Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, July 22, 2019

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (40)

எல்லாமே வயித்துக்குத்தான்டா 


மனதை அழுத்திக் கொண்டிருக்கும் கவலைகளை யாரிடமாவது கொட்டி விட்டால் தேவலாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட முத்துசாமி, உயிர் நண்பன் ரங்கனின் வீட்டுக்கு விரைந்தார்.
வீட்டுக் கதவை தட்டுவதற்காக கதவில் கைவைத்ததுமே, கதவு திறந்து கொண்டது.
"ரங்கா, கதவை  சரியாக தாழ் கூடபோடாமல் உள்ளே அப்படி என்ன தான் செய்றே?" என்று கேட்டபடி ஹாலுக்குள் நுழைந்தவர், கையில் சாப்பாட்டு தட்டை ஏந்தியபடி, ரங்கன் டீவியில் நியூஸ் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும், "என்னப்பா .. இவ்வளவு லேட்டா சாப்பிடறே ! அதுவும் வெறும் மோர் சாதம். சைட் டிஷ் எதுவும் இல்லையா? எங்கே உன்னோட தர்மசிகாமணி. நான் வேணும்னா வீட்டிலிருந்து கொண்டு வர சொல்லவா? ஒரு போன் அடிச்சா போதும். இரண்டே நிமிஷத்தில் என் பையன் டூ வீலரில் எடுத்து வந்துடுவான்" என்றார் உண்மையான அக்கறையுடன்.
"வீட்டிலே அவ இல்லே. பொண்ணைப் பார்த்துட்டு வர்றேன்னு நேத்து ராத்திரியே கிளம்பிப் போனா.  நாளைக்குத்தான் வருவா .. வா. உட்கார் "
"என்னப்பா இது வெறும் சாதம் ! என் பையனை சாப்பாடு எடுத்துட்டு வர சொல்றேன் "
"வேண்டாம்ப்பா .. என்ன சாப்பிடறோம் என்கிறது முக்கியமில்லே. அதை எவ்வளவு சுதந்திரமா சாப்பிடறோங்கிறதுதான் முக்கியம்."
"சாப்பிடறதில் அப்படி என்னப்பா சுதந்திரம் வேண்டிக் கிடக்கு?"
"இந்த ஒருவாய் சோத்துக்காகத்தான் எத்தனையோ பேர், யார்யாரிட மோ கையேந்தி நிக்கிறாங்க. ஆயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆஸ்டலில் தங்கி இருக்கிறவங்க கூட,  அவங்க அலவ் பண்ற டைமில்தான் சாப்பிட முடியும். முன்னாடி போனா மீல்ஸ் ரெடியாகலேன்னு சொல்வாங்க. லேட்டா போனா சீக்கிரம் வர்றதுக்கென்ன. இப்போ இதுதான் இருக்குனு எதையோ ஒன்னை குடுப்பாங்க. அவங்க குடுக்கிறதைத்தான் சாப்பிட முடியும். ஒரு சில கூட்டத்துக்கு மணியடிச்சாதான் சோறு. சாப்பாட்டுப் பந்தி சீக்கிரம் முடியாதா? மீந்ததை நமக்கு எப்போ போடுவாங்கனு எத்தனை ஜீவன்கள் விஷேச வீடுகள் முன்னே காத்துக் கிடக்குது. ஒரு சாண் வயித்துக்கு, ஒருவேளை சாப்பாட்டுக்கு மத்தவன் கொடுத்தால்தான் உண்டு ங்கிற நிலையில் இருக்கிறவங்க எத்தனை பேர்.  ஆனா இப்போ நான் எனக்கு வேண்டியதை, எனக்கு வசதிப்பட்ட நேரத்தில், நானாக எடுத்துப் போட்டு சாப்பிடறேன். அதுதான் சுதந்திரம் " என்று சிரித்துக் கொண்டே சொன்னார் ரங்கன். 
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் முத்துசாமி.
"என்ன யோசிக்கிறே?"
"உன்னோட  இத்தனை காலம் பழகியும், எதையும் ஈஸியா எடுத்துக்கிற பக்குவம் எனக்கு இல்லாமே போச்சேன்னு நினைச்சிட்டு இருந்தேன் "  

Friday, July 19, 2019

பாரதப் பிரதமரே! பரம தயாளரே !! ஒரு பணிவான விண்ணப்பம்.

DEAR VIEWERS,
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது பொது ஜனங்களோடு க்யூ வரிசையில் நின்று சில பிரபலங்கள்  வாக்களித்ததை ஏதோ உலக சாதனை மாதிரி  படம் பிடித்து மீடியாக்கள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. 
அதே போல க்யூ வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்த பிரபலம் யாராவது இருந்தால் அதை ஒளிபரப்புங்களேன்.
இதை நான் பதிவு செய்ய ஒரு காரணம் உண்டு.
16.07.2019 அன்று நானும் வரதரை தரிசிக்கப் போனேன். (முதலில் 18.07.2019ல் போவதாக பிளான். ஆனால் அன்று திருவோண நட்சத்திரம். கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் இரண்டு நாட்கள் முன்பே போய் வந்தோம்) சீனியர் சிட்டிஸன் வரிசையில் நின்று இரண்டு மணி நேரத்தில் பெருமாள்  தரிசனம் முடித்தோம். 
கோவிலை விட்டு வெளியில் வந்தோம். யாரோ ஒரு பிரமுகர் / பிரபலம்.
அவரை சுற்றி துப்பாக்கி ஏந்தாத குறையாக சுமார் 10 போலீஸ் அதிகாரிகள். அவரை வரதர் இருக்கும் இடத்துக்கு நேராக  அழைத்து சென்றார்கள்.
வலுத்தவன் வகுத்ததுதான் வாழ்க்கை நெறி என்றால் சட்டத்திட்டம், கடவுள் எல்லாம் எதற்காக. (இதே டாபிக்கை விலாவாரியாக உங்களோடு பேசணும். இப்போ நேரமில்லே. அப்புறம் பேசறேன்.)
சயன கோலத்தில் இருக்கும் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பார் என்றும், அவரைப் பார்க்க பிரதமர் வருவார் என்றும் பேசிக் கொண்டார்கள்.
மோடிஜீ , உங்களிடம் ஒரு பணிவான விண்ணப்பம். நீங்கள் வர்றப்ப உங்கள் பின்னோடு ஒட்டிக்கொண்டு வரும் கும்பலோடு கும்பலாக நானும் ஒட்டிக் கொண்டு வர ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தாருங்களேன். 
பெருமாளை நின்ற கோலத்தில் தரிசிக்க எனக்கும் ஆசை. (நான் தீவிர பெருமாள் பக்தை )
இப்போதெல்லாம்  ஆண்டவனால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை க் கூட ஆள்பவர்கள் நிறைவேற்றி விடுகிறார்கள். அந்த நம்பிக்கையில் கேட்கிறேன்.
என் ஆசை நிறைவேறுமா ? இந்தியப் பிரஜை என்கிற உரிமையில் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைக்க எனக்கு உரிமை உண்டுதானே? 
(Dear Viewers.. அட .. ஏதோ கேலி கிண்டலுக்காக இதை நான் பதிவு செய்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்... அது உங்கள் எண்ணம். அவ்வளவே )

Friday, July 12, 2019

Answer of Meaningful Two Words in One Word (26 - 30)

விடை  - 26  வாக் கிங்   - வாக்கிங் 
விடை - 27   விற்றவரை  - விற்ற வரை
விடை - 28  துணைவியார்    -  துணைவி யார் 
விடை- 29  அதிகாரம்  -  அதி காரம்
விடை - 30  ஓடுதளம்  - ஓடு தளம்

Friday, July 05, 2019

Meaningful Two Words in One Word Puzzles (26 - 30)

புதிர் - 26

"நடராஜன்    எங்கே போனான்?"
"அவன் பேரை இங்கிலீஷில் சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்குங்கிறது உனக்குத் தெரியுந்தானே ?"
"சரி - -   - - எங்கே ?"
" - - - -  போயிருக்கிறான் "

புதிர் - 27

"ஸார் .. யாரைத் தேடறீங்க ?"
"கொஞ்சம் முன்னாடி இங்கே வண்டியில் வைத்து பழம் - - - - - தேடறேன். இருபது ரூபாய்னு நினைச்சு ஏதோ ஞாபகத்தில் அவர்கிட்டே இரண்டாயிரம் ரூபாயை கொடுத்திட்டு மீதி சில்லரை  வாங்காமே போயிட்டேன். நினைவு வந்ததும் ஓடி வந்தேன்."
"ஓஹோ.. அதான் - - -    - - லாபம்னு நினைச்சு சீக்கிரமா கிளம்பிப் போயிட்டார் போலிருக்கு... தப்பு உன்மேலே. இனிமே அவர் இடத்தை மாத்திடுவார். தேடி அலைஞ்சு உன் நேரத்தை வீணாக்காமே .. போ .. போப்பா .."

புதிர் - 28

" தலைவர் தமிழ் அய்யாவின் மனைவி கொஞ்சம் தாமதமாக விழாவுக்கு வருவாங்களாம்.  "எனது - - - - -   வந்ததும் விழாமேடை பக்கமா அழைச்சிட்டு வந்துடுங்கன்னு தலைவர்  சொன்னார்."
"அவர் சொன்னால், செய்வதுதானே? அதில் உனக்கென்ன பிரச்னை?"
"விழாவுக்கு நூத்துக்கணக்கில் பெண்கள் வருவாங்க. தலைவரின்  - - -   - -  என்பதை நான் எப்படிக் கண்டுபிடிப்பது என்பதுதான் பிரச்னை " 



புதிர் - 29

"போலீஸ் ட்ரெயினிங் முடிஞ்சு நாளைக்கு எங்க அக்கா வீட்டுக்கு வர்றாங்க. சும்மாவே "இதைச் செய்; அதைச் செய். இங்கே நிற்காதே ; அங்கே நடக்காதே"னு ட்ரில் வாங்குவாங்க.. இப்போ ட்ரெயினிங் எடுத்த அனுபவத்தில் எங்கள் பென்டை நிமிர்த்திடுவாங்க. வீட்டில் அக்கா - - - - -  தான் தூள் பறக்கும்". 
"உன் வீட்டில் அப்படி. எங்கள் வீட்டில் அக்கா சமையல் கட்டில் நுழைஞ்சா போதும். எல்லா சாப்பாடு ஐட்டத்திலும் - -    - - -  தான் தூள் பறக்கும்"/


புதிர் - 30

இன்னும் ரெண்டு நாளில் குழந்தைகளுக்கான  ஓட்டப்பந்தயம் இருக்குது. - - - - -  எல்லாம் ரெடிதானே? பாதையில் எந்த பிரச்னையும் இல்லைதானே?"
" அட விமானமா  இறங்கி ஓடப்போகுது.  பிள்ளைங்கதானே. போன புயலில் மேற்கு தெரு ரொம்பவும் பாதிக்கப்பட்டு, சில வீடுகள்ல மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்ததுதானே. அங்கே மட்டும்  - -    - - - பூரா சிதறிக் கிடக்குது. இன்னிக்கு சுத்தம் பண்ணிடுவோம்."