புதிர் எண் 20 வரையிலான விடை பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்கள் விடை யுடன் சரிபார்த்துக் கொள்ளவும்.
ஏற்கனவே பதிவு செய்த புதிர்களில் உள்ள சில தவறுகள் இன்று தற்செயலாக கண்ணில் பட்டது. அதை சரி செய்துள்ளேன்.
அந்தத் தவறுகள், விடை கண்டு பிடிக்கும் உங்கள் முயற்சிக்கு தடையாக இருந்திருக்கும் என்பதை அறிவேன். அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்து மன்னிக்க வேண்டுகிறேன்.
அதிகப்படியான எழுத்துக்கள் / கட்டங்கள் அமைத்து புதிர் அமைக்கும்போது முழு புதிரையும் மானிட்டரில் பார்க்க முடிவதில்லை. இங்கும் அங்குமாக நகர்த்தி படித்துப் பார்க்கும் போது என்னுடைய கவனக்குறைவால் சிறு தவறுகள் ஏற்பட்டுள்ளன.
இனி அது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முழு அளவு முயற்சி செய்வேன். அதிக எழுத்துக்கள் கொண்ட பழமொழிகளை தவிர்க்க முயற்சி செய்வேன். உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிக்கவும்.
உங்கள் கண்ணில் தவறுகள் படும்போது அதனை எனக்கு தெரிவிக்கலாம். விரிவாக சொல்ல உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம். அதனால் பிழைகள் உள்ள குறிப்பின் எண்ணை / நம்பரை எனக்கு தெரிவித்தால் போதும். சரி செய்வேன்.
எனது mail id - arunasshanmugam @gmail.com
நன்றி
No comments:
Post a Comment