இன்று மின்வண்டியில் என்னுடன் பயணித்த இரு பெண்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டு வரும்போது "அது என்ன சொந்த செலவில் சூனியம் வைக்கிறது?" என்று கேட்டாள்.
இதற்கு விளக்கம் தரலாமா என்று நினைத்தேன். ஏனென்றால் இதே விஷயத்தை இதே தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
சொந்த செலவில் சூனியம் வைப்பதும் அடுத்தவனுக்கு குழி தோண்டுவதாக நினைத்து தனக்குத் தானே தோண்டிக்கொள்வதும் ஒன்றுதான்.
அயனாவரம் சிறுமி சம்பந்தப்பட்ட பேச்சும் அவர்களுக்குள் வந்தது.
அகப்பட்டுக் கொண்ட 17 பேர் மட்டுமல்ல. இவர்களை போல கேடுகெட்ட ஜென்மங்கள் எத்தனை எத்தனை இந்த உலகம் முழுவதும்! இந்த நாட்டில். நிறைய பேர் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் அவ்வளவுதான் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். வம்புக்கென்று அலையும் கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கிறது.
ஆனால் அந்த வம்பு எல்லா இடத்திலும், எல்லாரிடமும் செல்லுபடியாகாது.
சொல்லி அடிக்கிற பேர்வழிகள் சிலர் உண்டு. இவர்களுக்கு எதிராக யாருடைய முதுகின் பின்னாலாவது ஒளிந்து கொண்டு அயோக்கியத்தனம் செய்யும் கூட்டம் ஒன்றும் உண்டு.
சில ஜென்மங்களுக்கு நேரம் சரியில்லாவிட்டால் இந்த சொல்லி அடிக்கிற பேர்வழிகள் வழியில் நின்று கொண்டு வம்புக்கு இழுப்பார்கள். நேரில் வம்புக்கு வர தைரியம் கிடையாது. ஆனால் அவர்கள் வீட்டுப் பெண்கள் உடலை வருத்தி சம்பாதித்துக் கொடுப்பதை எல்லாம், இவர்கள் சௌகரியத்துக்கு கூலிப்படைக்குக் கொடுத்து அடுத்தவர்களிடம் வம்பிழுக்க வைத்து வேடிக்கை பார்ப்பார்கள். இந்த எடுபிடிகளுக்கு துட்டை வாரிவழங்குவார்கள். காசை கொடுத்தவன் சொல்லிக் கொடுத்த வசனத்தை ஒரு நாளைக்கு ஒருஆள் வீதம் வந்து ஒப்பித்து விட்டு போனாலும் .சொல்லி அடிக்கிற பேர்வழிகள் அதை கண்டு கொள்ளாதது போல் இருப்பார்கள்."ஆஹா..அவர்கள் நம்மை ஒன்னும் செஞ்சிடலையே !" என்ற மிதப்பில் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து அவர்கள் குடியிருக்கும் வீட்டுப்பக்கமோ அல்லது வேலை பார்க்கும் அலுவல கத்திலோ இவர்களுக்கு "மாமா வேலை" பார்க்க ஆட்களை ஏற்பாடு பண்ணுவார்கள். அதுங்களுக்கு விஷயம் புரியாமலே , "அடடா.. எப்பேர்ப்பட்ட மனுஷன் நம்மளத் தேடிவந்து இந்த வேலை கொடுத்திருக்கிறான்" என்று நினைத்து உளவு வேலை செய்து கொண்டு இருக்கும்.
பிரச்னை என்று வரும்போது இந்த சொல்லி அடிக்கிற பேர்வழிகள் என்ன செய்வார்கள் தெரியுமா ? தினமும் வந்து வாசலிலும் வெளியிலும் நின்று குரைத்துவிட்டுப் போகும் முகம் தெரியாத நாய்களைப் பற்றி கவலையே படமாட்டார்கள். வீட்டு அருகிலும், அலுவலகத்திலும் அண்டர்கிரவுண்ட் வேலையை விழுந்து விழுந்து சின்ஸியராக பார்த்தார்களே, அவர்களை விசாரித்தால் விஷயம் வெளியில் வரும் என்று சொல்லி விட்டு விலகிக் கொள்வார்கள்.
இங்கே தான் இருக்குது வேடிக்கை. எப்படி என்றால் இவர்கள், "அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று சொல்லி தப்பிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் உதிர்த்த ஒவ்வொரு பொன்மொழியும் ஆல்ரெடி ரெகார்ட் ஆகி இருக்குமே.
உண்மையை எப்படி வரவழைக்க வேண்டும் என்பது மற்றவர்கள் வேலை . அது நமக்கு தேவை இல்லாத ஒன்று.
தாங்கள் தப்பித்துக் கொள்ள, "அவங்களுக்கு பிரச்னை கொடுக்கிறவங்களை கண்டு பிடிக்க தான் நாங்க இதை செய்கிறோம் " என்பார்கள்.
இதை சொன்னாலும் அடுத்து ஒரு கேள்வி வரும் தானே ?
அவங்களுக்கு பிரச்னை என்று உனக்கு சொன்னது யார் ?
பிரச்னையை தீர்க்க ஏற்பாடு பண்ணினது யார் ?
சம்பந்தப்பட்ட ஆளுக்கு வீடு வாசல் இல்லையா ? தெருவோரம் காவல் காக்கும் உன்னைக் கண்டு பிடிச்சு வீர பராக்கிரமம் காட்ட சொன்னது யார் என்ற கேள்வி வருந்தானே ?
அதற்கு மேல் என்ன நடக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இந்த மாதிரி பேர்வழிகள் மாட்டும்போது அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்றுதான் நான் சொல்வேன்.
அவர்கள் செய்யும் கேவலமான தொழிலை அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து இணைய தளம் எத்தனை உண்டோ அத்தனையிலும் பதிவு செய்ய வேண்டும் என்பேன்.
அதை பார்க்கும், இந்த அயோக்கியர்களின் அக்கம் பக்கத்தினர், இவர்கள் வீட்டுப் பெண்களிடம் "என்னம்மா , உன் வீட்டு ஆம்பிளை என்னவோ வெட்டி முறிக்கிற வேலை பார்கிறார்னு சொல்லிக்கிட்டு திரிவே. கடைசியிலே இந்த வேலைதான் பார்த்தானா ?" என்று கேட்க வேண்டும்.
"என்னடா .. உன் அப்பா பெரிய பிஸ்தா.. அப்படி இப்படினு சொல்வியே.. இதான் உன் அப்பன் பார்த்த வேலையா?" என்று அந்த குடும்பத்துப் பிள்ளைகளிடம் கேட்க வேண்டும்.
அதைக் கேட்டு அவர்கள் கூனிக் குறுகும் போதாவது பெரிசுகளுக்கு அறிவு வரட்டும்.
சில சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை செய்தியாகப் படிக்கும்போது அதை பற்றி நட்பு வட்டத்தில் பேசும்போது நான் மேலே சொல்லி இருக்கிற மாதிரியான தண்டனையைத் தான் அவர்களுக்கு தரவேண்டும் என்பேன்.
அப்படி நான் சொல்லும் போது எனது நெருங்கிய தோழி ஒருத்தி ."என்ன அருணா.. இவ்வளவு அசடா இருக்கீங்க. ஒரு சாக்கடையிலிருந்து இன்னொரு சாக்கடைதான்உற்பத்தியாகுமே தவிர சந்தணம் உற்பத்தியாகாது. இவனுக்குப் பிறந்தது இதைவிட சாக்கடையாக இருக்கும்.. அதுமட்டுமல்ல. எனக்கு தெரிஞ்ச பெண் ஒருத்திகிட்டே ஒருத்தன் வம்பிழுக்கிறதை வேலையா வச்சிட்டு இருந்தான். அந்தப்பெண் "நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா ?" என்று கேட்க அந்த ராஸ்கல் ஒரு கூலிக்காரனை ஏற்பாடு செய்து ஒரு ஆபாச செய்கையை செய்ய சொல்லி "ஆம்பிளை" என்று சொல்ல சொல்லி இருக்கிறான். இந்தப்பெண் கொஞ்சமும் சளைக்காமல், "ஓஹோ..இந்தக் கூட்டத்தை வச்சுதான் உன் பொண்டாட்டிகிட்டே நீ ஆம்பிளைனு நிரூபிச்சியா ?'னு கேட்டு விட்டாள். இதைவிட ஒரு அடி ஒருத்தனுக்கு வேண்டுமா? கூனிக் குறுக வேண்டாமா? ஆனால் நெஞ்சை நிமிர்த்தி வீரம் பேசிட்டு திரிகிறான்.. இதுதான் உலகம் " என்றாள்.
உலகத்தை எங்கெங்கோ கொண்டு போகப் போகிறோம் என்று தலைவர்கள் முழங்கி கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் உலகம் போகிற போக்கைப் பார்த்தால், அது அடித்துக் கொண்டுதான் சாகும் என்று நினைக்கிறேன்.
இறைவா .. இன்னொரு புத்தன் ..இயேசு.. காந்தி.. நபியை சீக்கிரம் அனுப்பி வை.!

No comments:
Post a Comment