Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, July 25, 2018

மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் நாடு இது.


ஆங்கிலக்கவி Wordsworth அக்கம்பக்கத்து இடங்களுக்கு செல்லும் போது நடைப்பயணத்தை மிகவும் விரும்புவாராம். போகிற வழிகளில் நடக்கும் சம்பாஷனைகள் அனைத்தையும் மனதுக்குள் அசைபோட்டபடி நடப்பாராம். அதை கவிதையாக  எழுதுவார் என்று  படித்த ஞாபகம். 
நமது பயணங்களின் போதும் அதேபோல நிறைய விஷயங்களை ரசிக்கலாம் - அக்கம்பக்கத்தில் நடப்பதை கூர்ந்து கவனித்தால்.
ட்ரெயினுக்காக காத்திருந்தபோது ஒரு பெண் யாரோடோ பேசிக் கொண்டிருக்கும் போது  "கோழிக்குஞ்சு ஒன்று இருந்தால் கழுகு என்ற ஒன்றும் இருக்கும். அந்தக் கழுகைக் குறி வைக்கவும் ஒருத்தன் இருப்பான்" என்றாள். 
இதை தோழியிடம் சொன்னபோது தோழி சொன்ன மற்றொரு விஷயம் : ஒருசிலர் அடுத்தவன் பேரில் அயோக்கியத்தனம் பண்ணி விட்டு தனக்குப் பிடிக்காத சிலர் தன்னைப் பழிவாங்க நாடகம் நடத்துவதாக ஒரு நாடகம் போடுவார்கள். (அதைப் பற்றி பலமுறை இதே தளத்தில் பதிவு செய்துள்ளேன். ஒரு  உண்மை சம்பவம் என்றும் சொல்லி இருந்தேன்.)
ஆனால் ஒரு சில புத்திசாலிகள் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் உண்மையைக் கண்டுபிடித்து விடுவார்கள். அதற்கான ஆதாரங்களும் கைவசம் இருக்கும். அது பல வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றாக இருந்தாலும், அவனுடைய மோட்டிவ் என்ன என்பதை தெரிந்து கொள்ள எதுவும் தெரியாத மாதிரி இருப்பார்கள். அவனுடைய நடவடிக்கைகள் அவன் ஒரு மனநிலை சரியில்லாத பேர்வழி என்பது போல் காட்டினால், அவனை "விட்டுப் பிடிக்கலாம்" என்று விட்டு விடுவார்கள்.
ஆண்டுகள் பலவானாலும் அதே நாடகத்தை அந்த மென்டல் கேஸ் continue பண்ணும். அந்த கண்டுபிடிப்பாளர்களும் இவனது நாடகத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.
ஒருசிலர் தனது கொள்கையிலிருந்து விலகுவதில்லை  என்று பிடிவாதமாக இருப்பார்கள். ஒரு சாக்கடையின்  லெவலுக்கு இறங்க வேண்டாம் என்று இருப்பார்கள். ஒரு கையெழுத்து இவன் தலையெழுத்தை மாற்றிவிடும். அதுதான் நிலைமை. ஆனால் இந்த மென்டல் கேஸோ, "மாட்டிக் கொண்டால் தப்பிப்பது கடினம்" என்று இவன் யோக்கியதையை கண்டு பிடித்து சொல்பவர்களை மிரட்டுவது அல்லாமல் ஆக்சிடென்ட் என்ற பெயரில் ஆளை தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறானாம். வண்டி நம்பர் கைவசம் இருப்பது வேறு விஷயம். கூட்டம் அதிகம் நடமாடும் இடத்தில் கைவரிசையை காட்டினால் விபத்து என்று தப்பித்து விடலாம் அல்லவா.ஆனாலும் அந்தப் பைத்தியக்காரன் அவன் சாகும் வரையில் என் பெயரை ஜெபித்துக்கொண்டே இருக்கணும். அதுதான் நான் அவனுக்குக் கொடுக்கிற தண்டனை. அடுத்த ஆக்சிடெண்ட்டை எதிர்பார்க்கிறேன் என்கிறாளாம். அப்படியும் சில சாக்கடைகள். இப்படியும் சில மனிதர்கள்.
இப்படியொரு உலக மகா அயோக்கியனாக இருக்கிறோமே என்பதை நினைத்து வெட்கப் படுபவர்கள் இங்கே குறைவு. அயோக்கியத் தனத்தை கண்டுபிடித்து விட்டார்களே என்று ஆத்திரப்படுபவர்கள் அதிகம். இதுதான் உலகம்.

No comments:

Post a Comment