Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, January 19, 2018

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (33)


Image result for cartoon child climbing in staircase
"ஸாரிப்பா .. ரொம்ப நேரம் வெய்ட் பண்ண வச்சுட்டேனா? இதோ அஞ்சு நிமிஷத்தில் திரும்பிடலாம்னு நான் ஒரு கணக்கு போட்டேன். கணக்கு தப்பா போச்சு. மணிக்கணக்கில் காத்திருக்கும்படி ஆயிடுச்சு.. ஸாரிப்பா .."
"அதனாலென்ன ! ராஜாங்க வேலை ஒண்ணும் கெட்டுப்போயிடலே .. ஆனா ஒரு விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்காக நாந்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.."
"என்னப்பா?"
"அதோ எதிர் வீட்டில் வேலை செய்றாங்களே..."
"ஆமாம்.. கற்பகம் .. அது அவங்க பசங்க.. குழந்தைகளுக்கு ஸ்கூல் லீவுங்கிறதாலே ஒரு வாரமா அவங்களையும் அழைச்சுக்கிட்டு வர்றாங்க. வீட்டில் தனியா இருக்க வேண்டாம்னு கையோட  கூட்டிட்டு வர்றாங்க. ."
"குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பறதில் இப்படியொரு வசதியா?"
"ஆமாம். நீ சொல்ல வந்ததை சொல்லு.."
"அந்தம்மாவோட ரெண்டு குழந்தைகளும் மாடிப்படியில் ஏறி இறங்கி விளையாட்டிட்டு இருந்துதுங்க.. அந்தம்மா அப்பப்போ எட்டிப் பார்த்து அந்த  பெரிய பையன்கிட்டே 'தம்பி படி ஏறுறப்ப நீ அவனுக்கு பின்னாடியே ஏறு.. அவன் படி இறங்கிறப்ப நீ அவனுக்கு முன்னாடி இறங்கி வா'னு சொல்லிட்டுப் போனாங்க.. எனக்கு ஏன்னு புரியலே. அதை தெரிஞ்சுக்கலேன்னா தலை வெடிச்சிடும் போல இருந்துச்சு. ஏன் அப்படி சொல்றீங்கனு அந்தம்மா கிட்டேயே கேட்டேன். அதுக்கு அவங்க, சின்னக் குழந்தைங்க ஏறுறப்ப இறங்கிறப்ப கால் தவறி கீழே விழுந்திடுவாங்களே..  அதுங்க  ஏறும் போது நாம் பின்னாடியும், அதுங்க இறங்கும்போது நாம முன்னாடியா இறங்கினா அதுங்க படியில் உருண்டு விழுறப்ப  நாம பிடிச்சுக்கலாம்தானே'னு சொன்னாங்க..அதப்பத்தி யோசனை பண்ணிட்டு இருந்தேன்."
"இதில் யோசிக்க என்ன இருக்குது?"
"குழந்தைங்க விஷயத்தில் அவங்க அப்படி யோசிக்கிறாங்க .. ஆனால் ரியல் லைஃப்பில் எவனாவது வாழ்க்கையில் முன்னேறினா வயிறு எறிவோம். கீழே விழுந்தா மனசுக்குள் சந்தோஷப்படுவோம். இதுதானே நிதர்சனமான உண்மை.. சும்மா வெட்டி பந்தாவுக்கு, நம்மள பெரியமனுஷனா காட்டிக்கிறதுக்கு வேணும்னா அப்படியெல்லாம் கிடையாதுன்னு சொல்லிக்கலாம். ஆனா உண்மைன்னு ஒண்ணு இருக்குதானே? அதை நினைச்சேன். சிரிப்பாவும் இருந்துது. வெட்கமாவும் இருக்குது "
"அட.. ஆமாம்ல ..!"

No comments:

Post a Comment