Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, February 26, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 24)

புதிர் எண் - 23 ன்  விடை - அங்கு " ஏலம் " நடந்து கொண்டிருந்தது. ஆடுமாடுகளை ஏலத்தில் விற்றுக் கொண்டிருந்தார்கள். இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.

புதிர் எண் - 24
Image result for image of school children
ஹாய் சுட்டீஸ் , ஈ , உ, ஊ , ஓ,  ஒள - இவை உயிரெழுத்துக்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த எழுத்துக்கள் இடம் பெறாத வார்த்தைகளை, இடைவெளியின்றி " கடகட மள மள " என்று சொல்லமுடியுமா என்று உங்களைக் கேட்டால் அதிக பட்சம் உங்களால் எத்தனை வார்த்தைகளை சொல்ல முடியும் ?

Sunday, February 19, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 23)

புதிர் எண் - 22 ன் விடை - கிளிக்கு சொல்லத் தெரிந்த ஒரே ஒரு வார்த்தை " நான்கு ".  அதற்க்கு தகுந்த மாதிரி கேள்விகளை அமைத்திருந்தான் அந்த ஏமாற்றுப் பேர்வழி. இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள். 

புதிர் எண் - 23
Image result for image of animal market
தாத்தா பாட்டி அம்மா அப்பாவுடன் அவர்களது குலதெய்வம் இருக்கும் கிராமத்துக்குப் பயணித்துக் கொண்டிருந்தான் சத்யா. வழியில் ஒரு இடத்தில் அதிக கும்பல் நின்று கொண்டிருக்க, கார் போக வழியின்றி அவர்கள் பயணம் தடைப்பட்டது. "என்னவென்று பார்த்துவிட்டு வருகிறேன்" என்று சொல்லி காரை விட்டு இறங்கி சென்றார்  தாத்தா.
"தாத்தா  திரும்பி வந்து கும்பல் ஏன் கூடுச்சுனு சொல்ல மாட்டார். ஒரு புதிர்தான் போடுவார்" என்றான் சத்யா.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த தாத்தா  " எல்லாம் பாயாசத்தில் போடற வாசனை பொருளில் ஒன்றுதான். ஆடுமாடு ...  " என்று பாட்டியிடம் சொல்ல, "அப்படின்னா அது இப்போ முடியாது. கார் போக வழி கிடைக்காது . நாம வேறே வழியில் போகலாம்" என்று பாட்டியும் அப்பாவும் ஒரே சமயத்தில் சொல்ல, " என்னது ? பாயாசத்தில் ஆடு மாடா ? " என்று அதிர்ந்து போய்க் கேட்டார்கள்  சத்யாவும் அவனது அம்மாவும். விஷயத்தை தாத்தா அவர்களுக்கு விளக்கியதும் " ச்சே .. இதுதானா ! " என்று அசடு வழிந்தார்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால் - தாத்தா சொன்ன பதில் என்ன ?


Sunday, February 12, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 22)


புதிர் எண் - 21 ன் விடை  - அவனது தாத்தா இரண்டாவது உலகப் போரின் போது பணிபுரிந்தார் என்பதற்கான சான்றிதழ்களைக் காட்டியிருக்கலாம். 

புதிர் எண்  - 22
Image result for image of parrot
கடைத் தெருவில் தனது கண்ணில் பட்ட 5 மாணவர்களை அழைத்த டீச்சர் "லீவு நாளென்றால் படிக்காமல் ஊரை சுத்த வேண்டுமென்ற கட்டாயம் ஏதாவது இருக்கிறதா?" என்றுகேட்க, "பக்கத்து தெருவில் ஒரு வீட்டில் 
உள்ள கிளி நாம கேட்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறது. ஒரு கேள்விக்கு 10 ரூபாய் கொடுக்கணும். நாங்கள் அங்குதான் போய் வருகிறோம் " என்ற பதில் வந்தது மாணவர்களிடமிருந்து.  
"ஆச்சரியமா இருக்கே. என்ன கேள்வி வேணும்னாலும் கேட்கலாமா ? " என்று டீச்சர் கேட்க, " ஒரு பாட்டிலில் நிறைய துண்டு சீட்டு இருக்கும். ஒவ்வொரு சீட்டிலும் ஒரு கேள்வி இருக்கும். பாட்டிலுக்குள் கை விட்டு ஒரு சீட்டை எடுத்து அதிலுள்ள கேள்வியைக் கேட்கணும். நாம் கேட்கிற கேள்விக்கு சரியான விடையை கிளி சொல்கிறது. எல்லாரும் சேர்ந்து உள்ளே போகக் கூடாது. ஒருத்தர் போய் வந்ததும் அடுத்தவர் போகணும் " என்றான் அப்பு.
"யார் யார் என்னென்ன கேள்வி கேட்டீங்க?" என்று கேட்ட  டீச்சரிடம், " எங்களுக்கு வந்த கேள்விகள், திசைகள் எத்தனை? வேதங்களின் எண்ணிக்கை எத்தனை ? தசரதனுக்கு எத்தனை மைந்தர் ? மகாபாரத தர்மரின் தம்பிகள் எத்தனை பேர் ? 16 ன் route என்ன ? " என்று சொல்லிய மாணவர்களிடம், " இது சரியான ஏமாற்று வேலை. வாங்க .. அவனை ஒரு வழி பண்ணலாம் " என்றார். விவரம் புரியாமல் விழித்த மாணவர்கள், டீச்சர் சொன்ன விளக்கத்தைக் கேட்டு " அடடா ஏமாந்து விட்டோமே !" என்றனர்.
இப்போது கேள்வி என்னவென்றால் இது எந்த வகையில் ஏமாற்று வேலை ?

Sunday, February 05, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 21)

புதிர் எண் - 20 ன் விடை - ONE  என்று ஆரம்பித்து HUNDRED வரை சொல்லி முடியுங்கள். நிஜம்தான். ONE லிருந்து  HUNDRED வரை உள்ள வார்த்தை களில் A B C என்ற இந்த மூன்று எழுத்துக்களுமே இடம் பெறவில்லை.  இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள். 

புதிர் எண் - 21
Image result for image of an interviewer and a man in a  room
தனியார் நிறுவனம் ஒன்று " ஊர்க் காவல் படை " என்ற அமைப்பை நிறுவி அதற்க்கு ஆட்கள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டது. நிறைய பேர் வந்து அந்த அமைப்பில் சேர காத்து நின்றார்கள். அவர்களிடம் " இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் இருந்தால் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாள்கிற அளவுக்கு சமயோசித புத்தி அவசியம் . அதற்கு முன்னுரிமை வழங்கப்படும்" என்று  அறிவித்தது. 
நேர்முகப் போட்டிக்கு முதல் ஆளாக நுழைந்த சேதுவின் சான்றிதழ்களை 
சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரியிடம், " எங்கள் குடும்பமே இந்த தேசத்திற்காக  உழைத்த ஒன்று. இரண்டாம் உலகப் போர் நடந்த போது எங்கள் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்து சேவை செய்தார். அதற்கான சான்றிதழ் உள்ளது. என்னுடைய அப்பாவும்  ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதற்கான சான்றிதழ்கள் இதோ உள்ளன. உயரக் குறைவு காரணமாக ஆசையிருந்தும் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை. அந்த ஆசையை நிறைவேற்றவே நான் இங்கு வந்தேன்" என்று பணிவுடன் சொன்னான்.
"இப்போது உன் புத்திக் கூர்மை, சமயோசித புத்தியை டெஸ்ட் பண்ணப் போகிறோம் " என்ற அதிகாரி, " இந்த அறையிலிருந்து கொண்டு, 70 வருடத்துக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட உன்னால் முடியுமா ? " என்று கேட்க, அறையை சுற்றும்முற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமான ஒன்றாக இருந்தது. பழமையாக எதுவுமே அவன் கண்ணில் படாததால் தலை குனிந்து நின்றான்.
கையில் வெண்ணையிருந்தும் நெய்யைத் தேடுகிற உன்னை புத்திசாலி கள் வரிசையில் சேர்க்க முடியாது. இந்த அமைப்பிலும் சேர்க்க முடியாது என்று சொல்லி வெளியேற்றியது.
இப்போது கேள்வி என்னவென்றால், என்ன செய்திருந்தால்  அதிகாரியின் பாராட்டைப் பெற சேதுவால் முடிந்திருக்கும் ?