Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 29, 2012

தெரிந்து கொள்ளுங்கள் !!

நாவை அடக்க முடியாதவன் மனதை அடக்க முடியாது: மனதை அடக்க முடியாதவன் ஆசையை அடக்க முடியாது. ஆசையே எல்லா துன்பத்திற்கும் முதல் காரணம்.

எதை இழந்தாலும் தைரியத்தை, நம்பிக்கையை இழக்காதவரை உலகம் நமது கைகளுக்குள்தான்.

பேசும் முன் கேளுங்கள் ; எழுதும் முன் யோசியுங்கள் ; செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 

அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் ஆபத்தில்தான் கொண்டுபோய் சேர்க்கும்.

நாண் என்பது வில்லுக்கு வலிமை;  நாணயம் என்பது வாழ்வுக்கு வலிமை; நா நயம்  என்பது சொல்லுக்கு வலிமை ; நாணம் என்பது பெண்ணுக்கு வலிமை ;

எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ள இடத்தில் ஏமாற்றங்களுக்கு வேலை இல்லை.

நம்மைவிட வலிமை குறைந்தவனை எதிர்ப்பதற்குப் பெயரல்ல வீரம் ! நம்மை விட எல்லா வகையிலும் வலிமையுடையவனின் தப்பைத் தட்டிக் கேட்பதற்குப் பெயர்தான் வீரம்.

எதற்க்கெடுத்தாலும் நேரமில்லை என்று சொல்வது உழைப்பவர்களுக்கு  மட்டும் வேத வாக்கல்ல! சோம்பேறிகளின் ஸ்லோகமும் அதுதான் !!

மனிதர்களே இல்லாத இடத்தில் அரசனாய் இருப்பதைவிட நாலுவித  மக்களும் நிறைந்த இடத்தில் ஆண்டியாய் இருப்பது மேல் !

எந்த இடத்தில் இலவசப் பொருட்கள் அதிகம் வழங்கப் படுகிறதோ அங்கே ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் .


Friday, December 28, 2012

நதிகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்க (Puzzle No.21)

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
     
            நதிகளின் பெயர்களைக் கண்டு பிடியுங்க                
         

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

              
    15 
 


     
    03 

    16 



    
 

    25
    01

    02
    
     09 
 

  
    17
   
  
   

     
     06
 
      07  
  
  

 
   
 
 
  

 
    18

  
 
 
  
 

 
  
 

  

    

 
  


    04 

    05
 
 

 



 
   
    
   

 

  

 


  
 

 
  

  
 
 
   

   

 

 

  
   
  

   
     
     08
   10 
 

   

 

   
   


  

      

   
   19
 

  

 
   
   
    12 
   


 
 
   
 

    
   
    
   20

  


   11
    
    21
 

   

  
    13
 
  
   

   22
  
 
   23

   

   24
   
 
   


  
   14
  

மேலிருந்து கீழ்  

1 நெல்லை அல்வாவின் சுவைக்கு காரணமே இந்நதி நீர்தானாம்                   ( 6 )
2  பாவம் போக்கும் நதியின் துணை நதிகளில் ஒன்று  (சங்கர நாராயணா) ( 3 )
3  கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தில் பிறந்து, தமிழ் நாட்டு
   கடலூரில்     கலப்பது                                                                                                       ( 5 )
4 ஜபல்பூரில் பாய்வது                                                                                                         ( 4 )
5 சிந்துவின் துணை நதி. இந்நதி மட்டுமே இந்தியாவில் முழுமையாகப்
   பாய்கிறது  ( எஸ்கிமோக்களின் வண்டி )                                                                 ( 4 )
6  தட்ஷிண கங்கை என்றழைக்கப் படுவது                                                               ( 4 )
7 பிறப்பிடம் மானசரோவர் ஏரி ( படைக்கும் கடவுளின் மகனே! )                    ( 8 )

கீழிருந்து மேல்

  8  மிக நீளமான ஹீராகுட் அணை இந்நதியின் குறுக்கே  கட்டப் பட்டுள்ளது ( 4 )
  9  அழகர் ஆற்றில் இறங்குகிறார்                                                                                       ( 2 )
10  பொன்னி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம்                                                       ( 5 )
11  விஜயவாடாவில்  ஓடுவது /  கீதை சொன்னவனே !                                             ( 3 )
12  கலைமகள்                                                                                                                              ( 5 )
13   விபூதியின் மூலப் பொருள் (துணை எழுத்தில்லாமல் )                                     ( 4 )
14  மூன்று நதிகளின் கலப்பு / கும்ப மேளா                                                                      ( 9 )

இடமிருந்து வலம்

12 இதில் இறங்கிய ராமபிரான், திரும்பி வரவில்லை என்று புராணம்
     சொல்கிறது                                                                                                                              ( 3 )
15 பாவம் போக்கும் நதி (அந்த தைரியத்தில் மேலும் மேலும் பாவம்
     செய்யாதீங்க  )                                                                                                                       ( 3 )
16  நிலவொளியில், சேர நன்னாட்டிளம் பெண்களுடன்  சுந்தர தெலுங்கில்
     பாடியபடி இந்நதியில் படகில் பயணிக்க பாரதியாருக்கு ஆசை                     ( 3 )
17 கொல்கத்தாவில் பாய்வது                                                                                               ( 3 )
18  நெல்லையில் பாயும் நதியின் மற்றொரு பெயர்                                                  ( 3 )
19   இந்நதிக்கரையில் உலக அதிசயங்களில் ஒன்று                                                ( 3 )
20   சிந்துவின் துணை நதி, முதல் இரண்டெழுத்தில் ஒரு நாடு                           ( 3 )
21  சூரத்தில் பாய்வது                                                                                                              ( 3 )
22  சாமியே சரணம் ஐயப்பா                                                                                                ( 3 )
23  மணலாறு என்றும் சொல்வதுண்டு                                                                          ( 3 )
24   இந்நதியின் பெயரில் / கரையில் புகழ் பெற்ற ஆஸ்ரமம்                               ( 5 )


வலமிருந்து இடம்

25 இரு மாநில பிரச்சினைகள் பேசித் தீர்ந்தபாடில்லை                                           ( 3 )
             




     

Scanning of inner-heart ( Scan Report No.55 )

                                          இது அநியாயம் !!


பிள்ளையார் கோயில் மதிற் சுவர் மீது அரட்டைக் கச்சேரி ஆரம்பமாகி  இருந்தது.
" ராகுலை எங்கேடா மச்சி ஆளையே காணும் ? வீட்டில் போய்ப் பார்த்திட்டு வரச் சொன்னேனே. பார்த்தியாடா ? " என்று கேட்டான் ஆனந்த்.
" அட, ஆமாம்டா, வீட்டிலே பெரிசுக ரவுசு தாங்க முடியலியாம். பெரிசு
 ரொம்பவும் காய்ச்சி எடுத்துட்டுதாம் "
" பெரிசுன்னா அப்படித்தான் இருக்கும். மேட்டர் என்ன ? அதைச்சொல்லு "
" அது ரவுசு தாங்காமே வேலை தேடி அலையறானாம். பகலில் கம்பெனி 
கம்பெனியா   ஏறி இறங்கிறான். ராத்திரியில் கோவிலை சுத்துதான். செவ்வாய் வெள்ளி, வடபழனி கோயிலாம் . புதன் கிழமை மைலாப்பூர் கபாலீஸ்வரராம். சனிக்கிழமை நங்கநல்லூர் ஆஞ்சநேயராம். சர்ச்சைக் கூட விட்டு வைக்கலையாம்.சண்டய்சில் வேளாங் கண்ணி சர்ச்சாம். இது அவனே சொன்ன தகவல் "
" நல்ல வேளை, வியாழக் கிழமை தப்பிச்சுது ! "
" சொல்ல மறந்திட்டேன். வியாழக் கிழமை ராகவேந்திரா கோவிலுக்குப்
போறானாம் "
" கோவிலைக் கூட்டிப் பெருக்குகிற வேலை கிடைக்குமான்னு பார்க்கச்
சொல்லு " என்றான் ஆனந்த் எரிச்சலடைந்தவனாக.
" அவன் இல்லாமே கச்சேரி களைகட்ட மாட்டேங்குது " என்றான் ரவி
" வழக்கமா எங்க வீட்டுக்கு வந்து மாகசின்ஸ் வாங்கிட்டுப் போவான் .
இப்போ அது கூட வாங்க வர்றதில்லே " என்றான் கோபி கவலையுடன்

ஒரு மாதத்திற்குப் பின் ...
" ஹாய் " என்று குரல் கொடுத்தபடி கையில் ஸ்வீட் பாக்ஸ் சகிதம் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ராகுல்
" மச்சீஸ், எனக்கு ஜாப் கிடைச்சிட்டுது . நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கை விடலே. ஸ்டார்ட்டிங் சாலரி ட்வென்டி தௌசண்ட் தான். போகப் போக ஏறும். நாளைக்கு டுயூட்டி   ஜாயின் பண்றேன். டேய் கோபி எல்லா மகசின்ஸ்ம் எடுத்து வை. நாளைக்கு ஆபீஸ் போறப்போ வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன். இப்போ கிளம்பறேன் " என்று உற்சாகமாக அங்கிருந்து நகர்ந்தான் ராகுல்

மறுநாள் மாலை ...
" ஹாய் ராகுல், உன்னை நாங்க எதிர் பார்க்கவே இல்லை. ஆபீசிலிருந்து
நேரா இங்கே வர்றியா ? "
" ஆமாம் "
" ஏண்டா சோகமா இருக்கிறே ?  உன் சாலரியை தவணை முறையில்தான் தருவோம்னு சொல்லிட்டாங்களா ? "
" அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. வருஷா வருஷம் போனஸ் இன்கிரிமென்ட் எல்லாம் உண்டாம் "
" உனக்கு வேலை பிடிக்கலையா ? ஏன் டல்லா இருக்கிறே ? "
" என்னத்தைச் சொல்றது ? காலையில் 9.30 க்கு ஆபீசில் இருக்கணுமாம். பத்து நிமிஷம்தான்  கிரேஸ்  டைமாம் "
"இதென்னடா பெரிய விஷயம் ? நீதான் வண்டி வச்சிருக்கிறியே. காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினா கூட ஆபீஸ் ஹவர்ஸ்க்கு முன்னாடியே போயிடலாமே "
"அதெல்லாம் சரிடா .. சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்கணும்ன்னு சொல்றாங்கடா. அதை நினைக்கும்போதுதான்' அநியாயம் இந்த நாட்டினிலே இது  அநியாயம்'ன்னு பாடத் தோணுது " என்றான் ராகுல் நிதானமாகச் சொல்ல அங்கு மயான அமைதி நிலவியது

Saturday, December 22, 2012

அட, நிஜந்தாங்க !

நண்பர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுங்கள் :விரோதிகளைப் பற்றி எதுவுமே பேசாதீர்கள்.


மூட நம்பிக்கை என்பது மனவலிமை மனப்பக்குவம் இல்லாதவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட துரதிர்ஷ்டம்.


எந்த நிறத்தைச் சேர்த்தாலும் கறுப்பின்  சொந்த நிறம் மாறாது.


ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்ததற்கு சமம்.


நமக்காகப் பொய் பேசத் துணிந்தவன், தனக்காக, நமக்கெதிராக பொய் பேச தயங்க மாட்டான்

சில சமயங்களில், காயப் படுத்தும் உண்மையைவிட, குணப் படுத்தும் பொய்யே மேலானது.


கடவுளை நெருங்கி செல்ல, நாம் மலையேற வேண்டிய அவசியமில்லை. மற்றவர்கள்  துன்பம் கண்டு நாம் இறங்கி வந்தாலே போதும் .


பார்வையுள்ளவர்கள் கீழே விழுவதைவிட, பார்வைக் குறையுள்ளவர்கள் குறைவாகவே  விழுகிறார்கள்.


கல்வியறிவு என்பது நமது அறியாமையை மேலும் மேலும் அறிந்து கொள்வது !

புத்திசாலிகள் யார் தெரியுமா ? அடுத்தவர்களுடைய முட்டாள்த் தனத்தில்  இருந்து பாடம் கற்றுக் கொள்பவர்கள் ! 

Friday, December 21, 2012

Scanning of inner-heart ( Scan Report No.54 )

                                அம்மா போய் விட்டாள் !!

அம்மா போய் விட்டாள். ஆணுக்கு ஆணாய், பெண்ணுக்கு பெண்ணாய் நின்று என்னை வளர்த்து ஆளாக்கிய  அம்மா போய் விட்டாள். பறவைகள், தங்கள் குஞ்சுகளை, தன்  இறக்கைக்குள் வைத்துப் பாதுகாக்குமே, அதேபோல தனது கண் இமைகளுக்குள் என்னைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த அம்மா போய் விட்டாள். அம்மா போய் இன்றோடு மூன்று நாட்கள் ஓடி விட்டது. அம்மா இல்லாத வீடு வெறிச்சோடிக் கிடக்கிறது . வீடு முழுக்க சூன்யம் சூழ்ந்து விட்டது போன்ற தொரு  பிரமை.
அம்மா, சொல் பொறுக்க மாட்டாள். அம்மாவிற்குக் கல்யாணமான புதிதில், அப்பா கோபமாகச் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக, சட்டப்படி விவாகரத்து வாங்காமலே, அவரை விட்டுப் பிரிந்து வந்து விட்டாள் அம்மா. அப்போது நான் மூன்று மாதக் குழந்தையாய் அம்மாவின் கருவில் இருந்தேனாம். அப்பாவும் அவர் குடும்பத்தினரும் விட்ட எந்தவொரு சமாதானத் தூதையும் அம்மா ஏற்றுக் கொள்ளவே இல்லையாம். இதை அம்மாவே பலமுறை என்னிடம் சொல்லி இருக்கிறாள். அம்மாவிடம் இருந்தது  " பிடிவாதமா தன்னம்பிக்கையா " என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். அம்மா ஒரு முரண்பட்ட குணசித்திரம்.ஆனால் தியாகத் தீயில் தன்னைத் தானே எரித்துக் கொண்டு எனக்காகவே அம்மா வாழ்ந்தாள்  என்றால், அது மிகையில்லை. அம்மா அதிகம் படித்ததில்லை. என்னை வளர்த்து ஆளாக்க வீடு வீடாகப் பத்துப் பாத்திரம் தேய்த்தும், பலநாட்கள்  சமையலறையில் நெருப்பில் வெந்தும், தையல் வேலை  செய்து பணம் சேர்த்துப் படிக்க வைத்ததும் , இப்போதும் நினைவில் நின்று பாடாய்ப் படுத்துகிறது.  நினைக்கும்போதே அழுகை வந்தது. ஆனால் நான் அழுவது அம்மாவுக்குப் பிடிக்காத ஒன்று.  " பொம்பளை அழலாம்டா. அதில்தான் பெண்ணோட மென்மை தெரியும் . ஆம்பிளை அழக்கூடாது. அழுதால் அதில் அவனோட கோழைத்தனம்தான் தெரியும் " என்பாள் அம்மா.

படிக்கிற  நாட்களிலும் சரி ; வேலையில் சேர்ந்த பிறகும் சரி ; நண்பர் களிடமும் மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் காட்ட வேண்டிய நியாயமான கோபத்தைக் கூட காட்ட வகையற்றவனாய்,  வீட்டுக்கு வந்ததும் எனது  ஒட்டு மொத்தக் கோபத்தையும் அம்மாவிடம் காட்டுவேன். பதிலேதும் சொல்லாமல் சிரிப்பாள். நான் நார்மல் நிலைக்கு வந்ததும் " ஸாரிம்மா, ... வெரி வெரி  ஸாரி. நடந்த விசயத்துக்கு  எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத  உன்னிடம் நான்  கோபத்தைக் காட்டிட்டேன். நான் கத்தும் போது கூட சிரிச்சுகிட்டே நிற்கிறியே. அது உன்னாலே எப்படி முடியுதும்மா ? " என்பேன். " என் பிள்ளை கிட்டே நான் கோபப் பட்டா அது  என் மேலேயே நான் கோபப் படுற மாதிரி " என்பாள் அம்மா சிரித்துக்  கொண்டே.  " உன்னால் மட்டும் எப்படிம்மா கஷ்ட நேரத்தில் கூட சிரிக்க முடியுது ? " என்று கேட்பேன். " அது காலம் கற்றுத்தந்த பாடமடா " என்று  சிரித்துக் கொண்டே சொல்வாள் 

அம்மா எதற்கும் ஆசைப் பட்டது கிடையாது. " அம்மா, உனக்கு ஏதாவது ஆசை இருந்தா சொல்லும்மா " என்று கேட்பேன் .
" நீ எப்பவும் சந்தோசமா,  குடியும் குடித்தனமுமா, குழந்தை குட்டிகளோடு
சந்தோசமா இருக்கணும். அதை நான் பார்க்கணும். உன் குழந்தைகளை நான் வளர்த்து ஆளாக்கணும். இதுதாண்டா என் ஆசை " என்பாள்.

கிட்டத்தட்ட ஒரு நாலு மாதங்களுக்கு முன்பு " கண்ணா. உனக்கொரு பெண் பார்த்திருக்கிறேன். நீயும் நேரிலே ஒரு தரம் பார்த்திட்டு உன் விருப்பத்தைச் சொன்னா பேசி முடிச்சிடலாம் " என்றாள்.

"எனக்கென்று தனியா எந்த விருப்பமும் கிடையாதும்மா.உனக்கு ஒகேன்னா எனக்கும் ஓகேதான்" என்றேன். அதன்பின் பம்பரமாய் சுழன்று கல்யாண வேலைகளைக் கவனித்த அம்மா, தனக்கொரு மருமகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டாள். புது மருமகள் வீட்டுக்கு வந்து இன்னும் முழுதாக முப்பது நாள் கூட முடியவில்லை . அதற்குள் அம்மா போய் விட்டாள்.

நான்கு நாட்களுக்கு முன்பு .. நான் வீடு வந்து சேரும்போது இரவு மணி ஒன்பது.  எனது வண்டி சத்தம் கேட்டதுமே ஓடி வந்து கதவைத் திறக்கும் சுதா , நான் பலமுறை ஹார்ன் கொடுத்த பின்னும் கதவைத் திறக்க வில்லை . அம்மாதான் வந்து கதவைத் திறந்தாள். " இன்னும் சுதா வரலேடா. வழக்கமா ஏழு மணிக்கு வந்துடுவா . இன்னும் காணலேடா  . எதுக்கும் நீ பஸ் ஸ்டாப் வரை போய் பார்த்துட்டு வந்துடு . காலம் கெட்டுக் கிடக்கு.  தனியா வருவா " என்றாள்.   வண்டியை பஸ் ஸ்டாப் க்கு திருப்பினேன்.  நான் போய் அரைமணி  நேரத்துக்கெல்லாம் சுதா வந்து விட்டாள் . முகத்தில் வழக்கமான சிரிப்பு இல்லை, அவள் அழுதிருக்கிறாள் என்பதை கண்களும் முகமும் காட்டிக் கொடுத்தது . தெருவில் வைத்து எதையும் கேட்க வேண்டாம் . வீட்டில்  போய்ப் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்து அவளை வண்டியில் அழைத்து வந்தேன்.   புடவையைக் கூட மாற்றிக் கொள்ளாமல்,  எங்கள் அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்து விட்டாள். அம்மா பலமுறை சாப்பிட அழைத்தும் பதிலேதும் சொல்லாமல் அறைக்குள் இருந்து விட்டாள். நான் மட்டும் சாப்பிட்டு விட்டு அவளுக்கும் டம்ப்ளரில் பாலை எடுத்துக் கொண்டு வந்தேன் .

" இன்னிக்கு ஆபீசில், மேடம் என்னைக் கண்டபடி திட்டிட்டாங்க. யாரோ செய்த  தப்புக்கு என்னைத் திட்டிட்டு, உண்மை தெரிஞ்சதும் " ஸாரி  " ன்னு ஒரு வார்த்தையை அலட்டிக்காமே சொல்லிட்டுப் போய்ட்டாங்க. நான்  பட்ட பாடு   எனக்குதான் தெரியும் " என்றாள் விம்மலுக்கிடையே.

" விடு சுதா . ஆபீஸ்னா அப்படித்தான் இருக்கும் " என்றேன்.  நான் என்ன சொல்லியும் சமாதானம் ஆகாமல் இரவு முழுக்க அழுது கொண்டிருந்தாள். எனக்கும் உறக்கம் வரவில்லை. படுக்கையில் சாய்வதும், எழுந்து மணியைப் பார்ப்பதுமாக இருந்தேன். கடிகாரம் 05.45 என்று மணி காட்டியது. சுதாவோ  அப்போதுதான் அழுத களைப்பில் கண்ணயர்ந்திருந்தாள்.

கதவு தட்டப் படும் சத்தம் கேட்டு , எங்கே சுதா விழித்து விடப் போகிறாளோ என்ற பதற்றத்தில் ஓடி வந்து கதவைத் திறந்தேன்.
" மணி ஆறாகப் போகிறது . வாசல் தெளிக்காமே அப்படி என்ன தூக்கம் ? சுதா .சுதா .." என்று குரல் கொடுத்தாள் அம்மா
" இதற்காக கதவைத் தட்டி எழுப்ப வேண்டுமா ? ஏன்  நேரங் கழிச்சு வாசல் தெளிச்சா  நம்மளை யாராவது தெருவை விட்டு விலக்கி  வச்சிடுவாங்களா? இன்னிக்கு ஒரு நாள்  நீதான் வாசல் தெளிச்சா என்ன ? " என்றேன்.

இந்த ஒரு வார்த்தை .. ஒரே ஒரு வார்த்தைதான் அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.

" இதெல்லாம் நீ பேசலேடா. உன்னை ஆட்டி வைக்கிற பிசாசு பேசுது . இனி இந்த வீட்டில் எனக்கு மரியாதை கிடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. இப்பவே நான் இங்கிருந்து போயிடறேன். இதுதான் நம்ம கடைசி சந்திப்பு . என்னைத் தேடி  வராதே .. நீ வரமாட்டே ..  ஆனால் ஊர் உலகம் என்ன சொல்லுமோன்னு நினைச்சி என்னைத் தேடி வந்திடாதே. நீ வருவது தெரிஞ்சா அந்த நிமிசமே  நான் பொணமாயிடுவேன்" னு சொல்லிட்டு அம்மா வீட்டை விட்டுப் போய் விட்டாள். அம்மா ரோசக்காரி. சொன்னா, சொன்னபடி செஞ்சிடுவா. அதனாலே அம்மாவைத் தேடி நான் போகலே . அம்மாவின் ஒன்றுவிட்ட அக்கா ஒருத்தி காசியில் இருக்கிறாங்க. அம்மா அங்கேதான் போயிட்டான்னு எனக்கு நல்லா தெரியும் . இருந்தாலும் அம்மாவைத் தேடிப் போகலே. அம்மா ரொம்பவும் பிடிவாதகுணம் படைச்சவ..  அம்மா நீண்ட ஆயுசோடு இருக்கணும். அதனாலே நான்   அம்மாவைக் கூப்பிடப் போகலே ... ஆனா அம்மா இல்லாத வீடு மயானமாக சூன்யம் நிறைந்ததாக இருக்கிறது. அம்மா போய்ட்டா ... அம்மா ....அம்மா  

Tuesday, December 18, 2012

சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்கள்

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்.

   சிறப்புப் பட்டங்கள் பெற்றவர்கள் பெயர்களை சொல்லுங்கள் 

   10
   
    02

                 

    
 
  

   
    03
   
    
    
      05
      
   06
    
 
    
   
   
   11
   

   


  



    04
    

     
              

   
   
   
   12
  

     

     

   
 
    
  
   

   
  
  

  

      
   13
  

     

    

   

 

    

    
  

   

    
   14
   
    
    

   
   15
   

              .  

    
 
 
    07 
  
   
  

 
 
  



    

   

  
     17
   


    01
    

   
    


    

    

    
   
   

    



    

     

   

  
   
   

    

 
  
    
   
    

     
   18
   

     

  

 

   

   

       

   

     
   08
   
   
    
   16
    
  
    

     



    

   
 
             

  
   09
   


மேலிருந்து கீழ்

1 கப்பலோட்டிய தமிழன்                                      (3 )
2  குழந்தைக் கவிஞர்  ( இனிஷியல் இல்லாமல் )  ( 6 )
3  தேச பக்தர்களின் பக்தன்     ( 3 )
4  சுதந்திர வேட்கை கொண்ட  " வர கவி "    ( 3 )
5  தேசப் பிதா            ( 4 ) 
6 பூதான் இயக்கத்தின் தந்தை , நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர்  ( 5 )

கீழிருந்து மேல்

7  கணித மேதை                      ( 5 )
8  மூதறிஞர்                               ( 3 )
9  படிக்காத மேதை, கர்ம வீரர்     ( 5 )

இடமிருந்து வலம்

  1  இரும்பு மனிதர்                   ( 8 )
10  மனிதருள் மாணிக்கம்    ( 8 )
11  கவிக்குயில்                         ( 4 )
12  ( மராட்டிய ) மலை எலி ( 5 )
13  பஞ்சாப் சிங்கம்                 ( 6 )
14  பகுத்தறிவாளர், வைக்கம் வீரர்   ( 3 )
15  தமிழ்த் தென்றல்  ( பெயர் சுருக்கம் )  ( 4 )
16  தமிழ்த் தாத்தா          ( 9 )

வலமிருந்து இடம்

  8  சொல்லின் செல்வர்            ( 8 )
17  தென்னாடு பெர்னாட்ஷா  ( 7 )
18  இந்தியாவின் விடிவெள்ளி  ( 9 )