Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, June 15, 2016

கதை கதையாம்! கதை கதையாம்!! காரணமாம் !!!


Dear viewers,
நான் உங்களுக்கு அந்தக்கால கதை ஒண்ணு சொல்லட்டுமா. ஒரு சக்ர வர்த்தி. சக்ரவர்த்தினு சொன்னாலே  அவனுக்கு அடங்கிய சிற்றரசர்கள் நிறையப்பேர் இருப்பாங்கங்கிறது உங்க எல்லாருக்குமே நல்லா தெரிஞ்ச ஒண்ணு தானே. அந்த சக்ரவர்த்தி ஒரு மீட்டிங் போட்டார். ஒரு மகாநாடு நடத்தினார்னு வச்சுக்கலாமா (வச்சுக்கலாம் வச்சுக்கலாம்). அவருக்குக் கப்பம் கட்டற எல்லா ராஜாக்களும் அந்த மீட்டிங்கில் கண்டிப்பா அட்டெண்ட் பண்ணனும்னு சொல்லிட்டார்.அவர்பேச்சுக்கு அப்பீல் பண்ண முடியுமா?எல்லாரும் மீட்டிங்போனாங்க. போனாங்களா...அந்த மீட்டிங் அட்டெண்ட் பண்ண வந்த அத்தனை பேரையும் "வாங்க ... வாங்க"னு வாய்நிறைய உபசரிச்ச சக்ரவர்த்தி, வேங்கை நாட்டு மன்னன் விஜய சிம்மனை கொஞ்சம் அதிகமாவே "கவனிச்சார்". எந்தவொரு விஷயத்தை மத்தவங்க முன்னாலே சொன்னாலும், உடனே விஜயசிம்மன் பக்கம் திரும்பி "நீங்க என்ன சொல்றீங்க?", "இதுபத்தி நீங்க என்ன நினைக்கி றீங்க?"னு  கேட்டார். கேட்டாரா ? அது ஏன் என்கிறது ரொம்பப் பேருக்குப் புரியலே. "அவன் வேங்கை நாட்டு அரசனாச்சே. நம்ம மேலே வேங்கை மாதிரி பாஞ்சுருவானோனு பயந்து கியந்து போயிட்டாரான்னு நெறைய பேர் வாய்விட்டே பேசிக்கிட்டாங்க. இவனுக்கு மட்டும் அப்படியென்ன தனி மரியாதைனு எல்லாரும் உள்ளுக்குள்ளேயே  வெந்து போனாங்க. எங்கே யுமே ஒரு வயித்தெரிச்சல் கோஷ்டி இருக்குந்தானே. அது அங்கேயும் இருந்துச்சு. 
மகதநாட்டு மன்னன் மணாளனுக்கு "அது" ரொம்பவே இருந்துச்சு. அவனுக்கு  மணாளன்னு பேர் வைக்கிறதுக்குப் பதிலா மண்ணாங்கட்டி ன்னு பேர் வச்சிருக்கலாம். அந்த அளவுக்கு அவன் "தர்த்தி".
மீட்டிங் முடிஞ்சு எல்லாரும் அவங்கவங்க நாட்டுக்குக் கிளம்பினாங்க... கிளம்பினாங்களா... இந்த  மண்ணாங்கட்டி மனசிலே திடீர்னு ஒரு வெறி . இந்த விஜயசிம்மன் ஒரு வெறும்பயல். என் நாட்டிலே இருக்கிறதுலே நூத்துலே ஒரு பங்குதான் அவன் நாடு இருக்கும். அவன் நாட்டுக்குப்போய் அவன் நாட்டிலே அப்படி என்னதான் இருக்குனு பார்த்துட்டு வரணும். அதுக்கு முன்னாலே என் நாட்டுலே இருக்கிற அருமை பெருமையை அவனுக்குக் காட்டணும்னு  நெனச்சான். நெனச்சானா? அதை அப்படியே அவங்கிட்டே சொன்னான். இவன் கெட்ட எண்ணம் புரியாமே அந்த லூஸ் இவன் சொன்னதுக்கெல்லாம் தலையை ஆட்டுச்சு.  
விஜயசிம்மன் அப்போ சொன்னான், "நாம இப்பிடியே போகாமே மாறு வேசத்துலே போகலாம். அப்பத்தான் ஜனங்க எண்ணம் நமக்கு உள்ளது உள்ளபடி புரியும்"னு சொன்னான். அதுக்கு மண்ணாங்கட்டி சரின்னு சொன்னான்.  
ரெண்டு பேரும் மாறு வேசத்துலே  முதல்ல மகத நாட்டுக்குப் போனாங்க.
ஒரு இடத்திலே ஜனங்க கூட்டமா குவிஞ்சிருந்தாங்க. அது என்னனு வேங்கை கேட்க, "என் நாட்டிலே சத்திரம் சாவடிக்குப் பஞ்சமே இல்லை. இங்கே இலவசமா சாப்பாடு போடுவாங்க. அதை சாப்பிட இங்கே ஜனங்க நிக்கிறாங்க "னு ரொம்ப பெருமையா சொல்லுச்சுது மண்ணாங்கட்டி. அது மட்டுமில்லே.. "அங்கே நிக்கிற கூட்டம் துணிமணி வாங்க நிக்குது. இது தண்ணிக்கான தனிவரிசை"னு ஒவ்வொண்ணையும் ரொம்பப் பெருமை யா காமிச்சதும் இல்லாமே, "இது உன் நாட்டிலே இருக்கா... அது உன் நாட்டிலே இருக்கா"னு கேட்க வேறே செஞ்சான். "இருக்கு... இல்லை"னு பதில் சொல்லுச்சு வேங்கை. மண்ணாங்கட்டிக்கு ஒண்ணும் புரியலே. "சரி...நாமதான் அவன் நாட்டுக்குப் போகப்போறோமே..அப்ப பார்த்துக்க லாம்" னு கம்னு இருந்துட்டான்.
ரெண்டு பேரும் வேங்கை நாட்டுக்கு வந்தாங்க ...அங்கேயும் சத்திரம் இருந்துச்சு. சாவடி எல்லாம்   இருந்துச்சு..  எல்லா இடத்துலேயும் ரொம்ப ரொம்பக்   கொஞ்சூண்டு ஆளுங்க தான் இருந்தாங்க .
"ப்பூ .. எல்லா இடமும் காலியா கிடக்கு .... இவ்வளவுதானா உன் பவிசு.. இது தெரியாமே  அந்த சக்ரவர்த்தி உன்னைத் தலையிலே தூக்கி வச்சிட்டு ஆடுனானே" னு சொன்னான் மண்ணாங்கட்டி.
அதுக்கு விஜயசிம்மன், "என் நாட்டு மக்களுக்கு நான் என்னவெல்லாமோ கொடுக்க நெனக்கிறேன். ஆனா அவங்க எதையும் இனாமா வாங்க மாட்டோம்னு சொல்லுதாங்க. பகை வராமே, சண்டை சச்சரவு இல்லாமே நீ நாட்டைப் பார்த்துக்கோ.. எங்க பாட்டை நாங்க பார்த்துக்கிறோம்னு சொல்றாங்க. இப்போ சத்திரத்தில் நாம பார்த்த ஒண்ணு ரெண்டு பேர் கூட துணைக்குனு யாருமே இல்லாத அநாதைங்க..எந்த வேலையும் செய்ய முடியாத வயசானவங்கதான்"னு ரொம்ப பணிவா சொல்லுச்சு வேங்கை.
"அட .. இப்படிக்கூடவா முட்டாள் ஜனங்க இருப்பாங்க"னு ஆச்சரியமா கேட்டான் மண்ணாங்கட்டி.   
"என் பேச்சிலே நம்பிக்கை இல்லாட்டா நீங்களே எதையாவது குடுத்துப் பாருங்க" அப்படின்னு வேங்கை சொல்லுச்சு.
உடனே மாறு வேசத்தில் இருந்த மண்ணாங்கட்டி, தன்னோட கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியைக் கழட்டி வயக்காட்டில் வேலை செஞ்சிட்டு இருந்த ஒரு வயசான ஆளுகிட்டே குடுத்தான். கூழைக்கும்பிடு போட்டு அதை அவன் வாங்கிக்குவான்னு மண்ணாங்கட்டி நெனச்சான்.
"டேய்... கட்டை விளக்குமாறு... நான் உன்கிட்டே கேட்டேனா என்ன? என்னை பிச்சைக்காரன்னு நினைச்சியா? நீ இனமா ஒண்ணை குடுத்துட்டு என்கிட்டே இருந்து எதை அடிச்சிட்டுப் போலாம்னு நினைச்சே. அது என்ன முலாம்  பூசின போலி நகைதானே.. திரும்பி பார்க்காமே ஓடிடு." என்றான் அந்த ஆள்.
மண்ணாங்கட்டி தன்னோட பையிலிருந்த ஒருபழத்தை அவன்  முன்னால் நீட்டி " இதை மட்டுமாவது வாங்கிக்கோ" என்றான்.
"நீ உதை வாங்கிட்டுப்போற முடிவோடுதான் வந்திருக்கிறேனு நினைக்கி றேன். கிறுக்குப் பயலா நீ ?" என்று கடுகடுத்தான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவன். 
அப்போ வேங்கை, மண்ணாங்கட்டி காதுலே கிசுகிசுத்தான். "அப்படியா" னு கேட்ட மண்ணாங்கட்டி, "என் குதிரை தாகத்தாலே தவிக்குது. கேணி ரொம்பத் தள்ளி, தூரத்தில் இருக்கிறதா சொன்னாங்க. எனக்காக ஒரு வாளி  தண்ணி கொண்டாந்து தர முடியுமா"னு கேட்டான். அவனையும் குதிரையையும் பார்த்த அந்த ஆள் ஒரு வாளியை எடுத்துட்டுப் போய் தண்ணி கொண்டாந்து குதிரை முன்னாடி வச்சான்.
"இப்போ அந்தப் பழத்தைக் குடுங்க"னு கண்ஜாடை காட்டினான் விஜய சிம்மன். திரும்பவும் தன்னோட பையைத் திறந்து ஒரு பழத்தை எடுத்து தண்ணி கொண்டாந்து தந்தவன் கிட்டே கொடுத்தான்  மண்ணாங்கட்டி. மறுப்பு எதுவும் சொல்லாமே அதை வாங்கிக்கிட்டு எதுவும் பேசாமே அங்கிருந்து கிளம்பிப்போய், மரநிழலிலிருந்த ஒரு பாத்திரத்திலே அதை   பத்திரமா வச்சிட்டு  திரும்பவும் வயல் வேலையைப் பார்க்க ஆரம்பிச் சிட்டான் அந்த ஆள்.  
இது மண்ணாங்கட்டியை ரொம்பவும் யோசிக்க வச்சுது. "உழைப்போட அருமை தெரிஞ்சவங்களுக்கு நீ அரசனா இருக்கிறே. அதான் சக்ரவர்த்தி உன்னைத் தலையில் வச்சு கொண்டாடினார்னு இப்போ எனக்குப் புரிஞ்சு போச்சு. இனிமே நாம நண்பர்களா இருக்கலாம்.. நான் என்னோட நாட்டுக்குக் கிளம்பறேன்" என்றான் மண்ணாங்கட்டி.
"உழைப்பை மதிக்கணும்....உழைக்கிறவனை மதிக்கணும்.  உழைப்புக்குத் தகுந்த   கூலி குடுக்கணும். பசிச்சவனுக்கு சாப்பாடு போடற அதே வேளை யிலே அடுத்த வேளை சாப்பாட்டை அவன் எப்படி சம்பாதிச்சுக்கணும்னு அவனுக்கு சொல்லித் தரணும். இது எங்க அப்பா எனக்கு சொல்லித் தந்த பாடம். அதை நான் செய்கிறேன். என்னோட நாட்டு மக்கள் அதுக்கு ஒத்துழைக்கிறாங்க அவ்வளவுதான்"னு  பணிவோடு வேங்கை சொல்ல இங்கிருந்து கிளம்பினான் மண்ணாங்கட்டி. ச்சே ... இனிமே மண்ணாங் கட்டினு சொல்லப்படாது...அவன்தான் தன்னோட தப்பை உணர்ந்து திருந்திட்டானே.  அப்புறம் என்ன மண்ணாங்கட்டினு ஒரு அடைமொழி. இனிமே அவனை மணாளன்னுதான் சொல்லணும். 
அம்புட்டுதான்... கதை முடிஞ்சுது....
இது அந்தக்கால கதைங்க... அந்தக்காலத்துக்கும் இந்தக்காலத்துக்கும் சத்தியமா எந்த சம்பந்தமும் கிடையாதுங்க .  நம்புங்க...ப்ளீஸ் ....

No comments:

Post a Comment