக் காட்டிலும் புத்தகங்கள் மேலானவை. புத்தகங்கள் வெளிப் படையாகப் பேசும்.


நமது மனதில் ஓடும் எண்ணங்களை நாம் மறைத்தாலும், நமது செயல்கள் நமது மன ஓட்டத்தைக் காட்டிக் கொடுத்து விடும்

பொறுமை கசப்பானது. ஆனால் அது விளைவிக்கும் நன்மைகளோ மிகவும் இனிப்பானவை.


பணிவாக நடந்து கொள்வது என்பது பலவீனம் அல்ல. அதுவே உண்மையான ஆன்ம பலம்



மனச்சாட்சியை மறந்தவன் எந்த பாவத்தையும், பாதக செயல்களையும் செய்ய தயங்க மாட்டான், 


கீழ்ப் படிய கற்றுக் கொண்டவர்கள்  வெகு விரைவில் தலைமைப் பொறுப்பை அடைந்து விடுகிறார்கள், அடங்கி நடப்பவனுக்குத்தான், மற்றவர்களை அடக்கி வழி நடத்தவும் தெரியும்.


நாம் செய்த பாவமும் புண்ணியமும் நம் வீட்டு வாசல் படியிலேயே தலை வைத்துப் படுத்திருக்கும். அவை என்றென்றும் நம்மைப் பின் தொடர்ந்து வரும்










மனச்சாட்சியை மறந்தவன் எந்த பாவத்தையும், பாதக செயல்களையும் செய்ய தயங்க மாட்டான்,