Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 27, 2015

ப்ளீஸ் .... ப்ளீஸ்ங்க

ஹலோ பிரெண்ட்ஸ் / viewers ,
உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதனாலே என்னதான் தலையே போகிற வேலை இருந்தால்கூட, அதையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு என்னுடைய பேச்சை ரெண்டு நிமிஷம் காது கொடுத்து கேளுங்க. 
என்னோட மற்றொரு blog - ARUNA.S.SHANMUGAM.BLOGGER என்பதில் ON LINE CROSS WORD PUZZLES  வெளியாகும் விஷயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதை solve பண்ண நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அந்த ப்ளாக்கில் குழந்தைகளுக்கான 100 க்கும் மேற்பட்ட ON LINE PUZZLES வெளியாகி உள்ளது.
தற்போது  ON LINE CROSS WORD PUZZLES IN ENGLISH ( மொத்தம் 24 ) வெளியாகியுள்ளது.
அதிலுள்ள சிறப்பு என்னவென்றால் : 10 x  10 கட்டங்களில் அனைத்துக் கட்டங்களும் நிரம்பும் வகையில் புதிர் அமைந்துள்ளது.  முதல்  புதிருக் கான பதில்கள் அனைத்தும் " A " என்ற வார்த்தையில்தான் தொடங்கும். இரண்டாவது புதிருக்கான பதில்கள் அனைத்தும் " B  " என்ற வார்த்தை யில் தான் தொடங்கும். இப்படியே A யிலிருந்து W வரையிலான புதிர்கள் வெளியாகியுள்ளது. " X " என்ற வார்த்தையில் அமைந்த புதிரை  நான் compose செய்துகொண்டிருந்த போது எங்கள் வீட்டுக்கு வந்த நண்பர், "உங்க புதிர்களை solve பண்ண நான் ட்ரை பண்ணுவேன். X Y Z என்ற எழுத்துக்களில் அமைந்த வார்த்தைகள் ரொம்பவும் கொஞ்சம். அதை வச்சு நீங்க எப்படி புதிர் எழுதுவீங்கனு நான் யோசனை பண்ணிட்டு இருந்தேன். good. நீங்க X -லும் புதிர் compose பண்ணிட்டீங்க. எனக்குத் தெரிஞ்சு  எல்லாக் கட்டமும் FILL  ஆகிறபடி english magazine ல் கூட யாரும் புதிர் எழுதி நான் பார்த்ததில்லை. எனக்கு தெரிஞ்ச வரையில்    இங்கிலீஷ் காரன் கூட இப்படியொரு முயற்சி பண்ணி இருக்க மாட்டான். நீங்க செஞ்சு காட்டிட் டீங்க.  உங்க முயற்சியை பாராட்டறேன் " என்றார்.
"முதல் புதிரை எழுத ஆரம்பிக்கும்போது X Y Z என்ற எழுத்துக்களில் புதிர் அமைக்க முடியுமா என்று ரொம்பவும் யோசிச்சேன். சரி .. வார்த்தைகள் கிடைக்காட்டா 3 எழுத்துக்களையும் ஒரே புதிரில் கொண்டு வந்திடலாம் னு decide பண்ணினேன். thanks to google. எனக்கு வார்த்தைகள் கிடைத்தது. இப்போது " Z " வரையிலானா புதிர்களை one hour ல் ரெடி பண்ணிடுவேன்" என்றேன்.
ஏற்கனவே தமிழில் நான் நிறைய குறுக்கெழுத்துப் புதிர்களை இதே ப்ளாக்கில்   பதிவு செய்திருக்கிறேன். ஆனால் அதை on-line ல் பார்வை யாளர்கள் சால்வ் பண்ணும் விதத்தில் என்னால் அமைக்க முடிய வில்லை. முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது. அது மட்டும் நான் எதிர்பார்க்கிற விதத்தில் அமைந்து விட்டால்  100க்கும் மேற்பட்ட தமிழ்  குறுக்கெழுத்துப் புதிர்களை உங்களுக்கு தருவேன்.
எனது வெகுநாள் சந்தேகம் : அனைத்துக் கட்டங்களும் நிரம்பும் வகையில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட subject ல் அமைந்த புதிர்களை இதற்க்கு முன்பாக யாராவது செய்து முடித்து இருக்கிறார்களா என்பதுதான். 
(அப்படி அமைப்பது கடினம் என்பது புதிர் எழுதும் பழக்கம் உள்ளவர் களுக்கு நன்கு தெரிந்திருக்கும். பத்திரிக்கைகளில் தற்போது வெளி யாகும் புதிர்களில்  சில கட்டங்களுக்கு வார்த்தை அமையா விட்டால் அந்த கட்டத்தில் கறுப்பு கலர் கொடுத்து விடுவது வழக்கம்.)
நண்பர் கடைசியாக சொன்ன வரிகள் என்னை சிந்திக்க வைத்தது. (எனக்குத் தெரிஞ்சு  எல்லாக் கட்டமும் FILL  ஆகிறபடி english magazine ல் கூட யாரும் புதிர் எழுதி நான் பார்த்ததில்லை.  எனக்கு தெரிஞ்ச வரை இங்கிலீஷ்காரன் கூட இப்படியொரு முயற்சி பண்ணி இருக்க மாட்டான் . நீங்க செஞ்சு காட்டிட்டீங்க. ) இந்தமாதிரி முயற்சியை இதற்க்கு முன்பாக யாராவது செய்திருக்கிறார்களா ? அப்படிஎன்றால் அது குறித்த விவரம் உங்களுக்குத் தெரியுமா  ? - இதை மட்டும் என்னுடைய பார்வைக்குக் கொண்டு வந்தால் போதும். 
இதை தெரிஞ்சு என்ன செய்யப் போறேன்னு கேட்கிறீங்களா ? என்னைத் தவிர வேறு யாரும் இதற்க்கு முன்பு செய்ததில்லை என்பது எனக்குத் தெரிய வந்தால்  ..... வந்தால் .... வந்தால் ....
திருவிளையாடல் படத்தில் T S பாலையா சொல்வாரே ... "என்னுடைய பாட்டுக்கு எதிர் பாட்டு பாட ஆள் இல்லை என்றால் அதன் பிறகு இந்த பாண்டிய நாடு எனக்கு அடிமை. அதன்பிறகு இங்கு யாரும் வாயைத் திறந்து பாடக் கூடாது " என்பாரே, அதே போல " நான் அமைத்த புதிர்களைப் போல  ஒரு முயற்சியை  இதற்க்கு முன்பாக இங்கிலீஷ் காரங்க கூட செய்திருக்கவில்லை யென்றால்,   இங்கிலீஷ்   பேசும், இங்கிலீஷ்  மொழியை தாய்மொழியாகக் கொண்ட அத்தனை பேரும் இனி மேல் எனக்கு அடிமை. அவர்கள் யாரும் இனிமேல் பேனா எடுத்து எழுதக் கூடாது" என்று சொல்வேன். எனக்கு முன்பாக சில முன்னோடிகள் இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வந்தால் அவர்கள் பாதம் தொட்டு வணங்கி அவர்கள் ஆசீர்வாதம் கோருவேன். (ஏதோ நம்மாலே முடிஞ்சது அவ்வளவுதானே  ?!)
விவரம் தெரிந்தவர்கள் arunasshanmugam@gmail.com க்கு தெரிவிக்கலாம். 
இந்த விஷயத்தை எந்த அளவுக்கு share பண்ண முடியுமோ அந்த அளவுக்கு எனக்காக செய்யுங்கள். 

Friday, September 25, 2015

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 08

                                               
அச்சுப்பிச்சுஅப்புமணி !
வெள்ளரிக்காய் பறிக்க அப்புமணி போனதும், "இப்போ கேளுங்க சாமி. சின்ன மொதலாளி பத்தி ஏதோ கேட்க வந்தீகளே?" என்று கேட்டான் சாமிக்கண்ணு .
"இந்தப் பையன் மனவளர்ச்சி இல்லாத பையனா ?" என்று கேட்டார் அதிகாரி.
"படிச்ச உங்களுக்கே அந்தப் பையனை சரியா எடை போட்டுப் பார்க்க முடியலைங்கிறப்போ, படிப்பறிவில்லாத நான்    என்னத்தய்யா  சொல்ல   முடியும் ?"
"கரெக்ட் .. பையனோட பேரண்ட்ஸ் ... ஐ மீன் ... பையனோட அப்பா அம்மா என்ன பண்றாங்க ?"
"அது பெரிய கொடுமை சாமி.  இந்தப் புள்ளையோட அப்பா ... பெரிய மொதலாளி நெல்லு வியாபார விஷயமா வெளியூர் போனாக .. அப்போ இந்தப் புள்ளை, மொதலாளி அம்மா வயித்திலே மூணு மாசக் குழந்தையா இருந்தாக.வருஷம் பத்தாகுது ... போனவக திரும்பி வரவே இல்லை .. அவகளப் பத்தி எந்த தகவலும் இல்லே "
"அவருக்கு வேறே எந்த பொண்ணோடாவது பழக்கம் இருந்து, கல்யாணம் பண்ணிட்டு அங்கேயே செட்டில் ஆயிட்டாரா ?"
"இல்லே சாமி. தங்கமான மனுஷன் ... குணத்திலே ராமச்சந்திர பிரபு ... எந்தப் பொம்பளையையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டாக ..தேடாத இடம் கிடையாது. எங்காவது இருக்காகளா ... இல்லாட்டி இல்லையா என்கிறதே தெரியலே சாமி. நிச்சயம் ஒருநாள் வருவாகன்னு மொதலாளி அம்மா நம்புதாக."
"போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்தீங்களா ?"
"எல்லாம் செஞ்சோம். எல்லா தமிழ் பேப்பர்லயும் விளம்பரம் குடுத்தோம். எந்தத் துப்பும் கிடைக்கலே."
அங்கிருந்த சிறு அறையில், சுவரில் மாட்டியிருந்த ஒரு போட்டோவைக் கொண்டு வந்து  அதிகாரியிடம்  கொடுத்த சாமிக்கண்ணு, "இவகதான் மொதலாளியம்மா ... இந்தப் புள்ளையோட அம்மா" என்றான் 
போட்டோவை உற்றுப் பார்த்த அதிகாரி "இவங்களைப் பார்த்த வயதான வங்களா ... ஐ மீன் ... நடுத்தர வயசு தாண்டினவங்க மாதிரி தெரியுது " என்றார். 
"மொதலாளியம்மாவோட நாப்பத்தி ரெண்டாவது வயசுலே பிறந்தவக இந்தப் புள்ளை. கல்யாணமாகி இருபது  வருசத்துக்கு மேலேயும் குழந்தை பிறக்காமே, ஒவ்வொரு கோவிலா சுத்தி வந்து தவமா தவம் இருந்து இந்தப் புள்ளையைப் பெத்தாக.  ஆனா இன்னிக்கு வரை இந்தப் புள்ளை அப்பன் முகத்தைப் பார்த்ததில்லே "
"அப்பாவைப் பத்தி இந்தப் பையன் கேட்டதில்லையா ?"
"கேட்பாக .. அங்கே போயிருக்காக... இங்கே போயிருக்காக .. வெளிநாடு போயிருக்காகனு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதை சொல்லுவாக எங்க மொதலாளி அம்மா. அந்த மாதிரி கதைகளைக் கேட்டுக்கேட்டு இந்தப் புள்ளைக்கு வெறுத்துப் போச்சு போலிருக்குது.  இப்போவெல்லாம் இந்தப் புள்ளை அப்பாவைப் பத்திக் கேட்கிறதே இல்லை. அந்த அம்மா தங்கமான மனுஷி . ஊர்லே நல்லது கெட்டது எது நடந்தாலும் முன்னே நின்னு உதவி பண்ணுவாக . அதனாலே ஊர்க்காரங்க எல்லாருக்கும் அவக மேலே ரொம்பவும் மருவாதி உண்டு. அதனாலே அவக யாரும் காணாமே போன பெரிய மொதலாளியைப்  பத்தி இந்தப் புள்ளைகிட்டே எதுவும் பேச மாட்டாங்க  "
"ஒருவேளை தன்னோட புருஷன் காணாமல் போன மன அதிர்ச்சி அந்த அம்மாவைப் பாதிச்சிருக்கலாம் . அந்தப் பாதிப்பால் கூட கருவில் இருந்த இந்தப் பையன் இப்படியொரு ரெண்டுங் கெட்டானாக உருவாகி இருக்கலாம் " என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அதிகாரி, "யோவ் .. 501 .. நீ என்ன, உட்கார்ந்து கதையா கேட்கிறே ? எங்காவது சைக்கிள் கிடைக்குமான்னு பாரு. போ .. போய் மெக்கானிக்கை கூட்டிட்டு வா " என்றார். 
"நீங்க சொல்றதுக்காகத்தான் காத்திட்டு இருந்தேன். இதோ இப்பவே போய் மெக்கானிக்கை கையோடு கூட்டிட்டு வர்றேன் " என்று கிளம்பிப் போனார் 501.
சிறிது நேரம் யோசனையில் இருந்த சாமிக்கண்ணு, " சில சமயம் இந்தப் புள்ளை பேசறதப் பார்த்தா நமக்கே ஆச்சரியமா இருக்கும். அவ்வளவு தெள்ளத் தெளிவா பேசுவாக.  இவகள பைத்தியம்னு சொன்னால், அதைக் கேட்கிறவங்க நம்மள முட்டாள்னு சொல்லுவாங்க ..அந்த அளவுக்கு விவரமா சின்ன மொதலாளி பேசுவாக " என்றான்.
கை கொள்ளாத அளவுக்கு வெள்ளரிக்காயை சுமந்து கொண்டு வந்த அப்புமணியிடம், "என்ன ... தத்துப் பித்து ... இவ்வளவு காய் எதுக்கு ?" என்று கேட்டார் அதிகாரி. 
"நீங்க சின்ன போலீஸ். உங்களுக்கு சின்ன தொப்பை. கொஞ்சம் சாப்பிட்டா போதும்.  501 பெரிய போலீஸ். 501 க்கு பெரிய தொப்பை ... அதான் நிறைய கொண்டு வந்தேன்.  என்ன இது .. ரின் மட்டும் இருக்குது . 501 எங்கே ?"என்று கேட்டான் அப்புமணி .
இதைக் கேட்டு சிரித்த அதிகாரி, "அவர் மெக்கானிக்கைக் கூட்டிட்டு வரப் போயிருக்கிறார். காயைக் கொடு ... நாம சாப்பிடலாம் ... தத்துப் பித்து .. நீ எங்க வீட்டுக்கு வர்றியா? அங்கே உன்னோட விளையாட ஒரு குட்டி தங்கச்சி இருக்கிறா " என்றார்.
"ஆங் .... ஆசை தோசை அப்பளம் வடை ...நான் எங்க அம்மாவை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டேன். நீ என்ன பிள்ளை பிடிக்கிறவனா ? போலீஸ் டிரெஸ்சில்  வந்திருக்கியா .. எங்க ஊர் தலையாரிகிட்டே உன்னைப் பத்தி சொல்லட்டுமா  " என்று அப்புமணி கேட்டான்.
"இப்போ இவகளப் பத்தி நீங்க என்ன நினைக்கீக ?" என்று சாமிக்கண்ணு கேட்க பதிலேதும் சொல்லாமல் சிரித்தார் அதிகாரி. அப்போது மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார் 501
---------------------------------- தொடரும் ---------------------- 

அன்றொரு நாள் ....

கீழே வருவது face book நண்பருக்கு நான் கொடுத்த comment . அது உங்கள் பார்வைக்கும் :
MGR நடித்த ( பழைய ) படங்களில் பாடல்கள் அத்தனையும் அருமையாக இருக்கும். சமுதாயத்தின் ஏற்ற தாழ்வுகள் பாடல்களில் விமரிசிக்கப் படும். "கேளம்மா சின்னப் பொண்ணு கேளு " என்ற பாடலில் வரும் "ஏழை மனம் கோபப் பட்டால் என்னென்னவோ நடக்கும் " என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நடிப்பில் நம்முடைய சிவாஜியை மிஞ்ச ஆள் கிடையாது.emotional song அவருடைய படங்களில் அதிகம் இருக்கும். MGR, சிவாஜி  என்ற இந்த இரண்டு துருவங்கள் திரை உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருந்த ஜெமினியை மிகவும் பாராட்ட வேண்டும். இவர்கள் இருவரின் படங்களுக்கு ஈடு கொடுத்து ஜெமினி நடிப்பில் வெளியான படங்களும் வெற்றி நடை போட்டது. MGR, சிவாஜிக்கென்று தனியாக ரசிகர்கள் இருந்த கால கட்டத்தில் இவர்கள் இருவரின் ரசிகர்களும் ஜெமினி கணேஷின் படங்களை ரசித்தார்கள். அவர் நடித்த படங்களில் இடம் பெற்ற "காலங்களில் அவள் வசந்தம் ", " சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ " , "நிலவே என்னிடம் நெருங்காதே " போன்ற பாடல்கள் காலத்துக்கும் அழியாதவை. A.M RAJA, P B  ஸ்ரீநிவாஸ் -இவர்கள் இருவரின் குரலும் ஜெமினிக்கு ரொம்பவும் suit ஆகும்.
MGR, சிவாஜி, இருவரையுமே அவர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.ஜெமினியை பார்க்கவில்லை என்ற குறை இருந்தது. எனது உறவினர் ஒருவரை G G HOSPITAL ல் சேர்த்திருந்தார்கள். அவரைப் பார்க்க சென்ற நானும் எனது சகோதரியும்   அந்த campus உள்ளே நுழைந்து விட்டோம். ஆனால் கிளினிக் உள்ளே போக வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். அங்குள்ள பங்களாவில் ஒருவர் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து வந்து என்னவென்று விசாரித்தார். நாங்கள் விஷயத்தை சொன்னதும், "இது வீடும்மா . ஆஸ்பத்திரிக்கு பாதை அங்கே இருக்கிறது. இப்போ நீங்க இந்தப் பக்கம் வந்திட்டதாலே இந்த gate வழியாக போயிடுங்க. இனிமே வரும்போது அந்தப் பாதை வழியாக வாருங்கள்" என்று சொல்லி விட்டுப் போனார். சரி என்று சொல்லிவிட்டு அந்த இடத்தைக் கடந்து வந்ததும், எனது சகோதரி  " ஏய் ... அவர் ஜெமினி கணேஷ்.  G G hospital  கமலா செல்வராஜோடது . அவங்க இவர் பொண்ணு தானே . இது ஜெமினியே தான்  " என்றாள். அதைக் கேட்டதும் மீண்டும் ஓடிப்போய் அவரிடம் பேசும் ஆசை இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று போக விடாமல் தடுத்தது. அந்த சந்திப்பு முடிந்த சில நாட்களில் அவ்வை ஷண்முகி படம் வெளியானது. 
ஆனால் எனக்கு ஜெமினியை பிடிக்காது. பிறகு என்னங்க, எந்த நேரமும் சரோஜாதேவியை ஏமாற்றுவதையும் அழவைத்து வேடிக்கை பார்ப்பதையும் வாடிக்கையாக வைத்திருந்தால் யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?  (கல்யாண பரிசு, தாமரை நெஞ்சம் , ஆடிப் பெருக்கு என்று நீள பட்டியல் போடலாம். ) எனக்கு சரோஜாதேவி என்றால் உயிர். ஆனால் நான் அவரை நேரில் பார்த்ததில்லை. சக்தி விகடன் மூலமாக திரு.இறையன்பு I A S அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முடிந்த பின், சரோஜாதேவியை சக்தி விகடனுக்காக சந்திக்கும் எண்ணம் இருந்தால் அதில் எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்லி வைத்தேன். 
ஸ்கூலில் படிக்கிற காலத்தில், ஒருநாள்  "நீங்க எல்லாரும் என்னவாக வரணும்னு ஆசைப் படறீங்க ?ஒவ்வொருத்தரா சொல்லுங்க " என்று டீச்சர் சொல்ல, சக தோழி ஒருத்தி ,"டீச்சர் .. இவ சரோஜா தேவி வீட்டுக்கு வேலைக்காரியா போகணும்னு சொல்வா .. அப்பத்தான் அவங்க வீட்டிலிருந்துகிட்டு  அவளை தினமும் பார்க்க முடியுமாம். எங்ககிட்டே தினமும் இதைத்தான் சொல்லுவா" என்று சொல்ல, டீச்சர் பிரமித்துப் போய்விட்டார்கள் . "அப்படியா ?" என்று என்னிடம் கேட்க  "ஆமாம் " என்ற  நான் வெட்கத்தில் நெளிந்தேன்.
ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில்  என்னுடைய தோழி ஒருத்தி அவளுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் " சரோஜாதேவி யோட பழைய படம் ஒண்ணு இருக்குது. நீ இத செஞ்சு தந்தால்தான் அதை நான் உனக்குக் காட்டுவேன்  " என்று சொல்லி சொல்லியே தனது காரியத்தை சாதித்துக் கொள்வாள். எத்தனை முறை ஏமாந்தாலும் எனக்கு புத்தி வராது. அவ சொல்வதை செய்து கொடுப்பேன்.
அதிலும் ஒரு சந்தோசம் இருக்கத்தான் செய்தது.

Wednesday, September 23, 2015

"சிரியுங்க .. சிரியுங்க " என்பதன் தொடர்ச்சி !

சீரியல் பார்ப்பது பற்றி நான் சொல்லியிருந்த விஷயங்களைப் படித்த facebook நண்பர் தனது யோசனையை சொல்லி இருந்தார். அது :
"நீங்கள் சொல்லும் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. திருமதி.அருணா அவர்களே. இதிலும் நீங்கள் டிவியில் பாட்டை பார்த்துக்கொண்டு கேட்பதைவிட, அதே பாடலை ஆடியோவில் காது குளிர கண்ணைமூடிக்கொண்டு கேட்டுபாருங்கள், அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.."
அவருக்கு நான் சொல்லியிருந்த பதிலை உங்கள் பார்வைக்கும் பதிவு செய்கிறேன்.
நீங்கள் சொல்லும் யோசனையை நான் நிறையவே அனுபவித் திருக்கிறேன். பௌர்ணமி நாளில், மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டு, T M S, சுசிலா,  PB ஸ்ரீனிவாஸ்  இவர்கள்  பாடிய solo songs கேட்டபடி கண்ணை மூடி லயிப்பது பரமானந்தம். காதில் கேபிளை மாட்டிக்கொண்டோ டேப் ரெகார்டரை ஓட விட்டுக்கொண்டோ கேட்கும் பாடல்களை விட எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் பாடல்களைக் கேட்பது ரொம்பப் பிடிக்கும். அப்படி மிதந்து வரும்  பாடல்களில் ஒரு சில வரிகள் நம் காதில் விழும். சிலது விழாது. இருந்தாலும் மனம் அதில் லயிக்கும்.
விஸ்வநாதன் தனித்து இசை அமைத்த பாடல்களைக் காட்டிலும் ராமமூர்த்தி ஜோசப் கிருஷ்ணா ஹென்றி டேனியல் இந்த குரூப் இசை அமைத்த பாடல்கள் அருமையாக இருக்கும். இப்போது வரும் பாடல்களில் பாடுகிறவர்களின் குரலை விட இசைக் கருவிகளின் சத்தம்தான் காதைப் பதம் பார்க்கிறது.ஆனால் பழைய பாடல்களைக் கவனித்துக் கேளுங்கள். பாடல் வரும் போது பின்னணி இசை அப்படியே டௌன் ஆகி மெலிதாக ஒலிக்கும். பாடல் வரி நின்றதும்  பின்னணி இசை தூள் கிளப்பும். உதாரணத்துக்கு ஒரே ஒரு பாடல். "அழகே வா ... அருகே வா " என்ற ஆண்டவன் கட்டளை படப் பாடல். 
1966 - 69 வரையிலான கால கட்டத்தில் நான் திருச்செந்தூர் அடிக்கடி போய் இருக்கிறேன்.  இரவு  நேர பூஜை நடக்கும் போது TMS பாடிய முருகன் மீதான பக்திப் பாடல்கள் loud speakar ல் ஒலிபரப்பாகும். (அந்த பாடல் தொகுப்பை தோற்கடிக்கும் வகையில் தமிழில் இதுவரை எந்த பாடல் தொகுப்பும் வரவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்ராயம் ). கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு பாடல்களை கேட்டபடி கடல் அலையை ரசிப்பது அப்படியொரு அலாதி சுகம். "உள்ளம் உருகுதையா" என்ற பாடல் உருகாத மனதையும் உருக வைக்கும்.இரவு நேர இருளில் தண்ணீர் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளையாக பஞ்சு போன்ற ஒன்று ஓடி ஓடி வந்து கரையில் மோதி விட்டுப் போவது போல இருக்கும். இந்த மாதிரி சந்தோஷங்களை மலரும் நினைவுகளாக அசை  போட மட்டுமே முடிகிறது.

Tuesday, September 22, 2015

நேற்றைய தொடர்ச்சி.

"சிரியுங்க சிரியுங்க சிரிச்சுகிட்டே இருங்க" என்பதன் நேற்றைய தொடர்ச்சி. இந்த விஷயம் பத்தி நேற்றெல்லாம் யோசிச்சேன், இந்த பிரச்சினையை எப்படி சால்வ் பண்ணலாம் என்பது பற்றி.
டீவீயில் ஒளிபரப்பாகும் ஒரு சில நிகழ்ச்சிகளில் "நேயர்கள் யாரும் இதை செய்து பார்க்க முயற்சிக்க  வேண்டாம் " என்றொரு குறிப்பு வரும். இதே எச்சரிக்கையை ஒவ்வொரு டீவீ சீரியல் ஒளிபரப்பாகும்போதும் ஒளி பரப்பு செய்யலாமே. 

Monday, September 21, 2015

சிரியுங்க சிரியுங்க சிரிச்சு கிட்டே இருங்க .


மேலே உள்ளது facebook ல் நான் படித்த ஒரு விஷயம். இனி நீங்கள் படிக்கப் போவது எனது கருத்து.
அட, என்னங்க நீங்க இப்படி சொல்லிட்டீங்க ? 2013 ஏப்ரலுக்கு முன்புவரை சீரியல் பார்ப்பவர்களை கிண்டலடித்துக் கொண்டிருந்த ஆள் நான். உலகத்திலேயே மிக மோசமாக வீணடிக்கப் படுகிற நேரம் டீவீ சீரியல் பார்க்கிற நேரந்தான் என்று அட்வைஸ் பண்ணுவேன். ரிடயர் ஆன பிறகு (இப்போது) மாலை 7 மணிக்கு மேல் என்னுடைய பொழுது போக்கு சீரியல் பார்ப்பதுதான். பகலில் எந்த சீரியலும் பார்க்க மாட்டோம். ( பகல் வேளையில் ஜெயா மாக்ஸ் அல்லது முரசு சேனல் மட்டுந்தான் ஓடிக் கொண்டிருக்கும். அல்லது நியூஸ் பார்ப்போம்). யாரும் விரும்பி சீரியல் பார்ப்பதில்லை. அநேக வீடுகளில்  காலையில் வீட்டை விட்டுக்கிளம்பிய குழந்தைகளும் வேலை பார்ப்பவர்களும் வீடு வந்து சேர இரவு ஆகி விடுகிறது. வீட்டுக்கு வந்ததும் அவரவர் வேலையை முடித்து விட்டு தூங்கப் போய்விடுகிறார்கள்.பொழுது போகாமல் தூக்கம் வராமல் தவிக்கும் ஜென்மங்கள்தான் டீவீ சீரியல் பார்க்கிறார்கள் . ஒரு மனுஷன் கெட்டுப் போக என்னென்ன வழி உண்டோ அது அத்தனையும் நம்ம வீட்டுக்குள்ளே வந்து நமக்குப் பாடம் சொல்லித் தருகிறது சீரியல். பிறகு அதை ஏன் பார்க்கணும்னு கேட்கிறீங்களா? சும்மா கையைக்கட்டிக் கொண்டு மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டிருந்தால், நம்ம மனசு டீவீ சீரியலை விட கிரிமினல் தனமாக யோசிக்கிறது. இன்னொன்னு சொல்வேன். எல்லாருக்கும் கோபம் வரும். இருந்தாலும் சொல்றேன். சேனல்களில் ஒளிபரப்பப்படும் ரியல் காமெடி ஷோ சீரியல்தான். அதனால்தான் அதை நான் பார்க்கிறேன். சிரியுங்க சிரியுங்க சிரிச்சு கிட்டே இருங்க . நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

Friday, September 18, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 07

                                               
 அச்சுப்பிச்சு அப்புமணி !
போலீஸ் ஆபீசரும் மற்ற காவலர் களும் சிரிப்பதைக் கண்ட அப்புமணி "ஐய்யா, நான் உங்களையெல்லாம் சிரிக்க வச்சிட்டேன் " என்றான்.
சிரிப்பதை நிறுத்திய அதிகாரி " இந்தாப்பா ... தத்துப்பித்து ...." என்று சொல்ல , "தத்துப் பித்து இல்லே... அச்சுப்பிச்சு " என்று திருத்தினான் அப்பு மணி .
"ஆங் .... அச்சுப்பிச்சு ... நாங்க வந்த வண்டி ரிப்பேர்... பக்கத்திலே மெக்கானிக் யாராவது இருக்காங்களா ?" என்று கேட்டார்.
"பக்கத்திலே இல்லே.  தூரத்திலே ஒரு மெக்கானிக் ஷாப் இருக்குது " என்றான் .
"அடடா .. அவ்வளவு தூரம் வண்டியை எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்கிறது... இந்த ரூட்டில் எந்தவொரு வண்டியையும் காணோமே "
"எப்படிப் போறதுன்னு சொல்லிட்டு சும்மா நின்னா எப்பிடி ? நீங்க எல்லாரும் சேர்ந்து இதைத் தூக்கிட்டுப் போங்க "
"தூக்கிட்டுப் போறதா ?"
"இந்தக் காரு இவ்வளவுதூரம் உங்களை எல்லாம் உக்கார வச்சு சுகமா தூக்கிட்டு வந்துச்சுதானே ? அதுக்குக் கால் வலி வந்து அது நின்னுட்டுது. இப்ப அதை நீங்க கொஞ்ச தூரம் தூக்கிட்டுப் போனா கொறஞ்சா போயிடுவீங்க. நான் ஒரு பக்கம் தூக்குறேன். நீங்களும் சேர்ந்து தூக்குங்கோ " என்று அப்புமணி சொல்ல, "டேய் .. உதை வாங்கப் போறே " என்று 501 மிரட்ட, "கழுதைதான் உதைக்கும் " என்றான் அப்புமணி.
"இந்தாப்பா ... 501...சும்மாயிரு..  கிராமத்துப் பையன். சூதுவாது இல்லாமே வெகுளித் தனமா பேசறான். அதை ரசிக்கிறதை விட்டுட்டு அவன்கிட்டே உன் வீரத்தைக் காட்டறே" என்று காவலரை அடக்கி விட்டு, "தம்பி இங்கே குடிக்க தண்ணி கிடைக்குமா  ?" என்று கேட்டார் அதிகாரி.
"எங்க தோட்டத்திலே பெரிய கிணறு இருக்குது. தண்ணி குடிக்கலாம். இறங்கிக் குளிக்கலாம் ."
"முதலில் எனக்குக் குடிக்கத் தண்ணி வேணும் "
"வாங்க. அதோ அதுதான் எங்க தோட்டம்." என்று காட்டினான் அப்புமணி.
"அடேயப்பா ... எவ்வளவு  பெரிய தோட்டம் " அன்று அதிகாரி சொல்ல, அவர்களைத் தோட்டத்துக்குள் அழைத்துப் போனான் அப்புமணி.
இவர்களைக் கண்டதும் சாமிக் கண்ணு ஓடி வந்தான் .
"வாங்க சின்ன மொதலாளி ... போலீசோட வாரீகளே .... என்ன விஷயம் ?" என்று பரபரப்புடன் கேட்டான்.
"ஒண்ணுமில்லேப்பா .. குடிக்கத் தண்ணி கேட்டேன். பையன் இங்கே கூட்டிட்டு வந்தான் " என்று அதிகாரி சொன்னதும் .. நிதானமடைந்த சாமிக்கண்ணு  "வாங்கையா ... இதோ கயித்துக் கட்டில் இருக்குது . நீங்க உக்காருங்க. ஒரு அஞ்சே அஞ்சு நிமிஷத்தில் நான் போய் இளநீ வெட்டி எடுத்துட்டு வர்றேன்.  வாங்க ... வந்து உக்காருங்க " என்று உபசரித்தான் .
"அதெல்லாம் வேண்டாம்ப்பா ... தண்ணி மட்டும் போதும்."
"இவ்வளவு தொலைவு வந்துட்டு வெறும் தண்ணி மட்டுமா குடிச்சிட்டுப் போவீங்க" என்று சாமிக் கண்ணு சொல்லும்போது ," சாமி தாத்தா .. அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க .. நீங்க போய் இளநீ .. பழம் .. இன்னும் என்னென்ன இருக்கோ அதையெல்லாம் சாப்பிட எடுத்துட்டு வாங்க " என்றான்.
அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்த சாமிக்கண்ணு வேறொரு வேலையாளைக் கூப்பிட்டு , இளநீர் .. பழங்கள் எல்லாம் கொண்டு வர சொன்னான் .
"உன் பேரு என்னப்பா ?" என்று அதிகாரி கேட்க , "சாமிக்கண்ணு " என்று பணிவாக பதில் சொன்னான்  சாமிக்கண்ணு 
"இந்தப் பையன் யாருப்பா ?"
"ஏஞ்சாமி ... எதாச்சும் தப்பாப் பேசிட்டாகளா ? இல்லே எதாச்சும் தப்புத் தண்டா பண்ணிட்டாகளா ?" என்று பதட்டமாக கேட்டான் சாமிக்கண்ணு . 
"அதெல்லாம் இல்லே. இவன் பேச்சே ஒரு தினுசா இருக்கே. அதான் கேட்டேன்."
"சாமி.. இவகளப் பத்தி என்ன நினைக்கீக ?"
"இவனை முட்டாள்னும் நினைக்க முடியலே ... புத்திசாலின்னும் நினைக்க முடியலே  "
"அதான் ... அதான் சாமி ... இவகளோட பெரிய கொறை .."
"ஏய் ... சாமித் தாத்தா ... என்னைப் பத்தி இவங்ககிட்டே வத்தி வைக்கிறியா?" என்று அப்புமணி கேட்க,"அதெல்லாம்  இல்லே முதலாளி  .. நம்ம தோட்டத்திலே கிணத்தங்கரைப் பக்கம் நிறைய வெள்ளரிக்காய் காய்ச்சிருக்கு .. உங்களுக்கு வெள்ளரிக்காய் ரொம்பப் பிடிக்கும்தானே  ?" என்று சாமிக்கண்ணு கேட்க ,"ஆஹா ,,, வெள்ளரிக்காயா  ? இப்பவே போய் மேஞ்சிட்டு வர்றேன் " என்றபடி அங்கிருந்து ஓடினான் அப்புமணி.
------------------------------------------------------ தொடரும் -----------

Friday, September 11, 2015

குழந்தைகளுக்கான குறுந்தொடர் - 06

                                                   
      அச்சுப்பிச்சு அப்புமணி !
அன்று ஞாயிற்றுக் கிழமை . காலையிலேயே படுக்கையிலிருந்து எழும்பி விட்டான் அப்புமணி. 
"ஸ்கூல் போகிற நாளில் எட்டுமணி வரை இழுத்துப் போர்த்திட்டு தூங்கு. லீவு நாளில் சீக்கிரமே எழும்பிடு. இன்னிக்கு ஸார் எங்கே போறதா ப்ளான் போட்டிருக்கிறார் " என்று அம்மா கேட்க, " அம்மா. இன்னிக்கு நான் நம்ம தோட்டத்துக்குப் போகப் போறேன். அங்கே போய் விளையாடப் போறேன்  " என்றான்.
"அய்யய்யோ தனியா அவ்வளவு தூரம் போறதா ? வீட்டிலேயே விளையாடேன் கண்ணு "
"தோட்டத்துக்குப் போய் ரொம்ப நாளாச்சு. எனக்கு ஆசையா இருக்கும்மா " 
"பார்த்துப் பத்திரமா போயிட்டு வா. ஊர் உலக நிலவரம் ரொம்பவும் மோசமா இருக்குது . எங்கே பார்த்தாலும் வெட்டு குத்து, கடத்தல் கலவரம், குண்டு வெடிப்புன்னு... அப்பப்பா ... பேப்பர் படிக்கவே பயமா இருக்குது "
"அதான் பேப்பர் படிக்கக் கூடாதுங்கிறது. நான் படிக்கிறேனா பார்த்தியா ? ஏன் படிக்கணும். தேவையில்லாமே பயப்படணும் ?"
"அசடே... உங்கிட்டே வந்து என் பயத்தை சொல்றேனே . நான் ஒரு மண்டு . நீ பாடப் புத்தகத்தையே படிக்கிறதில்லே அப்புறம் எங்கே பேப்பர் படிக்கிறது ? சரி .. சரி .. சாப்பிட்டு விட்டு பத்திரமா போயிட்டு வா. மத்தியானம்  சாப்பிட கையில் ஏதாவது வச்சுக்கோ. உனக்கு என்ன பண்ணித் தரணும்னு சொல்லு "
"எதுவும் வேண்டாம். நான் அங்கே போய் இளநீர் குடிப்பேன். கொய்யாக்காய் சாப்பிடுவேன். அது போதும் "
"போகிற வழியில்தானே நம்ம வேலு வீடு இருக்குது. அவனை ஒரு நடை வந்து போக சொன்னேன்னு சொல்லு "
"அவனுக்குத் தான் ரெண்டு காலும் இருக்குதே. பிறகு ஏன் ஒரு நடை வர சொல்லணும்?"
"நீ சொல்லுடா ... அவனுக்குப் புரியும். டவுனுக்குப் போய் அவனை ரின் இல்லாட்டா 501 வாங்கிட்டு வர சொல்லணும் "
சிறிது நேரத்தில் தோட்டத்துக்குக் கிளம்பிப் போனான் அப்புமணி . போகிற வழியில் தோட்டத்துக்கு அருகில் ஒரு போலீஸ் ஜீப் நிற்கிறது. அருகில் ஒரு போலீஸ் அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிளும் நின்று கொண்டிருந்தார்கள்.
"ஏன்யா 501. கிளம்பும்போதே உனக்குப் படிச்சு படிச்சு சொன்னேன். வண்டி கண்டிஷனை செக் பண்ணிக்கோன்னு. இப்போ நடுவழியில் வண்டியை நிறுத்திட்டு என் நேரத்தை வேஸ்ட் பண்றே"
"செக் பண்ணினேன் ஸார் . ரோடு பள்ளமும் மேடுமா ரொம்ப மோசமா இருக்குது. இது மாட்டு வண்டி போற பாதை ஸார் .. நம்ம வண்டியாலே தாக்குப் பிடிக்க முடியலே "
"உன் ட்ரைவிங்கை விடவா மோசம் ? எதுக்கெடுத்தாலும் 501 ரூபாய் பந்தயம் கட்டுவியே. இப்போ கட்டு உன் பந்தயத்தை. நீ கட்டுற பந்தயத்தை வச்சு உன் பேரே 501ன்னு ஆகிப் போச்சு. போற போக்கைப் பார்த்தால் உன் பேரே மறந்து போயிடும் போலிருக்கு. இங்கே தோட்டம் துறவு அதிகம். நாட்டில் தீவிரவாதிங்க நடமாட்டம் அதிகமாகுது. இந்த மாதிரி இடங்கள் அவங்களுக்குப் புகலிடமா மாறிடும். அதனாலே போலீஸ் கண்காணிப்பு அதிகமா இருக்கணும்னு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துச்சு. நானே நேரில் வந்து விசிட் கொடுத்தால்தான் இங்கே உள்ள மத்த அதிகாரிங்க அலெர்ட் ஆக இருப்பாங்கனு முக்கியமான மீட்டிங்கை ஒத்தி வச்சிட்டு இங்கே வந்தால், எங்களை நடு ரோட்டில் கொண்டு வந்து நிறுத்திட்டே. தீவிரவாத கலாசாரம் ஓயிற வரை நமக்கு நேரத்துக்கு சோறு தண்ணி கிடையாது. நம்ம கஷ்டம் யாருக்குத் தெரியுது. பேப்பர் டீவீ யில் நம்மள தான் கிழி கிழின்னு கிழிக்கிறாங்க.அந்தக் கொடுமை போதாதுன்னு இப்போ ஜீப் டயர் வேறே பஞ்சர். 501 .. நீ.." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது அந்த வழியாக வரும் அப்புமணியை கவனிக்கிறார்.
"ஏய் ... தம்பி .. இங்கே வா " என்று அழைக்க, அவர் அருகில் வரும் அப்புமணி, "நான் தம்பி இல்லே. எனக்கு அண்ணன் கிடையாது. எங்க வீட்டில் நான் மட்டுந்தான். நான் அச்சுப்பிச்சு அப்புமணி  " என்கிறான்.
"என்னய்யா .. 501. அதென்ன அச்சுப்பிச்சு அப்புமணி? வேடிக்கையா இல்லே ?"
"ஓ .. எங்க அம்மா சொன்ன 501 இதுதானா ? அப்போ ரின் ? டவுனில் கிடைக்கும்னு அம்மா சொன்னாங்க. ஆனா 501 இங்கே இருக்கே." என்று தனக்குள் சொல்லிக் கொண்ட அப்புமணி,"நீங்கதான் ரின்னா?" என்று கேட்க, "டேய் .. அவர் பெரிய போலீஸ் அதிகாரி. மரியாதையா பேசு " என்று கான்ஸ்டபில் சொல்ல, "இவருக்கு இத்தினியூண்டு தொப்பை இருக்கு ? இவரா பெரிய அதிகாரி. பெரிய அதிகாரின்னா பெரிய தொப்பை இருக்கணும். நான் எத்தனை சினிமாவில் பார்த்திருக்கிறேன்.  501 உங்க ஒருத்தருக்குத் தான் பெரிய தொப்பை இருக்குது. நீங்கதான் பெரிய அதிகாரி " என்றான்.
"என்னய்யா 501. பையன் சொன்னதைக் கேட்டியா? உடம்பை குறைக்க என்னிக்காவது முயற்சி பண்ணி இருக்கியா ? வஞ்சனையே இல்லாமே உடம்பை வளர்த்து வச்சிருக்கே. ஓடிப்போய் திருட்டுப் பசங்களைப் பிடிக்கிற மாதிரி உடம்பை ஸ்லிம்மாவா வச்சிருக்கீங்க ? அவனவன் விதி முடிஞ்சு அவனாவே உங்க கையில் வந்து மாட்டினால்தான் உண்டு.  சரி தம்பி .. உன் பேர் என்னவோ சொன்னியே ... ஏதோ தத்துப்பித்துன்னு " என்று சொல்லும்போதே, " என் பேரைக்கூட ஒழுங்கா சொல்லத் தெரியலே. நீங்க இவங்களைத் திட்டறீங்க ... கருமம் .. கருமம் .. " என்று அப்புமணி சொல்ல கான்ஸ்டபில் இருவரும் ரகசியமாக நமட்டு சிரிப்பு சிரிக்க, அதைப் பார்த்த அதிகாரி வாய் விட்டு மனம் விட்டு சிரித்தார்.
--------------------------------------------------- தொடரும் ........................

Saturday, September 05, 2015

ANSWER OF TAMIL WORD PUZZLES - 016 - 20

வார்த்தை விளையாட்டுப் புதிரின் விடை : 016

போ க வா 
த ரா சு 
க ழ னி ரா ணு வ 
வா னி லை சு வ டு 

அ தீ த 
தீ ங் கு 
த கு தி 
பா வ மா 
ம த கு 
வ ர ம் த ள் ளி 
மா ம் பூ கு ளி கை 

1 தள்ளி  2 தகுதி  3 ராணுவ  4 வரம்  5  கழனி  6  பாவமா 7 வானிலை 
8 மதகு  9 சுவடு   10  தீங்கு   11 அதீத   12  தராசு   13போகவா   14  மாம்பூ  
15 குளிகை 


விடை : 017

உ த வி 
ம த கு 
த ர வா த பா ல் 
வி வா தி கு ல் லா 

போ கா து 
கா ல ணி 
து ணி வு 
பு து சு 
பா து கை 
து ய் ய து ணி வே 
சு ய ம் கை வே லை 

1 குல்லா  2 சுயம்  3 துணிவு  4 துணிவே  5  விவாதி  6  காலணி  7 தரவா 
8 கைவேலை  9 மதகு  10  புதுசு  11 துய்ய   12  தபால்   13போகாது  14  உதவி   15 பாது கை 


விடை : 018

ம கி மை 
சே வ கி 
கி ழ வி வ ண் ண 
மை வி ழி கி ண று 

சு வா சி 
வா ன ர 
சி ர ம் 
நி ய தி 
அ லா தி 
ய வ ன லா வ ணி 
தி ன ம் தி ணி வு 

1 யவன  2 திணிவு   3 வானர  4 கிழவி  5  கிணறு   6  மைவிழி  7 நியதி  
8 வண்ண   9 அலாதி  10  சிரம்  11  சேவகி  12 சுவாசி 13 தினம்  14  மகிமை   
15 லாவணி  

 விடை : 019

ந ம து 
உ த வி 
ம க ள் த ட் டு 
து ள் ளு வி டு தி 

ந வ மி 
வ ர கு 
மி கு தி 
அ மோ க 
அ வ தி 
மோ ச டி வ ரு ண 
க டி ன தி ண று 

1 வரகு  2 அவதி  3 விடுதி  4 மோசடி  5  துள்ளு  6  உதவி  7 கடின   8 மிகுதி    
9 நமது   10  திணறு   11  வருண   12 மகள்  13 தட்டு   14  அமோக  15 நவமி  

 விடை : 020  

க மு கு 
அ க தி 
மு ட் டை க ரு மி 
கு டை வு தி மி ர் 

சீ ரா க 
ரா ட் டை 
க டை சி 
பே ரா சை 
சி வி கை 
ரா ணு வ வி டி யா 
சை வ ம் கை யா ல் 

1 கடைசி  2 குடைவு   3 திமிர்  4 சைவம்   5  விடியா   6  கருமி  7 ராணுவ   
8 சிவிகை   9 முட்டை  10  ராட்டை  11  பேராசை  12 கையால்  13 சீராக  
14  அகதி  15 கமுகு    

Friday, September 04, 2015

குழந்தைகளுக்கான குறுந் தொடர் - 05

                                                 
அச்சுப்பிச்சு அப்புமணி !
மற்றவர்கள் என்ன கேலி பண்ணினாலும் சரி; அதை அப்படியே அம்மாவிடம் சொல்வது அப்புமணியின் வழக்கம். இரும்புத் தூணில் முட்டிக்கொள்கிறேன் என்று டீச்சர் சொல்ல அதைக் கேட்டு வகுப்பில் இருந்த பிள்ளைகள் கைதட்டி சிரித்ததை அம்மாவிடம் சொன்னான் அப்புமணி. அதைக் கேட்டு மௌனமாக அழுதாள் அம்மா.
"ஏம்மா அழறீங்க ?" என்று பதறிப் போய்க் கேட்டான் அப்புமணி. 
"நான் அழுதால் உனக்கென்னடா? உன்னைப் பார்த்துதான் நாலுபேர் கை தட்டி சிரிக்கிறாங்களே ! அது போதாதா?" என்று கேட்டாள் அம்மா.
"இனிமே பதிலுக்கு நானும் அவங்களைப் பார்த்து சிரிக்கிறேன்" என்று ரொம்ப  சந்தோசமாக அப்புமணி சொல்ல, அதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டாள் அம்மா. அதைப் பார்த்ததும் அப்புமணியின் முகம் வாடிப் போனது.
அவன் முகவாட்டத்தைப் போக்க நினைத்த அம்மா "ஏண்டா அப்புமணி, ராமுவோட மாமா குழந்தைக்கு பிறந்த நாள். அவங்களோடு சேர்ந்து அவங்க மாமா வீட்டுக்கு நீயும் போகப் போறதா சொன்னியே. கிளம்பாமே என்னென்னவோ கதை பேசிட்டு நிக்கிறே  ?" என்று கேட்டாள் .
"இதோ கிளம்பிட்டேன் " என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் அப்புமணி.
"அங்கே போய் அசடு மாதிரி எதையாது உளறிக்கிட்டு இருக்காமே ரொம்ப சமர்த்தா இருக்கணும் . ராமு சோமு எப்படிப் பேசறாங்க, பழகுறாங்கன்னு பாரு. அந்த வீட்டில் அவங்களா ஏதாவது குடுத்தால் அதை சாப்பிடு .  நீயாக எதையும் கேட்டு வாங்கக் கூடாது " என்று அம்மா சொல்ல "சரி" என்று தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் அப்புமணி.
ராமுவின் மாமா வீடு ....
"டேய் குட்டிப் பையா, பிறந்தநாள் வாழ்த்துக்கள் .. நூறு வருஷம் நல்லா வாழணும் " என்று ராமு சொல்ல , "அடடே ... இந்த ராமுவிற்கு இருக்கிற சமர்த்தைப் பாருங்களேன் ... பெரிய மனுஷன் போல ஆசீர்வாதம் பண்றான்" என்று அருகில் நின்றிருந்தவர்களிடம் ராமுவின் மாமா சொல்ல மற்றவர்கள் அதைக் கேட்டு சந்தோசப் பட்டார்கள்.
"ஆஹா அப்புமணி வந்திருக்கிறான் ... உங்க அம்மா வரலியா தம்பி ?" என்று ராமுவின் மாமா கேட்க, "ராமு  சோமு   என்னை மட்டுந்தான் கூப்பிட்டாங்க. எங்க அம்மாவை வர சொல்லலே " என்றான் அப்புமணி.
"அடடே ... அப்படியா ? குழந்தையோட அடுத்து பிறந்தநாளுக்கு உங்க அம்மாவை மறக்காமே கூட்டிட்டு வரணும். நான் இப்பவே சொல்லி வச்சிட்டேன்" என்ற மாமா, "எல்லாரையும் சாப்பிட அழைச்சிட்டுப் போ ராமு. என்னென்ன கேட்கிறாங்களோ அதை எல்லாம் குடு " என்றார்.
"எதையும் கேட்டு வாங்கி சாப்பிட கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க  " என்றான் அப்புமணி 
"ஓஹோஹோ ... அப்படியா ? ராமு சோமு, நீங்க ரெண்டுபேரும் அப்புமணியை நல்லா கவனிக்கணும் ... போங்க ... போய் சாப்பிடுங்க " என்று மாமா சொல்ல , சாப்பிடும் இடத்துக்கு எல்லோரும் சென்றார்கள்.
அப்புமணியின் இலையில் பெரிய லட்டு ஒன்றை வைத்தான் ராமு.
"இந்த லட்டு, நல்லா ... குண்டா.... பாப்பா கன்னம் மாதிரியே இருக்குது " என்று அப்புமணி சொல்ல, "டேய் பாருடா இவனை .. எல்லாரும் பாப்பாவோட கன்னம் லட்டு மாதிரி இருக்குன்னு சொல்வாங்க . இவன் என்னடான்னா லட்டு, பாப்பா கன்னம் மாதிரி இருக்குன்னு சொல்றான் " என்று குரல் கொடுத்தான் சாப்பிடும் இடத்தில் இருந்த வரதன்.
"அப்படியெல்லாம் சொல்றதாலேதான் அவன் அச்சுப்பிச்சு அப்புமணி "   என்று மற்ற நண்பர்கள் சொல்ல, அங்கு ஒரே சிரிப்பு மழைதான் .
"டேய் .. பேனை ஆப் பண்ணுடா .. இலை பறக்குது " என்று பரிமாறிக் கொண்டிருந்த சோமு கத்த , " காத்தை நிறுத்திட்டா பறக்காதா ?" என்று கேட்டான் அப்புமணி.
"ஆமாம்....இதோ பாரு .. உன் சந்தேகத்தை எல்லாம் ஸ்கூலில் வச்சுக் கேளு.  இப்போ நீ இலையில் புகுந்து விளையாடு " என்று ராமு சொல்ல, " புகுந்து விளையாட இது என்ன மைதானமா  ?" என்று அப்புமணி  கேட்க மீண்டும் ஒரே சிரிப்பு சத்தம் தான்.
சிறிது நேரத்துக்குப் பின் தலை தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்தான் அப்புமணி 
"அம்மா ... தண்ணி... ஐயோ ... சீக்கிரம் தண்ணி கொடேன் " என்று கத்தினான்  
"ஏண்டா இப்படி ஓடி வர்றே ?"
"ஐயோ முதலில் தண்ணியை குடுத்துட்டு பிறகு பேசும்மா "
ஓடிப் போய் டம்ப்ளரில் தண்ணீர் கொண்டு வந்த அம்மா "இந்தா குடி " என்றாள். 
மடமடவென்று தண்ணீரைக் காலி செய்த அப்புமணி "அப்பாடா " என்று பெருமூச்சு விட்டபடி அம்மாவைப் பார்த்தான் .
"ராமுவோட மாமா வீட்டுக்குத் தானே நீ போனே ! இப்போ எங்கிருந்து இப்படி ஓடி வர்றே ?"
"தண்ணி குடிக்கத்தான் ஓடி வந்தேன் "
"அய்யய்யோ ... நீ எதுவும் சாப்பிடாமே பட்டினியா இருக்கிறியா ?" என்று பதறிப் போய்க் கேட்டாள் அம்மா.
அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்ட அப்புமணி " சாப்பாடு இது வரை இருக்குது " என்று தன்னுடைய கழுத்தில் கை வைத்துக் காட்டினான் .
"தண்ணி குடிச்சா நிறைய சாப்பிட முடியாதுன்னு நினைச்சு நீ அங்கே தண்ணி குடிக்கலியா ?"
"இல்லேம்மா... என் இலையில் அவங்க தண்ணி வைக்கலே "
"பரிமாறுற அவசரத்தில் மறந்திருப்பாங்க .. நீ கேட்டு வாங்கறது தானே  ?" 
"அம்மா ... நான் கிளம்பறப்போ நீ என்ன சொன்னே ? எதையும் கேட்டு வாங்கி சாப்பிடக்  கூடாதுன்னு நீதானே சொன்னே ! அதான் தண்ணி குடிக்க வீட்டுக்கு ஒரே ஓட்டமா ஓடி வந்தேன். இப்போ தண்ணிய ஏன் கேட்டு வாங்கலேன்னு  கேட்கிறே ! நீ ரொம்ப போர்ம்மா"என்றான் அப்புமணி.
இதைக் கேட்டதும் தலையில் கைவைத்தபடி சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்து விட்டாள் அம்மா .
--------------------------------------------------------------------------------- தொடரும்