Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, November 25, 2016

பெண்களே உஷார் !!



நேற்று மாலையில் என் காதில் விழுந்த சம்பவம் இதை உடனடியாக பதிவு செய்ய வைத்தது. எழுத்து நாகரிகம் என்ற ஒன்று இருந்தாலும் கூட ஒரு சிலரின் வக்கிரபுத்தி எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரியவைக்க சில மரபுகளையும் மீறி பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
என் அருகில் இருந்த ஒரு பெண் 'உலகம் எங்கே போகுதுன்னே தெரியலை. குழந்தைங்க, குமரிங்க, கிழவிங்க - இவங்க யாரையுமே விட்டு வைக்க மாட்டாங்க போலிருக்குது !" என்றார்.
"என்ன விஷயம் ?" என்றேன்.
"ட்ரைனுக்காக வெயிட் பண்றப்போ என் பக்கத்தில் நின்னுட்டு இருந்த ஒரு பொம்பள போலீஸ் யாரிட்டயோ போனில் பேசறா - 'எவனாவது பொண்டாட்டி வேணும்னு உன்கிட்டே வந்து அழுதால், உன் பொண்டாட்டி யை அனுப்பி ஆறுதல்படுத்து. கூடவே உன் அம்மாவையும் பெண்ணையும் அனுப்பு " என்று. அவ யாரோ எவளோ அவகிட்டே போய் அவ பிரச்சினை என்னனு கேட்கவா முடியும். நானே ஓரளவு கெஸ் பண்ணினேன். ஒரு பொம்பள போலீஸ்கிட்டே அவ டிப்பார்ட்மெண்ட் ஆளுங்கதான் வந்து தைரியமா வாலாட்ட முடியும். போலீஸ் வேலை பார்க்கிறவளுக்கே இந்த கதின்னா மத்ததை என்ன சொல்ல ?" என்றார் 
'இந்தமாதிரி டார்ச்சர்ன்னா தற்கொலைதான் பண்ணிக்கும். அப்படி   ஒரு முடிவை அவங்க  எடுத்துட்டா சம்பந்தபட்ட ஆளை முதலில் அனுப்பிட்டு பின்னாடியே இவங்க போகணும் !" என்றேன்.
"உதவி செய்றேன்னு யாராச்சும் வந்தா நம்பக்கூடாதுங்க . சினிமாவிலே வர்ற மாதிரி இவனுகளே காலிப்பசங்களை அனுப்பி வம்பு பண்ண வச்சுட்டு, பின்னாடியே இவனுக போய் ஹெல்ப் பண்ற மாதிரி அந்த பெண்களை வளைச்சு போட வேண்டியது. அவன் உதவியை நிஜம்னு நம்பி அவனோட சாதாரணமா பேசறதை வச்சு, அவர்களுக்குள் relationship இருக்கிறதா ஒரு ஸீன் கிரியேட் பண்ண வேண்டியது. அவங்களை மிரட்டி இவனுக காரியத்தை சாதிக்க வேண்டியது. இப்படி நிறைய பேர் கிளம்பி இருக்காங்க. வயசான லேடீஸ் கூட இவங்க வலையில் விழுந்துடுறாங்க " என்றார். 
"கண்ட தெருநாயோட மிரட்டலுக்கு ஏன் பயப்படணும் ?" என்று கேட்டேன்.
"இல்லே . நெட்டில் படம் போட்டுடுவாங்க " என்றார் 
அவர் சொல்வதைப் புரிந்து கொண்ட நான், "போடட்டுமே. படத்தில் இருக்கும் முகம் என்னுடையது.  மற்ற பகுதி இந்த படத்தை பதிவு செய்த பைத்தியக்காரனின் அம்மா இல்லாட்டா அக்கா தங்கை அதுவும் இல்லாட்டா அவன் வொய்ப் இல்லே பொண்ணோடதா  இருக்கும். அது யார் என்பதை அந்தபைத்தியக்காரனிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளவும்   என்று அந்தப்படத்தின் கீழ் ஒரு கமெண்ட் பதிவு பண்ண வேண்டும்." என்றேன்.
எனக்குத் தெரிந்த ஒரு சம்பவம்... முப்பது வருடத்துக்கும் முற்பட்டது. ஒரு பெண்ணிடம் ஒரு சிலர் வாலாட்டினார்கள். ஒருவர் உதவுவதுபோல் வந்தார். அந்த நன்றி உணர்ச்சியில் அந்தப் பெண் அவரிடம் சகஜமாக பேச இவரோ அந்தப்பெண் தனக்கு ரொம்ப "வேண்டியவர்" என்று ஊருக்கெல் லாம் கதை சொல்ல ஆரம்பித்தார். இவரையே யாரோ வம்புக்கு இழுப்பது போல கதை சொன்னார். அந்த பெரிய மனுஷன் பேச்சை நம்பி காவல் துறை தனது உழைப்பை இவருக்காக செலவிட்டது. ஒருநாள் அந்தப் பெண்ணுக்கு உண்மை தெரிந்து விட்டது (காவல் துறையின் மூலமாகவே . ரிட்டர்ன் ஸ்டேட்மென்ட் கொடுக்க சொல்லி சிலர் சொல்ல அந்தப் பெண்ணோ , "நாம் தோற்றால் கூட சரியான ஆண்மகனிடம் தோற்க வேண்டும். கூலிக்காரர்கள் பின்னால் ஒளிந்து கொண்டு வீராப்பு பேசும் ஒரு பேடியை ஜெயித்து ஆக வேண்டியது ஒன்றுமில்லை. எதோ என்னாலே அவங்களுக்குப் பணம் கிடைக்குதுதானே . யாரோ சிலர் பிழைப்புக்கு நான் வழி செஞ்சதா இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள் ). இவரோட இரட்டை வேடம் புரிந்து விட்டது. அவர் மேலே கோபப்படலே. கம்பளைண்ட் பண்ணலே. இது இவருக்கு ஒருவிதமான மனநோய் என்று நினைத்து ஒதுக்கி விட்டாள். தன்னோட ரெட்டை வேஷம் வெளுத்தது தெரியாமல் அந்த மனநோயாளி மீண்டும் நடிப்பைத் தொடரும் போதெல்லாம் அவ care பண்ணலே. உண்மை வெளுத்துப் போன விஷயம் தெரியாத அந்த நபர் பிளாட்பார்மில் கூருகட்டி வைத்துக் கூவிவிற்கும் பெண்கள்   பின்னால் ஒளிந்து கொண்டு வீரகீதம் பாடினார். அது எடுபடாதபோது சோக கீதம் பாடினார். நல்லவனையே நாலுதரம் உரசிப் பார்த்து ஏற்றுக் கொள்ளும் உலகம் இது. அப்படி இருக்க ஒரு கயவனை யாராவது திரும்பிப் பார்ப்பார்களா?  அது தெரியாமல் தனது நடிப்பை தானே ரசித்துக்கொண்டு காலந்தள்ளுகிறார் அந்த மனநோயாளி .
பெண்களே எங்கேயும் எப்போதும் உஷாராக இருங்கள் ! இரட்டைவேட மனிதர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருங்கள்.   

No comments:

Post a Comment