"ஸாரி .. ஸாரிடா கண்ணு .. மம்மி எதோ யோசனையில் இருந்தேனா. ஸ்கூல் வேன் வந்ததை நான் கவனிக்கலே கண்ணு .. ஸாரிடா " என்றபடி ஓடிவந்து கதவைத் திறந்தவளிடம் "என்ன யோசனை?" என்று மகன் கேட்க, "கடல் தண்ணீர் ஏன் உப்பா இருக்குனு யோசிச்சிகிட்டு இருந்தேன் " என்றாள் மம்மி எதையாவது சொல்ல வேண்டுமே என்ற நினைப்பில்.
"ஓ அதுவா ! உலகம் பூரா கடல். கடல் பூரா மீனு. உலகம் முழுக்க மீன் பிடி தொழில் நடக்குது. நமக்கு சாவு இந்த மனுஷங்க கையாலேதான்னு நெனச்சு எல்லா மீனும் கண்ணீர் விட்டு அழுதுகிட்டே இருக்குது. கண்ணீர் உப்பா தானே இருக்கும். மீனோட கண்ணீர் கடல் தண்ணியிலே கலந்து கடல் தண்ணி உப்பா மாறுது!" என்று கேஷுவலாக சொன்ன மகனை நெஞ்சோடு அள்ளி அணைத்து, எப்பேர்ப்பட்ட ஆராய்ச்சியாளனும் கண்டுபிடித்து சொல்லாத ஒன்றை மகன் சொல்லிட்டானே என்று வியந்த மம்மி, "கண்ணீர் உப்பா இருக்கும்னு யார் சொன்னது"னு கேட்க, "டாடி என்னை அடிக்கும்போது நான் அழுவேன்தானே . அப்போ லிப்ஸ் பக்கமா வர்ற கண்ணீரை நக்கிப் பார்ப்பேன். அது உப்பா இருக்கும் !" என்றான் குழந்தை சர்வ சாதாரணமாக.
No comments:
Post a Comment