Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 30, 2016

இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ?




நுங்கம்பாக்கம் ரயில் நிலைய சம்பவம் பற்றி கருத்து தெரிவிப்பவர்கள் பலரும், "கண் முன் நடக்கும் சம்பவம் எதையும் யாரும் தட்டி கேட்பதில்லை" என்று ஆதங்கப்படுகிறார்கள்  .
என்னுடைய அனுபவங்கள் இரண்டை - இந்த மாதத்தில் நடந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மாத (ஜூன்) முதல் வாரத்தில் ஒருநாள். தாம்பரம் மார்க்கெட்டில்   ஆட்டோவிலிருந்து இறங்கிய நான், தாம்பரம் ஸ்டேஷன் போவதற்காக சுரங்க நடை பாதையில் போய்க்கொண்டிருந்தேன். எனக்கு எதிர்த் திசையில் ஒரு குடிமகன் வந்தார். நான், எனக்கு மிக அருகில் என்னை அடுத்து நல்ல வாட்டசாட்டமான இளம் பெண் ஒருவர். எங்களுக்குப் பின்பாக கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும்.
எதிரே வந்த குடிமகன், எனக்கு வலப்புறம் போவது போல் வந்தவர் என் அருகில் வரும்போது எனக்கு இடப்பக்கமாக வந்து அந்த பெண்ணின் மார்பில் தனது தோள்பட்டையால் ஒரு இடி இடித்து விட்டுப் போனார். அதைக் கண்ட நான் , "நாயே, செருப்பால் அடிப்பேன் " என்று கத்துகிறேன், அவன் போகும் திசையை திரும்பிப் பார்த்தபடி. எனது குரல் அந்த இடம் முழுவதும் எதிரொலிக்கிறது. நேரமோ காலை 9 மணிதான்.
எனக்குப் பின்னால் அத்தனை பேர் வருகிறார்களே, யாராவது ஒரே ஒருத்தர்கூட  "என்னம்மா... என்ன விஷயம் ?" என்று கேட்கவில்லை. அதுகூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. யாருக்காக நான் குரல் கொடுக்கிறேனோ, அந்தப்பெண், யாருக்காகவோ நான் குரல் கொடுக்கிறேன்  என்பது போல எதையும் சட்டை செய்யாமல் அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. அதை பார்த்த நான் , "இது உனக்குத் தேவைதானா ?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.
இரண்டாவது சம்பவம்.: போனவாரம்... தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பஸ்ஸில் நான் பயணித்துக் கொண்டிருந்தேன்.(வண்டி எண் - 55. மாலை நேரத்தில் அந்த பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.) பஸ்ஸை ஓரம் கட்டிவிட்டு கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த டைமில் அவரது ஸீட்டில் யாராவது உட்காருவதும், அவர் தனது இடத்துக்கு வந்ததும், உட்கார்ந்திருப்பவர் எழும்பிவிடுவதும் தினசரி நடக்கும் ஒன்று தான். 
அன்றும் அதுதான் நடந்தது. கண்டக்டர் வந்த பின்னும் எழும்ப மறுத்த ஒரு இளவயது ஆசாமி,"பொம்பளை இடத்தில் ஆம்பிளை உக்கார்ந்தா எழுப்பி விடறே. ஆம்பிளை சீட்டில் உட்கார்ந்திருக்கிற பொம்பளைகளை எழும்ப சொல்லு. அப்பதான் நான் உனக்கு இடம் விடுவேன் " என்று தகராறு செய்தார். கண்டக்டர் சத்தம் வெளியில் கேட்கவே இல்லை. இந்த ஆசாமி கத்திக்கொண்டும், உன்னை என்ன செய்றேன் பார் " என்று குரல் கொடுப்பதுமாக இருந்தார்.
எனக்கே பொறுக்க முடியாமல்,'இத்தனை ஜென்ட்ஸ் இருக்காங்க. அவன் முதுகில் ரெண்டு வச்சு கீழே இறக்கி விடுவதுதானே ?" என்றேன். அதற்கு ஒரு பொறுப்புள்ள ஆண்மகன் சொன்ன பதில் : "அவன் கேள்வி கேட்பதில் என்ன தப்பு இருக்குது ? பொம்பளை ஸீட்டில் ஆம்பிளை உட்கார்ந்தா கொடி பிடிக்கிறீங்கதானே? ஆம்பிளை ஸீட்டில் உட்கார்ந்திருக்கிற பொம்பளை, ஆம்பிளை வந்ததும் எழும்பி இடம் குடுக்கணும்.அந்த ஆள் சரியாகத்தான் கேள்வி கேக்கிறான் !" என்கிறார்.
நான் வாயை மூடிக் கொண்டேன். "கடவுளே... இந்த உலகம் .. இந்த மக்கள் எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் ?" என்று ஆண்டவனைக் கேள்வி கேட்டேன். நமக்குத் தெரிந்த ஒரே ஒரு இளிச்சவாயன் அவர் மட்டுந்தானே ! அவரை நாம கேள்வி கேட்டால் அவர் கோபிக்கவும் மாட்டார் பதிலும் சொல்லமாட்டார்.  அந்த வகையில் அவர் நமது உணர்ச்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய வடிகால். 
இந்த உலகம் எங்கே, எதை நோக்கிப் பயணிக்கிறது ? விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்களேன்.
இன்னொரு விஷயம்.. நான் கவனித்த வரையில் ஜூன்மாத  தொடக்கத்தி லிருந்தே குடிமகன்களின் அட்டகாசம் பகலில், பலர் இருக்கும் இடத்திலேயே தொடர்கிறது. இதன் பின்னணி என்ன? 

Sunday, June 26, 2016

DEAR VIEWERS,


என்னங்க .... நான் அன்னிக்கு ஒரு மண்ணாங்கட்டி கதை உங்களுக்கு சொன்னேன் தானே! அது உங்களுக்குத் பிடிச்சிருந்துதா ? பிடிச்சிருக்கும் ... பிடிச்சிருக்கும் ... அதனாலே தானே இன்னிக்கு என்னனு பார்க்க இங்கே வந்துருக்கீங்க. இன்னிக்கும் ஒரு சங்கதி சொல்லப் போறேன்.
இந்த மனசு இருக்கு பாருங்க..... மனசு .... அது லேசுப்பட்டதில்லே. மனுஷங்களை குரங்கா ஆட்டி அலைக்களிக்கிறதெலாம் இது செய்ற வேலைதாங்க!நாமளுந்தான் அதை அடக்கி வைக்கணும்னு பார்க்கிறோம். ஊஹூம் ... எங்கே அடங்குது!. எது செஞ்சாலும் பத்தாது பத்தாதுன்னு சொல்லி நம்மள எங்கெங்கியோ கொண்டு போய் விட்டுடுது. இந்தக் குரங்கு பத்தின செய்தியைத்தான் இன்னிக்கி உங்க காதுல போடப் போறேன்.
ஒருத்தன் மலையிலே இருந்து கீழே இறங்கி வந்துட்டுருந்தான். அவன் தலையில விறகு சுமை. வலது தோள்லயும் இடது தோள்லயும் ஒண்ணுரெண்டு  பை தொங்குச்சு. மூட்டைமுடிச்சு மாதிரி.. அதுல என்ன இருந்திருக்கும்னு நினைக்கிறீங்க? விறகு வெட்ட மலையிலே ஏறுறப்ப கண்ணுல பட்ட காய் பழம், காக்கா குருவி,  லொட்டு லொசுக்கு எல்லாத் தையும் அதுக்குள்ள பொறக்கிப் போட்டிருந்தான்.
மலை அடிவாரத்தில் ஒரு தள்ளுவண்டியில் கொஞ்சம் சரக்கை வச்சுக் கிட்டு ஒருத்தன் நின்னுட்டு இருந்தான். இவனைப் பார்த்ததும் அவன் தன்னோட தள்ளு வண்டியிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து இவன் கையில குடுத்து, "சாப்பாடு இருக்குது .... சாப்பிடு "னு சொன்னான்.
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, " என் பொஞ்சாதிக்கு ஒண்ணு "னு கேட்கவும், அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ஒரு பொட்டலத்த எடுத்து இவன் கைல குடுத்தான். 
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "என் புள்ளைக்கு ஒண்ணு"னு கேட்கவும்,அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ஒரு பொட்டலத்தை எடுத்து இவன் கைல குடுத்தான். 
இவன் அதைக் கைல வாங்கி பையில போட்டுட்டு நடக்க ஆரம்பிச்சான். கொஞ்ச தூரம் போனான். திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "என் ஆத்தா அப்பனுக்கு ஒண்ணு"னு கேட்கவும், அந்த ஆளும் பதில் எதுவும் சொல்லாமே, ரெண்டு பொட்டலத்தை எடுத்து இவன் கைல குடுத்தான். 
அதை வாங்கி பைல போட்டுக்கிட்டு, "என்னத்துக்கு இப்பிடி போறவாற எல்லாத்துக்கும்  சாப்பாடு குடுக்கீக"னு கேட்டான்.
"எல்லாம் ஒரு வேண்டுதல்தான். கிரகநிலை சரியில்லை .... நாலு பேருக்கு நல்லது பண்ணினா எல்லாம் சரியாயிடும்னு  ஜோஸ்யர் சொன்னார். தானத்துல சிறந்தது அன்னதானம்தானே. அதான் இதைக் குடுக்கிறேன்" னு அவன் சொல்லவும் சரிதான்னு தலையை ஆட்டிட்டு இவன் நடக்க ஆரம்பிச்சான்.   
கொஞ்ச தூரம் போனவன் திரும்பவும் அந்த வண்டிக்காரன் பக்கத்தில் வந்து, "இன்னும் ஒண்ணு"னு கேட்கவும், அந்த ஆள், "போதும் போ" என்று பதில் சொன்னான். இதைக் கேட்டதும், கை நீட்டினவன் "நல்லதுங்க ...  நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்"னு சொன்னான். இதைக் கேட்டதும் தள்ளுவண்டிக்காரன் தள்ளாடிப் போயிட்டான்.  
"ஐயா... நீங்க கேட்டப்பல்லாம் நான் குடுத்தேன். அப்பல்லாம் எதுவும் சொல்லாமே அதை வாங்கிட்டுப்  போன நீங்க, ஒரு பொட்டலத்தை நான் தரமாட்டேனு சொல்றப்ப நன்றி சொல்றீங்க. எனக்கு ஒண்ணும் புரியலே" னு சொன்னான்.
அதுக்கு நம்ம மூட்டை முடிச்சு,"எது கிடைச்சாலும்  அதை கண்டு திருப்தி அடையாத ஜென்மம்  மனுஷ ஜென்மம். எனக்கு இன்னொரு பொட்டலம் தேவையில்லைதான். ஆனாக்கூட, "நாம கேக்கிறப்ப எல்லாம் அந்த ஆளு குடுத்தானே. இன்னொன்னு கேட்டு வாங்கி இருக்கலாமே. கேக்காமே விட்டுட்டமோனு இந்த மனசு என்னை பாடாய் படுத்திகிட்டு இருக்கும். என்னை ஒருவேலையும் முழு மனசா செய்ய விடாது. கேட்டாலும் கிடைச்சிருக்காதுனு இப்ப உறுதியா தெரிஞ்சப்பறம் மனசிலே அந்த மாதிரி இடைஞ்சல் எதுவும் இல்லாமே மனசு பாட்டுக்கு நிம்மதியா இருக்கும். நானும் நிம்மதியா மத்த வேலையைக் கவனிப்பேன். அதுக்குதான் நன்றி சொன்னேன்"னு இவன் சொன்னான். 
அம்புட்டுதான்...கதை முடிஞ்சுது ! இதுல உங்களுக்கு என்ன புரிஞ்சுது ?

ராமு தாத்தாவும் குழந்தைகளும் (01)

சென்ற வார புதிர்  எண் : 3 ம் அதற்கான விடையும் கீழே உள்ளது .
ஒரே ஒரு  வார்த்தை,   அதாவது BECAUSE என்ற ஆங்கிலச்சொல் அடுத்தடுத்து, அதாவது தொடர்ச்சியாக  மூன்று முறை வரும்படியான  (BECAUSE BECAUSE BECAUSE) ஆங்கில வாக்கியம்  ஒன்றை கண்டு பிடித்து சொல்ல முடியுமா உங்களால் !

விடை :


A WORD DOES NOT END WITH BECAUSE.  BECAUSEBECAUSE IS A CONJUNCTION.


இனி இந்த வார புதிரைப் பார்க்கலாம். இனி வரும் புதிர்கள் ராமு தாத்தாவும் குழந்தைகளும் என்ற தலைப்பில் வரும். 




புதிர் எண்-1(நான் எழுதிய இந்தப் புதிர் சுட்டிவிகடனில் வெளிவந்தது).
ராமு தாத்தா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். எப்போதும் புதிர் போட்டுப் பேசுவார். குழந்தைகளும் அவரைப் போலவே புதிர் போட்டு அவரை கலாய்ப்பார்கள். பொழுது போகாத நேரங்களிலும் இரவில் மின்வெட்டு சமயத்திலும் தாத்தாவை சுற்றி உட்கார்ந்து கொண்டு ஏதாவது புதிர் போடச்சொல்லி கேட்பார்கள் குழந்தைகள். புதிர் சொல்லவேண்டும் என்று அடம் பிடித்த குழந்தைகளிடம் தாத்தா ஒரு புதிர் போட்டார். ஒரு கிளிக்கு மூன்று குஞ்சுகள்அன்றைக்கென்று 
மூன்றும் மிகவும் அடம் பிடித்தன. இரை தேடி தாய்க் கிளி வெளியே போக முடியாதபடி அதன் கால்களை கட்டிக்கொண்டு விட மறுத்தன. குஞ்சுகளின் மனப் போக்கை மாற்ற நினைத்த தாய்க்கிளி, குஞ்சுகளுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தது.
"அடுத்து என்ன விளையாட்டு ?" என்று  எதிர் பார்க்கும்  அளவுக்கு 
குஞ்சுகள் விளையாட்டில் லயித்து விட்டன.
" இப்போ நாம ரயில் விளையாட்டு விளையாடலாம். வாங்க. நீங்க மூன்று பேரும் ஒருவர் பின்னாலே ஒருவராக  என் வாலைப் பிடிச்சுக்கணும். நான்தான் ரயில் என்ஜின். நீங்க மூன்று பேரும் ரயில் பெட்டிகள். ரயில் இந்தமரத்தைச் சுற்றி சுற்றி ஓடி வருமாம்என்ன நான் சொல்றது சரியா?   "  என்று தாய்க்கிளி கேட்க குஞ்சுகள் ஆர்வமாக சிறகை அடித்துக் கொண்டன.
ரயில் விளையாட்டு ஆரம்பமானது. தாய்க் கிளி சொன்னது 

" நாந்தான் ரயில் எஞ்சின். எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்று சொல்லி விட்டு   முதலாவது நின்ற குஞ்சிடம் கேட்டது " நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருது?ன்னு " .
உடனே முதலில் நின்ற குஞ்சு, " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி இரண்டாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீசொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது? "  என்று கேட்டது .
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது இரண்டாவதாக நின்ற குஞ்சு.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி மூன்றாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது ? " என்று கேட்டது.
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது மூன்றாவதாக நின்ற குஞ்சு
" என்ன இது ! தப்பு தப்பாக சொல்றீங்க ? " என்று கோபப்பட்டது தாய்க்கிளி
இந்த விளையாட்டை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 
மற்ற பறவைகள்  " குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன " என்று 
கோரஸாக சொன்னதும், தாய்க்கிளிக்கோ தலை சுற்றியது, எந்த வகை யில்  இது சரியென்று !

மற்ற பறவைகள் சொன்னது போல குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன என்று நானும் சொல்கிறேன் என்ற தாத்தாவை குழந்தைகள் ஆச்சரியமாகப்  பார்த்தார்கள்கிளிக்குஞ்சுகள் சொன்னது எந்த வகையில் சரியென்பது உங்களுக்கு தெரிந்தால் இப்பவே பதிலை நீங்கள்  சொல்லலாம். அல்லது அடுத்த வாரம் வரை காத்திருக்கலாம். 
  

Friday, June 24, 2016

முஸ்லிம் சகோதரிகளுக்கு ஒரு விண்ணப்பம் !

பர்தா அணிந்து கொண்டு டூ வீலரில் பயணிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.: 
உங்கள் மத, குடும்ப பாரம்பரியப்படி பர்தா அணிகிறீர்கள். பர்தா அணிந்துகொண்டு டூ வீலரில் செல்லும்போது சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். 
நேற்று நான் வீட்டிலிருந்து தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு ஆட்டோ ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். காலை 9 மணிக்கும் முன்பான நேரம். வாகனங்கள் கண்மண் தெரியாமல் ரோட்டில் பறந்து கொண்டிருந்தன. அப்போது நானிருந்த ஆட்டோவைக் கடந்து எதிர் திசை யில் செல்வதற்காக ஒரு முஸ்லிம் சகோதரி டூ வீலரில் வந்தார். பள்ளிச்சீருடையில் அவருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு சிறுவர்கள். 8 வயதுக்கு மேலே இருக்கும். கடைசி ஆளாக ஒரு லேடி. வண்டி ஒட்டிய பெண்ணைவிட வயதில் சற்று முதிர்ந்தவர். ஒரு டூ வீலரில் நான்கு பேர். ஆட்டோவைக் கடந்து இவர் எதிர்த் திசையில் வரவேண்டிய நேரத்தில் பலத்த காற்று அடித்ததில் அவரது பர்தா அவரது முகத்தை முற்றிலுமாக     மூடி கழுத்தையும் சுற்றிக் கொண்டது. நல்ல வேளையாக ஆட்டோ ட்ரைவர் வண்டியை நிதானித்து ஓட்டினார். அந்தப்பெண்ணும் வண்டியை நிறுத்தி முகத்திலிருந்து துணியை விலக்கி விட்டுக் கொண்டிருந்தார். இரண்டு பேரும் வண்டியை நிறுத்தாமல் சென்றிருந்தாலோ, கழுத்தை சுற்றியுள்ள துணியை எடுப்பதற்காக ஒரு கையால் வண்டியை பேலன்ஸ் பண்ணியபடி மறு கையால் எடுக்க முற்பட்டிருந்தாலோ அந்த இடத்தில் ஒரு விபத்து நடந்திருக்கும். இவரை நம்பி இவர் பின்னால் மூன்று ஜீவன்கள் வேறு உட்கார்ந்திருக்கிறார்கள். நேற்று காலையிலிருந்தே வேகமான காற்றும் சிறிது தூறலும் இருந்தது. இரண்டு வண்டிகளும் எதற்காக நிற்கிறார்கள் என்பது தெரியாமல் பின்பக்கமிருந்து வேறு ஏதாவது வாகனங்கள் வந்திருந்தால் விளைவு மிக மோசமாக இருந்தி ருக்கும். 
உங்களுடைய , உங்களை நம்பி வருகிறவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதனை பதிவு செய்கிறேன்.   
தயவு செய்து டூ வீலரில் பயணிக்கும் போது நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்கள் பார்வையை மறைக்காதபடி கவனமாக செல்லுங்கள். 

Sunday, June 19, 2016

டியர் குட்டீஸ், இது உங்களுக்காக (03)

இது உங்களுக்கான புதிர். சென்ற வாரப் புதிருக்கான (புதிர் எண் -02) விடையை கால்குலேட்டரில் போட்டுப் பார்த்து தெரிஞ்சு வச்சிருப்பீங்க என்பதால் அதை மீண்டும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் இல்லை ன்னு நினைக்கிறேன். அப்படித்தானே ? 

இதோ இந்த வாரப் புதிர்.

புதிர்  எண் : 3
ஒரே ஒரு  வார்த்தை,   அதாவது BECAUSE என்ற ஆங்கிலச்சொல் அடுத்தடுத்து, அதாவது தொடர்ச்சியாக  மூன்று முறை வரும்படியான  (BECAUSE BECAUSE BECAUSE) ஆங்கில வாக்கியம்  ஒன்றை கண்டு பிடித்து சொல்ல முடியுமா உங்களால் !

அது MEANING-FUL ஆக இருக்க வேண்டும். ட்ரை பண்ணிப் பாருங்க . முடியாவிட்டால் ஒரு வாரம் பொறுத்திருங்க விடை தெரிந்து கொள்ள. 

Saturday, June 18, 2016

Dear viewers,

16.06.2016 ல் பதிவு செய்யப்பட்டிருந்த (இராமாயாணத்தில் எனது சந்தேகம்) செய்தியைப் படித்த எனது நட்பு வட்டத்தினர் அதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்றொரு கேள்வியை என் முன் வைத்தார்கள்.
ஸ்ரீ ராமரின் வழித்தோன்றல்கள் இருப்பது தெரிய வந்தால், face book ல் friend request கொடுப்பேன். அவ்வளவுதான். வேறென்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க.?

Thursday, June 16, 2016

Dear viewers,

உங்களில் எத்தனை பேருக்கு இராமாயணக்கதை தெரியும்? எங்கே ..  கை தூக்குங்க. எண்ணிப் பார்த்துடலாம் ... ஆங்க் ...1...2...100...290...1000....போதும் போதும். இதுக்கு மேலே என்னாலே எண்ண முடியாது. நிறைய பேருக்கு இராமாயணக் கதை தெரிஞ்சிருக்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம். இதை ஏன் கேக்கிறேன்னா, ஒரு கேள்வி என் மனசை ரொம்ப நாளா அரிச்சு கிட்டே இருக்குது. அதுக்கு விடை தெரிஞ்சே ஆகணும். 
எனக்கு இராமாயணக்கதை கொஞ்சூண்டு தெரியும். (ராமன் வில்லை ஒடிச்சுது, சீதையைக் கட்டிக்கிட்டது...கைகேயி கேட்ட வரத்தாலே ராமன் காட்டுக்குப் போனது. கூடவே தம்பியும் போனது. அங்கே சூர்ப்பனகை, ராவணன் வந்தது, சீதையை கிட்நாப் பண்ணினது. அனுமன் போய் சண்டை போட்டது. திரும்பவும் ராமன் நாட்டுக்கு வந்ததுன்னு சில விஷயம் தெரியுங்க. இதெல்லாம் நான் ஸ்கூலில் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலேயும் பிட் பிட்டா படிச்சதுதான். எங்க ஊர் கோயில் வாசல்ல (எந்த ஊர்னு கேக்கிறீங்களா ? நமக்கு திருநெல்வேலிங்க) ஒருத்தர் இராமாயணக்கதை சொல்லுவார். வீட்டில் பொழுது போகலை ன்னா அங்கே போய்  உக்காந்துட்டு வருவோம். அவர் இராமாயணக்கதை பேசுவார் . நாங்க பாட்டுக்கு எங்க கதையைப் பேசிட்டு இருப்போம். அக்கம் பக்கத்திலே உக்கார்ந்து இருக்கிறவங்க எங்களை மொறச்சிப் பார்த்து "உச் .. ச்சூ"னு சொல்வாங்க. நாங்க அதைக் கண்டுக்கிறதே கிடையாது. அப்போ...அப்போன்னா எப்போ? ஒரு  நாப்பது ஐம்பது வருஷத்துக்கு முந்தி ..சம்பூர்ணராமாயாணம் சினிமாவை எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்த ப்ப அங்கேருந்த கீத்துக் கொட்டாயிலே பார்த்துருக்கேன். ஸ்கூல்ல படிச்சது, கோவில் வாசல்ல கதையா கேட்டது ... இது எதுவுமே மனசிலே நிக்கலே .. ஆனா சினிமாவுலே பார்த்தது அப்படியே மனசிலே நிக்குது . (நான் படிச்சிட்டு இருந்த காலத்திலே எங்க டீச்சர் அடிக்கடி சொல்வாங்க: "கழுதைங்களா...என் தொண்டைத்தண்ணி வத்தற அளவுக்கு நான் என்ன தான் கரடியா கத்தினாலும் அது உங்க மரமண்டையிலே ஏறாது. இதையே சிவாஜி பத்மினி நடிச்ச சினிமாக்கதையா யாராவது படம் பிடிச்சுக் காட்டி இருந்தா அது  உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். மறக்கவே மறக்காது ... அப்படித்தானே?"னு கேட்பாங்க. உண்மைஅதுதானே.. ஆனால் அதையெல் லாம் அங்கே ஒத்துக்க முடியுமா? வாயிலே கொழுக்கட்டை வச்சு அடைச்ச மாதிரி உக்கார்ந்திருப்போம் ).
சம்பூர்ண ராமாயாணம் சினிமாவுலே ஒரு சீன்  வரும். மாமா வீட்டுக்குப் போயிருந்த பரதன் தன்னோட வீட்டுக்கு வருவாரு. (பரதனா நடிச்சது நம்ம சிவாஜிதான்). வர்ற வழியிலே ஊர்பூரா சோகம் மண்டிக் கிடக்கிறதை பார்ப்பார். இவருக்கு அதுக்கான காரணம் என்னனு தெரியாது. இவரைப் பார்த்ததும் எல்லாரும் கைகேயி மேலே உள்ள கோபத்தை பரதன் கிட்டே காட்டறதா நெனைச்சி அவங்க  முகத்தைத் திருப்பிக்குவாங்க. வீட்டுக்கு ... அதுதாங்க..அரண்மனைக்கு வந்த பிறகுதான் அப்பா செத்துப் போனது, அண்ணன் காட்டுக்குப் போனது எல்லாமே இவருக்குத் தெரிய வரும். 
இதுலதாங்க எனக்கு சந்தேகம். செத்துப் போனது சாதாரண ஆள் இல்லே. பத்து திசையிலும் தன்னோட ரதத்தை ஓட்டியவர். சக்ரவர்த்தி. அவர் புள்ளைக்கு பட்டாபிஷேகம் நடக்க இருந்துச்சு. அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஒரு மனுஷன் செத்துப் போனால் அவனோட மனைவி வழி சொந்தங்களுக்கு அவளோட குடும்பத்துக்கு அதை முதலில் சொல்லு வாங்க. பரதன் போயிருந்தது தன்னோட தாய்மாமன் வீட்டுக்கு..அப்படினா தசரதன் இறந்த செய்தியை கைகேயின் சகோதரனுக்கு, அவளோட தாய் வீட்டுக்கு தெரியப்படுத்தவே இல்லையா? பரதன் தசரதனோட பிள்ளை. தகப்பன் செத்ததை அவரோட பிள்ளைக்குத் தெரியப்படுத்தவில்லையா?   இவங்க சொல்லலே சரி. அது தெரியும் வாய்ப்பு அந்தக்குடும்பத்துக்கு எப்படி இல்லாமே போச்சு. ஒண்ணுமே இல்லாதவன் செத்தால் கூட அந்தக் காலத்தில் அது ஊர் முழுக்க தெரிஞ்சிரும். அப்படியிருக்க ஒரு சக்கரவர்த்தி செத்துப்போனது அவரோட மனைவியின் சொந்தபந்தங்களு க்குத் தெரியாமே போச்சுன்னு சொன்னால் அது நம்புறாப்லயா இருக்குது ? இந்தக் கேள்விக்கு யாருக்காவது விடை தெரியுமா? இதற்கான விடை இராமாயணத்தின் எந்தப் பகுதியிலாவது இருக்கிறதாங்கிற விவரத்தை இராமாயணக்கதையை முழுமையாக  அறிந்தவர்கள் யாராவது எனக்குச் சொல்லுங்களேன்.  
உங்ககிட்டே இருந்து நான் எதிர் பார்க்கிற இன்னொரு விளக்கம் ?
தான் வாழ்ந்த காலத்திலேயே தெய்வமாக மதிக்கப்பட்டவன் இராமன். அப்படியிருக்க அதற்கு அடுத்த தலைமுறையினருக்கும்  வழிவழியாக இராமனின் வம்சாவளி பற்றி தெரிந்திருக்கும்தானே.  (இப்போதைய தலை முறைக்கே தெரிந்திருக்கும் போது இராமாயணகாலகட்டத்துக்கு அடுத்த தலைமுறைக்கு தெரியாமலா இருந்திருக்கும்).
இராமாயண யுத்தம் நடந்த போது வானரப்படை அமைத்த பாலம் என்று "சேது"பாலத்தை கடலுக்கடியில் அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று ஒருவரைக்கூட அடையாளம் காட்ட முடியவில்லை. காட்டப்படவில்லை.. இராமாயணக் காலத்துக்குப் பின், புல்பூண்டு எதுவும் இல்லாமல் உலகமே அழிந்து போனது என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.
மேலே உள்ள இரண்டு விஷயங்களும் என் மண்டைக்குள் சம்மணம் போட்டு உக்காந்துகிட்டு என்னைப்பாடாய்ப்படுத்துது. இது பத்தின விவரம் அறிந்தவர்கள்  தயவுசெய்து   எனக்கும் கொஞ்சம்    சொல்லுங்களேன்  .. உங்களுக்குப் புண்ணியம்  சேரட்டும்.
எனது மெயில் : arunasshanmugam@gmail.com

Wednesday, June 15, 2016

கதை கதையாம்! கதை கதையாம்!! காரணமாம் !!!


Dear viewers,
நான் உங்களுக்கு அந்தக்கால கதை ஒண்ணு சொல்லட்டுமா. ஒரு சக்ர வர்த்தி. சக்ரவர்த்தினு சொன்னாலே  அவனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் நிறையப்பேர் இருப்பாங்கங்கிறது உங்க எல்லாருக்குமே நல்லா தெரிஞ்ச ஒண்ணு தானே. அந்த சக்ரவர்த்தி ஒரு மீட்டிங் போட்டார். ஒரு மகாநாடு நடத்தினார்னு வச்சுக்கலாமா (வச்சுக்கலாம் வச்சுக்கலாம்). அவருக்குக் கப்பம் கட்டற எல்லா ராஜாக்களும் அந்த மீட்டிங்கில் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்னு சொல்லிட்டார்.அவர்பேச்சுக்கு அப்பீல் பண்ண முடியுமா?எல்லாரும் மீட்டிங்போனாங்க. போனாங்களா...அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண வந்த அத்தனை பேரையும் "வாங்க ... வாங்க"னு வாய்நிறைய உபசரிச்ச சக்ரவர்த்தி, வேங்கை நாட்டு மன்னன் விஜய சிம்மனை கொஞ்சம் அதிகமாவே "கவனிச்சார்". எந்தவொரு விஷயத்தை மத்தவங்க முன்னாலே சொன்னாலும், உடனே விஜயசிம்மன் பக்கம் திரும்பி "நீங்க என்ன சொல்றீங்க?", "இதுபத்தி நீங்க என்ன நினைக்கி றீங்க?"னு  கேட்டார். கேட்டாரா ? அது ஏன் என்கிறது ரொம்பப் பேருக்குப் புரியலே. "அவன் வேங்கை நாட்டு அரசனாச்சே. நம்ம மேலே வேங்கை மாதிரி பாஞ்சுருவானோனு பயந்து கியந்து போயிட்டாரான்னு நெறைய பேர் வாய்விட்டே பேசிக்கிட்டாங்க. இவனுக்கு மட்டும் அப்படியென்ன தனி மரியாதைனு எல்லாரும் உள்ளுக்குள்ளேயே  வெந்து போனாங்க. எங்கே யுமே ஒரு வயித்தெரிச்சல் கோஷ்டி இருக்குந்தானே. அது அங்கேயும் இருந்துச்சு. 
மகதநாட்டு மன்னன் மணாளனுக்கு "அது" ரொம்பவே இருந்துச்சு. அவனுக்கு  மணாளன்னு பேர் வைக்கிறதுக்குப் பதிலா மண்ணாங்கட்டி ன்னு பேர் வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு அவன் "தர்த்தி".
மீட்டிங் முடிஞ்சு எல்லாரும் அவங்கவங்க நாட்டுக்குக் கிளம்பினாங்க... கிளம்பினாங்களா... இந்த  மண்ணாங்கட்டி மனசிலே திடீர்னு ஒரு வெறி . இந்த விஜயசிம்மன் ஒரு வெறும்பயல். என் நாட்டிலே இருக்கிறதுலே நூத்துலே ஒரு பங்குதான் அவன் நாடு இருக்கும். அவன் நாட்டுக்குப்போய் அவன் நாட்டிலே அப்படி என்னதான் இருக்குனு பார்த்துட்டு வரணும். அதுக்கு முன்னாலே என் நாட்டுலே இருக்கிற அருமை பெருமையை அவனுக்குக் காட்டணும்னு  நெனச்சான். நெனச்சானா? அதை அப்படியே அவங்கிட்டே சொன்னான். இவன் கெட்ட எண்ணம் புரியாமே அந்த லூஸ் இவன் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டுச்சு.  
விஜயசிம்மன் அப்போ சொன்னான், "நாம இப்பிடியே போகாமே மாறு வேசத்துலே போகலாம். அப்பத்தான் ஜனங்க எண்ணம் நமக்கு உள்ளது உள்ளபடி புரியும்"னு சொன்னான். அதுக்கு மண்ணாங்கட்டி சரின்னு சொன்னான்.  
ரெண்டு பேரும் மாறு வேசத்துலே  முதல்ல மகத நாட்டுக்குப் போனாங்க.
ஒரு இடத்திலே ஜனங்க கூட்டமா குவிஞ்சிருந்தாங்க. அது என்னனு வேங்கை கேட்க, "என் நாட்டிலே சத்திரம் சாவடிக்குப் பஞ்சமே இல்லை. இங்கே இலவசமா சாப்பாடு போடுவாங்க. அதை சாப்பிட இங்கே ஜனங்க நிக்கிறாங்க "னு ரொம்ப பெருமையா சொல்லுச்சுது மண்ணாங்கட்டி. அது மட்டுமில்லே.. "அங்கே நிக்கிற கூட்டம் துணிமணி வாங்க நிக்குது. இது தண்ணிக்கான தனிவரிசை"னு ஒவ்வொண்ணையும் ரொம்பப் பெருமை யா காமிச்சதும் இல்லாமே, "இது உன் நாட்டிலே இருக்கா... அது உன் நாட்டிலே இருக்கா"னு கேட்க வேறே செஞ்சான். "இருக்கு... இல்லை"னு பதில் சொல்லுச்சு வேங்கை. மண்ணாங்கட்டிக்கு ஒண்ணும் புரியலே. "சரி...நாமதான் அவன் நாட்டுக்குப் போகப்போறோமே..அப்ப பார்த்துக்க லாம்" னு கம்னு இருந்துட்டான்.
ரெண்டு பேரும் வேங்கை நாட்டுக்கு வந்தாங்க ...அங்கேயும் சத்திரம் இருந்துச்சு. சாவடி எல்லாம்   இருந்துச்சு..  எல்லா இடத்துலேயும் ரொம்ப ரொம்பக்   கொஞ்சூண்டு ஆளுங்க தான் இருந்தாங்க .
"ப்பூ .. எல்லா இடமும் காலியா கிடக்கு .... இவ்வளவுதானா உன் பவிசு.. இது தெரியாமே  அந்த சக்ரவர்த்தி உன்னைத் தலையிலே தூக்கி வச்சிட்டு ஆடுனானே" னு சொன்னான் மண்ணாங்கட்டி.
அதுக்கு விஜயசிம்மன், "என் நாட்டு மக்களுக்கு நான் என்னவெல்லாமோ கொடுக்க நெனக்கிறேன். ஆனா அவங்க எதையும் இனாமா வாங்க மாட்டோம்னு சொல்லுதாங்க. பகை வராமே, சண்டை சச்சரவு இல்லாமே நீ நாட்டைப் பார்த்துக்கோ.. எங்க பாட்டை நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்றாங்க. இப்போ சத்திரத்தில் நாம பார்த்த ஒண்ணு ரெண்டு பேர் கூட துணைக்குனு யாருமே இல்லாத அநாதைங்க..எந்த வேலையும் செய்ய முடியாத வயசானவங்கதான்"னு ரொம்ப பணிவா சொல்லுச்சு வேங்கை.
"அட .. இப்படிக்கூடவா முட்டாள் ஜனங்க இருப்பாங்க"னு ஆச்சரியமா கேட்டான் மண்ணாங்கட்டி.   
"என் பேச்சிலே நம்பிக்கை இல்லாட்டா நீங்களே எதையாவது குடுத்துப் பாருங்க" அப்படின்னு வேங்கை சொல்லுச்சு.
உடனே மாறு வேசத்தில் இருந்த மண்ணாங்கட்டி, தன்னோட கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியைக் கழட்டி வயக்காட்டில் வேலை செஞ்சிட்டு இருந்த ஒரு வயசான ஆளுகிட்டே குடுத்தான். கூழைக்கும்பிடு போட்டு அதை அவன் வாங்கிக்குவான்னு மண்ணாங்கட்டி நெனச்சான்.
"டேய்... கட்டை விளக்குமாறு... நான் உன்கிட்டே கேட்டேனா என்ன? என்னை பிச்சைக்காரன்னு நினைச்சியா? நீ இனமா ஒண்ணை குடுத்துட்டு என்கிட்டே இருந்து எதை அடிச்சிட்டுப் போலாம்னு நினைச்சே. அது என்ன முலாம்  பூசின போலி நகைதானே.. திரும்பி பார்க்காமே ஓடிடு." என்றான் அந்த ஆள்.
மண்ணாங்கட்டி தன்னோட பையிலிருந்த ஒருபழத்தை அவன்  முன்னால் நீட்டி " இதை மட்டுமாவது வாங்கிக்கோ" என்றான்.
"நீ உதை வாங்கிட்டுப்போற முடிவோடுதான் வந்திருக்கிறேனு நினைக்கி றேன். கிறுக்குப் பயலா நீ ?" என்று கடுகடுத்தான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவன். 
அப்போ வேங்கை, மண்ணாங்கட்டி காதுலே கிசுகிசுத்தான். "அப்படியா" னு கேட்ட மண்ணாங்கட்டி, "என் குதிரை தாகத்தாலே தவிக்குது. கேணி ரொம்பத் தள்ளி, தூரத்தில் இருக்கிறதா சொன்னாங்க. எனக்காக ஒரு வாளி  தண்ணி கொண்டாந்து தர முடியுமா"னு கேட்டான். அவனையும் குதிரையையும் பார்த்த அந்த ஆள் ஒரு வாளியை எடுத்துட்டுப் போய் தண்ணி கொண்டாந்து குதிரை முன்னாடி வச்சான்.
"இப்போ அந்தப் பழத்தைக் குடுங்க"னு கண்ஜாடை காட்டினான் விஜய சிம்மன். திரும்பவும் தன்னோட பையைத் திறந்து ஒரு பழத்தை எடுத்து தண்ணி கொண்டாந்து தந்தவன் கிட்டே கொடுத்தான்  மண்ணாங்கட்டி. மறுப்பு எதுவும் சொல்லாமே அதை வாங்கிக்கிட்டு எதுவும் பேசாமே அங்கிருந்து கிளம்பிப்போய், மரநிழலிலிருந்த ஒரு பாத்திரத்திலே அதை   பத்திரமா வச்சிட்டு  திரும்பவும் வயல் வேலையைப் பார்க்க ஆரம்பிச் சிட்டான் அந்த ஆள்.  
இது மண்ணாங்கட்டியை ரொம்பவும் யோசிக்க வச்சுது. "உழைப்போட அருமை தெரிஞ்சவங்களுக்கு நீ அரசனா இருக்கிறே. அதான் சக்ரவர்த்தி உன்னைத் தலையில் வச்சு கொண்டாடினார்னு இப்போ எனக்குப் புரிஞ்சு போச்சு. இனிமே நாம நண்பர்களா இருக்கலாம்.. நான் என்னோட நாட்டுக்குக் கிளம்பறேன்" என்றான் மண்ணாங்கட்டி.
"உழைப்பை மதிக்கணும்....உழைக்கிறவனை மதிக்கணும்.  உழைப்புக்குத் தகுந்த   கூலி குடுக்கணும். பசிச்சவனுக்கு சாப்பாடு போடற அதே வேளை யிலே அடுத்த வேளை சாப்பாட்டை அவன் எப்படி சம்பாதிச்சுக்கணும்னு அவனுக்கு சொல்லித் தரணும். இது எங்க அப்பா எனக்கு சொல்லித் தந்த பாடம். அதை நான் செய்கிறேன். என்னோட நாட்டு மக்கள் அதுக்கு ஒத்துழைக்கிறாங்க அவ்வளவுதான்"னு  பணிவோடு வேங்கை சொல்ல இங்கிருந்து கிளம்பினான் மண்ணாங்கட்டி. ச்சே ... இனிமே மண்ணாங் கட்டினு சொல்லப்படாது...அவன்தான் தன்னோட தப்பை உணர்ந்து திருந்திட்டானே.  அப்புறம் என்ன மண்ணாங்கட்டினு ஒரு அடைமொழி. இனிமே அவனை மணாளன்னுதான் சொல்லணும். 
அம்புட்டுதான்... கதை முடிஞ்சுது....
இது அந்தக்கால கதைங்க... அந்தக்காலத்துக்கும் இந்தக்காலத்துக்கும் சத்தியமா எந்த சம்பந்தமும் கிடையாதுங்க .  நம்புங்க...ப்ளீஸ் ....

Sunday, June 12, 2016

டியர் குட்டீஸ், இது உங்களுக்காக (02)

சென்ற வார  புதிர் எண் - 01க்கான விடை :

கீழே சில வார்த்தைகளின்  சிறப்பு  : இந்த வார்த்தைகளை இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாகப் படித்தாலும் ஒரே வார்த்தைதான் (அதே சொல்தான் ) வரும்.

காக்கா

தாத்தா 

மாமா 
பாபா 
பாப்பா 
குடகு 
மா பலா லாபமா 
தத்தை தைத்த 
கருதித் திருக 

குலவி விலகு 

தேரு  வருதே 
மே மாதமாமே 
MADAM 

RADAR


இனி இந்த வாரப் புதிருக்கு விடை தேடுங்கள் : 

புதிர் எண் : 02

எண்கள் மட்டுமே உள்ள கால்குலேடேரில் (CALCULATOR) எழுத்துக்களை ஆங்கில வார்த்தைகளை கொண்டுவர முடியுமா ? முடியும். கீழே உள்ள வார்த்தைகளைக் கொண்டு வர முயற்சி செய்துதான் பாருங்களேன். தெரியாவிட்டால் அடுத்த வாரம் வரை காத்திருங்கள் . ஒரு சில வார்த்தைகள் CAPITAL LETTER ம் SMALL LETTER லும் மாறி மாறி வரும்.

  1 EEL        2 EGG       3 ELSE      4 GLEE    5 GIGGLE  6 GLEE    7 GLOSS  8 GOOSE 9 hE       10 hIS 
11 hOE     12 hEEL   13 hISS    14 hOLE  15 hOSE   16 ILL     17 ISLE     18 LOG    19 LOSE 20 LOOSE 
21 LESS   22  LOE   23 LOSS  24 LEES   25 LIE        26 OIL    27 OGLE  28 SEE      29 SELL 30 ShE 
31 ShELL 32 ShOE  33 SIEGE 34 SILO    35 SOIL    36 SOLE 37 SOLO 38 hELL    39 hILL  40 GILL

Wednesday, June 08, 2016

Dear Viewers, attention please : -

Kindly step into https://ARUNA S. SHANMUGAM.BLOGGER to view and solve ON-LINE PUZZLES in English and more than 1000 numbers of computer designed Kolams.

Sunday, June 05, 2016

Dear Viewers

(இது 22.11.2015ல் நான் தொகுத்து வைத்திருந்த ஒருசெய்தி.அதை அப்போது பதிவு செய்யவில்லை. நேற்று டீவி நியூஸில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் செய்ததைப் பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.)             
                                                                   காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ?


                                        
விவசாயிகள் விவசாயம் பற்றிய செய்திகள் டீவீ யில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் நாம் பார்க்கக் கூடிய இரண்டே இரண்டு காட்சிகள் :
1. விவசாயிகள் தங்களது காய்ந்து  வறண்டுபோன விளை நிலங்களைக்   
காட்டிக் கண்ணீர்வடிப்பார்கள்.அல்லது தண்ணீருக்குள் மூழ்கிக்  கிடக்கும் நாற்றுகளையும் கதிர்களையும் சாய்ந்து கிடக்கும் நெல் பயிர்களையும்       காட்டிக்கண்ணீர்வடிப்பார்கள்.இந்த காரணங்களால் இந்தந்த இடங்களில் தண்ணீர் தேங்குகிறது என்பது அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கக்கூடிய ஒரு விஷயந்தானே.   
அதை சரிசெய்ய அவர்கள் முயற்சி செய்யவில்லையா அல்லது எதற்குமே இயலாத வகையில் சூழ் நிலை இருக்கிறதா ?
பெய்து கெடுப்பேன் அல்லது பெய்யாமல் கெடுப்பேன் என்பது வருண பகவானின் சங்கல்பமா ?
2.கடலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தண்ணீரைத்தவிர வேறு எதுவும் கிடையாது. ஆனாலும் கடலுக்குள் செல்பவர்கள் கையில் கண்டிப்பாக தண்ணீர்பாட்டில் இருந்தே ஆகவேண்டும். பலரது வீட்டைச்சுற்றி மழைநீர் நின்றாலும் குடிப்பதற்கு குழாய்த் தண்ணீர்தானே தேவைப்படுகிறது . கோடையில் தண்ணீர் கேட்டு மக்கள் சாலை மறியல் செய்வதும் மழைக் காலத்தில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்று கொண்டு கண்ணீர் மல்க பேட்டி கொடுப்பதும் ரொம்பவும் பழக்கப்பட்டுப் போன ஒரு காட்சியாகி விட்டது. 
உலகத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் . அதையெல்லாம் ஒரு பக்கமாக மூட்டை கட்டி வைத்து விட்டு இந்த தண்ணீர் பிரச்சினை பற்றி நாம கொஞ்சம் பேசுவோமே. 
1. "தண்ணிதானே" என்று நினைச்சு இதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. (இந்தத் "தண்ணீ" எத்தனை கட்சிகளின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டு விட்டது என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். முக்கியமாக கட்சித்தலைவர்களுக்குத் தெரியும்).  உலகப் பொது மறையான திருக்குறளில்  "நீரின்றி அமையாது உலகு " என்று வள்ளுவர் சொல்லி இருக்கிறார்.  
2. உலகில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்கும் வறுமைதான் தாயகம். நீர் இல்லாவிட்டால் விவசாயம் இல்லை. இந்தத் தண்ணீர் பிரச்சினை என்பது விவசாயிகளின் தனிப்பட்ட பிரச்சினை என்று நினைக்காமல்  ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.( ஐயா...நீங்க எவ்வளவு பெரிய பணக்காரராக வேணும்னாலும் இருந்துட்டு போங்க. காசை வீசி எறிந்தால் எதுவும் உங்கள் காலடியில் வந்து விழும். ஒத்துக்கொள்கிறேன். தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு போய் தானியம் எதுவும்விளையவில்லை என்றால்,  உங்களுக்குத் தேவையான அரிசி...கோதுமை...அல்லது சாப்பிடத்தேவையான ஒன்று எங்குமே இல்லை என்றால் உங்ககிட்டே பணம் இருந்தும் பிரயோசனம் இல்லை யே  )
அடுத்தவர்களை குறை சொல்லிப் பிழைக்கும் பழக்கத்தை விட்டு விட்டு எல்லோரும் பிழைப்பதற்கான ஒரு வழியை  எல்லோரும் சேர்ந்து கண்டு பிடிக்க முயற்சி செய்வோமே .
இந்தந்த இடங்களில் இந்த காரணத்தால்தான் தண்ணீர் தேங்குகிறது. அல்லது இந்தந்த இடங்களில் இது போன்ற காரணத்தால்தான் தண்ணீர் கிடைக்கவில்லை  என்பதைக் கண்டு பிடியுங்கள். அதை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டுசெல்லுங்கள். நியாயமான விஷயங்கள் அநியாய மாக மறுக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது சாலை மறியல் . நாம்தான் அதில் எக்ஸ்பெர்ட் ஆச்சே. அது நமக்குக் கைவந்த கலை ஆயிற்றே.  நம் வீட்டுக் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பதில் அக்கறை காட்டும் நாம்,அடுத்த தலைமுறைக்கு தண்ணீர்பிரச்னை என்றால் என்னவென்றே தெரியாது என்ற சூழ்நிலையை உருவாக்கித் தர ஒன்று படலாந்தானே.
இந்த தண்ணீர் பிரச்சினை இன்று அல்லது நேற்றைய பிரச்சினை அல்ல. காலங்காலமாக இருந்து வருகிற ஒன்று. இப்போது மீடியாக்கள் மூலம் நிலைமை வெளிஉலகுக்கு படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அப்போதைய நிலவரம் வெளியுலகிற்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவ்வளவுதான்.
போனமாதம் ரயிலில் திருச்சிக்குப் பயணித்துக்கொண்டிருந்தேன். கடலூர் மாயவரம் தஞ்சாவூர்  வழியாக செல்லும் ரயில் அது. ஒரு சில இடங்களில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. சில இடங்களில் நெற் பயிர் ஓரளவு வளர்ந்த நிலையில் இருந்தது (அந்த அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டே பயணித்தேன். அதாவது சென்னையில் பெருவெள்ளத்துக்கு முன்பாக).வெள்ளப்போக்கை டீவியில் பார்த்தபோது அவை எல்லாமே இப்போது அழிந்து போயிருக்குமென்ற நினைப்பு எனக்கே அடி வயிற்றை கலக்கும்போது, அந்தவயலில் பாடு பட்டவர்கள் இப்போது பரிதவித்துப் போயிருப்பார்கள் என்பதையும் நான் கவலையோடு இப்போது நினைத்துப்பார்க்கிறேன்). சகபயணிகள் இருவர் இதே டாபிக் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்குள் நடந்த உரையாடலை உங்கள் பார்வைக்குப் பதிவு செய்கிறேன். 
ஒருவர் : "தண்ணீர் இல்லே அது இல்லேன்னு புலம்பறதை விட்டுட்டு அதுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யணும். அதுக்கு ஆகிற செலவை எல்லாரும் சேர்ந்து பங்கு போட்டுக்கணும். யார் யார் எவ்வளவு கொடுத்தாங்க என்கிறதையும் எழுதிவச்சுக்கணும். நாமஎன்ன சொன்னா லும் அதை காதிலேயே வாங்காமே இருந்துட்டு எலெக்சன் சமயத்திலே நம்ம வீட்டைத்தேடி வந்து ஓட்டு கேட்க வருவாங்கதானே, அவங்க கிட்டே,"நீங்க எந்தக்கட்சியை சேர்ந்தவங்களாக வேணும்னாலும் இருந்து ட்டுப் போங்க. அதைப்பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் பகுதிக்கு நாங்க இவ்வளவு செலவு பண்ணியிருக்கோம். அதுக்கு பேங்க் வட்டி போட்டால் இவ்வளவு தொகை வரும். அதை எந்தக் கட்சி எங்களுக்கு தருதோ அவங்களுக்கு நாங்க ஓட்டு போடுவோம்"னு சொல்லணும் "
மற்றவர்  : அதிலும் ஆயிரத்தெட்டு சட்டப் பிரச்சினை இருக்கப் போகுது. 
முதலில் பேசியவர் : அப்படியொரு பிரச்சினை வந்து உங்களைக் கைது செய்வோம்னு சொல்லிட்டு யாராவது வந்தால், அப்போ தீக்குளிக்கிற நாடகம், சாலை மறியல் நாடகத்தை எல்லாம் இவங்க நடத்தட்டும். விஷயம் வெளிச்சத்துக்கு வரட்டும். எல்லாரும் சேர்ந்து நீதி கேட்போம். நீயும் செய்ய மாட்டே. நாங்க செலவழிச்ச காசையும் தரமாட்டேன்னு சொல்றது எந்த ஊர் நியாயம்னு கேட்போம்.
இந்தப் பேச்சு நடந்து கொண்டு இருக்கும்போது கும்பகோணம் வந்து விட்டது. இவர்கள் அருகில் வந்த ஒருவர் " ஸார் இது என்னோட இடம் " என்று சொல்ல, அவர்கள் இருவரும் அங்கிருந்து எழுந்து அடுத்தாற்போல் இருந்த காலி இடத்துக்குப் போய் விட்டார்கள். அதன் பிறகு அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் பேச்சு எனக்குப் பிடித்திருந்தது.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்பதை விட்டு விட்டு, ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விட்டு விட்டு  நெடுங்காலமாக இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்ன முடிவு கட்டலாம் என்பது பற்றி யோசியுங்கள். நல்ல முடிவுகளை எதிர் காலந்தான் சொல்ல வேண்டும். காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ? ஹூம் .... நான்தான் தவிச்சேன். என்னோட பேரக் குழந்தைகளுக்காவது  இந்த நிலைமை வராமல் இருக்கட்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைப்போம். அட்லீஸ்ட் கனவாவது காண ஆரம்பிப்போம். உங்களை எல்லாம் கை எடுத்துக் கும்பிட்டு ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன். விவசாயப் பிரச்சினை என்பதை தனிப்பட்ட ஒரு வர்க்கத்தின் பிரச்சினை என்ற கோணத்தில் பார்ப்பதை விட்டு விட்டு அது ஒரு ஒட்டு மொத்த சமுதாய / உலகப் பிரச்சினை என்ற அளவில் அலசி ஆராயப் படவேண்டும்.   
யாராக இருந்தாலும் சரி ; ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகின் நடக்கும் சட்டத்துக்கு, நியாயத்துக்குப் புறம்பான அத்தனை செயல்களுக்கும் காரணம் வறுமை ; பசிதான். கையில் காசு இருந்தாலும் கடையில் தானியம் இல்லையென்றால் காசு என்பது தூசிக்குச் சமம்.  நாமோ நமக்கு வேண்டிய ஒருவரோ பசியோடு இருக்கும் போது தர்மநியாயத்தைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. அவங்க பசிக்கு என்ன கொடுக்கலாம், அதை எப்படி கொண்டு வரலாம் என்று மட்டுமே யோசிப்போம். 
2015ன் முடிவில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்.. 2016ன் முதல் பாதிப் பகுதி முடிவதற்கு முன்பாகவே  வறட்சி ..... ஐயோ கடவுளே.... இது எங்களை எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியலையே/