Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, June 29, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 28

( நான் எழுதிய  இச்சிறுகதை T ராஜேந்தரின் உஷா 15.04.1996 இதழில்  வெளியாகியுள்ளது )

                                          ஏமாறச் சொன்னது  நானோ ?

கண்ணாடி முன் நின்று தலை முடியை படிய வாரிய குமார், பின்பு ரஜனி 
ஸ்டைலில் கலைத்து விட்டுக் கொண்டான். உடம்பை அரை வட்டமாகத் 
திருப்பி பின் பக்கமாக ஷர்ட்டை இழுத்துவிட்டு பேண்டுக்குள் செருகிக் 
கொண்டான்.கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்வதா வேண்டாமா என்று 
மனதுக்குள் நடந்த பட்டி மன்றத்தில், போட்டுக் கொள்வது என்றே முடிவானது .
அரவிந்துடன் பேசும்போதே கண்டிப்பாக கூலிங் கிளாஸ் போட்டு கண்ணை 
மறைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனதின் எண்ணங்கள் 
கண்களில் வெளிப்படுவதை மற்றவர் அறியாமல் மறைக்க முடியும்.
 " அடியே,வித்தாரக் கள்ளி, நீ என்னை ஏமாற்றிவிட்டு எவனுடன் வாழ்ந்துவிடப் 
போகிறாய் என்பதையும் பார்த்து விடுகிறேன் !" என்று மனதுக்குள் கறுவிக்
கொண்டான்.
வேலைக்காக அலைந்து களைத்துப் போன குமார், கடைசி முயற்சியாக 
வேலையிலிருக்கும் பெண்ணிற்காக வலை விரித்துப் பார்த்தான். சாந்தாவை சந்திக்க நேர்ந்தது தற்செயல்  விபத்துதான். அதன் பிறகு , கார்ட்,கவர் வாங்கும் சாக்கில் தினமும் போஸ்ட் ஆபீஸ் சென்று வர 
ஆரம்பித்தான் .தினமும் வந்து போகும் பேர்வழி என்பதால், அவனைப் பார்த்தவுடனே கவர்,கார்டை எடுத்து நீட்டினாள்  சாந்தா. ஒருநாள் நாசூக்காக அவளிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
"இதோ பாருங்க மிஸ்டர், எனக்கு இந்த காதல் கீதல்ல எல்லாம் நம்பிக்கை 
கிடையாது. ஏதாவது பேசுவது என்றால் எங்க வீட்டில் வந்து முறையோடு 
பேசுங்க " என்று  நறுக்குத் தெறித்தாற்போல்   சொல்லி விட்டாள்.
இதைவிட பெரிய அவமதிப்பை அவள் வீட்டில் குமார் சந்திக்க நேர்ந்தது.  
எடுத்த எடுப்பிலேயே பெருங்குரலில் அவள்  தந்தை கத்த ஆரம்பித்து விட்டார்
" ஏண்டா, வேலை வெட்டியில்லாத உங்களுக்கெல்லாம் உழைச்சுப் போட ஒரு 
பொண்ணு வேணும். அப்படித்தானே?  உன்னோட ஒருவேளை சோத்துக்கே 
உங்க அப்பன் கையை எதிர்பார்த்து நிற்கிறே, இந்த அழகில் உனக்கு எதை நம்பி 
பெண் கொடுக்க முடியும் ?" என்று முகத்திலடித்தாற்போல் கேட்டு, முதுகில் 
அடிக்காத குறையாக துரத்தி விட்டார்.
வேலை பார்க்கிற பெண், நகை நட்டோடு வந்தால் அதை வைத்து ஏதாவது 
பிசினஸ் பண்ணி பெரிய ஆளாகிவிடலாம் என்ற எண்ணத்தில் மண் விழுந்தது.
சாந்தாவை தனியாக சந்தித்து, நகை பணத்தை எடுத்துக்கொண்டு தன்னோடு 
வந்துவிட்டால் ஒருமாத காலம் வெளியூரில் தங்கிவிட்டு பிறகு இங்கு வந்து 
விடலாம். அதற்குள் மற்றவர்களின் கோபம் தணிந்து விடுமென்று 'வேப்பிலை 
அடித்து'ப் பார்த்தான்.
" ஏய் , மிஸ்டர், இனிமேல் ஒரு நிமிஷம் இங்கே நின்றால் கூட உன்னைப் பற்றி 
போலீசில் கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன். பிறகு நீ மனைவி இல்லாமலே 
மாமியார் வீட்டுக்குப் போயிடுவே" என்று அரக்கத் தனமாகக் கூறிவிட்டாள்.
" நீ வாழ்ந்து விடுவதை நானும் பார்த்து விடுகிறேன் " என்று சவால் விட்டு 
வந்தவன் அதைச் செயலிலும்   காட்ட ஆரம்பித்தான்.
இது நடந்து இரண்டு வருடங்களாயிற்று. ஏதோ குமாரின் கைங்கரியத்தால் 
சாந்தாவிற்கு வந்த வரனெல்லாம் தட்டிப் போனது. வேலை தேடி டில்லி 
சென்ற குமார் ஒரு மாதம் கழித்து நேற்று தான் சென்னை வந்தான். வந்தவனுக்கு 
தான் எவ்வளவு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. சாந்தாவிற்குத்
திருமணம் ஆகிவிட்டதாம். இந்த நினைப்பே எரிச்சலைத் தந்தது. இன்று 
வைக்கப் போகும் வெடியில் சாந்தாவின் வாழ்வே வெடித்துச்சிதற  வேண்டும் 
என்று விநாயகரை வேண்டிக் கொண்டான். சாந்தாவின் கணவன் அரவிந்த் 
வேலை பார்க்கும் இடத்தை தேடிப் போனவனுக்கு  அதைவிட பெரிய 
அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அரவிந்த் தன்னுடைய கல்லூரி நண்பனாச்சே 
என்று ஒரு கணம் தயங்கினான். வழக்கமான சம்பிரதாய விசாரிப்புகளுக்குப் 
பின் நேரடியாகக்  களத்தில் இறங்கினான்.
" ஏம்ப்பா, உனக்கு வேறே பொண்ணே கிடைக்கலயா? இருந்திருந்து இந்த 
சாந்தாதான் உனக்குக் கிடைச்சாளா?" என்று நேரடித் தாக்குதலில் இறங்கினான்.
" நீ நினைக்கிறது தப்பு குமார். இப்போதான் நான் நிம்மதியா இருக்கிறேன். என் 
மனைவி சாந்தா கல்லூரியில் படிக்கிற நாளில் யாரோ ஒருவனை நம்பி 
வீட்டை விட்டுப் போனவதான். இவ நகை பணத்தை அவன் எடுத்துக் கொண்டு 
இவளை ரெட் லைட் ஏரியாவில் விற்றுவிட்டு ஓடிட்டானாம். என் மனைவியோட 
பேர் பம்பாய் போலீஸ் ரிக்கார்டில் பதிவாகி இருக்காம். அதன்பிறகு யார்யாரையோ 
பிடிச்சு எப்படீ எப்படிஎல்லாமோ தப்பி சென்னை வந்து, தன்னுடைய 
குடும்பத்துடன் செட்டில் ஆனாளாம். இதை எல்லாம் என் மனைவியே என்னிடம் 
சொல்லிவிட்டாள் " என்றார் அரவிந்த் நிதானமாக.  
ராட்டினத்தில் ஏறாமலே தலை சுற்றியது குமாருக்கு. " அடியே  சண்டாளி ,
இப்படி வேறு கதை சொல்லி வைத்திருக்கிறாயா?" என்று மனசுக்குள் நினைத்த 
குமார்,  " இவ்வளவு தெரிந்தும் ஒரு நடத்தை கேட்ட பெண்ணை திருமணம் 
செய்யும் அளவுக்கு உனக்கு என்ன வந்து விட்டது " என்றான் படபடப்பாக.
" உனக்குத்தான் என் தங்கை விமலாவை  தெரியுமே.நம்ம காலேஜ் மேட் 
பாஸ்கரை விரும்பினா. அதை நாங்க எதிர்க்கவும் கட்டின புடவையோடு 
வீட்டை விட்டு  அவனோடு ஓடி விட்டாள். பாஸ்கர் வீட்டிலும் இவங்க 
காதலுக்கு பயங்கர எதிர்ப்பு. ரெண்டு பேருக்கும் வேலை இல்லாத நிலையிலே 
பொழைப்புக்கும் வேறொரு  வழியும்  இல்லேன்னு தெரிஞ்சதும் தற்கொலை 
பண்ணிகிட்டாங்க.  அவங்க பாடியைக் கூட பார்க்கக் குடுத்து வைக்கலே.
அவர்கள் வச்சிருந்த டைரி மூலமா விஷயம் தெரிந்து கொண்ட போலீஸ் , 
ஒரு வார காலத்துக்குப் பிறகு அவங்க மரணச்செய்தியை சொன்னது..
அதற்குப் பிறகு எல்லாரும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள் .
எல்லாமே காலம் கடந்த ஞானோதயம். ஏதோ ஒரு நிமிஷம் மனசு மாறி அந்த 
இளம் ஜோடியை  ஆசிர்வாதம் பண்ணி இருந்தால் , இளங்குருத்துக்கள் 
இருந்த இடம் தெரியாமல் போயிருக்காதே என்று மனச்சாட்சி என்னைக் கொல்ல 
ஆரம்பித்தது.  அந்தத் தப்புக்குப் பிராயச்சித்தமாக காதல் விவகாரத்தில் சிக்கி 
சீரழிந்த போன யாராவது ஒரு பெண்ணிற்கு வாழ்வு கொடுக்க வேண்டுமென்று 
நினைத்திருந்தேன்.. அதை எனக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லி 
வைத்திருந்தேன். ஒருநாள் சாந்தாவே என்னைத் தேடிவந்து தன்னோட 
கதையை சொன்னாள் . எனக்கும் சாந்தாவைப் பிடித்துவிடவே பெரியவங்க 
ஆசீர்வாதத்தோடு  அவளைத்  திருமணம் செய்து கொண்டேன் " என்றான் அரவிந்த் .
" எப்படியோ , நீ சந்தோசமாக இருந்தால் சரி " என்றான் குமார், வேறு என்ன 
சொல்வது என்பதை அறியாதவனாக. 
அவன் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு சாந்தா கைகொட்டிச்சிரிப்பது 
போல ஒரு பிரம்மை. எனவே திரும்பிப் பார்க்காமலே நடக்க ஆரம்பித்தான்..
 

Thursday, June 28, 2012

மகா பாரதம் தெரியுமா குழந்தைகளே ( Puzzle No. - 3)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்    
                                
       மகாபாரத  கதா பாத்திரங்கள் புதிருக்குள் ஒளிந்திருக்கிறார்கள் 

போன வாரம் இராமாயாணத்தை கரைச்சு குடிசிட்டோம்தானே ? இந்த வாரம் மகா பாரதத்தை ஒரு கை பார்த்திடலாம்

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும் )
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10  x  10  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)


       (இந்த புதிர்  14   .02  .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )


                        
    01 
 


   






 
 


  11



    
    02
 

  
   
   
   
   
     18 
   19
 

  
 
  

 
    03
 
  

 
 
 
  
  
 
  
 

 
 
 
 
  

    
  04
 
 


   20 


 
  
   21 
 

  
   
    22 
  05 

   

 
 
  
 
 

  

  

 
   


 
   12 
   
    06 
   

 
    07 
 

  
    
  

   
 
 

    

 

   

 
   17 
   


   13 
  
   
      

   

 

  

 
  
   

   
   15 


 

 
    14 
    
 
    

    08 
  



    

 

   
     09 
  

 
  


   10 
 
 
 
   
  
   
   

   
 
   


  
   16 

இடமிருந்து வலம்

 1  சபையில் பாஞ்சாலியின் துகிலுரிந்தவன்                                             ( 6 )
 2  பாண்டுவின் இரண்டாவது  மனைவி                                                      ( 3 )

 3  பிதா மகரின் தந்தை                                                                                         ( 4 )
 4  பிதா மகரின் தாய்                                                                                             ( 3 )
 5  ஜோதிடக்கலையில் வல்ல ஐவரில் ஒருவன்                                    ( 5 )
 6   குருஷேத்ர போரின் போது கிருஷ்ணன் அருளியது                       ( 2 )
 7  ஐந்து சகோதரர்களில் மூத்தவன்                                                              ( 4 )
 8  கண் பார்வையற்ற அரசனின் மனைவி                                                 ( 4 )
 9  பிதாமகரின் சாவு 'என்னால்தான்' என்று சத்யம் செய்தவள்         ( 3 )
10  மல் யுத்தத்தில் சிறந்த ஐவரில் ஒருவன்                                              ( 3 )


வலமிருந்து இடம்

11  வில்வித்தையில் சிறந்த ஐவரில்                                                           ( 5 )
12  பாஞ்சாலி மானம்  காத்தவன்                                                                  ( 4 ) 
13  ஐவரையும் இப்படி குறிப்பிடுவதுண்டு                                                ( 8 )
14  ஐவரின் தந்தை                                                                                               ( 3 )
15  பாண்டுவின் முதல் மனைவி, கொடைவள்ளலின்  தாய்            ( 6 )
16  கண் பார்வையற்ற அரசன்                                                                        ( 8 )

மேலிருந்து கீழ் 

    1 கௌரவர்களில் மூத்தவன்                                                                     ( 6 )
  11 அர்ஜுனனின் மகன்                                                                                    ( 5 )
  17  சூதாட்டத்தில் வல்லவன்                                                                       ( 3 )
  18 செஞ்சோற்று கடன் தீர்த்தவன்                                                             ( 4 )
  19  வித்தைகளுக்கு குரு                                                                                ( 4 )

கீழிருந்து மேல் 

 10  பிதாமகர் என்று அழைக்கப்பட்டவர்                                                  ( 4 )
 14  துரியோதனனின் மனைவி                                                                    ( 4 )
 16  துருபதன் மகள்                                                                                           ( 4 )
 20  ஐவரில் நான்காமவன்                                                                             ( 4 )
 21 சகோதரர்கள் நூறு பேரையும் இப்படி குறிப்பிடுவதுண்டு        ( 4 )
 22  சகோதரர்கள் நூறு பேரின் ஒரே ஒரு சகோதரி                            ( 4  )

Friday, June 22, 2012

Scanning of Inner- Heart ( மனதின் மறு பக்கம் ) - Scan Report No: 32

( நான் எழுதிய இச்சிறுகதை 27.11.1992 குங்குமம் வார இதழில் ' பரிசு பெறும் 
  நட்சத்திர சிறுகதையாக வெளியாகி உள்ளது )

                              சொந்தக்கதை .... சோகக் கதை ...

" ஏட்டீ .. அடுப்பிலே இன்னும் அஞ்சாறு சுள்ளியை ஒடிச்சு வை. தீ ஒரு பக்கமா 
எரியுது பாரு. பானைலே ஒரு பக்கமுள்ள நெல்லு மட்டும் வெந்து , மத்தது 
அப்பிடியே  வேகாமே இருந்திடப் போகுது " என்று சொல்லிக் கொண்டே
புறவாசல் பக்கம் விரைந்த அழகம்மா, வாசலில் வில் வண்டி வந்து நிற்கும்
சத்தம் கேட்டு, வாசற்புறம் பார்த்தாள் .

" யாருளா  அது ? " என்று நெல் அடுப்பு அருகில்  நின்ற நாச்சியார் கேட்டாள் .

" ஆள் வண்டியை விட்டு இறங்கினாத்தானே  வாறவுக  யாருன்னு தெரியும் .
அதுக்குள்ளே நீ கெடந்து பறக்குறியே " என்றவாறே முற்றத்துக்கு விரைந்தாள் 
அழகம்மா .

இதற்குள் வண்டியை விட்டு இறங்கின பெண், இரண்டு கைகளிலும், இடுப்பிலும் 
சாமான்களை எடுத்துக்கொண்டு, வேலிப்படலில் இருந்த கதவைக் காலினால் 
எட்டித்  திறந்து    கொண்டு  உள்ளே வந்தாள் .

" யாரு அது ? கோமதியக்கா மாதிரியில்லா தெரியுது. அடடா .நம்ம.
  கோமதியக்காவே தான். ஏட்டீ . நாச்சியாரு . இங்க வா.யாரு வந்திருக்காகன்னு பாரு...
ஏளா , இம்புட்டு வருசத்துக்குப் பொறவாவது உனக்கு வர்றதுக்கு வழி தெரிஞ்சுதே. உங்கிட்டேயிருந்து ஒரு  தகவலும் இல்லையே..! ஏன் ? நாட்டாமைக்காரக  வாடகைப்
பணத்தை அனுப்பி வச்சா, பணம் கிடைச்சதுன்னு பதில்
வர்றதோடு  சரி .இப்ப எப்படிக்கா இருக்கே. ?
 தனியாவா வந்தே ? கீழே ஏன் உக்காருதே. அதான் பாய் விரிச்சிருக்கேனே.
 பாயில் உக்காரு. " என்றவாறே கோமதியக்கா இறக்கி வைத்த சுமைகளை
 சரி செய்வதில் முனைந்தாள்  அழகம்மா.

" ஏட்டீ .. நாச்சியாரு , அந்தப் பொடி அடுப்பைப் பத்த வச்சு ரெண்டு தம்ளர் 
 தண்ணி ஊத்து. கருப்பட்டியைத் தட்டிப் போடு. நான் அதுக்குள்ளே
 நாட்டாமைக்காரக வூட்டுக்குப்  போய் பால் வாங்கியாறேன்.  "

" அட நீ ஒண்ணு  ... எனக்குப் பாலெல்லாம்  வேணாம்மா . சும்மா ஒரே ஒரு 
வாய் கடுங்காப்பி குடு போதும்!  நீ எங்கியும் போவேணாம் "

" ஏம்ளா ,  காசிக்குப் பக்கத்திலே எங்கியோ இருக்கேனு சொன்னாகளே . நீ 
தனியாவா வந்தே ? "

" ஆமாம் போ. வெள்ளைக் கோயில்லே கொண்டு போய்  வைக்கிற வயசாச்சு.
இன்னும் என்ன துணை வேண்டிக் கிடக்கு ? உன்னையும் என்னையும் 
அசலூரில் எவனாவது கையைப் பிடிச்சு இழுத்துருவானா  என்ன ? " என்று 
எதிர்க் கேள்வி போட்டாள்  கோமதியக்கா.

" நாச்சியாரு..தண்ணி கொதிச்சுதா பாரு.. கொதிச்சுதுன்னா ரெண்டு கரண்டி 
காப்பித் தூளைப் போட்டு அது தலைலே தண்ணிய தெளிச்சு இறக்கு . மசமசனு  
நிக்காமே, மளமளன்னு வேலையைப்பாரு. அப்படியே நெல் அடுப்பையும் 
பாரு " என்று விரட்டினாள்  அழகம்மா. 

" இந்தப் புள்ளே யாருளா  ? எனக்கு அடையாளம் தெரியலியே "

" இந்த வூட்டுப் பெரிய பய மவ .மூத்தவ. சமஞ்சு நாலு வருஷம் ஆகுது. நல்ல 
இடமா வந்தா கழுதையை தள்ளி விட்றலாம்னு  பார்த்தா ஒண்ணும்  இசைவா
வர மாட்டேங்குது. ..ஹூம் .... இனிமேத் தானா இவளுக்குன்னு ஒருத்தன் 
பொறக்கப் போறான் . நேரம் வந்தா, கழுதை தன்னைப் போல தேடி வர்றான் .
அவ்வளவுதான் ! " 

" ஆமாம் நேரம் கூடி வந்தா, நாம நிறுத்தினாக்கூட நின்னுடுமா என்ன ?"

" பெரிய புள்ளே கூடத் தானே இருந்தே ? ஏம்ளா  திடுதிப்புன்னு வந்துட்டே ?"

" வெறுவாக்கெட்ட பய புள்ளை  . வேலை பாக்குற பொண்ணு வேண்டாம்னு 
சொன்னேன்.. கேட்கலே. ஒத்தக்கால்லே நின்னு கட்டிக்கிட்டான். அவனுக்கு 
வடக்கே மாத்தலாகவும் பொண்டாட்டிக்கும் சேர்த்து மாத்தல் வாங்கிக்
கிட்டான். அதுதான் ஒழிஞ்சு போச்சுன்னு சும்மா இருந்தானா?  என் மவராசன்
கட்டி வச்ச வூட்டுலே, வயலு வேலை, நாத்து நடவு வேலையைக் கவனிச்சு 
கிட்டு நிம்மதியா இருந்தேன். அப்படியாவது இருக்க விட்டானா?  தானும் 
பொண்டாட்டியும் வேலைக்குப் போயிட்டா புள்ளைகளைப் பார்த்துக்க ஆள் 
இல்லே.நீயும் வந்துருன்னு  சொல்லி ராவோடு ராவா என்னைக் கூட்டிட்டுப் 
போயிட்டான்.  புள்ளைக வளர்ற  வரை நான் தேவையாயிருந்தேன். இப்போ 
அதுக வளர்ந்து போச்சு..என்னைப் பாரமா நினைச்சேன். மருமகப் பொண்ணு
சொல்லியே  போட்டா ,வயசான காலத்திலே வாயை மூடிக்கிட்டு ஒரு ஓரமா 
விழுந்து கிடங்கன்னு . அது ஏன்  அங்கே விழுந்து கிடக்கணும் ? என் மவராசன்
கட்டி வச்ச வீடு வாசல் இருக்கு .. அங்கேயே போய் விழுந்து கிடக்கிறேனு
சொல்லிட்டு வண்டி ஏறிட்டேன். " என்றாள்  சடவாக
 
அழகம்மா வாயடைத்தபடி   அவள் சொல்வதைக்  கேட்டுக் கொண்டிருந்தாள்.

 "   யப்பா, ராவெல்லாம் தூக்கமில்லாமே வுக்காந்தே வந்ததுலே 
இடுப்பெல்லாம் வலிக்கிது . செத்த நேரம் கட்டையைக் கீழே  சாய்க்கிறேன் "
என்று சொல்லிக் கொண்டே கைகளை சோம்பல் முறித்துக்கொண்டு 
படுத்தாள்  கோமதியக்கா. 

காப்பித்தண்ணி வந்தது. காப்பியை வாயில் ஊற்றிக்  கொண்டே , " யக்கா
சாயங்காலம் நாட்டாமைக்காரக வூடு வரை போயாறலாம் . வூடு   முழுக்க 
வேண்டாம். ஏதாவது ஒரு ரூமை  மட்டும் ஒழிச்சு  வுட்டாகன்னா  அதுலே
இருந்துக்குவேன் . வாடகைப் பணம் வரும்.. . வயக்காட்டு நெல்லு வரும்.
என் கட்டைக்கு அதுவே  போதும் " என்றவள் பழைய நினைவுகளில்
ஆழ்ந்தவள் போல் காணப்பட்டாள் .

இதற்குள் நாச்சியார் வந்து   எட்டிப் பார்த்துவிட்டு . " ஆச்சி, அந்த மச்சுவீட்டு 
தெறவல் எங்கன  இருக்கு ? " என்றாள் .

" கெடியாரம் இருக்கு பாரு . அங்ஙனே தான் வச்சேன் " என்ற அழகம்மா 

" கோமதியக்கா நீ படுத்திரு . நான் ஆத்துலே போய் துணியெல்லாம்  துவைச்சு 
எடுத்துட்டு வந்துருதேன் " என்றாள் 

" இரு புள்ளே , நானும் வர்றேன் " என்று எழுந்தாள் கோமதியக்கா.

இருவரும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள் . போகும் வழியில் தென்
பட்டவர்களுக்கு கோமதி அக்காவை அறிமுகம் செய்து வைத்தாள்
அழகம்மா . " எல்லாம் நம்ம ஊர்க்காரகதான் . பட்டணத்திலே போய் ரொம்ப
நாள் தங்கிட்டாக ... இப்ப வூரோடு வந்துட்டாக " என்று பெருமையாக
சொன்னாள் .

வழியில்  ஆல மரத்தடிப்  பிள்ளையாரைக் கண்டதும் கன்னத்தில் போட்டுக்
 கொண்டாள் கோமதியக்கா.

" எக்கா , இந்த வூர் கொஞ்சம்கூட மாறவே  இல்லியே, அப்படியேதானே 
இருக்கு. ஒரு ரோடு கூடவா இன்னும் இந்த ஊருலே போடலே ! வடக்கே 
அப்படி இல்லே . நேத்து நாம பார்த்த இடமா இதுன்னு நினைக்கிறாப்லே 
இருக்கும் "

" இங்கயாவது  , ரோடாவது போடறாதாவது ! போன  வெள்ளைக்காரன் 
திரும்பி வந்து ரோடு போட்டாதான் உண்டு .. ஹும்ம் " என்று அலுத்துக் 
கொண்டாள்  அழகம்மா

ஆற்றங்கரை மேட்டில் தாடியும் மீசையும் , கிழிந்த உடையுமாக , தன்னையே
வெறித்துப் பார்க்கும் மனிதனைக் கண்டு சற்றே தயங்கினாள் கோமதியக்கா .
" யாருளா  இது ? மூஞ்சியெல்லாம் முடியை வளர்த்துக்கிட்டு !..
 கோட்டிக் காரனா ? சீக்கிரம் எட்டி நட, அவனைப் பார்த்தாலே பயமா இருக்குது "

" அவனை அடையாளம் தெரியலையா ? நம்ம வூருலே காரைவூட்டுக்காரக
இருந்தாகளே , அவக மகன் செந்தில்தான் !"

" ஏளா .. அவனாளா இது ?..  நம்பவே முடியலியே . ..அவன் ஆளு  நல்லா
கட்டுக் குட்டுன்னு இருப்பானே ! "

" அவனேதான் . அவனுக்குத்தான் நம்ம பண்ணை வீட்டுக்காரக மூணாவது
 பொண்ணைக் கட்டுனாக."

" யாரு ? நல்லா சிவப்பா .. குதிரை மாதிரி இருப்பாளே அவளையா ? "

" அவளைத்தான் .. இவனைத்தான் கட்டிக்குவேன்னு சொல்லி ஒத்தக்காலில்
நின்னு   அந்த  சிறுக்கி கட்டிக்கிட்டா. செல்லமா வளர்ந்த பொண்ணாச்சேன்னு
பண்ணை வூட்டுக்காரகளும் அந்தஸ்து அது இதுன்னு பார்க்காமே அவனுக்குக்
கட்டி வச்சாக. "

" பொறவு ? "

" கல்யாணம்   ஆன கையோடு பிசினஸ் பண்ணப் போறேன்னு சொல்லிட்டு
பொண்டாட்டியைக் கூட்டிட்டு பட்டணம் போய்ட்டான் . அங்கே போய்  மருந்து
கடை  வச்சான் . நல்லா கொழுத்த துட்டு. போய்க் கொஞ்ச நாள்லேயே
பெரிய மனுஷன்னு பேர்  வாங்கிட்டான் ... "

" அப்புறம் ? "

" அவனுக்கு அங்கே ஒரு சிநேகிதன்.  சிறுசிலேருந்து  அவக ரெண்டு பேரும்
ஒண்ணாப் படிச்சாகளாம். ஒரே  ரூமுலே சேர்ந்திருந்து  படிச்சாகளாம். அவன்
பேரும்  செந்திலாம் . ஏதாவது  கடுதாசி "செந்தில்"னு   போட்டு வந்தாக்கூட
யாருக்கு  வந்து இருக்குனு தெரியாமே ரெண்டு பேரும் சேர்ந்தே படிப்பாகளாம்"

"இவன் பொண்டாட்டியைக் கூட்டீட்டு அவன் ஓடிப் போயிட்டானாமா ?" என்று
இடை வெட்டினாள்  கோமதியக்கா

" அதுதான் இல்லே.. அவன் சிநேகிதன் வேறே ஒரு பொண்ணு கூட பழக்கம்
வச்சிருந்திருக்கிறான். அந்தப் பொண்ணு நல்ல வேலையில் இருந்தாளாம் .
இவன் ஏதோ சீட்டுக் கம்பெனியிலே மேனேஜரு வேலை பார்த்துருக்கிறான் .
இந்த வேலைலே  இருக்கிறவனுக்குப் பொண்ணைக் கொடுக்க மாட்டேன்னு
அப்பா சொல்லுவாருனு அந்தப் பொண்ணு சொல்லி இருக்கு ."

"  ஏனாம் ? "

" அது வூட்டுக் கதை அப்படி ! அதுக்கு ஒரு அக்காவாம் .அவளை நல்ல
இடத்திலே கட்டிக் குடுத்தாகளாம் . ஆனா , அவ புருசன் தினமும் குடி ,
சீட்டுன்னு கடனாளி ஆயிட்டு,  ஊரை விட்டு ஓடிட்டானாம். அவ பெத்த
புள்ளைக ரெண்டையும் கூட்டிட்டு தகப்பன்  வூட்டுக்கே வந்துட்டாளாம் .
அதிலேருந்து அவ அப்பா முன்னாடி நின்னு  யாரும் பாத்திரச்சீட்டு , நகை
சீட்டுன்னு கூட பேச மாட்டாகளாம் .பேசினா அவருக்கு அந்த அளவுக்கு
கோபம்  வருமாம். இந்த பொண்ணு  பார்த்து வச்சிருந்த பயலோ , " இந்த
வேலையை விட முடியாது . நானும் படிச்சு முடிச்சிட்டு எல்லா இடத்திலேயும்
அலைஞ்சு பார்த்துட்டு   கிடைக்காமே தான்  இங்கே வந்து ஒட்டிக்கிட்டு
இருக்கேன். உங்க அப்பனுக்காக கிடைச்ச வேலையை விடமுடியாது"ன்னு
கண்டிப்பா சொல்லி இருக்கான்.
இந்த சேதி தெரிஞ்சதும் நம்ம வூரு  செந்தில், " இந்த சின்ன விசயத்துக்காக
நீங்க ரெண்டு பேரும்  ஏன் சண்டை  போடணும் ? ஏன் பிரியணும்?  நான் , என்
பேரில்  'செந்தில் மருந்துக் கடை' நடத்தறேனே . அதை   உன்னுதுன்னு
சொல்லி அவ அப்பாகிட்டே பொண்ணு கேளுன்னு சொல்லி இருக்கான்."

" அடப்  பாவிப் பயலே ! அவ அப்பா சம்மதிச்சானாமா ? "

"  படிச்ச பயலுகள்லாம்  சேர்ந்து ப்ளான் போட்டுருக்கானுகளே , நடக்காமே
இருக்குமா ? இவன் சொல்லிக்  குடுத்தாப்லேயே, பொய் சொல்லி அவ
அப்பாகிட்டே பொண்ணு கேட்டுருக்கான்...கூட்டம் சேர்த்து கல்யாணம்
பண்ணினா எங்க வூட்டுக்கு ராசியா  இராது. நானும், என்   வூட்டு ஆளுகளும்
நீங்களும்  உங்க வூட்டு ஆளுகளும் மட்டும் வச்சு கல்யாணம்  பண்ணணும்னு
சொல்லி இருக்கான்.   பையனைப் பிடிச்சுப் போகவும் அவ அப்பாவும் இவன்
சொன்னதுகெல்லாம்  ' சரி'ன்னு சொல்லிட்டாக. ஆனா கல்யாணத்துக்கு கூட
நம்ம ஊரு செந்தில் இருக்கலே "

" ஏனாம் ? "

" மருந்துக்கடை விசயமா, வெளியூருக்கு , வடக்கே போறேன். திரும்பி  வர
ஒரு  மாசம் இல்லே ரெண்டு மாசம் ஆகலாம் . எனக்காக நீ  எதையும்  தள்ளிப்
போட  வேண்டாம் . நான் போய் திரும்பி வர்ற வரை என் பொண்டாட்டி
தனியா இருக்க வேண்டாம்னு  அவளை அவ அப்பா வீட்டுக்கு ரயில் ஏத்தி
அனுப்பிட்டேன். நான் திரும்பி வர்ற அன்னிக்கு அவளை தந்தி குடுத்து  இங்கே
வரச்சொல்லிடுவேன்.அன்னிக்கு நம்ம   எல்லாருக்கும் என் வீட்டில் விருந்து
தான்னு சொல்லி இருக்கான். சொல்லிட்டு  வடக்கே போயிட்டான் ."

" அங்கே போய் வேறே யார் கூடவாவது சிநேகிதம்  ஆயிட்டானா ?" என்று
கவலையுடன்  கேட்டாள் கோமதியக்கா .

" அதுதான் இல்லே, இன்னிக்கு இந்த வண்டியிலே நான் வர்றேன்.  நீயும் 'இந்த
வண்டியிலே கிளம்பி  வந்திடு. வந்து இந்த இடத்திலே நில்லு'ன்னு அவன்
பொண்டாட்டிக்கு  ஒன்றரை மாசம் கழிச்சு கடுதாசி போட்டிருக்கான். அவளும்
இவன்  சொன்னாப்பிலே கிளம்பி வந்திருக்கா . இவ வந்த வண்டியிலே
ரெண்டு பொம்பளைக  அவக வூட்டுக் கதையை   பேசிட்டு  வந்திருக்கிறாக " .

"  போச்சுடா , அது வேறே தனிக் கதையா? "

" கேளு , ரெண்டு பொம்பளைகளில் ஒருத்தி, அந்தப் பட்டணத்துப் பொண்ணுக்கு
  சொந்தக் காரியாம் . கூட வந்தவ , இவகிட்டே ஒரு ஜாதகம் பத்தி பேசி இருக்கா
 அதுக்கு  "  நீ இன்னும் நான் சொன்ன அந்தப் பொண்ணை மனசிலேயே
வச்சுகிட்டு இருக்காதே.  அதுக்குக் கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம் ஆகுது.
சொந்தக்காரங்க , ஜாதி ஜனம் யாரையும் கூப்பிடலே . ஏதோ  திருட்டுக்
கல்யாணம் பண்ற மாதிரி காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை
முடிச்சிட்டாங்க. என்ன வில்லங்கம்ன்னு தெரியலே"ன்னு சொல்லி இருக்கா.
கூட வந்தவ , " மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமோன்னு கேட்க, அவ,
பதிலுக்கு 'மெட்ராசில் செந்தில் மருந்துக் கடை'ன்னு ஒரு கடைஅவர் பேருலே
கோடம்பாக்கத்தில் இருக்கு. அந்த ஏரியாவில் அந்தக் கடையை
தெரியாதவங்க கிடையாது . அவருக்குக் கூட சொந்த ஊர் திருநெல்வேலி
தான்னு சொல்லி இருக்கா
.
 உடனே நம்ம வூர்  செந்தில் பொண்டாட்டி நினைச்சுகிட்டா, இவ புருசன்தான்
இவளை ஏமாத்திட்டு  வேறு யாரையோ கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு .
இவதான் முன் கோபக்காரி ஆச்சே... வெளியூருக்குப் போறதா சொல்லிட்டு
தன்னை தாய் வூட்டுக்கு அனுப்பிட்டு இவன் வேறே கல்யாணம்
பண்ணிட்டான்னு  நினைச்சுகிட்டா. ரயிலில் கூட வந்த பொம்பளைக
பேசினதைக் கேட்டுட்டு கோவமா வீட்டுக்கு வந்திருக்கா. டேசனில் அவன்
நிற்கிறதா  சொல்லி இருந்த இடத்தில் அவன் இல்லே. அவ்வளோதான் ....
வெறி பிடிச்ச மாதிரி வூட்டுக்கு வந்திருக்கிறா. பக்கத்து வீட்டுக் காரக ,
இவளை  பார்த்துப்  பேசி சிரிச்சதுக்கும் இவ பதிலே சொல்லலே..  வீரா வேசமா
வூட்டுக்குள் வந்தவ, அவன் வியாபாரத்துக்காக வாங்கி வச்சிருந்த தூக்க
 மாத்திரையை மொத்தமா எடுத்துப்போட்டு முழுங்கி இருக்கா"

" சரி ,டேசனுக்கு வர்றேன்னு சொன்னவன் ஏன் வரலே ?" என்று கேட்டாள் 
கோமதியக்கா கவலையாக .

" அன்னிக்குப்  பார்த்து அவன் வந்த வண்டி தாமசம் ஆயிட்டுதாம். இவன் போய்
அவளை நிக்க சொன்ன  இடத்திலே தேடியிருக்கான். காணும்னதும்
டேசன்லே விசாரிச்சிருக்கான் . தூத்துக்குடி வண்டி வந்துட்டுப் போய்  ரொம்ப நேரம்  ஆயிட்டுன்னு சொல்லி இருக்காங்க. உடனே அந்த செந்தில் வூட்டுக்குப்
போய் பொண்ணு மாப்பிள்ளையை கையோடு விருந்துக்குக் கூட்டிட்டு
வந்திருக்கான். கதவைத் திறந்து பார்த்தா அவ பொணமா கிடக்குறாளாம்.
பக்கத்திலேயே ஒரு கடுத்தாசி.
" வூருக்குப்  போறதா சொல்லி என்னை ஏமாத்திட்டு வேறே பொண்ணைக்
கல்யானம் பண்ணிக்கிட்டியா ? உன் கூட குடும்பம்  நடத்தப் பிடிக்கலே . நான்
செத்துப் போறேன்னு 'ன்னு எழுதி வச்சிருந்தாளாம். விசயத்தைப் புரிஞ்சு கிட்ட
புது மாப்பிள்ளை, 'ஏண்டா, பாவி, எனக்கு உதவி பண்ணி நான் விரும்பின
பொண்ணோட என்னை சேர்த்து வச்சியே. உன் கதை இப்படியாயிட்டுதே'னு
சொல்லி நெஞ்சிலே நெஞ்சிலே அடிச்சுகிட்டு கீழே விழுந்திருக்கான் . புரட்டிப்
பார்த்தா அவனும் பொணமாக்    கிடக்கிறானாம் . டாக்டர் வந்து பார்த்துட்டு
மாரடைச்சு உசிர் போயிட்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டாராம் . ஒரே
நாள்லே  பொண்டாட்டியையும் , உசிருக்கு உசிரா பழகின சிநேகிதனையும்
பறி குடுத்ததில் இவன புத்தி பேதலிச்சுப் போச்சு. காரைவூட்டுக்காரக
உசிரோட இருந்தவரை இவனை வூட்டுக்குள்ளேயே வச்சிருந்தாக. அவகளும்
போய்ச் சேர்ந்ததும் இந்தப் பய இப்படிக் காடுமேடுன்னு அலையுதான் " என்று
நடந்த  கதையை சொல்லி முடித்தாள்  அழகம்மா.

நீண்ட பெருமூச்சு கோமதியக்காவிடமிருந்து வெளிப் பட்டது." அந்தப் பய  .. .
.அதான் செத்துப் போன செந்திலோட பொண்டாட்டி  என்ன ஆனா ? " என்று
 கேட்டாள் கோமதியக்கா

" யாருக்குத் தெரியும் ? "  என்ற அழகம்மாவிடம் , " ஒவ்வொரு வூட்டுக்
கதையைப் பாக்குறச்சே நம்ம வூட்டுக் கதை எவ்வளவோ தேவலாம்
போலிருக்கு.வெயில் உச்சிக்கு வந்துட்டுது. நடையை எட்டிப் போடு !" என்று
கோமதியக்கா சொல்ல வேகமாக நடையைப் போட்டாள்  அழகம்மா





 

Monday, June 18, 2012

இராமாயாணம் தெரியுமா குழந்தைகளே ? (Puzzle No.2)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம். 
          எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்    
                             
         இராமாயாண கதா பாத்திரங்கள் புதிருக்குள் ஒளிந்திருக்கிறார்கள்


 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும் )
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது ஒரு பேப்பரில் இதே போல் 10  x  10  என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு  பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)


       (இந்த புதிர் 07  .02  .2004  தினமணி - சிறுவர்மணியில் வெளியாகியுள்ளது )


                        
    01 
 


    14






 
 


   09


   12
    

 

  
    15
   
    02 
   

     
   18
 
 19
  
 
  

 

 
  

 
 
 
    03
  
 
  
 

 
 
 
    04
  

    

 
   05





 
  

 

  
    06
 


   

 
   24
  
     17
 
 

  

  

 
    13


 

   

   

 

 

  
     10
  

   
 
 

    

 

   

 
  16
   



  
     11
      

   

 

  

 
  
   

   
   07


 

 

    
   25
    

  



    

 

   

  

 
  
   20

  21
 
 
 
    8
   22
   
    23

   
 
   


  
  

இடமிருந்து வலம்
1  மிதிலாபுரியின் மன்னன்                                                                                ( 4 )
2  கிஸ்கிந்தா மன்னனின் மனைவி                                                               ( 2 ) 

3  கிஸ்கிந்தா மன்னனின்  தம்பி                                                                     ( 5 )
4  காப்பிய தலைவன்                                                                                           ( 3 )
5  புண்ணியன் கால் பட்டு கல்லாயிருந்தவள் பெண்ணானாள்       ( 4 )
6   இரண்டு வரத்தால் முடிசூட்டுவிழாவை நிறுத்தியவள்                 ( 3 )
7   பாதுகையை  தலையில் சுமந்தவன்                                                       ( 4 )
8  இம்முனிவருடன் 'அண்ணல்' சென்றபோது அவளை நோக்கினார்  ( 8 )

வலமிருந்து இடம் 
  9  தூக்கத்தில் மன்னன்                                                                                   ( 7 )
10  ராமஜென்ம பூமி சற்றே குழப்பத்தில்                                                  ( 4 )
11  காப்பிய தலைவனின் தாய்                                                                     ( 3 )
20  இலங்கேஸ்வரனின் மனைவி                                                              ( 5 ) 

மேலிருந்து கீழ் 

  1  பறவையினத்தலைவன்                                                                         ( 3 )
  9  படகோட்டி                                                                                                    ( 3 )
12  காப்பியத்தலைவி                                                                                     ( 2 )
13  அயோத்தியின் சக்கரவர்த்தி                                                                 ( 5 )
14  இராமாயாணத்தை தமிழில் எழுதியவர்                                         ( 4 )
15  கிஸ்கிந்தாவில் வதம் செய்யப்பட்டவனின்  மகன்                    ( 5 )
16   வனவாசத்தில் உபசரித்த பெண் துறவி                                         ( 3 )                   
17 இது காப்பியத்தலைவியின்   நாடு                                                     ( 3 )
18  மாய மானாய் வந்தவன்                                                                        ( 4 ) 
19 இலங்காதிபதி                                                                                            ( 4 )

கீழிருந்து மேல் 

  5  இலங்கைக்கு தூது சென்றவன்                                                       ( 4 )
 8   இலங்கேஸ்வரனின் தம்பி                                                                ( 5 )
21 மூக்கறுபட்டவள்                                                                                   ( 6 )
22  சக்கரவர்த்தி நாட்டின் அமைச்சர்                                                   ( 6 )
23 வடமொழியில் ராமாயாணம் எழுதியவர்                                   ( 4 )
24 கிஸ்கிந்தாவில் வதம் செய்யப்பட்டவன்                                    ( 2 )
25 அண்ணனுடன் வனவாசம் சென்றவன்                                       ( 6 )