Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, May 20, 2020

நேற்று .. இன்று ... நாளை ...

நேற்று .. ஏதோ கொரோனாவாம் 
இன்று ... ஐயய்யோ கொரோனா
நாளை .... அட இது நம்ம கொரோனா..

நாளை இப்படியும்கூட நடக்கலாம்.
                                                        1

ஹலோ.. pet animals supplier தானே ? என் பொண்ணுக்கு ஒரு கொரோனா வேணுமாம். எங்க வீட்டில் ரெண்டுமூணு இருக்குது.. ஆனால் என் பொண்ணுக்கு ஒரிஜினல் ப்ராடக்ட் .. பர்ட்டிகுலரா சைனீஸ் மேக் தான் வேணுமாம் .. ப்ளீஸ் சப்ளை பண்ண முடியுமா?

                                                         2

ஒண்ணும் பண்ணாது.. எங்க வீட்டு  கொரோனா தான்.  சும்மா பயப்படாமே உள்ளே வாங்க.. விரட்டாது.. கடிக்காது.. சும்மா முறைச்சு பார்க்கும் அவ்வளவுதான்.

                                                         3

மம்மி.. நம்ம கொரோனா ரெண்டுநாளா ரொம்பவும் டல்லடிக்குது.. டாக்டர் கிட்டே கூட்டிட்டு போகணும். அப்பாயின்மென்ட் பிக்ஸ் பண்ணுங்க மம்மி.
(Courtesy : for the statement of responsible / respected personnels : "கொரோனாவோடு  வாழப் பழகிக் கொள்ளுங்கள்.)

                                                 

Thursday, May 14, 2020

குழப்புகிறீர்களே மை லார்ட் ..


பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும்போது கையில் குடை இருக்க வேண்டும். குடை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று சில நாட்களுக்கு முன்னால் சொன்னார்கள். (வரிசையில் நின்று கொண்டிருந்த கேரள மக்கள் அநேகர் கையில்  கறுப்பு வண்ண குடை இருந்தது). பொதுவாக குடையின் நிறம் கறுப்பு என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. பேஷனுக்காக பல வண்ணங்கள், பல டிஸைனில் குடைகள் வருகிறது. ஆனால் அநேகர் உபயோகிக்கும் குடையின் நிறம் கறுப்புதான். ஏனென்றால் கறுப்பு நிறம் வெப்பத்தை ஊடுருவ விடாது என்று எங்கோ எப்போதோ படித்ததாக ஞாபகம்.
இன்றோ கறுப்பு நிறத்தில் கொரோனாவின் ஊடுருவல் அதிகம் உள்ளது. அதனால் கறுப்பு நிறத்தை தவிர்த்து வெள்ளை உடையை வக்கீல்கள் அணிய வேண்டும் என்று சேனல் செய்தி சொல்கிறது.
நானெல்லாம் முட்டாள்களின் வரிசையில் முதல் இடத்தில் நிற்கிற ஆள். அதனால் எது சரின்னு கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க  மை லார்ட் ..

காசு.. பணம்... துட்டு.... துட்டு ......


பொருளாதாரத்தை மேம்படுத்த சீர்படுத்த ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு யோசிக்கிறீங்களே.. நான் ஒரு சிம்பிள் method சொல்லட்டுமா.. 
ரொம்ப ஈஸிங்க....ரொம்ப ரொம்ப ஈஸி....
மதுக்கடை திறந்ததும் வருமானம் பல கோடிக்கு தாண்டியது. ஒரு சில காரணங்களால் மூடப்பட்டது ... ஓகே.
மதுவுக்கு நிகரான போதை தருவது காசு.. பணம்... துட்டு.... துட்டு ......
அது உழைக்காமல், ஒரு சில ஆயிரம் மூலம் ஒரு சிலர் கைக்கு கிடைக்கும் என்பது தெரிந்தால் அதை அடைய நான் நீ என்ற போட்டியும் இருக்கும். 
லாட்டரி சீட்டு நடத்தலாம். ஒரே ஒருமுறை மட்டும்.. டிக்கெட் விலை ரூபாய் ஆயிரம்.. முதல் பரிசு மட்டும் ஆயிரம் கோடி.. அதில் ஒரு நயாபைசா கூட பிடித்தம் செய்யாமல், பரிசுத் தொகை  அப்படியே பரிசுக்குரியவர்க்கு கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு செய்துவிட்டு அதன்பின் நடப்பதைக் கவனியுங்கள்.
ஆறுதல் பரிசு என்று ஆயிரம் பேருக்கு ஒரு சில கோடிகள் அல்லது லட்சம் கொடுக்கலாம்.
மனிதாபிமான அடிப்படையில் அரசாங்கம் கொடுத்த ஒவ்வொரு ஆயிரமும் அப்படி அப்படியே அரசின் கஜானாவுக்கு வந்து சேர்ந்து விடும். அப்புறம் கஜானாவை வைக்க தனி கல்யாண மண்டபம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அதென்ன ஆயிரம் கோடி...?
அங்கே அத்தனை கோடி ஊழல் ... இங்கே இத்தனை கோடி ஊழல்  என்கிற வார்த்தைகளைக் கேட்டுக்கேட்டு லட்சம், ஒரு கோடி, நூறு கோடி என்பது எல்லாம் நாட்டில் சர்வ சாதாரணமான வார்த்தையாகி விட்டது. 
ஆயிரம் கோடி என்பது கொஞ்சம் கவர்ந்திழுக்கும் விஷயமாக இருக்கும். ஒரே ஒருமுறை மட்டுமே நடத்த வேண்டும். வருமானத்துக்காக அதை நீள விட்டால் அதுவும் போதை வஸ்துவாகி விடும். கபர்தார்...
(எதனால் ஆயிரம் என்று குறிப்பிடுகிறேன் என்பதன் வேறொரு தகவலும் உண்டு. 
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்பே ஆரம்பம் ஆனது மனித இனம்.
ஆயிரம் சொல்லு.. அவங்களைப் போல வருமா?
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்  
அவனவன் ஆயிரம் சொல்வான்.. அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட முடியுமா ? 
ஆயிரத்தில் ஒருவன்.. ஆயிரத்தில் ஒருத்தி..
இப்படியாக ஆயிரம் என்ற எண்ணுக்கு நம்ம ஜனங்க ரொம்பவுமே முக்கியத்துவம் கொடுத்து வச்சிருக்காங்கதானே!!??)

Thursday, May 07, 2020

Dear viewers,


என்னுடைய சிறு வயதில் நான் அடிக்கடி கேட்டுப் பழகிப்போன வார்த்தை,  'இந்த கஷ்டம் பின்னாளில் ஒரு நல்லதை செய்யலாம். எப்பவும் கஷ்டத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது சொல்லிக்கொடுத்த பாடத்தை மறக்காதே".
இதை அடிக்கடி சொன்னது எங்கள் வீட்டின் அருகில் குடியிருந்த ஒரு பள்ளி ஆசிரியை. அவர்கள் சொல்லும் ஒன்றை என்னால் செய்யமுடியாது என்று நான்  தயக்கத்தோடு சொல்லும் போதெல்லாம்  இதே டயலாக்கை அடிக்கடி சொல்வார்.
"இதோ பாரு புள்ளே... நல்லது கெட்டது, சந்தோசம் துக்கம், இன்பம் துன்பம் எல்லாமே இரண்டும் இணைந்தேதான் வரும். ஆனால் அதைப் பிரித்து அறிவது கடினம்.  ஆனால் ஒன்றின் முடிவில் இன்னொன்றின் ஆரம்பம் நிச்சயம் உண்டு. எது முன்னாடி வரும்; எது பின்னாடி வரும் என்பது தெய்வ ரகசியம். ஒன்று நடக்கணும்னு விதி இருந்தால் அது கண்டிப்பாக நடந்தே தீரும் " என்று விளக்கம் சொல்வார்.
என்னுடைய இளவயதில், நான் முதல்முதலாக பார்த்த மேடை நாடகம் வண்டிக்காரன் மகன் (1969 ம் வருடம் என்று நினைக்கிறேன். வருடம் சரியாக நினைவில் இல்லை) திருநெல்வேலியில் ஒரு பொருட்காட்சியில் நாடகம் நடத்த  திரைப்பட வில்லன்  நடிகர் (மறைந்த) அசோகன் வந்திருந்தார். அந்த நாடகத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி : அசோகனின் மகனாக நடிப்பவர் "அப்பா.. உங்களை அந்த நிலையில் பார்த்ததும் நான் துன்பத்தின்  எல்லைக்கே போய்விட்டேன்." என்று சொல்ல, "அப்படியா.. துன்பத்தின்  எல்லைக்கே போய்விட்டாயா.. அப்படி யென்றால் நீ மிகவும் கொடுத்து வைத்தவனடா மகனே... துன்பத்தின் எல்லையில், முடிவில்தானே இன்பம் ஆரம்பமாகிறது. ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பம்  " என்று அசோகன் சொன்னார்.
இதைக்கேட்டதும் அந்த டீச்சரைத்தான் நினைத்துக் கொண்டேன்.
ஒரு கிளைக்கதை (Branch Story)
2015 ம் ஆண்டு வந்த புயல் வெள்ளம், அழிவை ஏற்படுத்தியதோடு நல்ல மனித உள்ளங்களை அடையாளம் காட்டிவிட்டுப் போனது. (மூன்று நாட்கள் வீட்டை விட்டு வெளிவரமுடியாமல் வெள்ளம் சூழ்ந்த வீட்டில் முடங்கிக் கிடந்தோம்.  சில முஸ்லீம் அன்பர்கள், பரிசல் கொண்டு வந்து எங்களை அங்கிருந்து வெளியேற்றி, காஃபி, பிஸ்கெட் கொடுத்து உபசரித்தது மட்டுமல்லாமல். எனது அம்மாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்தார்கள். "எங்களை தாம்பரத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டால் போதும்.  என்னுடைய தம்பி கார் கொண்டு வந்து அங்கிருந்து எங்களை அழைத்து செல்வார்" என்றேன். அவர்கள் அப்படியே செய்தார்கள். தாம்பரத்தில், sub way அருகில் உள்ள கோயில் வாசலில் தம்பியின் வருகைக்காக காத்திருந்தோம்.   மழை ஆரம்பித்து விட்டது. அம்மாவுக்கு குளிரில் உடல்  நடுக்கம் ஆரம்பித்து விட்டது. அம்மா வயது 90. அம்மாவை கோவில் உள்ளே அழைத்துச் சென்று மழைத்தண்ணீர் படாத இடத்தில் நிற்க வைத்தேன். (கோவிலின் உட்பக்கம்கூட போகவில்லை. அங்கிருந்த ஒரு நடைப்படியில் நிற்க வைத்தேன். என்னைப்போல் சிலரும் அங்கு வந்தார்கள். அங்கு வந்த ஒரு குருக்கள், "எல்லாரும் வெளியே போங்க.. நடை சாத்தணும்" என்று சொல்லி எல்லோரையும் வெளியேற்றினார். ஜாதிமத பேதம் பார்க்காமல்,  யாரும் அழைக்காமலே வீடு தேடி வந்து உதவி செய்த அவர்கள் எங்கே! இந்த மனிதாபிமானமற்ற ஜென்மம் எங்கே என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
இனி Main storyக்கு வருவோம். இந்த கொரோனா கூட திரும்பி போகும்போது சில அற்புதங்களை செய்துவிட்டுப் போகும் என்று நினைக்கிறேன். CORONA என்கிற வார்த்தையின் எழுத்துக்களை அப்படியே (ரிவர்ஸில்)  திருப்பிப் போட்டுப் பாருங்கள். ANOROC என்ற சொல் வரும். 
ANOROC என்பது  சீன மொழி சொல்லாம்.  அதை  இப்படியும் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று ஒரு இணையதளம் சொல்கிறது. உண்மையான அர்த்தம் தெரியாவிட்டாலும், எழுத்துக்களைப் பிரித்து அர்த்தம் கொள்ளும்போது  படிக்க இன்ட்ரெஸ்ட் ஆக இருந்தது. அதை உங்கள் பார்வைக்கும் பதிவு செய்கிறேன்..
is for athleticism, embrace the competitor within
is for neighborly, friendly to all acquaintances
is for ornate, nothing plain here!
is for refreshing, the sparkling you.
is for optimistic, look at the bright side!
is for casual, no pretension here.