Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Wednesday, February 21, 2018

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (34)

Image result for cartoon  of grand son and grandpa
"என்ன யோசனை? காஃபி ஆறுது "
"நமக்கு ஏழு கழுதை வயசாகுது. எதையும் சுயமா சிந்திக்கத் தெரியலே. இப்போ சின்ன சின்ன புள்ளைங்க கூட என்னமா மடக்குது நம்மள !"
"புரியுறாப்லே சொல்லுப்பா.."
"இன்னிக்கு காலைலே என் பேரனுக்கு பாடம் சொல்லிக் குடுத்துட்டு இருந்தேன். என் கைலே ஒரு கொசு வந்து உக்காந்துச்சு. பட்னு அடிச்சேன். செத்துப் போயிட்டுது. அதைப் பார்த்திட்டிருந்த என் பேரன் திடீர்னு 'தாத்தா , கொசுக்கெல்லாம் சங்கம் உண்டா? கட்சி உண்டா'னுகேட்டான்.
"அதெல்லாம் கிடையாது. நான் கோவிலுக்குப் போகணும். சீக்கிரம் வீட்டுப் பாடத்தை எழுதி முடி. இப்போ கொசுவைப் பத்தி என்ன பேச்சு வேண்டி இருக்கு?"னு கேட்டேன். 
உடனே, "கொசுவுக்கு பேசற சக்தி இருந்தா, இப்போ செத்துப் போச்சே அந்த கொசுவோட அம்மா அதோட சங்கத்து ஆளுங்க .. அதான் எல்லா கொசுவையும் கூட்டிட்டு வந்து 'என் பிள்ளை உன்னை கடிச்சான். நீ சாகலே. ஆனா நீ அடிச்சதும்  என் புள்ளை செத்துப் போயிட்டான்.அந்த கொலைக்கு உனக்கு என்ன தண்டனை குடுக்கலாம்'னு கேட்கும்தானேனு கேட்கிறான். எனக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியலே. மோட்டுவளைலே நின்னு காக்கா கூட்டம் கத்திட்டு இருந்துச்சு. வழக்கமா அதுங்களுக்கு காலைலே எதையாவது வைப்பேன். சாப்பிட்டுட்டு போயிடும். இன்னிக்கு திரும்பவும் வந்து கத்தவும் 'இங்கே வந்து கத்தறதே உனக்கு வேலையா போச்சு. என்ன கொடுத்தாலும் எவ்வளவு கொடுத்தாலும் உனக்கு திருப்தியே கிடையாது.  நாலு இடம் அலைஞ்சு திரிஞ்சு சாப்பாட்டைத் தேடு'னு சும்மா வேடிக்கையா சொன்னேன். சொல்லிட்டு 'இன்னிக்கு கோயிலுக்குப் போயிட்டு வந்த பிறகுதான் உனக்கு சாப்பாடு'னு சொன்னேன்.
அதைக் கேட்டதும், என் பேரன், 'தாத்தா... நீ கோயிலுக்குப் போய் சாமிகிட்ட அதை குடு .. இதை குடுன்னு சும்மா சும்மா கும்பிட்டுட்டு வர்றியே .. சாமியும் இந்த காக்காவைப் பத்தி நீ நினைக்கிற மாதிரிதானே உன்னைப் பத்தி நினைப்பார்'னு ஒரு வார்த்தை சொன்னான். நான் அசந்து போயிட்டேன்.. பய புள்ளைகளுக்கு மட்டும் எப்படித்தான் இப்படி பேசத் தெரியுதோ தெரியலே. கட்டைலே கொண்டுபோய் வைக்கிற வயசாச்சு நமக்கு. சுயமா எதுவும் யோசிக்க தெரியலே " என்று பெருமூச்சுடன் சொன்னார் இவர்.  

No comments:

Post a Comment