Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 25, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 04)

சென்ற வார PUZZLE - 03 ம் அதற்கான விடையும் :
SIR க்கு இல்லாத மதிப்பை MADAM பெறுகிறார் 
மற்றமொழிக்கு இல்லாத தனிசிறப்பை   மலையாளம்   பெறுகிறது.  எந்த வகையில் என்று சொல்ல முடியுமா ?

விடை MADAM 
               MALAYALAM 
மொழிகளின் பெயரை ஆங்கிலத்தில் எழுதி இடமிருந்து வலமாக / வலமிருந்து  இடமாகப் படித்தாலும் ஒரே வார்த்தைதான் வருவது " மலையாளம் " என்பதில் மட்டுமே. இனி இந்த வாரப் புதிருக்குப் போவோமா ? 

PUZZLE - 04
Image result for images of class room and teacher
வெளியில் மந்தமான சீதோஷ்ணம். வகுப்பிலும்  மாணவர்கள் "டல்"   லாக ருப்பது போல டீச்சருக்குத் தோன்றியது
அவர்களை உற்சாகப்படுத்த "நான் ஒரு புதிர் போடுவேன்ரியான விடையைக் கண்டுபிடித்தவர்கள்,      கண்டு பிடித்தபொருளையே பரிசாக
எடுத்துக் கொள்ளலாம்.
ப்ளாக் போர்டில் நான் எழுதும் குறிப்புகளுக்குள் பரிசுப் பொருளும் அது
எங்கிருக்கிறது என்பதும் மறைந்து இருக்கிறது " என்று சொல்லிவிட்டு
எழுத ஆரம்பித்தார் 
"எல்லோருமே ஜைனர் கோவிலுக்குப் போகலாம் :
என் செல்லக் கண்ணுக்குட்டி லக்குமீ  துள்ளல் போடாதே :
அவன் சாதுவான வில்லன் !
பப்படம் போட்ட பையை எங்கே வைத்தாய் ?
அடிக்கடி காரம் சாப்பிடாதே ."
எழுதியுள்ளதை படித்துபொருள் து? அது எங்கே இருக்கிறது என்பதை க்ளுவைக் கொண்டு கண்டு பிடிக்க முடிகிறதா ?

Saturday, September 24, 2016

NOT FOR FUN ( 01 )

Image result for images of thief in police dress

"என்ன ஸார் .... என்ன பிரச்சினை ? ஒரே சோக மயமா இருக்கீங்க?"
"வெளியூர் போக வேண்டியிருக்குது !"
"போயிட்டு வரவேண்டியதுதானே ..."
"குடும்பத்தோடு போக வேண்டியிருக்குது "
"நல்ல விஷயம் ... ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க ..."
"வீட்டை விட்டுட்டுப் போக வேண்டி இருக்குது "
"ஆமா... விட்டுட்டுட்டுதான் போயாகணும் ...நாம என்ன ஆஞ்சநேயரா, போகிற இடத்துக்கெல்லாம் கையோட வீட்டைத் தூக்கிட்டுப் போக முடியுமா ?"
"அதான் கவலையா இருக்குது !"
"புரியும்படி சொல்லுங்க ஸார் "
"வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போறப்போ பக்கத்திலுள்ள காவல் நிலையத்தில் இன்பார்ம் பண்ணிட்டுப் போங்கன்னு அடிக்கடி விளம்பரம் பண்ணுவாங்க .. இப்ப அதை செய்யவும் பயமா இருக்குது. யார் யாருக்கு எங்கெங்கு நெட் வொர்க் இருக்குதுனு தெரியலையே. அதான் கவலையா இருக்குது  !"
"ஸார் .. ஒரு சின்ன திருத்தம்.. கவலையா இருக்குனு சொல்லாதீங்க... பயமா இருக்குனு சொல்லுங்க!" 

Sunday, September 18, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 03)

புதிர் எண் - 02 ன் விடை - 2 என்ற எண் 13 முறை வரும் : 2 12 20  21 22  23 24 25 26 27 28  29  

(40 என்று நம்பர் கொடுத்து எத்தனை 3 வரும் என்று கேட்டால் 14 என்று சுலபமாக சொல்லி விடலாம்.ஒவ்வொரு "பத்து" ஏறும் போதும் ஒவ்வொரு  " ஒன்று  " ஏறும் )

PUZZLE - 03
Image result for images of gentle couple
SIR க்கு இல்லாத மதிப்பை MADAM பெறுகிறார் 
மற்றமொழிக்குஇல்லாத தனி சிறப்பை  மலையாளம் பெறுகிறது.
எந்த வகையில் என்று சொல்ல முடியுமா ?

(விடை கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள். அல்லது ஒருவாரம் காத்திருங்கள்.) 

Saturday, September 17, 2016

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation
நேற்று (16.09.2016) வீட்டை விட்டு வெளியில் வரவே இல்லை. அனைத்துக் கட்சி போராட்ட நாள் என்பதால்.
டீவி ஒன்றே கதி என்று "ஒருநாள் வாழ்க்கை" முடங்கிப் போனது. 
பழைய பாடல் காட்சிகளைப் பார்ப்பதும், செய்திகளைக் கேட்பதுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது.
"போராட்டம் வெற்றி!"  என்று ஒருவர் சொல்ல, "அப்படியா! தண்ணியைத் திறந்து விட்டுட்டாங்களா ?" என்று அப்பாவித்தனமாக கேள்வி கேட்டது அறிவு.
ஒருநாளில் முடங்கிப் போன பணிகள் எத்தனை? விசேஷங்களுக்கு நாள் குறித்துவிட்டு அல்லாடியவர்கள் எத்தனை பேர்? வியாபாரம் முடங்கிப் போன தால் ஒருநாள் நஷ்டத்தால் துவண்டு போனவர்கள் எத்தனை பேர் ?
கர்நாடகாவில் தமிழ்நாட்டுப் பேருந்துகள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. அடித்து நொறுக்கப் பட்டன. அவர்கள் வெறுப்பைக் காட்டிய விதம் அப்படி !அதற்கு கண்டனம் தெரிவிக்கும் நாம், நமது எல்லையில் நாம் அன்றாடம் பயணிக்கும் பஸ், ரயில் மீது ஏறி நின்று கொண்டுதானே ஆர்ப்பரித்தோம்.  அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?!
முன்பொரு முறை ஒரு பத்திரிகையில் ஒரு செய்தி படித்த ஞாபகம் . மேலை நாடுகளில் குறிப்பாக ஜப்பானில் வேலை மறுப்பு போராட்டம் என்றால் அன்று விடுமுறை என்று அர்த்தமில்லையாம். அன்றைய தினம் எல்லாரும் பணிக்கு வந்து அவர்கள் வேலையை செய்வார்களாம். எப்படி ?
உதாரணமாக செருப்புக் கம்பெனி என்றால் வலது காலுக்கான ஷூவை மட்டுமே தயாரிப்பார்களாம். அவர்களது கோரிக்கை நிறைவேற்றப் பட்டதும்  அதனுடைய  ஜோடி ஷூ தயாராகுமாம்.
யாரையும் குறைகூறியோ போராட்டமே தவறு என்றோ இதை நான் பதிவு செய்யவில்லை. யாரும் பாதிக்காதபடி நமது மறுப்பை தெரிவிக்க வேறு வழியே இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. அதற்கு விடை தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை பதிவு செய்கிறேன். 
சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !


எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் ?! அது ஏன் ?

Image result for images of starved people
பஞ்சம் வறட்சி போன்ற செய்திகள் நியூஸ் பேப்பரில் படிக்கும் போதெல்லாம் எங்கள்  அம்மா எங்களிடம் சொல்லும் ஒரு விஷயம் : "அப்போ நீங்கள்லாம் சின்னப் புள்ளைங்க. நாம அப்போ தூத்துக்குடியில் இருந்தோம். அப்போ ஒரு பஞ்சம் வந்துச்சு . காசு குடுத்தா கூட எதுவும் கிடைக்காத நிலைமை. எங்கே பார்த்தாலும் பிள்ளைகளும் பெரியவர் களும் பட்டினி கிடந்தாங்க. அப்போ கேரளாவிலிருந்து கொஞ்ச பேர் கைவண்டியில் ஆள்வள்ளிக்கிழங்கு கொண்டு வந்து ஒவ்வொரு வீட்டிலும் குடுத்து இதை வேக வச்சு சாப்பிடுங்கனு சொல்லிட்டுப் போனாங்க. அதை சாப்பிட்டு ரெண்டு நாள் பொழுதை கழிச்சோம்"
இதை சொல்லும்போதெல்லாம் அம்மா கண்ணில் தண்ணீர் வந்து விடும்.
இப்போ தண்ணீருக்கு இத்தனை போராட்டம். பக்கத்துக்கு வீட்டுக்காரன் பட்டினி கிடக்கிறானே என்பதை நினைக்கக்கூட முடியாத அளவுக்கு மனித இதயங்கள் மரத்து விட்டதா என்ன ? 

Friday, September 16, 2016

சிரியுங்க சிரியுங்க சிரிச்சுகிட்டே இருங்க சிரிப்பு உடம்புக்கு ரொம்பவும் நல்லது !

Image result for images of tea stall
மனிதர்களை அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சந்திக்கும் ஆசை கடவுளுக்கு வந்தது . கடவுள் ஒருநாள், மனிதர்கள் வாழும் உலகத்திற்கு ஒரு ஸர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார். மன்னர்கள் இரவு நேரங்களில் மாறு வேடத்தில் செல்வார்களாம். கடவுள் பகலிலேயே மாறுவேடத்தில் வந்தார் . அவர் அவ்வளவு "மெனக்கெட" வேண்டிய அவசியமே இல்லை. அவருடைய உண்மையான வடிவத்தில் வந்திருந்தால்கூட, எதுவுமே பேசாமல் ஏதாவது ஒரு வீட்டு வாசலில் நின்றால் கூட  "நம்ம ஆளு", "கைகால் நல்லாத்தானே  இருக்கு! உழைச்சுப்பிழைக்க என்னகேடு? " என்று கேட்பான். (நீங்க எல்லோரும் என்கோவில் வாசலில்   பிழைப்புக்கு வழியில்லைனு  நிக்கிறீங்களே"னு கடவுள் திருப்பிக் கேட்க மாட்டார்.)
வந்தவர் அப்படியே பார்வையை ஓடவிட்டார். ஒரு டீக்கடை கண்ணில் பட்டது. அங்கே சிலர் கையில் ஒரு கையில் நியூஸ் பேப்பரை வைத்துக் கொண்டு மறுகையால் ஒரு கண்ணாடி கிளாஸில் உள்ள டீயை தேவா மிர்தம் மாதிரி உறிஞ்சிக் குடித்தபடி, டீக்கடையின் உள்ளே உள்ள டீவியில் கண்களைப் பதித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். கடவுள் தனது கண்களை தொலைக்காட்சியில் பதித்தார். அதில் பொது ஜனங்கள் தங்கள் கருத்தைப் பதிவுசெய்து கொண்டிருந்தார்கள். "நாங்க இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கிறோம். குழாயைத் திறந்தால் பாலும் தேனும் பொங்கி வருது. குழந்தைங்க ரொம்ப சந்தோசமா இருக்கிறாங்க. எந்தவொரு பயமும் இல்லாமே நடு ராத்திரியில் வீட்டுக்கு வர்றாங்க. ரோட்டில் நடப்பது வானத்தில் பறக்கிறமாதிரி இருக்குது. அந்த அளவுக்கு தூய்மை... தெருக்களில் வழுவழுப்பு... பளபளப்பு! கையில் காசை எடுக்கும் போதே எங்களுக்கு தேவையானது எல்லாமே கிடைக்குது. நோய்னு சொன்னா அது என்னனு எங்களுக்குத் தெரியாது! பைனல் எக்ஸாம் எழுதும்போதே எங்கவீட்டு குழந்தைகளுக்கு வேலைக்கு ஆர்டர் வந்து டுது" என்று சொல்ல, "சபாஷ்டா கண்ணு! நீ உலகத்தை நல்லாத்தான் மெயின்ட்டைன் பண்றே !" என்று தனது முதுகில், தானே தட்டிக் கொண்டார் கடவுள். 
அப்போது விளம்பரஇடைவேளை வரவும் கடைக்காரர் அடுத்த சேனலுக்கு தாவினார். அதில் பலர் காலிக் குடங்களைக் கையில் வைத்துக்  கொண்டு, "எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு இதுதான் தண்ணீனு படத்தைக் காட்டி தெரிய வைக்க வேண்டியிருக்கு து. ஒரு மாசமா தண்ணி வரலே. வீட்டை சுத்தி கொசு. எங்கே பார்த்தாலும் வியாதி. பையிலே பணத்தை எடுத்துட்டு போய் கையிலே பொருளை வாங்க வேண்டிய நிலையில் விலைவாசி இருக்குது. நடக்கிற மாதிரியா ரோடு இருக்குது. தெருக்களில் உள்ள குழிக்குள் விழுந்து எழும்பாமே வந்தா அதுவே பெரிய விஷயம்.  தண்ணி இல்லே ... விவசாயம் நடக்கலே... வேலை வெட்டி எதுவும் கிடைக்கலே .. கடன் பட்டு குழந்தைகளைப் படிக்க வச்சோம். படிச்சு முடிச்ச பட்டத்தை கையில் வச்சுகிட்டு வேலை வெட்டி எதுவும் இல்லாமே நிக்குதுங்க. நாங்கள் வாழ்வதா சாவதா?" என்று சொல்லும்போதே விளம்பர இடை வேளை வந்தது. கடைக்காரர் அடுத்த சேனலுக்கு தாவினார். எடுத்த எடுப்பிலேயே "இவர்கள் இருவர்   சொல்லுவதுமே அப்பட்டமானபொய் !" என்று ஆக்ரோஷமாக சொன்னார் ஒருவர் .
தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்பது தெரியவில்லை கடவுளுக்கு . அருகிலிருந்தவர்களைக் கவனித்தார்.யாரிடமும்எந்தவொரு ரியாக்சனும் இல்லே. டீயை உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். கடவுள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடி ஒரு மரநிழலுக்கு வந்தார். "அப்பாடா மனுஷன் இதை யாவது விட்டு வச்சிருக்கிறானே!" என்று நினைத்துக் கொண்டார்.
"பரவாயில்லே ... இந்த மனுஷப்பிறவிங்க கிரேட் தான். நாம ஞான திருஷ்டியில் உலகத்தைப்  பார்க்கிறதை, இந்தப் பரதேசிங்க பட்டனை அழுத்தியே பார்த்துடுதுங்க! நமக்கிருக்கிற டென்ஷனில் நாமதான் அதை கவனிக்காமே விட்டுட்டோம்போலிருக்குது!" என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். 
"ஒருத்தன் ஒண்ணு சொன்னான்..இன்னொருத்தன் வேறொண்ணு சொன்னான். மூணாவது ஒருத்தன் "இந்த ரெண்டும்  இல்லே...இரண்டுமே பொய்"னு சொல்றான். "இது" அல்லது "அது"னு  ஏதாது ஒண்ணுதானே இருக்க முடியும். இரண்டுமே இல்லாத ஒண்ணு எப்படி இருக்க முடியும்?' என்று கேட்டபடி தலையை சொரிந்தபடி யோசிக்க ஆரம்பித்தார். விடை கிடைக்கலே..சொரிந்த நிலை மாறி, "பிய்த்துக் கொள்ளும்" நிலைக்கு வந்தார். முடிவு தெரியாமே பிய்க்கிறார்... பிய்க்கிறார் ....பிய்த்துக் கொண்டே  ஓடறார்...ப்ளீஸ் ஹெல்ப் ஹிம் .... ஹெல்ப் .... ஹெல்ப்  .....! 

Monday, September 12, 2016

சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ !

Image result for images of robbery in his own house
எப்போதோ ஒரு சமயத்தில் படித்த ஒரு சிறுகதை. ஒருத்தனுடைய கைச்செலவுக்கு அவன் குடும்பத்தில் காசு கொடுப்பது கிடையாது. வேலை வெட்டி இல்லாத உனக்கு சாப்பாடு போடறதே பெரிய விஷயம். இதிலே கையில் வேறு காசு தரணுமா என்று கேட்பார் அப்பா.
இவனுக்கு வீட்டில் எது எது எங்கே இருக்குங்கிறது தெரியும். யாருமில்லாத நேரம் பார்த்து தனக்கு வேண்டியதை எடுத்து ஒரு இடத்தில் பத்திரம் பண்ணினான்.   பெட்டியை, வீட்டுப் பூட்டை இவனே உடைத்துவிட்டு திருடு போன மாதிரி ஒரு செட் அப் பண்ணினான்.
வெளியில் போனவர்கள் வீடு திரும்பும் போது   இவனும் வீட்டுக்கு வந்தான். எல்லோருடனும் சேர்ந்து இவனும் திருடனை தேடினான்.
இன்று காலையில் டீவி நியூஸ் பார்க்கும்போது அதில் ரயிலில் 6 கோடி களவு போன விஷயத்தை இன்னும் துப்பு துலக்க முடியவில்லை என்ற செய்தி காதில் விழுந்ததிலிருந்து சிறு வயதில் படித்த ( மேலே சொன்ன ) கதை நினைவில் ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது ஏன் ?

Sunday, September 11, 2016

டைம்பாஸ் பண்ணுங்க BOSS ! (02)

Image result for image of women typing in a typewriter



அரசியல் செல்வாக்கினால் ஒரு பெண் ஒரு அலுவலகத்தில் வேலையில் சேர்ந்தாள். வேலையில் சேர்ந்துவிட்டாளே தவிர வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்குத் துளியும் கிடையாது. ஒருநாளில் அரைமணி நேரம் வேலை பார்த்தால் அதுவே அதிகம். அந்த வேலையில் உள்ள தப்புகளைக் கண்டுபிடித்து சரி செய்ய ஆபீஸ் சூப்பிரெண்டுக்கு அரைநாள் தேவைப்பட்டது. அவர் படும் அவஸ்தையை மொத்த ஆபீஸும் வேடிக்கை பார்ப்பது வாடிக்கையாக இருந்தது.
ஒருநாள் அந்தப் பெண்ணுக்கு   ரோஷம் வந்துவிட்டது.
"இன்னிக்கு ஒரு தப்புகூட இல்லாமே டைப் பண்ணி உங்க முன்னே பைலை வைக்கிறேன் ஸார். சேலஞ்ச்!" என்று சொல்ல, "ஒன்றிரெண்டு தப்புன்னா பரவாயில்லேம்மா. ஒட்டுமொத்தமும் தப்பா இல்லாமே இருந்தால்  சரிதான் " என்றார்சூப்பிரெண்ட் பரிதாபமாக.
சற்று நேரத்தில் லெட்டர் டைப் பண்ணி எடுத்துக் கொண்டு வந்த அந்தப்பெண் அவர் மேஜை மீது அந்த லெட்டரை வைத்து விட்டு , "படிச்சுப் பார்த்துட்டு சொல்லுங்க ஸார் " என்றாள் ஆணவத்தோடு.
கையில் வாங்கி முழுவதும்  படித்த அவர், "ஒரே ஒரு தப்பு இருக்கு!" என்று சொல்ல, ஒட்டு மொத்த அலுவலகமும் அது எப்படி சாத்தியம் என்று அதிர்ந்து போய்  நிற்க, "அதான் ஒரு தப்பு அலவ்ட்னு நீங்க சொன்னீங்களே !" என்றாள் அவள் அசால்ட்டாக.
"முதல் லைனைப் படிச்சிட்டேன். ஒரே ஒரு தப்புதான் .  இனி ரெண்டாவது லைனுக்குப் போறேன்!" என்று சூப்பிரெண்ட் சொல்ல, அதிர்ந்து போய்  இருந்த அலுவலகம் மீண்டும் பழைய நிலைக்கு வந்தது.

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 02)

PUZZLE - 01 ன் விடை - "1" என்ற நம்பர் 12 முறை வரும் : 1 10 11 12 13 14 15 16 17 18 19
இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.

PUZZLE - 02
Image result for images of shopes in a street

ஒரு கடை வீதிஅங்கு மொத்தம் 30 கடைகள் இருந்தனஅவற்றிக்கு 1 முதல் 30 வரை வரிசையாக நம்பர் கொடுக்கப் பட்டிருந்ததுஇப்போது கேள்வி என்னவென்றால் இதில் "2" என்ற எண் எத்தனை முறை இடம்  பெற்றிருக்கும்.
விடை தேடுங்கள். உங்கள் விடையை சரிபார்க்க ஒருவாரம் காத்திருங்கள்

Saturday, September 10, 2016

DEAR VIEWERS,

உங்களின் பார்வைக்காக முந்நூறுக்கும்  மேற்பட்ட ON -LINE PUZZLES IN ENGLISH எனது மற்றொரு பிளாக்கில் பதிவாகியுள்ளது.

https://arunasshanmugam.blogger
பாருங்கள் ; உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். 

Friday, September 09, 2016

சாமி - எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ !


Image result for images of just born animals

மற்ற  உயிரினங்களைக் காட்டிலும் மனிதன்தான் அறிவில் மேம்பட்டவன் என்கிறார்கள்.
மற்ற  உயிரினங்கள் தாயின் வயிற்றி லிருந்து வெளியில் வந்ததுமே மோப்ப சக்தியின் மூலமே தாய் மடி (மடு) தேடி பால் குடிக்க ஓடுகின்றன. அதுவாகவே எழும்ப நடக்க ஓட கற்றுக் கொள்கின்றன.
ஆனால் மனிதப்பிறப்புக்கு மட்டுமே ஒவ்வொன்றையும் பழக்கிவிட வேண்டிய அவசியம் இருக்கிறது. (பிறந்த சிசு, பால் குடிக்க வைக்க சில தாய்மார்கள் போராடுவார்கள்.). தானாக கால் ஊன்றி  நடக்கும் வரை தாயின் துணை மனிதனுக்கு தேவைப்படுகிறது.
அந்த விஷயத்தில் பறவைகள், மிருகங்களைவிட நாம் ஒருபடி இறங்கி தானே இருக்கிறோம். இதுக்கு உங்களோட பதில் என்ன மக்களே !

Wednesday, September 07, 2016

DEAR VIEWERS

Image result for images of cute babies



கதை சொல்லியபடி குழந்தைக்கு (பேத்தி) சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தேன்.     அப்போது  அங்கு வந்த எங்கள் வீட்டு வாரிசு, "மனுஷன் செவ்வாய்க்கிரகத்துக்குப் போக முயற்சி பண்ணிக்கிட்டிருக் கிறான்.  நீ இன்னும் பாட்டி வடை சுட்ட கதையை சொல்லி குழந்தையை ஏமாத்திட்டு இருக்கிறே !" என்றான். 
"பாட்டி மட்டுமா சுட்டாள்? பாட்டிகிட்டே இருந்து வடையை காக்கா சுட்டுது . காக்கா கிட்டே இருந்து நரி சுட்டுது. நாங்க தலைமுறை தலைமுறையா இதை சுட்டுட்டு இருக்கிறோம். இதை நாங்க சொல்றதாலே உனக்கு என்ன பிரச்சனை? இல்லாத ஒண்ணை, மத்தவங்களுக்குத் தெரியாத ஒண்ணை, மத்தவங்க மறந்த ஒண்ணை எடுத்துச்சொல்லியே ஆகணும்தானே!என்றேன்.
" அப்படி என்னதான் அதில் இருக்குது?" என்றான்.
அப்போது அவனுக்கு சில விஷயங்களை புரிய வைத்தேன்.
"ஓ !" என்றான்.
உங்கள் வீட்டிலும் குழந்தைகளுக்குக்  காக்கா கதை சொல்லும் பழக்கம் உண்டா? அதை உங்களது வாரிசுகள் கிண்டல் பண்ணுகிறார்களா? நான் சொல்வதை நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்.
மனுஷன் அறிவாளியாக வல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. மனுஷன் மனுஷனாக இருக்கணும்.
மனிதனெல்லாம் தெரிந்து கொண்டான் வாழும்வகை புரிந்து கொண்டான் .  மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை.
அப்படி இருக்க சில நல்ல பழக்க வழக்கங்கள் அவனுடைய குழந்தைப் பருவத்தில் இருந்தே அவனுக்குப் புகட்டப்பட வேண்டும்.
"பாலோடு சேர்த்து நம்ம பண்பை ஊட்டணும்" என்கிறது பழைய சினிமாப் பாடல் ஒன்று.
"நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்!
நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை விதைக்கணும் !!" என்கிறது மற்றொரு பாடல் .
பொது இடங்களில் எப்படி நடந்து கொள்வது என்பதைப் பாடம் நடத்தி (சிறுசு/பெருசுகளுக்கெல்லாம்) விளங்க வைக்க வேண்டிய நிலை. பாடம் நடத்தினால் போதுமா? (சாட்டைஎடுத்து அடித்தால் நிலைமை மாறுமா?)
"அளவில்லாமே படிச்சுப்படிச்சு மூளை குழம்பிப் போச்சு!" என்கிற நிலை தான்  இன்றைய தலைமுறைக்கு.
இந்தப்பாடல்கள் எல்லாம் வருவதற்கு முன்பே நம்ம முன்னவங்க நிறைய விஷயங்களை நமக்கு கதைகளாக சொல்லிட்டுப் போயிட்டாங்க. ஒவ்வொரு கதையுமே ஒரு நல்ல நீதியை சொல்லுது.
பாட்டி வடை சுட்ட கதையில், வயதான காலத்திலும் தன்னால் முடிந்த ஒரு வேலையை செய்து பாட்டி பிழைப்பு நடத்தினாள். முதுமையை காரணம் காட்டி யாசகம் கேட்கலே. தவறான வழியில் அடையும் பொருள் நிலைத்து இருப்பதில்லை. நீ ஒருத்தனை ஏமாத்தி பிழைக்க நினைச்சா உன்னை ஏமாத்த ஒருத்தன் கண்டிப்பா இருப்பான் என்பது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு எடுத்து சொல்லத்தான்  கதை சொல்லும் பழக்கம் / முறையைக் கையாண்டார்கள் முன்னோர்கள் .
திராட்ஷை பழத்துக்கு முயற்சி செய்து ஏமாந்த நரி, "ச்சீ... ச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று சொன்னதாக சொல்வதன் கதையின் மூலம் "ஒரு பொருள் உனக்குக் கிடைக்காட்டா அதை நினைச்சு ஏங்காதே..அதையே நினைச்சிருந்து மத்த விஷயங்களைக் கோட்டைவிட்டுடாதே. கிடைக்காத ஒன்றுக்காக மற்றவர்களைப் பழிவாங்க நினைக்காதே!" என்று எப்பேர்ப் பட்ட விஷங்களை நமக்கு சொல்லி வைத்திருக்கிறார்கள். (இது எல்லார் மனசிலும் பதிந்திருந்தால் ஒருதலைக்காதல் கொலைகள், ஆஸிட்வீச்சு சம்பவங்களும் நடந்திருக்காதே. .)
குறுகியபாதையில் இரண்டு ஆடுகள் ஒன்றை ஒன்று கடக்க முயலும் போது "நீயா நானா?" போட்டியில் இரண்டு ஆடுகளுமே நீரில் விழுந்தன என்றொரு கதை உண்டு. ஒருவருக்கு வழி விட்டு அவர்கள் கடந்து செல்லும்வரை பொறுமை காத்தால் இரண்டு பேருமே SAFE ஆக பயணம் போக முடியும் என்ற நீதியை சொல்கிறது. இதை இந்த தலைமுறைக்கு கண்டிப்பா சொல்லியே ஆகணும்.
எலெக்ட்ரிக் ட்ரைனில் தினமும் பார்க்கும் காட்சி. ட்ரைனில் ஏறுபவர்கள், உள்ளே வருவது கிடையாது.எண்ட்ரன்ஸ்ல் நின்று கொண்டு மொபைலை நோண்ட வேண்டியது. ( இதில் 90% காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ).
இது பற்றி நிறையவே பேச வேண்டும்.
எலெக்ட்ரிக் ட்ரைனில், லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் தினமும் நடக்கும் வாக்குவாதம் மீன் மார்க்கெட்டை விட மோசமாக இருக்கும். (இதை யாராவது ரிக்கார்ட் செய்து கூகுளில் ஏற்றினால் viewers record ஒரு ரிக்கார்ட் பிரேக் பண்ணும்.
ஒரு ஸ்டேஷன் வரும்போது அதில் இறங்குபவர்கள் மட்டும் எண்ட்ரன் ஸ்ல்  நின்றால், அவர்களை அடுத்து மற்றவர்கள் நிற்பார்கள். ஆனால் அந்தப் பழக்கம் கிடையாது. யார் இறங்க நிக்கிறாங்க... யார் சும்மா பிலிம் காட்ட நிக்கிறாங்க என்பது யாருக்கும் தெரியாது. யாரையாவது "நீங்க இங்கே இறங்கப் போறீங்களா ?" னு கேட்டால் அதற்கு ஒரு வாக்கு வாதம்.
இதை தவிர்க்க, இறங்குபவர்கள் முன்னால் வந்து நின்று கொண்டால், "நாங்க எதுக்கு நிக்கிறோம் ... இறங்கத்தானே !" என்பார்கள்.
"அது உன் முகரக்கட்டையில் எழுதியா ஒட்டி இருக்குது ?" என்று கேட்பார்கள் வாய்த்துடுக்கு லேடீஸ். தினமும் யாராவது ஒருத்தர் விழுந்து எழுகிறார்கள். ஆனாலும் புத்தி வரலே. 
வீட்டிலுள்ள பெண்கள் எப்பவும் சீரியல் பார்ப்பது பற்றி ஜோக்ஸ் எழுதற புண்ணியவான்களே, நிற்கும்போதும், நடக்கும்போதும், ரோடு க்ராஸ் பண்ணும்போதும் மொபைலை நோண்டிக்கொண்டே போகிறவர்களில் 99 சதவிகிதம் பேர்  சினிமா பாட்டு, காமெடி, அல்லது பால்ஸ் உடைச்சு விளையாடுற கேம்ஸ் என்றுதான் நோண்டிக் கொண்டிருக்கிறார்கள். மொபைல் கையில் இருப்பதால் அறிவுஜீவிகள் என்ற நினைப்பில் மிதப்பு . கோடிக்கணக்கில் தினமும் பிசினெஸ் பண்றவன், மொபைலைக் கண்டு பிடிச்சவன்கூட இந்த அளவு நோண்டி இருக்க மாட்டான்.
(சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு நாடு. (ஜப்பான் என்று நினைக்கிறேன்) ட்ரெயின் வந்து நின்றதும் எண்ட்ரன்ஸ் அருகில் இருபுறமும் வரிசையாக நிற்கிறார்கள். இறங்குபவர்கள் எந்த இடைஞ்சலும் இல்லாமல் இறங்கி செல்ல, நிற்பவர்கள் எந்த அசௌகரி யமும் இல்லாமல் ஏறி செல்கிறார்கள் . அது யாருடைய முகநூல், என்ன தலைப்பு என்பதை நோட் பண்ண மறந்துவிட்டேன். உங்களில் யாருக்காவது   அதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை ஒவ்வொரு கல்லூரிக்கும், ஸ்கூல்களுக்கும் காப்பி எடுத்து அனுப்புங்கள், ஸ்டூடெண்ட்ஸ் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோளுடன்.
பொதுஇடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பெரியவர் களுக்கு எடுத்துசொல்லி புரியவைக்க முடியாது. குழந்தைகளுக்கு சொன்னால் குழந்தைகள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்பு கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை !.
நாங்கள் பள்ளியில் படித்த நாட்களில் முதல் பீரியட் எடுக்கும் டீச்சர் வகுப்புக்குள் நுழைந்தததுமே எல்லோரும் தலையில் எண்ணெய் வைத்து, ஜடை பின்னி ரிப்பன் கட்டியிருக்கிறோமா என்பதைத்தான் முதலில் கவனிப்பார். தலைமுடி கலைந்து அலை பாயக்கூடாது. எல்லாருமே ரிப்பன் கட்டி ஜடை போட்டுத்தான் போயிருப்போம். வளர்ந்த மாணவிகள் சிலர் தவிர்க்க முடியாத காரணத்தால் தலைக்குக் குளித்துவிட்டு தலைமுடியை பின்னல் போடாமல் வந்து நின்று வாங்கிக் கட்டிக் கொள்வார்கள்.
"கதை புக் படிக்கிற பழக்கம் உண்டுதானே ... சினிமா பார்க்கும் பழக்கம் உண்டுதானே..அதிலெல்லாம் பித்துப் பிடித்தவனையும் மனநோயாளியை யும் சித்தரித்துக் காட்ட கலைந்த, வாரப்படாத தலையுடைய ஒருவன்"னு சொல்றது தெரியும்தானே. துக்கவீட்டில்தான் தலைவிரி கோலமாக இருப்பார்கள்.   நீ ஏன் இந்தக் கோலத்தில் வந்தே ?" என்று டீச்சர் கேட்பார்.
இப்போ காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாமே தலைவிரி கோலத்தில்தான் வருகிறார்கள். பொது இடங்களில் நிற்கும்போது அது காற்றில் பறந்து மற்றவர்கள் மேல் படுகிறதே என்ற சிந்தனை எல்லாம் கிடையாது.  அதை எத்தனை பேரால் சகித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணமும் கிடையாது.
ஒரு விஷயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கைகளை வீசி நடக்கும் உரிமை நமக்கு உண்டு. அதற்கு யாரும் தடை சொல்ல முடியாது. ஆனால் நம்  கைகள் மற்றவர்கள் மீது படாமல் பார்த்துக்  கொள்வது அவசியம் !
விமானப் பயணத்தின் போது ஏர் - ஹோஸ்டஸ் அதை நடித்தே காட்டுவார் "நீங்கள் விமானத்தின் உள்ளே நடக்கலாம். ஆனால் நடக்கும் போது கைகளை முன்புறம் கட்டிக் கொள்ள வேண்டும். யார் மீதும் இடித்து விட கூடாது என்று பிளைட் பறக்கும் முன்பாகவே சொல்வார். அதை ஒவ்வொரு பஸ்ஸிலும் ட்ரெயினிலும் நடித்துக் காட்டினால் நல்லது என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக பார்க்கும் காட்சி. ஒரு சினிமா வெளி வருவதற்கு முன்பே அதில் பங்கேற்பவர்கள் நடத்தும் ஒரு ஷோ வரும். அதில் ஒரு பெண் கண்டிப்பாக இருப்பாள். அங்குள்ள அத்தனை ஆண்களும் ரொம்ப டீசென்ட் ஆக டிரஸ் பண்ணி கைகளைக் காட்டியபடி உட்கார்ந்திருப்பார்கள். பெண் மட்டும் முழங்கால் தெரியும் உடையில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார். தலைமுடியை ஒரு நொடிக்கொரு தடவை பின் பக்கமாகக் கோதிவிட்டபடி.
அதை பார்க்கும்போது எங்கள் அம்மா சொல்லும் வசனம் : சூப்பின பனங்கொட்டை மாதிரி தலைமுடி. அதை விரிச்சு வேறே போட்டிருக்கே. அது உனக்கு இடஞ்சலா இருந்தா ஒரு கேர் பின்னை எடுத்துக் குத்து. இல்லாட்டா முடியை பறக்க விட்டுகிட்டு பைத்தியம் மாதிரி உட்கார்ந்திரு. ரெண்டும் இல்லாமே  மண்டையைத்தடவி கிட்டு ஏன் உட்கார்ந்திருக்கிறே ? கூட உட்கார்ந்திருக்க அத்தனை ஆம்பிளையும் ஒழுங்காதானே இருக்கிறான். கடை போட்டு எல்லாரையும் கூப்பிட வேண்டியது ... பிறகு அது நடந்தது இது நடந்ததுனு ஒப்பாரி வைக்க வேண்டியது. இதுக சொல்றதை தத்துவம் மாதிரி உக்கார்ந்து கேக்கிறியே. உனக்கு வேறே வேலை இருந்தால் போய்ப்பார்.
இதைப் பார்த்து அப்படியே ரிப்பீட் பண்ற நட்டு கழண்ட கேஸ் எத்தனை எத்தனை ?
குழந்தைகள் வளர்ச்சியில் அக்கறை காட்டுபவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை நல்லதொரு சிட்டிஷனாக தயார் பண்ணி வைத்திருக்கிறீர்கள் என்பதை சொல்லுங்களேன். நம் வீட்டுக் குழந்தைகள் மேதையாக அறிவாளியாக வல்லவனாக வருவதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். பொது இடங்களில் மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து கொள்ள கற்றுக் கொடுங்கள்.!

Sunday, September 04, 2016

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 01)

சென்ற வாரப் புதிருக்கான விடையை எத்தனை பேர் கண்டு பிடிச்சிங்க ? அந்தப் புதிர் -   "நீ உன் அப்பாவுக்கு எத்தனையாவது குழந்தை?'. இதை அப்படியே ஒரே வார்த்தையில் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தது எத்தனை பேர்? என்னிடம் விடை கேட்காதீர்கள். இதற்கான விடை எனக்குத் தெரியாது. இதேகேள்வியை 1965லிருந்தே நானும், எனது நட்பு வட்டங்கள், உறவினர்கள் சிலரும் பலரிடம் கேட்டுப் பார்த்தோம். யாராலும் தெளிவான பதிலை நாங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான வடிவில் தரவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால் அதை எனக்கு மெயில் அனுப்பவும். Mail id: arunasshanmugam@gmail.com.
இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.  


PUZZLE - 01

Image result for images of apartment buildings

20 
வீடுகள் கொண்ட 5 அடுக்கு அபார்ட்மெண்ட்ஒவ்வொரு ப்ளோரிலும்  நான்கு வீடுகள் . அவற்றிற்கு 1 லிருந்து 20 வரை வரிசையாக நம்பர் எழுதப்பட்டிருந்ததுஇப்போது கேள்வி என்னவென்றால்இதில் "1" என்ற எழுத்து (நம்பர் ) எத்தனை முறை வரும் ? 

(உங்கள் விடையை சரிபார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்கவும் )

Friday, September 02, 2016

Dear Viewers,

எனக்கொரு உண்மை தெரிஞ்சுது சாமி !!!!
Image result for images of  animals fight

இன்றைய நாளில் விபத்துக்களும், கொலை - குண்டு வெடிப்பில் உயிர்ப்பலிகளும் சர்வ சாதாரணமான ஒரு செய்தியாகி விட்டது. அதை யாருமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. பொதுமக்கள் ஒரு "உச்" கொட்டிவிட்டால் அதோடு அவர்கள் பொறுப்பு முடிந்து விட்டதாக அர்த்தம். அரசியல்வாதிகள் அறிக்கைகள் மூலமாக அவர்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள். குற்றவாளி பிடிபட்டாலும் அவனுக்குத் தண்டனை கிடைக்க பல வருடங்கள் ஆகிறது. அதற்குள் நிறைய பேருக்கு என்ன கேஸ் என்பதே மறந்து விடுகிறது.
அநேக நேரங்களில் மனிதர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தைவிட ஆடுமாடுகள், பறவைகள் நாய்களுக்கு சில அமைப்புகள் கொடுக்கின்றன.
அது ஏன் என்பது புரியாமல் இருந்தது.மாட்டுக்கோ நாய்க்கோ ஏதாவது ஒண்ணுன்னா உடனே தண்டனை கிடைச்சிடுது. அது ஏன் என்ற உறுத்தல் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது.
இந்த மாத (செப்டம்பர் 2016) மல்லிகை மகள் மாத இதழில் ஒரு தொடரில் ஒரு நாய் என்ன மாதிரியான வேலைகளைச் செய்யாது என்று பட்டியலிடப்பட்டிருந்தது. (ப்ரூப் ரீடிங்கின் போதே மனதில் பதிவு செய்து கொண்டேன்). அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிந்தது. மிருகங்கள் தன்னுடைய பிழைப்புக்காக ஒன்றையொன்று அடித்துப் பிழைக்குமே தவிர, ஒன்றையொன்று கெடுத்துப் பிழைக்காது. தேங்க்ஸ் டு  அனிமல்ஸ் !