Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, June 26, 2016

ராமு தாத்தாவும் குழந்தைகளும் (01)

சென்ற வார புதிர்  எண் : 3 ம் அதற்கான விடையும் கீழே உள்ளது .
ஒரே ஒரு  வார்த்தை,   அதாவது BECAUSE என்ற ஆங்கிலச்சொல் அடுத்தடுத்து, அதாவது தொடர்ச்சியாக  மூன்று முறை வரும்படியான  (BECAUSE BECAUSE BECAUSE) ஆங்கில வாக்கியம்  ஒன்றை கண்டு பிடித்து சொல்ல முடியுமா உங்களால் !

விடை :


A WORD DOES NOT END WITH BECAUSE.  BECAUSEBECAUSE IS A CONJUNCTION.


இனி இந்த வார புதிரைப் பார்க்கலாம். இனி வரும் புதிர்கள் ராமு தாத்தாவும் குழந்தைகளும் என்ற தலைப்பில் வரும். 




புதிர் எண்-1(நான் எழுதிய இந்தப் புதிர் சுட்டிவிகடனில் வெளிவந்தது).
ராமு தாத்தா என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிரியம். எப்போதும் புதிர் போட்டுப் பேசுவார். குழந்தைகளும் அவரைப் போலவே புதிர் போட்டு அவரை கலாய்ப்பார்கள். பொழுது போகாத நேரங்களிலும் இரவில் மின்வெட்டு சமயத்திலும் தாத்தாவை சுற்றி உட்கார்ந்து கொண்டு ஏதாவது புதிர் போடச்சொல்லி கேட்பார்கள் குழந்தைகள். புதிர் சொல்லவேண்டும் என்று அடம் பிடித்த குழந்தைகளிடம் தாத்தா ஒரு புதிர் போட்டார். ஒரு கிளிக்கு மூன்று குஞ்சுகள்அன்றைக்கென்று 
மூன்றும் மிகவும் அடம் பிடித்தன. இரை தேடி தாய்க் கிளி வெளியே போக முடியாதபடி அதன் கால்களை கட்டிக்கொண்டு விட மறுத்தன. குஞ்சுகளின் மனப் போக்கை மாற்ற நினைத்த தாய்க்கிளி, குஞ்சுகளுக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்தது.
"அடுத்து என்ன விளையாட்டு ?" என்று  எதிர் பார்க்கும்  அளவுக்கு 
குஞ்சுகள் விளையாட்டில் லயித்து விட்டன.
" இப்போ நாம ரயில் விளையாட்டு விளையாடலாம். வாங்க. நீங்க மூன்று பேரும் ஒருவர் பின்னாலே ஒருவராக  என் வாலைப் பிடிச்சுக்கணும். நான்தான் ரயில் என்ஜின். நீங்க மூன்று பேரும் ரயில் பெட்டிகள். ரயில் இந்தமரத்தைச் சுற்றி சுற்றி ஓடி வருமாம்என்ன நான் சொல்றது சரியா?   "  என்று தாய்க்கிளி கேட்க குஞ்சுகள் ஆர்வமாக சிறகை அடித்துக் கொண்டன.
ரயில் விளையாட்டு ஆரம்பமானது. தாய்க் கிளி சொன்னது 

" நாந்தான் ரயில் எஞ்சின். எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்று சொல்லி விட்டு   முதலாவது நின்ற குஞ்சிடம் கேட்டது " நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருது?ன்னு " .
உடனே முதலில் நின்ற குஞ்சு, " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி இரண்டாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீசொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது? "  என்று கேட்டது .
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது இரண்டாவதாக நின்ற குஞ்சு.
" ஊஹும்," என்ற தாய்க் கிளி மூன்றாவதாக நின்ற குஞ்சிடம் " எங்கே, நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டி வருகிறது ? " என்று கேட்டது.
 " எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருது " என்றது மூன்றாவதாக நின்ற குஞ்சு
" என்ன இது ! தப்பு தப்பாக சொல்றீங்க ? " என்று கோபப்பட்டது தாய்க்கிளி
இந்த விளையாட்டை சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 
மற்ற பறவைகள்  " குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன " என்று 
கோரஸாக சொன்னதும், தாய்க்கிளிக்கோ தலை சுற்றியது, எந்த வகை யில்  இது சரியென்று !

மற்ற பறவைகள் சொன்னது போல குஞ்சுகள் சரியாகத்தான் சொல்கின்றன என்று நானும் சொல்கிறேன் என்ற தாத்தாவை குழந்தைகள் ஆச்சரியமாகப்  பார்த்தார்கள்கிளிக்குஞ்சுகள் சொன்னது எந்த வகையில் சரியென்பது உங்களுக்கு தெரிந்தால் இப்பவே பதிலை நீங்கள்  சொல்லலாம். அல்லது அடுத்த வாரம் வரை காத்திருக்கலாம். 
  

No comments:

Post a Comment