என்னய்யா நடக்குது இங்கே?
1. எல்லா இடத்திலும் எல்லா ஏற்பாடும் பண்ணி இருக்கோம்னு அதிகார பவரில் ஒரு சிலர் அறிக்கை இட, அந்த அறிக்கைக்கும் நாட்டு நிலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை.
நாங்க பாடுபட்டு சம்பாதிச்ச பணத்தை நாங்க எங்க தேவைக்கு செலவழிக்க பகீரத பிரயத்தனம் பண்ண வேண்டி இருக்குது.
பான் கார்டு காட்டியபின் பணம் எடுக்கலாம் என்கிறார்கள். அரை மணி நேரம் வரிசையில் நின்று பேங்க் கவுன்டர் முன்னால் கார்டை நீட்டினால் இது போதாது ஆதார் கார்டு வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். (இந்தியன்வங்கியில்). இன்றும் போய் வரிசையில் நிற்க வேண்டுமே என்று சலித்துக் கொள்கிறார் எங்கள் குடும்ப அங்கத்தினர். அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறவர்களுக்கே இந்த நிலைமை! அரசாங்கம் கொடுத்த பான் கார்டு எதற்கு ? (அடுத்த கமெண்ட் பதிவு பண்ண வேண்டாம் என்று நினைக்கிறேன்.) I want to know the value of Pan Card. பணப் பட்டுவாடா செய்கிற வங்கியிலேயே அதற்கு மதிப்பில்லை என்றால் அந்த கார்டு எதற்கு ?
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு அமைதியாக வாழ நினைக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் இன்னமும் இருக்கிறோம். தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு எங்களைக் கொண்டு வந்து விடாதீர்கள்.
2. இந்த கோபத்தை மறக்க வைக்கும் அளவு ஒரு நிகழ்ச்சி. ட்ரைனில் எனது அருகில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்ட ஒரு விஷயம் : அவர்களுக்கு வேண்டிய ஒருவருக்கு நெஞ்சு வலி என்று ஒரு பெண் சொல்ல, இன்னொரு பெண் சொன்ன பதில் : " சிரமத்தைப் பார்க்கலாமே கெவருமென்ட் ஆஸ்பத்திரிக்குப் போ. பெரிய ஆஸ்பத்திரி பக்கம் போயிடாதே. அம்மா எவ்வளவு பெரிய ஆளு . எவ்வளவு பவர் இருக்கு. அவங்களுக்கு நெஞ்சு சளி .. மூச்சு விட முடியலைன்னு சொல்லிட்டு மாச கணக்கா வைத்தியம் பார்க்கானுக. இன்னும் குணமாக்கலே. அவங்களுக்கே அப்படின்னா நாம எந்த மூலை?
வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்லி நம்ம கைக்காசை, பணத்தைப் பிடுங்கிட்டு பிணத்தை கைலே குடுத்து அனுப்பிடுவாங்க. அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பெரிய ஆஸ்பத்திரி பக்கமே போயிடாதே".
இதைக் கேட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன். அவர்கள் என்னை முறைக்கவும், இறங்க ரெடி ஆவது போல் அந்த இடத்தை விட்டு எழுந்து வந்து விட்டேன்.
No comments:
Post a Comment