Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, September 23, 2015

"சிரியுங்க .. சிரியுங்க " என்பதன் தொடர்ச்சி !

சீரியல் பார்ப்பது பற்றி நான் சொல்லியிருந்த விஷயங்களைப் படித்த facebook நண்பர் தனது யோசனையை சொல்லி இருந்தார். அது :
"நீங்கள் சொல்லும் அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. திருமதி.அருணா அவர்களே. இதிலும் நீங்கள் டிவியில் பாட்டை பார்த்துக்கொண்டு கேட்பதைவிட, அதே பாடலை ஆடியோவில் காது குளிர கண்ணைமூடிக்கொண்டு கேட்டுபாருங்கள், அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.."
அவருக்கு நான் சொல்லியிருந்த பதிலை உங்கள் பார்வைக்கும் பதிவு செய்கிறேன்.
நீங்கள் சொல்லும் யோசனையை நான் நிறையவே அனுபவித் திருக்கிறேன். பௌர்ணமி நாளில், மொட்டை மாடியில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டு, T M S, சுசிலா,  PB ஸ்ரீனிவாஸ்  இவர்கள்  பாடிய solo songs கேட்டபடி கண்ணை மூடி லயிப்பது பரமானந்தம். காதில் கேபிளை மாட்டிக்கொண்டோ டேப் ரெகார்டரை ஓட விட்டுக்கொண்டோ கேட்கும் பாடல்களை விட எங்கிருந்தோ காற்றில் மிதந்து வரும் பாடல்களைக் கேட்பது ரொம்பப் பிடிக்கும். அப்படி மிதந்து வரும்  பாடல்களில் ஒரு சில வரிகள் நம் காதில் விழும். சிலது விழாது. இருந்தாலும் மனம் அதில் லயிக்கும்.
விஸ்வநாதன் தனித்து இசை அமைத்த பாடல்களைக் காட்டிலும் ராமமூர்த்தி ஜோசப் கிருஷ்ணா ஹென்றி டேனியல் இந்த குரூப் இசை அமைத்த பாடல்கள் அருமையாக இருக்கும். இப்போது வரும் பாடல்களில் பாடுகிறவர்களின் குரலை விட இசைக் கருவிகளின் சத்தம்தான் காதைப் பதம் பார்க்கிறது.ஆனால் பழைய பாடல்களைக் கவனித்துக் கேளுங்கள். பாடல் வரும் போது பின்னணி இசை அப்படியே டௌன் ஆகி மெலிதாக ஒலிக்கும். பாடல் வரி நின்றதும்  பின்னணி இசை தூள் கிளப்பும். உதாரணத்துக்கு ஒரே ஒரு பாடல். "அழகே வா ... அருகே வா " என்ற ஆண்டவன் கட்டளை படப் பாடல். 
1966 - 69 வரையிலான கால கட்டத்தில் நான் திருச்செந்தூர் அடிக்கடி போய் இருக்கிறேன்.  இரவு  நேர பூஜை நடக்கும் போது TMS பாடிய முருகன் மீதான பக்திப் பாடல்கள் loud speakar ல் ஒலிபரப்பாகும். (அந்த பாடல் தொகுப்பை தோற்கடிக்கும் வகையில் தமிழில் இதுவரை எந்த பாடல் தொகுப்பும் வரவில்லை என்பது எனது தாழ்மையான அபிப்ராயம் ). கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு பாடல்களை கேட்டபடி கடல் அலையை ரசிப்பது அப்படியொரு அலாதி சுகம். "உள்ளம் உருகுதையா" என்ற பாடல் உருகாத மனதையும் உருக வைக்கும்.இரவு நேர இருளில் தண்ணீர் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளையாக பஞ்சு போன்ற ஒன்று ஓடி ஓடி வந்து கரையில் மோதி விட்டுப் போவது போல இருக்கும். இந்த மாதிரி சந்தோஷங்களை மலரும் நினைவுகளாக அசை  போட மட்டுமே முடிகிறது.

No comments:

Post a Comment