Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, March 26, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 28)

புதிர் எண் - 27 ன் விடை : STENOGRAPHER என்கிற ஒரு வார்த்தையில் கீழே உள்ள  50 வார்த்தைகள் ஒளிந்திருக்கின்றன. இது தவிர மேலும் வார்த்தைகள் உங்களுக்குத் தெரிந்தால் அதை எனக்குத் தெரிவிக்கவும்.


HE NO OH OR SO TO 
GAP HER NOG NOR ORE PER RAP SAP SEA SEE 
SHE SOP TAP TAR TEA TEN THE TOE TOG TOP 
GAPE OGRE RAPE SEAR  SEER SERE SNAP SOAP  
SOAR SORE STAR STEP STOP TAPE TEAR TOPE  TRAP  
GRAPE  GRAPH STEER  STORE  STRAP TAPER TENOR
இனி இந்த வார புதிருக்கு  விடை தேடுங்கள் 


புதிர் எண் - 28 

Image result for image of thinking children
ஒரே ஒரு  வார்த்தை ஆங்கில வார்த்தைஅடுத்தடுத்து மூன்று முறை வரும்படி   அர்த்தமுள்ள வாக்கியம்  ( SENTANCE ) உருவாக்க வேண்டும். அது MEANING-FUL ஆக இருக்க வேண்டும். நீங்கள் குட்டீஸ். ரொம்பவும் திணறக் கூடாது என்பதால்  அந்த வார்த்தை BECAUSE BECAUSE BECAUSE என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன். . இதை வைத்து ஒரு வாக்கியம் ட்ரை பண்ணிப் பாருங்க . முடியாவிட்டால் ஒரு வாரம் பொறுத்திருங்க விடை தெரிந்து கொள்ள. 

Sunday, March 19, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 27)

புதிர் எண் - 26 ன் விடை : அந்தமான். இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.

புதிர் எண் - 27

Retro businessman Secretary dictates the text

"STENOGRAPHER" என்ற  ஆங்கில வார்த்தையிலிருந்து குறைந்த பட்சம் 50 வார்த்தைகளைக் கண்டு பிடிக்க முடியும். ( புதிர் குறித்த விவரம் தெரிந்த கொள்ள விரும்பும் குட்டீஸ்
"https://arunasshanmugam.blogspot.com" ல் ON-LINE WORD SEARCH PUZZLE என்ற பகுதியைப் பார்க்கவும். அதில் கண்டுபிடிக்க வேண்டிய வார்த்தைகள் குறைவு என்பதால் கட்டத்தில் அமைத்து பதிவு செய்துள்ளேன்.  
STENOGRAPHER  என்ற  ஆங்கில வார்த்தையில் 50 வார்த்தைகள் இருப்பதால் அதை இந்த பிளாக்கின் புதிர் பகுதியில் பதிவு செய்துள்ளேன்.
உதாரணமாக OR, NO, STEP, GRAPE - என்ற சொற்கள் எல்லாமே STENOGRAPHER  என்ற  ஆங்கில வார்த்தைக்குள் உள்ளது. இதுபோன்ற 50 சொற்களைக் கண்டு பிடியுங்கள். அல்லது அடுத்த வாரம் வரை பொறுமை காக்கவும்.

Sunday, March 12, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 26)

புதிர் எண் - 25 ன் விடை :  (மராட்டிய மன்னன்) வீர சிவாஜிக்கு மலை எலி என்றொரு பெயர் உண்டு. இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.


புதிர் எண் - 26
File:Fallow deer arp.jpg - Wikipedia, the free encyclopedia
ஆபீசிலிருந்து அப்பா வீடு திரும்பியபோது, தமிழ்ப் பாடத் தேர்வுக்கான இராமாயண மனப்பாடப் பகுதியை மண்டைக்குள் "ஏற்றிக்" கொண்டு இருந்தான்  அப்பு. அவனிடம், "அப்பு, ஆரண்ய காண்டத்தை மனப்பாடம் பண்றியா ? ஓகே .  ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன் . ஆபீஸ் பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஒன் வீக் டூர் போகப் போறோம். அதுவும் ப்ளைட்டில் !" என்று உற்சாகமாக சொன்னார் அப்பா. " எந்த இடத்துக்கு?" என்று ஒரே சமயத்தில் கேட்டார்கள் அப்புவும் அவனது அம்மாவும். அதற்க்கு அப்பா, " அரண்மனை வாழ்க்கையைத் துறந்து ராமனுடன் காட்டுக்கு சென்ற சீதை, வனவாசத்தில் ராமனிடம் விரும்பிக் கேட்ட ஒன்றுதான், நாங்கள் போகப் போகும் இடத்தின் பெயர் " என்று சொல்லி முடிக்கும் முன்பாகவே அது எந்த இடம் என்பதை கண்டுபிடித்து சொன்ன அப்புவுக்கு ஒரு "சபாஷ் " சொன்னார் அப்பா. உங்களுக்கும் அந்த சபாஷ் வேண்டும்தானே ?  



Sunday, March 05, 2017

ஹாய் குட்டீஸ் , (PUZZLE NUMBER - 25)

புதிர் எண் - 24 ன் விடை - ரொம்பவும் யோசிக்காதீங்க குட்டீஸ்.. ஒன்று , இரண்டு என்று எண்களின் வரிசையை உங்களால் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லி அசத்துங்க. சொல்கிற  சக்தி உங்களுக்கும், கேட்கிற பொறுமை எதிராளிக்கும் இருந்தால், நீங்கள் , லட்சம் , கோடி , அதுக்கும் மேலே என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஏனென்றால் எண்களின் வரிசையை தமிழில் சொல்லும்போது இந்த 5 உயிரெழுத்துக்களும் இல்லாததை நீங்கள் அறிய முடியும் .
பேச்சு வழக்கில் சொல்லப் படும் ஓராயிரம் , ஈராயிரம் மட்டும் இதற்க்கு விதி விலக்கு. இனி இந்த வார புதிருக்கு விடை தேடுங்கள்.  

புதிர் எண் - 25
Image result for images of fancy dress
"அப்பா எங்கள் ஸ்கூலில் மாறுவேடப் போட்டி நடத்தப் போறாங்க. நான் செலெக்ட் பண்ணியிருக்கிற வேடம் "மலை எலி". அதற்க்கான டிரஸ், டயலாக் எல்லாம் ரெடி பண்ணித் தரணும் " என்று விவேக் சொல்ல, " ஓகே " என்றார் அப்பா. இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்த விவேக்கின் தம்பி கிரீஷ் " மலை எலி என்ன வசனம் பேசும் ? " வியப்புடன் கேட்டான். அதற்க்கு " உங்கள் அம்மாதான் ஹிஸ்டரி டீச்சர் ஆச்சே.  மலை எலி என்றால் யார் என்று உங்க அம்மாகிட்டே கேள் " என்றார் அப்பா. கிரீஷ் அம்மாவிடம் கேட்க, அம்மா சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு, " மலை எலிக்கு பேச நிறையவே வாய்ப்பு இருக்கிறது " என்றான் கிரீஷ் . இப்போது கேள்வி என்னவென்றால் " யார் அந்த மலை எலி ? ".