Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, May 30, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (18)

Image result for image of a boy
"தம்பி ..உங்க அப்பா இருக்கிறாரா ?"
"இல்லே .. பேசப் போயிட்டார் "
"அப்படியா ..எங்கே ? எப்போ ? எதைப்பத்தி ? எனக்கு தெரியாமே போச்சே. தெரிஞ்சா போயிருப்பேனே ?"
"இங்கே இல்லே.. வேறே ஊரில் .. மனித நேயம் ... மனுஷனை மனுஷன் மதிக்கணும்னு பேசப் போயிருக்கிறார்.."
"ஓ .. அப்படியா?"
"அங்கிள், உங்களுக்கு என்ன வேணும்."
"கோவில் டொனேஷன் விஷயமா வந்தோம். அப்புறம் வர்றோம்."
வீட்டுக்குள்ளிருந்து ...."கண்ணா யாரோட பேசிட்டு இருக்கிறே. அம்மா குளிச்சிட்டு இருக்கிறேன். அப்பா வீட்டில் இல்லைனு சொல்லு. வந்தது யார்னு கேட்டு வை."
"கேட்க வேண்டாம்மா.. அப்பா அடிக்கடி சொல்வாரே - பக்கத்து வீட்டு பரதேசி,, எதிர்வீட்டு கடன்காரன்னு .. அவங்க ரெண்டு பேருந்தான் வந்திருக்காங்க" என்று சிறிதும் தயங்காமல் பதில் சொன்னான் பையன்.

Monday, May 29, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (17)

Image result for image of man in street view
கேட் கதவைத் தாண்டி நடுவீதியில் வந்து சுருண்டு விழுந்தவனைத் தூக்கி விட்ட, அந்த வழியாக சென்று கொண்டிருந்த சிலர் "என்ன ஆச்சு ?" என்று கேட்டார்கள்.
தலையை ஆட்டியபடி நிதானத்துக்கு வந்த சுரேஷ் "என்ன ஆச்சு ?" என்ற கேள்வியை தனக்குள் கேட்டுக் கொண்டான்.
காலையில் சீனியர் ரிப்போர்ட்டர் கூட நடிகை மாலாஸ்ரீ வீட்டுக்குப் போனப்போ, "இதோ பாருப்பா.. நீ இன்னிக்குதான் வேலைக்கு சேர்ந்திருக்கிறே. முன் அனுபவம் கிடையாது. நான் எப்படி தூண்டில் போடுறேனு கவனிச்சு பாரு. சாயங்காலம் லதாஸ்ரீ வீட்டுக்கு நீ மட்டுந்தான் போறே. அவங்களை இன்டெர்வியூ பண்றே. நம்ம வாய் ஜாலத்தில்தான் அவங்க கிட்டே இருந்து வார்த்தையை கொண்டு வரணும். ஒரு பைசாவுக்கு லாயக்கில்லாத ஆள்னு தெரிஞ்சாலுங்கூட "உன்னை மாதிரி உலகத்தில் இன்னொருத்தர் உண்டா"னு புகழணும் தத்ரூபமா நடிச்சிருக்கீங்க.. முன் அனுபவமா?" அப்படி இப்படினு ஐஸை அள்ளி வைக்கணும்"னு சொல்லியிருந்தார். அவர் சொன்னதை அப்படியே ஃபாலோ பண்ணினேன். அந்த பொம்பளை நல்லாத்தான் பதில் சொல்லிட்டு இருந்துச்சு. கடைசியா சீனியர் சொன்ன மாதிரி  "தத்ரூபமா நடிச்சிருக்கீங்க.. முன் அனுபவமா ?"னு கேட்டது மட்டும் நினைவிருக்குது. எப்படி வெளியில் வந்து விழுந்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தான் சுரேஷ். 
இதில் சுரேஷ் மறந்துபோன ஒரு விஷயம் மாலாஸ்ரீ நடித்தது "தாயன்பு" என்ற திரைப்படத்தில். லதாஸ்ரீ நடித்ததோ "கடை வீதி " என்ற படத்தில் விலைமாது வேடத்தில். 

Sunday, May 28, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 152)

Image result for image of patient and nurse

                                     மறந்து போன தர்ம / நியாயங்கள் !
கண்களைத் திறக்க முயற்சித்தான் சபாபதி. கண்களின் மீது கனமான ஏதோ ஒன்றை வைத்து அழுத்துவதுபோன்ற உணர்வே மேலோங்கி நின்றது.
எழும்பி உட்கார முயற்சி செய்தான். இவனது உடல் அசைவைக் கண்ட சிஸ்டர் ஓடிவந்து, "என்னப்பா .." என்று இதமான குரலில் கேட்டாள்.
"நான் எங்கிருக்கேன் ?"
"பாதுகாப்பான இடத்தில்தான் இருக்கிறேப்பா .."
"என்ன நடந்துச்சு ?"
"அதை நீதான்ப்பா சொல்லணும் "
"என்ன .. என்ன சொல்லணும் ?"
"நீ யாரு? எப்படி அடிபட்டே ?" என்று சிஸ்டர் கேட்டதும் அமைதியாக சிறிது நேரம் யோசித்த சபாபதி, "என்னோட செர்டிபிகேட் ... ரெக்கார்ட்ஸ் " என்று பதற்றத்துடன் கேட்டபடி எழும்பி உட்கார்ந்தான்.
"தம்பி... தம்பி..நீங்க இப்போ எழும்பவோ உட்காரவோ ட்ரை பண்ணாதீங்க.. இன்னும் ஒன்-ஹவரில் டாக்டர் வந்துடுவார்.. கொஞ்சம் பொறுமையா இருக்கணும் "
"நான் உயிரோடு இருக்கிறேனா ?"
இதைக்கேட்டதும் மெலிதாக சிரித்த சிஸ்டர் "ஏன் இப்படியொரு டவ்ட் ..உயிரில்லாத ஒருத்தர் பேச முடியுமா? கேள்வி கேட்க முடியுமா ?
"கேள்வி... கேள்வி... கேட்டதாலே வந்த சண்டைதான் அது "
"என்ன தம்பி சொல்றீங்க?"
"அம்மா.... ஸாரி ... சிஸ்டர்..."
"நீ என்னை அம்மானு கூப்பிடலாம். எனக்கு உன் வயசில் ரெண்டு பசங்க இருக்கிறாங்க. ரெட்டை.. சரியான வாலுங்க.."
"நான் எப்படி இங்கே வந்தேன் ?"
"நீங்களா வரலே .. யாரோ ஒரு புண்ணியவான் கொண்டுவந்து அட்மிட் பண்ணினார். உங்க துணிச்சலை பார்த்து அசந்து போனதா சொன்னவர் ஆஸ்பிடல் செலவுக்கு பணம் கொடுத்திருக்கிறார். பிறகு வந்து பார்க்கிறேனு    சொன்னார். "
"வேறே எதுவும் சொல்லலியா .. என்னோட செர்டிபிகேட் ..?
'இல்லேப்பா .. அவர் பிளைட் பிடிக்கிற அவசரத்தில் இருந்தார்.என்ன நடந்துச்சு .. சொல்லுப்பா "
"எனக்கு கடலூர் பக்கத்திலே ஒரு சின்ன கிராமம். விவசாய கூலி வேலை செஞ்சு பிழைக்கிற குடும்பம் நாங்க. கடனை வாங்கி படாதபாடுபட்டு எங்க அப்பா என்னை படிக்க வச்சிட்டார். மழையாலே போன வருஷம் விவசாயம் நாசமா போச்சு. மழை இல்லாமே இந்த வருஷம் எல்லாமே பாழாய் போச்சு.. அடுத்தவேளை சாப்பாடு கேள்விக்குறி என்கிற நிலைமைதான்.."
"கொஞ்சம் பால் கொண்டுவந்து தர சொல்றேன். குடிச்சிட்டு நீ பேசலாம். ரொம்ப டயர்டா தெரியறே தம்பி " என்ற சிஸ்டர் இன்டெர்க்காமில் சொல்லி பால் வரவழைத்தாள். அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தாள்.
"என்னோட கஷ்டத்தை எங்க காலேஜ் ப்ரொபஸர் ஒருத்தர்கிட்டே சொன்னேன்.  அவருக்குத் தெரிந்த ஒரு ஆபீசில் அங்குள்ள பியூன் ஏதோ ஆக்சிடெண்டில் இறந்துட்டதாலே இம்மீடியட் ஆக ஒரு ஆளை அந்த போஸ்ட்க்கு போடுறதா இருக்கிறாங்க.. நீ போனு சொல்லி என்னை ரெகமெண்ட் பண்ணினார். காலையில் 12 மணிக்குள் நீ அங்கே இருக்கணும். அது உன்னாலே முடியாட்டா அங்கே போறதை அவாய்ட் பண்ணிடுன்னு சொல்லி இருந்தார்."
"சரி "
"அதுக்காகத்தான் சென்னைக்கு கிளம்பினேன்."
"சரி"
"வர்ற வழியில் மதுக்கடை எதிர்ப்பு - சாலை மறியல் போராட்டம்னு பஸ் போக வழியில்லை. நான் வந்த பஸ்ஸுக்கு முன்னாடி அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லா வண்டியும் அங்கங்கே நின்னுட்டு இருந்துது. அங்கே இங்கே நகர வழியில்லே. நான் வந்த பஸ்ஸில் ஒரு லேடி வந்தாங்க.. ப்ரெக்னென்ட் லேடி. யூரின் பாஸ் பண்ண வழியில்லாமே தவிச்சு கிட்டு இருந்தாங்க. அவங்க கூட இருந்த ஒரு அம்மாகிட்டே அதை சொல்லவும் செஞ்சாங்க. அதுக்கு அந்த அம்மா வண்டிக்குள்ளேயும் வெளியேயும் அத்தனை ஆம்பிளைங்க இருக்காங்க. நீ எங்கேன்னு போவே. கொஞ்ச நேரம் அடக்கிக்கோ அப்படினு சொன்னாங்க."
"சரி "
"நாங்க குடி இருக்கிற இடத்தில் தனி டாய்லெட் கிடையாது. அதுக்குன்னு இருக்கிற இடத்தை தேடிப்போகணும். சில சமயம் கூட்டம் இருக்கும். லைனில் காத்திருக்கணும். எங்க அக்கா கர்ப்பமா எங்க வீட்டுக்கு வந்திருக்கிறப்ப டாய்லெட் போக வழியில்லாமே திணறிப்போயிடுவா. "பிள்ளைத் தாய்ச்சி பொண்ணுகளுக்கு அடிக்கடி ஒண்ணுக்குப் போகணும் போல இருக்கும். இப்படி என் பொண்ணு தவிக்கிறாளேனு எங்க அம்மா கிடந்து அல்லாடுவாங்க. பஸ்ஸில் அந்த லேடியைப் பார்த்ததும் எனக்கு அக்கா நினைவு வந்துச்சு.
வேறொரு லேடி வச்சிருந்த குழந்தை நான்-ஸ்டாப்பா அழுதுட்டு இருந்துச்சு. அதைப் பார்த்த சிலர் "குழந்தை பசிக்கு அழுது போல. சாப்பிடக் குடுத்து பசியாத்துமானு சொல்ல "பசிச்சுதான் அழுதுனு எனக்கும் தெரியும். இப்போ நடுத்தெருவுலே என்னால் என்ன செய்ய முடியும்னு சொன்னாங்க. உடனே ஒருத்தர் குழந்தையோட வெளியே கிளம்பறப்போ சாப்பாடு கையிலே வச்சுக்க வேணாமான்னு கேட்க அந்த லேடி "பஸ் ஏறினா அரைமணி நேரத்துலே வீடு போய்ச்சேர்ந்துடலாம்னு நெனைச்சிட்டு கிளம்பினேன். நடுவீதியிலே நாலுமணி நேரம் நாய் மாதிரி நிப்போம்னு நினைக்கலே"ன்னு கோபமும் வெறுப்புமா பதில் சொன்னாங்க..
பஸ்ஸில் இருந்த.. பஸ்ஸை விட்டு இறங்கி ரோட்டில் நின்னுட்டு இருந்த எல்லாருமே."பொழுது விடிஞ்சு பொழுது போனா இதே பிரச்னையாய் போச்சு. நினைச்ச இடத்துக்கு நினைச்ச நேரத்துக்கு போக முடியலே. இவனுக பிரச்னைக்கு நாம எல்லாரும் நம்ம வேலையை விட்டுட்டு தெருவில் நிக்க வேண்டி இருக்குது. அவனவன் சொந்த பிரச்னைக்கெல்லாம் ரோட்டை மறிக்கிறது வாடிக்கையா போச்சு. இவனுகளுக்கு மட்டுமா பிரச்னை. அவனவன் மனசிலே ஆயிரம் கவலை. இன்னிக்கு, இப்போ  சரக்கை  கொண்டு போய் சேர்க்காட்டா ஆர்டரை கேன்ஸல் பண்ணிடுவாங்க. என் பொழைப்பிலே மண் விழுந்துடும். நான் யாரிட்டே போய் சொல்லி அழமுடியும் ? எடுத்ததுக்கெல்லாம் ரோட்டை மறிச்சா ஆர்மியைக் கொண்டாந்து அடிச்சு நொறுக்கணும்"னு  ஒருத்தர் சொன்னார். 
உடனே இன்னொருத்தர்,"போலீஸ்காரன் இவங்களை விரட்டறதே தப்புனு சிலர் கொடி பிடிச்சு அதில் அரசியல் பண்ணுதாங்க. ஆர்மி வந்தா அவ்வளவுதான்னு சொன்னார். இதுக்கு என்னதான் வழினு கேட்க ஆளாளுக்கு அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிட்டு இருந்தாங்க. எனக்கு அந்த லேடியை குழந்தையைப் பார்க்க பாவமா இருந்துச்சு. 
"பாவப்பட்டு நீ என்ன பண்ணினே ?"
"நேரே மறியல் நடக்கிற இடத்துக்குப் போய் அவங்க கிட்டே "என்னவோ நேத்துதான் கடை திறந்த மாதிரி இன்னிக்கு போராட்டம் பண்றீங்க. இது காந்தி காலத்தில் இருந்தே இருக்குதே. அவர் எவ்வளவு போராடி மதுவிலக்கு கொண்டாந்தார். அதை நீக்கி கடைகளை ஏலத்துக்கு விட்டப்போ நீங்க எல்லாரும் எங்கே போயிருந்தீங்க. கடை திறக்ககூடாதுனு ரோட்டை மறிக்கிறதை விட்டு எந்த வீட்டு ஆம்பிளை குடிக்க போறானோ அவனை அந்தந்த ஏரியாவில் இருக்கிறவங்க மறியுங்க அடிச்சு திருத்துங்க... வேற்று கிரகவாசியோ வெளிநாட்டுக்காரனோ இங்கே குடிக்க வரலே. உங்க வீட்டு ஆம்பிளைங்க தானே குடிக்க வர்றாங்க. அவனுக குடிக்க முடியாதபடி, குடிக்க வெளியில் கிளம்பிப் போக முடியாதபடி அவனுக கையைக் காலை முறிச்சு வீட்டோட முடக்கிப் போடுங்க..இதை... இதைத்தான் சொன்னேன் மேடம்.
"தம்பி இங்கே வாங்க"னு ஒரு அம்மா கூப்பிட்டுச்சு. பக்கத்திலே போனேன். என் கையிலுள்ள பையை பறிச்சாங்க. என் மேலே அடி விழுந்துது .. அவ்வளவுதான் எனக்கு தெரியும்.  ஏன் சிஸ்டர் நான் கேட்டது தப்பா ?" என்று கம்மிய குரலில் கேட்டான் சபாபதி.
"குடியினாலே எத்தனை குடும்பம் வீணாப்போச்சுனு லிஸ்ட் எடுத்தா அதிலே என் குடும்பமும் இருக்கும். என் புருஷனும் பயங்கரக் குடிகாரன்தான். குடிச்சு போட்டு கண்ணுமண்ணு தெரியாமே வண்டியிலே போயி எதிரே வந்த சைக்கிள்காரன் மேலே மோதி அவனை சாகடிச்சிட்டு இவரும் போய் சேர்ந்திட்டார். தப்பு என் புருஷன் மேலே. அவர் தண்டனை அடைஞ்சா அது சரி. எந்த தப்பும் இல்லாத எந்த விதத்திலும் இவரோட சம்பந்தமில்லாத யாரோ ஒருத்தர் இவராலே சாகணும்னா அந்த கொடுமையை என்னனு சொல்றது? எது சரி எது தப்புனு உணர்ந்து பார்க்க... பேச யாருமே தயாரில்லை. அவங்கவங்க செய்றது அவங்கவங்களுக்கு நியாயமா தெரியுது. மறியல் பண்றது சரினு சொல்றவங்களும் இருக்காங்க. இவனுக வீட்டு பிரச்னைக்கு நாங்க ஏன் ரோட்டில் நிக்கணும். அடிச்சு துரத்துனு சொல்றவங்களும் இருக்காங்க. அவங்க பண்ணினது அவங்க வரையில் நியாயம். நீயும் நியாயம் கேட்கப் போனே. ஆனா நடந்தது என்ன? அடிபட்டதும் பொருளை இழந்ததும்தான் மிச்சம். ஒரு பழைய சினிமா பாட்டு உண்டு.. "ஒன்றையே நினைத்திருப்பான்.. உண்மையைத்தான் உரைப்பான். ஊருக்குப் பகையாவான் ஞானத்தங்கமே"னு  உண்மையாகவே ஊருக்கு உழைக்கிறவங்க உண்மையை சொல்றவங்க இவங்க எல்லாருமே உதைபட்டுதான் சாவாங்க என்றநிலைமை வந்துடுச்சு . அதான் ஜனங்க எல்லாரும் ஊருடன் ஒத்து வாழ தங்களைப் பழக்கிக்கிட்டாங்க. உலகம் முழுதும் அக்கிரமம் பெருகி போச்சு. எத்தனை மகான்கள் வந்தாலும் இங்கே யாரையும் திருத்த முடியாது. "
"இதுக்கு என்னதான் முடிவு ?"
"முடிவு சொல்வேன்.. ஆனா நீ ஏத்துக்க மாட்டே "
"சொல்லுங்களேன்... தெரிஞ்சுக்கறேன்."
"இந்த உலகம் இந்தக்கணமே அழியணும்.. புல்பூண்டு எதுவும் இல்லாமே. உலகம் முழுக்க சுனாமி வரணும். எரிமலை எல்லாம் வெடித்து சிதறணும். கொஞ்சகாலம் கழிச்சு பழையபடி புதுசா உயிரினம் பிறந்து வரணும்.. ஒவ்வொரு கண்டுபிடிப்பா வரணும். அதுதான் முடிவு. எந்த அக்கிரமத்தையும் சரினு சொல்ல நாலுபேர் இருக்கிறவரை எந்த பிரச்னைக்கும் தீர்வு என்பதே வராது " என்றாள் உறுதியான குரலில்.
"மேடம்.. அந்த மனுஷர் என்னை இங்கே கொண்டாந்து அட்மிட் பண்ணி இருக்கவே வேண்டாம். உங்க டாக்டர் என்னைக் காப்பாற்றி இருக்க வேண்டாம். என்னை சாக விட்டிருக்கலாம்."
"ஏன் தம்பி அப்படி சொல்றே ?" என்று பதறிப்போய் கேட்டாள் சிஸ்டர்.
"கிடைக்க இருந்த வேலை போச்சு. எல்லா செர்டிபிகேட்டும் போச்சு. உயிரோட இருந்து நான் என்ன சாதிக்கப் போறேன்."
சிறிது நேரம் அமைதியாக இருந்த சிஸ்டர்,"இந்த ஆஸ்பிடலில் அட்டெண்டர் வேலை குடுத்தால் அதை செய்வியா.. டாக்டர் வந்ததும் நான் பேசறேன் "
"தெய்வமே... அட்டெண்டர் வேலை என்ன ! டாய்லெட் சுத்தம் பண்ற வேலை குடுத்தால்கூட பார்க்க நான் ரெடி."
"இன்னும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடு . அப்புறம் வேலை பாரு. இதுக்கிடையில் உன்னை அட்மிட் பண்ணின அந்த நல்ல மனுஷன் உன்னைப்பார்க்க வரலாம். வந்தால் அவர்கிட்டேயும் வேலைக்கு மனு போடலாம். ஓகேயா ?" என்று கண்களை சிமிட்டியபடி சிஸ்டர் கேட்க "டபுள் ஓகே " என்ற சபாபதி வாய்விட்டு சிரித்தான்.
"வேலை கிடைக்கிற சந்தோஷமா ?"
"இல்லே மேடம். மதுவிலக்கை எடுத்துட்டு ஏலம் விட்டு கள்ளுக்கடைகளை திறந்தப்போ  அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே காரசாரமா வடையும் சுண்டலும் ஊறுகாய் பொட்டலமும் வித்தது இந்த ஜனங்கள்தான். அதை நினைச்சேன் சிரிச்சேன் " என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கலானான்.
பின்பு சட்டென்று சிரிப்பதை நிறுத்திவிட்டு, "பொதுமக்களுக்கு இடைஞ்சல் பண்ணினவங்களை போலீஸ் துரத்துச்சு. நடுத்தெருவில் நின்னு மத்தவங்களை போக விடாமல் இடைஞ்சல் பண்ணினவங்களை அடிச்சு துரத்தினாங்க. எந்த வீட்டுக்குள்ளும் புகுந்து, வீட்டுக்குள் இருந்த  எந்தப் பொம்பளைங்களையும்  அடிக்கலே. அந்த நேரத்தில் அதைத் தவிர வேறே வழி கிடையாதுங்கிறப்ப அதையும் அரசியலாக்கி ஆதாயம் தேடற ஆத்மாக்களும் இருக்கத்தானே செய்றாங்க. எந்த  ஒரு விஷயத்தையம் தப்புனு சொல்லி கொடி பிடிக்கிறவங்க கிட்டேயே  அதுக்கான தீர்வையும் கேட்கணும் " என்றான் வெறுப்புடன். 

Saturday, May 27, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (16)

Image result for image of teaching indian father to his son
"மிருகங்கள் குட்டி போடும். பறவைகள் முட்டையிடும். பறவைகள் அனைத்துமே  கூடு அல்லது கூண்டில்தான் இரவு நேரங்களில் முடங்கிக் கொள்ளும்" என்று விவரித்த தந்தையிடம் "அது என்ன கூடு ? கூண்டு ? ரெண்டும் ஒன்றுதானே ? என்று சந்தேகம் கேட்ட மகனுக்கு, "பறவைகள் தாங்களாக அமைத்துக்கொள்வது கூடு. மனுஷங்களாகிய நாம் அமைத்துத் தருவது கூண்டு. முட்டை போடும் அனைத்துமே கூடு  அல்லது கூண்டில்தான் ஓய்வெடுக்கும், தூங்கும்" என்று விளக்கிய அப்பா, மகனின் ஆழ்ந்த சிந்தனையைக் கண்டு, "என்னடா யோசனை? என்ன சந்தேகம்?" என்று கேட்க "எங்க க்ளாஸ் மிஸ் இப்போ வீட்டில் இருப்பாங்களா இல்லாட்டா கூட்டில் இருப்பாங்களா?" என்று கேள்வி கேட்டான் மகன்.

Friday, May 26, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (15)

Image result for image of a mother and school going son
"ஸாரி .. ஸாரிடா கண்ணு .. மம்மி எதோ யோசனையில் இருந்தேனா. ஸ்கூல் வேன் வந்ததை நான் கவனிக்கலே கண்ணு .. ஸாரிடா " என்றபடி ஓடிவந்து கதவைத் திறந்தவளிடம் "என்ன யோசனை?" என்று மகன் கேட்க, "கடல் தண்ணீர்  ஏன் உப்பா இருக்குனு யோசிச்சிகிட்டு இருந்தேன் " என்றாள்  மம்மி எதையாவது சொல்ல வேண்டுமே என்ற நினைப்பில்.
"ஓ அதுவா ! உலகம் பூரா கடல். கடல் பூரா மீனு. உலகம் முழுக்க மீன் பிடி தொழில் நடக்குது. நமக்கு சாவு இந்த மனுஷங்க கையாலேதான்னு நெனச்சு எல்லா மீனும் கண்ணீர் விட்டு அழுதுகிட்டே இருக்குது. கண்ணீர் உப்பா தானே இருக்கும். மீனோட கண்ணீர் கடல் தண்ணியிலே கலந்து கடல் தண்ணி உப்பா மாறுது!" என்று கேஷுவலாக சொன்ன மகனை நெஞ்சோடு அள்ளி அணைத்து, எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சியாளனும் கண்டுபிடித்து சொல்லாத ஒன்றை மகன் சொல்லிட்டானே  என்று வியந்த  மம்மி, "கண்ணீர் உப்பா இருக்கும்னு யார் சொன்னது"னு கேட்க, "டாடி என்னை அடிக்கும்போது நான் அழுவேன்தானே . அப்போ லிப்ஸ் பக்கமா வர்ற கண்ணீரை நக்கிப் பார்ப்பேன். அது உப்பா இருக்கும் !" என்றான் குழந்தை சர்வ சாதாரணமாக.

Thursday, May 25, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (14)

Image result for image of cinema shooting
புதிதாக வேலையில் சேர்ந்த உதவியாளரை அருகில் அழைத்த டைரக்டர், "இதோ பாருப்பா .. ப்ரொடியூசர் பையன்தான் ஹீரோ. அவருக்கும் இதுதான் முதல் படம். அவருக்கு டூப்ளிகேட் .. டூப் சமாசாரம் எதுவும் பிடிக்காதாம். செட்டிலிருந்து சாப்பாடுவரை  எல்லாமே ஒரிஜினலாக இருக்கணும். மைண்டில் ரெக்கார்ட் பண்ணிக்கோ " என்று சொல்ல.."ஸார் .. கடைசி ஸீன் ஹீரோ விஷம் குடிக்கிற ஸீன் ..." என்று சந்தேகக் குரலில் மெதுவாகச் சொன்னான் அந்த சின்ஸியர் உதவியாளன்.

Wednesday, May 24, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (13)

Image result for image of two friends
"நன்றி கெட்ட உலகம் ... நன்றி கெட்ட மனுஷங்க .. இனிமே இதுங்களைப் பத்தி கவலையே படக்கூடாது. நம்ம வேலையைப் பார்த்துகிட்டு நாம போய்க்கிட்டே இருக்கணும் !" என்றவனிடம் "இப்பவும் அப்படித்தானே இருக்கிறே.... இருக்கோம். இதை அப்படியே கண்ட்னியூ பண்ணனுங்கிறியா ? " என்று அமைதியான குரலில் கேட்டான் நண்பன்.

Tuesday, May 23, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (12)

Image result for image of conversation of mother and son.
"பாத்ரூம் நாறுதுடா. வரும்போது பினாயில் வாங்கிட்டு வா " என்றவளிடம் "பழைய நாற்றத்தைப் போக்க புதிய நாற்றமா?" என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டான் மகன்.

Monday, May 22, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (11)

Image result for image of two friends
"இதோ பாருடா.. எவன் என்னென்ன கிரிமினல் வேலை செய்தாலும் அதெல்லாம் எங்கிட்டே செல்லுபடி ஆகாது. எந்த கிரிமினலையும் நான் ஈஸியா கண்டு பிடிச்சிடுவேன் ! உன்னாலே முடியுமா ?" என்று மார்தட்டி தோள்தட்டி ராகவன் கேட்க , "பாம்பின் கால் பாம்பறியும். இனம் இனமறியும் " என்று அமைதியாக சொன்னான் கோகுல்.

Sunday, May 21, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (10)

Image result for image of preview theatre
ப்ரீவியூ தியேட்டரில் படம் முடிந்ததும் பாட்டியின் அருகில் வந்து அவள் தோளில் சாய்ந்து கழுத்தை கட்டி அணைத்தபடி காதோரம் கிசுகிசு குரலில் "பாட்டி .. படம் எப்படி? இது என்னோட முதல் முயற்சிக்கிறதாலே பணத்தைக் கணக்கு பார்க்காமே வாரி இறைச்சிருக்கிறேன் " என்ற நரேஷின் காதை செல்லமாகக் கிள்ளியபடி "பொண்ணுங்க போடற ட்ரஸ்க்கு செலவழிக்க மட்டும் கணக்கு பார்த்தியா? ரெண்டு முழ துணியோட ஒரு பொண்ணு அரைகுறையா படம் முழுக்க திரியுது. கூட ஒரு நாலு முழம் துணி வாங்கிக் கொடுக்க பணத்தை கணக்கு பார்த்தியா என்ன ?"  என்று கேட்டாள் பாட்டி 

Saturday, May 20, 2017

ஓ பாட்டி நல்ல பாட்டி தான் - 02


Image result for image of Tamilnadu old lady
பாட்டி: இந்த செருப்பை ஏன் மூலையிலேயே போட்டு வச்சிருக்கிறே? வெளியிலே போறச்சே யாராவது போட்டுட்டுப் போறதுதானே? நானும் தினமும் சொல்லுதேன். யாராவது அதைக் காதுல வாங்குதீங்களா ?"
மகன்: அது அறுந்து போயிட்டும்மா. தூக்கிக் குப்பையிலே போடணும். வாசலில் குப்பை லாரி வரும்போது எடுத்துப்  போடணும்.
பாட்டி : அறுந்தா என்ன? தைச்சுப் போட்டுக்கிறதுதானே?
மகன்;   செருப்பு பூரா தையல்தான் இருக்கு... இன்னும் என்னத்த தைக்கிறது.
மருமகள்: என்னங்க உங்க அம்மா அந்த செருப்பைத் தூக்கிப்போட விட மாட்டேங்கிறாங்க. யாருக்காவது உதவும்ணு பத்திரப்படுத்தி வைக்கிறாங்க.       வீட்டு வாசலில் திருஷ்டிப்புள்ளி மாதிரி அறுந்து போன செருப்பு. ச்சே..
பாட்டி: பேராண்டி, நீயாவது போய் அந்த செருப்பைத் தைச்சு எடுத்துட்டு வாயேன். யாராது அவசரத்துக்குப் போட்டுக்கலாந்தானே.
சரியென்று சொல்லி அதை பேரன் எடுத்துச் செல்ல
பாட்டி : என் பேரன்னா பேரன்தான்.  அவன் ஒருத்தனுக்குத்தான் என்னைப் போலவே காசோட அருமை தெரிஞ்சிருக்கு. நான் ஒரு வார்த்தை சொன்னதுமே செருப்பைக் கையிலே   எடுத்துட்டுப் போயிட்டானே.
சிறிது நேரம் தெருவில்  நின்று வேடிக்கை பார்த்துவிட்டு விட்டு உள்ளே வந்த 
பேரன் :: பாட்டி... இந்த செருப்பு ரொம்பப் பளபளனு இருக்குதாம். செருப்புத் தைக்கிறவனுக்குக் கண்ணே கூசுதாம். தைக்க  முடியலேனு சொல்லிட்டான்.
பாட்டி: அடப்பாவமே. அவன் கண்ணைக் கெடுத்த பாவம் நமக்கு வேணாம்டா. உடனே தூக்கித் தூர வீசு.
மகன்:   அப்பாடா.. எப்படியோ.. செருப்புக்கு விமோசனம் கிடைச்சா சரிதான். வீட்டை விட்டுப் போனால் சரிதான்.

Friday, May 19, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 151 )


Image result for image of torned chappal
                                                         ஏக்கத்தின் வெளிப்பாடு ?
"ஜூன் மாசம் பக்கத்திலே வந்துகிட்டே இருக்குது. ஸ்கூல் செலவே பட்ஜெட்டில் எகிறுது. இப்பப்போய் இந்த செருப்பு வேறே அறுந்துபோய் சதி பண்ணுதே. சனியன்... தைக்க முடியாதபடி இப்படியா அறுந்து போகணும். அதை சொல்லி என்ன பிரயோஜனம். எவனோ ஒரு புறம்போக்கு போன் பேசிக்கிட்டே வந்து என்மேலே எருமைமாடு மாதிரி மோதிட்டுதே. அந்தப் பள்ளத்தில் நான் கொஞ்சம் ஜாக்கிரதையா தாண்டி இருக்கணும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு சொல்வாங்களே. அந்த மாதிரி செருப்போடு போச்சு. இந்த டேமேஜ் காலில் ஏற்பட்டிருந்தால் டாக்டர் பீஸ் எகிறி இருக்குமே" என்று மனசுக்குள் நினைத்தபடியே செருப்புக்கடைக்குள் நுழைந்தான் சேது.
இவனைக் கண்டதுமே, செல்போனை காதிலிருந்து எடுத்துவிட்டு தலையை உயர்த்தி  அருகிலிருந்த நாற்காலியை சுட்டிக்காட்டி "உட்காருங்க " என்று சைகை செய்த இளைஞன், மீண்டும் செல்போனில் ஐக்கியமானான்.
"இந்த செல்போனைக் கண்டுபிடிச்ச படுபாவி..சண்டாளன் யாருனு தெரியலே. அவன்மட்டும் இப்ப என் கையில் கிடைச்சா அவனை அப்படியே கொதிக்கிற சுண்ணாம்பு   காளவாயில் வச்சு   நீர்த்துடணும்" என்று மனதுக்குள் சபித்தான்.
இதே டயலாக்கை வீட்டில் இருக்கும்போது சொல்லி இருந்தால், "எல்லா மனுஷங்களுக்கும் உபயோகமாக இருக்கும்னுதான் ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணை கண்டு பிடிக்கிறாங்க. எதை எதை எந்த நேரத்தில் எப்படி யூஸ் பண்ணணும்கிற அடிப்படை அறிவு இல்லாத மனுஷங்களை அடிச்சு திருத்தறதை விட்டுட்டு கண்டுபிடிப்பாளிகளை குறை சொல்றீங்களே " என்று ஜானு கேட்டிருப்பாள் என்பதும் நினைவுக்கு வந்தது.
இளைஞன் இன்னும் போனில்தான் இருந்தான்.
"காதலின் தீபம் ஒன்று" - பாட்டு டீவியில் போடும்போது கவனிச்சு பாரேன். அந்த பாட்டில் ரஜனி நடக்கிற நடை இருக்குதே .. அது தூள். அப்புறம் பழைய பாட்டு ஒண்ணு..."காவியமா நெஞ்சில் ஓவியமா"னு அதுல கூட சிவாஜி சூப்பரா நடப்பாருடா.. நம்ம விஜயகாந்துக்கு ஆயுதமே வேண்டாம். காலே போதும். தூக்கிப்போட்டு பந்தாடிடுவார். அப்புறம் நேத்து பேஸ்-புக்கில் ஒரு மேட்டர்டா. ஒருத்தன் மொட்டைமாடி சுவரில் நின்னுகிட்டு என்னென்னவோ செய்றான். பார்க்கறச்சே அப்படியே உடம்பே புல்லரிக்குதுடா. எனக்கும் அப்படி செய்யணும்போல இருக்குது. அட..கடல் அலைலே மிதந்துகிட்டு என்னென்ன வித்தை காட்டுறாங்க. அதெல்லாம் எப்படிடா ?" என்று வியந்து போய் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.
தலையை நிமிர்த்தி ஒரு நொடி நேரம் சேதுவைப் பார்த்த இளைஞன் மீண்டும் செல்போனில் ஐக்கியமானான்.
"டேய் .. நம்ம லைஃப் முடியறதுக்குள் இந்தியா பாகிஸ்தான் பார்டரில் இருக்கிற வாகா ப்ரோக்ராமை எப்படியாவது பார்த்துடணும்டா . அன்னிக்கு டீவியில் பார்த்தேன். நம்ம ஜவான்க காலை எவ்வளவு உயரத்துக்குத் தூக்கி லெஃப்ட் ரைட் போடறாங்க தெரியுமா! கால் வலிக்காதா என்ன! பார்க்கறச்சயே உடம்பு புல்லரிக்குதுடா !" என்று அவன் சொன்னதை சேதுவும் கேட்டான்.
பார்க்க ரசிக்க எத்தனையோ விஷயம் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுட்டு இந்த புறம்போக்கு ஒவ்வொருத்தர் நிக்கிறதையும் நடக்கிறதையும் ரசிக்கிற ஜென்மம் போலிருக்கு என்று நினைத்து பொறுமை இழந்த சேது, "போனை முடிச்சிட்டுதான் கஸ்டமரை கவனிக்கிறதா ஐடியா இருந்தா அதை முதலிலேயே சொல்லிடு. நான் வேறே கடையை பார்த்துக்கிறேன்" என்று கத்தினான்.
"இல்லே ஸார் .. இப்போ வந்திடுவாங்க."
"கஸ்டமரைக் கவனிக்கிறதைவிட துரைக்கு போன் முக்கியமா போச்சாக்கும்?"
"அப்படியில்லே. என்னாலே முடியாது ஸார் "
"ஓஹோ..முதலாளி வர்க்கமா?" என்று சேது இளக்காரமாக கேட்க, "நோ ஸார் " என்று பதட்டமான குரலில்  சொன்ன இளைஞன் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து கீழே குதித்தான்.
குதித்த வேகத்தில் தடுமாறி தரையில் உருண்டான். அவனைப் பிடித்துத் தூக்கிய சேது அப்போதுதான் அவனைக் கூர்ந்து கவனித்தான். அவனுடைய உருவ அமைப்பு தொடைக்கு கீழ் உள்ள பகுதியே இல்லாமல் இருந்தது.      
"இது என்னோட பிரெண்ட்ஸ் நடத்துற கடை. அவங்க சாப்பிட வெளியில் போயிருக்காங்க. டைம் பாஸுக்கு நான் இங்கே வருவேன். அவங்க வெளியில் போறச்சே நான் கடையை பார்த்துப்பேன். மத்தபடி என்னாலே எங்கேயும் ஏற இறங்க எதையும் எடுத்துக்காட்ட முடியாது சார். இன்னும் அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணுங்க" என்று கெஞ்சும்குரலில் சொல்ல, மீண்டும் தனது பழைய இடத்தில் அமர்ந்தான் சேது. இளைஞனின் போன் பேச்சின் காரணம் அவனுக்கு இப்போது புரிந்தது. தன்னிடம் இல்லாத ஒன்று,  தன்னால் முடியாத ஒன்று மற்றவர்களிடம்  இருந்தால் அதை எண்ணி ஏங்குவதும் ரசிப்பதும்தானே மனித இயல்பு. அதைத்தானே இந்நேரம் வரை செய்திருக்கிறான். அவனிடம் போய் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டேனே என்று தன்னை நினைத்து வெட்கப்பட்டான் சேது. 

Thursday, May 18, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (09)

Image result for image of little boy crying
"அடிச்சிட்டான்ம்மா" என்று அழுதபடியே வீட்டுக்குள் நுழைந்த குழந்தையைக் கண்ட தாய்,  மனசு பதறிப் போய், "இப்படி கண்ட நாய் கிட்டேயும் அடி வாங்கிக்கிட்டு வந்து நிக்கிறியே. உன்னை அடிச்ச தெரு நாயை ஓங்கி நாலு சாத்து திருப்பி சாத்த வேண்டாமா?" என்று கேட்க, "அவன் என்னை திருப்பி அடிச்சிட்டான்மா " என்று அழுத்தம் திருத்தமாக சொன்னது குழந்தை. 

Wednesday, May 17, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (08)

Image result for image of man drinking water in street tap

ஒருத்தன் உயிரோடு இருக்கிறப்ப குடிக்கிறதுக்கு  தண்ணி கூட தராத இந்த உலகம், அவன் செத்த பிறகு அவன் கேட்காமலே பாலை அவன் வாயில் கொண்டு வந்து ஊற்றும் ! விதவிதமான உணவு வகைகளை அவன் படத்தின் முன்பாக படையல் போடும். இதுதான் உலகம்.

Tuesday, May 16, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (07)



Image result for image of man dying his hairImage result for image of black man in beauty parlour
இயற்கையை மாற்றுவதில் மனிதனுக்கு அலாதிப்பிரியம். வெள்ளைமுடியை கறுப்பாக்க, கறுத்த உடம்பை சிவப்பாக்க என்னமாய் மெனக்கெடுகிறான் 

Monday, May 15, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (06)

Image result for image of chef

காலமாற்றங்கள் மனமாற்றங்களையும் ஏற்படுத்தவே செய்கின்றன.
தாத்தா, அப்பாவுக்கு சமையல்வேலைதான் பரம்பரைத் தொழில் என்று சொல்ல கூச்சப்பட்டவன், இன்றைக்கு   "நான் ஸ்டார் ஹோட்டலில் செப்" என்று  காலரை உயர்த்தி சொல்கிறான்.

Sunday, May 14, 2017

ஹாய் குட்டீஸ் , குறுக்கெழுத்து புதிர் - 07


ஹாய்   குட்டீஸ்இதோ உங்களுக்கான    குறுக்கெழுத்து புதிர்இந்தப்  புதிருக்கான   அனைத்து விடைகளும் "  சா  என்ற எழுத்தில்தான் தொடங்கும். இனி   நாம   பள்ளியில்   படிச்சதை வச்சே விளையாடலாம்எதையும்   விளையாட்டாகவே படிக்கலாம்
                குறுக்கெழுத்து புதிர்     - 7

 01

  

  

  

  

  

 

 
 09

  

  
 02
  

 
 10

  
14

  
 03

  

  

  

 



 04


  
 05


  

 11

  

 

 12


  

  

  

  

 13


 

  
15

 18


 
 16
 17


 06


 07



 08




 


  


  

இடமிருந்து வலம் 
  1  மழைத் துளியை உண்டு உயிர் வாழும் வானம்பாடி  ( 6 )
  2  தோழன்  ( 2 ) 
  3  அத்தாட்சி பத்திரம்  ( 5 ) 
  4  முனிவர்  / அப்பிராணி   ( 2 ) 
  5  இனிய குரல்  ( 4 )
  6  தேரோட்டி  ( 3 )  
  7  உணவு  ( 4 ) 
  8  அங்க இலக்கணம்  ( 10 ) 

வலமிருந்து இடம் 
 4  நான்கு வேதங்களில் ஒன்று  ( 5 ) 
 5  செவ்வந்தி  ( 4 ) 
 7  பாதை   ( 2 ) 
 9  ஒரு இசைக் கருவி   ( 4 ) 
10  சுறுசுறுப்பற்ற  நிதானம்  ( 5 )  
11  வர்ணம் / நிறம்  ( 3 ) 
12  போதை தரும் பானம்  ( 4 )
13  கடல்  / ஆழி / சமுத்திரம்   ( 4 ) 

மேலிருந்து கீழ்  
 1  கெட்டிக்காரத் தன்மை  ( 7 )
 3  திறவுகோல்  ( 2 ) 
 4  எரிந்துபோன வரட்டி  ( 4 ) 
11  சபித்ததால் வந்த வினை  ( 5 ) 
12  சவுக்கு / கயிறு / கசை  ( 3 ) 
13  வேதம் ஓதுபவர் / முன்னாள் பாரதப் பிரதமர்  ( 4 ) 
14  நெற்றித் திலகம் / சுண்ணாம்புக் கலவை  ( 3 ) 
15  வீரச்செயல்  ( 4 )  

கீழிருந்து மேல் 
 4  சம்பவத்தை நேரில் பார்த்தவன்  ( 3 ) 
 6  ஒரு தானிய வகை  ( 2 )
 7   பயிர்த் தொழில்  ( 4 ) 
 8  ஜன்னல்  ( 4 )
11  சரித்தல் / கவிழ்த்தல்  ( 4 )    
15  ஆரஞ்சு பழ வகையில் ஒன்று  ( 6 ) 
16  சுவடுக் குழி   ( 2 ) 
17  கம்பள ஆடை  ( 3 )   

தனித்து நிற்கும் ஓரெழுத்து 
18  பார்த்தேன் என்பதன் ஆங்கில சொல்   ( 1 )