Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, June 29, 2013

கணக்குப் பண்ணலாம் வாங்க !

ஹாய் குட்டீஸ், 

இன்றைக்கும் நாம கணக்கை கணக்காய் கணக்குப் பண்ணப் போறோம்.

HAI KUTTEES, DEAR VIEWERS, 

போனவாரம் வெளியான புதிர் :


நீங்க செய்ய வேண்டியது என்னன்னு கேட்டால் , கீழே உள்ள 10 x 10 கட்டங்களை பூர்த்தி செய்யணும். அதுவும் 1 முதல் 10 வரையிலான எண்களை மட்டுமே வைத்து ! இந்த எண்ணிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்ற கண்டிஷன் எதுவும் கிடையாது. ஆனால்,.....?


எந்த ஒரு வரிசையிலுமே ஒரு முறை வந்த எண் மறுமுறை வரக்கூடாது.

ARE YOU READY  ?    

புதிருக்கான விடை இதோ :                   

               
 10
 1
 2
 3
 4
 5
 6
 7
 8
  9
  1
 2
 3
 4
 5
 6
 7
 8
 9
 10
  2
 3
 4
 5
 6
 7
 8
 9
10
 1
  3
 4
 5
 6
 7
 8
 9
10
 1
 2
  4
 5
 6
 7
 8
 9
10
 1
 2
 3
  5
 6
 7
 8
 9
10
 1
 2
 3
 4
  6
 7
 8
 9
10
 1
 2
 3
 4
 5
  7
 8
 9
10
 1
 2
 3
 4
 5
 6
  8
  9
10
 1
 2
 3
 4
 5
 6
 7
  9
10
  1
 2
 3
 4
 5
 6
 7
 8

நீங்க எப்படி எப்படியெல்லாமோ யோசிச்சிருப்பீங்க. அது எனக்குத் தெரியும். நீங்க அந்த அளவுக்கு ஸ்ட்ரெயின் பண்ணவே வேண்டாம்.

சுலபமான வழிமுறைகள் இதோ :

1 லிருந்து 10 வரையிலான எண்களை நீங்க எந்த எண்ணிலிருந்தும் தொடங்கி எழுத ஆரம்பிக்கலாம் . ஆனால் .. அதற்கு அடுத்தது எழுதப்போகும் எண், முதலில் எழுதிய நம்பருக்கு அடுத்த நம்பராக இருக்க வேண்டும். அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கணும். ( தேவையற்ற குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த டிப்ஸ். எண்களை மாற்றி மாற்றி எழுதும் போது இந்த நம்பரை எழுதினோமா, அந்த நம்பரை எழுதினோமா என்ற ஸ்ட்ரைன் பண்ணிக்காமே இருக்கத்தான் இந்த யோசனை. OK ? )

உதாரணமாக, முதல் வரிசையில், முதல் கட்டத்தில் நீங்கள் 6 என்று எழுதி இருந்தால்,  உடனே  7, 8, 9 என்று வரிசை மாறாமல் எழுதிக்கொண்டே போக வேண்டும். அவ்வளவுதான் ! ப்பூ, இதுதான் மேட்டரா என்று கேட்கத் தோன்றுகிறதா  ?

எண் 1 லிருந்து ஆரம்பித்தால் கீழே உள்ளது போல கட்டங்கள் அமையும் .

   1
   2
  3
  4
  5
  6
  7
  8
  9
10
  2
   3
  4
  5
  6
  7
  8
  9
10
  1
  3
   4
  5
  6
  7
  8
  9
 10
  1
  2
  4
   5
  6
  7
  8
  9
10
  1
  2
  3
  5
   6
  7
  8
  9
10
  1
  2
  3
  4
  6
   7
  8
  9
10
  1
  2
  3
  4
  5
  7
   8
  9
10
  1
  2
  3
  4
  5
  6
  8
   9
10
  1
  2
  3
  4
  5
  6
  7
  9
 10
  1
  2
  3
  4
  5
  6
  7
  8
 10
   1
  2
  3
  4
  5
  6
  7
  8
  9


நான் தொடங்கி யிருக்கும் வரிசையில் எண்களின் அணிவகுப்பு குறுக்காகவும் நெடுக்காகவும் எவ்வளவு அழகாக இருக்கு பார்த்தீங்களா?
இப்படி நம்பர்களை மாற்றி மாற்றிப் போட்டு எண்கள் காட்டும் வண்ண ஜாலத்தைக் கண்டு ரசிக்கலாம்.

இந்த வாரம்  :

எல்லாருக்குமே கணக்கிலுள்ள வாய்ப்பாடு ( TABLES ) தெரியும். ஆனால் எல்லா எண்ணுக்கும் உள்ள பெருக்குத் தொகையை மனப்பாடமா சொல்ல எல்லோராலும் முடியாது.

எண் 9 ஒரு விசேஷமான ஒன்று. மிகப் பலருக்குப் பிடித்த எண்ணும் கூட ! 9 ம் எண் எனக்குப் பிடித்தமான ஒன்று.  எண் வரிசையில் மிக உயர்ந்த மதிப்புள்ள எண்  என்றுதான் நான் சொல்வேன் ( கோடானு கோடி எண்கள் இருக்குன்னு  நீங்க சொல்றது என் காதில் விழுதுங்க. ஆனால் ஒரு நம்பரோடு ஒரு நம்பரைப் பெருக்குவதாலும் கூட்டுவதாலும் மட்டுமே அந்த நம்பரின் மதிப்பை உயர்த்திக் காட்ட முடியும். ஆனால் சுயேட்சையா நின்னு நான்தான் பெரியவன், நான் தான்  ALL IN ALL என்று சொல்லிக் கொள்ள 9 -ஆல் மட்டுமே முடியும்.அட, இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க.  இப்போ நான் சொல்றதை கணக்குப் பண்ணிப் பாருங்க.

நம்ம கை விரல்களாலேயே 9 ம் வாய்ப்பாடை நாம் கணக்குப் பண்ணலாம் . ஒரு ஒன்பது,  ஒன்பது ( 1 x 9 = 9 ) என்பது எல்லாருக்கும் தெரியும். பத்து ஒன்பது , தொண்ணூறு  ( 10 x 9 = 90 ) என்பது எல்லாருக்கும் தெரியும். இதற்கு  இடையிலுள்ள 2 முதல் 9 வரையிலான எண்களை 9 ஆல் பெருக்கி விடை காண நம் கை விரல்கள் மட்டும் போதும்  

உங்கள் கண்களில் படும்படி இரண்டு கைகளையும் தூக்கிப் பிடியுங்க. முஸ்லிம் அன்பர்கள் , கிறிஸ்தவ நண்பர்கள் தொழும்போது தனக்கு முன்பாக கைகளை நீட்டுவர்களே அதே மாதிரி . நீட்டியாச்சா ? 

இப்போ 2 x 9 என்பதற்கு விடைகாண : இடது கையிலுள்ள இரண்டாவது விரலை ( அதாவது பெருவிரலுக்கு அடுத்ததாக உள்ள சுட்டு / ஆட்காட்டி விரலை ) மடக்குங்க. மடக்கிய விரலுக்கு முன்பாக ஒரு விரலும், மடக்கிய விரலுக்கு அடுத்ததாக எட்டு விரல்களும் நீண்டுள்ளன ( வலது கை விரல்களையும் சேர்த்துதாங்க ). இப்போ, அந்த ஒன்றையும், இந்த எட்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு 18 என்று சொல்ல வேண்டும் .

அடுத்து 3 x 9 எவ்வளவு என்பதற்கான விடை கண்டு பிடிக்க, இடது கை யிலுள்ள  மூன்றாவது விரலை மடக்கவும். மடக்கிய விரலுக்கு முன்பாக இரண்டு  விரல்களும் , மடக்கிய விரலுக்கு அடுத்ததாக ஏழு விரல்களும் நீண்டுள்ளன. இந்த  இரண்டையும் சேர்த்துப் படிக்கவும், 27 என்று. இப்படி ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு விரலாக மடித்தும் நீட்டியும் கணக்குப்  பார்க்க முடியும் .

ஒன்பதாம் எண்ணுக்குள்ள விசேஷ குணங்களில் இதுவும் ஒன்று.

( இந்த 9 ம் வாய்ப்பாடு பற்றிய விஷயத்தை / விசேஷத்தை சில வருடங்களுக்கு  முன்பாக தினமணி பத்திரிக்கைக்கு எழுதியிருந்தேன். அது சிறுவர் மணியில் வெளியாகி இருந்தது . அதைப் படிக்கத் தவற விட்டவர்களுக்காக இதோ மறுபடியும்  அதே மேட்டர் )

அடுத்த வாரம் வேறொரு குழப்பத்தோடு வந்து உங்களை குழப்புகிறேன். அதுவரை  உங்கள் விரல்களுக்கு சுளுக்கு எடுத்துக் கொண்டிருங்க.