Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 10, 2016

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி !

Image result for image of agitation
நம்ம மோடிஜீக்கு நன்றி. என்னோட மிகப் பெரிய கவலை ஒன்றை தீர்த்து வச்சதுக்காக. 
இப்படி மொட்டையா சொன்னா எல்லாருக்கும் புரியாதுதானே. அதனாலே விலாவாரியா பேசலாம்.
உங்க எல்லாருக்குமே தெரிஞ்ச கதை ஒண்ணு உண்டு. அதைக் கேட்காமே  தமிழ் நாட்டிலுள்ள எந்தவொரு ஜீவனுமே பிறந்து வளர்ந்திருக்க முடியாது.
யாருக்காது மறந்து போயிருந்தா அதை இப்ப ஞாபகப் படுத்திக்கோங்க. ஒரு குரங்கு வாலில் முள்ளு குத்திடும். அதை எடுக்கச் சொல்லி குரங்கு ஒருத்தன் கிட்டே கேட்கும். அவன் குரங்கோட வாலை அறுத்திடுவான். கோபப்பட்ட குரங்கு அறுந்து போன என் வாலை ஒட்ட வை. இல்லாட்டா கத்தியைக் குடுன்னு  கேட்கும். அவன் கத்தியைக் குடுத்திடுவான். இப்படியே அந்த கதை நீண்டு கிட்டே போகும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொன்றை இழக்கும் குரங்கு அதற்குப் பதிலா எதாவது ஒண்ணை வாங்கிக்கிடும். கடைசியில்  "வாலு போச்சு கத்தி வந்தது டும்டும்டும் 
கத்தி போச்சு மாம்பழம் வந்தது  டும்டும்டும் " என்ற ரீதியில் பெரிய பாட்டு ஒண்ணை பாடி முடிக்கும்.
இதை ஏன் இங்கே சொல்றேன்னா, நடந்து முடிந்த எலெக்சனுக்கு முன்னாடி எந்த சேனலை திருப்பினாலும் நம் கண்ணில்பட்ட காட்சி மது விலக்கு போராட்டக் காட்சிகள்தான். மின்கம்பி மேலே ஏறி நின்னு ஆர்ப்பாட்டம் பண்ணினவங்க பலபேர். அவங்களை கீழே இறக்க காவல்துறைபடாத பாடுபடும். 
(இந்தமாதிரி சீன்ஸ் வரும்போது எங்க அம்மா அடிக்கிற கமெண்ட் ஒன்று உண்டு.அது: பிரயாணம் போறோம்னு கிளம்பிப்போய் அங்கங்கே ஜனங்க சாகுதுங்க. எவனோ வைக்கிற குண்டுலே சம்பந்தமில்லாத எவனெவனோ செத்துப் போறான். அதுக்காக வருத்தப்பட்டா அதில் ஒரு அர்த்தம் இருக்குது. அவனா "போறேன்"னு  சொன்னா, மத்தவங்களுக்கு தொந்தரவில்லாதபடி போயிட்டு வா"னு சொல்றதை விட்டுட்டு அவங்கூட இவனுக ஏன் மல்லுக்கு நிக்கிறாங்க ?".
எலெக்சன் ரிசல்ட் வந்ததும் மதுவிலக்கு சீன்ஸ் மறைஞ்சி போயிட்டுது. அப்புறம் கொஞ்ச நாள் சுவாதி மேட்டர் தூள் கிளப்புச்சு. ராம்குமார் சீனுக்கு வந்ததும் சுவாதிக்கு டாட்டா. அம்மா ஆஸ்பத்திரிக்குப் போனதும் ராம்குமார் போன இடம் தெரியலே. (இடையில் ட்ரைன் கொள்ளை சீன்ஸ் வேறே).
நம்ம அம்மா பத்தி ரூமர் கிளம்பும் போதெல்லாம், "வேற்று கிரகத்தில் நடக்கிற விஷயங்களையே ரொம்ப ஈஸியா படம் பிடிச்சு காட்டிடறாங்க. இவங்களை ஒரு நாளைக்கு ஒரே ஒருமுறை ஒரு ரெண்டே ரெண்டு நிமிஷம் லைவ் ஆக காட்டிட்டா தேவையில்லாத ரூமர் வராதே. என்ன நடக்கிறதுனு தெரியாமே தானே ஜனங்க அவங்கவங்க கற்பனையில் எதையாவது சொல்றாங்க. இதுதான் நடக்குதுனு எடுத்துக் காட்டிட்டா ரூமர்ங்கிற பேச்சுக்கே வேலை இருக்காதே   என்று நினைப்பேன். அந்த நினைப்பு வரும்போதெல்லாம் அடுத்து என்ன பிரச்சினை வந்தா இந்த சீன் இடம் மாறும் என்று ரொம்பவும் யோசிப்பேன். வீட்டில் என்ன இருக்கு இல்லை என்கிற கவலையைவிட அடுத்தாப்லே வரப்போற நியூஸ் என்னவா இருக்கும் என்பதுதான் என்னோட மிகப் பெரிய ஆர்வமா இருந்துது. ரூபாய் நோட்டு விவகாரம் வந்ததும், "அப்பாடா ... சேனல்ஸ்க்கு ஒரு டாபிக் கிடைச்சிட்டுது" என்ற நிம்மதி பெருமூச்சு வர்ற அதே சமயத்தில் அடுத்தது என்ன என்கிற ஆர்வம் இருக்குது.
எல்லா போஸ்ட் ஆபீஸிலும் பேங்கிலும் இன்றிலிருந்து ரூபாய் நோட்டை மாற்றிக் கொள்ளலாம்னு அறிவிப்பு வந்துச்சு. அதை நம்பிப் போன எங்க வீட்டு ஜீவன் ஒண்ணு  போஸ்ட் ஆபீஸ் வரை போயிட்டு ரொம்ப சோகமா திரும்பி வந்து கையிலிருந்த ஐநூறு ரூபாய் தாளை ஆட்டிக் கொண்டே சொன்ன ஒரு சேதி: "அவங்களுக்கே இன்னும் பணம் வந்து சேரலையாம். ரெண்டு மணிக்குள் வரும்னு எதிர் பார்க்கிறாங்களாம். அப்புறமா வாங்கனு சொல்லிட்டாங்க. எந்த பேங்கில் வேணும்னாலும் மாத்திக்கலாம்னு சொன்னதாலே நம்ம வீட்டுப் பக்கத்தில் இருக்கிற பேங்க் க்யூவில் நின்னேன். அந்த பேங்கில் அக்கவுண்ட் இருந்தா மட்டுந்தான் தருவேன்னு சொல்லிட்டாங்க"
ஆட்டிக் காட்டிய ரூபாய் நோட்டில் காந்தி சிரித்துக் கொண்டிருந்தார். துன்பம் வரும் வேளையிலே சிரிங்கனு சொல்லுவாங்க. எங்களைப் பார்த்து நல்லாத்தான் சிரிக்கிறே தாத்தா  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். இந்த திட்டத்தை  அநேகமாக எல்லாருமே வரவேற்கிறார்கள். எனக்குள்ள வருத்தம் என்னன்னா "நாட்டின் மிகப் பெரிய கூட்டம் அடுத்த வேளை சாப்பாட்டுக்காக அங்கே இங்கேனு ஓடிட்டு இருக்குது. ஒரு சில சிறு வட்டங்கள் ஊரைக் கொள்ளை அடிச்சு உலையில் போட்டுட்டு ஆர்ப்பாட்டம் காட்டிட்டு இருக்குது. அந்த சின்ன வட்டத்தை என்னாலே ஒண்ணும் செய்ய முடியாது. எல்லாரையும் ஓங்கி ஒரு அடி அடிச்சா, அந்த அடி அந்த சின்ன வட்டத்து மேலேயம் கண்டிப்பா விழும்னு சொல்றது எந்த ஊர் நியாயம்?!!!!!!!!!!!!!!". 
ஒரு பழமொழி சொல்வாங்க. " நீ ஓலைப் பாயில் ஒளிஞ்சா, நான் தரைக்குள் புகுந்து ஒளிஞ்சுக்குவேன். நீ கோலத்துக்குள் ஒளிஞ்சுகிட்டா, நான் மண்ணு க்குள் மறைஞ்சுக்குவேன் " என்று!
கிரிமினல் வேலை பண்றவங்களுக்கு எப்பவுமே மைன்ட் ரொம்ப ஷார்ப் ஆக இருக்கும். அவங்க இப்ப என்ன யோசிப்பாங்கனு நான் யோசிச்சிட்டு இருக்கிறேன். வீட்டிலே ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்குது. எங்காவது ஒரு ரூம் கிடைக்குமா சொல்லுங்க. யோசிக்க நிறையவே விஷயம் இருக்குது.      

No comments:

Post a Comment