Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 30, 2013

திரை இசையில் " சொந்தங்களும், உறவுகளும் "

தொட்டால் சுடுவது நெருப்பாகும் ;
தொடாமல் சுடுவது வெறுப்பாகும் ;
தெரிந்தே கெடுப்பது பகையாகும் ;
தெரியாமல் கெடுப்பது உறவாகும் !

உறவு என்றொரு சொல்லிருந்தால்
பிரிவு என்று தொடரிருக்கும் !

பணத்தின் மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசமே வீணடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா !

பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே ; பந்தமில்லே

இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் ;
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்றுதான் !

ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஜென்மங்கள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன்
அத்தனை பிறப்பிலும் இதனை உறவும் என்னுடன் பிறந்திட வேண்டுகிறேன்

சொந்தம் எப்போதும் தொடர் கதைதான் ;
முடிவே இல்லாதது !
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது !!

குரங்காய் இருந்த மனிதன் மனதில்
குழப்பம் சூட்சி இல்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி
கூட்டம் சிறிதும் இல்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் 
அமைதியைக் காணவில்லை
அழுதான் துடித்தான் அலைந்தான் திரிந்தான்
யாருக்கும் லாபமில்லை

கனவோடு சிலநாள் ; நினைவோடு சிலநாள் ;
உறவில்லை;  பிரிவில்லை;  தனிமை பலநாள் !

உறவு என்ற வானத்திலே
நாம் பறவையாகலாம் !
உள்ளம் என்ற தோட்டத்திலே
நாம் மலர்களாகலாம் !!

Friday, March 29, 2013

Scanning of inner- heart ( Scan Report No. 65 )

               பாவம் இந்தக் கடவுள் !!

கையிலிருந்த நியூஸ் பேப்பரை கோபமாக விட்டெறிந்தார் சாரதி."  ச்சே .. எங்கே  பார்த்தாலும் கொலை. கொள்ளை, கற்பழிப்பு, பொய், புரட்டல், பித்தலாட்டம் . இதைத் தவிர வேறு எதுவுமே உலகத்தில் கிடையாதா? இதை எல்லாம் சட்டம் போட்டும் தடுக்க முடியவில்லை. சட்டத்திலிருந்து தப்பியவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தெய்வமும் கண்களை இறுகக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தால் எப்படி ? " என்று மனதுக்குள் கேட்டபடியே பூஜை அறைப்பக்கம் கண்களைத் திருப்பி " பெருமாளே, இதெல்லாம் உனக்கே நியாயமாப் படுதா? இன்னும் அனந்த சயனத்தில்தான் இருக்கிறாயா ?அக்கிரமத்தைக் கண்டு கொதித்தெழுந்து ஓடி வர வேண்டாமா ? "  என்று கடவுளை பார்வையாலேயே கேள்வி கேட்டார் 
படத்திலிருந்த பெருமாள் மந்தகாசப் புன்னகை மாறாமல் இருந்தார். சரிதான் போ . என்னைக்கு நான் நினைச்சது நடந்திருக்கு .. இப்போ நடக்கிறதுக்கு என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார். நினைப்பது நடந்துவிட்டால், கேட்பது கிடைத்து விட்டால் பிறகு தெய்வம்தான்  எதற்கு என்று நினைத்தபடியே ஈஸி சேரில் சாய்ந்தார்.
யாரோ தட்டி எழுப்புவதை உணர்ந்து கண்களைத் திறந்து பார்த்தார். புன்னகை முகமொன்று கண்ணெதிரே மங்கலாகத் தெரிந்தது . " யார் ஸார் நீங்க ? பூட்டின வீட்டுக்குள் எப்படி வந்தீங்க ? பாகீ ... அடியே பாகீ .. கதவைத் திறந்தது யார் ? " என்று சாரதி கூச்சலிட ' " தூங்கிறவங்களை எல்லாம் ஏன் எழுப்பறீங்க ? எப்படியோ நான் உள்ளே வந்திட்டேன் . உங்களை எழுப்பிட்டேன் . அப்படியே என்னோட வெளியே வந்தீங்கன்னா உங்களுக்கு ஒரு உண்மையை சொல்வேன் " என்றார் எதிரே நின்றவர்
" யார் ஸார் நீங்க ? பூட்டின கதவு பூட்டினாபிலேயே இருக்கு.எப்படி உள்ளே வந்தீங்க ? "
" என்னங்க .. குழந்தை மாதிரி சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ! .இப்போ உங்களுக்கு நான் யார்னு தெரியணும் . அவ்வளவுதானே ?  நான்தான் கடவுள் "
இதைக் கேட்டு ஒருகணம் பேயறைந்தது போல திகைத்த சாரதி' " என்ன இது .. பெருமாளே நீயா ?  நீயா வந்திருக்கே ? அடியே பாகீ ... பாகீ  " என்று இரைய,
" இன்னும் நான் உங்களை " நீங்க .. நாங்க ... ஏனுங்க 'ன்னு மரியாதையா தான் சொல்லிட்டு இருக்கிறேன்.... ஹும் .. நேரில் வந்தால் கடவுளுக்குக் கூட மரியாதை கிடைக்காது .  பூட்டின கோவிலுக்குள் இருந்தால்தான் அர்ச்சனை ஆரத்தி, மத்த மரியாதையெல்லாம் " என்று சொல்லி மீண்டும் ஒரு சிரிப்பு சிரித்தார் எதிரே நின்றவர்
" நீ நெஜமாவே கடவுளா இருந்தா உனக்கு ஒன்று சொல்றேன் கேட்டுக்கோ. பக்தனுக்கும் பரமனுக்கும் நடுவில் மரியாதை என்ன வேண்டிக் கிடக்கு ? " நீ நான்" னு உன்னை நான் ஒருமையில் சொன்னா, அது உனக்கும் எனக்கும் உள்ள  நெருக்கத்தைக் காட்டுது "
" சரி .. சரி . நான் விளையாட்டா சொன்னேன். அதுக்கு ஏன் இவ்வளவு கோபம் ? வாங்க   வெளியில் போகலாம் "
" எங்கே ? "
" பக்தர்கள் தினந்தோறும் என்கிட்டே எவ்வளவோ விஷயங்களை பகிர்ந்துக்கிறாங்க. எவ்வளவோ கேள்விகள் கேட்கிறாங்க ..கொஞ்சமுன்னாடி நீங்க கூட கேட்டீங்க , " நினைக்கிறது எதுவுமே நடக்காதா ? அக்கிரமத்தை உடனே உடனே தண்டிக்க கூடாதான்னு . அந்த ரெண்டு கேள்விக்கு மட்டும் நான் பதில் சொல்லப் போறேன்  " என்றவர் சாரதியின் பதிலுக்குக் காத்திராமல் அவர் கைகளை இறுகப் பற்றியபடி வெளியில் வந்தார்
இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள் .இருவருக்கும் இடையில் ஒரு மௌனம் நிலவியது. மௌனத்தைக் கலைக்க நினைத்த சாரதி  " பதில் சொல்றதா சொன்னீங்க " என்று இழுத்தார் .
" கண்டிப்பா .. நான் என்னோட வாயால் சொல்வதைவிட நீங்களே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் .இன்று முழு நிலவு நாள் .. அதாவது பௌர்ணமி .. இன்று என்னை வழிபட ஆயிரக் கணக்கில் பக்தர்கள் வருவார்கள். அவர்களில் ஒரு சிலரின் மனதுக்குள் நினைப்பது என்ன ? வேண்டிக் கொள்வது என்ன  என்பதை அறியும் சக்தியை உங்களுக்குத்    தருகிறேன். அறிந்து கொண்ட விசயத்தை எனக்கு சொல்ல வேண்டும் "  என்று அவர் சொன்னதுமே உற்சாக துள்ளல் ஒன்று வெளிப் பட்டது சாரதியி டமிருந்து.
கிட்டத் தட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு அலுத்துக் களைத்துப் போய்  வந்து நின்றார் சாரதி
" ஏன் இத்தனை களைப்பு ? "
" தலையே சுத்துது ! "
" ஏன் ? "
" போதும்டா சாமி .. பக்தர்களில் ஒருவர் போலீஸ்காரர். தனக்கு நிறைய கேஸ் கிடைக்கணும்னு  வேண்டிக்கிட்டார். ஒரு பக்கத்திலே ஒரு திருடன் தனக்கு தொழில் நல்லா நடக்கணும் யார்கிட்டேயும் எப்பவும் மாட்டிக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டான். ஸ்கூல் குழந்தைங்க, அவங்க நல்லா பரீட்சை எழுதி நிறைய மார்க் வாங்கி பாஸ் ஆகணும்னு வேண்டிக் கிட்டாங்க . ஒருத்தர், டுடோரியல்  காலேஜ் வச்சு நடத்தறவராம். அவர் காலேஜ்க்கு நிறைய பேர் வந்து சேரணும்னு வேண்டிகிட்டார் . நோய் நொடி இல்லாமே நல்லா இருக்கணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டாங்க. தன்னோட கிளினிக்கு நிறைய  பேசண்ட்ஸ் வரணும். கிளினிக் மூணாவது ப்ளோரை இந்த வருஷம் கட்டி முடிச்சிடணும்னு ஒரு டாக்டர் வேண்டிகிட்டார்.  மழை வேணும்னு விவசாயிகள் வேண்டிக்கிறாங்க .மழை வந்தால் இயல்பு வாழ்க்கை வியாபாரம் கேட்டுப் போயிடும்னு கொஞ்ச பேர் வருத்தப் படறாங்க. உலகம் பூரா அமைதி நிலவணும்னு  கொஞ்ச பேர் வேண்டிகிட்டா , " எல்லாத்தையும் அழிச்சிட்டுதான் மறுவேலைன்னு ஒரு கும்பல் கூச்சல் போடுது மனசுக்குள்ளேயே  ... " என்று சாரதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, " சரி .. இவங்க வேண்டுதல் உங்களை எப்படி சிந்திக்க வைக்கிறது ? " என்று கேட்டார் கடவுள்
" என்னத்தை சொல்றது ? அத்தனைபேருமே அவங்க நினைக்கிறது நியாயம் , அது நடக்கணும்னு  தானே வேண்டிக்கிறாங்க ... அம்மாடி ....நீ எப்படி இதை சமாளிக்கப் போறே ? "
" அதை விட்டுத் தள்ளுங்க. இப்போ இங்கிருந்தே சில காட்சிகளை நீங்க பார்க்கும்படி செய்றேன் .  அதோ பாருங்க என்று கைகாட்டிக் காட்டிய இடத்தில் , ஒரு அம்மா, ஒரு சிறுவனை அடித்துக் கொண்டிருந்தாள்
" ஏம்மா பச்சைப் புள்ளையப் போட்டு அடிக்கிறே ? " என்று கேட்டது தெருவில் நின்ற " திருவாளர் பொதுஜனம் "
" திருட ஆரம்பிச்சிட்டான் .. நான் , மாடு மாதிரி வேலை  பார்த்துட்டு வந்து இவனை ராஜா  மாதிரி உட்கார வச்சு சோறு போட்டு இஸ்கூல்க்கு  அனுப்பறேன் இவன் என்னடான்னா ஸ்கூல் மிஸ் பணத்தையே திருடி இருக்கிறான் . அவங்க நல்லவங்களா இருக்கப் போய் கண்டிச்சு விட்டுட்டாங்க. இல்லாட்டி படிப்பு பாழாகி  இருக்கும் " என்று சொல்லி விட்டு மேலும் அடிக்க ஆரம்பித்தாள்
" அட விடும்மா . ரெண்டும் கெட்டான் குழந்தைங்க . இந்த வயசில் அப்படி இப்படித் தான் இருக்கும். போக போக சரியாயிடும். இதுக்குப்போய் கண்மண் தெரியாமே அடிக்கிறியே " என்று ஒரு பெரிசு சொல்ல , அம்மா அடிப்பதை நிறுத்திக் கொண்டாள்
" சரி இப்போ .. அதோ அந்த இடத்தைப் பார் " என்று கடவுள் கை நீட்டிக் காட்டிய இடத்தில்  ..... ரத்த வெள்ளத்தில் ஒருவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்க , அதை சிறிதும் பொருட் படுத்தாமல் மற்றவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள் . " ஏய் நான் போய் என்னனு பார்த்து அவனுக்கு ஒரு வாய் தண்ணியாவது கொடுக்கட்டுமா  ? " என்று கணவன் கேட்க, " வாயை மூடிகிட்டு சும்மா வாங்க . இவனுக்கும் குத்தினவனுக்கும் என்ன தகராறோ ஏதோ . அவன் ஆத்திரப் படற அளவுக்கு இவன் என்ன செய்தானோ ? கத்தி எடுத்தவன் கத்தியாலேயே அழிவான்னு  சும்மாவா சொல்லி இருக்கிறாங்க " என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்க ஆரம்பித்தாள்
" அதோ அந்த இடத்தைப் பார் " என்று கடவுள் சொல்ல " போதும்டா சாமி , இதுக்கு மேலே என்னாலே எதையும் பார்க்க முடியாது  " என்றார் சாரதி
" உலகத்தில் நடக்கிற சில தப்புகளை நீங்களே நியாயப் படுத்தும்போது, அதை அநியாயம்னு நான் ஏன் நினைக்க வேண்டும். மனிதர்களாகிய நீங்களே அக்கிரமத்தை நியாயப் படுத்தி பொறுமை காக்கும்போது , தாய்மை குணம் படைத்த நான் ஏன் கொதித்தெழுந்து தண்டிக்க வேண்டும் ? "
" போதும் .. போதும் .. எதுவும் வேண்டவே வேண்டாம் " என்றார் சாரதி
" என்னங்க இது ! வெறும் காபி மட்டுந்தானா, அதைக் கொண்டா இதைக் கொண்டானு ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்க .நான் காபி கலக்க இப்பத்தான் ஆரம்பிச்சேன் அதுக்குள்ளே  எதுவும் வேண்டாம்னு சொல்றீங்க ? " என்று   அவரைத் தட்டி எழுப்பிக் கேட்டாள் பாகீரதி
" எங்கேடி அவர் ? "
" யாருன்னா ? "
" கடவுள் ? "
" ஏதாவது சொப்பனம் கண்டேளா ? இப்படிப் பிணாத்தறேள், கடவுள் அது இதுன்னு ? கடவுள் எப்பன்னா நேரில் வந்தார் இப்ப வாறதுக்கு ?  போதும் யாராவது கேட்டால் சிரிக்கப் போறா . கைகால் முகம் அலம்பிண்டு வாங்கோ காபி கலந்து தர்றேன் . சாபிட்டுட்டு கோவிலில் போய் பகவானைப் பார்த்துண்டு வாங்கோ " என்று சொல்லியபடி காபியை எடுத்து வர  சமையலறைக்கு செல்ல சாரதி சிந்தனையில் ஆழ்ந்தார் 

Sunday, March 24, 2013

AN APPEAL



DEAR VIEWERS

DUE TO COMPUTER REPAIR, I AM UNABLE TO PUBLISH MY VIEWS. I HOPE, IT WILL BE RECTIFIED IN APRIL 2013. KINDLY BEAR WITH ME FOR THE TIME BEING

Monday, March 18, 2013

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி ! ( Puzzle Number - 28 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்     

                ( இந்த புதிர் தேவதையில் வெளியாகியுள்ளது )

                     
    13
 


     


 



      
 
     16
   07
   01

  
    

 
    
  

   
  
   

     
  
 
    17 
  
  

 
    02
 
   
  
  03
 
 

  
 
 
   18
 

 
  
 

  

    

 
  
   



 
   19

 
 
  



 
     
    
   
    04
 
   05
  

 
   06

  
   
  

 
   


 
 
   

   

 

 

  
   
  

   
     
    
    
 

   

 

   
   


  

      
  12
   

 

  
   09
 
   
   

   


   10
 
   
 

    
   08
    
 

  



    

 

   

  
    20
    11
  
   

  14
  
 
   15

   


   
 
   



  
 
  


மேலிருந்து கீழ்

1 தீபாவளி நாளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு                ( 8 )
2 தொடர் வெடிச்சத்தம்                                                          ( 7 )
3 புதுமணத்தம்பதியருக்கு அது ?                                      ( 6 )
4  வரவேண்டாமென்று அனைவரையும் நினைக்க வைப்பது   ( 4 )
5  உயிரைக் கொடுத்து "ஒலி-ஒளி"  தயாரிக்கும் குட்டி ஜப்பான்  ( 4 )
6 மருந்துக்கு மற்றொரு பெயர்                                          ( 4 )
7  அணிந்து மகிழ்வது                                                             ( 4 )
8 கூலியாட்கள் கேட்பது                                                       ( 3 )

கீழிருந்து மேல்

  9  வடமாநிலங்களில் நடத்தப்படும் பூஜை                                    ( 6 )
10  அநேக புது மாப்பிள்ளைகளுக்கு கிடைக்கும் பரிசு                ( 4 )
11   பத்திரிக்கை வாசகர்களின் எதிர்பார்ப்பு                                     ( 7 )
12   அனைத்து ஊழியர்களையும் மகிழ வைப்பது                         ( 3 )

இடமிருந்து வலம்

  1  வெடிக்காத வெடிச்சத்தம்                                               ( 2 )
13 கார்த்திகை தீபம் = பௌர்ணமி, தீபாவளி ?               ( 4 )
14 நெருப்பில்லாமாலும் வெடிக்க வைக்கலாம்         ( 2 )
15  மகா விஷ்ணுவின் கைகளிலிருப்பது நம் கையிலும்   ( 8 )

வலமிருந்து இடம்

16 பலகாரத்தை இப்படியும் சொல்லலாம்                              ( 5 )
17 தீபாவளிக்குளியல்                                                                     ( 7 )
18  வானத்துக்கு சீறிப்பாய்வது                                                    ( 4 )
19  பருப்பில்லா சாம்பாரா?  '= = = = " இல்லா தீபாவளியா  ( 4 )
20  பண்டிகை கொண்டாட காரணமான அரக்கன்                  ( 6 )
                                                       




        


 

Saturday, March 16, 2013

Scanning of inner-heart ( Scan Report No.64 )

                         ஹீரோ எப்படி ஜீரோ ஆனார் ?

ரமேஷண்ணா என்றால் எனக்கு உயிர். எனக்கு மட்டுமல்ல, எங்கள் தெருவிலுள்ள எல்லாப் பிள்ளைகளுக்குமே ரமேஷண்ணா என்றால் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். இந்த இருபத்து வயதில் என்னுடைய உடம்பைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறேனேன்றால் அதற்க்குக் காரணம் ரமேஷண்ணாதான் .என்னடா ஏதோ வயதானவன் சொல்வதுபோல் சொல்றேன்னு நினைக்கிறீங்களா ? நான் அஞ்சாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கிறப்போ நீங்க என்னைப் பார்த்ததில்லை. பார்த்திருந்தால் நான் இப்போ சொல்வதை கண்ணை மூடிட்டு நம்பிடுவீங்க. நல்ல சிவப்பு நிறமா கட்டுக் குட்டுன்னு  கொழுக்கட்டை மாதிரி இருப்பேன். எங்க வீட்டிலுள்ளவங்களே என்னை " வாடா, கொழுக்கட்டை " " போடா கொழுக்கட்டை " ன்னுதான் சொல்வாங்க என்றால் ஸ்கூலில் என்னோட படிக்கிற பிள்ளைங்க, எங்க தெருவில் இருந்தவங்க எல்லாம் என்னை எப்படி கேலி பண்ணி இருப்பாங்கனு நீங்களே யோசனை பண்ணிப் பாருங்க. 
இந்த கேலிக்குப் பயந்து வெட்கப்பட்டுகிட்டு வீட்டை விட்டு எங்கேயும் போகாமே வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பேன். ரமேஷண்ணா பக்கத்து வீட்டில் குடியிருந்தார். அவருக்கும் எனக்கும் அஞ்சு  வயசுதான் வித்தியாசம். என்னைவிட நாலஞ்சு வயசு பெரிய பிள்ளைகளை எல்லாம்கூட நான் " வா , போ "ன்னு பேசுவேன். ஆனால் ரமேஷண்ணாவை அப்படி சொன்னதே கிடையாது. ஒரு சிலரைப் பார்த்ததுமே அவங்க மேலே நமக்கு ஒரு இனம் தெரியாத பாசம்,  பயம் , மரியாதை , வெறுப்பு வருமே. அந்த மாதிரிதான் எங்க எல்லாருக்குமே ரமேஷண்ணா மேலே ஒரு பிரியம் இருந்துச்சு .நான் என்ன காரணத்துக்காக நான் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கிறேங்கிறதை தெரிஞ்சுகிட்ட ரமேஷண்ணா உடம்பை கட்டுக் கோப்பா வைக்க என்னென்ன எக்ஸ்ர்சைஸ் எல்லாம் செய்யலாம் என்று சொல்லித் தந்தார். சைக்கிள் ஓட்டக் கத்துக் குடுத்தார். காலையிலேயே என்னை எழுப்பி ஆத்தங்கரைக்கு கூட்டிட்டுப் போய் நீச்சல் கத்துக் குடுத்தார் . ரமேஷண்ணா எப்பவும் ரோட்டை ரொம்ப அசால்ட்டா கிராஸ் பண்ணுவார் . அவரோட தைரியத்தைப் பார்த்து நான் அசந்து போயிருக்கிறேன் . ரமேஷண்ணா எங்களுக்கெல்லாம் ஒரு ஹீரோ மாதிரி. எந்த சப்ஜெக்ட்டில் டௌட் கேட்டாலும் யோசிக்காமே " பட் " ன்னு பதில் சொல்லுவார் 
ரமேஷண்ணாவோட இருந்த நட்பெல்லாம் கொஞ்ச நாள்தான்.உடம்புக்கு முடியாமே இருந்த அப்பா திடீர்னு இறந்து போயிட்டார் . அப்பா இறந்து போனதும்  நானும் அம்மாவும் மாமாவோட மும்பையில் செட்டில் ஆயிட்டோம். மும்பையின் பரபரப்பு வாழ்க்கையில் என்னைப் பற்றி யோசிக்கவே எனக்கு நேரமில்லை என்றாலும் ரமேஷண்ணாவை நினைக்காத நாள் கிடையாது . எது செய்ஞ்சாலும் அவரை மனசில் நினைச்சே செய்வேன். மும்பையில் நாங்க செட்டில் ஆகி இந்த பதினாலு வருஷத்தில் எங்களுக்கும் எங்க சொந்த ஊருக்கும் தொடர்பு என்பதே இல்லாமல்தான் இருந்தது. ஒரு போன் .... ஒரு போஸ்ட் கார்ட் ... ஹூஹும் ... எதுவுமே கிடையாது. இன்றைக்கு நான் ஒரு என்ஜினியர் . சென்னையில் எனக்கு வேலைக்காக  போஸ்டிங் ஆர்டர்  கிடைச்சதும் என் சந்தோசத்துக்கு ஒரு அளவே இல்லை.  மாமா கூட கேட்டார், " என்ன மருமகனே, ஆர்டர் கைக்கு வந்ததும் உங்களுக்கு தலைகால் புரியலே" ன்னு. " வேலை கிடைச்சதினால் வந்த  சந்தோசம் இல்லே மாமா  . நான் சென்னை போனதுமே  எங்க ரமேஷண்ணாவைப் பார்க்கப் போவேன்"னு அவர்கிட்டே நான் சொல்லலே 
என் குணம் தெரிஞ்சே, அம்மா  , " டேய், முதல்லே வேலையில் சேரு. லீவுநாளில் அண்ணாவைப் பார்க்கப்போ "ன்னு படிச்சுப் படிச்சு சொல்லியிருந்தாள் ஆனால் நான் சென்னை வந்ததும் ஒரு ரூம் தேடி லக்கேஜை வீசிவிட்டு  ரமேஷண்ணாவைப் பார்க்கப் பறந்தேன்.
நாங்க இங்கிருந்து இடம் பெயர்ந்த இந்த பதினாலு வருஷ கால இடைவெளியில் எங்க ஊர் ரொம்பவும் மாறி இருந்தது .நாங்க இருந்த தெருவில் இப்போது இருக்கிற எல்லாருமே எனக்குப் புது முகங்களாகவே கண்ணில் பட்டார்கள். ரமேஷண்ணாவை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
" தம்பி , பத்து வருசமா பருவ மழை போய்ச்சு போயிட்டதாலே விவசாயத்தை நம்பி இங்கே குடி இருந்தவங்க எல்லாம் பொழைப்பு தேடி எங்கெங்கோ போயிட்டாங்க. பக்கத்து தெருவிலே ராமசாமி நாயக்கரைப் பார்த்தா, ஒருவேளை நீங்க தேடி வந்த ஆளைப் பத்தின தகவல் கிடைக்கும் " என்று தகவல் சொன்னார் தலையில் முண்டாசு கட்டிய பெரியவர் ஒருவர் 
நாயக்கரை எனக்கு நல்லா தெரியும். ஆனா அவருக்கு என்னை நினைவிருக்குமா? சரி எதுக்கும் போய்க் கேட்கலாம்ன்னு அவர் வீட்டுக்குப் போனேன் 
நான் நினைத்தது சரிதான். அவருக்கு என்னையோ என் அம்மா அப்பாவையோ கொஞ்சமும் நினைவில்லை . தயக்கத்துடன் " அடுத்த தெருவில் ரமேஷண்ணா..." என்று நான் வார்த்தைகளை இழுக்கும்போதே " அந்த சண்டாளனுக்கு நீ என்ன வேணும் ? " என்று கேட்டு இரைந்தார் நாயக்கர். அந்த கூச்சலைக் கேட்டு வெளியில் வந்த ஒருவர் " இங்கே வா " என்று என்னை கை ஜாடை காட்டி அழைத்தார்  
என்னைப் பற்றி பொறுமையாக விசாரித்த அவரிடம் " ரமேஷண்ணா  பத்திக்   கேட்டால், இவ்வளவு கோபப் படுவானேன் ? " என்றேன்.
" தம்பி நீ சொன்னியே, " எங்க ரமேஷண்ணா எல்லாம் தெரிஞ்சவர்" ன்னு. அந்த மெத்தப் படிச்ச மேதாவிக்கு ரோட்டைப் பொறுமையா கடந்து போகத் தெரியாது. கூண்டைத் திறந்து விட்டா மிருகமெல்லாம் பாய்ஞ்சு ஓடுமே, அந்த மாதிரிதான் ஓடுவார். மெய்ன் ரோட்டில் நாயக்கரோட மகன், மருமக, குழந்தை குட்டிக எல்லாரும் வண்டியில்  வந்திட்டு இருக்கிறப்போ இந்த சண்டாளன் வழக்கம் போல குறுக்கே புகுந்து வந்திருக்கிறான் . கார் வந்த வேகத்தில் இவன் மேலே மோதி  பக்கத்துக்கு கடைங்க மேலே இடிச்சு ஒரு லாரி மேலே மோதிதான் நின்னுது. பத்துப் பேருக்கு படுகாயம் .  அந்தப் பய.. அதான் உன்னோட ரமேஷண்ணா  அந்த இடத்திலேயே மண்டையைப் போட்டுட்டான்  நாயக்கர் குடும்பம் வாரிசே இல்லாமல் அழிஞ்சு போச்சு. பித்துப் பிடிச்ச நிலையில் இருக்கிறவரு கிட்டே போய்  அந்த சண்டாளனைப் பத்தி பேசி இருக்கிறே. உன் நல்ல காலம், உன்னை உசிரோட விட்டுட்டார் . நீ உருப்படியா ஊர் போய்ச்சேரு " என்றார் 
" அவராலே ஒரு சோக சம்பவம் இந்த இடத்தில் நடந்திருக்கிறப்போ அவரைப் பத்தின விவரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்தானே ? பிறகு ஏன் யாரைக் கேட்டாலும் எதுவும் தெரியாதுன்னு எல்லாரும் சொன்னாங்க ? "
" தம்பி , நாயக்கர் ஐயா ஊரிலே பெரிய மனுஷன், இந்த விசயத்தில் அவர் நொந்து போயிருப்பது ஊரறிந்த விஷயம். அதை அவருக்கு யாரும் திரும்ப ஞாபகப் படுத்துக் கூடாதுங்கிறதுக்காக ரமேஷ் ங்கிற பேரையே எல்லாரும்  
இருட்டடிப்பு பண்ணிட்டாங்க . இந்த விவரம் போதுமா ? இல்லே , இன்னும் ஏதாவது தெரிஞ்சாகணுமா ? "
அவர் கோபத்தில் அப்படிக் கேட்கிறாரா அல்லது விரக்தியில் கேட்கிறாரா என்பது எனக்குப் புரியவில்லை . " வரேங்க " என்ற ஒற்றை சொல்லுடன் விடை பெற்றேன். மனசுக்குள் ஒரு நெருடல் . எல்லாருமே ரமேஷ் என்கிற பெயரையே இருட்டடிப்பு செய்கிறார்கள் என்றால் , அந்த " முண்டாசு " மட்டும் எதற்க்காக, அதுவும் குறிப்பாக நாயக்கர் பேரைச்சொல்லி அவரைப் போய்ப் பார்க்கச் சொன்னது ? ஒருவேளை நாயக்கரோட பகையாளியோ ?
படிப்பறிவில்லாத மனுசங்க கூட பார்த்துப் பார்த்து ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது , எல்லாம் தெரிஞ்ச ரமேஷண்ணா இந்த விசயத்தை எப்படி மறந்து போனார். எது வீரம், எது விவேகம்னு தெரியாத ஒரு முட்டாளைத் தான் நான் இன்னிக்கு வரை ஒரு ஹீரோன்னு  நினைச்சிட்டு இருந்தேனா ? என் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. சென்னைக்கு நான் பஸ் ஏறும் போது, ரமேஷைப் பற்றிய எரிச்சல்தான் மனம் முழுக்க இருந்தது. 

Saturday, March 09, 2013

Scanning of inner-heart ( Scan Report No.63 )

                                                             தெளிவு

கொஞ்ச நாளாகவே சஞ்சலா, ராமின் மனதில் ஒரு சஞ்சலத்தை ஏற்படுத்துகிறாள் என்று சொன்னால் அது மிகையில்லை. எப்படி இந்தப் பெண்ணால் மட்டும் எல்லா விசயங்களையும் ரசிக்க முடிகிறது என்று வியந்து கொண்டிருந்தான். அவளோடு பேசிக்கொண்டிருப்பதில் நேரம் போவது கூட தெரியவில்லையே என்று வியந்திருக்கிறான் .
ஆபீஸ் ஜன்னல் வழியாக விழியை ஓட விட்டாலே போதும். தெருவில் போவோர் வருவோரை நன்றாகப் பார்க்க முடியும். ஜன்னலருகில் நின்று கொண்டு " ராம்,  கம் .. கம் .. அதோ அங்கே பாருங்க " என்று பரபரப்பாள் . ராம் அவளருகில் சென்று  " என்ன ? " என்பான்.
" அதோ பாருங்க, அந்த பிளாட் பார்மில் ஒரு குழந்தை, தாத்தா கையைப் பிடிசுகிட்டு நடக்கிறதை! ரெண்டு பேர் முகத்திலுமே என்னவொரு சந்தோசம்? ராம், உங்களுக்கு தாத்தா இருக்கிறாரா?  எங்க தாத்தா கிராமத்தில் இருக்கிறார். கிராமத்துக்குப் போனால் , இன்றைக்கும் தாத்தா கையைப் பிடித்துக் கொண்டுதான் நடப்பேன். அதில் எனக்கும் சந்தோசம் . அவருக்கும் சந்தோசம். தெருவில் போவோர் வருவோரை எல்லாம் நிறுத்தி " என் பேத்தி, பட்டணத்தில் இருந்து வந்திருக்கிறா " என்று அவர்களிடம் சொல்வார். மகன் மீது வெறுப்புக் காட்டும் அப்பா அம்மா இருக்கிறாங்க. அப்பா அம்மாவைப் பிடிக்காது என்று சொல்கிற குழந்தைங்க  இருக்கிறாங்க. மனம் ஒத்துப் போகாத, வெறுப்பை சுமந்து வாழ்கிற கணவன் மனைவி இருக்கிறாங்க. இவங்க எல்லார் வெறுப்புக்கும் எதோ ஒரு வகையில் ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். ஆனால், ' எங்க தாத்தா பாட்டியை எனக்குப் பிடிக்காது ' என்று சொல்கிற யாரையும் நான் இதுவரை  பார்த்ததே இல்லை " என்பாள் 
அதைக் கேட்ட பிறகு, தன்னுடைய தாத்தா பாட்டி இப்போது உயிரோடு இல்லையே என்று பலமுறை ராம் ஏங்கி இருக்கிறான் 
" ராம், இறைவன் படைப்பில் அற்புதுமான ஒரு விஷயம் குழந்தைகள்தான். அவர்கள் சிரித்தாலும் அழகு, அழுதாலும் அழகுதான். காலையில் புத்தம்புது மலர்களாய் அவர்கள் பள்ளிக்குப் போவது ஒரு அழகென்றால் , மாலையில் 
காய்ந்த மலர்கள் போல தளர் நடையோடு களைப்பாக வீடு திரும்புவதும் ஒரு அழகுதான்" என்று சஞ்சலா சொல்வதைக் கேட்டபிறகு, தெருவில் போகிற குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறான் ராம் 
" ஆர்ப்பரிக்கிற கடல், அமைதியான நீரோடைகள், அதலபாதாளம், விண்ணை முட்டும் மலைமுகடுகள் , சுட்டெரிக்கும் வெயில், நடுங்க வைக்கும் குளிர் என்று இறைவனின் படைப்பு , இயற்கையின் அமைப்பு வித்தியாசமானதாக  இருக்கிறது. அதை ரசிக்கவும் முடிகிறது. ஆனால்  மனிதர்களில், செக்கச் செவேர்ன்னு ஒரு குரூப்பை ஒரு இடத்திலும் , எரிந்த கரிக் கட்டைகளாய் ஒரு குரூப்பை ஒரு இடத்திலும்  படைத்திருக்கிறாரே கடவுள், அது ஏன் ? ஒரு வகையில் அது கூட  அழகாய்த்தான் இருக்கிறது. அதை விடுங்க .ஆனால், உலகத்திலுள்ள அத்தனையும் செழிப்பையும் ஒரு இடத்தில் குவித்து வைத்துவிட்டு இன்னொரு இடத்தை தரித்திரத்தில் வாட வைத்திருப்பதைப் பார்த்தால் எனக்குக் கடவுள் மீது கோபம் வருகிறது " என்பாள் 
அதன் பிறகு " மனிதர்களில் பலர்,  இருக்கிற பணத்தை எப்படி செலவு செய்யலாம் என்று  கணக்குப் போட்டுக் கொண்டிருக்க, அடுத்த வேளை உணவு  என்பதே பகல் கனவுதான் என்ற நிலையில் பலர் இருக்கிறார்களே என்று நினைத்து வேதனைப் பட்டிருக்கிறான் ராம் ."  இருக்கிறவன் கொடுக்கணும், இல்லாதவன் எடுக்கணும் ; அதைத் தடுப்பவரை மறுப்பவரை சட்டம் போட்டுத் திருத்தணும்  " என்ற திரைப் படப் பாடல் வரிகளை நினைத்துப் பார்ப்பான். சிறு வயது முதலே பலமுறைக் கேட்ட பாடல்தான் அது என்றாலும் , சஞ்சலாவின் நட்புக்குப் பிறகு, அந்தப் பாட்டைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான் ராம். அந்த வரிகளுக்குப் புதுப் புது அர்த்தம் கண்டு பிடித்தான்.
" ராம், உனக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறீங்கன்னு  கேட்க ஆரம்பிச்சாச்சு. இந்த பேச்சை நான்  ஆரம்பிக்கிறப்ப  'பார்க்கலாம்மா "ன்னு பதில் சொல்றே. அதுக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியலே. உன் மனசிலே நீ யாரையாவது நினைச்சிட்டு இருந்தால் , அதை வெளிப்படையா சொல்லு. பேசி முடிவெடுக்கலாம்" என்று அம்மா சொல்லும்போதெல்லாம், சஞ்சலாவைப் பற்றி சொல்லலாமா என்று ராம் நினைத்திருக்கிறான் .ஆனால் அவளுடைய மனசில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல். நினைப்பை அம்மாவிடம் எப்படி சொல்வது என்று தயக்கத்தில் நாளை ஓட்டியிருக்கிறான்
சஞ்சலாவிடம் கல்யாணப் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்பது தெரியவில்லை
" உன்னோடு பேசிப் பழகுகிறவங்க எல்லாரும் உன் மேலே ஆசைப்பட்டுதான் பேசிப் பழகுறாங்கன்னு நீ நினைச்சா அது உன்னோட முட்டாள் தனம்.. அந்த இன்னொசன்ஸ் கூட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு " ன்னு முகத்திலடித்தது போல சொன்னாலும் சொல்வாள் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு  சொல்ல நினைத்த விசயத்தை சொல்லாமல் மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருந்தான் ராம்.
வெளியில் ஆபீஸ் வேலையை முடித்துவிட்டு அவன் ஆபீஸ் திரும்பியபோது அனேகமாக எல்லோருமே கிளம்பிப் போயிருந்தார்கள் . இருந்தது  பியூனும் வாட்ச்மேனுமே. கொண்டு வந்த பைல் எல்லாவற்றையும் பீரோவில் வைத்துவிட்டு  ராம்  ஆபீசை விட்டுக் கிளம்புபோது, மழை தூரல் ஆரம்பித்திருந்தது .ரெயின் கோட் வேறு வண்டியில் இல்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது . கனமழைக்கு முன் வீடு போய்ச்சேர்ந்து  விடலாம் என்ற நினைப்பில் டூ வீலரில் பறந்து கொண்டிருந்த ராமை சாலை ஒரத்தில்   வளையல் கைகள் தடுத்து நிறுத்தின
" ஹாய் , சஞ்சு , இன்னுமா வீடு போய் சேரலே ? "
" நான் வீடு போய் சேர்ந்திருந்தா இந்த இடத்தில் என்னை நீங்க பார்த்திருக்க முடியுமா ? "
" ஸாரி, ஸாரி "
" ஓவரா பீல் பண்ணி உடம்பு இளைச்சிடாதீங்க. ரொம்ப நேரமா பஸ் இல்லே . என்னை வீட்டில் டிராப் பண்ண முடியுமா  ? "
" நோ ப்ராப்லம் . உட்காருங்க "
சஞ்சுவின் வீடு வந்து சேர்வதற்குள் பலத்த மழை ஆரம்பித்துவிட்டது                                            
" வாங்க ராம் . உள்ளே வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் . அதற்குள் மழை நின்னுடும் "
மறுத்துப் பேசாமல் வண்டியை ஓரங்கட்டி விட்டு அவளைப் பின் தொடர்ந்து அப்பார்ட் மென்ட் ல் நுழைந்தான்
சஞ்சலாவைக் கண்டதுமே அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு குழந்தை மழையையும் பொருட் படுத்தாமல் ஓடி வந்து " ஆன்ட்டி" என்று சொல்லி அவள் கால்களைக் கட்டிக் கொண்டது
அந்தக் குழந்தையை வாரியணைத்து முத்தமிட்டு ஏதாவது வர்ணிப்பாள் என்று ராம் எதிர்பார்த்தான்
" அட, ச்சீ , சாக்லட் சாப்பிட்ட கையோட புடவையை பிடிச்சு இழுத்து நாஸ்டி பண்றியே " என்று எரிந்து விழுந்தாள் சஞ்சலா
" என்ன சஞ்சு, சின்ன குழந்தை எவ்வளவு ஆசையா ஓடி வருது " என்றபடியே குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி  முத்தமிட்டான் ராம்
" குழந்தைகளா   இதுங்க? குட்டிச்சாத்தானுங்க. வீட்டுக்குள் வந்து சோபாவில் ஏறி ஆட்டம் போடும் . எச்சில் கையோட நம்மை தொடும் . என்னதான் விரட்டி அடிச்சாலும் அடிபட்ட பந்து மாதிரி நம்ம கிட்டேயே வரும். இந்த ஒரு நியூசென்சுக்காகத் தான் இங்கிருந்து வீட்டை மாற்றணும்னு நினைக்கிறேன். எதுவும் சரியா அமைய மாட்டேங்குது " என்றபடியே வீட்டு வாசலுக்கு வந்த சஞ்சலா  " என்ன இது . வீடு பூட்டி இருக்கு ? " என்று தனக்குள் சொல்ல ,
" சாவி இந்தா, மம்மி தந்தா. பாட்டி உம்மாச்சி கும்பிட போச்சு ' என்று மழலையில் சொல்லி சாக்லட் கரை படிந்த கையை திறந்து காட்டியது சஞ்சலா அடித்து விரட்டிய  குழந்தை. அதன் கையிலிருந்து சாவியைப் பறித்த சஞ்சலா, கதவைத் திறந்து " உள்ளே வாங்க ராம் " என்றாள்
" ஸாரி சஞ்சு, இந்த குழந்தை கோயில்னு சொன்னதும்தான் எனக்கு அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சு. சீக்கிரம் வந்துடு, கோயிலுக்குப் போகணும்னு சொன்னாங்க நான் கிளம்பறேன் "
" மழை நிற்கட்டுமே "
" பரவாயில்லே .  நான் வர்றேன் " என்ற ராம் அவளின் அழைப்பை ஏற்காமல் அங்கிருந்து வெளியேறினான்
வானம் இருண்டு கிடந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் , நான் தேக்கி வச்சிருக்கிற தண்ணீரையெல்லாம் கொட்டித் தீர்த்து விடப் போகிறேன் என்பதுபோல பயமுறுத்தியது. ஆனால் ராமின் மனம் தெளிவாக இருந்தது . அதில் எந்த சஞ்சலமும் இல்லை. அசையாத மலையையும் அலையடிக்கிற கடலையும் ரசிக்கிற இவளுக்கு , ஒரு குழந்தையின் அன்பைப் புரிந்து கொள்கிற பக்குவம் இல்லாமல் போய்விட்டதே  என்று நினைத்து வேதனைப் பட்டான் .எனக்குத் தேவை ரசனையுணர்ச்சி உள்ள மனைவியல்ல. அன்பான அனுசரணையுள்ள ஒரு பெண்தான். அவள் படித்திருக்கவேண்டும் என்பதுகூட அவசியம் இல்லை  , என்னையும் என் அம்மாவையும்  புரிந்து நடந்துகொண்டால் போதும்  என்று தனக்குள் சொல்லிக் என்று கொண்டான்.
" பேச்சாளர்கள் நல்ல செயலாளர்களாக இருப்பது இல்லை "  எப்போதோ எதோ ஒரு புத்தகத்தில் படித்த  வரிகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இப்போது ராமின் நினைவுக்கு வந்தது .

Friday, March 08, 2013

விடுகதைக்கு விடைதான் புதிருக்கும் விடை ! ( Puzzle Number 27 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
 
                 விடுகதைக்கு விடைதான் புதிருக்கும் விடை             

                
                     
    14
 


     


 



    
 

   19 
  01

    
    
     15
 

  

   
  
   

     
  
 
       
  
  

 
   
 
   
  

 
 
    02
  
  03
 
  
 
     12
 
   13
 

  

    
   16
 
  





 
 
     05
 
   06
 


   09
 
    
    
   
   20 
 

  

 


  
   
  

 
   


 
 
   

   

 
   21 
 

  
   
  

   
     
    
    
 

   
    17 
 

   
   


  

      

   

 

  

 
   
   

   


  
 
    11
 

    
  
    
 

  



    
    18 
 

   

  
 
  
  
   

   06
   07
 
    09
    10
   


   
 
   

     22 
  
 
  


மேலிருந்து கீழ்  

1  சூடு பட்டு சிவந்து வீடு கட்ட உதவும்                                                              ( 4 )  
2  நாலு காலுண்டு, நடக்காது; ஆயிரம் கண்ணுண்டு, பார்க்காது            ( 4 )  
3  மரமேறும் மங்காத்தாளுக்கு முதுகிலே மூணு கோடு                            ( 3 )  
4  பிரிய மாட்டோம், நண்பர்களல்ல; இணையமாட்டோம், பகைவர்களல்ல  
    நாங்கள் பிரிந்தால், பயணம் செய்பவர்கள் கதி அதோகதி                    ( 6 ) 
5   அந்தரத்தில் தொங்குது அரக்கன் தலை                                                       ( 7 )  

கீழிருந்து மேல் 

  6  பந்தியில் முந்தி  நிற்கும்; பசி தீர்த்து குப்பை சேரும்                   ( 4 ) 
  7  மண்ணை உழுவதால் நான் விவசாயிகளின் நண்பன்              ( 4 )
  8 ஓடோடும்; உருண்டோடும்; பள்ளத்தைக்கண்டு பாய்ந்தோடும்  ( 4 )
  9 மழைநாளில் குடை பிடித்து வழி நெடுக நிற்கும்                           ( 3 )
10  கூரை மேலிருக்கும்; குப்பை மேட்டிலிருக்கும்; கந்தன் கை வேலில்
     இருக்கும்                                                                                                         ( 3 )
11  ஈரேழு பதினாலு இறகு மயிலாட, மூவிரண்டு முந்நான்கு  முத்துமணி
     ஆட வாராத பெண்களுண்டோ  வந்து விளையாட ?
      (மூவிரண்டு  3 x 2 = 6 ) + (முந்நான்கு  4 x 4 x 4 = 64 ) = 70 )                  ( 6 )
12  நீரில் துள்ளித்திரியும்; நிலம் வந்தால் துடி துடிக்கும்                     ( 2 )
13  நீரில் பிறந்து, நீரில் அழிவது                                                                     ( 3 )

இடமிருந்து வலம்

14 மந்திரமெல்லாம் ஒரு முட்டைக்குள்ளே; மானமெல்லாம் ஒரு
      கொட்டைக்குள்ளே                                                                                         ( 8 )
15  இது வரையில் இல்லாதது; எப்போதும் இருப்பது; எவருமே காணாதது   ( 6 )
16  உறவென்று யாருமில்லை, ஆனால் ஊரெல்லாம் சுற்றும்; உயிரில்லை
     ஆனாலும்  ஓடி ஓடி செல்லும், குரல் இல்லை என்றாலும் கூச்சல் போடும்;
     வாயில்லை என்றாலும் புகை பிடிக்கும்                                                                  ( 3 )
17  ஓடி ஓடி ஓட்டை அடைக்கும் ஒய்யார குதிரைக்கு, ஓட ஓட வால் தேயும் ( 4 ) )
18 நீரே இல்லாத இடத்தை நடந்து கடக்கும் ஒய்யாரக் கப்பல்                    ( 5 )

வலமிருந்து இடம்

  2  மூடித்திறக்கும் கதவு; கண்மணி பாப்பாவைக் காக்கும் கதவு              ( 4 )
11  படமெடுத்து ஆடும், பாம்பல்ல; குட்டிக்கரணம் போடும், குரங்கல்ல;
     காற்றில் பறக்கும் பலூனுமல்ல                                                                        ( 4 )
15  வாழையில் பிறந்து, மலரோடு சேர்ந்து மணம் பெறும்                           ( 2 )
17  காவலர் கையிலுமுண்டு; கண்டக்டர் கையிலுமுண்டு                         ( 3 )
19   நெருப்பில் பிறந்து காற்றில் பறப்பது; கண்ணுக்கு தெரிவது, கைகளில்
       பிடிக்க முடியாதது                                                                                                  ( 2 )
20  ஒரு புட்டிக்குள் இரண்டு தைலம்                                                                      ( 3 )
21  தாய் இனிப்பாள்; மகள் புளிப்பாள்; பேத்தி மணப்பாள்                              ( 7 )
22  மஞ்சள் நிறத்தழகி; மார்கழி மாத கோலத்தில் மங்கலமாய் சிரிப்பாள்  ( 5 )