Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, December 21, 2016

Dear viewers,

                                                            இது எப்படி இருக்கு ?
இன்று தற்செயலாக, ஒரு சேனலின் விளம்பர இடைவேளையில் வேறொரு சேனலுக்கு நான் தாவியபோது அந்த சேனலில் வெளியான செய்தியில் என் காதில் விழுந்து என்னை யோசிக்க வைத்த விஷயம் - "பெண் குழந்தைகளை மட்டுமல்ல, ஆண் குழந்தைகளையும் ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும்". முகநூலில் ஒரு கயவனின் நட்புக்குப் பலியான பெண்ணைப் பற்றிய செய்தி ஓடிக் கொண்டிருந்தது.
ஆண் குழந்தைகளை மட்டுமல்ல; வீட்டிலுள்ள வயதான ஆண்கள் ஒழுங்காக இருக்கிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டிய நிலைக்குப் பிள்ளைகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதை சொல்வதன் பின்னணியை உங்களுக்கு விளக்குகிறேன். சில நாட்கள் முன்பு என் காதில் விழுந்த விஷயம் என்றாலும் இதை இப்போது பதிவு செய்வதன் காரணம் நேற்றைய  சேனல் செய்திதான்.
ஒருவாரம் முன்பாக என் காதில் விழுந்த விஷயம் (கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே நான் சென்ற போது) - "கோடம்பாக்கம் இன்னொரு நுங்கம்பாக்கம் ஆகப்போகுது. ஆயா உனக்கே இவ்வளவு இருக்கும்போது அவருக்கு எவ்வளவு இருக்கும்? கூப்பிட்டா வர மாட்டியா? உன் பிள்ளை என்ன ஆகிறான் பாரு ".
(இந்தமாதிரி டயலாக்கை நிறையபேர் பேசிக் கேட்டிருக்கிறேன். பிள்ளைகள்தான் எல்லார் வீட்டிலேயும் இருக்கிறார்களே. ஒரு வீட்டிலுள்ள பிள்ளைகளை கூலிப்படையை வச்சு தாக்கியது  இன்னார் என்று தெரியும்போது, பாதிக்கப்பட்டவர்கள், இந்த செயலை செய்தவன் வீட்டுக்குள் நேராக புகுந்து  அடித்து நொறுக்கப் போகிறார்கள் .. அவ்வளவு தானே ?)
சரி .. நாம மெயின் பிக்ஸருக்கு வருவோம்.
நான் கேட்ட உரையாடல் என்னை சிந்திக்க வைத்தது. எந்த வகையில் கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ஆகுமென்று துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு யோசிக்க ஆரம்பித்தேன். (அது சரிதான் என்பதை கதையின் முடிவில் நீங்களே ஒத்துக் கொள்வீர்கள்.)
என் எண்ணங்களை கதை வடிவில் கொண்டு வந்தால் என்ன என்ற யோசனை பிறந்தது. கதை ஆரம்பித்துவிட்டது. இந்தக்கதைக்கு நான் உரிமை கொண்டாட மாட்டேன். யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
என்னோட கதையில் கோடம்பாக்கம் நுங்கம்பாக்கம் ஆகிவிட்டது. அதன்பின் விசாரணை தொடர்கிறது என்ற பீடிகையுடன் ஆரம்பமாகிறது. ஆனால் முடிவை  சொல்ல வேண்டியது நீங்கள். சிறந்த முடிவுக்கு கண்டிப்பாக பரிசு உண்டு.
"ஆயா" என்று குறிப்பிட்டதை அடிப்படையாகக் கொண்டு கதாநாயகி 60 வயதுக்கு மேற்பட்டவள் என்று வைத்துக் கொள்வோம். 60 வயது ஆயாவை 20 வயது இளைஞன் சுற்ற நியாயம் இல்லை. அதனால் கதாநாயகன் 70 வயதுக்கு மேற்பட்டவன் என்று வைத்துக்கொள்வோம்.(இதை எழுதும்போது   குலதெய்வம் சீரியலில் வருகிற  மலர் என்ற பெண்ணுக்குக் குறி வைக்கும் காவல்துறை அதிகாரி நினைவு வந்தது. அதனால் கதையின் கதாநாயகனுக்கு நாம் அதே போஸ்டைக் கொடுக்கலாம்).
வீட்டுப்பிரச்சினையால் ஆயாவை வீட்டினர் மிரட்டுவதாக இருந்தால் கூலியாள் தேவை இல்லை. வீட்டிலேயே மிரட்டலாம்.
"ஆயா, உனக்கே இவ்வளவு இருக்கும்போது அவருக்கு எவ்வளவு இருக்கும்? கூப்பிட்டா வரமாட்டியா" என்று அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது அந்த குரூப்  ரொம்ப காலமாக அவங்களை பின் தொடர்கிற ஆட்களாக இருக்கவேண்டும். யாராவது கூப்பிட்டால் கிளம்பி போய்விடுவது, ஆயாவை வா என்று அழைக்கும் கேடுகெட்டவனின் குடும்பத்துப் பெண்களுக்குப் பழக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதில் நாம் தலையிட வேண்டாம். வீட்டுப்பகை என்றால் வெளியில் வைத்து மிரட்டவேண்டிய அவசியமில்லை. பேரக்குழந்தைகளை பார்த்து கொள்ள அழைத்தார்கள் என்றே நாம்  வைத்துக் கொண்டோமானாலும் அதற்காக மிரட்டல் தேவையில்லை. குழந்தைகளை பார்த்துக் கொள்ள எவ்வளவோ பாதுகாப்பு நிலையங்கள் உள்ளன. அதனால் அவள் போகும் வழியில் யார் யார் ரெகுலராக இருப்பார்கள். யாரை விசாரிக்கலாம் என்ற நிலையில் கதை தொடர்கிறது.  
ஒரு தெரு என்று இருந்தால் அங்கு கண்டிப்பாக ஒரு இஸ்திரி போடுறவன் இருப்பான். காவல்காரர்கள் இருப்பார்கள். அவர்களை விசாரிக்கிறோம். (காவல்காரர்களை வைத்திருக்கும் வீட்டினர் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். எவனோ ஒருவன் வீசுகிற எலும்புத்துண்டுக்கு வேலை பார்க்கும் இவர்கள், எவனாவது ஒரு திருடன் ஆட்டுக்கறியை வீசினால், வீட்டினரைக் கொலை பண்ணவும் தயங்க மாட்டார்கள்) . அடுத்தாற்போல் அவள் போகும் பாதையில் உள்ள எல்லா ஆட்டோ ஸ்டாண்டிலும் விசாரிக்கிறோம். (அங்குதானே இந்த உரையாடல் காதில் விழுந்தது). இங்கு கிடைக்கும் விவரங்களும் உரையாடல்களும் துப்பறிகிறவர்கள் வேலையை சுலபமாக்குகிறது.)
அடுத்து அவள் வேலை பார்க்கும் இடத்தில் விசாரிக்கிறோம். இங்குதான் மேட்டரே இருக்குது. நிறைய விஷயம் கிடைக்கிறது. அந்த அளவுக்கு "விசாரணை" நடக்கிறது.
சரி. கதாநாயகனுக்கு வேண்டாதவர்கள் அவன் பேரை சொல்லி இவளை மிரட்டுவதாக வைத்துக்கொண்டாலும் லாஜிக் சரியாக வரவில்லை. அவனோட வீட்டு ஆட்களை விட்டுட்டு சம்பந்தமில்லாத யாரோ ஒருவரை ஏன் மிரட்டணும் என்ற கேள்வி வரும். அதனால் கதாநாயகன் "தொழில்" செய்த இடத்தில் விசாரணை நடக்கிறது. இங்கு போதும் போதும் என்கிற அளவுக்கு விவரம் கிடைக்கிறது.
கதாநாயகி வீட்டுக்குப்போய் அவளுக்கு எதிராக இருந்தவர்கள் பற்றி விசாரித்தால், பகைமை பாராட்டும் அளவு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அவர்கள் ஒரே ஒரு சம்பவத்தை, ஒரு குடும்பத்தைப் பற்றி சொல்கிறார்கள். அங்கு போய் அஸ்திவாரத்தைத் தோண்டி எடுத்து தகவல் சேர்க்கிறார்கள். 
இந்த இடத்தில் கதையை நான் நிறுத்துகிறேன்.
இதற்கு மேலே கதையைத் தொடர்ந்து, முடிவை சொல்ல வேண்டியது நீங்கள். ஒவ்வொரு வரியையும்  கவனமாக படியுங்கள். பரிசு உண்டு.
கோடம்பாக்கம் எப்போது  நுங்கம்பாக்கம் ஆகிறதென்று பார்க்கலாம். அப்படி ஆகும்போது இந்த கதையை ஆதாரமாக வைத்து துப்பறிவோம்.
இதை நான் ஏன் சொல்கிறேனென்றால் என்னுடைய பிரெண்ட், "உங்கள் பிளாக்கில் நீங்கள் எழுதுவதெல்லாம் நடக்கிறது" என்று சொன்னாள்.
(சம்பவம்-1. பணத்தை வாங்கிட்டு பிணத்தை கையில் கொடுத்து அனுப்பிடுவாங்க.
சம்பவம் - 2 - ஓங்கி ஒரு அடி அடிச்சிட்டு வரலாமான்னு யோசிக்கிறேன் - வருணன் சூரியன் சம்பாஷணையாக நான் எழுதிய வரி இது)
அதனால் எதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்ப்போம். இதுவும் நடக்கலாம் என்று எதிர்பார்ப்போம்.



No comments:

Post a Comment