இதே பிளாக்கில், Tuesday, April 11, 2017 ல் பாரதப் பிரதமரே, பரம தயாளரே என்ற தலைப்பின் கீழ் நதிகள் இணைப்பு பற்றி என்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தேன். அதை நீங்கள் படித்திருக்கலாம். படித்த வேகத்திலேயே அதை மறந்தும் போயிருக்கலாம். அதனால் அதே கருத்தின் சிறுபகுதி கீழே உள்ளது.
ஒருத்தர் குடிக்கிற தண்ணீரைப் பிடுங்கி எங்களுக்கு கொடு என்று யாரும் கேட்கவில்லையே. ஒவ்வொரு மழையின் போதும் வடமாநிலங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடுகள் எத்தனை? உயிர்கள் எத்தனை ?
மண்ணில் ஓடிவரும் நதி கடலில் கலந்து விடாதபடி அது இந்தியா வுக்குள்ளேயே சுற்றி சுற்றி வரும்படி இணைக்கலாம் தானே !
புவியின் வெப்பம் காரணமாக பனி மலைகள் உருகி ஆறாக ஓடத்தொடங்கும் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். அது எப்போ என்பது யாருக்கும் தெரியாது. நதி இணைப்பு என்ற ஒன்றைக் கொண்டு வந்து விட்டால் வடக்கு வாங்கப் போகிற அடியை தெற்கும் பங்கு போட்டுக் கொள்ளுமல்லவா ! வரப் போகிற தலைமுறைகளை காக்கும் முயற்சிக்காகவாவது இணைத்துப் பார்ப்போமே.
இன்று காலையில், தொலைக்காட்சி செய்தியில் நான் படித்த வாசகம்:
வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க வட இந்திய நதிகளை தென்னிந்திய நதிகளுடன் இணைக்க முடிவு!
எதையாவது பதிவு செய்துவிட்டு 'இது ... இந்தக் கருத்து சரியா?' என்று அடிக்கடி யோசிப்பேன். எனது நட்பு வட்டங்களிடம் இதுபற்றி அவர்கள் கருத்தைக் கேட்பேன்.
ஆனால் நதிகள் இணைப்பு விஷயத்தில் நான் யோசிப்பது போலவே.. மற்ற சிலர்.. அதுவும் பொறுப்பான தலைமை இடத்தில் இருப்பவர்களும் நினைக்க ஆரம்பித்தது ரொம்பவும் சந்தோசமா இருக்குது !
அறிவிப்போடு நின்று விடாமல், தண்ணீர் எங்கள் மாநிலங்களையும் எட்டிப் பார்க்கும் என்று நம்புகிறேன்.
நதிகளை இணைக்க முடிவெடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி! நன்றி !! நன்றி!!!
No comments:
Post a Comment