Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, January 29, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 20)

புதிர் எண் - 19 ன் விடை - கடைகளில் விற்கப் படும் எந்தவொரு அழகு சாதனப் பொருளையும் நான் உபயோகிக்க மாட்டேன். இனி அடுத்த புதிருக்கு விடை தேடுங்கள். 

புதிர் எண் - 20


Image result for image of A B C
A B C என்ற இந்த மூன்று எழுத்துக்களுமே இடம் பெறாத 100 வார்த்தைகளை கடகடவென்று சொல்லவேண்டும் என்று யாராவது உங்களிடம் கண்டிஷன் போட்டால் உங்களால் குறைந்த பட்சம் 10 வார்த்தைகளை சொல்லமுடியும் . கொஞ்சம் யோசித்து அதிக பட்சம் 20 வார்த்தைகளை சொல்லமுடியும். கண்டிஷன் படி 100 வார்த்தைகளையும் சொல்லி கண்டிஷன் போட்டவரை அசத்த வேண்டும் என்ற ஆசையுள்ள வர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியுமா ? 


Sunday, January 22, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 19)

புதிர் எண்  - 19
Image result for image of beauty products
அழகுப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு புதுமாதிரியான விளம்பரம் ஒன்றை செய்ய நினைத்து, வயதான, அதே சமயம், முகச்சுருக்கம் எதுவும் இல்லாத   இளமையாகத் தோற்றமளிக்கும் ஒரு பெண்மணியைத் தேடிக்  கண்டு பிடித்தது. அந்தப் பெண்மணியிடம் அவர்கள் வந்த நோக்கத்தை, அதாவது அந்தப் பெண்ணை வைத்து விளம்பரப் படம் ஒன்று எடுக்கும் செய்தியை சொல்லி சம்மதிக்க வைத்தது. படம் எடுப்பதற்கு முன்னால் " உங்கள் இளமையின் உண்மையான ரகசியத்தை சொல்ல வேண்டும்" என்று தயாரிப்பாளர் கேட்க, " அந்த ரகசியத்தை சொல்வேன். நான் சொல்வதை அப்படியே படமாக்கி, விளம்பரமாகக் காட்ட வேண்டும். அதற்க்கு சம்மதித்தால் மட்டுமே இதில் நடிப்பேன் " என்று சொன்ன அந்தப் பெண், முகச்சுருக்கம் இல்லாத தனது  இளமையின் ரகசியத்தை சொன்னார்.
அதைக் கேட்ட தயாரிப்பாளர் " ஸாரி மேடம். எங்கள் விளம்பர நோக்கமே வியாபார யுக்திதான். நீங்கள் சொல்வதை படம் எடுத்தால், நாங்கள் கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான் " என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
இப்போது கேள்வி என்னவென்றால், அந்தப் பெண் என்ன சொல்லி யிருந்தால் தயாரிப்பு நிறுவனம் இப்படியொரு முடிவுக்கு வந்திருக்கும் ?

Sunday, January 15, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 18)

புதிர் எண் 17 ன் விடை : 
போட்டியின்  விதிமுறை  இடைவெளியில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் .அவன் காலையில் டிபன் சாப்பிட்டான். ஓமப்பொடி காரப் பூந்தி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளைக்  கொண்டு வரச்சொல்லி அதை மதியம் வரை கொறித்துக் கொண்டிருந்தான். பிறகு மீல்ஸை முடித்துவிட்டு பரிசுப் பணத்துடன் வெளியேறினான்.

புதிர் எண் - 18  கலக்குவோமா கணக்கில் ?!
Math Class கீழேயுள்ள அட்டவணையில் மொத்தம் 8 புதிர்கள் உள்ளன. அவை  A B என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. A பிரிவிலுள்ள 
புதிர் எண் -01 முதல் புதிர் எண் -08 வரையிலான கூட்டுத் தொகையின் மதிப்பு ANSWER of A என்பதின் கீழ் உள்ளது . ANSWER of B என்பதின் கீழ் 
இடம் பெற்றுள்ள நம்பருக்குத் தகுந்தபடி  A வரிசையிலுள்ள எண்களை மாற்றாமல் , குறிகளை மாற்றலாம்.  விடைக்குத் தகுந்தபடி ஒவ்வொரு எண்ணுக்கும் முன்போ பின்போ x (பெருக்கல் ),  (கழித்தல் ) மற்றும் வகுத்தல்  குறிகளை சேர்த்துக் கணக்கிடுவதன் மூலம்  ANSWER of B யோடு நீங்கள் கண்டுபிடிக்கும் விடை ஒத்துப்போக வேண்டும் 
ரெடி ? ஜூட் 


PUZZ.
No.

               SUM
ANSWER
  of   A 
ANSWER
    of  B 
01
A
1+2+3+4+5
     15

B


     20
02
A
2+4+6+8+10
     30

B


     46
03
A
3+6+9+12+15
     45

B


   -18
04
A
4+8+12+16+20
     60

B


      4
05
A
5+10+15+20+25
     75

B


    30
06
A
6+12+18+24+30               
     90

B


    -6
07
A
7+14+21+28+35
   105

B


    -7
08
A
8+16+24+32+40
   120

B


     2




இதை கணக்கிடுவது சுலபம்தான். விடை கண்டுபிடிக்க முடியாத குட்டீஸ் அடுத்த வாரம் வரை பொறுமையாக இருங்கள் விடையை அறிந்து கொள்ள. 

Saturday, January 14, 2017

அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் !

Image result for IMAGE OF PONGAL
வாழ்க வளமுடன்

Sunday, January 08, 2017

ஹாய் குட்டீஸ், (PUZZLE - 17)

புதிர் எண் - 16 ன் விடை -   இரண்டாவது நொடியில் 4 மீட்டர் ஏறிய குரங்கு அடுத்த நொடியே கீழே இறங்கி விடும். ஆக, இரண்டாவது நொடியில் குரங்கு மரத்தடியில்தான் நிற்கும் இனி இந்த வார புதிருக்கான விடை தேடுங்கள் .

புதிர் எண் - 17 

Image result for image of man eating in a hotel
பிரபல ஹோட்டல் ஒன்று தனது வாடிக்கையாளர்களுக்கு வினோதமான போட்டியை சில நிபந்தனைகளுடன் அறிவித்தது 
1 அனுமதிக் கட்டணம் 500 ரூபாய் 
2 காலை டிபன் முதல் மதிய உணவு வரை சாப்பிட வேண்டும் 
3 இவை தவிர கொறிப்பதற்கு ஸ்நாக்ஸ் ஐட்டமும் (மிக்ஸர்,
   ஓமப்பொடி , etc  )      உண்டு 
4 உள்ளே நுழைந்து காலை டிபனில் ஆரம்பித்து மதியம் வரை 
   இடைவெளியின்றி சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் 
5 உள்ளே நுழைந்த பின், இடையில் எழுந்து வெளியில் போனால்
   திரும்பி    உள்ளே வர அனுமதி கிடையாது 
6 100 பேருக்கு மட்டுமே அனுமதி 
7 ஒருவர் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்க முடியாது 
8 நிபந்தனைப்படி சாப்பிட்டு முடித்தவர்களுக்குப் பரிசுப் பணம்
   50000 ரூபாய்.
9 போட்டியில் பின்வாங்குபவர்கள், அங்கிருந்து வெளியேறும் முன்  ஹோட்டலுக்கு 3000 ரூபாய் கொடுத்துவிடவேண்டும்.

நிறுவனம் அறிவிப்பின் எல்லா நிபந்தனைக்கும் உட்பட்டு 100 பேர் கலந்து கொண்டனர். நிபந்தனையின்படி சாப்பிட முடியாமல்  99 பேர் பாதியிலேயே வெளியேறி விட்டனர். ஒருவர் மட்டும் வெற்றி பெற்று 50000 ரூபாயைப் பெற்றுக் கொண்டார்.  போட்டியில் வெற்றிபெற அவர் செய்த தந்திரம் ( நிபந்தனைக்குட்பட்ட தந்திரம்) என்னவென்று சொல்ல முடியுமா ?


Sunday, January 01, 2017

ஹாய் குட்டீஸ், ( PUZZLE - 16)

புதிர் எண் - 15 ன் விடை - பயணித்தவர்கள் 8 பேர். சைக்கிள் - 6. இனி இந்த வார புதிருக்கான விடை தேடுங்கள் .

புதிர் எண் - 16


குரங்கைக் கையில் பிடித்தபடி தென்னந் தோப்புக்குள் நுழைந்த ரங்கனை ஆச்சரிய மாகப் பார்த்த அவனது அப்பாவிடம்' " அப்பா. நமது தோப்பில் உள்ள தேங்காய்களை பறிக்க வேலையாட்களுக்குக்  கூலி கொடுத்து  கட்டுபடி யாக வில்லை. அதனால் இந்தக் குரங்கை 5000 ரூபாய் கொடுத்து ஒரு குரங்காட்டியிடமிருந்து வாங்கினேன். இது ஒரு நொடியில் 2 மீட்டர் உயரம் ஏறும். இரண்டாவது நொடியில் 4 மீட்டர் இறங்கும். அவ்வளவு பாஸ்ட் " என்று ரங்கன் சொல்ல தலையில் அடித்துக் கொண்டார் அப்பா. விவரம் புரியாமல் விழித்தான் ரங்கன். "வா.. உன் குரங்கை மரத்து மேலே ஏற சொல். அது இரண்டாவது நொடியில் எங்கிருக்கிறது என்று பார்க்கலாம் " என்றார் அப்பா.
இப்போது கேள்வி என்னவென்றால் " இரண்டா வது   நொடியில் குரங்கு எவ்வளவு தூரம் ஏறி யிருக்கும் ? "

DEAR VIEWERS

WISH YOU A VERY  HAPPY NEW YEAR !