Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Thursday, November 02, 2017

Dear Viewers,

எங்கள் வீட்டு மொட்டை மாடிக்கு புறாக்கூட்டம் வரும். எங்கிருந்து வருகிறது. அது யார் வீட்டுப் புறா என்பதெல்லாம் தெரியாது. காலையில் 06.30 க்கு வந்து மாடியின் கைப்பிடி சுவரில் வரிசையாக உட்கார்ந்திருக்கும்.
காலை 08.30, 10.30, 12.30, மாலை 03.30,05.00 என்று நேரம் கணக்கு வைத்து அதற்கு சாப்பாடு வைப்போம். கோதுமை, கம்பு, வெள்ளை சோளம் - இந்த மூன்றும் ரெகுலர் ஆக உண்டு. எப்போதாவது பொரிகடலை போடுவேன்.
புறாக்களுக்கு பொரிகடலை இஷ்டமான ஒன்று என்பது தெரிந்தது. 
மற்ற ஐட்டங்களை நான் போடும்போது, தள்ளி நின்றுகொண்டு நான் நகரும்வரை காத்திருக்கும் புறாக்கூட்டம், பொரிகடலையை   போட்டு விட்டு நான் நகர்வதற்குள் என் பின்னாடியே வரும். டெஸ்ட் பண்ணி பார்ப்பதற்காக மாடிப்படிக்கட்டில் கடலையைப் போட்டதும் அவை இறங்கி வர ஆரம்பித்து விட்டன.
சிலசமயம் கரெக்ட்டான நேரத்தில் சாப்பாடு போட நான் மறந்து விடுவேன்.
கொஞ்சநேரம் பொறுத்து பார்த்துவிட்டு வீட்டு ஜன்னலில் வந்து நின்று கொண்டு குரல் கொடுக்கும்.
எங்கள் வீட்டுக்கு வந்த தம்பியிடம் இதை சொன்னதும், உடனே மொபைலில் போட்டோ வீடியோ எடுத்து எனக்கு மெயில் அனுப்பினான். 
இதை எடுக்கும்போது மழைநாள் என்பதால் சில புறா மட்டுமே வந்தது. 
சாதாரணமாக குறைந்தது 50 புறா வரும்.
மொட்டைமாடி கதவை நான் திறக்கும் சத்தம் கேட்டதுமே, ஆஸ்பெஸ்டால்ஷீட்டில்நின்று கொண்டு அப்படியொரு குதிகுதிக்கும். 
புறா உங்கள் பார்வைக்கும்.  












பிடிச்சிருக்கா.?

No comments:

Post a Comment