Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, June 16, 2016

Dear viewers,

உங்களில் எத்தனை பேருக்கு இராமாயணக்கதை தெரியும்? எங்கே ..  கை தூக்குங்க. எண்ணிப் பார்த்துடலாம் ... ஆங்க் ...1...2...100...290...1000....போதும் போதும். இதுக்கு மேலே என்னாலே எண்ண முடியாது. நிறைய பேருக்கு இராமாயணக் கதை தெரிஞ்சிருக்குது. எனக்கு ரொம்ப சந்தோஷம். இதை ஏன் கேக்கிறேன்னா, ஒரு கேள்வி என் மனசை ரொம்ப நாளா அரிச்சு கிட்டே இருக்குது. அதுக்கு விடை தெரிஞ்சே ஆகணும். 
எனக்கு இராமாயணக்கதை கொஞ்சூண்டு தெரியும். (ராமன் வில்லை ஒடிச்சுது, சீதையைக் கட்டிக்கிட்டது...கைகேயி கேட்ட வரத்தாலே ராமன் காட்டுக்குப் போனது. கூடவே தம்பியும் போனது. அங்கே சூர்ப்பனகை, ராவணன் வந்தது, சீதையை கிட்நாப் பண்ணினது. அனுமன் போய் சண்டை போட்டது. திரும்பவும் ராமன் நாட்டுக்கு வந்ததுன்னு சில விஷயம் தெரியுங்க. இதெல்லாம் நான் ஸ்கூலில் படிக்கிற காலத்தில் ஒவ்வொரு வகுப்பிலேயும் பிட் பிட்டா படிச்சதுதான். எங்க ஊர் கோயில் வாசல்ல (எந்த ஊர்னு கேக்கிறீங்களா ? நமக்கு திருநெல்வேலிங்க) ஒருத்தர் இராமாயணக்கதை சொல்லுவார். வீட்டில் பொழுது போகலை ன்னா அங்கே போய்  உக்காந்துட்டு வருவோம். அவர் இராமாயணக்கதை பேசுவார் . நாங்க பாட்டுக்கு எங்க கதையைப் பேசிட்டு இருப்போம். அக்கம் பக்கத்திலே உக்கார்ந்து இருக்கிறவங்க எங்களை மொறச்சிப் பார்த்து "உச் .. ச்சூ"னு சொல்வாங்க. நாங்க அதைக் கண்டுக்கிறதே கிடையாது. அப்போ...அப்போன்னா எப்போ? ஒரு  நாப்பது ஐம்பது வருஷத்துக்கு முந்தி ..சம்பூர்ணராமாயாணம் சினிமாவை எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்த ப்ப அங்கேருந்த கீத்துக் கொட்டாயிலே பார்த்துருக்கேன். ஸ்கூல்ல படிச்சது, கோவில் வாசல்ல கதையா கேட்டது ... இது எதுவுமே மனசிலே நிக்கலே .. ஆனா சினிமாவுலே பார்த்தது அப்படியே மனசிலே நிக்குது . (நான் படிச்சிட்டு இருந்த காலத்திலே எங்க டீச்சர் அடிக்கடி சொல்வாங்க: "கழுதைங்களா...என் தொண்டைத்தண்ணி வத்தற அளவுக்கு நான் என்ன தான் கரடியா கத்தினாலும் அது உங்க மரமண்டையிலே ஏறாது. இதையே சிவாஜி பத்மினி நடிச்ச சினிமாக்கதையா யாராவது படம் பிடிச்சுக் காட்டி இருந்தா அது  உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். மறக்கவே மறக்காது ... அப்படித்தானே?"னு கேட்பாங்க. உண்மைஅதுதானே.. ஆனால் அதையெல் லாம் அங்கே ஒத்துக்க முடியுமா? வாயிலே கொழுக்கட்டை வச்சு அடைச்ச மாதிரி உக்கார்ந்திருப்போம் ).
சம்பூர்ண ராமாயாணம் சினிமாவுலே ஒரு சீன்  வரும். மாமா வீட்டுக்குப் போயிருந்த பரதன் தன்னோட வீட்டுக்கு வருவாரு. (பரதனா நடிச்சது நம்ம சிவாஜிதான்). வர்ற வழியிலே ஊர்பூரா சோகம் மண்டிக் கிடக்கிறதை பார்ப்பார். இவருக்கு அதுக்கான காரணம் என்னனு தெரியாது. இவரைப் பார்த்ததும் எல்லாரும் கைகேயி மேலே உள்ள கோபத்தை பரதன் கிட்டே காட்டறதா நெனைச்சி அவங்க  முகத்தைத் திருப்பிக்குவாங்க. வீட்டுக்கு ... அதுதாங்க..அரண்மனைக்கு வந்த பிறகுதான் அப்பா செத்துப் போனது, அண்ணன் காட்டுக்குப் போனது எல்லாமே இவருக்குத் தெரிய வரும். 
இதுலதாங்க எனக்கு சந்தேகம். செத்துப் போனது சாதாரண ஆள் இல்லே. பத்து திசையிலும் தன்னோட ரதத்தை ஓட்டியவர். சக்ரவர்த்தி. அவர் புள்ளைக்கு பட்டாபிஷேகம் நடக்க இருந்துச்சு. அதுவும் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஒரு மனுஷன் செத்துப் போனால் அவனோட மனைவி வழி சொந்தங்களுக்கு அவளோட குடும்பத்துக்கு அதை முதலில் சொல்லு வாங்க. பரதன் போயிருந்தது தன்னோட தாய்மாமன் வீட்டுக்கு..அப்படினா தசரதன் இறந்த செய்தியை கைகேயின் சகோதரனுக்கு, அவளோட தாய் வீட்டுக்கு தெரியப்படுத்தவே இல்லையா? பரதன் தசரதனோட பிள்ளை. தகப்பன் செத்ததை அவரோட பிள்ளைக்குத் தெரியப்படுத்தவில்லையா?   இவங்க சொல்லலே சரி. அது தெரியும் வாய்ப்பு அந்தக்குடும்பத்துக்கு எப்படி இல்லாமே போச்சு. ஒண்ணுமே இல்லாதவன் செத்தால் கூட அந்தக் காலத்தில் அது ஊர் முழுக்க தெரிஞ்சிரும். அப்படியிருக்க ஒரு சக்கரவர்த்தி செத்துப்போனது அவரோட மனைவியின் சொந்தபந்தங்களு க்குத் தெரியாமே போச்சுன்னு சொன்னால் அது நம்புறாப்லயா இருக்குது ? இந்தக் கேள்விக்கு யாருக்காவது விடை தெரியுமா? இதற்கான விடை இராமாயணத்தின் எந்தப் பகுதியிலாவது இருக்கிறதாங்கிற விவரத்தை இராமாயணக்கதையை முழுமையாக  அறிந்தவர்கள் யாராவது எனக்குச் சொல்லுங்களேன்.  
உங்ககிட்டே இருந்து நான் எதிர் பார்க்கிற இன்னொரு விளக்கம் ?
தான் வாழ்ந்த காலத்திலேயே தெய்வமாக மதிக்கப்பட்டவன் இராமன். அப்படியிருக்க அதற்கு அடுத்த தலைமுறையினருக்கும்  வழிவழியாக இராமனின் வம்சாவளி பற்றி தெரிந்திருக்கும்தானே.  (இப்போதைய தலை முறைக்கே தெரிந்திருக்கும் போது இராமாயணகாலகட்டத்துக்கு அடுத்த தலைமுறைக்கு தெரியாமலா இருந்திருக்கும்).
இராமாயண யுத்தம் நடந்த போது வானரப்படை அமைத்த பாலம் என்று "சேது"பாலத்தை கடலுக்கடியில் அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால் அந்த வம்சாவளியில் வந்தவர் என்று ஒருவரைக்கூட அடையாளம் காட்ட முடியவில்லை. காட்டப்படவில்லை.. இராமாயணக் காலத்துக்குப் பின், புல்பூண்டு எதுவும் இல்லாமல் உலகமே அழிந்து போனது என்பதற்கான ஆதாரங்களும் இல்லை.
மேலே உள்ள இரண்டு விஷயங்களும் என் மண்டைக்குள் சம்மணம் போட்டு உக்காந்துகிட்டு என்னைப்பாடாய்ப்படுத்துது. இது பத்தின விவரம் அறிந்தவர்கள்  தயவுசெய்து   எனக்கும் கொஞ்சம்    சொல்லுங்களேன்  .. உங்களுக்குப் புண்ணியம்  சேரட்டும்.
எனது மெயில் : arunasshanmugam@gmail.com

No comments:

Post a Comment