Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, November 30, 2016

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation
இன்று (சற்றுமுன்) எனது பிளாக்கில் வெளியான பதிவைப் படித்த நெருங்கிய தோழி என்னை தொடர்புகொண்டு "கோபமா எழுதி இருக்கீ ங்க. உங்களோட சுபாவத்துக்கு, கோபம் கொஞ்சம்கூட பொருந்தாத ஒன்று. உங்களோட இயல்பில் இருந்து மாறாதீர்கள் " என்றாள் .
தோழி சொல்வது உண்மைதான். சண்டையில் சிலர் தேவையில்லாத வார்த்தைகளை உபயோகிக்கும்போது, "நமக்குன்னு குடும்ப பாரம்பரியம் ஒன்று இருக்குது. அதை விட்டு விட்டு, இதுங்க லெவலுக்கு இறங்கி வந்து ஏன் பேசறே? நாய் கடிச்சா மருந்து போடணும். கடிக்கிறது துரத்துவது நாயோடு கூடப்பிறந்த குணம். அதுக்காக நாம நாயைத்  திருப்பிக் கடிப்போமா? அஞ்சாம் வகுப்பிலேயே படிச்சிருக்கோமே, கீழ் மக்கள் கீழான வார்த்தைகளை பேசினாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல மாட்டார்கள். ஒழுக்கம் நல்ல பழக்க வழக்கம் அவங்கவங்க பிறந்த குடும்பத்திலிருந்து வருகிற ஒன்று. அது நம்மிடம் இருக்குது. தெரு நாய்களிடம் அதை ஏன் இழக்க வேண்டும் ?" என்று அடிக்கடி சொல்வேன். 
"ஆனால் உலகம் இப்போ எங்கே போகிறதுனே தெரியலை. ஒரு சிலர் செய்கிற செயலைப் பார்த்தால், அவனுக வயசுக்கும் படித்த படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்குது. மொத்தத்தில் சொல்லப் போனால் கேடு கெட்டத்தனமாக சில்லரைத்தனமாக இருக்குது. நம்மை சுற்றி நடக்கிற விஷயங்களைக் கேள்விப்படும்போது, பார்க்கும் போது, நெட்டில் பார்க்கும்போது கோபம் எல்லை மீறுகிறது. ரௌத்திரம் பழகுனு பாரதியே சொல்லி இருக்கிறார்" என்றேன்.
அதைக் கேட்ட தோழி "நீங்க சொல்றதையே திருப்பி சொல்றேன். கீழ் மக்கள் கீழாய சொல்லினும் அதை நீங்க மறந்தும் சொல்லாதீங்க. உயிரே போனாலும்  நம்ம குடும்ப பாரம்பரியத்தை விட்டு இறங்கக் கூடாது. கோபுரத்துக்கு மேலே பறந்தாலும் கழுகோட பார்வை குப்பைத் தொட்டி யில்தான் இருக்கும். கவுரவம் என்கிறது அவங்கவங்க இருக்கிற ஸ்டேட்டசை வச்சு இல்லே. ஒருத்தரோட நடத்தை சம்பந்தப்பட்ட விஷயம் . உங்க பிளாக்கில் கேடு கெட்ட மனிதர்களை பற்றி எழுதி உங்கள் பிளாக்கின் தூய்மைதனை கெடுக்காதீங்க  " என்றாள்.
இப்போ எனக்கு என்ன குழப்பம்னா தோழி சொல்வதைக் கேட்பதா பாரதி சொல்வதைக் கேட்பதா ? 
அதே சமயம் கேடுகெட்ட மனித குணங்களைப் பற்றி பேசுவதுகூட கவுரவக் குறைச்சல் என்று எண்ணும் தோழி எனக்கு கிடைத்திருப்பதை நினைத்து பெருமையாகவும் இருக்கிறது. ஹாட்ஸ் ஆஃப் மை டியர் பிரெண்ட் ! 

No comments:

Post a Comment