Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, December 28, 2012

Scanning of inner-heart ( Scan Report No.55 )

                                          இது அநியாயம் !!


பிள்ளையார் கோயில் மதிற் சுவர் மீது அரட்டைக் கச்சேரி ஆரம்பமாகி  இருந்தது.
" ராகுலை எங்கேடா மச்சி ஆளையே காணும் ? வீட்டில் போய்ப் பார்த்திட்டு வரச் சொன்னேனே. பார்த்தியாடா ? " என்று கேட்டான் ஆனந்த்.
" அட, ஆமாம்டா, வீட்டிலே பெரிசுக ரவுசு தாங்க முடியலியாம். பெரிசு
 ரொம்பவும் காய்ச்சி எடுத்துட்டுதாம் "
" பெரிசுன்னா அப்படித்தான் இருக்கும். மேட்டர் என்ன ? அதைச்சொல்லு "
" அது ரவுசு தாங்காமே வேலை தேடி அலையறானாம். பகலில் கம்பெனி 
கம்பெனியா   ஏறி இறங்கிறான். ராத்திரியில் கோவிலை சுத்துதான். செவ்வாய் வெள்ளி, வடபழனி கோயிலாம் . புதன் கிழமை மைலாப்பூர் கபாலீஸ்வரராம். சனிக்கிழமை நங்கநல்லூர் ஆஞ்சநேயராம். சர்ச்சைக் கூட விட்டு வைக்கலையாம்.சண்டய்சில் வேளாங் கண்ணி சர்ச்சாம். இது அவனே சொன்ன தகவல் "
" நல்ல வேளை, வியாழக் கிழமை தப்பிச்சுது ! "
" சொல்ல மறந்திட்டேன். வியாழக் கிழமை ராகவேந்திரா கோவிலுக்குப்
போறானாம் "
" கோவிலைக் கூட்டிப் பெருக்குகிற வேலை கிடைக்குமான்னு பார்க்கச்
சொல்லு " என்றான் ஆனந்த் எரிச்சலடைந்தவனாக.
" அவன் இல்லாமே கச்சேரி களைகட்ட மாட்டேங்குது " என்றான் ரவி
" வழக்கமா எங்க வீட்டுக்கு வந்து மாகசின்ஸ் வாங்கிட்டுப் போவான் .
இப்போ அது கூட வாங்க வர்றதில்லே " என்றான் கோபி கவலையுடன்

ஒரு மாதத்திற்குப் பின் ...
" ஹாய் " என்று குரல் கொடுத்தபடி கையில் ஸ்வீட் பாக்ஸ் சகிதம் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ராகுல்
" மச்சீஸ், எனக்கு ஜாப் கிடைச்சிட்டுது . நான் கும்பிட்ட தெய்வம் என்னைக் கை விடலே. ஸ்டார்ட்டிங் சாலரி ட்வென்டி தௌசண்ட் தான். போகப் போக ஏறும். நாளைக்கு டுயூட்டி   ஜாயின் பண்றேன். டேய் கோபி எல்லா மகசின்ஸ்ம் எடுத்து வை. நாளைக்கு ஆபீஸ் போறப்போ வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன். இப்போ கிளம்பறேன் " என்று உற்சாகமாக அங்கிருந்து நகர்ந்தான் ராகுல்

மறுநாள் மாலை ...
" ஹாய் ராகுல், உன்னை நாங்க எதிர் பார்க்கவே இல்லை. ஆபீசிலிருந்து
நேரா இங்கே வர்றியா ? "
" ஆமாம் "
" ஏண்டா சோகமா இருக்கிறே ?  உன் சாலரியை தவணை முறையில்தான் தருவோம்னு சொல்லிட்டாங்களா ? "
" அப்படி சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. வருஷா வருஷம் போனஸ் இன்கிரிமென்ட் எல்லாம் உண்டாம் "
" உனக்கு வேலை பிடிக்கலையா ? ஏன் டல்லா இருக்கிறே ? "
" என்னத்தைச் சொல்றது ? காலையில் 9.30 க்கு ஆபீசில் இருக்கணுமாம். பத்து நிமிஷம்தான்  கிரேஸ்  டைமாம் "
"இதென்னடா பெரிய விஷயம் ? நீதான் வண்டி வச்சிருக்கிறியே. காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினா கூட ஆபீஸ் ஹவர்ஸ்க்கு முன்னாடியே போயிடலாமே "
"அதெல்லாம் சரிடா .. சீட்டில் உட்கார்ந்து வேலை பார்க்கணும்ன்னு சொல்றாங்கடா. அதை நினைக்கும்போதுதான்' அநியாயம் இந்த நாட்டினிலே இது  அநியாயம்'ன்னு பாடத் தோணுது " என்றான் ராகுல் நிதானமாகச் சொல்ல அங்கு மயான அமைதி நிலவியது

No comments:

Post a Comment