முருகய்யனின் முகத்தில்தெரிந்த கோபக்களையைக் கண்டு சற்றே அதிர்ந்து போனாலுங்கூட, "என்னங்க ஸார் .. உங்களைப் பார்க்கவே முடியறதில்லே. ஸார்..ரொம்பவுமே பிஸிபோலிருக்குது!" என்று கேஷுவலாக பேச்சைத் துவங்கினான் பிரபு.
"அட..எங்களுக்கென்னப்பா பிஸில்லாம் வேண்டிக்கிடக்கு? நாங்க எப்பவுமே ஒரேமாதிரிதான்! உங்களைத்தான் தம்பி கண்ணிலேயே காண முடியலே. தம்பிக்குதான் புதுப்புது சிநேகிதம் எல்லாம் கிடைச்சிருக்கு போலிருக்குது?" என்று குரோதமாக சிரித்தபடி கேட்டான் முருகய்யன்.
"புது சிநேகிதமா ? யாருங்க அது ? எனக்கு உங்களையும் வள்ளி அக்காவையும் தவிர இந்த ஊரில் யாரையுமே தெரியாதே !"
"இல்லியே.. ஊருக்கு ஒதுக்குப்புறத்திலே இருக்கிற குடிசைப்பக்கம் உங்களை அடிக்கடி பார்க்கிறதா கொஞ்சபேர் சொன்னாங்க.."
"ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற குடிசை.... அது பவித்ரா மேடம் வீடுதானே. ஆமாம். நான் அப்பப்ப போய் அவங்ககிட்டே பேசிட்டு வருவேன்.."
"அந்த சிநேகிதம் வேண்டாம் தம்பி "
"ஏன் ?"
"ஏன்னு கேட்டா...?.. அது அப்புடிதான்.."
"ஏன் ஸார் .. அவங்க அண்ணனுக்கு ரொம்ப வேண்டியவங்கதானே.. அப்படி பார்த்தா அவங்க நம்ம எல்லாருக்கும் வேண்டியவங்கதானே! அவங்களைப் பார்க்கிறது ஏதோ குற்றம் போல நீங்க சொல்றீங்க?!"
"நீங்க பட்டணத்துப்புள்ளை.. மெத்தப்படிச்ச மேதாவி நீங்க.. உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்கு எனக்கு மூளை பத்தாது. அந்த சிநேகிதம் வேண்டாம்னு சொன்னா அதோடு நிறுத்திக்கணும். அம்புட்டுதான் நான் சொல்வேன் "
முருகய்யன் இவ்வளவு கடுமையாகப் பேசுவான் என்று பிரபு சற்றும் எதிர் பார்க்கவில்லை.
முருகய்யனுக்குப் பின்னால் நின்றுகொண்டு, "எதுவும் பேசவேண்டாம் " என்று சைகை செய்தாள் வள்ளி. அவள் முகத்தில் ஒரு கெஞ்சல் இருந்தது. அதைக் கண்ட பிரபு சற்று அமைதியானான்.
"மாமோய்.. வேகமா வந்தீக.. என்ன சங்கதினு சொல்லலியே. வந்ததும் தம்பி கூட மல்லுக்கு நீக்கீக? படிச்சவக கிட்டே நாம பேச்சை குறைச்சுக்கணும். நம்ம பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் அவக செய்றது சொல்லுறதெல்லாந்தான் சரினு முரண்டு பிடிப்பாக..கேப்பை மாவு கரைச்சு வச்சிருக்கேன். சூடா ரெண்டு தோசை ஊத்தி தரட்டுமா?"
"தம்பி சாப்பிட்டாகளா ?"
"இன்னும் இல்லே.."
"அட கூரு கெட்ட மூதேவி.. வந்தவங்கள கவனிக்காமே எனக்கு தோசை சுட்டு தாரேன்னு சொல்லுதே.. தம்பிக்கு என்ன வேணும்னு கேட்டு செஞ்சு குடு. நம்ம தென்காசி ஐயா விதைநெல் ரெண்டு மூட்டை வேணும்னு கேட்டாக. அதை எடுத்திட்டுப் போகத்தான் வந்தேன். அந்த அறைவீட்டைத் திற .. மூட்டையை எடுக்கணும். வண்டியில ஏத்தணும் "
"அம்புட்டுத் தூரம் வண்டியிலே எடுத்திட்டுப் போகப் போறீகளா ?"
"இல்லே.. ரயிலடி வரைதான். அவக ஆள் அனுப்புறதா சொல்லி இருக்காக. இதைக்கொண்டுபோய் ரயிலடியில் சேர்த்துட்டு வந்துடுதேன்" என்று சொன்ன முருகய்யன், நெல்மூட்டைகளை வண்டியில் ஏற்றுவதில் கவனமாக இருக்க அவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள் வள்ளி.
அங்கிருந்து முருகய்யன் கிளம்பிச் சென்றதும் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்த வள்ளி, "தம்பி..என் மாமன் எது சொன்னாலும் சரிசரின்னு தலையாட்டிட்டுப் போயிடுங்க. குறுக்கே குறுக்கே பேசாதீங்க " என்றாள்.
"ஏன் ?"
"அந்த மனுஷன் ஒரு முரட்டு ஆசாமி. படிப்பறிவு கொஞ்சங்கூட இல்லாத மடஜென்மம்..எதையும் முன்னப்பின்ன யோசிக்காமே பளிச்னு வார்த்தையை விட்டுட்டா உங்க மனசு நோகும்.. அதான் .."
"அட.. அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க. இதையெல்லாம் விட நீங்க சொல்லிமுடிக்க வேண்டிய முக்கியமானவிஷயம் ஒண்ணு இருக்குதே. அதை விட்ட இடத்தில் இருந்து தொடங்குங்க "
"அடடா.. ஆமாம்ல. எங்கேவிட்டோம்னு ஞாபகம்இல்லியே!" என்று தலையை சொரிய ஆரம்பித்தாள் வள்ளி.
"ரொம்பவும் சொறிஞ்சிடாதீங்க..உள்ளே இருக்கிற மூளை வெளியில் வந்திடப் போகுது"
"அப்பாடா.. ரொம்ப நன்றி !"
"எதுக்குங்க ?"
"எனக்கு மூளைஇருக்குனு ஒத்துக்கிட்டதுக்கு" என்று சொல்லிவிட்டு சிரிக்க ஆரம்பித்தாள் வள்ளி.
"அந்தராஸ்கல் உங்கமாமாகிட்டேயும், கிழட்டுநாய்கிட்டேயும் என்ன சொல்லி அவங்க மனசை மாத்தினான்.?"
"அவங்க ரெண்டுபேரிட்டேயும் பவிம்மாவுக்கு பயங்கரமான நோய் இருக்குது. அதுக்குப்பேர் எய்ட்ஸ்.. அது மூச்சுக்காத்து பட்டாலே போதும். அந்த வியாதி மத்தவங்களுக்கு தொத்திடும்னு சொல்லி இருக்கான் "
"அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?"
"நோய்னு சொன்னாலே என் மாமன் உசிரை விட்டுடுமே.. அன்னிக்கு மாமன் வீட்டுக்குள்ளே நுழையும்போதே என்னைக் கூப்பிட்டு,'நீ பெரிய வீட்டுப் பக்கம் போகிற வேலையெல்லாம் வச்சுக்காதே..அந்தப்புள்ளையும் இங்கிட்டு வராமே பார்த்துக்கோ'னு சொன்னாக. 'உங்களுக்கு என்ன ஆச்சு மாமா? கோட்டி கீட்டி பிடிச்சிருக்கா என்ன ? பெத்த பொண்ணு மாதிரி அந்த பவிம்மாவை தலையில் தூக்கி வச்சு கொண்டாடுவீக. இப்ப அதை பார்க்கக்கூடாது. அது இங்கிட்டு வரக் கூடாதுனு சொல்லுதீக. அது நம்ம அய்யாவுக்கு வேண்டிய பொண்ணு. நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க'னு சொன்னேன்.
அதுக்கு என் மாமா, 'அதனாலேதான் அதுகிட்டே பழக்கத்தை குறைச்சுக்கனு சொல்லுதேன். அந்தவியாதி நமக்கு ஒட்டிகிட்டா நாம ரத்தம்கக்கி மூச்சுமுட்டி செத்துப் போயிருவோமாம்'னு சொன்னாக.
'உங்களுக்கு சொன்னது யாரு'னு கேட்டேன். அதுக்கு, 'அந்தப்புள்ளை குடும்ப த்துக்கு ரொம்பவும் வேண்டியவகதான் சொன்னாக'னு சொன்னதும், எல்லாம் அந்தக் களவாணிப்பய வேலைதான்னு எனக்கு புரிஞ்சு போச்சு.
'எவனோ ஒரு கோட்டிக்காரன் சொன்னதை நம்பி நம்ம வீட்டுக்குள் சண்டை இழுத்து விட்டுடாதேன்னு நான் மாமா கிட்டே சொன்னேன். அந்தப்புள்ளை இருக்கிறத தடுத்துநிறுத்த நாமயாரு? நமக்கு பிடிக்காட்டா நாமதான் ஒதுக்கி நிக்கணும்னு சொன்னேன். நான் அந்தப்புள்ளை இருக்கிற இடத்துக்கு தேடிப் போவேன். அதுவும் என்னைத்தேடி இங்கிட்டு வரும். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்துவோம். நீ போ வேலையைப் பார்த்துக்கிட்டு'னு சொன்னேன்.
'ஓஹோ..அப்புடியா? அந்தஅளவுக்கு வந்தாச்சா'னு கேட்ட மாமன் உடனே வண்டியைக்கட்டிக்கிட்டு கிளம்பிப்போயிட்டுது. சரி..கோபத்திலே போயிருக்கு .கோபம் கொறஞ்சதும் வீடு வந்து சேருவாக'னு நான் கொஞ்சம் திமிராத்தான் இருந்துட்டேன். அன்னிக்கு ராத்திரி வரலே.. மறுநாளும் வரலே. இப்பிடியே நாலுநாள் ஓடிப்போச்சு. எனக்கு பயம்குடுத்திட்டுது. தினமும் வந்து என்கிட்டே 'உங்க மாமாவை காணுமே.. எங்கே போனாங்க?'னு பவிம்மா கேட்டப்ப நான் எதுவும் சொல்லலே. நாலுநாள் ஆகியும் வீட்டுக்கு வராததாலே எங்க சண்டை பத்தி நான் பவிம்மா கிட்டே சொன்னேன்.
அதுவும் ரொம்பவும் பதறிப்போச்சு. ஒவ்வொருஇடமா தேடிப்போச்சுது. கடைசி யில அந்தக் கிழட்டுநாய்....அதான் அந்த வாத்தியார் வீடு வரை தேடிப்போய் அவரைப்பார்த்து பேசிட்டு வந்துச்சுது. 'நாளைக்கு உங்க மாமா கண்டிப்பா வீடு வந்துடுவார்'னு சொல்லிச்சு.
'அது எப்படி?'னு நான் கேட்டதுக்கு 'நாளைக்கு வரை பொறுமையா இருங்க'னு சொல்லிட்டு வெளியே போச்சு. சாயங்காலத்துக்கு மேலேதான் வீட்டுக்கு வந்துச்சு. வந்ததும் வராததுமா அது சாமான் செட்டை மூட்டை கட்ட ஆரம்பி ச்சிட்டுது.
'என்னம்மா'னு நான் கேட்டதுக்கு, 'நான் இங்கே இருந்தால், உன் மாமா இங்கே வரமாட்டார். அதனாலே நான் இங்கேருந்துபோறதா முடிவு பண்ணிட்டேன்'னு சொல்லுச்சு.
'உங்க வீட்டுக்கு...டில்லிக்கு போறீங்களாம்மா?'னு சந்தோஷமா கேட்டேன்.
'இல்லே..இதேஊரில் உங்க ரெண்டுபேர் மேலேயும் என் நிழல்கூட படமுடியா அளவுக்கு ஒதுங்கி இருப்பேன்'னு சொல்லுச்சுது.
'அதெல்லாம் வேண்டாம்மா.. குமார்ஐயாவுக்கு தெரிஞ்சா எங்களை கொன்னே போட்டுடுவாக'னு சொல்லி அது காலில் விழாத குறையா கெஞ்சி அழுதேன். அது கேக்கலே. இந்த விஷயம் நம்ம மூணுபேருக்குள்ளே மட்டும் இருக்கணும் . வேறே யார் காதுக்காவது போனா நான் என்ன செய்வேன்னு தெரியுந்தானே டில்லியில் நான் செஞ்சதை திரும்ப இங்கேயும் செஞ்சிடுவேன். அந்த முயற்சி பெயிலியர். இனிமேல் அப்படி ஆகாமே பார்த்துக்குவேன்'னு சொல்லிட்டு அது வீட்டைவிட்டு கிளம்பிப்போய் தனியா ஒரு குடிசை போட்டுகிட்டுஅங்கே தங்க ஆரம்பிச்சிட்டுது. அது வீட்டைவிட்டு போயிட்டுன்னு தெரிஞ்ச பிறகுதான் என் மாமன் இந்தவீட்டுக்கே திரும்பிவந்தாக."என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் வள்ளி.
"சரிங்க ..உங்கமாமன்தான் முட்டாள்தனமா எதுஎதையோ கற்பனை பண்ணி கிட்டு என்னென்னவோ செஞ்சார்னா அதுதப்புனு உங்க மாமா கிட்டே யாரும் எடுத்து சொல்லலியா? ஊர் விவகாரம்...உலக விவரம் எல்லாம் பேசுவாரே அந்த வாத்தியார்.. அவர் கூடவா இவருக்கு புரிய வைக்கலே?"
"அந்த சண்டாளனா ? அவன் எரியற நெருப்பில் எண்ணெய் ஊத்துவானே தவிர தண்ணிய ஊத்த மாட்டான். ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இந்த கிழட்டுநாய் எங்க மாமனுக்கு வேண்டாத யோசனை எல்லாம்சொல்லி, எங்கமாமாவுக்கு ஒரு பக்கபலமா இருக்கிறமாதிரி ஃ பிலிம் காட்டும். அதை என் மாமன் அப்படியே நம்பும். என் மாமன் உருப்படாமே போக காரணமே அந்தகிழட்டுநாய்தான்.. ஊர்உலகத்தில் யார்யாருக்கோ சாவு வருது .இந்த சண்டாளனுக்குத்தான் எதுவுமே வரமாட்டேங்குது" என்று சொல்லி விட்டுக் கதறி அழ ஆரம்பித்தாள் வள்ளி.
அவளுக்குத் தேறுதல் சொல்லக்கூட வகையற்றவனாக வெற்றிடத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் பிரபு.
------------------ தொடரும்-------------------------

No comments:
Post a Comment