Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 24, 2020

Dear viewers,

 நேற்று பெரும்பாலான டீவி சேனலில் ஒளிபரப்பான செய்தி என் கவனத்தைக் கவர்ந்தது. 
பீகாரை சேர்ந்த ரூபி என்கிற ஆசிரியை கைவிரல்களைக் கொண்டே ஒன்பதாம் 
வாய்ப்பாடு கற்றுக் கொள்வதை செயல் முறையில் காட்டி இருக்கிறார். 
(அது வைரலாக பரவி வருவதாகவும், பிரபலங்கள் சிலர் இந்த கண்டுபிடிப்பை 
பாராட்டி இருப்பதாகும்  செய்தி வெளியானது) இதே செய்தியை 
கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பே நான் தினமணி கதிருக்கு எழுதி அனுப்பி 
இருந்தேன். அது தினமணி-சிறுவர்மனியில் வெளியாகி இருந்தது. அதே விஷயத்தை எனது 
இணைய தளத்திலும் (இதே தளத்தில்) சிலவருடங்களுக்கு முன்பு பதிவு செய்தேன்.
அந்த பதிவு வெளியான சில நாட்களில் தமிழ் நாட்டை சேர்ந்த ஆசிரியை ஒருவர் செயல் 
முறையாக செய்து காட்ட, அது முகநூலில் வெளியாகி இருந்தது. இது தற்செயலாக என் 
கண்ணில் பட்டது. இதை நான் ஏற்கனவே எனது தளத்தில் பதிவு செய்திருப்பதாக கமெண்ட் 
பதிவு பண்ணினேன். ஆனால் சிலமணி நேரங்களில் அந்த கமெண்ட் டெலீட் பண்ணப் 
பட்டிருந்தது.

இவை எதுவும் என்னைப் பார்த்து காப்பி அடித்த ஒன்று என்று நான் சொல்லவில்லை. ஆனால் 
இதை பலவருடங்களுக்கு முன்பே நான் பதிவு பண்ணி விட்டேன் என்றுதான் சொல்ல 
நினைக்கிறேன்.

இதே போன்று ஒன்பதாம் நம்பர் பற்றிய ஒரு செய்தியை இதே தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
அது உங்கள் பார்வைக்காக கீழே உள்ளது.

9 காட்டும் விந்தையைக் கண்டு   ரசிக்கலாம்.  1 முதல் 9 வரையிலான எண்களை எழுதி, அதை வளையல் வடிவில் ரௌண்டாக வளைத்தாலோ அல்லது  ஒரு வட்டத்தை சுற்றி 1 முதல் 9 வரையிலான எண்களை எழுதினாலோ  எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம்  எண் வரும்தானே. அதே போல  எண் 8 க்கும் 1 க்கும் நடுவில் 9 ம்  எண்ணின் அணிவகுப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்.

இதே போல நீங்கள் 9 ம் வாய்ப்பாடு ( 9th  TABLE  ) எழுதி, அதாவது 1 x  9  =  9
                                                                                                                                       2  x 9  = 18   என்று வரிசையாக எழுதிக் கொண்டு ,அந்த எண்களைக் கூட்டி பார்த்தால் அதன் மதிப்பு 9 தான் வரும். அதாவது 18 என்பதை 1 + 8 என்றும், 27 என்பதை 2 + 7 என்றும் கூட்டிப் பார்த்தோ மானால் அதன் மதிப்பு 9 தான் வரும் . வேறு எந்த எண்ணும் இது போன்று வராது 


 9
 8
 7
 6 
 5 
 4
 3
 2
 1



10
 9 
 8 
 7 
 6 
 5
 4
 3 
 2 
 1 
A 
B 








 9 
X 
9
 =








 8 
 1
  9
 9







 9
 9 
X
9
 =







 8 
 9
 1
18 
 9






 9
 9 
 9
X
9
 =






 8
 9
 9 
 1
27 
 9





 9
 9
 9
 9 
9 
 =





 8
 9
 9
 9 
 1
36 
 9




 9
 9 
 9
 9
 9 
9 
 = 




 8
 9 
 9 
 9 
 9 
 1
45 
 9



 9
 9
 9
 9
 9 
 9 
 = 



 8
 9 
 9
 9 
 9 
 9
 1 
54 
 9 


 9
 9
 9
 9
 9
 9
 9 
 =


 8
 9
 9
 9
 9
 9
 9
 1
63
 9

 9
 9 
 9 
 9
 9
 9
 9
 9 
9 
 = 

 8
 9 
 9
 9
 9
  9
 9
 9
 1
72
 9
 9 
 9 
 9 
 9
 9 
 9 
 9
 9
 9 
X 
 = 
 8
 9
 9
 9 
 9
 9
 9
 9
 9
 1
81
 9 

Tuesday, January 14, 2020

தைத் திங்கள் - 01

அனைவருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
                          பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக !!

திருப்பாவை - 30 


வங்கக் கடல் கடைந்த மாதவனைக்  கேசவனை
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை
சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

திருவெம்பாவை - 10


புவனியிற் போய் பிறவாமையின் நாள் நாம் 
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று" நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய்!திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்
நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! 
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!

Monday, January 13, 2020

மார்கழித் திங்கள் - 29


திருப்பாவை - 29


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

திருவெம்பாவை - 09


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 
விழுப் பொருளே! உனதொழுப் படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே 
வண்திருப் பெருந்துறையாய் வழி அடியோம்
கண்ணகதே நின்று களிதரு தேனே! 
கடலமுதே!கரும்பே!விரும்படியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

Sunday, January 12, 2020

மார்கழித் திங்கள் -28




திருப்பாவை - 28


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 08


முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்!
மூவரும் அறிகிலர் யாவர் மற்று அறிவார்?
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரைதிரு மேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந்து ஆண்டாய்!
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

Saturday, January 11, 2020

மார்கழித் திங்கள் - 27



திருப்பாவை - 27


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தனைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 07


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு 
அரிதென எளிதென அமரரும் அறியார் ;
இதுஅவன் திருவுரு,இவன் அவன் எனவே 
எங்களை ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
மதுவளர் பொழில்திரு உத்தரகோச 
மங்கையுள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணிகொள்ளும் ஆறு?அது கேட்போம்; 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

Friday, January 10, 2020

மார்கழித் திங்கள் - 26


திருப்பாவை - 26


மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 06


பப்பற வீட்டிருந்துணரும் நின் அடியார் 
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின் 
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா!
செப்புறு கமலம் கண் மலருந்தண்வயல் சூழ் 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
இப்பிறப்பறுத்தெமை ஆண்டருள் புரியும் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

Thursday, January 09, 2020

மார்கழித் திங்கள் - 25


திருப்பாவை - 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 05


பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் 
போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீத்ங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! 
சிந்தனைக்கும் அரியாய்! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !

Wednesday, January 08, 2020

மார்கழித் திங்கள் - 24



திருப்பாவை - 24


அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 04


இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்! 
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்;
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்; 
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்; 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் 
எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே !

Tuesday, January 07, 2020

மார்கழித் திங்கள் - 23



திருப்பாவை - 23


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்த்துதறி 
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப்  போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

திருப்பள்ளியெழுச்சி - 03


கூவின பூங்குயில்;கூவின கோழி; 
குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து 
ஒருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத்
தேவ! நற் செறிகழற் றாளிணை காட்டாய்; 
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே!
யாவரும் அறிவரியாய்; எமக்கெளியாய் 
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !