Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 17, 2017

Scanning of inner - heart ( Scan Report Number - 158)

Image result for cartoon of college students              
        விஞ்ஞானம் வளர்ந்து விட்டது !!
"டேய் ரவி எங்கே இருக்கிறே?"
"வீட்டிலேதான் .. ஏன் ? என்ன விஷயம் ?"
"வெளியில் வந்து பேசு. பக்கத்தில் யாரும் இல்லாமே பார்த்துக்கோ "
சில நொடிகள் கழித்து ..
"மொட்டைமாடியில் இருக்கிறேன். என்னடா விஷயம்? எதுக்குடா இவ்வளவு டென்ஷன்  ?"
"டேய்..நம்ம பார்த்திபன் ஒரு பிகர் பின்னாலே சுத்துவானே..அவனோட சேர்ந்து நீ அது பின்னாலே போயிருக்கிறியா ?"
"யாரு.. கையிலே பேனாவை தூக்கிக்கிட்டு அலையுமே அதுவா ?"
"ஆமாம். நீ நல்லா யோசனை பண்ணிப்பாரு. என்னிக்காவது நீ பார்த்திபனோட சேர்ந்துக்கிட்டு அது பின்னாடி கமெண்ட் அடிச்சுகிட்டு திரிஞ்சிருந்தா இப்பவே தலை மறைவா எங்கேயாவது போய்ட்டு நான் சொன்ன பிறகு வீட்டுக்கு வா "
"நடக்கிற விஷயமா? எங்க வீட்டில் என்ன ஏதுன்னு கேட்பாங்களே."
"இதோபாருடா ..உன் நண்பனா  சொல்றேன்.. நீ என்னிக்காவது பார்த்திபன்கூட சேர்ந்து அது பின்னாலே சுத்தி இருக்கியா ?"
"ஆமாம்டா..."
" அது வீட்டிலிருந்து நம்ம பார்த்திபன் மேலே கம்பளைண்ட் கொடுத்திட்டாங்க, எங்க வீட்டு பொண்ணை டிஸ்டர்ப் பண்றதா சொல்லி.."
"அட போடா.. ரோடுன்னா நூறு பேர் போவாங்க வருவாங்க. எல்லாரும் யார் பின்னாலேயாவது சுத்தறதா அர்த்தமா என்ன ?"
"வாயை மூடிட்டு நான் சொல்றதை கேளு "
"சொல்லு.."
"நீ இப்போ சொன்னியே அதையேதான் பார்த்திபன் அப்பா சொல்லி இருக்காரு "
"யார் கிட்டே ?"
"போலீஸ் ஸ்டேஷனில் "
"என்னது...?"
"ஆமாம்டா.. இப்போ போலீஸ் கேஸ் ஆயிடுச்சு. அந்த பிகர் பின்னாலே இவன் அடிக்கடி போறதபார்த்துட்டு ஆரம்பத்திலேயே அதோட மாமன் வார்ன் பண்ணி இருக்கார். உன்னாலே முடிஞ்சதப் பாருன்னு இவன் சொல்லி இருக்கிறான்.. அவங்க நேத்து கம்பளைண்ட் கொடுத்திட்டாங்க "
"இதுக்கெல்லாம் ஆதாரம் ஒன்னு கேட்பாங்களே? ஆதாரம் எதுவும் இல்லாமே  'போனேன்'னு  ஒத்துக்க பார்த்திபன் என்ன முட்டாளா ?"
"அவன் முட்டாளேதான் .. அந்த பிகர் தலையில் எப்பவும் பிளாஸ்டிக் பூ குத்தி இருக்கும்னு அவன் சொல்வானே. அந்த பூவுக்குள்ளே சின்ன காமிரா செட் பண்ணி அவங்கவீட்டுஆளுங்க அதை எப்பவும் வெளியேஅனுப்பி இருக்கா ங்க.. அதுமட்டுமில்லே.. அந்த பேனாமூடியிலே சின்ன காமிரா இருந்திருக்குது. . நம்ம ஆளு அது தெரியாம ஓவரா பிலிம் காட்டி இருக்கிறான். இவன் காட்டின பிலிமை அது பிலிம் பண்ணி ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுது. பூவுக்குள் இருந்த காமிராவில் அந்த பிகருக்கு பின்னால் வந்தவங்க, பேனா மூடி காமிராவில் அந்த பிகருக்கு முன்னாடி வந்தவங்க போனவங்க எல்லாமே ரெகார்ட் ஆகி இருக்குதாம். நல்லவேளை.. நான் ஒருநாள்கூட அவனோடு சேர்ந்து அது பின்னாடி போகலே. "
"உனக்கு யார் சொன்னாங்க ?"
"எங்க அப்பாவோட ப்ரெண்ட்.. உனக்குகூட தெரியுமே...மாதவன் ஸார் .. நேத்து எங்கவீட்டுக்குவந்திருந்தார். அவர்தான் இதை எங்க அப்பாகிட்டே சொல்லிட்டு இருந்தார். உங்க தெருவில் இருக்கிற பையன் ஒருத்தர் சரியான பொம்பளை பொறுக்கியா இருக்கிறான். உங்கபையன் அவனோட சேராமே பார்த்துக்கணும் ஜாக்கிரதையா இருக்கணும்னு சொன்னார். அவனோட சேர்ந்து எத்தனை கழுதைங்க மாட்டப் போகுதோ தெரியலைனு சொன்னார்.  என்னைக்கூப்பிட்டு உன்னோட படிக்கிற பார்த்திபனோட எந்த அளவுக்கு சிநேகிதம்னு கேட்டார்.. "ரொம்பவும் குளோஸ் பிரென்ட்ஷிப்னு எதும் கிடையாது. எதிரில் பார்த்தால் பேசுவோம். சிரிப்போம் .. அவ்வளவுதான்னு சொன்னேன்."
" காமிராவை வச்சு என்னடா பண்ண முடியும் ?"
"போடா லூஸ் .. நான் அந்த அங்கிள் கிட்டே எதுவுமே தெரியாதமாதிரி "ஒரு பட்டன் சைஸ் காமிரா அந்தஅளவுக்கு  படம் எடுக்குமா"ன்னு கேட்டுட்டு விட்டால்போதும்னு என்ரூமுக்குள் ஓடிவந்துட்டேன். நான் கேட்ட கேள்வி யை எங்க அப்பாவும் கேட்டார். அதுக்கு அந்த அங்கிள் ஒரு கதை.. ஐ மீன் ஒரு இன்சிடென்ட் சொன்னார் .."
"சொல்லுடா "
"அவங்க டிபார்ட்மெண்ட் ஆள் ஒருத்தர் ஒரு பொண்ணைக் கணக்கு பண்ண இவரே ஆளுங்களை செட் பண்ணி வம்பு பண்ண வைப்பாராம்..  அவரோட மேலதிகாரிங்க கிட்டே இவர் பேரை சொல்லி யாரோ விளையாடறதா புலம்புவாராம். இவர் பேச்சை நம்பி  டிபார்ட்மெண்ட் அந்த கும்பலைப் பிடிக்க எவ்வளவோ ட்ரை பண்ணி இருக்குது .. ஆனா கண்டுபிடிக்க முடியலே. ஏன்னு கேட்டா, டிபார்ட்மென்ட் எங்கே வலை விரிக்குதோ அங்கே இவரோட ஆளுங்க போகாமே பார்த்துக்குவாராம். இந்த அளவுக்கு நமக்கு தண்ணீர்காட்டற குரூப்   யார்னு  சந்தேகப்பட்ட ஒருத்தர் உள்ளூர் ஆட்கள் தயவில்லாமல் இரண்டாம் பேருக்கு தெரியாமல் ஒரு குரூப்பை ஏற்பாடு பண்ணி  எல்லாம் செய்றது இந்த நபர்தான்னு அவங்க ஹையர் அபீஷியலுக்கு ப்ரூப் பண்ணிட்டார். ஆனால் யாரும் 'நீ நடத்துறது ஒரு நாடகம். நாடகத்தை கண்டு பிடிச்சாச்சு'ன்னு அவர் கிட்டே சொல்லலே. "
"ஏனாம் ?"
"விஷயம்தெரிந்ததும் அதிலே  சம்பந்தப்பட்ட லேடியே,  போயும் போயும் ஒரு   மனநோயாளியை தண்டிச்சு என்ன பண்ணபோறோம்னு சொல்லி கண்டுக்கா மே விட்டுருக்கிறாங்க. அது தெரியாத நடிகர் இன்னுமே எல்லாருக்கும் கதை சொல்றாராம். எல்லாரும் அதை நம்பற மாதிரி சின்ஸியரா கேட்பாங்களாம். ஆனா அந்தலேடியோட கையில் இருக்கிற ரெண்டு சீக்ரெட் காமிரா ஒவ்வொரு இன்சிடெண்ட்டையும் நாள், நேரத்தோட துல்லியமா படம்  எடுக்குதாம். அது ரெகார்ட் ஆகிகிட்டே வருதாம். எங்க டிபார்ட்மெண்டில் இருந்துகிட்டு எங்களை யே முட்டாள் ஆக்கிட்டு இருக்கிறான்"னு சொன்னார்.
"ரெகார்ட் இருந்தா அவனை பனிஷ் பண்றதுதானே ?"
"இதையே அப்பாவும் கேட்டார். அதுக்கு அந்த அங்கிள் இதுக்கு கண்டிப்பா ஒரு முடிவு வரும். அவன் பைத்தியக்காரதனமா எதாவது செஞ்சிட்டு என்பேரை சொல்லி யாரோ செய்றாங்கன்னு சொல்லும்போது, உங்க பேரை சொல்லி விளையாடினவங்க அத்தனைபேர் ரெக்கார்டும் இப்போ பிக்ஸராவே இருக்கு து.. அவ்வளவு பேரையும் நாங்க கொண்டுவந்து நிறுத்தறோம். எவ்வளவோ காலமா உன்பேரை சொல்லி ஏமாத்தற இந்த கும்பலை நீயே பென்டை நிமிர்த்து .. நாங்க உட்கார்ந்து பார்க்கிறோம்னு சொல்கிற ஐடியாவில் நாங்க இருக்கோம்னு எங்க அப்பாகிட்டே சொல்லிட்டு இருந்தார். .  அதனாலேதான் சொல்றேண்டா .. யார் யார் கையில் என்ன எவிடென்ஸ் இருக்கோ தெரியலை. இப்பவும் சொல்றேன். அவனோட சேர்ந்து ஒருநாளாவது அது பின்னாடி நீ போயிருக்கிறியா.. போயிருந்தா உன்னைக் காப்பாத்திக்கோ!" என்று சொல்லி போனை கட் பண்ணினான் நண்பனின் நலம் விரும்பி!

No comments:

Post a Comment