Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Tuesday, September 19, 2017

படிக்க ஒரு நிமிடம் / ஒரு நொடி போதும். யோசிக்க ?.. (30)

Image result for cartoon of ladies kabaddi
                                                             தோட்டத்து பச்சிலை !
"அம்மா.. காபி கப்பை கையில் வச்சுக்கிட்டு டீவீ முன்னாடி உட்கார்ந்துகிட்டு அப்படி என்ன தீவிர சிந்தனை ?" என்று கேட்டபடி சாவித்திரியின் அருகில் வந்து உட்கார்ந்தான் சேது.
"பழசை நினைச்சிட்டு இருந்தேன்டா "
"ஓ .. மலரும் நினைவுகளா ? டீவீயில் பழைய சினிமா பாட்டு வரவும், உங்க ஸ்கூல் டேஸ்க்கு போயிட்டீங்களா ?"
"இல்லேடா. உங்க தாத்தா எப்பவும் சொல்வார், நமக்கு தெரிஞ்சது ரொம்பவும் குறைவுன்னு தெரிஞ்சுக்கிறதுக்கே, நாம நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குனு .."
"புரியலேம்மா.."
"ஒருசமயம் எங்க ஸ்கூலில் நடந்த ஒரு காம்பெடிஷன் ரைட்டிங்கில் நான் முதல் பரிசு வாங்கினேன். அதுலே எனக்கு ரொம்பவும் கர்வமும் கூட. எனக்கு ஈக்வல் யாரும் இல்லேங்கிற மண்டைக்கனம் எனக்கு இருந்துது. அதை உங்க தாத்தா கவனிச்சிட்டார். அவர் என்னை அழைச்சிட்டு ஒரு லைப்ரரிக்குப் போனார். அப்பதான் நான் முதல்முதலா ஒரு பப்ளிக்லைப்ரரிக்குள் காலடி எடுத்து வச்சேன். அங்கே ராக்குகளில் அடைஞ்சு  கிடந்த புத்தகங்களைக்காட்டி 'இதுஎல்லாமே ஒரு சிலரின் உழைப்பு, திறமை.. இதிலே நீ எழுதின கட்டுரை  .. பரிசு பெற்ற கட்டுரையை  எந்த ராக்கிலும் வைக்க முடியாது. பரிசுங்கிறது ஒரு என்கரேஜ்மெண்ட்.. ஒரு டானிக்.. மேலே மேலே எழுத ட்ரை பண்ணுனு பெரிய லெக்ஸரே கொடுத்தார்.."
"தாத்தா, அவர் ஒரு காலேஜ் ப்ரொபஸர்னு ப்ரூப் பண்ணிட்டார்னு சொல்லுங்க . அப்படித்தானே ?"
"ஆமாம்.. நீங்கள்லாம் ஒவ்வொரு வருஷமும் மேலேமேலே படிச்சு வர்றப்ப .. ஒவ்வொரு டாபிக் பத்தி ஆர்க்யூ பண்றப்ப, உங்களோட படிப்பு திறமையை நினைச்சு  ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. பெருமையா இருந்துச்சு. நம்ம வீட்டு குழந்தைங்கன்னு இல்லாமே எல்லாரையும் சேர்த்துதான் நான் சொல்றேன். ஸ்கூல் ஸ்டடிஸ் ஒவ்வொருத்தரையும் என்னமா புடம்போட்டு வெளியே அனுப்புதுனு நினைப்பேன்.  ஆனா அந்த கல்வி அறிவை மட்டும் வச்சுக்கிட்டு எல்லா இடத்திலேயும் ஜெயிக்க முடியாதுனு தெரியுது.. உங்க தாத்தா சொல்ற மாதிரி கோட்டைக்குள்ளே மட்டுந்தான் ராஜா. வெளியில் வந்து பார்த்தால் ஒண்ணுமே இல்லைங்கிறது..!"
"அட .. விடுங்கம்மா.. எனக்கு சீட் கிடைக்கலேன்னு நானே வொரி பண்ணலே .."
"வொரி பண்றது ஒருபக்கம் இருக்கட்டும். நாம எல்லாத்திலும் திறமைசாலி ன்னு நினைச்சுகிட்டு இருக்கிற நினைப்புக்கு கிடைச்ச அடி அது.  இப்போ சன் டீவீயில் சன்டேய்ஸில் கபடிபோட்டி நடத்தினத்தைக் காட்டுவாங்க. ஆரம்ப த்தில் இதை பார்த்தப்ப, பரவாயில்லே.. சீரியல் ஆர்ட்டிஸ்ட் விளையாட்டிலும் தூள் கிளப்பறாங்கனு நினைப்பேன். அதிலே ஜெயிச்சவங்களைப் பார்த்தப்ப, என்ன ஒரு திறமைசாலிங்கனு நினைப்பேன். இப்போ அதே போட்டி.. அதே க்ரூப் .. ஆனா மற்ற ஸ்டேட்  ஆர்டிஸ்ட்டோட போட்டி போடறாங்க. ஆனா அவங்களாலே ஜெயிக்க முடியலே. அவங்க .. அதர் ஸ்டேட் பொண்ணுங்க ரொம்பவும் அசால்ட்டா  நம்ம பார்ட்டியை கவித்திடறாங்க.. அதை பார்த்ததிலி ருந்து நமக்கு தனித்திறமை இருக்குது. மத்தவங்களோட போட்டி போட்டு ஜெயிக்கிற அளவுக்கு திறமை இல்லே.. அதை எப்படி சரி பண்ணலாம்.. யார் பண்ணுவாங்க.. யாராவது பண்ணுவாங்களானு யோசிச்சிட்டு இருந்தேன்." என்று விளக்கம் சொன்னாள் சாவித்திரி .
"ரொம்பவும் ஆரோக்கியமான சிந்தனைதான்.. இதேமாதிரி வேறே டாபிக் ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க சிந்திக்கிறதுக்கு" என்று சொல்லி சிரித்தான் சேது.  

No comments:

Post a Comment