Thursday, December 10, 2015 ல் மாமழை போற்றுதும் !! என்ற தலைப்பில் எனது பதிவொன்றை நீங்கள் படித்திருக்கலாம்.
இப்போதும் நாம் பேசப்போவது மழை பற்றித்தான்.
அதுக்கு முன்னாலே முக்கியமான ஒன்றை பேசிவிட்டு மழையைப் பத்தி பேசலாம். கொஞ்சம் விரிவாக பேசப்போறோம். உங்களுக்கு இருக்கிற வேலையை விட்டுட்டு படிக்க உக்கார்ந்திடாதீங்க. நேரம் கிடைக்கிறப்ப படிச்சா போதும்.
இங்கு பேசப்படும் விஷயங்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.படிச்சிட்டுகோபப்படலாம். இந்தப்பதிவே ஒன்றுக்கொன்று உடன்பாடு இல்லாமல் மாறுபாடாக இருப்பதை உணரலாம். என்னைப் பொறுத்தவரை - ஒரு சந்தர்ப்பத்தில் சரி என்று சொல்லப்படற விஷயம் வேறொரு சந்தர்ப்பத்தில் தப்பாகப் படலாம்.
சேனல் தர்மவான்களே / புண்ணியவான்களே - நல்ல விஷயத்தையும் நீங்க செய்றீங்க. இவனுகளை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சா என்ன என்று வீட்டில் உக்காந்து பொழுது போக்காக சேனல் பார்க்கிறவங்க கூட ஆத்திரப்படற வகையில் சொதப்புறதும் நீங்கதான்.
கேள்வி கேட்பது நல்ல விஷயந்தான். கேள்வி கேட்டால்தான் பதில் கிடைக்கும். நடக்கும் விஷயம் பற்றிய உண்மை நிலவரம் தெரியும். அதை எங்கெங்கு கேட்கவேண்டும், எந்த சந்தர்ப்பத்தில் கேட்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அரசியல் விஷயங்கள் பற்றி எங்கு கேட்கவேண்டும். பொது / தனிப்பட்ட விஷயங்கள் நடக்கும் இடத்தில் அது பற்றி பேசலாமா என்ற தெளிவு வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு செவாலியே சிவாஜி இறந்தபோது, சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டு வெளியில் வந்த நடிகர் பிரபுவிடம், "உங்க மனநிலை எப்படி இருக்கிறது ?" என்று முட்டாள்தனமான கேள்வி ஒன்றை கேட்டார் ஒரு நிருபர். (யார் எந்த சேனல் என்பது நினைவில் இல்லை. என்னிடம் உள்ள ஒரு பழக்கம். ஒரு பொன்மொழி ஆகட்டும். வேறு செய்தியாகட்டும். அதை மட்டும் நினைவில் வைத்திருப்பேன். சொன்னது யார் என்று CARE பண்ண மாட்டேன்.) அந்த நிருபருக்கு பிரபு பொறுமையாக பதில் சொன்னார்.
அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் : "எங்க அப்பாவுக்கு கொஞ்சமும் ரத்த சம்பந்தம் இல்லாத எத்தனையோ பேர் அவங்க வீட்டு இழப்பாக நினைச்சு அழறாங்க. அவருக்கு மகனாக பிறந்த என்னோட வருத்தம் என்ன என்பது நான் சொல்லித்தான் உனக்குத் தெரியணும்னா உனக்கு தெரிஞ்சு ஆகவேண்டியது எதுவும் இல்லே.போடா நாயே " என்று சொல்லி இருப்பேன்.
அன்று இருந்த அதே கோபத்தை வரவழைத்தது கடந்த இரண்டு நாட்களாக நான் சேனலில் பார்த்த விஷயங்கள்.
பொதுவாக சேனல் நியூஸ் படிக்கும்போது, இந்த இடத்திலிருந்து எங்கள் செய்தியாளர் பேசுவார் என்ற அறிவிப்பு வரும். ஒரு சில செய்தியாளர் (Underline this word hundred times) திக்கித் திக்கி சொன்னதையே சொல்லு வார்கள். அதில் உருப்படி ஒன்றும் தேறாது.
போன மழை வெள்ளத்தில் அரசாங்கம் நிறைய விஷயங்களை செய்யத் தவறி விட்டது. இந்த மழையில் அவர்களும் முடிந்த வரையில் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கண்ட்ரோல் ரூம் போட்டு வர்ற கம்பளைண்ட்க்கு ஏத்தபடி நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிற / வேலை செய்து கொண்டிருக்கிற ஒருவரிடம் (அவர் யார் என்பதோ, பெயரோ நினைவில் இல்லை ) என்ன நடவடிக்கை எடுத்தீங்க? எத்தனை கம்பளைண்ட் வந்தது ? எத்தனைக்கு ஆக்ஸன் எடுத்தீங்க? என்று கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார் ஒரு நிருபர். அவரும் முகம் சுளிக்காமல் ரொம்பவும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
(அவர் பதில் சொல்லாமல், முக்கியமான பணியை செய்து கொண்டிருந்தால், "அவரை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை " என்று சொல்லி அதை திரும்பத்திரும்ப காட்டுவார்கள் என்று உள்மனது சொன்னது.)
(அவர் பதில் சொல்லாமல், முக்கியமான பணியை செய்து கொண்டிருந்தால், "அவரை தொடர்பு கொள்ள எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை " என்று சொல்லி அதை திரும்பத்திரும்ப காட்டுவார்கள் என்று உள்மனது சொன்னது.)
அதைப் பார்த்த எனக்கு கோபம் வந்தது. "இவன் கேட்கிற கேள்வியைப் போல நூறு பேர் மாத்தி மாத்தி கேள்வி கேட்கிறதும், இந்த ஆள் பதில் சொல்றதுமா இருந்தா மத்த வேலையை யார் கவனிப்பது? இந்த ஆள் ஏன் பொறுமையா பதில் சொல்லணும். மழை முடிஞ்சதும் வா. எத்தனை வந்துச்சு எத்தனை முடிஞ்சுதுனு சொல்றேன்னு சொல்லிட்டு இவர் வேலையைப் பார்க்க வேண்டியதுதானே என்று நானே கோபப்பட்டேன்.
(சில சமயம் யாராவது V I P இங்கு வர்றப்ப, "அவர் எத்தனை மணிக்கு வர்றார். அவரை எந்தெந்த வழியாக அழைச்சிட்டு போகப்போறாங்க. அதுக்காக என்னென்ன நடவடிக்கை செஞ்சிருக்காங்க " என்று நிருபர் இன்பர்மேஷன் கொடுத்துக்கொண்டிருப்பார் லைவ்ஆக. ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஒருசிலர் ஒரு வேலையை செய்ய அதை விளம்பரபடுத்தணுமா என்ன ?)
இன்னொரு முக்கியமான விஷயம். ஒரு பாதிப்பை படம் பிடித்து காட்டுகிறீர்கள். இரண்டு மூன்று நாட்கள் முன்பாக நடந்த ஒன்று / காட்டப்பட்ட ஒன்று திரும்பவும் ஒளிபரப்பாகும் போது, "இது இந்த தேதியில் பதிவு செய்யப்பட்ட தகவல்" என்பதை பதிவு செய்யுங்கள்.
போன மழை வெள்ளத்தில் நாங்கள் பிழைத்து வந்ததே பெரிய விஷயம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் முன்பாக வெள்ள நீர் வரவும் நான் பயந்தேன். சந்தோஷப்பட்டேன்
சந்தோஷத்துக்கான காரணம் முதலில் : சென்ற மழையின் போது அம்மா இருந்தாள். வயது 90க்கும் மேலே. நேரமாக ஆக மழைநீர் ஏறிக்கொண்டு வருகிறது. அம்மா விரும்பிக் குடிப்பது காஃபி மட்டுந்தான். ஆனால் பால் இல்லை. மூன்று நாளாகியும் தண்ணீர் வடியலே. வெளியே போகவும் வழி இல்லை. ஹெலிகாப்டர் நம்மள கண்டுக்கவே மாட்டேங்குது. இன்னும் மழை நிக்கலேன்னா அம்மாவுக்கு என்ன கொடுப்பது? இவளை எப்படி வெளியில் கொண்டுசெல்வது என்றகவலை எனது உயிர் பயத்தை விட அதிகம் இருந்தது. ஆனால் முஸ்லீம் அன்பர்கள் உதவியால் மூன்று நாட்கள் கழித்து மீட்கப் பட்டோம்.
கடந்த ஜூலை மாதம் அம்மா இறந்து விட்டாள். (உண்மையாக சொல்கிறேன் : நல்லவேளை ..மழையில் மாட்டிக்காமல், எந்த சேதாரமும் இல்லாமல் அம்மா நிம்மதியா செத்துப் போயிட்டா. ஓ காட். தேங்க்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன் இந்த நிமிடம் வரை.)
பயத்திற்கான காரணம்: எனது சகோதரியின் உடலில் ஏகப்பட்ட நோய்கள். ஆபரேஷன் இருமுறை ஆனதால் உடம்பு பெருத்து அவளால் நடக்க முடியாது. பஸ்ஸில் கூட ஏற முடியாது. அவளது சம்பாத்யத்தின் பெரும் பகுதி ஆட்டோ, கால் டாக்சிக்காக செலவழிந்திருக்கிறது.
மழைநீரோ ஏறிக்கொண்டிருக்கிறது. வெளியே போய் தங்கலாம் என்று கிளம்பி வழியில் எங்காவது மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. அதனால் வீட்டிலேயே இருந்தோம்.
தந்தி டீவி நிருபர் வந்து எங்கள் ஏரியாவை படம்பிடித்து, பேட்டி கண்ட செய்தியை, சேனலில் பார்த்துவிட்டு வெளியூரில் உள்ளவர்கள் எங்களுக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனது கவலை முழுவதும் சகோதரியை எப்படி பத்திரமாக வெளியிடத்துக்கு கூட்டிப் போவது என்பதுதான்.
எங்கள் பகுதியில் தண்ணீர் வந்த விவரம் மற்ற சேனலிலும் சொல்லப் பட்டுள்ளது.
தந்தி டீவிகாரங்க அந்த ஏரியாவை விட்டு போறப்ப தண்ணீரையும் கையோடு கொண்டு போய்ட்டாங்களோ என்று ஆச்சரியப்படும் வகையில், வீட்டை சூழ்ந்திருந்த தண்ணீர் அத்தனையும் காணாமல் போய்விட்டது சிறிது நேரத்திலேயே. எனக்கே ரொம்ப ஆச்சரியம். அந்த பகுதியில் உள்ள அத்தனை பேரும் நிம்மதி பெருமூச்சு விட்டோம்.
தண்ணீர் சூழ்ந்த விவரம் வேறொரு சேனலில் இரவு பத்துமணிக்கு மேல் வெளியாக, உறவினர்கள் போன் பண்ண ஆரம்பித்து விட்டார்கள், "என்ன திரும்பவும் தண்ணீர் வந்துட்டுதா ?" என்று.
வந்த அத்தனை போனுக்கும் "இப்போ அவங்க காட்டறது காலையில் நடந்த விஷயம். தண்ணீர் எல்லாம் வெளியேற்றப் பட்டு விட்டது. நாங்க இப்போ வீட்டில் படுத்துக்கொண்டு வசந்த் டீவியில் தேனருவி பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தோம்.
வெள்ளத்தை ஒளிபரப்பிய சேனல் "இது காலையில், இந்த மணி அளவில் உள்ள நிலவரம்" என்று குறிப்பிட்டிருந்தால், அந்த பகுதியில் குடியிருப்பவர்களின் உறவினர்கள் பயந்திருக்க மாட்டார்கள். அதை செய்யாததால் ஒரு குழப்பம்.
சேனல் / மீடியா அன்பர்களே இது போன்ற குழப்பங்கள் இனி வராமல் பார்த்துக்கொள்ளுங்களேன். ப்ளீஸ்.
இப்போ மெயின் பிக்சருக்கு வருவோம்.
மழை என்பது ஒவ்வொரு வருடமும் வருகிற இயற்கை நிகழ்வு. அது மனித இனத்தின் உயிர் நாடியும் கூட.
அந்தக்கால ராஜா கேட்பார் : "மந்திரியாரே ! மாதம் மும்மாரி பொழிகிறதா? " என்று.
இதை "ஒவ்வொரு மாதமும் மழை பெய்கிறதா" என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
அல்லது "மாதம் மும்முறை மழை பெய்கிறதா " என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது மழைக்காலம் என்பதே தமிழ் நாட்டைப் பொறுத்தவரை அதிக பட்சமே பதினைந்து அல்லது இருபது நாட்கள்தான் - ஒரு வருடத்துக்கு.
(அதைக்கூடசமாளிக்கும்நிலையில்நாம்இல்லைங்கிறதுவெட்கக்கேடான விஷயம். )
இந்த மழை இல்லாவிட்டால், விவசாயிகள் செய்கிற போராட்டத்தை, அத்தனை பொது ஜனமும் செய்ய வேண்டி இருக்கும்.
மழை / வெள்ளம் என்பது காலங்காலமாக உள்ள இயற்கை நிகழ்வு.
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது எங்கள் அப்பா சொல்லும் ஒரு விஷயம்.
"நான் சின்னவனா இருந்தப்ப மழை வந்தா சந்தோசப்படுவோம். மழை வந்தால் வெள்ளம் வரும். வீட்டு வாசலில் காய வச்சிருக்கிற விறகு / மிளகாய் வத்தல் எல்லாமும் அந்த வெள்ளம் அடிச்சிட்டு வரும். அதை நாங்க நீந்திப்போய் மீன் பிடிக்கிறமாதிரி மிளகாயை அள்ளிட்டு வருவோம். விறகை பிடிச்சிட்டு வந்து குடுப்போம் .. அப்போ அவங்க முகத்தைப் பார்க்கணுமே.. அவ்வளவு சந்தோசப்படுவாங்க " என்பார்.
அருகில் இருக்கும் அத்தையோ, "இவன் வீடு வந்து சேர்ற வரை நாங்க ஈரக்கொலையை கையில் பிடிச்சிட்டு இருப்போம்" என்பாள்.
(நேற்று டீவியில் பேரிடர் மீட்புக்குழுவை சேனலில் பார்த்தபோது அத்தை சொன்னது நினைவுக்கு வந்தது. இவங்க வீடு போய் சேருகிற வரை இவங்க வீட்டு ஆட்கள் உயிரைக் கையில் பிடிச்சிட்டுதானே இருப்பாங்க என்று நினைத்தேன்.
அம்மா அடிக்கடி சொல்வாள் : "எப்பேர்ப்பட்ட வீரனாகட்டும். நீரையும் நெருப்பையும் எதிர்த்து நிற்கமுடியாது. போராட முடியாது " என்று. ஆனால் அதையும் சிலர் செய்கிறார்கள். வயிற்றுபிழைப்புக்காகவோ அல்லது வாழ்க்கை லட்சியத்துக்காகவோ .. அவர்களுக்கு ஒரு கிரேட் சல்யூட் )
ஏரி இருந்த இடத்தில் கட்டிடம் கட்டிக் கொண்டது யாரோட தப்பு.? கட்ட அனுமதி கொடுத்தது யாரோட தப்பு? அதை எதிர்த்து போராடுங்க. நியாயம்.
எந்தவொரு பிரச்னைக்கும் இங்கு நிரந்தர தீர்வு இல்லை.
மரம் வளர்ப்போம் என்று பிரச்சாரம் செய்கிறோம். அதை சாலையோரம் வளர்ப்போம். மரம் என்ற ஒன்று இருந்தால் சருகு / குப்பை எல்லாமே உண்டு. அது அருகில் உள்ள சாக்கடையில்தான் விழும். அது சரியானபடி வெளியேற்றப்படாவிடில் தண்ணீர் தேங்கும்.
எந்தெந்த ஏரியா கழிவு நீரை எங்கெங்கு கொண்டு சேர்ப்பது என்ற தெளிவான தீர்வு இல்லை.
அதனால் ஒரு பகுதியில் வெள்ளம் வந்ததும், உடனே அடுத்த பகுதிக்கு திசை திருப்பி விடுகிறார்கள்.
அனுமதி இல்லாத இடத்தில் வீட்டை கட்டிக்கொண்டு, பாதிக்கப் பட்டோம் என்று புலம்புவது நியாயமில்லை.
மண்ணுக்கு முக்கியமாக நமக்கு மழை தேவை. அந்த மழை என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இருபது நாள் பிரச்னை.
அதை சமாளிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்போம். சோறும் தங்கும் இடமும் நிவாரணமும் நிரந்தர தீர்வு அல்ல.
கழிவு பொருளை அகற்றுவது / அழிப்பதில் நிரந்தர தீர்வு வேண்டும்.
"நான் அவனாக்கும்". "நீ இவனாக்கும்" என்பதையெல்லாம் மறந்துவிட்டு நீயும் நானும் என்ன செய்யலாம் என்று கூடிப் பேசுவோம்.
ஈகோ இல்லாமல் ஒருவர் சொல்வதை மற்றவர் அங்கீகரித்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
பொது மக்களின் குரலுக்கு அரசாங்கம் / அரசு ஊழியர்கள் செவி சாய்க்க வேண்டும். அநியாயமாக இரண்டு குழந்தைகள் உயிர் போய்விட்டது. பணம் உயிரை திரும்பக் கொண்டு வருமா ?
( வயிற்று பிழைப்புக்காக அஞ்சும் பத்தும் திருடுபவனுக்கு அடி உதை ஜெயில். ஆனால் ஒருத்தன் பண்ணின தப்பால் எத்தனை உயிர் போனாலும் வெறும் இடமாற்றம். இதே பாலிசியை திருடர்கள் விஷயத்திலும் செய்யலாமே. எந்தவொரு தப்பையும் பெரிய லெவலில் பண்ணினால் தண்டனை கிடையாது. விசாரணை என்ற பெயரிலேயே அவன் இறுதிக்காலம் வரை கேஸை இழுத்தடிப்போம். இது நியாயமா ? )
லஞ்ச ஒழிப்புக்கு எதிராக உறுதி மொழி எடுக்க சொல்லி மெஸ்சேஜ் . வந்துச்சு. எடுத்தேன். செர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.
ஒருவனுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒன்று கிடைக்காமல்தான் லஞ்சம் கொடுக்கிறான். இவன் மொய் எழுதின பிறகுதானே இவனை நிமிர்ந்தே பார்க்கிறார்கள்.
அதை தட்டிக் கேட்டால் "ஆயிரம் ரெண்டாயிரம் வாங்கிறவனை கேள்வி கேப்பீங்க. கோடி கோடியா சுருட்டினா வேடிக்கை பார்ப்பீங்க" என்று அப்பட்டமாக சொல்கிறார்கள்.
(ஒரு ரேஷன் கார்டுக்காக நாயாக அலைந்தேன். பொருட்கள் வாங்குவதற்காக அல்ல. GAS AGENCY கட்டாயப்படுத்தியது. அலைந்து திரிந்து கார்ட் வாங்கினேன். எந்த பொருளும் வாங்க முடியாது. வெறும் அட்ரஸ் ப்ரூப் மாதிரி வைத்திருக்கலாம். அவ்வளவுதான் என்று சொன்னார்கள். அதனால் நான் ரேஷன் கடை பக்கம் போனதே இல்லை.
ரேஷன் கார்டில் ஆதார் நம்பர்,போன் நம்பர் சேர்க்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள்.
ரேஷன் கடையை தேடிக்கண்டுபிடித்து கார்டை நீட்டினேன் சில மாதங்களுக்கு முன்.
உங்க கார்ட் இல்லை. எங்கள் ரெக்கார்டில் அது Dead என்றார்கள். இதுதான் எனக்குப் புரியவில்லை. நான் உயிரோடு இருக்கும்போது கார்ட் மட்டும் எப்படி இறந்தது?. யாருங்க கொன்னது?
விஷயம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.)
நாம் எல்லோருமே மனிதர்கள்தான். தேவர்கள் அல்ல. எல்லோருக்கும் உயிர் பயம் இருக்கிறது. வெள்ளம் வரும் முன்னே அணை போட்டிருக்க வேண்டும். போடவில்லை.
ஆனால் வெள்ளம் வந்ததும் அவனவன் உயிரை பணயம் வைத்து வேலை செய்கிறான். அவனுக்கும் குடும்பம் இருக்கிறது.
அவர்களை நாம் பாராட்ட வேண்டாம். ஆனால் நடக்கும் வேலையை குறை சொல்லாமல் இருப்போமே.
ஒரு இடத்தின் வறட்சி ஒட்டு மொத்த சமுதாய வறட்சி. எதிர்காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்று கூடிப் பேசி தீர்ப்போமே. ஊர் கூடி தேர் இழுப்போம்.
(ஹலோ வியூயர்ஸ். மழை இன்னும் இரண்டு மூணு நாளில் நின்னுடுமாம். வெள்ளம் பாதித்த உங்கள் வீட்டை சுத்தம் செய்த கையோடு, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் குடம், பக்கெட்டை கண்ணில்படுற மாதிரி எடுத்து வையுங்க. ஜனவரி பிறந்ததும் குடிக்கிற தண்ணீர் கேட்டு நாம சாலை மறியலுக்குப் போகணுமே . ரெடியா இருங்க.)
No comments:
Post a Comment