முதலில் ஒரு ஜோக் :
"பொண்ணு பார்க்கப்போனியே.. பொண்ணு எப்படி இருக்கிறா?"
"காலில் கிடக்க வேண்டிய வெள்ளிக்கம்பி தலையில் இருக்கு. இடுப்பு பக்கம் இருந்து எட்டிப் பார்க்க வேண்டியது கழுத்தை மட்டும் எட்டிப் பார்க்குது., உள்ளே அடங்கி இருக்க வேண்டியது, வெளியே ரொம்பவும் எட்டிப் பார்க்குது. குட்டையா இருக்க வேண்டிய ஒன்னு ரொம்பவும் நீளமா இருக்கு !"
(இந்த ஜோக் புரியாதவங்களுக்கு ஒரு விளக்கம்: பொண்ணோட தலையில் நரைமுடி வந்துட்டுது. தலைமயிர் கழுத்தைத் தொடும் அளவு தான் நீளம் உள்ளது. ஆனால் நாக்கு ரொம்பவும் நீளம்.)
எதற்கு இந்த ஜோக் உதாரணம்னு இந்த பகுதியை படிக்கும் உங்களுக்கு தெளிவாகவே புரியும்.
வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்க சென்னைவாசிகளுக்கு எலெக்ட்ரிக் ட்ரைன்கள்தான் கிடைத்தற்கரிய வரப்பிரசாதம்..கண்கண்ட கடவுள்
அவை இருக்கும் நிலைமை ?
லேடீஸ் கம்பார்ட்மெண்டில் ஒரு particular பெட்டியில் பிடிமானம் இல்லாத இருக்கைகள். யாராவது உட்கார்ந்தால் கீழே விழ வேண்டியது தான். இன்னொரு ட்ரைனில் உள்ள இருக்கைகளை இணைக்கும் ஆணிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதால், உட்காருபவர்கள் உடம்பையும், உடையையும் பதம் பார்த்து விடுகின்றன . இன்று காலை என் அருகில் உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணின் உடையை ஆணி பதம் பார்த்துவிட, அழாத குறையாக அந்தக் கிழிசலை கையால் நெருடிக் கொண்டிருந்தாள். என் கைவசம் இருந்த band aid sticker ஒன்றை அதில் ஒட்டி வைத்தேன். அதில் உட்காருகிறவர்களை எச்சரிக்கவும் செய்தேன்.
சிலநாட்களாகவே வீட்டில் துணி துவைக்கும்போது, புடவையின் கிழிந்த பகுதியைப் பார்த்து விட்டு இந்தப்புடவையில் கிழிசல் எப்படி வந்தது என்று யோசிப்பேன். இன்று அதற்கு விடை கிடைத்தது.

பல படிக்கட்டுகளில் உள்ள இரும்பு தகடு காணாமல் போய்விட்டது. பாதி அளவில் படிக்கட்டு பேருக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது. கவனமாக காலை வைக்காவிடில், குட்டிக் கரணம்தான். (எத்தனை பேர் நிலை தடுமாறி இருக்கிறார்கள் என்பதை உங்கள் CCTV ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். (அப்படி ஒன்று இருக்குது தானே?)
ரயில் பெட்டிகளில் வெறும் கைவிரல்களால் கோலம் போடலாம். அந்த அளவுக்கு தூசி.
ஆனால் பிளாட்பார்ம் (தாம்பரம் ஸ்டேஷனில்) முழுக்க பளபளப்பான, வழுக்கக் கூடிய டைல்ஸ். ரயிலில் பயணிப்பவர்களில் குழந்தைகள் உண்டு. வயதானவர்கள் உண்டு. ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடி வருபவர்கள் உண்டு. மழை நாட்களில் மெதுவாக காலடி எடுத்து வைத்தால் கூட காலை வாரிவிடும் அளவுக்கு வழவழப்பு.
படிப்பறிவில்லாத நிலையில் பல பேர் இருந்த காலத்தில் கூட எந்தெந்த இடத்துக்கு எந்த மாதிரி தளம் போடவேண்டுமென்று சிந்தித்து செயல் பட்டார்கள்.
விஞ்ஞானத்தில் முன்னேறி விண்ணைத் தொடுகிற அளவு டெக்னாலஜி வளர்ந்தும், பலபேர் நடமாடுகிற ஒரு இடத்தில் இப்படியொரு தரை அமைப்பை கொடுக்கிறோமோ என்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் தளம் போட்ட புண்ணியவான் யாரென்பது தெரிந்தால் எனது சொந்த செலவில் அவனுக்கு சிலை வைப்பேன். தாம்பரம் ஸ்டேஷன் வாசலில். (நீங்கள் அனுமதித்தால்).
ட்ரெயினில் பிச்சை எடுக்க வந்த ஒரு வயதான பெண்மணியை காவல் மகளிர் எச்சரித்து விட்டு, யாரும் பிச்சை போடக்கூடாது என்று சொல்லி விட்டுப் போனார்கள். அந்த பெண் கண்ணீர் விட்டு அழுதது மனதை உலுக்கியது. அன்றைக்கென்று கைவசம் பிஸ்கட் பாக்கெட் எதுவும் இல்லை. பாட்டிலில் இருந்த மாதுளை ஜுஸைக் கொடுத்தேன். அப்போது கூட அந்தப்பெண், "இதை எங்கிட்டே கொடுத்துட்டு நீ என்ன செய்வே ?" என்று கேட்டபோது, மனதில் ஒரு பாரம் ஏறியது.
ஆனால் படிக்கட்டுகளில் வியாபாரம், பிச்சைக்காரக் கும்பல் எல்லாமே உண்டு.
நான் பார்த்த இரண்டு ஸ்டேஷனில் இந்த நிலைமை. மற்ற நிலையங் களின் லட்சணம் எனக்கு தெரியாது.
ஒரு நாட்டின் முதுகெலும்பு ரயில்வே. அதுவே இந்த நிலையில் இருந்தால் மற்றவற்றை என்னவென்று சொல்வது.
நாம செவ்வாய்க்கு புதனுக்கு போற கதையை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். மேலே சொன்னவை மிக எளிதில் தீர்த்து வைக்கக் கூடியவை. அதற்கு ஒரு தீர்வு காணுங்கள். நான் சொல்கிற குறிப்பிட்ட நிலையங்களில் மட்டும் அல்ல. அனைத்து நிலையங்களிலும்.
டிக்கெட் என்கிற பெயரில் கேட்கிற பணத்தைக் கொடுக்கிறோம். அதற்கான அடிப்படை வசதி செய்து தர வேண்டுந்தானே ?!
போன மாதம் நடந்த ஒரு சம்பவம். இது ரயில்வே மற்றும் பெண்களின் பார்வைக்காக.
திரிசூலம் ரயில் நிலையத்தில், ஒருநாள் காலை 09.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து வந்த ட்ரெயின் ஒன்று, நின்று கிளம்பும் நேரத்தில் ஒரு வட இந்தியக் குடும்பம் ஓடி வந்தது. கணவன் மனைவி, 5 வயது மதிக்கத் தக்க இரு குழந்தைகள். அவர்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கி வருபவர்கள், வடநாட்டினர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். தமிழ் அவர்களுக்குப் புரியவில்லை.
மனைவி, குழந்தைகளை ரயில் பெட்டியில் லேடீஸ் கம்பார்ட்மெண்டில் அவர் ஏற்றும் போதே ட்ரெயின் மூவ் ஆகத் தொடங்கி விட்டது. கணவன் அதே பெட்டியில் ஏற முயற்சி செய்ய, entrance ல் நின்று கொண்டிருந்த லேடீஸ் , 'ஜென்ட்ஸ் ஏறக்கூடாது " என்று கத்த, இவர் இறங்க முயற்சி செய்ய, முடிவில் ட்ரெயின் இவரை பிளாட்பார்மில் இழுத்துக் கொண்டு செல்ல, லேடீஸ் உள்ளிருந்து கூச்சல் போட, பிளாட்பார்மில் நின்று கொண்டு இருந்தவர்கள் இவரைப் பிடிக்க ஓடி வர, ஒரே கூச்சல்தான். உட்கார்ந்து கொண்டிருந்த நான், விண்டோ அருகில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், செயினைப் பிடித்து இழுக்க சொன்னேன். அந்தப் பெண் இழுத்தாள். ட்ரெயின் நின்றது. அங்கிருந்தவர்கள் அவர் குடும்பத்தினரை கீழே இறக்கி, அவரை ஆசுவாசப் படுத்த முயற்சி செய்தனர். அதற்குள் ரயில் வே ஊழியர் ஒருவர் யார் செயினைப் பிடித்தது என்று கோபக் குரலில் கேட்டபடி அங்கு வந்தார். "நான்தான் "னு அவரிடம் சொல்லுங்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, வேறொரு லேடி , "எமெர்ஜென்ஜிக்கு தானே அதை மாட்டி வச்சிருக்கீங்க ?" என்று கேட்டதும் அந்த இடத்தை விட்டுப் போய்விட்டார் அவர்.
கண் எதிரில் ஒருவர் ரயிலில் மாட்டி சின்னாபின்னம் அடைய வேண்டிய சூழ்நிலை மாறி யார் செய்த புண்ணியத்தாலோ அந்தக் குடும்பம் ஒரு விபத்தில் இருந்து தப்பியது.
அந்த பெட்டியில் இருந்த சிலர், வாசலில் நின்று கொண்டிருந்த லேடீஸை திட்டினர்.
"அறிவு கெட்ட நாய்களே, அவங்களை பார்க்கும்போதே வடநாட்டுக் காரன்னு தெரியுது. ஓடி வந்த அவசரத்தில் அது லேடீஸ் பெட்டினு தெரியாமே ஏறிட்டார். அடுத்த ஸ்டேஷன் வரும்வரை உங்களுக்கு பொறுமை இல்லையா? பஸ்ஸில் அத்தனை பேர் கூட இடிச்சுக்கிட்டு போறீங்க. தெரியாமே ஒருத்தன் ஏறிட்டால்தான் என்ன ? உங்க கற்பு காணாமே போயிடுமா ?" என்ற அளவுக்கு திட்ட ஆரம்பித்தார்கள்.
இந்த சம்பவத்துக்கு ட்ரைவரோ, கார்டோ, நிர்வாகமோ பொறுப்பு எடுக்க முடியாது. அவர்களை குறை சொல்ல முடியாது. மனித ஆற்றலை / சக்தியை மீறி நடக்கும் சம்பவம் இது.
ஆனால், ஏறி வர முயற்சி செய்த ஒருவரை, இறங்க சொல்லி சாகடிக்க முயன்றதையும், சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியதை தேசத் துரோகம் மாதிரி கேள்வி கேட்டதையும் மறக்கவே முடியாது.
சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள முயற்சி செய்வோமே.. அனைவருமே தான்.
எனக்கு மிகவும் பிடித்தது ரயில் பயணம். விமானத்தில் பறப்பதை சிலர் பெருமையாக நினைப்பார்கள். அவர்களை நான் அனுதாபப் பார்வை பார்ப்பேன்.
ஒரு மணி நேரத்துக்கு மேலே என்னால் விமானத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க முடியாது, வெறுமே மேகக்கூட்டத்தைப் பார்த்தபடி. ஒருமுறை மும்பை போனேன். அந்தமான் போனேன். சிங்கப்பூர் போக என் பிரெண்ட் கூப்பிட்டாள். அங்கே போக ட்ரெயின் விட்ட பிறகு போகலாம் என்றேன். இதையெல்லாம் மீறி நயாகரா பார்க்கும் ஆசை உண்டு. ஹூம்... பார்க்கலாம்.. பார்க்கலாம்.
ட்ரைனில் விண்டோ சீட் அருகில் உட்கார்ந்து கொண்டு காடுமேடு, ஊர், குளம், குட்டை, வயல்வெளி,கடை, மனித நடமாட்டம் என்று பார்த்து ரசித்தபடி பயணம் செய்வது தனி சுகந்தான்.

No comments:
Post a Comment