Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 17, 2016

ஹாய் பிரெண்ட்ஸ்

Image result for image of mamta banerjee
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஸ்கார் (வேறு ஏதாவது பாக்கி இருக்கானு யோசிக்கிறேன். இவ்வளவு ஐஸும் எதுக்குன்னு நினைக்கிறீங்க. உங்களாலே எனக்கொரு காரியம் ஆகணும் )
இந்த பிளாக் விசிட்டர்ஸ் எல்லோருக்கும் தமிழ் தெரியும். உங்களில் யாருக்காவது வங்காள மொழி தெரியுமா ? தெரிஞ்சவங்க நான் சொல்ற செய்தியை நம்ம மம்தா பானர்ஜி மேடம் கிட்டே சொல்லணும். அவங்க மேலே நான் ரொம்ப கோபமா இருக்கிறேன். இதை அவங்ககிட்டே சொல்லணும். அவங்க பாட்டுக்கு துக்ளக் தர்பார்னு அடிச்சு விட்டுட்டார். இதை ... இதை ... இதே ஸ்டேட்மென்ட்டை என் பிளாக்கில் பதிவு பண்ணனும்னு நான் ஒரு வாரமா அசை போட்டுட்டு இருக்கிறேன். வர்ற சன் டே அதை பதிவு பண்ணலாம்னு இருந்தேன். அதற்குள்ளே மேடம் முந்தி கிட்டாங்க. 
விவரமா சொல்றேன்.
ரூபாய் மாற்ற அறிவிப்பு, அதைத் தொடர்ந்து மக்களின் அவஸ்தையை சேனல்ஸ் படம் பிடித்துக் காட்டும் போதெல்லாம் எனக்கு முகமது பின் துக்ளக் நினைவு வந்தது. (கோவில்களில் சூரசம்காரம்  திருக் கல்யாணம் செய்யப்படுவதெல்லாம், அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மக்களுக்கு விளக்கத்தான் என்று ஆன்மீக பேச்சாளர் ஒருவர் சொன்னார். அதே மாதிரி துக்ளக் பற்றி நாம் பாடத்தில்தானே படித்திருக்கிறோம். அவர் இப்படித் தான் இருந்தார் என்று நமக்கு அறிவுறுத்துகிறார்களா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.)
உண்மையில் அவர் ஒரு நல்ல ராஜா. அவர் யோசித்தவை எல்லாமே நல்லவிஷயங்கள்தான்.அதை நடைமுறைப்படுத்தும்போதுதான் குழப்பம் வந்தது. டில்லி ஒரு மூலை. கன்னியாகுமரி ஒரு மூலை. டில்லியிலிருந்து தெற்கை பரிபாலனம் செய்வது கஷ்டம். அதனால் சென்டர் ப்ளெசுக்கு தலை நகரை மாற்ற நினைத்தார். மாற்றினார். சரிப்பட்டு வரலை என்று படித்த ஞாபகம் . மக்கள்கிட்டே இருந்த காசுகளை வாங்கி விட்டு வேறு காசுகளை மாற்றிக் கொடுக்க நினைத்தார். நடைமுறைப் படுத்துவதில் சிக்கல் வந்தது. 
டிவி நியூஸ் பார்க்கும் போதெல்லாம் இந்த சரித்திர சான்றுதான் எனக்கு நினைவில் வந்தது. இதை பதிவு பண்ண நினைத்தேன். என்னை முந்திக்  கொண்டு பானர்ஜி மேடம் ஸ்டேட்மென்ட் விட்டுட்டாங்க.
அதிலே உனக்கு என்ன பிரச்சினைனு கேக்குறீங்களா ? இதை நான் பதிவு செய்தால் அந்த அம்மா சொன்னதை காப்பி அடிச்சு இவங்க பிளாக்கில் பதிவு செய்றாங்களே என்பார்கள்.
நெட்டில் சிலர் சொல்வது ரொம்ப அறிவுஜீவித்தனமாக தெரியும். உண்மையில் அது யாரோ ஒருவரின் கற்பனையில் எங்கோ ஒரு மூலையில் பதிவு செய்யப்பட்டதாக இருக்கும். அதுக்கு ஒரு சிலர் கலர் பூசி இவங்க  சொந்த சரக்கு மாதிரி விற்பனை செஞ்சிடறாங்க. இதுதான் உலகம் முழுக்க இப்போது  நடந்து கொண்டிருக்கிறது.
பக்குவப்பட்ட கலைஞர்கள் திருடுகிறார்கள். பக்குவப்படாத கலைஞர்கள் காப்பி அடிக்கிறார்கள். இந்த ரெண்டையும் நான் செய்ய மாட்டேன். 
ஒரு சில விஷயங்களை நான் வருடக்கணக்காக சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன். இரண்டு தொடர்கதைகளுக்கான கரு, வசனம், காட்சி அமைப்பு எல்லாமே பல வருடங்களாக கைவசம் உள்ளது. கம்போஸ் பண்ண சோம்பேறிதனம்.
உங்களில் பலர் ரமணா சினிமா பார்த்திருக்கலாம். அதே கதையை பல வருடங்களாக அசைபோட்டுக் கொண்டிருந்தேன். எழுதத்  தோணலே . ஒருநாள் வீட்டில் போரடிக்கிறது என்று சொல்லவும், எனது அக்கா பையன் ரமணா சீடி இருக்குது. போட்டுப்பாரு. படம் நல்லா இருக்கும் என்றான். எனக்கு படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கிடையாது. இருந்தாலும் பொழுதைப் போக்க படம் பார்த்தேன். எனக்கு ரொம்ப ஆச்சரியம். நான் யோசித்து வைத்த மாதிரியே கதை, காட்சி அமைப்பு. ஆச்சரியப்பட்டேன்.
நல்லவேளை. நாம நினைச்ச கதையை எழுதி அனுப்பாமே இருந்தோம். அனுப்பி இருந்தா ரமணா கதையை நான் காப்பி அடிச்சதா எல்லாரும் சொல்வாங்களே. இந்தப் பையன் நம்மள வற்புறுத்தி படம் பார்க்க வச்சது நல்லதா போச்சு என்று நினைத்துக் கொண்டேன்.
இன்னொரு சம்பவம். ஒரு சிறுகதைக்கான கரு. பல வருடங்களாக நினைவில் இருந்தது. அதே கதையை ஒருவர் எழுத, அது  விகடனில் பரிசுக் கதையாக வெளியாகி இருந்தது. இனிமே அதை நான் எழுதினால், நான் காப்பி அடித்ததாக சொல்வார்கள். அதனால் அதை அப்போதைக்கு மறந்து விட்டேன். 
ரமணா, இந்த சிறுகதை மூலம் நான் தெரிந்து கொண்ட விஷயம் என்ன வென்றால் ஒரே மாதிரியான விஷயங்கள் ஒரு சிலருக்கு தோன்றும் என்பதுதான்.  இதையெல்லாம் விட ஆச்சரியமான விஷயம் ஒரு கதைக்கு "இந்த தலைப்பு, இந்த கதாபாத்திரத்துக்கு இந்த பேர்"னு நான் முடிவு பண்ணி இருந்தேனோ, அதே கதை , அதே பெயரில் அந்த நினைப்பு வந்த மறுவாரமே குமுதத்தில் வெளியாகி இருந்தது. இதை என்னவென்று சொல்வது.
நிறையவிஷயங்கள் காப்பிஅடிக்கப்படுவது அப்பட்டமாகதெரிந்தாலும் அதை  காப்பி என்று சொல்லாமல் இருவருக்கும் ஒரே மாதிரி கற்பனை தோன்றி இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக் கொள்வேன்..  
இந்த மூன்று சம்பவத்திலும் சம்பந்தப்பட்டவர்களை நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோ கிடையாது. அப்படி இருக்க ஒரே மாதிரியான சிந்தனை எப்படி உருவானது.
விடை தெரியாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
சரி. மம்தா ஜீயை பார்த்தால் என் வருத்தத்தை மறக்காமே சொல்லுங்க. 

No comments:

Post a Comment