Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Sunday, September 03, 2017

வேண்டாமே வேறு பவித்ரா ...(33)

Image result for cartoon of young girl talking in  mobile
"என்னங்க .. போன்" என்ற  ஷோபாவிடம் "இன்னும்  மூணுமணி நேரத்துக்கு இந்தப்பக்கம் யாராவது வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கிருக்கிற டென்ஷனில் நான் அப்படியே கடிச்சுக் குதறிடுவேன்" என்று எரிந்து விழுந்தார் ராம்குமார்.
"லைனில் சுமி இருக்கிறாங்க " என்று ஷோபா சொல்லவும், எழுந்து வந்து அவள் கையிலிருந்த மொபைலை வாங்கிக்கொண்ட ராம்குமார், "ஹலோ மேடம்.. எப்படி இருக்கீங்க ?" என்றார்.
"ஹலோ ஸார் .. வணக்கம். உங்க வேலைநேரத்தில் நான் உங்களை டிஸ்டர்ப்  பண்றேனா  ?"  
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. நான் இப்போ ஃப்ரீதான். காரணம் இல்லாமே நீங்க போன் பண்ண மாட்டீங்க.. என்ன விஷயம் மேடம் ?"
"இப்போ மட்டும் நீங்க என் எதிரில் இருந்தால் என்னோட கண்ணீராலேயே உங்க காலை அலம்பி நமஸ்காரம் பண்ணி இருப்பேன். உங்களுக்கு நன்றி சொல்ல எங்கிட்டே வார்த்தையே இல்லை !"
"அப்படி நான் என்ன பெரிசா பண்ணிட்டேன் ?"
"இந்த.. இந்த தன்னடக்கம்தான் ஆர்டினரி மேனுக்கும் எக்ஸ்டரா-ஆர்டினரி மேனுக்கும் உள்ள வித்தியாசம். அவனவன் தன்னோட சுண்டு விரலை தனக்கு த்தானே மேலும்கீழும் அசைப்பதை உலகசாதனை மாதிரி சொல்லிக்குவான். ஆனா நீங்க சுண்டுவிரலாலே மலையையே நகர்த்திட்டு எதுவுமே செய்யாத மாதிரி தன்னடக்கத்தோட பேசறீங்க. உங்களுக்கு எப்படி நன்றிசொல்றதுனு தெரியலே "
'அப்படியா ? உங்க நன்றியை என் பேரில் பேங்கில் டெபாசிட் பண்ணிடுங்க  .. ஊருக்குப் போய் வந்தீங்களா ?"
"ஆமாம் ஸார் .. நீங்க ஏற்பாடு பண்ணி இருந்தமாதிரியே உங்க வீட்டு ஹெல்பர் வள்ளி, அந்தப்பையனை புக்ஸ்டாலுக்கு அழைச்சிட்டு வந்தாங்க. பையன் நல்லா இருக்கிறான். எனக்குப் பிடிச்சிருக்குது. இந்த அலையன்ஸையே நம்ம பவிக்கு  ஃபிக்ஸ் பண்ணிடலாம் ஸார். அதுக்குமுன்னாடி அந்த பையன்கிட்டே எங்க வீட்டில் நடந்த சம்பவம் எல்லாத்தையும் சொல்லிடணும்"
"நோ ப்ராப்ளம் .. சொல்லிடலாம் மேடம். ஆமாம்.. நீங்க அந்த புக் ஸ்டாலில் இருந்தது வேறு யாருக்கும் தெரியாதுதானே ? "
"யாருக்கும் தெரியாது ஸார்.. அவங்க ரெண்டுபேரும் வர்றதுக்கு முன்னாடியே நான் ஸ்டாலுக்குப் போய் மறைவா இடம்பிடிச்சிட்டேன்."
"குட்.. அந்தப்பையன் வீட்டில் காசு பணம் எதுவும் கிடையாது. அதை முதல்லே யே சொல்லிடறேன்."
"காசு பணம் எதுவும் வேண்டாம் ஸார். எங்களுக்குத் தேவையான அளவுக்கு அது எங்க வீட்டிலேயே இருக்குது. அந்தப்பையனோட அம்மாகிட்டே சம்மதம் வாங்கறது உங்க பொறுப்பு ஸார் "
"வாங்கிடலாம். சினிமா ஃபீல்ட்னு சொன்னாதான் அந்த அம்மா அலறுவாங்க. உங்க ஃபேமிலிக்கும்  சினிமா ஃபீல்ட்க்கும் எந்த சம்பந்தமுமே இல்லையே. அவங்ககிட்டே பெர்மிசன் வாங்கறது அப்படி ஒண்ணும் பெரிய விஷயமில்லே .. வாங்கிடலாம்".   
" எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த அலையன்ஸை நாம  பவிக்கு  ஃபிக்ஸ் பண்ணிடனும் "
"பண்ணிடலாம்."
"அவளுக்கு இருபத்துமூணு வயசு ஆகும் போது அவளோட எல்லாப் பிரச்னை யுமே தீர்ந்துடும். அதுக்குப்பிறகு அவளைப்பற்றி நாங்க கவலைப்படறதுக்குனு ஒண்ணுமே இருக்காது .. எந்தப் பிரச்னையும் வராதுன்னு  ஜோஸ்யர் சொல்லி இருக்கிறதா எங்க டாடி அடிக்கடி சொல்வார். நான் உங்களை ரொம்பவும் நம்பி இருக்கிறேன். "
"அய்யய்யோ ... எதுக்கு இந்தமாதிரி பெரிய பெரிய வார்த்தையெல்லாம் ?"
"ஒருத்தருக்கு பிரச்னைனு ஒண்ணு வரும்போது அவனுக்கு வேண்டியவங்க கூட  அவனை விட்டு விலகிப் போயிடுவாங்க.. நமக்கெதற்கு இந்த வேண்டாத தலைவலியெல்லாம்னு நினைச்சு.. ஆனா எங்களுக்கு... எங்க குடும்பத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நீங்க, உங்க தோளில் என்னோட பாரத்தை தோள்குடுத்து சுமந்துவந்திருக்கீங்க.. இதெல்லாம் சாதாரணமனுஷங்க செய்ற விஷயம் இல்லை. உங்களுக்கு கோடி தடவை நன்றி சொன்னால்கூட எனக்கு அது திருப்தியா இருக்காது. நன்றி ஸார் "
"பவி மேரேஜ் முடிஞ்ச கையோட உங்க மேரேஜ்.. ஞாபகம் இருக்கட்டும். உங்களுக்கு சொந்தத்தில் ஏதாவது வரன் இருக்குதா ? உங்க சாய்ஸ் என்ன? ஐ.ஏ.எஸ். .. ஐ.பி.எஸ்... பிசினெஸ் மேன் .. எந்த மாதிரி லைக் பண்றீங்க. என்னோட பிரெண்ட்ஸ் சர்க்கிளில் நிறைய வரன் இருக்குது. உடனேயே  பேசி முடிச்சிடலாம். "
"அட .. அதை அப்புறம் பார்த்துக்கலாம் ஸார் "
"ஹலோ மேடம்... இந்த நழுவல் பிசினெஸ் வேலைக்கு ஆகாது. அப்படியொரு ஐடியாவில் நீங்க இருந்தால், 'உன் மேரேஜ் முடிஞ்சபிறகுதான் என்னோட மேரேஜ்'னு பவியை சொல்ல வச்சிடுவேன். "
"வேண்டாம் ஸார்... புதுசா ஒரு டீலை போட்டுடாதீங்க. அப்புறம் அவ அதையே பிடிச்சுக்கிட்டு  தர்ணா பண்ண ஆரம்பிச்சிடுவா .."
"உங்க மேரேஜ் பத்தி உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்குதா ?"
"ஊஹூம்.. அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. ஒரேஒருமுறை காதல் என் வாழ்விலும் தலை காட்டுச்சுது.. அதே வேகத்தில் கருகியும் போச்சே. நான் அதுக்குப்பிறகு எதைப்பத்தியும் சிந்திப்பதுகூட இல்லை. பவி மாதிரி சூசைட் பண்ணிக்கப்போறேனு மாடிக்கு  ஓடற கேஸ் நான் இல்லை. லைஃப்பை அப்படி அப்படியே ஏத்துப்பேன். கவிஞர் கண்ணதாசன் ஒரு சினிமா பாட்டில் சொல்லு வாரே- "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.. வாசல் தோறும் வேதனை இருக்கும் ..வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.. எதையும் தாங்கும் இதயமிருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்! " இதெல்லாம் வெறுமனே பேப்பரில்மட்டும்  எழுதிப்படிக்கக்கூடிய வார்த்தை கள் இல்லை. கல்லில் செதுக்கி வைக்கணும் ஸார். எப்பவோ எங்கேயோ படிச்ச ஒரு கவிதையின் வரிகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் .   "காலுக்கு செருப்பில்லை என்று காலமெல்லாம் நான் அழுதேன்... காலில்லா ஒருவனை நான் கண்டபோது காலுள்ள என் பேற்றை நான் உணர்ந்தேன்!" இந்த வரிகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வேன். போனால் திரும்ப வராதது உயிர் ஒண்ணுதான். மற்றவற்றை முயற்சி பண்ணி அடையலாம். ஆனால் அது நியாயமானதாக இருக்கணும். ஒட்டுமொத்த குடும்பத்தையும் சுனாமியில், இல்லாட்டா ஏதாவதுரயில் பஸ்  விபத்தில்  பறி கொடுத்திட்டு , மற்ற அனாதைக்குழந்தைகளுக்கு ஆதரவா இருந்து தங்களைத் தாங்களே தேத்திக்கிட்டவங்க எத்தனை பேர்? திரும்பின திசை எல்லாம் தோல்வியைத்தவிர வேறு எதையுமே நான் பார்க்கலே.. அது ஆண்டவன் விதிச்ச விதின்னு சொல்லிட்டு நம்பிக்கை ஒண்ணை மட்டும் கெட்டியா பிடிச்சுக்கிட்டு உயிர் வாழ்றவங்க எத்தனை பேர்! எனக்குத்தெரிஞ்சு ரெண்டு இன்சிடெண்ட்ஸ்.ரெண்டுபேரும் ப்ரெண்ட்ஸ். ரெண்டுபேருக்கும் ஐ.டி கம்பெனி ஒரேநாளில் டாட்டா காட்டிட்டுது. அவங்களுக்கு மனசில்  வருத்தம்.  ஆனா         அவங்க இடிஞ்சு போய் உட்கார்ந்திடலே. ஒருத்தர் ஹையர் டாக்சி ஓட்டி பிழைக்கிறார். இன்னொரு பிரென்ட் டீக்கடை வச்சுநடத்தறார். இதுதான்ஸார் வீரம் .. விவேகம். வாழ்க்கையில் யாருக்குத்தான் இல்லை தோல்வி.. ஏமாற்றம்.. லொட்டு லொசுக்கு. அதை சகிச்சுகிட்டு வாழத் தெரியலைன்னா, அவனவன் படிச்சபடிப்பு அந்தஅளவுக்குக்கூட அவனை வாழத்தயார் பண்ண லேன்னு அர்த்தம். தோல்வியைக் கண்டு துவண்டு நிக்கிறவங்க வாழ்க்கைக் கல்வின்னா என்னனு தெரியாமபள்ளிக்கூடத்தில் பாடப்புஸ்தகத்தை மட்டுமே மனப்பாடம் பண்ணின முட்டாள்கள்னுதான் சொல்லணும். எங்கவீட்டு முட்டா ளின் பெயர் அந்த லிஸ்டில் முதலில் இருக்கும்."
"சுமி.. மேடம்... நீங்க இவ்வளவு சூப்பரா பேசுவீங்களா ? நான் பவி மட்டுந்தான் அரட்டை பார்ட்டினு நினைச்சிட்டு இருந்தேன். மேடை கிடைச்சா வெளுத்து வாங்குவீங்க போலிருக்குது. உங்களுக்கு இந்தசமுதாயத்தின் மேலேதான் என்ன ஒரு கரிசனம்!  எவ்வளவு  அக்கறை.. கோபமெல்லாம் இருக்குது!" 
"எனக்கு இந்த சமுதாயத்தின் மேலே ரொம்பவும் கோபம் இருக்குது ஸார். கையில்எதுகிடைச்சாலும்அதைவச்சு அரசியல்பண்ற சமுதாயத்தில் நாமளும் ஒரு அங்கமா இருக்கிறோமேன்னு நினைக்கிறப்ப எனக்கு என் மேலேயேகூட கோபம் வருது.. எதையும் செய்யமுடியாமே இருக்கிறோமேன்னு நினைச்சு வெட்கமாவும் இருக்குது. "
"விட்டுத்தள்ளுங்க.. அப்படின்னா நான் பிரபுவோட அம்மாகிட்டே பேசட்டுமா ? உங்க முடிவில் எந்த மாற்றமும் இல்லையே.?"
"இல்லை ஸார் .. அவங்க ரெண்டுபேரும் இணைபிரியா ஜோடியா வாழ்வாங்க. வாழணும் .. அதுதான்  என்னோட ஆசை...கனவு எல்லாமே !"
"அப்புறம் மேடம்.. உங்க சிஸ்டர் பவித்ரா அந்த கிராமத்தை விட்டு வேறே எங்கேயும்  வரமாட்டேன்னு பிடிவாதமா இருக்கிறாங்க. அந்தப் பையனுக்கு ஜாப் சென்னையில். அந்தப்பையனோட அம்மாவுக்கு. பிரபு என்னோட பேச்சை கேட்டு வயல்வெளிக்கு போனதில் கொஞ்சமும் இஷ்டம் கிடையாதுன்னு நான் கேள்விப்பட்டேன். பவித்ரா ஒருபக்கம் பிடிவாதம் பிடிக்க அம்மாவும் பையனும் வேறொன்னு சொல்ல  அதனாலே மேரேஜுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது."
"ஓ .. அது வேறே இருக்குதா ?"
"யெஸ் மேடம்.. நீங்க அவங்க சைடில் இருந்து யோசனை பண்ணிப் பாருங்க."
"புரியுது ஸார் .. என்ன செய்யலாம் ?"
"இந்தவொரு விஷயத்தில் மட்டும் நீங்கள்தான் முடிவு எடுக்கணும்."
"ஸார் .. இப்படி செஞ்சா என்ன ?"
"எப்படினு சொல்லுங்க.. "
"அந்தப்பையனுக்கு உங்க ஊரில் சொந்தமா ஒரு பிசினெஸ் ஏற்பாடு பண்ணிக்  கொடுத்திடலாமா ?"
"கரெண்ட்இல்லாத ஒரு இடத்தில் என்ன பிசினெஸை ஏற்பாடு பண்ணலாம்னு யோசிச்சுசொல்லுங்க..அங்கே இருக்கிறது என்னவோ மொத்தமே இருபது குடும்பந்தான்னு  நினைக்கிறேன்.  அவங்க வீட்டுக்குழந்தைங்க வெளியூரில் தங்கிப் படிக்கிறாங்க.. ஹாலிடேய்ஸ் வந்தால் ஏன் அப்படியொண்ணு வருது. வீட்டுக்குப்போனுமேனு நினச்சு ரொம்பவேவருத்தப்படற பிள்ளைங்க அவங்க. பட்டணத்து நெருக்கடியில், வேலைப்பளுவில் சிக்கிசீரழிஞ்சு சின்னாபின்ன மாகி எங்கேயாவது அக்கடான்னு உட்கார ஒரு இடம் கிடைக்காதான்னு தவிக்கிற மனசுக்கு எங்க ஊர் ஒரு சொர்க்கலோகம்.  அதிக பட்சம் பத்து நாள் இல்லாட்டா இருபதுநாள் அங்கே இருக்கமுடியும். அப்புறம் அதுகூட போரடிச்சு, நகர வாழ்க்கைங்கிற இந்த நரகத்தை எண்ணி ஏங்க ஆரம்பிச்சிடும். உங்க சிஸ்டர் ரொம்பவும் க்ரேட். அந்த ஊரில் ஏழெட்டு வருஷத்தை ஓட்டிட்டா ங்க.. என் வொய்ப் ஷோபா அந்த ஊரை  ஒரு வாரம் சகிச்சுக்குவா. அப்புறம் தலைவிதியேனு எனக்காக அதிகமா ஒரு பத்துநாள் தாக்குப்பிடிப்பா.. அதையு ந்தாண்டி நாட்கள் ஓட, நான் அங்கே இருக்க ஆசைப்பட்டா, முகத்தை தூக்கி வச்சுக்கிட்டே மீத நாட்களை ஓட்டுவா. அந்தமாதிரியான ஒரு வில்லேஜில் அவங்க ரெண்டுபேரும் இருக்க  சம்மதப்பட்டா எனக்கு எந்தவொரு அப்ஜெக்ச னும் இல்லை.  என் வயலில் ஒருபகுதியை நான்  சேல் டீட் போட்டு தரேன். புருஷனும்பொஞ்சாதியுமா விவசாய வேலையைக் கவனிக்கட்டும். 'கல்யாண வளையோசை கொண்டு காற்றே நீ முன்னாடி செல்லு'னு  சொல்லிக்கிட்டு பவித்ரா நம்ம பிரபுவுக்கு கஞ்சி கலயம் எடுத்துக்கிட்டு நடக்கட்டும்" என்று ராம்குமார் சொல்ல, அதை கேட்டு சிரிப்பை அடக்க ரொம்பவும் சிரமப்பட்டாள் சுமித்ரா.
"சரி .. மேடம்.. நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன்" என்று சொல்லி ராம்குமார் போன் தொடர்பைத் துண்டிக்க, எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள் சுமி.

                                                                   ----------------------------தொடரும் --------------------------             

No comments:

Post a Comment